Everything posted by நிழலி
-
ஆட்சியை கைப்பற்றி 3 ஆண்டுகள் - ராணுவ அணிவகுப்பு நடத்திய தாலிபன்கள்
தாடியை மழிப்பது இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் படி ஹராம், இஸ்லாமுக்கு விரோதமானது. முன்னைய தாலிபான் ஆட்சிக்காலத்தில் தாடி வளர்க்காத ஆண்களுக்கு மரண தண்டனை கூட கொடுத்து இருக்கின்றார்கள். மக்கா, மதீனா வுக்கு சென்றவர்களும், வந்த பின் தாடியை மழிக்க மாட்டார்கள்.
-
தமிழ் வேட்பாளருக்கு சங்கு.
தேர்தல் ஆணையகம் இவருக்கு சின்னமாக ஆணுறையைக் கொடுப்பார்கள் என நம்பியிருந்தேன்.
-
Yarl IT Hub இன் YGC புத்தாக்க திருவிழா - ஆகஸ்ட் மாதம் 2, 3 மற்றும் 4 ஆம் திகதிகளில்
- பொது வேட்பாளரை நிறுத்திவிட்டு தென்னிலங்கை தலைவர்களை சந்திப்பது மக்களுக்கு செய்யும் துரோகம்
ஆஹா ஆஹா... தேர்ந்த, முதிர்ச்சியடைந்த கண்ணியமான ஒரு அறிக்கை. இடையிடையே கைக்கூலி, துரோகி, பச்சைத் துரோகி, அடிமை போன்ற மிக அருமையான, இளைய சமுதாயம் எதிர்கால அரசியலில் பயனபடக் கூடிய, தமிழர்களின் ஒற்றுமையை எடுத்துக்காட்டக் கூடிய சொற்கள். இங்கிவர்களை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்!- குறுங்கதை 1 -- செல்லப்பிராணி
@ரசோதரன் நீங்கள் எழுதிய இந்த கதையை / அனுபவத்தை வாசிக்க தொடங்கி, பின் வாசிக்க தேவையான கதைகள் யாழில் கனக்க இல்லை தானே ஆறுதலாக வாசிப்பம் என்று விட்டன். ஆனால் இப்ப நீங்கள் 30 ஆவது கதையில் - ஒன்றரை மாதங்களுக்குள் வந்து நிற்கின்றீர்கள்! ஆனாலும் பாஸ் நீங்கள் ரொம்ப fast. ஒவ்வொன்றாக வாசிக்க ஒரு வருடம் செல்லும் எனக்கு.- ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்த தமிழ் பொதுக்கட்டமைப்பு
நீங்கள் சொல்வது போல் எழுத்து மூலம் கிடைத்தால் ஓரளவுக்கேனும் கெளரவத்துடன் விலகலாம். இன்றிருக்கும் நிலையில் இவ்வாறு எழுத்து மூலம் கொடுத்தால் "ஐயோ தமிழர்களுக்கு நாட்டை பிரித்து கொடுக்க போகிறார்" என்று இனவாதம் பேசி வாக்கு கேட்கும் நிலையில் எந்த முன்னணி வேட்பாளர்களும் இல்லை. இந்த தேர்தலில் இருக்கும் ஒரே ஒரு வித்தியாசம், இனவாதம் பேசி வாக்கு கேட்கும் நிலையில் முன்னணி வேட்பாளர்கள் இல்லை என்பது தான். இதன் அர்த்தம் இவர்கள் இனவாதிகள் அல்ல என்பது அல்ல. இன்றைய வங்குரோத்து நிலையில் பொருளாதாரம், வாழ்க்கை செலவு என்பனதான் முக்கிய விடயங்களாக உள்ளன.- ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்த தமிழ் பொதுக்கட்டமைப்பு
