Everything posted by நிழலி
-
ஈழத் தமிழரின் ‘ஒற்றைப் பனைமரம்’ படத்தை வெளியிட சீமான் கடும் எதிர்ப்பு
தனிப்பட்ட ரீதியில் ஒரு திரைப்படத்தை திரையிட அனுமதிக்க மறுப்பதற்கும், ஒரு படைப்பை அரசியல் காரணங்களினால் தடை செய்வதற்கும் நான் ஆதரவு இல்லை. அதே நேரம், இந்த புதியவன் இராசையாவிடம் இருந்து எந்த விதமான நேர்மையான கருத்துகளும் வெளி வரமாட்டாது என்பது என் அவதானம். கடும் புலி எதிர்ப்பும், வன்வமும் கொண்டது புதியவனின் கருத்துகள். எவராவது புலிகளின் ஏதாவது ஒரு செயல்பாட்டை முகனூலில் பாராட்டியதை இவர் பார்த்து விட்டால் அவ்வளவு தான். அதீத வன்மத்துடன் புலிகளை எந்தளவுக்கு மோசமாக சொல்ல முடியுமோ அந்தளவுக்கு தன் பின்னூட்டங்களை அதில் இடுவார். தன்னை ஒரு இடது சாரி என நினைத்துக் கொண்டு இருக்கும் கடும் புலி எதிர்ப்பு காச்சலால் பீடிக்கப்பட்டவர் புதியவன் ராசைய்யா. சீமான் இந்த படத்தை எதிர்ப்பதால், இப் படத்துக்கு அதுவே விளமபரமாக போய் விடக்கூடிய நிலை உருவாகலாம். தும்புத்தடிக்கு பட்டுக் குஞ்சம் சாத்திய மாதிரி ஆகிவிடும்.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
நானும் போட்டியில் கலந்து கொள்வேன். ஆனால் நவம்பர் 8 இற்கு பின்னரே கிருபன் குறிப்பிட்ட மாதிரி, இலங்கையில் இருந்து நம்பிக்கை தரக்கூடிய கருத்துக்கணிப்புகளோ எவர் பக்கம் அலையுள்ளது எனக் காட்டக் கூடிய தெளிவான கட்டுரைகளோ இந்த தேர்தலில் இல்லை என்பதால் என் பதில்களும் வெறும் ஊகத்தின் அடிப்படையில் தான் அமையும்.
-
தமிழரசுக் கட்சிக்குள் இவ்வளவு பிரச்சினைகளா?
தவராசா கொழும்பில் வாழ்கின்றவரா? அவர் தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளையில் பல வருடங்களாக பணியாற்றியவர் என்பதால் கேட்கின்றேன். வடக்கு கிழக்கில் போட்டியிடுகின்றவர்கள் அந்தந்த பிரதேசங்களில் வாழுகின்றவர்களாக இருப்பின் நல்லது. தாம் சார்ந்த இனத்தின் புரிதல் மட்டுமின்றி தாம் பிரதி நிதித்துவம் செய்யும் பிரதேசத்தில் / தொகுதியில் வாழும் மக்களின் பிரச்சனைகளையும் பண்பாட்டையும் புரிந்து வைத்திருத்தல் அவசியம்.
-
இராஜன் (சோழியன்) அண்ணாவின் மனைவி சிவபுஸ்பா காலமானார்
ஓம் அண்ணா. நானும் இதைத் தான் நினைத்தேன். மிகவும் கவலையான விடயம். சோழியன் அண்ணாவின் பிள்ளைகள் இந்த துயரங்களை கடந்து நன்றாக வாழ வேண்டும்.
