Everything posted by நிழலி
-
தமிழ்ப் பொதுவேட்பாளர் யார்? – வவுனியாவில் இன்று தீர்மானம்!
ஒரு கூடை முழுக்க முட்டாள்களை போட்டால் என்ன நடக்கும்? எது நடக்குமோ அதுவே இங்கு நடக்கின்றது.
-
ரஸ்யாவினால் விடுதலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் உட்பட மூவர் அமெரிக்கா சென்றடைந்தனர் - விமானதளத்தில் காத்திருந்த பைடன் கமலா ஹரிஸ்
ஒரு பக்கம் உக்ரைனை சாட்டி, இரு நாடுகளும் சண்டை பிடிக்கின்றனர். இன்னொரு பக்கம் இப்படியான கைதிகள் பரிமாற்றமும் நிகழ்கின்றது. என் நண்பன் ஒருவன் இருக்கிறான். செரியான கிரகம் புடிச்சவன் என்று சொல்லப்படக் கூடிய ஆள். ஒரே சொல்வான், "டேய் இவங்கள் (மேற்கும் ரஷ்சியாவும்) இப்படித்தான்... தமக்குள் மோதிக் கொள்ளுகின்ற மாதிரி வெளியில் காட்டுவார்கள்... ஆனால்ஆயுதங்களை விற்கின்றதற்காக போர் செய்து விட்டு, திரைமறைவில் கூடிக் குலாவுவார்கள" என்று.
-
பொதுஜன பெரமுன எடுத்த அதிரடித் தீர்மானம்!
ரணில் அடுத்த சனாதிபதியாக வராவிட்டால், மஹிந்தவினதும் அவரது சகாக்களினதும் பாடு அவ்வளவு தான். ரணில் அல்லது அனுர வரக்கூடிய சூழ் நிலைதான் அங்கு நிலவுகின்றது, சஜித் 3 ஆவதாகவே வருவார், சனாதிபதித் தேர்தலிற்கிடையில் அவரிடம் இருக்கும் எம்பிக்களில் பலர் ரணில் பக்கம் தாவி ஆதரவு கொடுப்பர். அனுர / ஜேவிபி வந்தால், மகிந்தவின் கோவணத்தையும் உருவாமல் விடமாட்டார்கள் என்பது மனுசனுக்கு தெரியும். மனிசன் தானே முகமூடி போட்டுக் கொண்டு கள்ள வாக்கும் ரணிலுக்கு போடும்.
-
நெடுந்தீவு கடற்பரப்பில் விபத்து; இந்திய மீனவர் உயிரிழப்பு!
ஸ்ராலின் மோடிக்கு இன்னுமொரு கடிதம் எழுதும் வாய்ப்பு கிடைத்துவிட்டது
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
கடந்த ஜூலை மாதம் 16 ஆம் திகதி இஸ்ரேலின் தாக்குதலில் ஹமாஸ் இயக்கத்தின் இராணுவத்தலைவரும் கொல்லப்பட்டு விட்டார் என இஸ்ரேல் அறிவித்துள்ளதாக இன்றைய செய்திகள் தெரிவிக்கின்றன. இதனை ஹமாஸ் இன்னும் மறுக்கவில்லை. கடந்த வாரம் ஐக்கிய அரபு இராச்சியம் வங்காளதேசம் (Bangladesh) சேர்ந்த 3 பேருக்கு ஆயுள் தண்டனையும், 50 பேருக்கு 10 வருட சிறைத்தண்டனையும் விதித்து இருக்கு. ஏன் இந்த தண்டனை? தன் மண்ணில் வங்காளதேசத்தின் ஆட்சிக்கு எதிராக (அதாவது ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு எதிராக அல்ல) கண்டன ஆர்ப்பாட்டம் நடாத்தியமைக்கு! அரபு தேசத்தின் நீதி இப்படித்தான் உள்ளது. https://www.middleeasteye.net/news/uae-life-sentence-three-bangladesh-protesters
-
கருத்துக்களில் மாற்றங்கள் [2024]
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை தொடர்ந்தும் நீடிப்பு - ஐரோப்பிய ஒன்றியம் எனும் திரியில் பின்னூட்டமிடப்பட்ட தனிமனித தாக்குதல் வகையான கருத்துகள் நீக்கப்பட்டன.
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
மிகவும் உண்மை. கொல்லப்பட்டவர் ஹமாஸ் தலைவர்களில் ஒருவர் என்ற நல்ல செய்தியுடன் என் காலை விடிகின்றது. ஈரான் ஒரு செல்லாக்காசு. ஒரு அடையாள தாக்குதலை செய்து விட்டு, மீண்டும் பங்கருக்குள் பதுங்கிக் கொள்ளும்.
