Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிழலி

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • Joined

Everything posted by நிழலி

  1. 1. அவரத்தில் நீங்கள் தலைப்பு திருத்தப்பட்டதை கவனிக்கவில்லை 2. அதிகார பரவலாக்கத்துக்கு முழு எதிர்ப்பை காட்டும் ஒரு கட்சி, அதன் சனாதிபதி இனவாதமற்ற ஆட்சியை தருவார் என கனவு காண்பதற்கு உங்களுக்கு பூரண சுதந்திரம் உள்ளது.
  2. இத் திரியை பார்த்து ஏன் பதட்டபட வேண்டும்? வரலாற்றில் நடந்தவற்றை மீள நினைவூட்டுவதில் தவறில்லை என்பதுடன் தேவையும் கூட. சிங்களம் ஒரு போதும் இனவாதத்தை கைவிடப் போவதில்லை. நிறம் மட்டும் மாறலாம். திரிக்கு நன்றி ரஞ்சித்.
  3. தம் தலைவர் கொல்லப்பட்டதை ஹிஸ்புல்லா இயக்கம் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தி உள்ளது. ஹமாஸ் இற்காக ஹிஸ்புல்லா இஸ்ரேலை தாக்கப் போய் இன்று தன் தலைவரைக் கூட காப்பாற்ற முடியாமல் போய் கிடக்கிறது.
  4. தனி நபர்களின் தனிப்பட்ட குணாதிசயங்கள் ஒரு அரசின், அரச இயந்திரத்தின் தன்மையை ஒரு போதும் மாற்றிவிட முடியாது. சந்திரிகா வர முதல், அவரை சமாதான தேவதை என்று போற்றினர். தனிப்பட்ட ரீதியில் அவர் இனவாதி அல்ல என்றனர். வன்செயல்களால் கொல்லப்பட்ட ஒருவரின் மனைவி என்பதால் அவர் தமிழர் பிரச்சனைகளை தீர்ப்பார் என்றனர். அவரும் அவ்வாறு தான் தன்னை வெளிக்காட்டி இருந்தார். ஆனால் இலங்கை அரசும், அரச இயந்திரமும் முற்றிலும் பெளத்த பேரினவாதமயப்படுத்தப்பட்ட ஒன்று. அதில் எந்த மாற்றமும் ஏற்படாமல், தனி நபர்களின் குணாதிசயங்களால் மாற்றங்கள் ஏற்பட மாட்டாது. அதனால் தான் இனவாதி அல்ல என்று அறியப்பட்ட சந்திரிக்கா ஈற்றில் போரில் கடும் உயிர்பலிகளை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தியது மட்டுமன்றி, தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டு இருந்த குமார் பொன்னம்மபலத்தைக் கூட பாலபெட்டபெந்தியி மூலம் படுகொலை செய்தார். அனுர மட்டும் இதில் விதிவிலக்காக அமைவார் என நான் நம்பவில்லை. தமிழ் மக்களுக்கு தீர்வு என்று ஒரு துரும்பும் கிடைக்கப் போவதில்லை. அதே நேரம், தமிழ் மக்களிற்கு இன்று இருக்க கூடிய சில நெருக்கடிகள் மேலும் குறையும்.
  5. கடந்த 6 மாதமாக நான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் விடயம் இது தான். நடைமுறைக்கு சாத்தியமற்ற, மக்களின் இன்றைய தேவைகளை உள்ளடக்காத, இளைய சமூகத்தின் மத்தியில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை உள்வாங்காத அரசியலைத் தான் தமிழ் கட்சிகள், தமிழ் தேசிய அரசியல் என்று படம் காட்டி செய்து கொண்டிருக்கின்றனர் என்பதால், தமிழ் சமூகம் சிங்கள தேசியக் கட்சிகளின் பின்னால் போகும். வடக்கு கிழக்கில் தேசியக் கட்சிகள் அதிகமான வாக்குகளைப் பெறும். இந்த நடைமுறை சாத்தியமற்ற அரசியலைத் தான் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகளும் தம் இருப்பை பேண ஆதரிக்கின்றன என்பதால் இவ் அமைப்புகளை தாயக மக்கள் முற்றாக நிராகரிப்பதுடன், அவமானப்படுத்தவும் இனி செய்வர். தக்கண பிழைக்கும்.
