Everything posted by நிழலி
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
1994 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் தான் அது. 9 எம் பிக்களை ஈபிடிபி பெற்றுக் கொண்டது. யாழ் மாவட்டத்தில் தீவகத்தில் மட்டுமே தேர்தல் இடம்பெற்றது. ஒரு சில எம் பி கள் நூற்றுச் சொச்ச வாக்குகளை மட்டுமே பெற்று தேர்வானார்கள். அதில் ஒருவர் பிற்காலத்தில் தினமுரசு ஆசிரியராக இருந்த அப்பிள் என அழைக்கப்பட்ட ரமேஷ். (பின்னர் 1999 இல் டக்கிளசால் வெள்ளவத்தையில் ஈபிடிபி வாங்கிய (நெல்சன் வீதி இலக்கம் 15) வீட்டை எவர் வைத்திருப்பது தொடர்பாகவும், ரமேஷ் குமார் பொன்னம்பலத்துடன் இணைய முயற்சித்ததாலும் கொல்லப்பட்டார்.) புலிகள் தேர்தலை புறக்கணிக்க சொன்னதாக நினைவில்லை. ஆனால் தம் ஆளுகைக்குட்பட்ட இடத்தில் சிறி லங்கா வின் தேர்தலை நடாத்த அனுமதிப்பது தனி நாட்டுக் கோரிக்கை யின் அடிப்படையில் விரோதமானது என்பதால் நடாத்த விடவில்லை.
-
மறதி என்பது தமிழர்களின் தேசிய வியாதி
தொடர்ச்சியாக தவறான தகவலை உங்கள் சொந்த அனுபவம் என்ற முலாம் போட்டு எழுதிக் கொண்டு இருக்கின்றீர்கள் விசுகு. இலங்கையில் இருந்த 33 ஆண்டுகளில் நான் 27 ஆண்டுகள் சிங்களப் பகுதியில் தான் வாழ்ந்தனான். முக்கியமாக இனக்கலவரம் ஆரம்பித்த நாட்களில் என் பெற்றோருடன் நான் அங்குதான் இருந்தேன். 83 இனக்கலவரத்தில் இதில் ஜேவிபி பங்குகொள்ளவில்லை. அது முழுக்க முழுக்க ஜே.ஆர் அரசினதும் அவரது படையினரும் சிங்கள காடையர்களுடன் இணைந்து நடாத்திய படுகொலைகள். அந்தப் பழியை ஜே.ஆர் ஜேவிபி மீது சுமத்தியது அவர்களை தடை செய்யும் நோக்குடனே. இது வரைக்கும் 83 ஜூலை கலவரம் பற்றி வந்த எந்த காத்திரமான நூலிலும். அனுபவக் கட்டுரைகளிலும் ஜேவிபி பற்றி குறிப்பிடப்படவில்லை. ஜேவிபியின் இனவாத முகத்தை, அதன் முந்தைய இனவாத செயற்பாடுகளை எடுத்துரைக்க உண்மையான பல விடயங்கள் இருக்கையில், தேவையற்று 83 இனக்கலவரத்தில் அவர்களை குற்றம் சாட்டுவது கண்டிப்பாக உள் நோக்கம் கொண்டதாக, குறுகிய அரசியல் லாபத்திற்காகவோ என்று சந்தேகப்படுகின்றேன். அத்துடன் இது ஜே.ஆர் இன் இனவாத செயல்களை வெள்ளையடிக்கும் முயற்சியாகவும் உள்ளது. அல்லது, ஜேவிபி யின் பின் தமிழ் மக்கள் அணிதிரண்டால், தாயக மக்கள் மீதான புலம்பெயர் அமைப்புகளின் செல்வாக்கு முற்றாக இழந்து விடுமோ என்ற அச்சத்தில் உண்மைக்கு புறம்பான விடயத்தை உங்கள் சொந்த அனுபவம் என்ற முலாம் பூசி எழுதுகின்றீர்கள் எனவும் சந்தேகமாக உள்ளது.
-
பாராளுமன்ற பொதுத் தேர்தல் செய்திகள் - 2024
கடைசியில் என்னையும் இவர்களை ஆதரிக்க வைக்கப் போகின்றார்கள். உண்மையில் நல்ல விடயங்களை செய்ய தொடங்கியுள்ளார்கள் போல் உள்ளது. கந்தளாயில் சீனித் தொழிற்சாலைக்கு சொந்தமான 11,000 ஏக்கர் நிலத்தை குறுகிய கால விவசாயத்துக்கு வழங்கியுள்ளார்கள் நேற்று. இதுவும் மிகச் சிறந்த ஒரு செயல்.
