Everything posted by நிழலி
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
எந்த முட்டாள் தனமான முயற்சிகளுக்கும் தமிழ் தேசிய முலாமை பூசி விட்டால் அதை ஆதரிக்க என ஒரு கூட்டம் உள்ளது என்பதை அந்த முட்டாள்தனமான முயற்சிகளை முன்னெடுப்பதன் மூலம் தம் இருப்பை பேண முயலும் கூட்டத்துக்கு நன்கு தெரியும். எனவே அவர்கள் இப்படியானவற்றை தொடர்ந்து முன்னெடுப்பர். ஆனால் மக்கள் ஒவ்வொரு முறையும் தமக்கு எது தேவையென புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்கின்றனர் என்பதை இம்முறையும் நிரூபித்து உள்ளனர்.
-
அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவருகிறேன் - அலி சப்ரி
தேர்தல் முடிந்த பின் வந்த நல்ல செய்தி ஒன்று! ஜனாசாக்கள் எரிக்கப்படும் போது கூட கள்ள மெளனம் சாதித்த முஸ்லிம் இவர். இனிமேல் எவரும் அமைச்சர் பதவி தர மாட்டார்கள் என தெரிந்ததும் அரசியலில் இருந்து விலகுகிறாராம்.
-
அநுரவின் அரசிற்கு ஆதரவை வழங்க மறுக்கும் கட்சிகள்
அவர்களுக்கு / அனுரவுக்கு ஏன் இவர்களின் ஆதரவு தேவை?
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
தன் ஒரு கண் போனாலும் பரவாயில்லை , எதிரிக்கு இரண்டு கண்களும் போக வேண்டும் என ரணில் திட்டம் போட்டு செய்துள்ளார். சஜித் வர வேண்டும் என்பதற்காக இவரையும் சஜித்தையும் ஒன்றாக்க இந்தியா இறுதி வரைக்கும் முயன்றது. ஆனால் வழக்கம் போல இதிலும் இந்தியா தோற்று விட்டது. தமிழர்களின் நலன்களை அழிப்பதில் ஒவ்வொரு முறையும் வெற்றி பெறும் இந்தியா, மறு வளமாக சிங்களத்துடன் ஒவ்வொரு முறையும் தோற்று கொண்டே போகின்றது.
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களது இன்றைய பத்திரிகை சந்திப்பு
உண்மையை, நிதர்சனத்தை ஒத்துக் கொள்வதற்கு மக்களின் மீது உண்மையான அக்கறையும் அவர்களின் முன்னேற்றத்தில் ஈடுபாடும் இருக்க வேண்டும். ஆனால் அப்படி ஒன்று இவர்களிடம் இல்லை. இவர்களிடம் மட்டுமல்ல தமிழ் காட்சிகள் எவற்றிடமும் எப்போதும் இருந்ததில்லை. இல்லாத மக்கள் ஆதரவை இருப்பதாக உலகுக்கு காட்டி தாமும் நம்பி மற்றவர்களையும் நம்ப வைத்து எல்லாரையும் மடையர்களாக ஆக்க நினைக்கும் இவர்கள் ஈற்றில் தாம் தாம் மிகப் பெரிய மடையர்கள் என்று காட்டி விடுகின்றனர்
-
“நான் அன்பு வைத்துள்ள இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையினை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.” புதிதாக தெரிவான ஜனாதிபதி அநுரவுக்கு ஜனாதிபதி ரணில் உருக்கம்!
இன்னும் மூன்று வரிசத்தில் இந்த மனிசனை மீண்டும் தேடிப் பிடித்து ஆட்சி அமைக்க சொல்லும் நிலை வராவிடின் மகிழ்ச்சி. பார்ப்பம் 69 இலட்சம் பேரின் தெரிவு பாணுக்கும் பருப்புக்குன் லைனில் நிற்க வைத்தது இப்ப 56 இலட்சம் பேரின் தெரிவு என்னாகும் என்று.