  6. பிரதேசவாதத்தை கையிலெடுப்பதை தவிர, சந்திரகாந்தனுக்கு வேறு என்ன இருக்கு மக்களிடம் முன் செல்வதற்கு? அரசுற்கு நிறைய கட்டுக்காசு கிடைக்க போகின்றது.
  7. இவர் பற்றி Tamilguardian இல் விரிவாக வந்த கட்டுரை இது. ஆங்கிலத்தில் உள்ளது. சாராம்சம்: இவர் மனித உரிமைகளுக்காகவும், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும், காணாமல் போனோர் தொடர்பாகவும் நியாயமான கொள்கைகளை எண்ணங்களை கொண்டு இருந்தவராகவும், அதை வெளிப்படுத்தக் கூடிய இடங்களில் வெளிப்படையாக வெளிப்படுத்தியவராகவும் உள்ளார். அடடா சிங்கள பிரதமருக்கு வக்காளத்து வாங்குகின்றார் நிழலி என்று ஒன்றுக்கும் பிரயோசனமில்லாத அதி தீவிர தமிழ் தேசியவாதம் கதைப்பவர்கள் இதை நான் இங்கு இணைத்தமைக்காகவும் தாரளமாக ஆத்திரப்படலாம். Sri Lanka’s new Prime Minister Harini Amarasuriya on Tamils, justice and racism 24 September 2024 Sri Lanka's new president has appointed Dr Harini Amarasuriya, a parliamentarian with his National People’s Power (NPP) coalition, as the new prime minister. Anura Dissanayake’s appointment of Amarasuriya, comes amidst reports that Sri Lanka’s parliament will shortly be dissolved. We look back on Amarasuriya’s previous remarks on Eelam Tamils, racism in Sri Lanka and on devolution of powers through the 13th Amendment. Black July Sinhala rioters celebrate as they pause in the destruction of homes and businesses in Tamil sectors of Colombo In a 2020 interview with Women For Politics, Amarasuriya recalled the 1983 Black July pogrom, when government-backed Sinhala mobs killed thousands of Tamils. She was asked: What was growing up like amidst the conflict in Sri Lanka? Especially for women to have lived through a difficult period such as this? On Tamil women Speaking to The Federal earlier this year, Amarasuriya was asked: You have written and spoken decisively about women and children being the worst victims of the long civil war in Sri Lanka. How would you bring their voices to the truth and reconciliation process in a post-civil war era? To note, Tamils across the North-East, including the women who make up families of the disappeared have repeatedly rejected any domestic truth seeking mechanism and repeatedly demanded international accountability through the International Criminal Court (ICC). Tamil families of the disappeared protesting and demanding Sri Lanka be referred to the International Criminal Court. In another 2020 interview, Amarasuriya said, On Sinhala racism Writing in The Wire in May 2020, Amarasuriya said, On the 13th Amendment and devolution of powers Asked to explain the NPP stand on the implementation of the 13th Amendment earlier this year, Amarasuriya said: She also stated, Despite Amarasuriya’s pledge, other senior officials within her party have openly spoken out against implementing the 13th Amendment, which was established through the 1987 Indo-Lanka Accord. The JVP staged two insurrections against the state in the early 1970s and the late 1980s. The latter of these was chiefly in response to the Indo-Lanka accord and the 13th Amendment which sought to devolve powers to Tamils in the North-East. Tens of thousands were killed. In 2010, Dissanayake himself said the JVP will oppose if a new political constitution devolving powers to the Northern and Eastern provinces was to be created. Related Articles: 22 September 2024 : Anura Kumara Dissanayake declared Sri Lankan president 20 September 2024 : Who is Anura Kumara Dissanayake?
  8. நீங்கள் கைது செய்து இருக்கும் கொள்ளைக்காரர்களை விடுதலை செய்து, அவர்கள் கொள்ளைக்கு பயன்படுத்திய அனைத்து வாகனங்களையும் விடுவித்து மீண்டும் அவர்கள் கொள்ளையிட வாய்ப்புகளை தந்து நீங்கள் ரொம்ப நல்லவர், அச்சாப் பிள்ளை சனாதிபதி என்று காட்டவும். இப்படிக்கு சுதா இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்
  9. அது தானே...! பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு உள்ளூராட்ச்சி தேர்தல், அதன் பின் மாகாணசபைத் தேர்தல் (கடைசி இரண்டின் வரிசை மாறலாம்) என்று வரிசை கட்டிக் கொண்டு தேர்தல்கள் வரப் போகுது. அனேகமாக வீட்டில் இருந்து என்னை மனிசி துரத்தி விடக் கூடிய வாய்ப்புகள் அதிகம்.
