Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிழலி

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • Joined

Everything posted by நிழலி

  1. வரி வரியாய் எழுதியும் உங்களுக்கு புரியாவிடின், சத்தியமா, அம்மான என்னால முடியல.
  2. சஜித் தலைகீழாக நின்றாலும், வெல்ல மாட்டார். மூன்றாவதாக வந்து, அரசியலில் இருந்து மேலும் ஓரங்கட்டப்படுவார். போட்டி, ரணில் Vs அனுர என்று ஆகியுள்ளது. தோற்றுப் போகின்றவருக்கு மீண்டும் ஆதரவு கொடுத்து, தமிழரசுக் கட்சி மேலும் நகைப்புள்ளாக போகின்றது
  3. உங்களுக்கு தமிழை வாசித்து புரிந்து கொள்வதில் சிக்கல் இருக்கின்றது என நான் அறிந்திருக்கவில்லை. பொது வேட்பாளர் தெரிவு என்பது, வென்றாலும் (தமிழ் மக்கள் 100 வீதம் அவருக்கு வாக்களிப்பினும்) பூச்சிய விளைவை தருகின்ற, அதே நேரம் தோற்றால் பாதகமான சூழ் நிலையை தோற்றுவிக்கின்ற ஒன்று என இங்கு பல தடவை எழுதியுள்ளேன். இப்படியான சாத்தியம் தெளிவாக உள்ள ஒரு விடயத்தை மக்கள் முன் கொண்டு செல்வது அந்த மக்களை ஏமாற்றும் ஒரு விடயம் என தொடர்ந்து எழுதியுள்ளேன். அப்படி நான் எழுதியவற்றை உங்கள் கண்கள் வாசித்தாலும், அதை உடனடியாக மறந்து விட்டு "இவர்கள் சொல்ல மாட்டினம் " என்று மீண்டும் எழுதுகின்றீர்கள்
  4. பொது வேட்பாளர் தெரிவு என்பது தமிழ் மக்களின் ஒற்றுமையை அல்ல, பிளவுகளை உலகுக்கு வெளிப்படையாக தெரிவுக்கும் ஒரு முறை என்பதால் தான், இதுபற்றி ஊடகங்களில் வர ஆரம்பித்த நாளில் இருந்து நான் எதிர்க்கின்றேன். இன்றிருக்கும் சூழ்நிலையில், முக்கியமாக வடக்கு கிழக்கு என்பது ஒன்றிணைந்து முடிவெடுக்கும் சூழ்நிலை இல்லாத போது, தமிழ் பேசும் மக்களுக்கிடையில் அடிப்படை புரிந்துணர்வு கூட கட்டமைக்கப்படாத சூழ் நிலையில், இது ஒரு விசப் பரீட்சை. பொது வேட்பாளருக்கு 100 வீதம் தமிழ் மக்கள் வாக்களிப்பினும் கூட, அதன் விளைவுகள் பூச்சியம். வென்ற சனாதிபதியின் ஆட்சி தான் நிலவும். சர்வதேசமும் அவருடன் தான் கைகுலுக்கி தன் அலுவல்களைப் பார்க்கும். ஆனால் 50 வீதம் கூட பொது வேட்பாளருக்கு வடக்கு கிழக்கில் இருந்து கிடைக்கப் போவதில்லை. அதனால் அதன் விளைவு தமிழ் தேசிய அரசியலில் கடும் செல்வாக்கு செலுத்தும். வடக்கு கிழக்கு இணைந்த தாயகம் எனும் அடிப்படையை தமிழ் பேசும் மக்களே நிராகரித்தனர் எனும் விதத்தில் இந்த விளைவு மற்றவர்களால் எடுக்கப்படும். தமிழ் தேசிய அரசியலை தமிழ் மக்களில் 50 வீதத்தினர் கூட ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை வாக்களிப்பின் மூலம் உலகுக்கு அறிவித்த பின், அங்கு எந்த அரசியல் மிச்சமிருக்க போகின்றது? தமிழ் தேசிய அரசியல் வடக்கு கிழக்கு என்று இருந்து, பின் வடக்குக்கு மட்டும் என்று ஆகி, ஈற்றில் யாழ்ப்பாணத்துக்கு மட்டுமே என்று குறுகப் போகின்றது.