அதை இவர்கள் ரணிலிடம் மட்டுமல்ல, இன்றைய நிலையில் முன்னிலையில் இருக்கும் அனுரவிடமும், சஜித்திடமும் கேட்டு பெற்று இருக்க வேண்டும் (அப்படிப் பெற்றாலும் நிறைவேற்று அதிகாரமுள்ள சனாதிபதி அதனை கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும் என்ற அவசியமும் இல்லை) இன்றைய செய்திகளின் படி, இவர்கள் ரணிலை சந்தித்துள்ளார்கள். கோரிக்கை வைத்துள்ளார்கள், ஆனால் எழுத்து மூலம் கேட்டிருப்பதாக தகவல் இல்லை. அத்துடன் தாமே ஒரு வேட்பாளரை போட்டியிட வைத்து விட்டு, இன்னொரு வேட்பாளரைப் போய் சந்தித்ததன் காரணமும் தெரியவில்லை.- ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்த தமிழ் பொதுக்கட்டமைப்பு
நீங்கள் சொல்வது சரிதான் ஏராளன். ஆக, செத்த பாம்பை அடிக்கத் தான் இவ்வளவு பிரயத்தனங்களா?- ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்த தமிழ் பொதுக்கட்டமைப்பு
அவர்களே தம் பேட்டிகளில் சாடை மாடையாகச் சொல்கின்றார்கள், தம் உண்மையான நோக்கமே தமிழரசுக் கட்சியை நாசம் செய்வது தான் என்று. அதாவது சர்வதேசத்துக்கு தமிழ் மக்களின் ஒற்றுமையை காட்டி ஒரு செய்தி சொல்ல போகின்றோம் என்று மக்களுக்கு படம் காட்டி விட்டு, அந்த ஒற்றுமையை கேலிக்குரியதாக்கின்ற வகையில் ஒரு கட்சியை நாசம் செய்வது தான் அவர்களின் உள் நோக்கமாம். எனவே அவர்கள் ரணிலை சந்திக்கின்றது மட்டுமல்ல, இறுதியில் அவரை அல்லது சஜித்தை ஆதரிக்க சொன்னாலும் சொல்லுவினம்.- நீதி அமைச்சராக அலி சப்ரி நியமனம்!
ஏற்கனவே செத்து சுண்ணாம்பாகிக் கிடக்கும் இலங்கையின் 'நீதி' த்துறைக்கு, பாடை கட்ட இவரை நியமித்து இருக்கின்றார்கள்.- அரியம்: பாக்கியமா, பலியாடா?!
நான் அப்படி பார்க்கவில்லை. இவர்கள் இவ்வாறான Test drive ஒன்றை திட்டமிட்டு செயல்படும் அளவுக்கு திறமையானவர்கள் அல்ல. அப்படி இருந்திருந்தால் இந்த கட்சிகளில் இருந்து சிறிதரன் அல்லது கட்சி ஒன்றின் தலைவராவது போட்டியிட்டு இருப்பர். சேடம் இழுக்கும் குதிரைகளாக இந்த தமிழ் தேசிய கட்சிகள் இன்று உள்ளன. அவற்றின் இறுதி அவலக் குரலாகவே இம் முயற்சி. தாமும் நாசமாகி, தாயக தமிழர்களின் தமிழ் தேசிய உணர்வை கேலிக்குள்ளாக்கும் செயலே இது. செப் 21 இப் பின் இவர்களை தேட வேண்டி வரும். காலம் பதில் சொல்லும்.- மும்முனைப் போட்டியா? நான்கு முனைப் போட்டி? – நிலாந்தன்.
நாமல் குறிப்பிடக்கூடிய சதவீத வாக்குகளை பெற மாட்டார். ஆனால் இந்த தேர்தலின் மூலம் தன் செல்வாக்கை சிறிது வளர்த்துக் கொள்வார். அம்பாந்தோட்டை, மாத்தறை, காலி, அனுராதபுரம் மற்றும் கொழும்பின் மத்திய பகுதி தவிர்ந்த ஏனைய பகுதிகளிலும் கணிசமாக வாக்குகளை பெறுவார். சில இடங்களில் மூன்றாவதாக வருவார். வடக்கில் மிக மிக குறைவாக வாக்குகளை பெறுவார்.- அரியம்: பாக்கியமா, பலியாடா?!