-
இராஜன் (சோழியன்) அண்ணாவின் மனைவி சிவபுஸ்பா காலமானார்
கண்ணீர் அஞ்சலி😢
-
‘இனவாதத்திலிருந்து ஜே.பி.வி இன்னும் மீளவில்லை’ : சிவாஜிலிங்கம் தெரிவிப்பு
டம்மியாக ஒருத்தரை இறக்கியிருப்பினும், தேர்தலை பகிஸ்கரித்து இருப்பினும் மகிந்தவின் வெற்றி வாய்ப்பு மேலும் அதிகரித்து இருந்திருக்கும். மகிந்தவுக்கு அடுத்ததாக இருந்தது சரத் தான். நான் நினைக்கிறேன் 40 வீத வாக்குகள் கிடைத்தன என. எனவே வெல்லக்கூடிய ஒருவர் என அவரை நினைத்தனர். இம் முறையைத் தவிர,எப்போதுமே இரு முனைப் போட்டியாக இருந்து வந்த தேர்தல் என்பதால், மகிந்தவை வர விடாமல் செய்ய இரண்டாம் நிலையில் இருந்தவரை ஆதரித்தனர். ஒரு பேயை விரட்ட இன்னொரு பிசாசை ஆதரித்தனர்.
-
‘இனவாதத்திலிருந்து ஜே.பி.வி இன்னும் மீளவில்லை’ : சிவாஜிலிங்கம் தெரிவிப்பு
எய்தவரான மஹிந்தவை ஆட்சியில் இருந்து அகற்ற அன்றைய நிலையில் எந்த வழியும் இல்லாமல் தாயக மக்களுக்கு இருந்த ஒற்றை தெரிவு என்பதால் ஆதரித்தார்கள்.
-
இந்திய இராணுவத்தினரால் படுகொலையானவர்களின் நினைவேந்தல்
யாழ் ஆஸ்பத்திரி படுகொலைகள் 1987ம் ஆண்டு தீபாவளியை யாழ்ப்பாண மக்கள் மறக்கமாட்டார்கள், மறக்கவும் முடியாது. Operation Pawan (Pawan என்றால் ஹிந்தியில் காற்று) என்ற இராணுவ நடவடிக்கை, அமைதி காக்க வந்த இந்திய படைகளால் ஓக்டோபர் 9ம் திகதி ஆரம்பிக்கப்படுகிறது. சில மாதங்களிற்கு முன்னர் புது டில்லியில், “If you defy us, We can finish you before I put out this smoke.” என்று தனது சுருட்டை புகைத்தபடி, தலைவர் பிரபாகரனை மிரட்டிய இந்தியாவின் உயர்ஸ்தானிகர் டிக்ஸிட்டின் எண்ணத்தை பிரதிபலிப்பதாக, ஒரு காற்றை போல் துரிதமாக யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் குறிக்கோளுடன் Operation Pawan முன்னெடுக்கப்படுகிறது. 48 மணித்தியாலங்களுக்குள் யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் திட்டத்துடன் முன்னெடுக்கப்பட்ட Operation Pawan நடவடிக்கை புலிகளின் பலத்த எதிர்ப்பை முகம்கொள்கிறது. பல்கலைகழகம், கோட்டை, கோண்டாவில் என்று பல முனைகளில் பலமான இழப்பை இந்திய இராணுவம் சந்திக்கிறது. பலாலி, நாவற்குழி, யாழ் கோட்டை முனைகளில் இந்திய இராணுவம் உலங்குவானூர்திகளின் சூட்டாதரவுடன் முன்னேற முயற்சிக்கிறார்கள், கடும் சண்டையில் யாழ் மண் அதிர்கிறது. பல்கலைகழக வளாகத்தில் உலங்குவானூர்திகளில் வந்திறங்கிய சிறப்பு பரா அதிரடிப்படைகளால் புலிகளின் தலைமையை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கையை புலிகள் தீரத்துடன் முறியடிக்கிறார்கள். ஓக்டோபர் 21, 1987 தீபாவளி நாள். அன்று காலை கோண்டாவில் பகுதியில் நடந்த சண்டையில் இரண்டு இந்திய தாங்கிகள் அழிக்கப்பட, புலிகள் தரப்பில் லெப்.