-
வியாழேந்திரனின் வேட்பு மனு நிராகரிப்பு!
கவலையான செய்தி, தேர்தலில் நின்று கட்டுக்காசும் இழந்து போவதைப் பார்க்கும் சந்தர்ப்பம் இல்லாமல் போய்விட்டதே...
-
மறதி என்பது தமிழர்களின் தேசிய வியாதி
இந்த தேர்தலுடன் புலம்பெயர் நாடுகளில் இருக்கும் போலித் தமிழ் தேசியவாதிகளின் செல்வாக்கு தாயக அரசியலில் இருந்து பெருமளவு நீங்கிவிடும் என்பதை இவர்கள் உணர்ந்து இருப்பதால் எப்பாடுபட்டாவது அதை தடுக்க, இவர்கள் இப்படித்தான் நல்ல வசதியாக வாழ்ந்து கொண்டு விண்ணாளம் கதைப்பார்கள். ஆனால் இவர்களின் சொல்லுக்கு ஐஞ்சு சதமும் பெறுமதியில்லை. வெறும் வாய்சொல் வீரர்கள்.
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
யாழ் மாவட்டத்தில் 7 என்று இருந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை, போதிய சனத்தொகை இல்லாமையால் 6 ஆக குறைத்து விட்டார்கள் என அண்மையில் செய்தி வெளியாகி இருந்தது.
-
நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தது ஈழ மக்கள் ஜனநாயக கட்சி!
இடையில் மகிந்த ஆட்சியிலும் 3 வருடங்கள் அமைச்சர் பதவி இல்லாமல் இருந்தார்.
-
35 வயது மாமியை , 16 பேர் கொண்ட குழுவுடன் பாலியல் துஷ்பிரயோகம் செய்த மருமகன்
பாலியல் வல்லுறவுச் செய்தி உங்களுக்கு கிளுகிளுப்பாக இருக்கின்றதா? 😠
-
இலங்கை தொடர்பான ஐநா தீர்மானம்: அநுர அரசாங்கமும் நிராகரித்தது
தலைவர் இனவாதி மகிந்தவை வெல்ல வைப்பதற்காக மக்களை தேர்தலைப் புறக்கணிக்கச் சொல்லி, இன்னொரு இனவாதி ரணிலை தோற்கடித்தவர் என்பதால், கண்டிப்பாக அனுரவை நோக்கி நேசக்கரத்தை நீட்டி இருப்பார். அவர் ஒவ்வொரு முறையும், இலங்கை தேர்தல்களின் மூலம் ஒரு சில இலக்குகளை எட்டும் வண்ணம், முடிவுகளை எடுத்தவர். பிரேமதாசாவில் இருந்து மகிந்தவரைக்கும் அப்படித்தான் முடிவுகள் எடுத்தார். ஆனால் கடைசி முடிவு, எதிர்பார்த்த விளைவுக்கு பதிலாக எதிர் விளைவைக் கொடுத்தது.
-
அடியோஸ் அமிகோ
நான் இப்படத்தை பார்த்தனான். தொடக்கத்தில் கொஞ்சம் அலுப்படித்தாலும் பின்னர் நன்றாக இருந்தது. படத்தின் முடிவும் நல்ல முடிவு. எனக்கும் இப்படி ஒரு திடீர் நண்பன் கிடைத்தால், வகை வகையாக சாப்பாட்டை வெட்டித் தள்ளலாம் என்ற ஒரு ஆசையும் இடைக்கிடை எட்டிப் பார்த்தது.
-
இந்திய ஜனாதிபதியிடம் இருந்து தேசிய விருதினை பெற்றுக் கொண்டார் லைக்கா புரடக்ஸனின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன்
இன்னொரு அடிமை இந்தியாவுக்கு இதன் மூலம் நிரந்தரமாக கிடைத்து விட்டார். இவரை எப்படியாவது பயன்படுத்தி தமிழர் அரசியலில் மேலும் பிரச்சினைகளை இந்தியா உருவாக்கும் என நினைக்கிறேன். ஏற்கனவே வருமான வரி இலாகாவின் மூலம் லைகாவின் இந்திய முதலீடுகளுக்கு ஆப்பு வைக்க முனைந்த இந்திய அரசு, இப்ப விருது கொடுக்கிறது என்பதை இலகுவாக ஏற்க முடியவில்லை.
-
ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல் விசாரணைகள் ஆரம்பம்!