அரியம் சாதாரண பலியாடு இல்லை, மொட்டைக் கத்தி கொண்டு காத்திருந்த கூட்டத்தில் தன் தலையை அறுக்க கொடுத்திருக்கும் முட்டாள்தனமான ஆடு. கிழக்கில் ஒரு சில ஆயிரம் பேருக்காகவது இவரை பெயரளவில் தெரிந்து இருக்கும், ஆனால் வடக்கில் இவரை யார் என்றே பெரும்பாலானோருக்கு தெரியாது. செப்ரம் 21 இன் பின் தமிழ் தேசிய தேசியம் மேலும் மேலும் சந்தி சிரிக்க போகுது.- தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
எந்த சிங்கள வேட்பாளருக்கு வாக்களிப்பது என்பதை விட ஜேவிபி இன் அனுரவுக்கு வாக்களிக்காமல் விட்டால் நல்லது என்பது என் நிலைப்பாடு. ஜேவிபி சமூக நீதி எனும் முகமூடி போட்டு கொண்டிருக்கும் கடும் இனவாத கட்சி மட்டுமல்லாமல் சீனாவின் பக்கம் மீண்டும் இலங்கை யை சாய வைக்க கூடிய கட்சி. இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்தில் தமிழர்களின் வாழ்வும் பொருளாதார முன்னேற்றமும் தங்கியுள்ளது. அனைத்தும் இழந்து போயிருக்கும் எம் சமூகத்துக்கு சிறுக சிறுக பொருளாதார ரீதியாக முன்னேற கால அவகாசத்தை வழங்க கூடிய வேட்பாளருக்கு வாக்களிப்பதே நல்லது. இல்லாவிடின், மேலும் மேலும் புலம்பெயர்ந்து, தாயகம் மேலும் சிறுத்துப் போய்விடும்.- முருங்கைக்காய் விலையில் வீழ்ச்சி! விவசாயிகள் பாதிப்பு
இப்பதான், ஒரு மணித்தியாலத்துக்கு முதல் நாளைக்கு சமைக்கவென்று, 'சிலோன்' கொடுவா மீனும், முருங்கைக் காய்களும் வாங்கினேன். ஒரு இறாத்தல் (450 grams) முருங்கைக்காய் இங்கு 8 கனடிய டொலர்கள். அதில் 4 காய்கள் தான் இருந்தன. இன்றைய திகதிப்படி இலங்கை ரூபா 1747.71. வாங்கிய பின் தான், அநியாய விலை கொடுத்து விட்டேன் என புரிந்தது.- கவாய் (Hawaii)பயணம்.
தொடர் நன்றாக இருக்கின்றது. இந்த தீவின் பெயர் என்ன?- தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
நன்றி.- தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
இதைத்தான் மக்களை ஏமாற்றும், புளுத்துப் போன, பழைய அரசியலின் நீட்சி என்கின்றேன். இவ்வாறு நீங்கள் சொல்லும் உறுதிப்படும், வட்டுக்கோட்டை தீர்மானத்திலேயே உறுதியாக நிற்கின்றார்கள் என்று சர்வதேசத்துக்கு காட்டப்படும் செயல்முறையின் விளைவு மீண்டும் மீண்டும் பூச்சியமே. பொதுவேட்பாளரை முன்னிறுத்துகின்றவர்கள் சொல்லும் காரணம், நீங்கள் சொன்னவற்றை சர்வதேசத்துக்கு மீண்டும் காட்டப் போகின்றார்களாம்/ நிரூபிக்க போகின்றார்களாம் / சத்தியம் செய்யப் போகின்றார்களாம். இந்த 'சர்வதேசத்துக்கு காட்டப்போகின்றோம்' என்ற படம் காட்டல் எல்லாம் சம்பந்தர் அரசியலின் நீட்சி. சர்வதேசம் ஒரு மண்ணாங்கட்டிக்கு கொடுக்கும் மதிப்பைக் கூட இந்த படம் காட்டலுக்கு கொடுக்க மாட்டாது என்பதுதான் நாம் கசப்பாக கற்றுக் கொண்ட பாடம். ஒரு பலனுமற்ற விடயத்துக்கு மக்களை திரள் கொள்ளச் செய்வது என்பது அந்த மக்களுக்குச் செய்யும் துரோகம். இந்த துரோகத்தை தான் ஆயுதப் போராட்டம் தொடங்க முதலில் இருந்து இன்று வரைக்கும் தமிழ் அரசியல் கட்சிகளும், அவற்றுக்கு ஒத்து ஊதும் சில தமிழ் ஊடகங்களும் செய்கின்றன.- தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
