Everything posted by தமிழ் சிறி
-
தெற்காசிய நாடுகளை அசச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ்!
தெற்காசிய நாடுகளை அசச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ்! கடந்த 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பல உயிர்களை பறித்துச் சென்ற சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் மீண்டும் தெற்காசிய நாடுகளை அச்சுறுத்தி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் ஹாங்காங் நகரில் கொரோனா தொற்றின் பாதிப்பு தீவிரமடைந்துள்ளதாக அந்நகரின் சுகாதார பாதுகாப்பு மைய அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். இதேவேளை, இம் மாதத்தின் முதல் வாரத்தில் தொற்று எண்ணிக்கை ஒரு வருடத்தில் அதிகபட்ச அளவை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பரிசோதனைகளுக்கு அனுப்பப்படும் மாதிரிகளில் தொற்று உறுதியாவது அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் மக்கள் அடர்த்தி அதிகம் உள்ள சிங்கப்பூரிலும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாக எடுத்த கணக்கெடுப்பின்படி கோவிட்-19 தொற்று எண்ணிக்கை சுமார் 14,200 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2025/1432093
-
கருத்து படங்கள்
- வடக்கு முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குகின்றார் சுமந்திரன்! சங்கு கூட்டணியிடம் அவரே தெரிவிப்பு.
சங்குடன் கூட்டணி வைத்ததற்கு... எதிர்ப்பு தெரிவித்த யாழ்.கள அரைகுறை அரசியல் ஆய்வாளர்களை வரிசையாக வரும்படி அழைக்கின்றோம். 🤪 சுமந்திரனுக்கு...சங்கு ஊதப் படுவது நிச்சயம். ஊ.... ஊ..... ஊ............ 😂 🤣- வடக்கு முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குகின்றார் சுமந்திரன்! சங்கு கூட்டணியிடம் அவரே தெரிவிப்பு.
சுமந்திரன்... பாராளுமன்றத்துக்குள் பின்கதவால் நுழைய, முயற்சி பண்ணி சத்தியமூர்த்திக்கும், சிறிதரனுக்கும் ஆசை காட்டிப் பார்த்தும், எவரும் இவரின் சுத்துமாத்து நடவடிக்கைகளுக்கு இடம் கொடுக்காமல் நழுவிய பின்... இனி அடுத்த தேர்தல் மட்டும் பொறுத்து இருக்க ஏலாது என்று இவரே மாகாணசபை முதலைமைச்சர் வேட்பாளர் என்று தனக்குத்தானே மகுடம் சூடிக் கொண்டு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடப் போகின்றாராம். ஆபிரஹாம் சுமந்திரனின் இந்த மூஞ்சைக்கு எவனும் வாக்குப் போடுவானா? தமிழரசு கட்சி இதோடு... வடக்கில் துடைத்து எறியப் படுவது நிச்சயம்.- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
உடனடி பதிலிற்கு நன்றி இணையவன். 👍🏽 அவர் ஈமெயிலை மாற்றவில்லை என்றே நினைக்கின்றேன். நீங்கள் தந்த தகவல்களை அவரிடம் தெரிவிக்கிறேன். மீண்டும் மனப்பூர்வமான நன்றிகள் இணையவன். 🙂- பாகிஸ்தானுக்கு உதவி செய்வதை சர்வதேச நாணய நிதியம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்” - இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
ஶ்ரீலங்காவுக்கு நீங்கள் உதவி செய்வதையும் நீங்கள் மறு பரிசீலனை செய்யத் தயாரா.- சுமந்திரன் சென்ற கூட்டத்தில் கூச்சல் குழப்பம்! வெளியான பகீர் வீடியோ.
சங்கு சின்னத்தில்... இவர்கள் போட்டியிட்டதற்கு, விளக்கம் கேட்டு எப்போ சுமந்திரன் கடிதம் அனுப்பப் போகிறார். நீங்களும், உங்கடை சுத்துமாத்து அரசியலும். 😂 உங்களுக்கு வெள்ளை அடிக்கவும்.. "நட்டு கழண்டதுகள்" இருக்கிறாதாலை தான் இந்தப் பிரச்சினை. 🤣- சுமந்திரன் சென்ற கூட்டத்தில் கூச்சல் குழப்பம்! வெளியான பகீர் வீடியோ.