தமிழ் சிறியின் கருத்துத்தான் எனது கருத்தும் இதில். மாற்றுத்திறனாளிகள், திரு நங்கை / திரு நம்பிகள், ஒடுக்கப்பட்டவர்கள் போன்றோரை அரசியல் கட்சிகள் ஒரு போதும் வேட்பாளராக நியமிப்பதில்லை. அவ்வாறு நியமிக்கப்பட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நிலை உருவாக வேண்டும். அது தான் ஆரோக்கியமான அரசியல். இந்தியாவிலேயே இவ்வாறான ஆரோக்கியமான விடயம் நிகழ்ந்து இருக்கின்றது. சப்னம் மவுசி (Shabnam "Mausi") எனும் திரு நங்கை எம்.எல்.ஆக இருக்கின்றார்.
-
யாழில் கட்டுமரம் கவிழ்ந்ததில் கடற்தொழிலாளி உயிரிழப்பு!
இலங்கையில் முன்னர் பிச்சை சம்பளம் என்று ஒன்று மிகவும் ஏழ்மையானவர்களுக்கு கொடுப்பார்கள், இப்பவும் கொடுக்கின்றார்களா?
-
ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல் விசாரணைகள் ஆரம்பம்!
போன முறை தேர்தலில் நின்று வெற்றியடைந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இம்முறை வெல்லக்கூடாது என்று சிங்கள சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து எழுதி கொண்டு வருகின்றனர். அதனால் தான் பல முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேசியப் பட்டியல் மூலம் வரலாம் என்று திட்டமிடுகின்றனர்.
-
யாழில் தேசிய மக்கள் சக்தியில் களமிறங்கும் மருத்துவர் சிறிபவானந்தராஜா
நீதிபதி இளஞ்செழியனையும் தேசிய மக்கள சக்தி களமிறக்க முயல்கின்றனர் என ஊரில் உள்ளவர்கள் சொல்கின்றனர். அப்படி அவரை இறக்கினால் நல்லது என நினைக்கிறேன்.
-
தமிழரசில் இருந்துவெளியேறிய சசிகலா'சங்கு' சின்னத்தில் போட்டி
வீரகேசரி, தினக்குரல் போன்றவை கூட சில நேரங்களில் தவறான செய்திகளை பிரசுரிப்பதுண்டு. அண்மையில் கூட பிரித்தானியா, பிரான்ஸ் போன்றவை இஸ்ரேல் லெபனானில் செய்யும் தாக்குதல்களுக்கு ஆதரவில்லை என்ற ரீதியில் தவறான செய்தியை போட்டிருந்தது. கள உறவுகள் சிலர் அதை தவறென்று விளக்கமளித்து இருந்தமையால் ஈற்றில் அது பற்றிய தெளிவு கிடைத்தது. ஆதவனின் பல செய்திகள் இங்கு தவறென்று விளக்கமளிக்கப்பட்டும் உள்ளது. கருத்துக்களத்தின் பயனும் இது தான். கருத்தாடல்கள் மூலமும் உரையாடல்கள் மூலமும் உண்மைத் தன்மையை கண்டறிவது. அதே போன்று தான் இந்தச் செய்தியும். இது பற்றி மீண்டும் மீண்டும் தெளிவான விளக்கமளிக்கக் கூடிய கருத்துகள் வைக்கப்பட்டு இருக்கின்றனர். ஆனால் உங்களுக்கு அந்த கருத்துகள் தரும் உண்மை உவப்பானதாக இல்லை என்பதால், அதை ஏற்க மறுத்து ஈற்றில் யாழில் குறை கூறுகின்றீர்கள். எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. அந்த அறிவை மீண்டும் மீண்டும் இங்கு கொண்டு வந்து கருத்துகளாக புகட்டினாலும், அதை புரிந்து கொள்ளாதமை மற்றவர்களின் தவறல்ல.