  5. முதலாவது மைத்திரியை ஆதரித்தமை பிழையான முடிவு அல்ல. மகிந்தவின் தமிழர்களுக்கு எதிரான மகிந்தவின் கொடுங்கோல் ஆட்சியில் இருந்து விலகி தமிழர்கள் மூச்சு விடக்கூடிய சூழ் நிலையை உருவாக்குவதற்காக எடுத்த முடிவு அது. மைத்திரி வந்த பின் அதுதான் நடந்ததும். பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இராணுவ பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டதும் மைத்திரியின் ஆட்சியில் தான். ஊர் பக்கம் தலைவைத்தும் பார்க்க முடியாத சூழ்நிலையில் இருந்த என்னைப் போன்றவர்கள் மீண்டும் தாயகம் பக்கம் போகக் கூடிய நிலைவந்ததும் மைத்திரி காலத்தில் இருந்து தான். இன்று என்ன பயன் என்று கேட்பவர்கள் பலர், அங்கு தொடர்ந்து அச்சமின்றி போகத் தொடங்கியதும் மைத்திரி காலத்தில் தான். ஆனால் அரசியல் தீர்வு? சிங்களம் அழுத்தங்கள் இல்லாத, தமிழர்களின் இராணுவ பலம் மட்டுமல்ல, பொருளாதார பலமும் சிதைக்கப்பட்ட சூழ்நிலையில் ஒரு போதும் தீர்வு தராது. தமிழ் மக்கள் மகிந்த அல்லாத கட்சி ஒன்றின் வேட்பாளருக்கு வாக்களிப்பதும் இதை புரிந்து கொண்டு தான். இதன் அடிப்படையில் தான் சரத்துக்கும் பின்னர், சஜித்துக்கும் வாக்களித்தனர். மூன்று வருடங்களுக்குள் தமிழர்கள் போல் கோத்தாவுக்கு வாக்களிக்காமல் விட்டிருக்கலாம் என 69 இலட்சம் சிங்கள மக்களும் எண்ணும் அளவுக்கு காலம் மாறியதும், அதன் பின் இன்று இனவாதத்தால் வெல்ல முடியாது என்று முன்னனி 3 வேட்பாளர்களும் உணர்ந்ததும் இதன் பக்க விளைவுகள்.
  6. சலங்கை யை காலில் கட்டியதும் அவர்தான். சலங்கையாட்டம் முடிந்த பின் சனத்தை திட்டப் போவதும் அவர் தான்.
  7. வடக்கில் அனேகமான தொகுதிகளில் நாலாவதாக தான் வருவார். கிழக்கில் பல இடங்களில் மூன்றாவதாகவும், சில இடங்களில் நான்காவதாகவும் வருவார் என நினைக்கிறேன். சமூக நீதி எனும் முகமூடியை போட்டு கொண்டு வரும் இனவாத ஜேவிபி யின் சனாதிபதி கனவு வடக்கு கிழக்கு மக்களால் முறியடிக்கப்படும் சாத்தியமே அதிகம்.
  8. வடக்கில் 25 வீதத்திற்கு மேல் சஜித்திற்கு கிடைக்கவிருந்த வாக்குகளை குறைத்து ரணிலுக்கு மடைமாற்றும் முயற்சியில் தீயாய் வேலை செய்கின்றவரை இப்படி சொல்லக் கூடாது.
