Everything posted by நிழலி
-
வாழை விமர்சனம்: மாரி செல்வராஜின் உன்னத படைப்பு தரும் தாக்கம் என்ன?
"அப்பா நாங்கள் accidents இல் ஒருவர் இறந்து விட்டார் என்று கேள்விப்பட்டவுடன், அவர் பாவம் என்று கடந்து விடுகின்றோம்... ஆனால் அவருக்கு பின்னால் அவர் அம்மா, அக்கா, அப்பா, பிரெண்ட், என்று எத்தனை பேர் துடிதுடித்து போவினம் என்று நாங்கள் நினைப்பதே இல்லை" என் மகள் இப் படம் முடிந்த பின் காரில் வரும் போது கூறியது. நேற்று மகளையும் கூட்டிக் கொண்டு மாரி செல்வராஜின் வாழை படம் பார்க்க போனோம். உன்னதமான திரைமொழியில், மிகச் சிறந்த உடல் மொழியில், நடப்பவற்றை சினிமா என நம்ப முடியாத காட்சிகளில், உயிரோட்டமான இசையில், பதைக்க வைக்கும் கிளைமாக்ஸில் வாழை எம் முன் விரிகின்றது. சிவனணைந்தான் எனும் சிறுவனின் பார்வை மற்றும் அனுபவத்தின் வாயிலாக வாழை ஒரு கிராமத்தில் கூலிக்காக சுரண்டப்படும், அதனை கேள்வி கேட்கும் சாதாரண மனிதர்களின் நாளாந்த கடின வாழ்வை பேசுகின்றது. குலை குலையாக வாழை குலைகளை சுமந்து வியாபாரிகளுக்காக உழைக்கின்ற ஏழைகளுக்கு கடும் பசியில் கூட ஒரே ஒரு வாழைப்பழத்தை சாப்பிட தானும் கொடுக்க மறுக்கும் உலகை மிக இயல்பாக வாழை காட்டுகின்றது. பதின்ம வயதில் ரீச்சர் மேல் வரும் ஈர்ப்பை கவிதையாக காட்டிய விதமும் அருமை. கொஞ்சம் கூட தனக்கு சம்பந்தம் இல்லாத, கேள்விப்படாத, கற்பனை செய்ய முடியாத, மாந்தர்களின் வாழ்வைஎ என் மகளுக்கு கூட உணர்வு பூர்வமாக புரிய வைக்கிறது மாரி செல்வராஜின் திரைமொழி. பல நாட்களுக்கு சிவனணைந்தான், அவன் காதல், அவனது அக்கா, சுற்றம், நட்பு, கிராமம், மாடு, அந்த கோழி எல்லாம் என் நினைவுகளை விட்டு அகலாது..
-
ஜனாதிபதி தேர்தல்; வாக்களிப்பது எப்படி?; 50 வீதம் கிடைக்காவிட்டால் என்ன நடக்கும்?
Python படிக்கும் போது கூட இந்தளவுக்கு என் தலை சுத்தியது இல்லை.
-
யாழில் ஆரம்பமான மாபெரும் வர்த்தக கண்காட்சி..!
நல்ல முயற்சி. இவ்வாறான நிகழ்வுகள் அடிக்கடி வைத்து இளைய சமூகத்தினரில் பலரை தொழிமுனைவோராக மாற்ற வேண்டும்.
-
சுமந்திரன் உள்ளிட்டவா்களுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பாா்கள் – சுரேஸ்!
தமிழ் மக்களின் பிரச்சனையை தீர்க்காமல் பொருளாதாரப் பிரச்சினை எப்படி தீராது என தெளிவாகச் சொல்லியிருக்கலாம். இந்தியா மற்றும் ஐ.எம்.எப், உட்பட இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் எவையும் பொருளாதார மற்றும் கடனுதவிகள் வழங்குவதற்கு தமிழர்களின் அரசியல் பிரச்சனைக்கு தீர்வு முன்வைக்கப்படல் வேண்டும் என்ற முன் நிபந்தனை எதனையும் முன் வைக்கவில்லை. அப்படி, வைக்க கூடிய அழுத்தங்களைத் தானும் தமிழ் தரப்பால் முன் வைக்க கூடியளவுக்கு அரசியல் மற்றும் பொருளாதார பலமும் இல்லை. சமகால நிகழ்வுகளின் / நிலமைகளின் அடிப்படையில் தமிழ் அரசியல் கட்சிகள் ஒரு போதும் முடிவுகள் எடுப்பதில்லை. உண்மையான கோமாளிகளின் கூடாரம் இது. சிங்கள, முஸ்லிம் மற்றும் மலையக தமிழர்களின் வாக்குகளின் மூலம், தென்னிலங்கை வேட்பாளர் ஒருவர் சனாதிபதியாகி செப் 21 இன் பின் பதவியேற்பார். அப்படி ஏற்ற பின், இவர்கள் சொல்லும் இந்த 'செய்தி' யை ஏறெடுத்து பார்க்கும் தேவை கூட அவர்களுக்கு ஏற்படாது.