-
மன்னாரில் குழந்தையை பிரசவித்த இளம் தாய் உயிரிழப்பு!
அங்கு, அந்த வைத்தியசாலையில் இரவு நேரம் மருத்துவர்களே இருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளனர். அனேகமாக மாலை 6 மணிக்கு வந்து வேலைக்கு வந்ததாக ஒப்பமிட்டுவிட்டு வீட்டை போய் நித்திரை கொண்டு இருப்பார்கள். இவர்களுடன் ஒப்பிடும் போது சிங்கள பகுதிகளில் வேலை செய்யும் சிங்கள மருத்துவர்கள் எவ்வளவோ மேல்.
-
மகாராஜா Review: விஜய் சேதுபதி வியாபித்த களத்தில் கிட்டிய அனுபவம் எப்படி?
நானும் அகன்ற திரையில் பார்க்கவில்லை. Netflix இல் வந்தமையால் ரீவியில் தான் பார்த்தேன். மஹாராஜா படத்தின் வெற்றி அது எடுக்கப்பட்ட விதத்திலும் இறுதி twist இலுமே இருக்கின்றது. Dark humor வகைப் படம். @பெருமாள்குறிப்பிட்டுள்ள போன்று படத்தை துண்டு துண்டாக, non linear ஆக எடுத்தமையால் நன்றாக உள்ளது ( இந்த முறையை தமிழுக்கு கொண்டு வந்தவர் மணிரத்னம் - அலைபாயுதே படத்தில்). ரயில் படம் இன்னும பார்க்கவில்லை. ஆனால் தமிழ் நாட்டு ஆண்கள் குடிகாரர்களாக, சோம்பேறிகளாக இருப்பதால் தான் வட இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன என காட்டியுள்ளனர் என விசனப்பட்டு எழுதப்பட்ட விமர்சனங்களை பார்த்தேன். இது கள யதார்த்துக்கு முரணானது என்கின்றனர்.
-
பொதுஜன பெரமுன எடுத்த அதிரடித் தீர்மானம்!
வேறு எப்படிப் போகும் என நினைக்கின்றீற்கள்? பொது வேட்பாளர் என்பது மொக்குத்தனமானது மட்டுமல்ல, எமக்கிடையே இருக்கும் ஒற்றுமையின்மையையும், வடக்கு கிழக்கு, மற்றும் மலையக தமிழ் மக்களிற்கிடையே உள்ள அரசியல் வேறுபாடுகளையும் உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒரு முயற்சி என்பதே என் உறுதியான அபிப்பிராயம்.
-
பொதுஜன பெரமுன எடுத்த அதிரடித் தீர்மானம்!
இந்தத் தேர்தல், மகிந்த குடும்பத்துக்கு சாவா வாழ்வா எனும் தேர்தல். ரணில் வந்தால் மட்டுமே அவர்களால் தப்பி பிழைக்கலாம். ரணிலுக்கு எதிரான வாக்குகளை பிரிப்பதற்காகவே ஒரு பொதுசனப் பெரமுன ஒரு வேட்பாளரை களமிறக்குகின்றனர். முஸ்லிம், மலையக மற்றும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் முதலாவது இரண்டாவது விருப்பு வாக்கில் ரணில் சனாதிபதியாக வருவதற்கான வாய்ப்புகள் தான் இப்போதைக்கு அதிகம்.
-
பொதுஜன பெரமுன எடுத்த அதிரடித் தீர்மானம்!
இல்லை, எல்லாருக்கும் அறிவிப்பார்கள். ஆனால், தனித்தனியாக அறிவிப்பதால், எத்தனை பேரிற்கு அறிவித்தார்கள் என்று எவராலும் கண்டுபிடிக்க முடியாது என்பதால் சமர்களில் மொத்தமாக கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை எவராலும் அறிய முடியாது.
-
மகாராஜா Review: விஜய் சேதுபதி வியாபித்த களத்தில் கிட்டிய அனுபவம் எப்படி?