மண்டையன் குழுவும், சுமந்திரன் குழுவும் ஒன்றுக்குள் ஒன்று சங்கமமாகியது. முன்னர் இவர்களை மண்டையன் குழு / ஆயுதக்குழு என விமர்சித்த... சுமத்தின் குழு இப்போது மீண்டும் அவர்களுடன். அது கூட பறவாயில்லை அரசியலில் இது சாதாரணம்! ஆனால் பிரிந்ததுக்கு ஒரு காரணம் சொல்கிறார்கள் பாருங்க 🤣😂🤣😂🤣😂 ஒற்றுமையாக பிரிந்து கேட்டதால் தான் அதிக ஆசனம் இரண்டு கட்சியும் பெற்றன என்று🤣😂😜 K J Arun Kumar- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
@மோகன் , @இணையவன் , @நிழலி , @nunaviIan ஆகியோரின் கவனத்திற்கு.. பாஞ்ச் அண்ணை இரண்டு மாதம் யாழ். களத்திற்கு வராமல் இருந்து விட்டு, இன்று யாழ். களத்திற்கு நுழைய முற்பட்ட போது, முடியாமல் உள்ளதாக தெரிவித்தார். அவருக்கு ஏற்பட்ட சிரமத்தை நிவர்த்தி செய்து உதவும்படி கேட்டுக் கொண்டார். நன்றி.- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
பார்டரில் மீண்டும் பிரச்சினையாம். 😂 🤣- சிரிக்கலாம் வாங்க
- நாமலின் கருத்துக்கு பதிலடி கொடுத்த கனடாவின் பிரம்டன் மேயர்
- தமிழ் இனப்படுகொலை – கனடாவில் நினைவுச் சின்னம் – நாமல் கொதிக்கிறார்!
- சிரிக்க மட்டும் வாங்க
- சிரிக்கலாம் வாங்க
👉 https://www.facebook.com/100076314756096/videos/1035897674674669 👈 நல்ல காலம்.... ஒருவரும் பார்க்கவில்லை. 😂 🤣- முள்ளிவாய்க்கால் நினைவுத் திடலில் அஞ்சலி செலுத்திய பேரறிவாளனின் தாயார்
முள்ளிவாய்க்கால் நினைவுத் திடலில் அஞ்சலி செலுத்திய பேரறிவாளனின் தாயார். ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் இருந்து விடுதலைப்பெற்ற பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவுத் திடலுக்கு வருகைத்தந்துள்ளார். அவர் நேற்று முன்தினம் முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவுத் திடலுக்கு சென்று நினைவேந்தலை முன்னெடுத்துள்ளார். வடக்கு, கிழக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுவருகின்ற நிலையில் அவரின் வருகை முக்கியத்துவம் மிக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் நான்காம் நாள் நிகழ்வுகள் இன்று தமிழர் தாயக நிலம் எங்கும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பொது அமைப்புக்கள், அரசியல் ஆதரவாளர்கள், பல்கலை மாணவர்களால்முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்போது இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிர்நீத்தவர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நினைவுக்கஞ்சியும் பரிமாறப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/perarivalan-s-mother-in-mullivaikkal-1747320473?fbclid=IwY2xjawKUE2RleHRuA2FlbQIxMABicmlkETBlSUNTVG96M2YzazZWcXQyAR5ekvh9qj4yHeEiz85VNssBcL79mBDigzH93Mb0o09tn287xFo9-65cBUj22Q_aem_2mgg81TRNsFUiB9GT6X0Yw- தடுத்து வைப்பு சட்டவிரோதம்; அடிப்படை உரிமைகளை மீறியதற்காக நூறு மில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி பிள்ளையான் மனு
இவன் செய்த கொலைகளுக்கு கண்ட இடத்தில் சுட்டுக் கொன்று இருக்க வேண்டும். இவனது வழக்கை இழுத்து அடித்தால்.... சட்டத்தின் ஓட்டைகளால் வெளியே வந்து, மீண்டும் மக்களுக்கு அச்சுறுத்தல் செய்வான். ரணில், மகிந்த இவனின் மேல் வைத்திருக்கும் அபிமானத்துக்கு... மீண்டும் அமைச்சராக வரக் கூடிய சந்தர்ப்பமும் உண்டு அனுரா... கட்சி சென்ற பாராளுமன்ற தேர்தலில் வென்ற போது, பிள்ளையான் தன்னை கைது செய்வார்கள் என்று கொஞ்சக் காலம் தலைமறைவாக இருந்தவன், வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டதாகக் கூட அப்போது பேசப்பட்டது. பிறகு என்ன துணிவில் வெளியே வந்தார் என்று தெரியாவில்லை.- டிக்டோக் நேரலையின் போது மெக்சிகன் பிரபலம் மீது துப்பாக்கி சூடு!