  10. சிங்கள டயஸ்போரா Vs தமிழ் டயஸ்போரா —————————————————————- சிங்கள டயஸ்போராக்கள் எவ்வளவு துல்லியமாக புத்திசாதுரியமாக செயல்பட்டு தமக்கான ஊழலற்ற சிறந்த தலைமையொன்றை கட்டி அமைக்க வேண்டும் என்று சில வருடங்களாக செயல்பட்டு அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்கள். உண்மையில் அனுரவின் வெற்றிக்கு மிக காத்திரமான காய் நகர்த்தல்களை புரிந்தவர்கள் சிங்கள புலம்பெயர் மக்கள் என்றால் மிகையாகாது! லண்டன் , கனடா , அமெரிக்கா, யப்பான் , ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள் என சிங்கள டயஸ்போராக்கள் மிகச் சிறப்பாக செயற்பட்டு குறுகிய காலத்துக்குள் சிங்கள மக்களின் மனதில் அனுரவை இடம்பிடிக்க வைத்து இந்த அபார வெற்றியை எற்படுத்தியிருக்கிறார்கள். சிங்கள டயஸ்போராங்கள் தங்கள் தாய் மண்ணுக்கான நல்ல சிறந்த அரசியல் தலைவனை உருவாக்க வேண்டும் தம் தாய் நாடு வீறு கொண்டு முன்னேற வேண்டும் என்று இனவாதத்திற்கு அப்பால் போய் மிக நுண்ணரசியல் செய்து இன்று தமக்கான சிறந்த தலைவனை அரசியலை நிலைநிறுத்தி வெற்றி கண்டிருக்கிறார்கள். அவர்களின் ஒரே இலக்கு தம் நாட்டின் மீதான தேசத்தின் மீதான மக்கள் மீதான தீரா காதல். அத்தனை படித்தவர்கள், அரசியல் விற்பன்னர்கள், பொருளாதார நிபுணர்கள் , சாமானிய மக்கள் என புலம்பெயர் சிங்கள டயஸ்போராக்கள் ஒரே புள்ளியில் குவிந்து நின்று செயல்பட்டார்கள், அதன் விளைவுவாக வெற்றியை பெற்றார்கள். கம்னியூச கொள்கைகளில் பின் புதைந்துள்ள JVP யிலிருந்து இரு தலைவன் மேலெழுந்து விட கூடாது என பிராந்திய வல்லரசு தொடக்கம் அமெரிக்கா ஐரோப்பா என்பன இவ்வளவு காலமும் விழிப்பாக இலங்கையில் செயல்பட்டுகொண்டிருந்தன. அலகரய போராட்டத்தில் அனுரவின் எழுச்சியின் அபரிவிததன்மையை உணர்த அமெரிக்க தூதுவர் அப்போது அனுரவை அடிக்கடி சந்தித்துப் பேசியுமிருக்கிறார். ஏன் அனுரவுக்கான மக்கள் எழுச்சியினை முன்னரே தீர்மானித்திருந்த இந்தியா என்றுமில்லாதவாறு ஜெய்சங்கரை அனுப்பி பல மாதகங்களுக்கு முன் சந்திப்புக்களை செய்திருந்தது . ஆனாலும் அனுரவின் அசுர வளர்ச்சி இந்தியா அமெரிக்காவுக்கு கண்ணுள் தூசி விழுந்தால் போல் உருத்தல் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது! ஏனெனில் இப்போதுள்ள பேஉம் போட்டி நிலை பூகோள வல்லாதிக்க அரசியல் களத்தில் இலங்கை மீளவும் கம்னீசிய கொள்கை கொண்ட சீன வல்லாதிக்கம் பக்கம் சாய்ந்தால் அதுவும் கம்னீசிய கொள்கையுடனான ஆயுத போராட்ட வழி வந்த அரசு ஒன்று சீன கம்னீச பேரரசு பக்கம் சற்று சாய்ந்தால் கூட மற்றைய வல்லாதிக்கங்களுக்கு பேஉம் குடைசலாகவே இருக்கும்!