-
தமிழரசில் இருந்துவெளியேறிய சசிகலா'சங்கு' சின்னத்தில் போட்டி
பகிர்வுக்கு நன்றி நுணா
-
தமிழரசில் இருந்துவெளியேறிய சசிகலா'சங்கு' சின்னத்தில் போட்டி
விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டு இருந்த வேளை, சசிகலாவின் நெருங்கிய உறவொருவர் தன் முகனூலில் சசிகலா விருப்பு வாக்குகளின் அடிப்படையில் சுமந்திரனுக்கு முன்னுக்கு நிற்கின்றார் என தொடர்ந்து நிலைத்தகவல்கள் போட்டுக் கொண்டு இருந்தார். பின் நிலைமை மாறிய பின் சுமந்திரன் சுத்துமாத்து செய்துதான் சசிகலாவை பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னுக்கு வந்தவர் என்றார். அதற்கு ஆதாரமாக சுமந்திரன் மகேசனை சந்தித்ததை குறிப்பிட்டு இருந்தார். பெரும்பாலான புலம்பெயர் தமிழ் ஊடகங்களும், சமூகவலைத்தள பக்கங்களும் அவரது முகனூலின் நிலைத்தகவலளை அடியொட்டி அதனையே கூறின. நானும் என் பங்குக்கு என் முகனூல் பக்கத்தில் சுமந்திரனை திட்டி ஒரு பதிவு வேறு போட்டிருந்தேன். ஆனால் அடுத்த நாள் மாலையின் பின், சசிகலாவின் உறவு அந்த முகனூல் பதிவுகள் அனைத்தையும் அழித்து விட்டார். சசிகலா தான் வென்றவர், ஆனால் சுமந்திரன் அதை தட்டிப் பறித்து போட்டார் என இலங்கையில் இருந்து வெளிவரும் நம்பிக்கை தரக்கூடிய எந்த ஊடகமும் செய்தியாக கூட போடவில்லை. வீரகேசரி, தினக்குரல், டெய்லி மிரர், தமிழ் மிரர் போன்றவை இவ்வாறான குற்றச்சாட்டை பற்றி பிரசுரிக்கவும் இல்லை. புலம்பெயர் ஊடகங்கள், முக்கியமாக தமிழ்வின், பதிவு போன்ற இணைய பத்திரிகைகள் மட்டுமே தொடர்ந்து இது பற்றி சொல்லிக் கொண்டு இருந்தன. உத்தியோகபூர்வமான முடிவுகளும் அறிவிக்கப்பட்ட பின் சசிகலாவும் எந்த இடத்திலும் இது பற்றி கருத்து தெரிவிக்கவும் இல்லை, நடவடிக்கை எடுக்கவும் இல்லை. அத்துடன் சுமந்திரன் போய் மகேசனிடம் சொன்னவுடன், உடனே மகேசனால் அவ்வாறு பொய்யான முடிவை அறிவிக்க முடியாது. மீள வாக்கு எண்ணிக்கைக்கு நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டால் அவரது பதவி மட்டுமல்ல அவரது மதிப்பே நிலைகுலைந்து போகும் என்பதை அறியாதவர் அல்ல அவர். அத்துடன் அவர் அரசியல்வாதியும் அல்ல, மதிப்புமிக்க ஒரு தமிழ் அதிகாரி அவர். சசிகலா வழக்கு தொடுத்து இருந்தால், அவருக்கு கோத்தாவால் அச்சுறுத்தல் வந்திருக்கும் என்பதலெல்லாம் தவறான அனுமானம். ஏனெனில் இரண்டு தமிழ் அரசியல்வாதிகள் தமக்குள் அடிபடுவதை பார்த்து கோத்தா கொடுப்புக்குள் சிரித்து கொண்டு மேலும் அந்த பிரச்சனையை தீவிரமாக்கி இருப்பார்.
-
பிறவிப் பெருங்கடல் - T. கோபிசங்கர்
பிறவிப் பெருங்கடல் விடிய எழும்ப Google calendar இல வந்த alert ஐப் பாத்து, முதல் வேலையா fb இல தேடி ஒரு photo ஐ எடுத்து what’s app குறூப்பில birthday day wish போட்டிட்டு status இல “ HBD to ……..” எண்டு முழுசாக்கூட எழுதாமல் சுருக்கிப் போட்டிட்டு தன்டை admin வேலையையும் காலைக் கடமையை வடிவாச் செய்திட்டன் என்ற திருப்பதியோட நாளை ஆரம்பித்தார் நம்பி. அவுஸ்திரேலியாவில விடிஞ்சாலும் அல்பேட்டாக்காரன், இரவுக் குளிருக்க