கேணல் சந்தோஷம் வித்தாகிறார். கோட்டையில் இருந்து முன்னேறிய இந்தியப் படை சாந்தி தியேட்டரை அண்மித்த பகுதிகளில் நிலைகொள்கிறது. அன்று காலையிலிருந்து ஆஸ்பத்திரி பகுதியை நோக்கி ஷெல் வீச்சில் இந்திய இராணுவம் ஈடுபடுகிறது. ஒரு ஷெல் 8ம் இலக்க வார்ட்டில் விழுந்து 7 நோயாளர்கள் பலியாகினர். பிற்பகல் நான்கு மணியளவில் இந்திய இராணுவம் ஆஸ்பத்திரியின் முன் வாயிலூடாக கண்டபடி சுட்டுக்கொண்டு உள் நுழைகிறது. 8ம் இலக்க வார்ட்டிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு Radiology அறையில் அடைக்கலம் புகுந்திருந்த நோயாளிகளும் ஊழியர்களும் இந்திய இராணுவத்தின் கொலை தாண்டவத்திற்கு முதற் பலியாகிறார்கள். அசுரனை அழித்த திருநாளில், இந்திய இராணுவ அசுரர்களின் கோர தாண்டவம் யாழ்ப்பாணத்தில் அரங்கேறுகிறது. தண்ணி குடிக்க எழும்பினவன், காயத்தால் முனகினவன் என்று சத்தம் வந்த பக்கம் எல்லாம் போட்டு தள்ளுகிறது அமைதி காக்க வந்த இந்தியப் படை. ஒரு அறையில் இருமல் சத்தம் கேட்க, இந்திய ஆமிகாரன் கிரனேட்டை கிளிப்பை கழற்றிவிட்டு இருமிய நோயாளி பக்கம் வீச, பக்கத்தில் படுத்திருந்த ஆம்புலன்ஸ் சாரதி உட்பட சிலர் பலியாகிறார்கள். இதேவேளை யாழ்ப்பாணத்தின் புறநகர் பகுதிகள் ஷெல் சத்தத்தால் அதிர்கின்றன. தீபாவளி பண்டிகைக்கு இந்தியன் ஆமி வெடி கொளுத்தி கொண்டாடுறாங்கள் என்று அவலத்திலும் சனம் நக்கலடித்தது. இலங்கை இராணுவத்தின் ஒபரேஷன் லிபரேஷன் காலத்தில் வெட்டிய பங்கர்கள் சமாதானம் வந்திட்டுது என்று நினைத்து சனம் மூடிவிட, ஊரில் இருந்த தேவாலயங்கள், கோயில்கள், பாடசாலைகள், மேல்மாடி வீடுகள் என்பன ஷெல் வீச்சிலிருந்து காக்கும் அரண்களாகின்றன. விண் கூவிக்கொண்டு பறக்கும் ஷெல்கள் எங்கேயிருந்து வருகின்றன எங்கே விழுகின்றன என்று புரியாமல் யாழ்ப்பாணம் கதிகலங்குகிறது. ஷெல் குத்தும் சத்தத்தை வைத்து எத்தனை ஷெல்கள் லோட் பண்ணுறாங்கள் என்று எண்ணுவது, பிறகு விழுந்து வெடிக்கும் சத்தத்தை எண்ணி அந்த ரவுண்ட் முடிந்து விட்டது என்று நிம்மதியடைவது, கர்த்தரையும் முருகனையும் துணைக்கழைப்பது, கந்தசஷ்டியும் செபமும் பெலக்க சொல்வது, என்று தீபாவளி இரவை யாழ்ப்பாணம் உயிரைக் கையில் பிடித்தபடி கழிக்கிறது. யாழ் ஆஸ்பத்திரியில் பிணங்களுக்கு அடியில் படுத்தும், பிணம் போல் நடித்தும் உயிர் பிழைக்கிறார்கள் நோயாளிகளும் மருத்துவர்களும் ஊழியர்களும். அடுத்த நாள் காலை 8.30 மணியளவில் காயக்காரரை காப்பாற்றும் உன்னத நோக்கோடு" We surrender, we are innocent doctors and nurses" என்று ஆங்கிலத்தில் கத்தியபடி கைகளை உயர்த்திக் கொண்டு மூன்று தாதிமார்களுடன் வெளியில் வந்த பிரபல மருத்துவர் சிவபாதசுந்தரம், இந்திய இராணுவத்தின் துப்பாக்கிக்கு இரையாகிறார். ஒக்டோபர் 22ம் திகதி முற்பகல் வேளை இந்திய இராணுவத்தின் வெறியாட்டம் ஒரு இந்திய இராணுவ உயரதிகாரியின் வரவுடன் முடிவிற்கு வர, கையில் ஸ்டெதஸ்கோப்பை பிடித்தபடி மருத்துவர் கணேஷரட்னத்தின் உயிரற்ற உடலோடு 70 பேரின் உடல்கள் மீட்கப்படுகின்றன. ஈழமுரசும் முரசொலியும் குண்டுவைத்து தகர்க்கப்பட்டு, உதயன் முடக்கப்பட்ட சூழ்நிலையில், பல உடலங்கள் உறவினர்களிற்கு கையளிக்கப்படாமல் மரண விசாரணையும் நடாத்தப்படாமல் எரியூட்டப்படுகின்றன. புலிகளிற்கும் இந்திய படைகளிற்கும் இடையில் நடந்த மோதலில் சிக்குண்டு பொதுமக்கள் இறந்ததாக இந்திய அமைதி படையின் தளபதி திபீந்தர் சிங் அறிக்கை விட்டார். இதைப்போன்ற படுகொலைகளுக்கு பின்னர் இந்திய அமைதி காக்கும் படையான IPKFக்கு, சனம் Innocent People Killing Force என்று பெயரிட்டார்கள். இதுவும் Crime against Humanity தான். இலங்கை மற்றும் இந்தியப் படைகளல் இதைப் போன்ற பல படுகொலைகளிற்கு உள்ளாகியும், அன்றிலிருந்து இன்றுவரை கேட்க நாதியற்ற இனமாகவே நாங்கள் பயணிக்கிறோம். ஜெனிவாவை, ஏன் தமிழகத்தையே, எட்டாத இந்த ஆஸ்பத்திரி படுகொலையை நாங்கள் மட்டும் நினைவு கூற, இன்று வரை நீதிக்காக நியாயம் காத்திருக்கிறது. அந்த நினைவு நாள், இந்தப படுகொலை நாள் என்று வருஷம் முழுக்க விளக்கு கொளுத்தவும் அஞ்சலி செலுத்தவும் எங்களுக்கு ஏதாவது ஒன்று இருக்கும். விளக்கு கொளுத்தி கொளுத்தியே அழுது ஒப்பாரி வைத்துக் புலம்பிக் கொண்டிருக்கும் எங்கள் இனத்திற்கு நலமான எதிர்காலம் தான் துலங்குவது எப்போது ? - Jude Prakash
-
இந்திய இராணுவத்தினரால் படுகொலையானவர்களின் நினைவேந்தல்
புலிகள் வரவேற்றதால், தலைவர் வரவேற்றதால் மட்டும் அவர் புனிதராகி விடமாட்டார். ஏற்கனவே யாழில் எழுதியது தான். தலைவர் மண்டையன் குழு தலைவனுக்கு அருகில் நின்ற கொடுமையை கூட பார்த்தனாங்கள் என்று.
-
இந்திய இராணுவத்தினரால் படுகொலையானவர்களின் நினைவேந்தல்
இந்த போர்க் குற்றங்களில் ஈடுபட்ட எந்த ஒரு இந்திய இராணுவத்தினனோ அல்லது இதை செய்ய ஏவிவிட்டவர்களோ இன்றுவரைக்கும் தண்டிக்கப்படவுமில்லை, இனி தண்டனைக்குள்ளாகப் போவதும் இல்லை. ஆனால் இந்த படுகொலைகளை நியாயப்படுத்தியும், கண்டும் காணாமல் இருந்த மண்டையன் குழுத் தலைவன் சுரேஸ் பிரேதசந்திரன் போன்றோர், இன்றும் தமிழ் தேசிய போராளிகளாக வலம் வருவதை கண்டு மக்கள் இனியாவது ஏமாறாமல் இருக்க வேண்டும்.
-
தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
யாழில் ஏற்கனவே இப் படம் இணைக்கப்பட்டு ரில்வின் சில்வா என்று குறிப்பிட்ட பதிவு நீக்கப்பட்டது. ஜேவிபியின் கடும் இனவாத செயற்பாடுகள் பல ஆதாரங்களாக கண் முன்னே இருக்கும் போது இவ்வாறான போலி செய்திகளை ஊடகவியலின் அடிப்படையே தெரியாத யூடியூப்பர்கள் சொல்வதை நம்பி இணைப்பதும் பரப்புவதும் எதிர்மறையான விளைவுகளை தமிழர்களுக்கு தோற்றுவிப்பதுடன் மேலும் இனவாத சக்திகளைத்தான் பலப்படுத்தும்.