அதற்கும் அவர்கள் மீண்டும் பெரும் விலையொன்றை கொடுக்க வேண்டி வரும். அனுரவின் வெற்றியை தடுக்க பல முனை முனைப்புக்களையும் முயற்சிகளையும் அந்த வல்லாதிக்க சக்திகள் மேற்கொள்ளவும் தவறவில்லை. உதாரணமாக நாட்டிலும் புலத்திலும் சிங்கள மக்கள் மத்தியில் அனுர அலை அடிக்க தொடங்கியவுடன் அரசியல் ஆய்வு புள்ளிவிபரங்களின் படி வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பெருவாரி வாக்குகள் அனுர பக்கம் சாயமல் பார்த்துக்கொள்ளவும் அந்த வல்லாதிக்கங்கள் நிகழ்சி நிரல்களை வரையவும் தவறவில்லை. அதற்காக பல தந்திரோபாய சுய வேட்பாளர் நிறுத்தல்கள் மற்றும் இதர நிகழ்வுளும் நிகழ்ந்தேறின!! இதெல்லாம் அனுர தரப்புக்குக்கும் தெரியாமலில்லை அதன் தாக்கம் தான் அவர் யாழ்பாணத்தில் நிகழ்த்திய கூட்டத்தில் " சிங்கள மக்கள் பெருவாரியாக தனக்கு ஆதரவை தரும் இச் சந்தர்பத்தில் தமிழர்களும் ஆதரவை நல்காது போனால் சரியாக இராது" என சாரப்பட கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் அக்கருத்தின் நீள , அகல, ஆழம் அறியாதோர் அதை அவரின் இனவாத கருத்தாடலாக சித்தரித்தனர். இவ்வளவு நிகழ்வுகள் மறைமுக நிகழ்சி நிரல்களுக்கு மத்தியிலும் சிங்கள டயஸ்போராக்கள் அத்தனை வல்லாதிக்க இராஜதந்திரத்துக்கு மேலாக பல படி மேல் போய் ஒற்றுமையாக காய்நகர்த்தி இராஜதந்திர வெற்றியடைந்திருக்கிறார்கள். தமக்கான தூய தலைவனை தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள். ஆனால் நம் புலம்பெயர் தமிழ் டயஸ்போராக்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் அவர்களின் அரசியல் நிலைபாடு என்ன ? அவர்கள் இதுவரை தமிழ் மக்களுக்காக சாதித்ததும் என்ன? குறுகிய காலத்துக்குள் சிங்கள டயஸ்போராக்கள் கண்ட வெற்றியை பல தசாப்தகாலமாக புலம்பெயர் நாடுகளில் இலங்கை எம்பசிகளின் எண்ணிக்கைக்கு அதிகமாக செயல்படும் தமிழ் டயஸ்போராக்களினால் இவ்வளவு காலமும் தமிழினத்துக்காக நிகழ்த்தப்பட்ட சாதனை என்ன? புலம்பெயர் தேசங்களில் போட்டிக்கு போட்டியாக பல அமைப்புக்களை தொடங்குவதும் தங்களுக்குள் புடுங்கு பட்டுகொள்வதும் ஈழத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் இன்னும் பல படி போய் ஒரு கட்சியின் பல உறுப்பினர்களை பிரித்தாள நிதி அனுப்பி செயல்பட்டு கொண்டிருகிறார்கள். இந்த தமிழ் டயஸ்போராக்களினான் ஈழத்தில் ஏறபடுத்தப்பட அரசியல் முயற்சி என்ன? பொருளாதார முயற்சி என்ன ? என்பதை யாரும் பட்டியல்படுத்த முடியுமா? அதிலும் பல அமைப்புக்கள் திரைமறைவில் சிங்கள புலனாய்வாளர்களோடு இயங்கிகொண்டு பேருக்கு தமிழ் டயஸ்போரா என இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். போராட்டம் நிறைவடைது ஒன்றரை தசாப்தங்களை எட்டியுள்ள நிலையில் ஒரு இனத்துக்கான நீடித்த நிலைத்த அரசியலை கட்டமைக்க இயலவில்லை! ஒரு தலைவனை இனம் காண முடியவில்லை! இவர்களால் இதுவரை சாதித்தவை இன்றுமே இல்லை! ஈழ போராட்டத்தின் அவலங்களுக்கு மேல் நின்று காசு பறித்ததை தவிர... ஆனால் சிங்கள டயஸ்போராக்கள் சொற்ப காலத்தில் சிறு விதையாய் இருந்த ஒரு கட்சியை