-
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: கல்லூரி முதல்வர் ராஜினாமா; போலீஸுக்கு மம்தா ‘கெடு’
என் வீட்டில் இருந்து தள்ளி மூன்றாவது வீட்டில் வசிப்பர் கொல்கத்தாவைச் சேர்ந்தவர். தன் முகனூல் எங்கும் இக் கொலை தொடபான விவரங்களை பகிர்ந்து வருகின்றார். அவருடன் இக் கொலை தொடர்பாக கதைத்ததில், இது ஒரு திட்டமிடப்பட்ட கூட்டு பாலியல் வல்லுறவு கொலை என்கின்றார். அப் பெண்ணின் முதுகில் பலரது சப்பாத்துக் கால்களின் அடையாளங்கள் இருந்தன என்றும், நெஞ்சில் பலர் ஏறி மிதித்து அணுவணுகாக சித்திரவதை செய்து கொலை செய்துள்ளனர் என்கின்றார். எல்லாவற்றையும் விட, இப் பெண்ணை வேறு இடத்திற்கு கொண்டு சென்று இக் கொடூரத்தை நிகழ்த்திய பின் மீண்டும் கொண்டு வந்து மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள அறை ஒனறில் போட்டுள்ளனர் என்கின்றார். மம்தாவின் நெருங்கிய உறவினர் ஒருவரின் திட்டத்தின் படியே இது நிகழ்ந்துள்ளது என்றும், இந்த கொலையை மூடி மறைக்க அனைத்து விதமான சாட்சியங்களையும் சான்றுகளையும் அழித்து விட்டனர் என்றும் சொன்னார்.
-
385வது பிறந்தநாள் கொண்டாடும் சென்னை மாநகரம்
எனக்குப் பிடித்த நகரங்களில் ஒன்று சென்னை. இது வரைக்கும் மூன்று முறை போயுள்ளேன். ஒவ்வொரு முறையும் 14 நாட்கள் என்று 42 நாட்கள் சென்னையில் கழித்திருக்கின்றேன். அதிகாலை 3 மணிக்கு கூட விழித்திருக்கும் நகரம். வாகனங்கள் மட்டுமன்றி, தெருவில் தனியாக பெண்கள், தூய்மைப் பணியாளர்கள், இளைஞர்கள் என அப்போதும் நெரிசலாக இருக்கும் நகரம். இரவு 10 மணிக்கு பின் திறக்கும் பிரியாணிக் கடைகளை சென்னையில் தான் கண்டுள்ளேன். வணிக நோக்கிலான ஊடகங்கள் சென்னையை காட்டும் பிம்பத்துக்கும் உண்மையான சென்னைக்கும் இடையில் வெகு தூரம். பெண்கள் பாதுகாப்பாக வாழக் கூடிய தென்னாசிய முக்கிய நகரங்களில் சென்னையும் உண்டு. டாஸ்மாஸ்க் துயரம் இல்லாவிடின், இன்னும் சிறப்பாக சென்னை செழிப்புறும்.
-
ரகு தாத்தா - சுப.சோமசுந்தரம்
விமர்சனத்துக்கு நன்றி. OTT இல் வெளிவரும் போது பார்க்க இருக்கும் படங்களின் வரிசையில் இதனையும் சேர்த்துக் கொள்கின்றேன். இங்கு இப் படம் அரங்கங்களில் திரையிடப்படவில்லை கொட்டுக்காளி, வாழை படங்களைப் பார்க்கும் எண்ணம் உண்டா ?
-
உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு
ஆக மொத்தத்தில் நடக்காத தேர்தல் ஒன்றால், கூத்தமைப்பு உடைந்து போய் விட்டது! அக்னி இன்னொரு திரியில் இவர்களைப் பற்றி எழுதியது 100% சரி!
-
உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு
ரணிலுக்கு தேர்தலுக்கு முன்னரே கிடைத்த பெரிய பின்னடைவு இது. இது கண்டிப்பாக இவரது வாக்கு வங்கியை பாதிக்கும். உள்ளூராட்சி, மாகாணசபை தேர்தல்களை நடத்தினால், தாம் (ஐதேக) ப்மண்ணைக் கவ்வுவோம் என்று நம்பியதால்தான் இவற்றை பிற்போடுவதற்கான அத்தனை வேலைகளையும் பார்த்தார். இலஙையின் நீதித்துறை சனாதிபதியின் ஆதிக்கத்துக்குள் /செல்வாக்குக்குள் இருந்து விடுபட்ட பின்னர் சனாதிபதியின் முடிவுக்கு எதிராக வழங்கப்பட்ட முக்கிய தீர்ப்பு இது.