-
வடக்கு மக்களுக்கு அதிகாரப்பகிர்வு அவசியமாக இல்லை; பொருளாதார பிரச்சினையே இருக்கிறது என்கிறார் ரில்வின் சில்வா
இலங்கையின் பொருளாதாரப் பிரச்சனை இனப்பிரச்சனையின் இன்னொரு விளைவு என்பதை மறுப்பதற்கில்லை. போர்க் காலத்தில் போருக்கான செலவும் இராணுவத்தினருக்கான செலவும் வருடாந்த அரச செலவீனத்தில் மிகப் பெரும் பங்கை எடுத்துக் கொண்டு இருந்தமையும், இன்றும் பெருந்தொகையான இராணுவத்தினரை தொடர்ந்து பேண (அரச உத்தியோகர்த்தர்களில் 40 வீதமானோர் அரச படையினர்) அதிக பணம் செலவிடுவதையும் காண முடிகின்றது. ஆனால் இனப்பிரச்சனை மட்டுமே ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் சரிவை ஏற்படுத்துவதற்கான ஒற்றைக் காரணி அல்ல. பங்களாதேசில் அண்மையில் நிகழ்ந்தது, ஸ்பெயினில் சில ஆண்டுகளுக்கு முன் (2008 - 2014) நிகழ்ந்தவை அவற்றுக்கான உதாரணங்கள். இலங்கையில் அதே நிலைதான். இனப்பிரச்சனையும், மகிந்த கும்பலின் அடாவடித்தனமான ஊழலும், மித மிஞ்சிய கடனும் இன்றைய நிலைக்கு உதாரணங்கள். இதைத் தான் தேசிய மக்கள் கட்சி கையில் எடுத்து இருக்கின்றது. எப்படி எனில், பொருளாதாரப் பிரச்சனையின் அடிப்படைக் காரணங்களில் ஒன்றான இனப்பிரச்சனை என்பது இப்போது இல்லை. அதாவது போர் முடிவுக்கு வந்து விட்டது. சிங்களத்தை பொறுத்தவரைக்கும் இனப்பிரச்சினை என்பது அறவே இல்லை என்பதுதான் அவர்களின் முடிவு. ஆகவே இப்போது இருக்கும், தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை ஊழல் தான். அதை நாம் தீர்த்து வைப்போம் என்கின்றது. இதனை யாருக்கு முதலில் சொல்லியது? சிங்கள மக்களுக்கு. இப்போது அதையே தமிழ் மக்களுக்கும் சொல்ல தொடங்கியுள்ளது. அதை தமிழ் மக்களும் நம்பத் தொடங்கியுள்ளனர் என்பது தான் எம் தமிழ் தேசிய அரசியலின் மிக மோசமான தோல்வி. இந்த தோல்வி யாரால் ஏற்படுத்தப்பட்டது? தமிழ் தேசியம் என்று வெறுமனே மேடைகளில் முழங்கி, பேட்டிகளில் உரத்து கதைத்து விட்டு, எதையும் செய்ய வக்கில்லாத, திறமையில்லாத, மோசமான தமிழ் தேசிய கட்சிகளாலும் அதன் தலைவர்களாலும். அவர்களை உசுப்பேற்றி தம் குறுகிய நலங்களை பேணுகின்ற புலம்பெயர் தமிழ் தேசிக்காய் அமைப்புகளாலும்.
-
ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் 'கொல்லப்பட்டாரா என சரிபார்த்து வருகிறோம்’: இஸ்ரேல் ராணுவம்
X தளத்தில் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவரின் உடலினதும், அருகில் முகம் மறைக்கபட்ட இஸ்ரேல் இராணுவத்தினரதும் புகைப்படம் வெளியாகியுள்ளது. (கொல்லப்பட்டவரின் உடல் சற்று கோரமாக இருப்பதால் என்பதால் அதை அப்படியே யாழில் இணைக்க முடியாது...)