ரெண்டு பெக்கைப் போட்டுக்கொண்டிருந்தவன், உடனயே தன்டை பங்குக்கு ஒரு பலூன் படத்தைப் போட்டான். மூத்திரம் போக வேளைக்கு எழும்பி நித்திரை வராமப் போஃனைப் பாத்திட்டு ஆரா இருக்கும் எண்டு யோசிச்சிட்டு , ஏன் பிரச்சினை எதுக்கும் ஒரு வாழ்த்துத் தானே எண்டு தன்டை பங்குக்கு கண்டிக்காரன் வாழ்த்து ஒண்டைப் போட்டான். இரவு 12.00 மணிக்கு பத்துபேர் தடதடவெண்டு வந்து வெட்டின கேக் வாயை கழுவாமலே படுத்தவன், எழும்பின கையோட எந்தெந்த குறூப்பில ஆரார் wish பண்ணினவை எண்டதைப் பாத்திட்டு, wish பண்ணாதவனை ஞாபகாமா வைச்ச படி குளிக்கப் போனான் அம்பி. கொழும்பில விடிகாலை late ஆ எழும்பி கண்ணாடி போடாமலே updated news எல்லாத்தையும் பாத்திட்டு போனகிழமை தன்டை birthdayக்குப் படத்தைப் போடேல்லை இண்டைக்குப் போட்டிருக்கிறார் adminஐத் தூக்கு , எண்டு போர்க்கொடி தூக்கினான் அப்பன். அதுக்குப் பிறகும் வாழ்க்கை வெறுத்து விட்டிட்டுப் போகாமல் அப்பன்டை friend சுப்பனைப் பிடிச்சிச் அப்பனை அடக்கிச் சமாளிச்சுக் கொண்டு குறூப்பை ஓட்டிக்கொண்டிருந்தார் நம்பி. காலமை எழும்பி ஏதாவது நல்ல விசியம் இருக்குமா எண்டு WhatsApp பாக்க ஒரு புது குறூப்பில add பண்ணி இருந்தாங்கள். விசாரிச்சா, “மச்சான் சுசிக்கு birthday வாற மாசம், மனிசி கேட்டது ஒரு video செய்ய வேணுமாம் எண்டு குசும்பர் குறூப்பி்ல நீயும் அவனும் இருக்கிறதைப் பாத்து add பண்ணினான், ஒரு wishing video message அனுப்பி விடு” எண்டான் சிங்கன். கேட்டதை மறந்திருக்க, காசைக் கட்டுங்கோ கெதியா எண்டு ஒரு மாசத்துக்கு முதலே தொடங்கி, ஒவ்வொரு நாளும் தொல்லை தாற insurance காரன் அனுப்பிற reminder இலும் பாக்க reminder கூட வர, கடைசீல சரி எண்டு போட்டு நாலு தரம் எடுத்தும் சரியா வராத வீடியோ message இல என்னை வடிவாத் தெரியிற ஒண்டை upload பண்ணி விட சுசியின்டை குடும்பம் சார்பா சிங்கன் 🙏 போட்டான். முந்தின நாட்களில வீட்டுக்காரர் ஞாபகப் படுத்தினாக்கூட வீண் செலவு எண்டு தெரிஞ்சே மறந்து போன birthday தான் நிறைய, ஆனால் இப்ப அப்பிடியில்லை. எப்ப இந்த birthday கொண்டாட்டம் பெரிசா வந்திச்சுது எண்டே தெரியேல்லை தொற்றுநோய் மாதிரி எல்லாருக்கும் பரவீட்டுது . நல்லதோ கெட்டதோ நடந்தா அதை அறியத்தாறம் எண்ட செய்தியை எங்காயாவது போட்டால் அதை வாசிச்சு அறிஞ்சதோட நிப்பாட்டாமல். வாழ்த்தில இருந்து அஞ்சலி வரை எழுத்தில தொடங்கி, சுருக்கெழுத்தா மாறி கடைசீல கைக்கு நோகும் எண்டு போட்டு Emoji இல வந்து நிக்குது. குறூப்பிலயே இல்லாதவனுக்கும் வாழ்த்துகளும் செத்தவனுக்கு RIP யும் அவங்கள் ஆவியா வந்து பாத்தாலும் எண்டோ தெரியேல்லை நிறையவே கிடைக்கும். அந்தக் காலத்தில கொஞ்சம் வசதியான வீடுகளில மட்டும் பள்ளிக்கூட friends ஐ கூப்பிட்டு பின்னேரம் வீட்டை ஒரு tea party நடக்கும் . ஒருக்கா படிக்கேக்க அப்பிடி ஆக்கள் என்னையும் கூப்பிட போறவீடு பெரிய வீடு, என்னத்தைக் கொண்டுபோற எண்டு தெரியாம முழிச்சன். அவன் “English teacherன்டை