நான் கேட்கின்ற கேள்வியைத் தான் நீங்களும் கேட்கின்றீர்கள். அப்படி 2 ஆம் 3 ஆம் இடத்துக்கு இருத்தினால், அதனால் செப்ரம்பர் 21 இன் பின் வடக்கு கிழக்கு தமிழர்களுக்கு ஏற்படும் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நன்மைகள் என்னென்ன?- தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
வட்டுக்கோட்டை தீர்மானம் 1976 மே 14 ஆம் திகதியில் சிங்கள அரசுகளுடன் சேர்ந்து வாழ முடியாது, வடக்கு கிழக்கு என்பது தமிழர்களின் தாயகம், எனவே சுதந்திர தமிழீழமே இறுதி தீர்வு என்று முழங்கி கொண்டு வரப்பட்ட தீர்மானம். இன்னொரு விதத்தில் தமிழீழத்துக்காக இளைய சமூகத்தினரை ஆயுதம் போராட்டத்துக்கு வழி வகுத்த தீர்மானம். அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் இதே வட்டுக்கோட்டை தொகுதியில் தியாகராஜாவிடம் 700 சொச்ச வாக்கு வித்தியாசத்தில் தேர்தலில் தோற்ற பின் தன் செல்வாக்கையும் தமிழரசுக் கட்சியின் செல்வாக்கையும் இளைஞர்களிடையே பெருக்கி கொள்ள, முதுமையால் சுகவீனமுற்றிருந்த செல்வ நாயகம் அவர்களை தூண்டி கொண்டு வரப்பட்ட தீர்மானம். அதன் பின் நிகழ்ந்தது பல்லாயிரக்கணகான இளையவர்களின் தியாகங்களும், வீரமரணங்களும், பொதுமக்களினதும் உயிரிழப்புகளும், பொருளாதார சீரழிவும், தாயகம் ஆட்புலம் அற்று சிறுகிப் போனதும், தான். இந்த தீர்மானம் முழுதும் இந்திய செல்வாக்கினால் கொண்டு வரப்பட்டது என்று நம்பப்படும் தீர்மானம் (அன்றும் இன்றும் கக்கா போவதுக்கும், தும்முவதற்கும் கூட தமிழரசுக் கட்சி இந்தியாவின் அனுமதி இன்று எதுவும் செய்ததில்லை) வடக்கு கிழக்கில் தமிழர்களை அணிதிரட்டி போராட்டத்துக்கு அழைத்த இந்த தீர்மானத்துக்கும், பொது வேட்பாளரை களம் இறக்கும் செயலுக்கும் என்ன தொடர்பு இருக்கின்றது? அப்படியே ஒரு தொடர்பு இருப்பதாக நீங்கள் எண்ணினால், இன்னமும் தமிழ் கட்சிகள், மக்களிடம் முன் சென்று காத்திரமாக செயலாற்ற எந்த ஊக்கமும் இன்றி, மீண்டும் மீண்டும் இத்துப் போன, தோற்றுப் போன முழக்கங்களுடன் தான் முன் செல்கின்றனர் என்பது மீண்டு நிரூபணம் ஆகின்றது. செப்ரம்பர் 24 ஆம் திகதிக்கு பின், எந்த பயனும், சிறு சலனமும்,ஒரு சிறு மாற்றம் தானும் ஏற்பட வாய்ப்பில்லாத ஒரு விடயத்துக்காக மக்களை திரளப்பண்ணி, அணி திரட்டி மீண்டும் மீண்டும் மக்களை முட்டாள்களாக்கி, அதில் குளிர் காயும், தம் இருப்பை தக்க வைக்க முயலும், ஈன அரசியலைத்தான் இந்த பொது வேட்பாளர் விடயத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் செய்கின்றன.- தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
என்னிடம் இருக்கும் மூன்று கேள்விகள்: 1. இவ்வாறு தமிழ் மக்கள் இவருக்கே பெருமளவுக்கு வாக்களித்தால் (ஏனைய சிங்கள வேட்பாளர்களுக்கு தமிழ் மக்கள் போடும் வாக்குகளின் மொத்த எண்ணிக்கையை விட), அதனால் சர்வதேச சமூகம் என்ன வகையில் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியில் உதவும்? 2. அவ்வாறு உதவுமா அல்லது, வெற்றியடைந்த சிங்கள வேட்பாளருடன் / சனாதிபதியுடன் இணைந்து பணியாற்றி, இலங்கை அரசினால் அடையக்கூடிய தம் நலன்களை தொடர்ந்து பேண முயலுமா? 3. ஒரு வேளை தமிழ் மக்களின் வாக்குகளில் சொற்ப வீதமே இவருக்கு கிடைப்பின், தமிழ் மக்கள் தமிழ் தேசியத்தை நிராகரிக்கின்றார்கள் என அது எடுத்துக் கொள்ளப்படுமா?- தமிழ்ப் பொதுவேட்பாளர் யார்? – வவுனியாவில் இன்று தீர்மானம்!