-
அரசியல்வாதியின் பெயரிலுள்ள பாடசாலையின் பெயரை உடனடியாக நீக்குமாறு உத்தரவு
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நான் அனுப்பியது அவரை கடுப்பேத்த. தேர்தல் நேரத்தில் இப்படியான இனம் ஒன்று சார்ந்த ஒரு செயலில் மூக்கை நுழைக்க மாட்டார்கள். அத்துடன் இந்தக் கட்சி, இனங்களுக்கிடையிலான பிரச்சனையை தன் அரசியலுக்கு இப்போதைக்கு கையிலெடுக்காது என நம்புகின்றேன். சம்பந்தப்பட்டவர்கள் இது தொடர்பாக பொலிசில் முறையிட்டு ஒரு வழக்கை தொடர்ந்தால் நல்லது.
-
அரசியல்வாதியின் பெயரிலுள்ள பாடசாலையின் பெயரை உடனடியாக நீக்குமாறு உத்தரவு
நன்றி ஈழப்பிரியன் அண்ணா. என் நண்பர் ஒருவர் தேசிய மக்கள் கட்சிக்கு தீயாக வேலை செய்கின்றார். அவருக்கு இதனை அனுப்பியுள்ளேன். உங்கள் இணைப்பில் இருந்து அறிய முடிந்தது என்னவென்றால், பாடசாலையின் பெயர் உத்தியோக பூர்வமாக மாற்றப்படவில்லை. ஆனால் பெயர்ப்பலகையை மாற்றியுள்ளனர். இதே மாதிரி கிழக்கில் (நான் நினைக்கின்றேன் கல்முனையில் என) வீதியின் பெயரை முஸ்லிம் பெயராக மாற்றி பெயர் பலகை வைத்து பிரச்சினையானது என.
-
ஊடகவியலாளர் தராகி சிவராம் படுகொலையுடன் புளொட் தொடர்பா..! மறுக்கும் சித்தார்த்தன்
அப்படியே அந்த கொலைக்கு எப்படி தன்னுடைய வாகனங்களில் ஒன்று பயன்படுத்தப்பட்டது என்றும் சொல்லலாமே சித்து?
-
அரசியல்வாதியின் பெயரிலுள்ள பாடசாலையின் பெயரை உடனடியாக நீக்குமாறு உத்தரவு
எந்த பாடசாலை என்று கூற முடியுமா?
-
வடக்கு மக்களுக்கு அதிகாரப்பகிர்வு அவசியமாக இல்லை; பொருளாதார பிரச்சினையே இருக்கிறது என்கிறார் ரில்வின் சில்வா
இவ்வாறு நாம் அவர்களை தொடர்ந்து மட்டம் தட்டிக் கொண்டு சுய திருப்தி அடைய வேண்டியது தான். சிங்களவர்கள் வெறுமனே பாணுக்காகவும் எரிபொருட்களுக்காகவும் மட்டும் போராடவில்லை. உலகில் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு பெரும் இயக்கத்துக்கு எதிராக, தம் நாட்டை பிரித்துக் கேட்கின்றனர் என்பதற்காக அதை எதிர்த்து போராடி, அதில் வெற்றியும் பெற்றார்கள் என்பதை வசதியாக மறந்து விட்டீர்கள். அவர்களின் வெற்றி கொடூரமானதாகவும், அறத்துக்கு எதிரானதாகவும், தடை செய்யப்பட்ட போர் முறைகளை பாவித்தும் பெற்றதாக இருப்பினும், அவர்கள் வெற்றி பெற்றவர்களாகவும், தம் அநீதியான வழிகளுக்கு எதிரான சர்வதேச எதிர்ப்பை இன்று வரைக்கும் சமாளித்து உலக நாடுகளின் கடனுதவியை தொடர்ந்து பெறுகின்றவர்களாகவும் உள்ளனர். அத்துடன் எம் பலவீனமான அரசியல்வாதிகள் மூலமாகவும், சுயநலம் பிடித்த புலம்பெயர் தமிழ் தேசிக்காய் அமைப்புகள் மூலமாகவும் மேலும் மேலும் எம் பலத்தை ஒடுக்கி, ஈற்றில் அவர்களின் கரங்களை பற்றி முன்னேற வேண்டிய நிலைக்கும் எம்மை தள்ளி விட்டுள்ளனர். ஆனால் நாம் சிங்களவர்களை தொடர்ந்து மட்டம் தட்டிக் கொண்டு இருப்போம். அப்படி செய்தால் தான் எம்மை நாம் திருப்திப் படுத்திக் கொண்டு இருக்க முடியும்.