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
நான் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தியதை முழுமையாக எதிர்க்கின்றேன். இதன் காரணங்கள், பொது வேட்பாளரை நிறுத்தியவர்கள் அதற்கு சொல்லும் காரணங்கள் அனைத்தும், மக்களை முழு முட்டாள்களாக நினைத்துச் சொல்லும் காரணங்கள் என்பதால். அதில் முக்கியமானவை "நாம் சர்வதேசத்துக்கு ஒரு செய்தியை" சொல்லப் போகின்றோம் என்பதும். "தமிழர்களின் ஒற்றுமையை உலகுக்கு காட்டப் போகின்றோம்" என்பதும் தான். நடைமுறையில் நகைப்புக்கிடமான, நடைமுறையில் பலனளிக்காத ஒன்றிற்காக வளங்களைப் பயன்படுத்தி மக்களை அணி திரட்டுவது என்பது அந்த மக்களுக்குச் செய்யும் துரோகம் என்பதால் இதனை எதிர்க்கின்றேன். ஆனால் நீங்கள் அவர்கள் மகிந்தவிடம் பெட்டி வாங்கிவிட்டு இதனைச் செய்கின்றனர் என்பதை முற்றாக ஏற்க மறுக்கின்றேன். இது எந்தவிதமான ஆதாரமும் அற்ற குற்றச்சாட்டு இது. சுரேஸ் பிரேதசந்திரன், விக்கி போன்றோர் தம் இருப்பை அரசியலில் பேணுவதற்காக, சோதி மாஸ்ரர் , நிலாந்தன் போன்றவர்களின், மக்களின் மன நிலையை, தற்போதைய தேவைகளை அறிய விரும்பாத, அரசியல் சூனிய அறிவை நம்பி வகுத்த திட்டம் என்பதுக்கு அப்பால், இதில் பணம் கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றதாக நாம் நம்பத் தயாரில்லை. இது தொடர்பாக உங்களிடம் ஆதாரம் ஏதும் இருப்பின் எம்மிடம் பகிரலாம்.
-
ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவின் பரிதாப நிலை.
அதுக்கு அவர் தமனாவை அல்லவா கூட்டிக் கொண்டு போக வேண்டும் 😁
-
ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவின் பரிதாப நிலை.
ரணிலுக்கு எதிரான வாக்குகளைப் பிரித்து, சஜித்திற்கு விழும் வாக்குகளை குறைக்க, ரணிலின் ஆசீர்வாதத்துடன் களம் இறங்கியவர் இவர். ஆனால், இந்தளவுக்கு மோசமாக சனம் இவரது கூட்டத்தை புறக்கணிக்கும் என இவரும் ரணிலும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். அப்பம் ஒன்றை குரங்குகள் பிரித்த கதையாக சஜித்தினதும், ரணிலினதும் வாக்குகளை பிரிக்க பலர் முண்டியடிக்கும் போது, அனுரவின் வாக்குகளைப் பிரிக்கத் தான் எவரும் இல்லை. இதனால் பலனடையப் போவது, ஜேவிபி தான்.
-
மன்னாரில் இளம் தாய் மரணமடைந்த விவகாரம்: வைத்தியர் பணி இடை நீக்கம்!
இந்த இடைநீக்கம் (interdiction) என்பது கண் துடைப்பு. மீண்டும் வேலைக்கு அழைக்கும் போது, நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் சம்பளத்தை (அப்படி சம்பளத்தை நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றதா எனத் தெரியவும் இல்லை) சேர்த்துக் கொடுப்பர்.
-
ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவின் பரிதாப நிலை.
துஷ்டரை கண்டால் தூர விலகு என்ற பழமொழியை அவருக்குச் சொல்லிக் கொடுத்து வளர்த்து இருக்கின்றனர்.
-
சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
அவர் எழுத்து / சொல் பிழைகள் விட்டுள்ளார். புலிகள் இயங்க முடியாவிட்டாலும் வெளிநாடுகளில் பொருளாதார ரீதியில் பலமாக இருந்தால் தன் குடும்பமும் நெருங்கிய உறவுகளும் குடும்பம் நடத்த முடியும் , கோடிகளில் புரள முடியும் என்று சொல்லியிருக்க வேண்டும். கோத்தாவை விட, மஹிந்தவை விட, கடும் சிங்கள இனவாதிகளை விட தலைவர் கொல்லப்பட்டதை, புலிகள் அழிக்கப்பட்டதை மனசார மகிழ்வுடன் வரவேற்பவர்களாக இவர்களே இருப்பர்.
-
உ.பி: மருத்துவமனையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட செவிலியர்... மருத்துவர் உட்பட மூவர் கைது!
இலங்கையும் பாலியல் வன்கொடுமை மற்றும் சிறார் மீதான பாலியல் வன்முறை போன்றவற்றில் இந்தியாவைப் போன்றே மாறி வருகின்றது. முக்கியமாக வடக்கு ( முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம்) மெல்ல மெல்ல தெற்கைப் போன்றே ஆகி வருகின்றது. பெண்கள் மற்றும் சிறுவர் மீதான பாலியல் வன்முறை என்பது எம் சமூகத்தில் systematic ஆக ஏற்றுக் கொள்ளப்பட்ட மறைமுகமாக அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. இந்த நிலை மாறுவதற்கு சமூக மட்டத்தில் சிந்தனை முறை மாறவேண்டும்.