முதலாவது எதிரியை எப்படிக் கண்டு பிடித்தார் படத்தில் காட்டியுள்ளார்களே... விஜய் சேதுபதி வீட்டில் மயங்கி எழும்பும் போது, அந்த மூவரும் வந்த காரிற்கு பெற்றோல் அடித்த பற்றுச்சீட்டு அருகில் கிடக்கும். அந்த பற்றுச்சீட்டில், காரின் இலக்கம் இருக்கும். அதை வைத்து காரை தேடிப் போகும் போது, அது உள்ளூர் அரசியல்வாதியின் கார் எனக் கண்டுபிடித்து, அவரை சந்திக்க போகும் போதுதான் அந்தக் காரை ஓட்டியது அவரல்ல, கராஜ்ஜில் வேலை செய்தவர் என அறிந்து கொள்கின்றார். அதே நேரம், அந்த காராஜில் வேலை செய்தவரும் அங்கு அந்த அரசியல்வாதியை அடிக்க வரும்போதே, அந்த முதலாம் குற்றாவாளியை இன்னார் தான் எனக் கண்டு கொள்கின்றார். இந்த படத்தில் வேஸ்ட் பண்ணப்பட்டவர் என்றால் அது பாரதிராஜா தான். நான் நினைக்கின்றேன், படம் எடுக்க ஆரம்பித்த பின் தான், பாரதிராஜா சுகவீனமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என. அல்லது, இவ் இயக்குநரின் முதல் படமான குரங்கு பொம்மையில் முக்கிய வேடத்தில் பாரதிராஜா நடித்து இருப்பதால் நன்றியுணர்வில் இதில் ஒரு சிறு பாத்திரம் கொடுத்து இருப்பார் என. ஆனாலும், அந்த மிகப்பெரிய கலைஞனை வீணடித்து விட்டார்கள்.
-
மகாராஜா Review: விஜய் சேதுபதி வியாபித்த களத்தில் கிட்டிய அனுபவம் எப்படி?
நேற்று இப்படத்தை Netflix இல் பார்த்தேன். படம் அருமை! இன்னும் படம் ஏற்படுத்திய தாக்கம் குறையவில்லை. விஜய் சேதுபதி மீண்டும் மனசில் ஒட்டி விட்டார். நல்ல படம் பார்க்க விரும்புகின்றவர்களுக்குரிய படம்.
-
புனித காசி தீர்த்தம் யாழ்ப்பாணம் உப்புவயல் குளத்தில் கலப்பு!
வேலை இல்லா திண்டாட்ட காலம் போய், ஆனால் வேலையும், புதிய தொழில்களுக்கான தேவையும் நிறைய இருக்கும் நேரத்தில், அவற்றைச் செய்ய ஆள் இல்லை என்ற நிலையில் தாயகம் உள்ளது. சாக்கடை மட்டுமல்ல, மனிதர்களின் பிணங்கள் அழுகி அழியும் ஆறு அது.
-
புனித காசி தீர்த்தம் யாழ்ப்பாணம் உப்புவயல் குளத்தில் கலப்பு!
சிரமதானம் செய்ய ஊர் இளைஞர்/ இளைஞிகள் பஞ்சிப் பட்டால் இப்படித்தான் நடக்கும். அவர்கள் எல்லாரும் கனடா மற்றும் வெளி நாட்டுக் கனவில் மிதப்பதால், இப்படியானவற்றை பற்றி சிந்திப்பதில்லை என அங்குள்ளவர்கள் நொந்து கொள்கின்றனர்.