  9. எம் சமூகத்தில் பாலியல் வல்லுறவு க்குள்ளான ஒரு பெண் துணிந்து தனக்கு நிகழ்ந்ததை சொல்லத் தயங்கும், பயப்படும் சூழல் தான் இன்னும் தொடர்கிறது. தகுந்த சட்ட மற்றும் சமூகப் பாதுகாப்பு இருக்கும் மேலைத்தேய நாடுகளிலேயே பாலியல் வன்முறை க்குள்ளான பெண்கள் தமக்கு நடந்ததை வெளியில் சொல்ல ஆண்டுக்கணக்கில் தயங்கும் போது எம் தாயகத்தில் அவ்வாறு சொல்ல தயங்கும் ஒருவரை அவரது இணக்கத்துடன் தான் உடலுறவு நிகழ்ந்து இருக்கும் என சுட்ட முற்படுவது மிகவும் தவறானது. Victim blaming வகையானது. என்றுமே பாதிக்கப்பட்டவரின் சார்பாக நிற்பதே அறமாகும், அதுவும் பாலியல் வல்லுறவுக்குள்ளான ஒருவரை கண்ணியத்துடன் அணுகி அவருக்காக ஆதரவு கொடுப்பது எம் தார்மீக கடமையாக இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு பாதிக்கப்பட்டவரையே குற்றத்திற்கு உடந்தை என்று எவராவது நியாயப்படுத்தினால், அவர் அந்த குற்றம் புரிந்தவரை விட ஆபத்தானவர் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.
  10. கடந்த சனாதிபதித் தேர்தலில் கழுகிற்கும் அன்னத்திற்கும் வித்தியாசம் தெரியாமல், ஆரியவன்ச க்கும் நூற்றுக் கணக்கில் வாக்கு போட்டவர்கள் அல்லவா யாழ்ப்பாணத்தினர்!
  11. யாழ்ப்பாணத்தில் இவருக்கு ஆதரவு உள்ளதா? சில இடங்களில் அரியத்தை பின்னிற்கு தள்ளி மூன்றாவதாக வரும் சாத்தியம் உள்ளது என என் நண்பர்கள் சொல்கின்றனர்; அப்படி வரக் கூடிய வாய்ப்புகள் உள்ளதா?
  12. நல்ல கட்டுரை. பகிர்வுக்கு நன்றி 1970 களில் பிறந்த, கடும் சிங்கள தேசியவாதியான என் சிங்கள நண்பர் ஒருவரும் அச்சொட்டாக இதனையே தெரிவித்தார் / தெரிவிக்கின்றார். தன் பிள்ளைகள் ஒரு போதும் மீண்டும் இலங்கை செல்வதை தான் விரும்பவில்லை என்கின்றார்.
  13. இதனை, இந்த வேலை நிறுத்தத்தை, இவர்கள் காலவரையின்றி தொடர வேண்டும் என்று உள்ளன்புடன் வேண்டிக் கொள்கின்றேன்.
  14. இறந்த உடல்களை நிர்வாணப்படுத்தி, ஆர்ப்பாட்டங்களில் அகப்படுகின்றவர்களின் ஆடைகளையும் களைந்து நிர்வாணப்படுத்தி, இன்பம் காணும் அளவுக்கு டிசிப்பிளின் மிக்கவர்கள் அவர்கள்.
  15. சிங்களப் பகுதிகளில் இதை விட மோசமாக, அடிக்கடி நடக்கின்றது, மாணவ / மாணவிகளுக்கு எதிராக பாலியல் வன்முறைகளும் அதிகம் நிகழ்கின்றன. வடக்கு கிழக்கு மற்றும் பொதுவான அரசியல் செய்திகளை தவிர, சிங்களப் பகுதிகளில் இடம்பெறும் இவ்வாறான செய்திகளுக்கு யாழில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் எனக் கேட்கப்பட்டுள்ளதால், இங்கு பகிரப்படுவது இல்லை.
  16. ஒரு கட்சிக்குள், சஜித்துக்கு ஆதரவாக ஒரு அணி. ரணிலுக்கு ஆதரவாக இன்னொரு அணி. பொது வேட்பாளருக்காக மூன்றாவதாக ஒரு அணி. சுமந்திரனுக்கு தான் சஜித்தை ஆதரிக்கின்றாரா அல்லது அனுரவை ஆதரிக்கின்றாரா என்பதில் அவருக்கே குழப்பம். தமிழ் சனம் ஒட்டுமொத்தமாக இவர்களுக்கு நாமம் போடப் போகினம். அடுத்த பாராளுமன்ற தேர்தலில் தேசியக் கட்சிகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வடக்கில் வாக்குகளைப் பெறும்.