ஆலமரமாக்கியிருக்கிறார்கள்! JVP கூட்டத்தின் பேச்சை கேட்க வேண்டுமென்றால் கூட்டம் திரளும் ஆனால் வாக்கு திரளாது என்ற கருத்தியலை இரு வருடங்களுக்குள் ஒழித்துகட்டி 3% வாக்கு வங்கியை 60% மாக்கி அபரிவித அதிசயத்தை நிகழ்த்தி காட்டியிருக்கிறார்கள். தன் தேசத்துக்காக தன் இன மக்களின் விடிவுக்காக, தன் இனத்துக்கான தூய அரசியலுக்காக அனைத்து சிங்கள டயஸ்போராக்களும் ஒரு நேர்கோட்டில் நின்று அத்தனை வல்லாதிக்க சக்திகளின் இராஜதந்திர நகர்வுகளையும் முறியடித்து வெற்றி கண்டிருக்கிறார்கள். ஆனால் பல தசாப்தங்களாக சிங்கள மக்களை விட அதிக சனத்தொகையினை புலம்பெயர் நாடுகளில் கொண்ட எம் தமிழ் டயஸ்போராக்கள் எம் இனத்துக்கான தலைவனை அல்லது சரியான தூய அரசியல் பொருளாதார கொள்கைகளை இதுவரை கட்டியமைக்காமை தமிழினத்துக்கான சாபக்கேடு!! ஈழ நிலத்திலும் சரி புலத்திலும் சரி தமிழன் தன் நிலைபாடுகளில் ஒரு சேர மாற்றம் உண்டாகாதவரை உணர்ச்சிவசப்பட்ட உப்பு சப்பில்லாத , எதற்குமே உதவாத எதிர்கால சந்ததிக்கு உகந்தல்லாத இந்த வீணாய்போண இழிநிலை அரசியல் தான் தொடர்சியாக மிஞ்சும்! அவர்கள் இனத்துக்கான அரசியலை முன்னெடுக்கிறார்கள் ஆனால் நாங்கள் தனி மனித அரசியலை முன்னெடுக்கின்றோம். நாம் சிங்கள மக்களிடம் படிக்க நிறையவே உண்டு! நன்றி மதுசுதன் 23.09.2024 WhatsApp பகிர்வு
  11. இடையில 2015 ஆரம்பத்தில் இருந்து 2018 நவம்பர வரை அமைச்சராக பதவி வகிக்கவில்லை. நான் நினைக்கிறேன் அந்த காலகட்டத்தில் எம் பி ஆக முடியாமல் தோற்றார் என. அதே போல் மைத்திரி மகிந்தவை திடீர் பிரதமர் ஆக்கிய காலகட்டத்தில் மூன்று மாதங்கள் மட்டுமே அமைச்சராக இருந்த கூத்தெல்லாம் நடந்தது என நினைவு
  12. நாய்களுக்கும் நரிகளுக்குமான போட்டியில் ஒவ்வொரு முறையும் குயில்கள் பலியாகின்றன குயில்களுக்கு தெரிவதில்லை தாம் தான் தூண்டிலில் கொழுவப்பட்ட புழுக்கள் என.. பேய்களுக்கும் பிசாசுகளுக்குமான போரில் ஒவ்வொரு முறையும் வண்ணாத்திப் பூச்சிகள் கொல்லப்படுகினறன வண்ணாத்திப் பூச்சிகளுக்கு தெரிவதில்லை தாம் தான் வலையில் சிக்க வைக்கப்படும் சிறு கண்ணிகள் என.. மனிதர்களுக்கும் மனிதமற்றவர்களுக்கும் இடையிலான யுத்தத்தில் ஒவ்வொரு முறையும் கடவுள்கள் கொல்லப்படுகின்றனர் கடவுள்களுக்கு தெரிவதில்லை தாம் தான் மனிதர்களின் பொறியில் வைக்கபடும் இரைகள் என யார் யாருக்கோ இடையிலான யுத்தத்தில் எப்போதும் தோற்றுக் கொண்டே இருப்பவர்களுக்கு ஒரு போதும் தெரிவதில்லை எப்பவுமே தாம் தான் பலியாடுகள் என -நிழலி
  13. விஜித ஹேரத் பல அமைச்சுகளுக்கு பொறுப்பான அமைச்சராக பதவியேற்று இருக்கின்றார். அதில் ஒன்று பெளத்த மதத்துக்கான அமைச்சு. சமூக நீதி எனும் முகமூடியை போட்டுக் கொண்டு வந்துள்ள அனுரவின் அமைச்சுகளிலும், மற்ற எல்லா சனாதிபதிகளின் அமைச்சரவையைப் போல் பெளத்ததுக்கு என ஒரு அமைச்சு.