-
சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
நான் ஐந்து சதமேனும் கொடுக்கவில்லை. மற்றவர்கள் போல் நான் கொடுத்து இருந்தாலும், புலிகள் தடை செய்யப்பட்ட அமைப்பென்பதால் வழக்கு போட்டு நானும் உள்ளே போக தயாராக இருக்க மாட்டேன். இங்கு கொடுத்த பலருக்கு என் மைத்துனன் உட்பட, கொடுத்ததற்கான எந்த ஆதாரமும் கொடுக்கப்படவில்லை. சட்ட ரீதியிலான, செல்லுபடக் கூடிய ஆவணம் ஏதும் இல்லை. இயக்கத்தின் மீது, தலைவரின் மீது நம்பிக்கை வைத்து (கிளிநொச்சி வீழ்ந்த பின்னும் கூட) கொடுத்தவர்கள் இவர்கள். இப்படி கொடுத்த ஆயிரக்கணக்கானோரின் ஆதங்கம், ஆத்திரம் மற்றும் எதிர்பார்ப்பு எல்லாம் கொடுத்த பணத்தை மீண்டும் பெறுவது அல்ல. வாங்கிய பணத்தில் குறிப்பிடத்தக்க ஒரு பகுதியையாவது போராளிகளின் குடும்பங்களுக்கும், கைதாகி விடுவிக்கப்பட்ட போராளிகளுக்கும் கொடுத்து கை தூக்கி விட்டிருக்கலாம் என்பதே. ஏனெனில் இப்படி பதுக்கியவர்களை பாதுகாப்பது போன்று அவர்களுக்கு சார்பாக நியாயம் பிளப்பதால்.
-
சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
பாவம் இவர்கள். இப்படி ஒரு வேலை பார்த்து, பின் மக்களை ஏமாற்றிச் சுருட்டிய பணத்தை வைத்துக் கொண்டு மனவேதனையில் புழுவாய் துடிப்பதால் தான், அந்த வேதனையை தீர்க்க, பல வியாபார நிலையங்களை வாங்கியும், வணிக கட்டிடங்களை கட்டியும், சொகுசு கார்களை வாங்கி வலம் வந்தும் கொண்டு இருக்கின்றனர். அதிலும் சிலர் மகள் கருத்தரிக்க கூடிய நிலையை உடலளவில் அடைந்தவுடன், அதை ஊருலகுக்கு அறிவிக்க விழா எடுத்து ஹெலியில் ஏற்றி வந்து கொண்டாடினம். எவ்வளவு நல்லவர்கள் இவர்கள்!
-
மனோரதங்கள் (Manorathangal) - ரம்மியான, மென்மையான உணர்வுகளின் குவியல்
மலையாள மூத்த எழுத்தாளரான M.T. Vasudevan Nair இன் தெரிவு செய்யப்பட்ட 9 சிறுகதைகளை Anthology முறையில் எடுக்கப்பட்ட அருமையான Web series இது. போன கிழமை பார்க்க தொடங்கி ஒரு நாளுக்கு ஒரு கதையென பார்த்து முடித்தேன். வழக்கமான த்ரில் மற்றும் வன்முறை சார்ந்த வெப் சீரியல்களுக்கிடையே ஒரு குளிர்ச்சியான மழை போல பொழிந்து மனசை நிரப்பியது இந்த கதைகள். ஒரு மிக யதார்த்தமான சிறுகதை ஒன்றை வாசிக்கும் போது அது சாதாரண வாசிப்பு போல இருக்கும்., ஆனால் அடுத்த நாள் காலையில் இருந்து அந்த கதையும் அதில் வந்த மாந்தர்களும், சம்பவங்களும் அடிக்கடி மனசுக்குள் வந்து அருட்டிக் கொண்டே இருக்கும். இந்த web series சின் ஒவ்வொரு கதையும் அவ்வாறே என்னை அருட்டின. பச்சை பசேல் என இருக்கும் மலையாள மண்ணின் அழகும் சேர்ந்து தரும் உணர்வுப் பகிர்தல் அருமை. ------ மோகன்லால், மம்முட்டி, பகத் பாசில், பிஜு மேனன், நெடுமுடி வேணு போன்ற, முக்கிய நடிகர்கள் தம் எழுத்தாளர் ஒருவரின் சிறுகதைகளில், எந்த கதாநாயக பிம்பங்கள் இல்லாமல் நடிப்பது எல்லாம் மலையாள சமூகத்தில் மாத்திரமே சாத்தியம் என நம்புகின்றேன். இவர்களுடன் கமலஹாசனும் இணைந்து பங்களித்துள்ளார். அனேகமான கதைகளை இயக்கி இருப்பவர் இயக்குனர் பிரியதர்ஷன் --- மிக யதார்த்தமான கதைகளையும், அனுபவங்களையும் விரும்புகின்றவர்கள் மாத்திரம் பார்க்கலாம். IPTV யில் தமிழ் web series பகுதியில் உள்ளது. Zee5 உள்ளவர்களாலும் பார்க்க முடியும்
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
இல்லை. ஏப்ரலில் இந்த பொது வேட்பாளர் தொடர்பான முயற்சி பற்றிய அறிவித்தல் வெளியான பின்னரே ரஞ்சித் இது தொடர்பாக, ஆதரித்து ஆழமாக எழுதியிருந்தார்.