  17. முதலில் ஒன்றை புரிந்து கொள்ளவும். நான் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று எங்கும் எழுதவில்லை. ஏனெனில், இந்த பொது வேட்பாளர் முயற்சியே ஒரு பெரும் ஏமாற்று நாடகம். அரசியலில் அநாதைகளாக்கப்பட்டவர்கள் தம் இருப்பை பேணச் செய்யும் போலி தேசியம் இது. தாயக மக்களை தம் விருப்புக்கு ஏற்ற மாதிரி வாக்களிக்க சொல்லி இருக்க வேண்டும் தமிழ் கட்சிகள். இல்லாவிடின் வேட்பாளர்களுடன் பொருளாதார நலன்கள், அரசியல் கைதிகள், காணாமல் போனோர் தொடர்பாக சில உறுதி மொழிகளைப் பெற்று, அவற்றை நிறைவேற்றுவதன் அடிப்படையில் அடுத்த தேர்தல்களிலும் ஆதரவை தொடரலாம் என்று ஒரு பேரம் பேசலையாவது செய்து இருக்க வேண்டும். அப்படி செய்து, அதனடிப்படையில் இன்னாருக்கு தம் ஆதரவை வழங்கி இருக்க வேண்டும். இப்படி காத்திரமாக செய்யாமல் பொது வேட்பாளரை இறக்கியதும், சுமந்திரன் சாணக்கியன் வகையறா சஜித்தை ஆதரிப்பதும் மக்களை ஏமாற்றும் துரோகச் செயல்கள். ******** எனக்கு இலங்கையில் 2007 வரைக்கும் வாக்களிக்கும் உரிமை இருந்தது. விக்கிரமபாகு கருணாரத்ன விற்கு தவிர எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்கவில்லை. ஒவ்வொரு முறையும் செல்லுபடியாக்கி விட்டு வருவேன். இன்றும் நான் அங்கு இருப்பின் அதைத் தான் செய்வேன்.
  18. உங்களது கருத்துக்கு மேல் உள்ள, நான் ஏராளனுக்கு எழுதிய பதிலில் உங்கள் கேள்விகளுக்கான பதில்கள் உள்ளது.
  19. 2005 இற்கு முன்னர், புலிகள் இருந்த காலத்தில், ஒவ்வொரு சனாதிபதி / பாராளுமன்ற தேர்தலில்களிலும் புலிகள் நேரிடையாக இல்லாமல், தம் ஆதரவு ஊடகங்கள் மற்றும் அமைப்புகள் மூலம் இன்னாருக்கு வாக்களித்தால் நல்லம் என்று சமிக்ஞைகளை வெளியிடுவார்கள். பிரேமதாசா சனாதிபதித் தேர்தலில் நின்ற போது, சந்திரிகா முதலில் நின்ற போது, ரணில் பிரதமர் வேட்பாளராக நின்ற போது இவ்வாறான சமிக்ஞைகளை வெளியிட, தமிழ் மக்களில் பெரும்பாலானோர் அவர்களுக்கே வாக்களித்தனர். இவ்வாறு புலிகள் செய்தமை, வெல்கின்றவர்கள் தீர்வுகளைத் தருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் அல்ல. சில குறுகிய கால நன்மைகளை பெற்று அதன் மூலம் அடுத்த கட்டங்களை அடைவதற்கு. சிங்களம் ஒரு போதும் தமிழ் மக்களுக்கு ஏற்ற தீர்வை தரப் போவதில்லை என்பதை அவர்கள் தெளிவாக புரிந்து வைத்து இருந்தார்கள். ஆயினும் கூட, குறுகிய கால மற்றும் சாத்தியப்படக் கூடிய விடயங்களை எதிர்பார்த்து, அதில் சில வெற்றிகளையும் பெற்றார்கள் (இந்திய இராணுவ வெளியேற்றம், சந்திரிகா காலத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை காலத்தில் வளங்களை பெருக்கியமை ). அதே போன்று 2005 உம் அதன் பின் வந்த சனாதிபதி / பிரதமர்களும். இவர்கள் ஒரு போதும் தீர்வைத் தரப் போவதில்லை. அதுவும் புலிகள் இராணுவ பலத்துடன் இருக்கும் போதே தீர்வைத் தராத சிங்களம் இனி ஒரு போதும் தராது. அப்படி தரும் என்று நம்புவது மடத்தனமாகவே அமையும். ஆனால் வரப் போகின்றவர்களைக் கொண்டு குறுகிய கால மற்றும் சாத்தியப்படக் கூடிய