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
வடக்கு கிழக்கு வாக்காளர் எண்ணிக்கை: 2, 220, 311 செலுத்திய வாக்குகள் எண்ணிக்கை: 1, 626, 457 நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை: 55994 செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை: 1,570,463 அரியத்துக்கு கிடைத்தது: 218,479 சத விகிதம்:9.84
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
Presidential Election-2024 Preferential vote Result SAJITH PREMADASA SJB 44.05% 4,363,035 + 137,025 Votes 4,500,060 Total Votes ANURA KUMARA DISSANAYAKE NPP 55.95% 5,634,915 + 80,066 Votes 5,714,981 Total Vote https://election.virakesari.lk/
-
அரியநேத்திரனுக்கு வாக்களித்ததன் மூலம் தமிழ் தேசியத்தின் ஒற்றுமையை மக்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்; ஜனநாயக போராளிகள் கட்சி
65 வீதத்திற்கும் மேல் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட பொது வேட்பாளரை மக்கள் திரளாக ஒன்றிணைந்து ஆதரவு கொடுத்துள்ளனர் என்று சொல்வதன் மூலம் நீங்கள் எல்லாம் ஒரு காலத்திலும் திருந்தப் போவதில்லை என்பதையே எமக்கு மீண்டும் நிரூபிக்கின்றீர்கள். போரும், அழிவும், குண்டு மழையும், இடப்பெயர் வாழ்வும், பொருளாதார சீரழிவும் காணாமாக்கபடுதலும் கூட தமிழ் மக்களை தமிழ் தேசிய அரசியலில் இருந்து விலகிப் போகச் செய்யவில்லை. ஆனால் உங்களின் தூர நோக்கற்ற, தம் இருப்பை மட்டும் பேணுகின்ற வெற்று கோச அரசியல் அவர்களை தமிழ் தேசிய அரசியலில் இருந்து விலத்தி செல்ல வைத்துள்ளது. சிங்களம் செய்ய முற்பட்டு செய்ய முடியாமல் போனதை 15 வருடங்களில் தமிழ் அரசியல் கட்சிகள செய்து முடித்து விட்டன.
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
"தமிழ் தேசிய அரசியலையும் உணர்வையும் மேலும் நீர்த்து போகச் செய்வது எவ்வாறு"
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
Polling Division - Chawakachcheri SAJITH PREMADASA SJB 10,956 Votes 35.13% ARIYANETHIRAN PAKKIYASELVAM IND9 9,159 Votes 29.37% RANIL WICKREMESINGHE IND16 6,160 Votes 19.75% ANURA KUMARA DISSANAYAKE NPP 2,692 Votes Division Results 2024 (virakesari.lk)
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
சுமந்திரன் எந்தப் பக்கம் இனி போவார்? அது அவருக்கே தெரியாதாம்.😀
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
நல்லூரிலாவது 50 வீதம் அரியத்துக்கு கிடைக்கும் என நினைத்திருந்தேன்.
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
வாக்குகளை எண்ணுகின்றவர்கள் நித்தா கொள்ளப் போய் விட்டார்கள் போல.
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
@Kapithan , உத்தியோகப்பற்றற்ற / ஆதாரமற்ற தேர்தல் முடிவுகளை இணைக்க வேண்டாம்.
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
Moneragala Valid Votes: 23,989 14,050 Anura Kumara Dissanayake 58.57% 58.57% Complete 5,733 Sajith Premadasa 23.9% 23.9% Complete 3,401 Ranil Wickremesinghe 14.18% 14.18% Complete 470 Namal Rajapaksa 1.96%
-
மக்களால் தெரிவு செய்யப்படுபவருக்கு ரணில் விக்கிரமசிங்க வழிவிடுவார் என எதிர்பார்க்கின்றேன் - அனுரகுமார
ரணிலுக்கு வேண்டும் என்றால் அனுர மேல் பயம் இருக்கும் . ஆனால் அணுரவிற்கு இருக்காது . கோத்தா + மகிந்தவே தேர்தல் முடிவுகளின் படி, மைத்திரிக்கு வழிவிட்டவர்கள். இலங்கையில் தேர்தல் முடிவுகளை புறம் தள்ளி ஆட்சி செய்யும் முறை ஒரு போதும் நிகழ்ந்தது இல்லை.
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
கொழும்பில் 1000 இற்கு மேற்பட்டவர்கள் அவருக்கு வாக்களித்து இருப்பினம்
-
ஜனாதிபதி தேர்தல் 2024 : மாவட்ட ரீதியில் முழுமையான வாக்குப் பதிவு வீதங்கள் !
பொறுமையாக இருந்து சரியான முடிவுகளை கீழே இணைக்கப்பட்டுள்ள திரியில் இணைக்கவும். உத்தியோகப்பற்ற முடிவுகளை இணைப்பதை தவிருங்கள். நன்றி
-
ஜனாதிபதி தேர்தல் 2024 : மாவட்ட ரீதியில் முழுமையான வாக்குப் பதிவு வீதங்கள் !
வடக்கு கிழக்கு பகுதிகளில் 50 வீதத்துக்கும் அதிகமாக வாக்கு பதிவு என்று குறிப்பிட்டுள்ளனர். இது உண்மையாயின் , கன காலத்துக்கு பிறகு இவ்வாறு பெரிய வீதத்தில் வாக்களித்துள்ளனர் என நினைக்கின்றேன்.