-
சங்கும் சிலிண்டரும் - நிலாந்தன்
முட்டாள்தனமான ஒப்பீடு. அன்று, ஈரோஸ் வென்றதன் காரணம், இந்திய இராணுவம் புலிகளை அழித்தொழிக்க போரை ஆரம்பித்து அவர்களை நகர்புறங்களில் இருந்து பின்வாங்க செய்து காடுகளுக்குள் அனுப்பிய பின்னும், தமக்கான மக்களின் பேராதரவை நிரூபிக்க ஈரோஸ் இன் பின்னால் இருந்து அவர்களை புலிகள் இயக்கியமையே. ஈரோஸின் வெற்றி= புலிகளுக்கான மக்கள் ஆதரவு எனும் சமன்பாட்டில் விளைந்த வெற்றி. வெறும் 14 வயதில் இருந்த என்னைப் போன்றவர்களையே, இந்திய இராணுவத்தின் அழுத்தங்களுக்கும் மத்தியில் கையெழுத்தில் எழுதி சுவரொட்டி களை ஒட்ட வைக்கும் அளவுக்கு அன்று கூட்டுணர்வு இருந்தது. ஆனால் இந்த பொது வேட்பாளர் தெரிவு அவ்வாறு இல்லை. எமக்குள் இருக்கும் ஒற்றுமையின்மையை உலகுக்கு ஓங்கிச் சொல்லும் ஒரு நடைமுறை. தமிழ் கூட்டுணர்வு என்பது இந்த விடயத்தில் இல்லை என்பதைக் காட்டும் முயற்சி இது.
-
மெய்ப்பொருள் காண்பது அ(ரிது)றிவு. - T. கோபிசங்கர்
மெய்ப்பொருள் காண்பது அ(ரிது)றிவு. “தம்பி ஊரில என்ன நடக்குது ஒவ்வொரு நாளும் வெட்டுக்குத்து ,ஆவா குறூப்பின் அடாவடி எண்டு ஊர்ப்புதினத் தலையங்கத்தில அடிக்கடி வருது , கோயில் திருவிழாவுக்கு வேற வரோணும் இப்ப எப்பிடி நிலமை அங்க“ எண்டு தொடங்கின கனடாக் கோல் இடையிலயே cut ஆகீட்டுது. காலமை கோல் கதைச்சு முடியாமல்ல வேலைக்கு வெளிக்கிட வீட்டில மாமி வேற, “இப்ப பேப்பரைப் பாக்கவே ஏலாது முன் பக்கம் வெட்டும் கொத்தும், சண்டை எண்டுதான் இருக்கு” எண்டு புறுபுறுத்தபடி தேத்தண்ணிக் கோப்பையை கழுவப் போனா. இதை நம்பி வாட்டுக்குள்ள போய் வந்த newsன்டை எடுப்புக்கு ஏத்த மாதிரி நாலு “பீமன்கள்” இருப்பாங்கள், கை கால் எண்டு வெட்டுப்பட்டு தொங்கிக்கொண்டு இருக்கும், எப்பிடிப் பொருத்தப்போறம் எண்டு பாத்தா, வாளைத் தூக்கினது எண்டு சொல்லி ரெண்டு நோஞ்சான் , வெட்டு வாங்கினது எண்டு காயங்களோட மூண்டு அதை விட சொத்தல். அப்பதான் விளங்கிச்சுது பேப்பரில தலைப்பில வந்த அளவுக்கு weight ஆக்களுக்கும் இல்லை news க்கும் இல்லை எண்டு. எண்பதுகளில பேப்பரை வாங்கி வாசிக்க கொஞ்சம் நேரம் எடுக்கும் ஆனாலும் வாச்சு முடிய உலகத்தையே சுத்தி வந்த மாதிரி இருக்கும். என்ன தான் ஆராவது ஒரு கதையை முழுக்கச் சொல்லி இருந்தாலும் முழுப் பேப்பரா இருந்தாலும் இல்லாட்டி special edition ஒரு பக்கப் பேப்பரா இருந்தாலும் அதை வாங்கி வாசிச்சாத்தான் ஒரு தெளிவு இருக்கும். இலங்கை முழுக்க ஆறு தமிழ்ப்பேப்பர் வரேக்க, யாழ்ப்பாணத்தில மட்டும் 3 பேப்பர் வாறது. ஈழநாடு, முரசொலி அதோட கனகாலமா தனித்து உதயன் வந்தது. வீரகேசரியும், தினபதி, தினகரனும் கொழும்புப் பேப்பர். வார வெளியீடா ஞாயிற்றுக்கிழமை வாற பேப்பரை முதலே book பண்ணி வாங்காட்டி காலமை போகக் கிடைக்காது . அதிலேம் சிந்தாமணி எண்டு வாற தினமதியின்ட ஞாயிறுப் பேப்பருக்கு demand கூட. அதோட எண்பதுகளில Hot Spring , Saturday review எண்டு English paperகளும் ஊரில இருந்து வாறது. English paper வாங்கவெண்டு ஒரு தனிக் கூட்டம் இருந்தது. வீட்டை வாங்கிற இங்கிலிஸ் பேப்பரை