ஆரம்பத்தில் இருந்தே இந்த விசர்க் கூத்தை, நடைமுறையில் பாதிப்பை ஏற்படுத்தும் முயற்சியை நான் எதிர்த்து எழுதி வந்துள்ளேன். // இரு தரப்பிலும் ஆதரவை பெருவாரியாகப் பெற்றுக் கொண்ட ஒருவர் இன்று யாரும் இல்லை, வேட்பாளராக நிறுத்துவதற்கு. அதே போன்று, தமிழ் கட்சி ஒன்று கூட இல்லை. வடக்கிலும் கிழக்கிலும் ஜேவிபி உட்பட தேசிய கட்சிகளின் செல்வாக்கு வளர்ந்து வரும் இன்றைய நிலையில் அப்படியான ஒருவர் எவரும் இல்லை. அத்துடன் முஸ்லிம் மக்கள் ஒரு போதும் தமிழ் வேட்பாளரை ஆதரிக்கப் போவதும் இல்லை. இரு இனங்களுக்கும் இடையில் இருக்கும் பிளவை மேலும் வெளிக்காட்டிக் கொள்வதில் பலனடையப் போவது தமிழ் பேசும் இனங்கள் அல்ல. தமிழ் கட்சிகளின் அரசியல் எப்போதும் நடைமுறைச் சாத்தியமற்ற ஒன்றை செய்வதில் தான் தேங்கி நிற்கின்றது. அப்படியான ஒன்றுதான் இந்த தமிழ் வேட்பாளரை முன்னிறுத்துவதும். //- பருத்தித்துறை- அவசர நோயாளர் காவு வாகனத்தில் வீடு திரும்பிய மருத்துவர்: நோயாளர்கள் அலைக்கழிப்பு!
எனது அப்பா ஒரு அரச ஊழியர். குருணாகல் / கொழும்பு மாநகர சபையின் மூத்த கணக்காளராக இருந்தவர் (CA). அரச / மக்கள் வளத்தை எப்படி தனக்காக / குடும்பத்திற்காக பயன்படுத்த முடியும் என்பதில் PhD முடித்தவர். நான் படித்து முடிந்த பின், தன் செல்வாக்கை கொண்டு நல்ல அரச வேலை ஒன்று எடுத்து தருகின்றேன் என்று விடாப்பிடியாக நின்றவர். கனடா கனவில் இருந்ததால் நான் சம்மதிக்கவில்லை அரச வளங்களை சொந்த தேவைக்காக பயன்படுத்துவது என்பது ஒரு மேதாவித்தனமான கலாச்சாரம் அங்கு. ஒரு போதும் திருந்த மாட்டார்கள். அது தவறென்று கூட நம்பமாட்டார்கள். அதே போல் தமக்கு கீழ் இருக்கும் சிற்றூழியர்களை மதிக்கவே மாட்டார்கள்.- மக்கள் போராட்டத்தால்; வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா எங்கே?