-
மலிபன் பிஸ்கட்
பகிர்வுக்கு நன்றி ஈழப்பிரியன் அண்ணா. எனக்கும் மிகவும் பிடித்த பிஸ்கட் மலிபன் பிஸ்கட்டுகள் தான். இங்கு குக்கீஸ் என்ற பெயரில் கனடியன் பிஸ்கட்டுகளை விற்பார்கள். அவற்றின் சுவைக்கு நாக்கு பழக்கப்படவில்லை என்பதால், பிடிப்பதில்லை. மலிபன் மாரி தான் இவற்றில் மிகவும் பிடித்தது. பால் தேத்தண்ணிக்குள் லாவகமாக நனைத்து, அப்படியே சொத சொத என்று வாயுக்குள் போடும் போது, அப்படி ஒரு சுவை. லெமன் பப் (Lemon puff) பில் இருக்கும் கிரீமில் உடலுக்கு ஒவ்வாத விடயங்கள் உள்ளன என ஒரு முறை எங்கோ கேள்விப் பட்டமையால் அதைச் சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன். க.பொ.த உயர்தரம் படிக்கும் போது, இதனருகில் இருந்த ராஜேஸ்வரி institute எனும் ரியூட்டரியில் தான் ரியூசனுக்கு சென்றேன். மலிபன் கம்பெனியில் இருந்து வரும் வாசனை மூக்கை துளைத்து பசியை உருவாக்கும். மலிபன் கம்பெனியின் இன்றைய சரியான பெயர் Little lion ஆகும். பெயரில் சிங்கம் உள்ளது
-
விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்ககோரி வைகோ மனு
மிகவும் தவறான அனுமானம். வைகோ கொள்கை பிடிப்பு இல்லாத, நேரத்துக்கு நேரம் நிறம் மாறுகின்ற, கூட்டணி மாறுகின்ற அரசியல்வாதி. வாரிசு அரசியலை எதிர்த்து குரல் கொடுத்து, அதனால் திமுக வில் இருந்து 1991-ம் ஆண்டு, நவம்பர் 26-ம் தேதி விலக்கப்பட்டு, அதனால் இவருக்காக 5 தீக்குளித்து உயிரை கொடுக்க இவரால் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்(மதிமுக) 1994-ம் ஆண்டு, மே மாதம் உருவாக்கப்பட்டது. அதன் பின் திமுக வில் இருக்கும் போது, பரம வைரியாக இருந்த ஜெயலலிதாவுடன் 1998 பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி வைத்து தோற்றார். பின் 5 இற்கும் மேற்பட்டவர்கள் தீக்குளித்து மாண்டு போக காரணமான, வாரிசு அரசியலுக்கு எதிராக குரல் கொடுத்து பிரிந்த திமுகவை / கருணாநிதியை ஆதரித்து அவர்களுடன் 1999 இல்கூட்டணி வைத்து பெரியளவில் சறுக்கினார். பின் வந்த காலத்தில் தவறான கூட்டணிகளை அமைத்து தன் அரசியல் கட்சியை நாசமாக்கியது மட்டுமல்லாமல், விஜயகாந்தின் கட்சியையும் நாசமாக்கினார். ஈற்றில் எந்த வாரிசு அரசியலுக்கு எதிராக திமுகவில் இருந்து பிரிந்தாரோ, அதே வாரிசு அரசியலை துரை வைகோ வின் மூலம் தன் கட்சிக்குள்ளும் நுழைத்து தொடர்கின்றார். நல்ல மனிதராக இருக்கலாம், ஆனால் அரசியல் கோமாளி இவர், இவரின் இந்த நிலைக்கும், எம் இனத்துக்கான போராட்டத்துக்கான ஆதரவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
-
விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்ககோரி வைகோ மனு
விடுதலைப் புலிகள் என்பது கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் அப்பால், ஒட்டு மொத்த ஈழத்தமிழர்களின் அரசியல் போராட்டத்தின் குறியீடு. எம் நியாயமான போராட்டத்தை பயங்கரவாதமாக அடையாளப்படுத்தி வைத்திருக்கும் முறைமை இது. அவர்கள் மீதான தடை என்பது, ஈழத்தமிழர்களின் தமிழ் தேசிய போராட்டத்தின் மீதான தடையாகும். எம் மக்களின் உரிமைப் போராட்டத்தின் மீதான தடையாகும். புலிகள் மீதான தடைதான், அவர்கள் பெயரைப் பயன்படுத்தி குளிர்காயும், அவர்களின் சொத்தை கொள்ளையடித்த பலர் மீதான சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை தடுத்துக் கொண்டு இருக்கின்றது. இலங்கை, இந்திய அரசுகளை விட இப்படியானவர்களுக்குத் தான் புலிகள் மீதான தடை நீடித்துக் கொண்டு இருக்க வேண்டிய தேவையும் உள்ளது. விசுகு கூறியது போன்று, யார் குற்றியும் அரிசி ஆனால் சரி.
-
தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன காலமானார்
வாக்களிக்கும் வயதை அடைந்த பின் நான் இலங்கையில் வாக்களித்த போது, இவருக்கு மட்டுமே (கொழும்பில்) வாக்களித்து இருந்தேன். அதன் பின் எந்த சிங்கள தலைவர்களுக்கும் நான் வாக்களித்தது கிடையாது. மஹிந்த காலத்தில் மரண அச்சுறுத்தலை எதிர்கொண்டதுடன் தாக்குதலுக்கும் உள்ளானார். இறுதி வரைக்கும் தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர். ஆனாலும், அதே தமிழ் மக்களால் புறக்கணிப்பட்டவரும் ஆவார். ஆழ்ந்த இரங்கல்கள்.