நன்மைகளை அடைய தமிழ் சமூகம் முயல வேண்டும். ஆகக் குறைந்தது பொருளாதார ரீதியில் இன்றிருக்கும் நிலையை விட ஒரு சில அடிகளாவது முன்னோக்கி போக முடிகின்ற கோரிக்கைகளை முன் வைத்து இந்த சனாதிபதித் தேர்தலை அணுகியிருக்க வேண்டும். ஆனால் அப்படி சிந்திக்கும் நிலையில் அங்கு எவரும் இல்லை என்பதால், தமிழ் மக்களை தம் விருப்புப் படி வாக்களியுங்கள் என்றாவது சொல்லியிருக்க வேண்டும். இவற்றுக்கு பதிலாக நன்மை தராத, எதிர்பார்த்தது நடக்காவிடின் தீமையை தரப் போகின்ற ஒன்றை முன்வைத்துள்ளனர். ஆழ மூழ்கின்றவனுக்கு உதவ வக்கில்லாத ஒரு கூட்டத்தால் முதுகில் ஏற்றப்பட்ட ஒரு பாறாங்கல்.
  20. நீங்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ள என் கருத்துக்கும் உங்கள் பதிலுக்கும் என்ன தொடர்பு என்று புரியவில்லை. நான் ஒரு முயற்சி, அது வென்றால் பயனில்லை அதே நேரத்தில் அது தோற்றால் தீங்கை விளைவிக்கும் என்று குறிப்பிட்டு, அதற்காக மக்களை அணி திரட்டுவது மோசமான அரசியல் என்று எழுதுகின்றேன், ஆனால் நீங்கள் சம்பந்தமில்லாமல் எழுதியுள்ளீர்கள்.
  21. வினைத்திறன் மிக்க, மக்களின் இன்றைய அரசியல் / பொருளாதார நிலையினை சற்றேனும் முன்னகர்த்தக் கூடிய ஒரு விடையத்தை கையிலெடுத்து, அதனை மக்கள் முன் கொண்டு சென்று அதற்கான முழு உழைப்பையும் கொட்டி ஒன்று திரட்டினால், அதன் பெறுபேறுகளின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க முடியும். ஆனால், 100 வீதம் தமிழ் மக்கள் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பினும் கூட, சனாதிபதித் தேர்தல் முடிவுகளின் பின் முதலாம் அல்லது முதலாம் + இரண்டாம் வாக்குகளின் அடிப்படையில் ஒருவர் தெற்கில் இருந்து இலங்கையின் சனாதிபதியாகிய அடுத்த நாளில் இருந்து எல்லாம் தமிழ் மக்களுக்கு வழமை போல், எந்தவிதமான மாறுதல்களும் இல்லாமல் வாழ்வும் நாட்களும் நகரக் கூடிய நிலையில், இந்த பொது வேட்பாளர் என்ற விடயமே, மக்களை ஏமாற்றுகின்ற விடயமாகவே நான் பார்க்கின்றேன். நான் கணிப்பது போல் 30 வீதத்துக்கும் குறைவான வாக்குகளே வடக்கு கிழக்கில் பொது வேட்பாளர் பெறுவாராயின், முன்னை இருந்த நிலையை விட கீழான நிலைக்கே தாயகத்தில் தமிழ் தேசியம் அடையும். ஏற்கனவே தமிழ் தேசிய உணர்வுகளில் இருந்து விலகி இரண்டறக் கலந்தால் பலன் அதிகம் என நினைக்கும் அல்லது வெளி நாட்டுக்கு சென்றுவிட்டால் எல்லாம் சரியாகி விடும் என நினைக்கின்ற இளைய சமூகம் மேலும் மேலும் அவ்வாறான பாதையையே தெரிவு செய்யும். அத்துடன், வடக்கு கிழக்கு மக்கள் தமிழ் தேசியத்தை முற்றாக நிராகரித்து விட்டார்கள் என்ற பிம்பத்தையும், கிழக்கு இனியும் வடக்குடன் இணையாது என்று மக்கள் தீர்மானித்து விட்டார்கள் என்ற பிம்பத்தையும் தான் இது கொடுக்கும். திட்டமிட்ட போன்று பலனளித்தால் அதனால் எந்த பயனும் இல்லாமல், அது தோற்றுப் போனால் தீங்கு வரக் கூடிய ஒரு முயற்சியை மக்கள் முன் கொண்டு செல்வது மக்களுக்கு செய்யும் துரோகம். அதைத் தான் இந்த பொது வேட்பாளர் தெரிவு செய்கின்றது.