வாசி எண்டு வற்புறுத்த அதுகும் daily news எண்டா lifco dictionaryயோட தான் போகவேணும் வாசிக்க. Dailynews காரன் “லங்கா புவத்” ஆ மாறினாப் பிறகு Sunday times ஐ சனம் கூட வாசிக்கத் தொடங்கிச்சுது. இக்பால் அத்தாசும் fifth column உம் ஆங்கிலத்தோட அரசியல் அறிவையும் தந்திச்சுது. வெள்ளைகாரன் மாதிரி நாங்களும் பேப்பரோட தான் toiletக்குப் போறனாங்கள் , என்ன அவங்கள் கொண்டு போறது துடைக்கிறதுக்கு நாங்கள் வாசிக்கிறதுக்கு. யாழ்ப்பாணத்தானுக்கு காலமை கட்டாயம் ஒரு கையில பேப்பரும் மற்றக்கையில பால்க்கோப்பியோ தேத்தண்ணியோ இருக்கோணும். இப்ப what’s app ஐப் பாக்க phone ஓட போற மாதிரி கக்கூசுக்கு கையில பேப்பர், கோப்பி, சுருட்டு எண்டு ஒவ்வொருத்தரும் ஏதோ ஒண்டையோ ரெண்டையோ கொண்டு போவினம். அப்ப பேப்பர் மட்டுமே விக்கிற கடை இருந்தது சில கடைக்காரர் காலமை வந்து பேப்பரை வித்திட்டுப் போய் திருப்பி வந்து ஒம்பது மணி போல கடைதுறந்து மிச்ச வியாபாரத்தைச் செய்வினம். பால், பாண் எல்லாம் வீடு தேடி வந்து வியாபாரம் செய்தாலும் பேப்பரை வீடுவீடா விக்கறதோ இல்லாட்டிப் பேப்பரை வீட்டில போய் போடிற ஆக்களோ இருக்கேல்லை. கடைக்குப் போய் வாங்கின பேப்பரை கடை வாசலிலயே வைச்சு விரிச்ச மேலால மேஞ்சிட்டுத்தான் வீட்டை பேப்பரைக் கொண்டு வாறது. காலமை வாங்கிற பேப்பரை முதல்ல ஆர் வாசிக்கிறது எண்டதிலேயே சண்டை வரும் . கடைசீல சமாதானாமா உள்பக்கம் வெளிப்பக்கம் எண்டு பக்கமா பிரிச்சு ஆளுக்கு ஒண்டொண்டா வாசிக்கிறது. ஆம்பிளைகள் எல்லாம் காலமை வாசிச்சு முடிய அம்மாமார் எல்லாம் மத்தியானம் சமைச்சிட்டு படுத்திருந்து வாசிப்பினம் . அதோட பின்னேரம் ரோட்டில நடக்கிற அரட்டை அரங்கத்தில அதைப்பத்தி கருத்துப் பரிமாற்றங்கள் நடக்கும். ஊரில ரெண்டு மூண்டு பேப்பர் வாற காலத்தில பக்கத்து வீட்டுக்காரர் வாங்கிற பேப்பரை நாங்கள் வாங்கிறதில்லை பேப்பரை வாங்கி பின்னேரம் மாத்தி வாசிக்கிறது. இப்பத்த Breaking newsக்கு முன்னோடி எங்கடை ஊர் special edition தான். முதல் முதலா எப்ப இந்த special edition பேப்பர் வந்தது எண்டு தெரியேல்லை. திடீரண்டு வந்து பிளேன் நிவாரணம் போட இந்திய ராணுவம் வரப்போது எண்ட செய்திதான் முதல் வந்த special edition எண்டு நெக்கிறன். இது Print பண்ண முதலே வரப்போதாம் எண்டு சனம் எப்பிடியாவது கேள்விப்பட்டிடும். எனக்குத் தெரிஞ்சு அச்சகத்தில இருந்து வாற special பேப்பரை கடைக்குள்ள கொண்டு போய் வித்ததா சரித்திரம் இல்லை. எல்லாமே வாசலில வைச்சே சனம் வாங்கி முடிச்சிடும். ஊடகம் எண்டதுக்கு அப்ப ஊர்ப் பேப்பர்கள் தான் சரியான உதாரணம். அது ஊரெல்லாம் சனத்தோட ஊடுருவி யாழ்ப்பாணத்தில செய்தியாய் இல்லாமல் வாழ்வாய் இருந்திச்சுது. அறிவிக்கப்பட வேண்டிய மரணங்கள் கூட அறிவித்தலா இல்லாமல் செய்தியாய்த் வரும் அவசரம் உணர்ந்து. சோதினைக்கு Apply பண்ணிற ஒரு பள்ளிக்கூடத்தில பிறகு இடம்பெயர்ந்து வந்து படிக்கிறது வேறொரு பள்ளிக்கூடத்தில, கடைசியாச் சோதினை எழுதிறது இன்னொண்டா இருக்கும். முதலாவது சோதினை ஒரு பள்ளிக்கூடத்திலேம் செல்லடிச்சு