favourite student ” எண்டு போட்டு போன மாசம் புத்தகம் விக்க வந்த கப்பலில என்டை அறிவை வளக்க எண்டுஅப்பா மலிவா வாங்கித் தந்த பிரிச்சே பாக்காத பேர் தெரியாத ladybird புத்தகத்தை brown paper bag இல போட்டுக் கொண்டு போய்க்குடுத்தன். ஏனோ தெரியேல்லை அடுத்த முறை என்னை அவன் கூப்பிடவேயில்லை. பொதுவா அந்தக்காலத்தில birthday எண்டால் toffee bag தான் அதுகும் கொஞ்சம் வசதி இருந்தாத்தான். நூறு toffee உள்ள bag வாங்கி வகுப்பில எத்தினை பேர் , ரீச்சர் எத்தினை பேர் எண்டு எண்ணி, ஐஞ்சு மட்டும் கூடப் போட்டு வீட்டில குடுத்து விடுவினம். வாங்கித்தாற delta இல்லாட்டி star toffee bag ஓட பள்ளிக்கூடம் போய் தனக்கு இண்டைக்கு birthday எண்டு வகுப்ப ரீச்சரிட்டை toffee பையை நீட்ட அவ அள்ளி எடுத்திட்டு பிள்ளைகளே birthday பாட்டு பாடீட்டு ஒராள் ஒண்டு தான் எடுக்கோணும் எண்டா. “ happy birthday” வாழ்த்தோட வகுப்பைச் சுத்தி வந்திட்டு பிறகு ஒட்டிக்கொண்டு வாற ஒரு friend ஓட ஒவ்வொரு வகுப்பா ஏறி எல்லா ரீச்சர் மாருக்கும் குடுத்திட்டு வந்திருக்க மிஞ்சிற toffeeஐ பங்கிடிறதுக்கு (பறிக்கிறதுக்கு) இன்டேர்வலில ஒரு குறூப் வரும். இவ்வளவு நாளும் கொம்பாஸால குத்தினவன் இண்டைக்கு திடீர் friend ஆவான். Birthday அண்டு கிடைக்கிற ஒரே ஒரு நன்மை எண்டால் , அண்டைக்கு மாத்திரம் குளப்படி செய்தாலும் அடி விழாது . செய் குழப்படிக்கு வாத்தி பிரம்பைத் தூக்கிக்கொண்டு முன்னால வா எண்டு கூப்பிட , “சேர் இண்டைக்கு இவருக்கு பேத் டே” எண்டு chorus ஆ நாலு பேர் கத்த ,”சரி போய் இரு இண்டைக்கு விடுறன்” எண்டு பதில் வரும். முந்தி birthday எண்டால் கலர்ச்சட்டை போடலாம் எண்டிருந்தது, பிறகு அதுகும் இல்லாமல் போட்டுது. என்டை கஸ்ட காலம் எனக்குப் பிறந்த நாள் பள்ளிக்கூட விடுமுறையில தான் வாறது ஆனபடியால் அந்தக் கொடுப்பனவும் இல்லை. அதோட வருசம் கழிச்சு வாறதால கூடவாச் செய்யிற பயத்தம் பணியாரமும் , முறுக்கும் தான் treat. கொஞ்சம் வளர பெடியளோட போய் ரொட்டியும் கறியும் எண்டு தொடங்கி பிறகு extra ரொட்டி போட்டு ஒரு கொத்து மூண்டு plate எண்டு கேட்டு வாங்கிப் சாப்பிடுறது தான் treat. அதுகும் வீட்டை ஆடு எண்டு சொல்லீட்டு கொண்டு போற காசுக்கு மாடுதான் வாங்கிறது. இப்ப அதுக்கெண்டு தனி budget முதலே ஒதுக்க வேணும். அதோட வெள்ளைக்காரனே வீண் செலவு எண்டு மறந்து போன கனக்கத்தை எங்கடை சனம் மட்டும் தான் பின்பற்றிற மாதிரி இருக்கு. வரியாவரியம் வாற திருவிழாவைத் தவிர double digit ஆம் எண்டு 10, teen தொடங்குதாம் எண்டு 13, adult ஆகீட்டாராம் எண்டு 18, துறப்புக் கொழுவலாமாம் எண்டு 21, golden birthday எண்டு 50, பிறகு60 எண்டு விசேச திருவிழாவும் இருக்கும். கலியாண வீடு மாதிரி hall எடுத்து , invitation card அடிச்சு, Theme colour, 3D cake, cartoon character , photo shooting face painting எண்டு அது birthday பெரிய விழாவா இப்ப வந்திட்டுது. Birthday க்கு cake எப்ப வந்தது எண்டு தெரியாது. முதலில cake இல தொடங்கி, பிறகு