-
வடக்கு மக்களுக்கு அதிகாரப்பகிர்வு அவசியமாக இல்லை; பொருளாதார பிரச்சினையே இருக்கிறது என்கிறார் ரில்வின் சில்வா
ரில்வினின் கட்சி, தமிழர்களுக்கு அரசியல் தீர்வாக எதையும் தருவோம் என்று ஒரு போதும் சொன்னது இல்லை. அத்துடன் அது அதிகாரபரவலாக்கத்துக்கு என்றுமே எதிர்ப்பை காட்டிக் கொள்ளும் கட்சி, எனவே ரில்வினின் இந்த பேச்சு ஒன்றும் அதிசயமும் இல்லை, அதிர்ச்சிக்குரியதும் இல்லை. ஆனால் ரில்வின் கூறிய வடக்கைப் பற்றிய விடயங்கள் முற்றிலும் உண்மையானவை. இங்கு எவராலும் அவற்றை மறுக்க முடியாது. ஏ9 வீதியின் ஒரு பக்கங்களையும் கடந்து உள்ளே சென்றால் பார்க்க முடியும் வடக்கின் வறுமையை. அதே போன்று யாழ்பாணத்தில் நாகர்கோவில் மற்றும் அதை அண்டிய பகுதிகளில் கரும்பலகைகள் கூட இல்லாத பாடசாலைகளை காண முடியும். இந்த 15 வருடங்களில் தமிழ் கட்சிகள் இந்த பிரதேசங்களின் முன்னேற்றத்திற்காக எதையும் செய்திருக்கவில்லை. வெறுமனே தமிழ் தேசியம், சுய நிர்ணயம், தாயகம் என்று தேர்தல் வேளைகளிலும், பத்திரிகை பேட்டிகளிலும் வாய் உளைய உரக்க பேசி மக்களை முட்டாள்களாக ஆக்கியதை தவிர வேறு எதையும் இவர்கள் செய்ய எத்தனித்ததும் இல்லை. புலம்பெயர் தமிழ் தேசிய அமைப்புகளுக்கும் இது பற்றிய எந்த அக்கறையும் இல்லை. தம்மை பிரமுகர்களாக காட்டிக் கொள்வதற்கும், தம்மை முன்னிலைப்படுத்துவதற்கும் மட்டுமே இவ் அமைப்புகள் உள்ளன. ரில்வினும் அவர் கட்சியும், ஆட்சியும் அவர் குறிப்பிட்ட பிரதேசங்களின், சமூகங்களின் பொருளாதார நிலையை மாற்ற ஏதேனும் முயற்சிகள் செய்து இப் பகுதி மக்களை முன்னேறினால் மிக்க மகிழ்ச்சி.
-
மட்டக்களப்பில் சரவணபவனுக்கு வாக்களித்தாலும் யாழ்ப்பாணத்தில் சுமந்திரனே வெல்லுவார்!
இவரது கணவர் ஒரு மருத்துவர், பரியோவான் கல்லூரியில் படித்தவர். கிருஷ்ணவேணி என் நெருங்கிய நண்பர் ஒருவரின் மனைவியின் சகோதரி. அரசியலுக்கு வரக் கூடியளவுக்கு எந்த திறமையும் அற்றவர் இவர்.
-
அருச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு
இம் முறை தோல்வி அடைவார் என நினைக்கின்றேன். உடல் நிலையும் ஒரு தேர்தலை எதிர் கொள்ளக் கூடிய நிலையில் இல்லை என கேள்விப்பட்டேன்.
-
சிவராம் படுகொலை – லலித் குகன் காணாமலாக்கப்பட்டமை – விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு உத்தரவு
கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக இருந்த ரபிந்தரநாத் கொழும்பில் BMICH இல் வைத்தே காணாமல் ஆக்கப்பட்டவர். இதில் கருணாவுக்கு நேரடி பங்களிப்பு இருக்கு (வாகனத்தில் வைத்தே கருணா குரூரமாக சித்திரவதை செய்து அவரை கொன்றதாக சொல்கின்றனர்). இன்று வரை க்கும் அவருக்கு என்ன நடந்தது என அரசு கூறவில்லை. ஏன் இதனை விசாரிக்க சொல்லவில்லை என தெரியவில்லை. கண்டிப்பாக விசாரிக்க வேண்டிய வழக்கு இது.