  14. உண்மையிலேயே நாம் வெட்கப்பட வேண்டிய விடயம் இது எப்போதும் தமிழன். கல்குலேட்டருக்கும் தொலைபேசிக்கும் வித்தியாசம் தெரியாமல் உள்ளனர் எம் சனம். அத்துடன் இலங்கையில் யாழ் மாவட்டத்தில் தான் 6 வீதத்துக்கு மேல் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் கிடைத்துள்ளது. வன்னியில் 4 வீதம். ஏழ்மையான பின் தங்கிய சிங்கள மாவட்டங்களை விட இது மிக அதிகம்.
  15. ஒரு சிறு திருத்தம்: சுமந்திரன் சொன்னதால் சனம் சஜித்துக்கு வாக்கு போடவில்லை. சனம் இப்படித்தான் சஜித்துக்கு போடும் என சுமந்திரனுக்கும் ரணிலுக்கும் போடும் என ரவிராஜின் மனைவி போன்றோருக்கும் ஓரளவு புரிந்து இருந்திருக்கின்றது. இவர்களுக்கு போட்டதால் என்ன சாதகம்? ஒன்றுமில்லை. இனவாத அலை இல்லாத இந்த தேர்தலில், தமிழ் கட்சிகள் மூன்று முக்கிய வேட்பாளர்களுடன் புனர்வாழ்வு, வேலை வாய்ப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, 13 + போன்ற விடயங்களை பேசி ஒரு பேரம் பேசலுக்கு முற்பட்டு ஆதரவு கேட்டு இருப்பின் அது முன்னேற்றகரமாக இருந்திருக்கும். ஆனால் எவரும் அப்படி செய்யவில்லை என்பதால் தமிழர்களின் வாக்குகள் வீணாக மீண்டும் போய்யுள்ளது.
  16. கனடாவில், ஒன்ராரியோவிலும் பிரிட்டிஷ் கொலம்பியாவிலும் மூன்று முஸ்லிம்களை கைது செய்துள்ளனர். அதில் இருவர் தந்தையும் மகனும். ஏன் கைது செய்தனர்? ஏனெனில், ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் மீது தாக்குதல் செய்ததன் ஒரு வருட நிறைவு ஒக்டோபர் 07 அன்று வருகின்றது. அன்றைய தினம், பொது மக்களை இலக்கு வைத்து மோசமான தாக்குதலை செய்ய இவர்கள் திட்டமிட்டு இருந்தனர். கனடாவிலும் நியியோர்க்கிலும் இந்த தாக்குதல்களை நிகழ்த்த திட்டம் தீட்டி இருந்தனர். போர் எங்கோ நிகழ்ந்து கொண்டு இருக்க அதற்கு சம்பந்தமில்லாத, முஸ்லிம்களை அரவணைத்து கொண்டு அனைத்து உரிமைகளையும் வழங்கிக் கொண்டு இருக்கும், முஸ்லிம்களுக்கு எதிராக எவராவது முக நூல் பதிவு போட்டாலே அவரை விசாரணைக்குட்படுத்தும் கனடா மண்ணில் தான் இவர்கள் தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தனர். நாம் சிங்களவர்களுடன் இலங்கை மண்ணில் போர் புரினும், அதற்கு வெளியே அவர்களை தாக்க ஒரு போதும் நினைத்தது இல்லை. அதே போன்று பஞ்சாபிகள் (ஒரு விமான குண்டு வெடிப்பை தவிர), உக்ரேனியர்கள் என்று எவரும் போர் நிகழும் பிரதேசங்களுக்கு அப்பால் பொது மக்களை இலக்கு வைத்து தாக்குதல் செய்வதில்லை. ஆனால் இஸ்லாமிய தீவிரவாதிகள் எனப்படும் பயங்கரவாதிகள்? இங்கேயே இப்படி திட்டமிடுகின்றவர்கள், இஸ்ரேல் மே ஒரு வருட நிறைவில் தாக்குதல்களை மேற்கொள்ள கண்டிப்பாக திட்டமிட்டு இருப்பினம். முக்கியமாக ஹிஸ்புள்ளா கடும் தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பார்கள். வழக்கம் போல, இஸ்ரேல் இதனை சாதகமாக்கிக் கொண்டு தன் இனவழிப்பை லெபனானில் நிகழ்த்துகின்றது.