சும்மா ஒரு மெழுகுதிரிவந்து, அது பிறகு அது கலராகி, சின்னனாகி, நம்பரா மாறி, பிறகு மத்தாப்பு மாதிரி வந்து, இப்ப birthday song க்கு music போடிற மாதிரி எண்டு கூர்ப்படைஞ்சு வந்து கொண்டிருக்கு. மெழுகுதிரி மாதிரி பத்தாததுக்கு வெட்டிற கத்தியும் மாறிக்கொண்டு போகுது. பாண் வெட்டிற கத்தீல தொடங்கிப் பிறகு butter பூசிற கத்திக்கு ribbon கட்டி இப்ப அதுக்கும் எண்டு special கத்தி கலரில வருது. கலியாணத்தில தாலி கட்டேக்கயே பின்னால ரெண்டு மூண்டு பேர் தான் நிப்பினம் விளக்கோட ஆனால் birthday இல “பொப்” வெடிச்சுப் பூப்போட ரெண்டு பேர், பனிமழை பொழியப்பண்ணக் கொஞ்சப்பேர், chorus பாடக் கொஞ்சப் பேர் எண்டு இளையராஜான்டை stage show மாதிரி ஆக்கள் நிப்பினம். சில நேரத்தில popம் sprayம் கேக் எல்லாத்தையும் மூட சாப்பிட வேற கேக் தேவைப்படும். “அடேய் நாங்கள் அவங்களை மாதிரி இல்லை விளக்கை ஏத்தித்தான் கொண்டாட வேண்டும்” எண்டு நண்பன் நவாஸ் புது வியாக்கியானத்தோட கேக்கை வெட்டி ஆனால் விளக்கை ஏத்திக் கொண்டாடினான். பிறந்த நாள் காரனுக்குத்தான் கேக் தீத்திறது மாறி எங்கயோ படத்தில அரைகுறையாப் பாத்திட்டி இப்ப கேக் வெட்டிறவன் தான் மற்ற எல்லாருக்கும் தீத்த வெளிக்கிட்டான். பழைய காலத்தில நாள் நச்சத்திரம் பாக்கிறது நல்லது கெட்டதுக்கு மட்டுமில்லை பிறந்த நாளுக்கும் தான். பிறந்த நாளண்டு இருந்த நச்சத்த்திரம் பிறகு நாள் மாறி வரும். முந்தின காலத்தில நட்சத்திரதுக்கு கோயிலில ஒரு அருச்சனை தான் பிறந்த நாள் விசேசமா இருந்திச்சுது. இப்ப பிறந்த நாளுக்கு party வைக்கிறது வளரக் கோயிலுக்கு போறது தேய்பிறையாக மாறி நச்சத்திரம் சாத்திரத்துக்கு மட்டும் எண்டு ஆகீட்டுது. அதுகும் ஏதாவது special birthday எண்டால் Scarborough இருக்கிற எல்லாரையும் கூப்பிட்டு கனடாவில தொடங்கி, பிறகு கொஞ்சப்பேரோட போய் கியூபாவில நிண்டு படம் போட்டிட்டு, வாற வழீல லண்டனிலேம் கொண்டாடி பிறகு ஊரில வந்து பெரிசாக் கொண்டாடி எண்டு ஒரு வருசமா அந்தப் படம் ஓடும். படிக்கேக்க இழந்தும், இடம்பெயர்ந்தும், எண்ணிக்கை சுருங்க எல்லாப் பள்ளிக்கூடத்தையும் சேத்து இவ்வளவு தான் எண்டு batchயிலேயே ஒரு இருநூறு பேர் தான் இருந்தம். அப்ப பள்ளிக்கூடம் தாண்டி உறவும் நட்பும் இருந்ததால partyயும் இருக்கிறதைக் கொண்டு பிரிச்சு உறவைப் பெருக்கி நடந்தது. ஆனாலும் பெடியள் மட்டும் தான் அப்பிடியாவது செய்தது எண்டு நெக்குறன். இப்ப ஆம்பிளையும் பொம்பிளையுமா ஆயிரம் பேர் இருக்கிற குறூப்பில ஆளே தெரியாத ஒருத்தனுக்கு birthday wish பண்ணிற காலம். அதோட இப்ப இது ஒரு நாள் திருவிழா இல்லை. முதல்ல தனி்யக் குடும்பமா birthdayகொண்டாடிப் பிறகு, வேலை குறூப், gym group, படிச்ச பள்ளிக்கூடம், ரியூசன் சென்டர், பிறந்த ஊர் எண்டு தொடங்கி சர்வதேச levelல ஒரே வருசத்தில பிறந்தது எண்டு உலகளாவிய birthday கொண்டாட்டத்தை ஊர்ஊராப் போய் வைக்கிறது தான் fashion ஆப் போட்டுது. அதோட இப்ப ஒரு புதுசா surprise party எண்டு வேற ஒண்டு தொடங்கி