-
சிவராம் படுகொலை – லலித் குகன் காணாமலாக்கப்பட்டமை – விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு உத்தரவு
சிவராமை கொன்றது, இலங்கை புலனாய்வு அமைப்பு. இதிலும் இனியபாரதி நேரடியாக பங்கு கொண்டார். புலிகளின் தலைமையால் கிழக்கு மாகாண போராளிகள் மீது பாரபட்சம் காட்டப்படுகிறது என தூண்டி விட்டவர்களில் ஒருவர் சிவராம். பின்னர் வன்னிக்கு தலைமையால் அழைக்கப்பட்டு அவர்களால் " கருணாவுக்கு ஒரு கடிதம்" என ஒரு கடிதம் கருணாவை விமர்சித்து வீரகேசரியில் ஒரு கடிதத்தை பிரசுரிக்க வைத்தனர். சிவராம் வெள்ளவத்தையில் ஒமேகா ஹோட்டலில் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து தண்ணியடித்துக் கொண்டு இருக்கும் போது, அவரது கைத்தொலைபேசிக்கு கருணா அழைத்து நீ இப்ப எங்கிருக்கின்றாய் என்ன குடித்துக் கொண்டு இருக்கின்றாய் என எனக்கு தெரியும், உன்னை தூக்குவது எனக்கு இலகு, நீ இப்ப நல்ல பிள்ளை வேசம் போடுகிறாய்..ஆனால் நான் அப்படி செய்ய மாட்டேன் என கூறியிருந்தார். கருணா தன்னை ஒன்றும் செய்ய மாட்டார் என்ற நம்பிக்கையில் தான் சிவராம் பலர் எச்சரித்தும் உயிர் பயம் இன்றி கொழும்பில் நடமாடினார். ஆனால் சிங்கள புலனாய்வு அமைப்பு அவரை பம்பலப்பிட்டியில் வைத்து கடத்தி ஜயவர்த்தனபுரவில் வைத்து கொன்றது. இதற்கு அவர்கள் சித்தார்த்தனின் வாகனத்தை தான் பயன்படுத்தி இருந்தனர். கடத்தும் போது சிவராமுடன் இருந்தவர்களில் ஒருவர் லங்கா தீப எனும் சிங்கள நாளிதழின் பத்திரிகையாளர் ( ஆசிரியர் என நினைக்கிறேன்). அவர் உடனடியாக அன்றைய இராணுவ தளபதி வரைக்கும் தொடர்பு கொண்டு சிவராமை காப்பாற்ற தன்னாலான முயற்சிகளை எடுத்திருந்தார். கொஞ்சம் அவகாசம் கொடுத்தால் கூட சிவராமிற்கு இருக்கும் தொடர்புகள் மூலம் விடுவிக்க வேண்டி வந்து விடும் என்பதால் கடத்தி சில மணி நேரங்களில் கடத்தியவர்களால் கொல்லப்பட்டார். அவர் கடத்தப்பட்டவுடன் என் நண்பர்கள் மூலம் அதை அறிந்து கொண்டேன். அவரது தொலைபேசியிற்கு தவிப்புடன் அழைப்பு எடுக்கும் போது, கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் எனும் சந்திரமுகி படப் பாடல் ஒலித்தது. தன் caller tune ஆக அதை சிவராம் வைத்து இருந்தார். இப் பாடலை நான் எப்ப கேட்பினும் உடம்பு ஒரு முறை அதிரும். இதை எழுதும் போது கூட அதிர்கின்றது.
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
சரியாகத் தெரியாது.
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
ரமேஷ்நடராஜா என்பது சொந்தப் பெயர் அப்பிள், ஆளின் அழகை பார்த்து சொல்லும் பெயர். அற்புதன் நடராஜா என்பது தினமுரசில் அவர் பாவித்த பெயர்