ஓடிப்போய் ரெண்டாவது சோதினை எந்தப் பள்ளிக்கூடத்தில எண்டு பாக்கிறதுக்கும் Index number ஐ விடியவில தேடிக் கண்டு பிடிக்கிறதும் Paper இல தான். சோதினை index number மட்டும் இல்லை கிளாலிப்பயணத்துக்கு இண்டைக்கு எந்த token காரர் போகலாம் எண்டைதையும் பேப்பரில பாத்துத்தான் ஆக்கள் பயணம் போறது. சனங்கள் பேப்பர் இரவல் வாங்கிறது குறைவு , சந்தையில மரக்கறி விக்கறவரில இருந்து சைக்கிள் கடைக்காரர், சலூன் காரர் எண்டு எல்லாரும் பேப்பர் வாங்கி வேலைக்கு நடுவில கொஞ்சம் கொஞ்சமா வாசிச்சு முடிப்பினம். அப்ப எல்லாரும் பேப்பர் வாங்கி வாச்சாலும் ஊரெல்லாம் சந்திக்குச் சந்தி வாசிக சாலை இருக்கும் . சரிச்ச அடிச்ச மேசையில பேப்பருக்கு நடுவில குறுக்கால ஆரும் களவெடுக்காம இருக்க கம்பி வைச்சு பூட்டுப் போட்டிருக்கும் . அங்க போய் நிண்ட படி தான் வாசிக்க வேணும் . பழைய பேப்பர் எண்டால் இருந்து வாசிக்கலாம். அனேமா அண்டைக்கு வாற எல்லாப் பேப்பரோட weekend பேப்பரும் இருக்கும். வீட்டில இருக்கிற வேலை வெட்டி இல்லாத (retired ) ஆன ஆம்பிளைகளும் அதோட வெளீல இருந்து லீவில வந்திருக்கிறவை எல்லாரும் வருவினம் . என்னதான் வீட்டை பேப்பர் வாங்கினாலும் வந்து மிச்ச எல்லாப் பேப்பரையும் வாசிச்சு முடிச்சிட்டு வெளீல இருக்கிற வாங்கில இருந்து ஊர்ப்புதினம் அரசியல் நிலை எல்லாம் கதைச்சிட்டுத்தான் திருப்பி வீட்டை போவினம். இது எல்லாம் ஒரு வகை pocket political meeting மாதிரித்தான். வாசிகசாலை கொஞ்சம் பெரிசாக வாசிப்பைத் தாண்டி அது சனசமூக நிலையமாக மாறும். வாசிப்போட நிக்காம அறிவோட அரசியல், விளையட்டு, சமயம் எண்டு எல்லாத்தையும் வளக்கத் தான் இது. இப்ப ஊரில இருக்கிற கோயில், குளம் ,காணி, கட்டிடம் எல்லாம் ஏனெண்டு காரணம் இல்லாமல் courtஇல நிக்க அந்தக் காலத்தில எழுதப்படாத சட்டங்களால தான் இந்த சனசமூக நிலையங்கள் நடந்திச்சுது. பேப்பர் வாசிக்க எண்டு தொடங்கி வாசிச்சதோட நிக்காம கடைசீல சனத்துக்கும் சமூகத்துக்கும் சேவை எண்டு மாறினதெண்டால் அதுக்குப் பேப்பர் தான் காரணம். அந்த நாட்களில பட்டறிவை பகுத்தறிய பேப்பரும் அதைப் பகுத்துப் பாக்கிற ஆக்களும் இருந்திச்சினம். இப்ப எல்லாச் செய்தியையும் வாச்சிட்டு இவர் வந்தால் ஏதாவது தீர்வு கிடைக்குமா கிடைக்காதா, அவர் சொன்ன மாதிரிப் போராட்டம் வெடிக்குமா வெடிக்காதா எண்டு தேடத் தொடங்கி, குழம்பிப் போய் தொடந்து வாசிக்க accidentம் , வெட்டுக் கொத்தும் எண்ட செய்தி தான் இருக்கும். முன்பக்கத்தில வாற news முக்கியத்துவம் பெற நடக்கிற சில நல்ல விசியங்கள் வாசிக்கப்படாமலே போக ஏதோ இப்ப ஊரில எப்பவுமே பிரச்சினைதான் எண்ட மாதிரி negative thoughts மனதில வந்திடும். பேப்பரில இடம் நிரப்பக் குறை நிரப்புப் பேரணையாக வாழ்த்துகளும் அஞ்சலிகளும் போட்டு நிரப்பத் தொடங்கி கடைசீல அது பத்துப் பக்கமா மாறத் தொடங்க இடைவெளியை நிரப்பிறது news ஆ மாறீட்டுது. ஐஞ்சாம் வகுப்பில இருந்து ஆடியபாதப் பள்ளிக்கூடம் வரை pass பண்ணினதைப் பாராட்டி வாழ்த்திற பத்துப் பேரும் , இவை எல்லாருக்கும் நான் தான் படிப்பிச்சனான் எண்டு