இருக்கு. எல்லாம் தெரிஞ்சும் எதுகும் தெரியாத மாதிரி party நட(டி)க்கிறது தான் அது. எல்லாக் கொண்டாட்டமும் முடிஞ்சு எல்லாருக்கும் நன்றி உரை சொல்லி முடியமுதலே அடுத்த birthday வந்திடும். பிறவிப் பெருங்கடல் எண்டதை சரியா? விளங்கிக் கடல் தாண்டிக் கொண்டாடிக் கொண்டிருக்கிற நாங்கள் அடுத்தது விண்ணைத் தாண்டி விண்வெளியில் தான் கொண்டாடுவம் எண்டு நெக்கிறன் . Dr. T. கோபிசங்கர் யாழ்ப்பாணம்
-
பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராவதில் தடுமாறும் எதிரணிக் கட்சிகள்
முற்றிலுமாக, சுமந்திரன், கஜேந்திரன், டக்கிளஸ், விக்கினேஸ்வரன் உட்பட அனைவரையும் தமிழ் மக்கள் நிராகரிக்கத் தொடங்க வேண்டும். இவர்களால் இந்த 15 வருடங்களில் எந்த நன்மையும் ஏற்படவில்லை, என்பதுடன் இவர்களின் புழுத்துப் போன, வங்குரோத்து அரசியலால் தமிழ் இளைய சமுதாயம், அரசியலை விட்டே தூர விலகி நிற்கின்றது. இவர்களுடன் சேர்ந்து, தாயக அரசியலில் இருந்து புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் செல்வாக்கும் முற்றாகத் களையப்படல் வேண்டும். இன்றிருக்கும் தமிழ் அரசியல்வாதிகளை நிராகரிப்பதன் மூலமே இது சாத்தியமாகும். அனைவரும் நிராகரிக்கப்பட்டு, மீண்டும் பூச்சியத்தில் இருந்து ஆரம்பிப்பதே தமிழ் மக்களுக்கு நன்மை தரும். இயற்கை வெற்றிடங்களை நிரப்பாமல் விடுவதில்லை.
-
விண்ணைத் தொடும் தேங்காய் விலை
இடது சாரி அரசியல் என்றால் இப்படித்தான் இருக்கும் சுவைபிரியன். இதுக்கெல்லாம் கவலைப்படக் கூடாது.😀
-
தமிழரசில் இருந்துவெளியேறிய சசிகலா'சங்கு' சின்னத்தில் போட்டி
இதே கட்சியில் இது நாள் வரைக்கும் ஒட்டிக் கொண்டு இருந்து விட்டு, சீட்டு கிடைக்கவில்லை என்பதற்காகத்தான் விலகி இன்னொரு கட்சியில் சீட்டுக்காக சேர்ந்து இருக்கின்றார். தேர்தலில் தனக்கு முறைகேடு நடந்தது என புலம்பிய இவர், அதுக்காக ஒரு முறைப்பாடு தானும் செய்யவில்லை என்பதுடன், வழக்கும் நடத்தவில்லை (இலங்கை நீதித் துறையில் தனக்கு நம்பிக்கையில்லை என இவர் சாட்டுச் சொல்ல முடியாது, ஏனெனில் கணவரும் அதே துறையில் தான் இருந்தவர். மகளையும் அதே துறையில் தான் படிப்பித்தவர் என நினைக்கின்றேன்). கடந்த சனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு கேட்டு இருந்தார் - தன்னிச்சையாக
-
நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தது ஈழ மக்கள் ஜனநாயக கட்சி!
நான் நினைக்கவில்லை, யாழ் மக்கள் இவருக்கு இந்த முறை வாக்களிப்பர் என. தேசியப் பட்டியல் மூலம் தான் ஒரு ஆசனம் கிடைக்க வாய்ப்பிருக்கும் இம் முறை. எப்படிக் கிடைப்பினும், அமைச்சர் பதவி இப்போதைக்கு இல்லை.
-
தமிழரசில் இருந்துவெளியேறிய சசிகலா'சங்கு' சின்னத்தில் போட்டி
இந்த முறை தோற்றுப் போகும் போது, என்ன நாடகம் போடப் போகின்றார் என்று பார்க்க ஆவலாக இருக்கு. நவம்பர் 16 வரைக்கும் காத்திருப்போம்.
-
தீர்மானம் எடுக்க முடியாது ; தமிழ் மக்கள் பொதுச்சபை தடுமாற்றம் !
இதை வாசிக்கும் போது எனக்கு மட்டுமா சிரிப்பு வருகிறது?