  17. நானும் அப்படித்தான் நினைக்கின்றேன். இடையில், சந்திரிக்கா காலத்தில் சிறிமாவோ வுக்கு ஏதோ ஒரு பதவி கொடுத்து இருந்தார்கள் அல்லவா? அது எது?
  18. இந்த 20 வீதம் என்ற கணக்கை எங்கிருந்து பெற்றீர்கள் விசுகு?அல்லது யாழ்ப்பாண மக்கள் மட்டும் தான் வடக்கு கிழக்கின் மொத்த மக்கள் தொகையா? வடக்கு கிழக்கின் வாக்களித்த மொத்த மக்களில் 9.84 வீதத்தினரின் வாக்குகளே அரியத்திற்கு கிடைத்துள்ளது. வடக்கு கிழக்கு மக்களால் நிராகரிக்கப்பட்டவருக்கு பட்டுக் குஞ்சம் சாத்தாமல், யதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள். அப்படி நீங்கள் புரிந்து கொள்ளாவிடின் கூட பிரச்சனை இல்லை, அதானால் மக்களுக்கு எந்த பாதகமும் ஏற்படப் போவதில்லை.
  19. பலருக்கு ஜீரணிக்க கஷ்டம் என்றாலும் உண்மை இது தான். தமிழரசுக் கட்சி / சுமந்திரன் ஆகியோருக்கு தாம் பிரதிநிதிப்படுத்தும் மக்களின் தீர்மானம் பற்றி ஓரளவுக்கு ஏனும் தெளிவு இருந்திருக்கின்றது. இவர்கள் சொல்லித்தான் தமிழ் மக்களில் பெரும்பாலானோர் வடக்கு கிழக்கில் சஜித்துக்கு வாக்களித்து இருக்கின்றனர் என்பது தவறு, ஆனால் மக்கள் இப்படித்தான் வாக்களிப்பினர் என்ற புரிதல் இவர்களுக்கு இருந்திருக்கின்றது.
  20. நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் விகித ஒப்பீடு வன்னி: 9,381 விகிதம்: 4.14 திருகோணமலை: 5821 விகிதம்: 2.37 மட்டக்களப்பு: 8876 விகிதம்: 2.71 திகாமடுள்ள (அம்பாறை): 6563 விகிதம்:1.53 கம்பகா: 29,381 விகிதம்: 1.97 கொழும்பு: 31,796 விகிதம்: 2.33 யாழ்ப்பாணம்: 25,353 விகிதம்: 6.39 ஒரு காலத்தில் படிப்பறிவில் நாம் முன்னிலை வகித்தோம் என்று சொல்கின்றது வரலாறு!