சுய விளம்பரம் போடிற ரியூசன் வாத்திமார் கொஞ்சப் பேரும், இருக்கேக்க பாக்க வராம இப்ப பக்கம் முழுக்க பாட்டி ஒண்டுக்குப் பத்தாவது வருசஅஞ்சலியும் , ஒண்டிலிரந்து நூறு வயது வரை பிறந்த நாள் வாழ்த்துகளும் தான் முக்கியத்துவம் பெறத்தொடங்கீட்டுது. வீட்டு விசேசத்தை நேர வாழ்த்தி, what’s app இல வாழ்த்தி, face book இல வாழ்த்தி அது எல்லாம் பழசாப் போக பேப்பரில படம் போட்டு வாழ்த்தீட்டு வாழ்த்துவோர் எண்டு அன்பு அப்பா , ஆசை அம்மா எண்டு அந்தக்காலத்தில ரேடியோ சிலோன் பிறந்த நாள் வாழ்த்து மாதிரி அடைமொழியோட ஊருக்கெல்லாம் தெரியப் போடிறது தான் அன்பின் வெளிப்பாடா போட்டுது. இதுக்கு மேலால கலர் படத்தோட கோயில் கும்பாபிசேகம் எண்டு வழக்கமா வாற ஐஞ்சு பேரோட இன்னும் கொஞ்சப் பேரின்டை வாழ்த்துச் செய்தியோடேம் படத்தோடேம் வாற விசேட மலர் வெளியிட்டிக் கொஞ்ச நாளிலியே சில நேரம் கோயில் நிர்வாகம் கோட்டில நிக்குதாம் எண்டு செய்தியிலேம் வரும். வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான் எண்டதுக்குப் புத்தகம் தேவேல்லை பேப்பர் வாசிப்பதால் எண்டு போட்டாலே சரி எண்ட அளவுக்கு அப்பத்தக் காலத்தில பேப்பரும் வந்திச்சுது சனங்களும் அதை வாசிச்சுது. ஆனா இப்ப முன்பக்கம் கனக்க கவர் பண்ணிறம் எண்டு எல்லா newsஐயும் போட்டிட்டு மூண்டு பக்கத்துக்கு தொடர்ச்சி எண்டு போட மூண்டாவது தொடர்ச்சீல முதல் பக்க news மறந்தே போடும். அப்ப தங்கடை பேப்பருக்கு எண்டு தனித்துவமா reporters, editors எண்டிருந்த காலம் மாறி இப்ப ஒரே ஆள் தான் ஊரில இருக்கிற எல்லாருக்கும் news குடுப்பார் போல இருக்கு. ஏனெண்டால் முதல் நாள் இரவு web இல இருக்கிறது தான் அடுத்த நாள் print இலயும் வரும். அதோட ஆற்றேம் ஒராளின்டை கருத்து Facebook இல கூட likes வந்தா அது கூடக் கொஞ்ச நாளில செய்தியாக்கூட வரும். இன்னும் காலமை பால்த்தேத்ண்ணியோட பேப்பரை வாங்கிப் பாத்திட்டு பின்னேரம் பட்டறிவோட போய்க் கதைச்சு பகுத்தறிவோட வாற ஆக்களும், ஆராஞ்சு எழுதிற ஆசிரியர்களும் , சில பேப்பரும் ஊர் உலகத்தில இன்னும் இருக்குது எண்டது சந்தோசம். மெய்ப்பொருள் காண்பது அறிவாய் இருந்தது அரிதாய் போக்கூடாது , போகாது எண்ட நம்பிக்கையுடன்……. Dr. T. கோபிசங்கர் யாழ்ப்பாணம்.
-
பதவியை இராஜினாமா செய்தார் குஷ்பு!
கனடாவுக்கு தூதுவராக போட்டால் கொஞ்சம் பிரயோசனமாக இருக்கும்.
-
சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
கபி, உங்கு மார்க்கம் & Steeles பகுதியில் பூரணி விலா எனும் கடை வைத்திருப்பவரை உங்களுத் தெரியுமா? அவர் இறுதி யுத்த காலத்தில் ஒவ்வொரு தமிழ் குடும்பமும் 2500 தாருங்கள், 2011 இல் தலைவர் தலைவர் தமிழீழக் கொடியை ஏற்றிய பின் வட்டியுடன் தருவேன் என்று கேட்டும் மிரட்டியும் வாங்கி இன்று கோடீஸ்வராக இருக்கின்றார் என்பது தெரிந்து இருக்கும் என நினைக்கின்றேன் (அவர் கடையில் நல்ல வடிவான மலையாள சேச்சிகள் வேலை செய்கின்றனர்)
-
ஆட்சியை கைப்பற்றி 3 ஆண்டுகள் - ராணுவ அணிவகுப்பு நடத்திய தாலிபன்கள்
நான் நினைக்கவில்லை, அங்கும் மழிப்பார்கள் என்று...