-
அமெரிக்கா நோக்கி பறந்தார் பஸில்!
நான் அப்படி நடக்கும் என எதிர்பார்க்கவில்லை. ரணில் இப்படி மோட்டுத்தனமாக செய்யும் ஆள் இல்லை. உறுமீன் வரும் வரைக்கும் காத்திருக்கும் கொக்கு அவர்.
-
அமெரிக்கா நோக்கி பறந்தார் பஸில்!
என் சிங்கள நண்பர் சிலர் நீங்கள் சொன்ன மாதிரித் தான் சொல்கின்றனர். அனுரவுக்கு முதல் விருப்பை போடுகின்றவர்களின் இரண்டாம் விருப்பாக சஜித் தான் உள்ளார் என. அதே நேரம் சஜித்தை முதலாவதாக தெரிவு செய்கின்றவர்கள், அனுரவை இரண்டாவதாக தெரிவு செய்ய தயங்குவர் என்று. படித்த, மேட்டுக் குடி சிங்களவர்கள் அதிகம் வாழும் கண்டி மாவட்டத்தில் ஜேவிபி இற்கு கடும் எதிர்ப்பும் உள்ளது. பார்ப்பம், நாளைக்கு இன்னேரம் தபால் மூல வாக்களிப்பு முடிவுகளாவது வெளியாகத் தொடங்கியிருக்கும்.
-
அமெரிக்கா நோக்கி பறந்தார் பஸில்!
சஜித் வெல்ல வாய்ப்பே இல்லை. போட்டி ரணிலுக்கும், அனுரவுக்கும் தான். முதல் சுற்றில் ஒருவர் தெரிவு செய்யப்படும் நிலை வரின், அனுர வெல்வார். இரண்டாம் விருப்பு வாக்கையும் சேர்க்க வேண்டி வரின், ரணில் வெல்லக் கூடிய சாத்தியம் அதிகம்.
-
ஈழநாடு ஆசிரியர் தலையங்கம் - எது புத்திசாலித்தனம் – எதுமுட்டாள்தனம்?
போரும் அதன் பின் மகிந்த / கோத்தா வின் சிறுபான்மையினருக்கு எதிரான மனநிலையுடனான ஆட்சியும், அடக்குமுறைகளும் தமிழ் மக்களை ஓரளவுக்கேனும் ஓரணியில் நின்று குறிப்பிட்ட ஒரு வேட்பாளருக்கு அதிகமானோர் வாக்களிக்கும் போக்கை உருவாக்கி இருந்தது. மகிந்தவை எப்பாடு பட்டாவது ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதற்காகவே மக்கள் சரத் போன்சேக்காவுக்கு, மைத்திரிக்கு, சஜித்துக்கு வாக்களித்தனர். மகிந்தவை தோற்கடித்து மைத்திரியை கொண்டு வந்தது தமிழ் / முஸ்லிம் வாக்குகள் தான். இதனால் தான் மகிந்த தன்னை தமிழர்கள் தோற்கடித்து விட்டனர் என சிங்கள மக்களுக்கு சொல்லிக் கொண்டு இருந்தார், ஆனால் இன்று வெளித்தெரியக் கூடிய, அன்றாட வாழ்வில் உணரக் கூடிய இராணுவ மற்றும் அடக்குமுறைகள் வடக்கு கிழக்கில் இல்லை. இனவாதம் பேசி தேர்தலில் வெல்ல முடியாத என்ற சூழ்நிலையில் முன்னனி சிங்கள வேட்பாளர்கள். ஆகவே வடக்கு கிழக்கு தமிழ் (பேசும்) மக்கள் ஓரணியில் திரளக் கூடிய சூழ்நிலை இன்று இல்லை. இவர்களின் வாக்குகள் 3 ஆக பிரியும் இந்த தடவை. இந்த யாதார்த்தைப் புரிந்து கொள்ளாத தமிழ் தலைமைகள் தான் இன்று அவர்களுக்காக அரசியல் செய்கின்றனர். நாளை மறுதினம் இதனைப் புரிந்து கொள்வர்.
-
தமிழக மீனவர்களுக்கு கோடிகளில் அபராதம் விதிக்கும் இலங்கை: என்ன செய்யப் போகிறது மத்திய அரசு?
எங்கிருந்து இந்த தகவல்களை பெற்றீர்கள்? இலங்கை யில் bottom trawling முறையில் மீன் பிடிப்பது மிக குறைவு. அரிது என்று கூட சொல்ல முடியும். அங்கொன்று இங்கொன்றாக வேண்டுமானால் களவாக நடக்கலாம்.