  21. இந்தப் புகைப்படம் ஒரு ஸ்பெஷல். JVP இன் ஆரம்பம், அதன் தலைவர் பொரளை மயானத்தில் வைத்து இராணுவத்தால் பின்தலையில் சுட்டுக் கொல்லப்பட்டமை, அந்த இயக்கம் மீதான அரச இராணுவ இயந்திரத்தின் தேடலும் அழிப்பும், அதனாலான அந்தப் போராளிகளின் மறைவு வாழ்க்கை என்று அந்தப் போராட்ட இயக்கம் மீதான தடை நீக்கப்படும் வரையான வரலாற்றைப் படித்தவர்களுக்கு, இந்தப் புகைப்படம் ஏன் ஸ்பெஷல் என்று புரியும். போராளிகளைத் தேடித்தேடி அழித்த ஒரு சீருடை இயந்திரம், அதே போராளி ஒருவரின் முன்னால் பவ்வியமாக தங்கள் கட்டளைக்காகக் காத்திருக்கிறது. காலம்தான் எவ்வளவு வலியது பாருங்கள்! வேட்கை நிறைந்த போராளிகள் ஆளும் தேசம் நேர்மையானது என்பார்கள். தமிழர்களுக்கு அது புரியும். காலம் எப்போதும் மாறலாம். கனவு எப்போதும் திரும்பலாம். மாற்றம் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். அதிசயம் சொல்லாமல் கொள்ளாமல் நம் வானத்தில் உதிக்கலாம். இதற்கு அநுரவே பெரும் சாட்சி. அவர்கள் அவர்களின் இனதிற்கு உரிய அரசாங்கத்திற்கு எதிராக போராடியவர்கள், மேலும் அவர்கள் இப்போது ஜனநாயகப்படுத்தப் பட்டு விடடார்கள் ஆனால் இங்கு கதை வேறு. விமர்சனம் வைத்தாலே உள்பேட்டியில் கொலை மிரட்டல், விடுதலை போராட்டத்தின் சரி பிழைகளை கலந்துரையாடி தற்கால சூழலுக்கு ஏற்றது போல நவீனப் படுத்தப்பட வேண்டும், ஏனெனில் தமிழர் யுத்தம் செய்தது வேறு இனத்துடன் அவர்கள் யுத்தம் செய்தது தம்மினத்துடன்,, இல்லாவிட்டால் இறுதிவரை சுயபெருமை பேசிக்கொண்டும் புகழ் பாடிக்கொண்டும் இருக்க வேண்டியதுதான் ,, WhatsApp
  22. ரணில் நினைப்பது போல், சஜித் இவர்களுடன் இணைந்தால் பயனடையப் போவது ரணிலும் ஐ.தே.க வும் தான். எனவேநான் நினைக்கவில்லை, சஜித் இனி இவருடன் போய் இணைவார் என்று. தமிழ் கட்சிகள் இந்த பாராளுமன்ற தேர்தலை எப்படி எதிர் கொள்ளப் போகின்றன என தெரியவில்லை. 13 +, மீள் குடியேற்றம், அபிவிருத்தி, அரசியல் கைதிகளின் விடுதலை, இராணுவ பிரசன்னத்தை குறைத்தல், வடக்கு கிழக்கில் வேலை வாய்ப்பு போன்றவற்றினை முன் வைத்து ஜேவிபி / சஜித் ஆகியோரின் கட்சிகளுடன் பேரம் பேசலை மேற்கொள்ள முன் வர வேண்டும். தேசிய கட்சிகளின் சார்பாக பாராளுமன்றத்தில் தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை இயன்றவரைக்கும் குறைக்க முயல வேண்டும்.
  23. நுணா, வாக்குகளை பெற்றுக் கொடுக்க ஆதரவு தேவைப்படுவதும், ஆட்சியில் தொடர்வதற்கு ஆதரவு தேவைப்படுவதும் ஒன்றா?
  24. இங்கு அடிக்கடி மைத்திரி யை தமிழ் மக்கள் ஆதரித்தது பற்றி குறைப்படுகின்றவர்கள் உள்ளனர். மைத்திரியின் அரசுக்கு முன் இருந்த மகிந்த & CO வின் காட்டாட்சியில் கிரீஸ் பூதத்தில் இருந்து பல பயங்கரங்களையும் அச்சுறுத்தல்களையும் தாயக மக்களும் முன்னால் போராளிகளும் அனுபவித்து கொண்டு இருந்தனர் என்பதையும் அந்த காட்டாட்சியை அகற்ற தாயக மக்களால் தம்மால் இயலுமான ஒரு நடவடிக்கையாக மைத்திரியை ஆதரித்தார்கள் என்பதையும் ஏற்றுக் கொள்ள மாட்டினம். இதில் பலர் மஹிந்த ஆட்சியில் தாயகம் பக்கம் தலைவைத்தும் படுக்காமல், 'நல்லாட்சி காலத்திலும் ' அதன் பின் ரணில் காலத்திலும் ஊருக்கு முதன் முதலாக போனவர்களும் அடக்கம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.