எதனை வைத்து இவ்வாறு அனுமானிக்கின்றீர்கள் எனத் தெரியவில்லை. ஹசீனா வங்க தேசத்தின் தந்தையான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மகள் இவர். ஷேக் முஜிபுர் ரஹ்மான் இன் குடும்பத்தில் ஹசீனாவையும், அவர் சகோதரியையும் தவிர மிச்ச எல்லாரையும் இராணுவப் புரட்சி ஒன்றில் வாங்காள தேசத்தின் இராணுவம் கொன்றழித்து விட்டது. அதன் பின் வெளி நாட்டில் வாழ்ந்து வந்த ஹசீனா பின்னர் 6 ஆண்டுகள் இந்தியாவில் இருந்து கொண்டு தான் வங்காளத்தின் சனநாயகத்துக்காக போராடி, பின் தன் தேசம் சென்று தேர்தலில் வென்று முதல் முறையாக ஆட்சி அமைத்தார். அவர் ஒரு இந்திய அனுதாபி. வங்காளத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளான ஐ.எஸ் இயக்கத்தின் செல்வாக்கு அதிகரித்து கொண்டு சென்றாலும் அது இந்தியாவை ஆபத்தில் தள்ளும் நிலை வரை எட்டாது அடக்கியவர். சும்மா இருக்காமல் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்துக்கு வேலை வாய்ப்புகளில் 30 சத வீதம் இட ஒதுக்கீடு கொடுக்கப் போய் இந்த நிலைக்கு ஆளாகியுள்ளார் (உயர் நீதிமன்றம் அதை 5 வீதமாக பின்னர் குறைத்தது). சுதந்திரப் போராட்ட தியாகிகளில் அனேகமானோர் இவரது கட்சி ஆட்கள் தான் என்பதால், இவரது முயற்சியை மாணவர்கள் எதிர்த்தனர். இனி ஆட்சிக்கு வரப் போகின்றவர்கள் பாகிஸ்தான் ஆதரவாளர்களாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். இதனால் பாதிக்கப்படப் போவது இந்தியாதான். //இலங்கையில் இந்திய சார்பு அரசை எப்படி அமெரிக்கா ஓடவைத்ததோ// கோத்தாவின் அரசு இந்திய அரசு சார்பானதாக இருக்கவேயில்லை. அது சீன சார்பு அரசு. மகிந்தவின் அரசும் சீன சார்பு அரசாகவே இருந்தது. இதனால் தான் கொவிட் காலத்தில் சீனா தான் தயாரித்த தடுப்பூசியை இலங்கைக்கு இலவசமாக கொடுக்க முன்வந்தது. மகிந்த / கோத்தா காலத்தில் சீனாவின் பிடிக்குள் இலங்கை முற்றாக சிக்கிக் கொண்டு இருந்தது (இன்று இந்தியா இந்த நிலையை கூடியளவுக்கு மாற்றி விட்டது) அரகலய வின் அனுசரனையாளர்களாக அமெரிக்காவும் சில முஸ்லிம் நாடுகளும் தான் இருந்தன. அமெரிக்க தூதுவர் நேரடியாகவே அரகலயவுக்கு ஆதரவை கொடுத்தும் இருந்தார். பைடன் காலத்தில் இந்திய அமெரிக்க உறவு நன்றாகத்தான் உள்ளது. தென்னாசியாவில் இந்தியாவின் நலன்களுக்கு எதிராக அமெரிக்கா இன்றைய நிலையில் இயங்காது, அது இந்தியாவின் மீது எதிர்ப்புணர்வு உள்ள ட்றம் அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் கூட இந்த நிலை மாறாது. இந்தியா ரஷ்யா சார்பான நிலைப்பாடில் இருப்பினும் கூட, அமெரிக்க தன் வர்த்தக நலன்களுக்கு எதிராகவும், சீன எதிர்ப்பிற்காகவும் இந்தியாவின் நலனுடன் முரண்படாது.- கருத்துக்களில் மாற்றங்கள் [2024]
"யாழில் ஒன்றரை மாத குழந்தை சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை – தாயாா் கைது!" எனும் திரியில் பொறுப்பற்ற முறையில் இறந்த குழந்தையின் மதத்தை குறிப்பிட்டு எழுதிய கருத்து ஒன்று நீக்கப்பட்டது. - பொது வேட்பாளரை நிறுத்திவிட்டு தென்னிலங்கை தலைவர்களை சந்திப்பது மக்களுக்கு செய்யும் துரோகம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.