  22. தமிழ் கட்சிகளின் இந்த கூத்துகளால், அங்குள்ள தமிழ் இளைய சமூகம் தேசியக் கட்சிகளை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாகக் கவரப்பட்டு, தமிழ் தேசிய அரசியலில் இருந்து முற்றாக அன்னியப்பட்டு போகப் போகின்றனர். தமிழ் பொதுவேட்பாளர் நியமனம் என்பது, தமிழ் மக்களின் ஒற்றுமையின்மையை உலகுக்கு ஓங்கி சொல்லப் போகின்றது என்று முதல் நாளில் இருந்தே நான் அச்சப்பட்டு சொல்லி வருவது ஈற்றில் உண்மையாக நிகழ்ப் போகின்றது.
  23. இதை விட மாவீரர்களையும் அவர்களின் தியாகங்களையும் மலினப்படுத்தி கொச்சைப்படுத்தி விட முடியாது. இலங்கையின் ஒற்றையாட்சிக்குட்பட்ட அரசியலமைப்பின் தலைவரான நிறைவேற்றதிகாரம் உள்ள ஒரு சனாதிபதியை தெரிவு செய்வதற்காக இடம்பெறும் தேர்தலில் பங்குகொள்ளும் ஒரு வேட்பாளருக்கு(இவரின் பின்னால் இருக்கும் பொதுச்சபை இந்திய அரசின் நிகழ்ச்சி நிரலில் இயங்குகின்றது என சந்தேகம் பரவ தொடங்கியுள்ள நேரத்தில்) , சுதந்திர தமிழீழத்துக்காக தம் உயிர்களை ஆகுதியாக்கியவர்களின் தியாகத்தை சொல்லி வாக்கு கேட்கின்றார் அனந்தி. அடுத்தது உள்ளூராட்சி தேர்தல், மாகாணசபைத் தேர்தல், பாராளுமன்ற தேர்தல் என தேர்தல்கள் இலங்கையில் வரிசை கட்டி நிற்கின்றன. இத் தேர்தல்களின் போது இன்னும் அதிகமாக புலிகளின் தியாகத்தை கொச்சைபடுத்த போகின்றார். ஒரு பக்கம் புலம்பெயர் நாடுகளில் புலிகளின் பெயரைச் சொல்லி, பங்கு பிரிப்பு சண்டை. இன்னொரு பக்கம், புலத்தில் அனந்தி போன்றவர்களின் கொச்சைப்படுத்தல்கள். சிங்களவர்களை விட நாம்தாம் புலிகளை இழிவுக்குள்ளாக்குகின்றோம்.
  24. ஒரு பேச்சுக்கு 13 இற்கு அப்பால் சென்று மேலும் பல அதிகாரங்களையும் உரிமைகளையும் இலங்கை அரசு கொடுக்க முன்வந்தாலும், முன்னுக்கு நின்று மறிச்சு அதை கொடுக்க இந்தியா விடாது. பா.ஜ.க விற்கும் காங்கிரசுக்கும் இதில் வித்தியாசம் இல்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.