-
Yarl IT Hub இன் YGC புத்தாக்க திருவிழா - ஆகஸ்ட் மாதம் 2, 3 மற்றும் 4 ஆம் திகதிகளில்
மீண்டும் இவ்வருடம் பிரம்மாண்டமாகவும் பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகளுடனும் யாழ் ஐடி ஹப்(Yarl IT Hub) இன் YGC புத்தாக்க திருவிழாவாக நடைபெற உள்ளது ! ஆகஸ்ட் மாதம் 2, 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் புத்தாக்கம், தொழில்நுட்பம் மற்றும் முயற்சியாண்மை என அனைத்தும் ஒரே இடத்தில் சந்திக்கும் ஒரு மிகப்பெரிய கொண்டாட்டம் - YGC புத்தாக்க திருவிழா. YGC புத்தாக்க திருவிழாவில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம் Pitching போட்டி, ரோபோட்டிக் போட்டி (Robotic Competition), வலையமைப்பு நிகழ்வுகள் (networking events), மாஸ்டர் கிளாஸ்கள் (master classes), கண்காட்சிகள் (mini expo), சந்திப்புகள் (ecosystem meetups), பாடசாலை மாணவர்களின் கண்காட்சி (YGC juniors alumni expo), அனுபவ கற்கை நெறிகள் (Experiential Learning), புத்தொழில் கண்காட்சி, செயற்கை நுண் அறிவு, கைத்தறி, களிமண், ஓலை போன்றவற்றின் செயன்முறைகள், Fun Activities மற்றும் பல. இத் திருவிழாவில் பங்கு பெறுவதன் மூலம் நீங்களும் முயற்சியாண்மை, புத்தாக்கம் என்பவற்றை முயற்சித்து அதில் வெற்றி பெற்ற பலரை நேரடியாக சந்தித்து அவர்களின் அனுபவங்களைப் பெற முடியும். நீங்கள் ஒரு தொழில்முனைவோராகவோ, சிறுவர்களாகவோ, மாணவர்களாகவோ, பல்கலைக்கழக மாணவர்களாகவோ, கல்வி ஆர்வலராகவோ அல்லது புதிய விடயங்களில் ஆர்வமுடையவர்களாக இருந்தாலும் உங்களுக்கு ஏற்ற நிகழ்வுகள் இப் புத்தாக்க திருவிழாவில் காணப்படும் . ஒன்றிணைவோம், ஊக்குவிப்போம், புதுமைப்படுத்துவோம்! https://www.facebook.com/yarlithub
-
கனடா கடற்கரைகளில் மலம் கழிக்கும் இந்தியர்கள்
இந்த கடற்கரை தான் உலகின் நீண்ட நன்னீர் கடற்கரை. 14 கிலோ மீற்றர் நீண்ட நன்னீர் கடற்கரை இது. உப்பு நீரை கொண்ட கடலின் கரைகளை மட்டுமே கடற்கரை என்று அழைக்கப்படுவது இல்லை. கோடை காலங்களில் பல பொழுது போக்கு அம்சங்களுடன், எக்கச்சக்கமான உணவு வகைகளை விற்கும் இடமாக இது இருக்கும். கொவிட் இற்கு முன்னர் ஒவ்வொரு வருடமும் நான் குடும்பத்துடன் செல்லும் இடம் இது, இந்த ஊரில் Wasaga provincial park எனும் பூங்கா உள்ளது. Camping செய்யவும் முடியும். இந்த, உலகின் மிக நீண்ட நன்னீர் கடற்கரையைத் தான் இந்தியர்கள் தம் கக்கூஸ் சாக பாவிக்கின்றனர். 😠
-
செல்போன் திடீரென வெடிப்பது ஏன்?
இருவருக்குமே தலையில் காயம் என்பது ஒரே ஒரு விடயத்தை மட்டும் சொல்கின்றது. அது, இருவரும் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் பயணிக்கவில்லை என்பதை.
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
அமெரிக்கர்கள் ஒரு போதுமே பெண் ஒருவரை தம் சனாதிபதியாக தெரிவு செய்யப் போவதில்லை. அப்படி தெரிவு செய்வதற்கான மனப்பான்மை அவர்களுக்கு கிடையாது.
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
ஜோ பைடன் டொனால்டு ட்ரம்புக்கு எதிராக தாம் களமிறங்கவில்லை என அறிவித்துள்ளார் என பிபிசி மற்றும் CNN செய்தி வெளியிட்டுள்ளது. https://www.google.com/amp/s/www.bbc.com/news/articles/c1e5xpdzkd8o.amp https://www.cnn.com/politics/live-news/biden-trump-election-07-21-24/index.html