டிக்டோக் நேரலையின் போது மெக்சிகன் பிரபலம் மீது துப்பாக்கி சூடு! அழகு மற்றும் ஒப்பனை தொடர்பான காணொளிகளுக்கு பெயர் பெற்ற சமூக ஊடகத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க இளம் மெக்சிக்கன் பெண்ணொருவர் டிக்டோக் நேரடி ஒளிபரப்பின் போது சுட்டுக் கொல்லப்பட்டார். பாலின அடிப்படையிலான வன்முறை அதிகமாக உள்ள ஒரு நாட்டில் இந்த சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. 23 வயதான வலேரியா மார்க்வெஸின் (Valeria Marquez) மரணம், பெண் கொலைக்கான நெறிமுறைகளின்படி விசாரிக்கப்படுவதாக மெக்ஸிகோவின் ஜலிஸ்கோ மாநில வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சபோபன் நகரில் செவ்வாய்க்கிழமை (13) மார்க்வெஸ் பணிபுரிந்த அழகு நிலையத்தில் ஒரு நபர் உள்ளே நுழைந்து அவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை முன்னெடுத்தார். இதனால், அவர் உயிரிழந்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனினும், வழக்கறிஞர் அலுவலகம் எந்த சந்தேக நபரையும் அறிக்கையில் பெயரிடவில்லை. சம்பவத்திற்கு சில வினாடிகளுக்கு முன்பு, மார்க்வெஸ் தனது டிக்டோக் நேரடி ஒளிபரப்பில் ஒரு மேசையில் ஒரு பொம்மையை பிடித்துக் கொண்டு பின் தொடுநர்களுடன் தொடர்பில் இருந்தார். இதன்போது, அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டோக்கில் கிட்டத்தட்ட 200,000 பின்தொடர்பவர்களைக் கொண்டிருந்த மார்க்வெஸ், தான் இல்லாதபோது அழகு நிலையத்துக்கு யாரோ ஒருவர் “விலையுயர்ந்த பரிசை” வழங்க வந்ததாக நேரடி ஒளிபரப்பில் முன்னதாகக் கூறியிருந்தார். இந்த நிலையில் இந்த கொலையானது ஒரு கும்பல் தாக்குதலா? அல்லது பெண்களுக்கு எதிரான மற்றுமோர் வன்முறை சம்பவமா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது. லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியனில் பெண் கொலை விகிதத்தில் நான்காவது இடத்தில் பராகுவே, உருகுவே மற்றும் பொலிவியா ஆகிய நாடுகளுடன் மெக்சிகோவும் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியனுக்கான பொருளாதார ஆணையத்தின் அண்மைய தரவுகள் தெரிவிக்கின்றன. 2023 ஆம் ஆண்டில் 100,000 பெண்களுக்கு 1.3 பேர் மட்டுமே பெண் கொலை விகிதத்தில் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோ நகரம் உட்பட மெக்சிகோவின் 32 மாநிலங்களில் கொலை விகிதத்தில் ஜாலிஸ்கோ ஆறாவது இடத்தில் உள்ளது. 2024 ஒக்டோபரில் ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாமின் பதவிக்காலம் தொடங்கியதிலிருந்து அங்கு பெண் கொலை எண்ணிக்கை 906 ஆக பதிவாகியுள்ளதாக தரவு ஆலோசனை நிறுவனமான TResearch தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1432026- துருக்கியில் இன்று உக்ரேன்- ரஷ்யா நேரடிப் பேச்சுவார்த்தை!
அப்ப கோமாளியை... வைச்சு செய்யப் போறாங்கள். 😂 வாங்கிக் கட்டவேணும் என்று விதி... இருந்தால், நாங்கள் ஒண்டும் செய்ய ஏலாது. இதுக்கு, பரிகாரம் ஒண்டும் இல்லையோ. 🤣- போதைப்பொருள் கடத்தல்; மூவருக்கு மரண தண்டனை!
போதைப்பொருள் கடத்தல்; மூவருக்கு மரண தண்டனை! ஹெரோயின் வைத்திருந்தமை மற்றும் அதனை கடத்தியமை போன்ற குற்றச்சாட்டுகளுக்காக குற்றம் நிரூபிக்கப்பட்ட மூன்று நபர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (16) மரண தண்டனை விதித்தது. இவர்கள் மூவரும் கடந்த 2018 ஆம் ஆண்டு பேருவளையைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் பல நாள் மீன்பிடிக் கப்பலில் 179 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலின் போது கைது செய்யப்பட்டனர். இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டிருந்த மேலும் ஐந்து பிரதிவாதிகளை விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே உத்தரவிட்டார். https://athavannews.com/2025/1432010- கருத்து படங்கள்
- தமிழ் இனப்படுகொலை – கனடாவில் நினைவுச் சின்னம் – நாமல் கொதிக்கிறார்!
- நாமலின் கருத்துக்கு பதிலடி கொடுத்த கனடாவின் பிரம்டன் மேயர்
- வல்வெட்டித்துறையில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்தவர்கள் கைது!
வல்வெட்டித்துறையில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்தவர்கள் கைது! யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை கடல் பகுதியில் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முயன்ற ஆறு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் மற்றும் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இரண்டு நபர்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இரண்டு நபர்களும், சம்பந்தப்பட்ட குழுவை அழைத்து வர இந்த நாட்டிலிருந்து படகில் சென்றவர்கள் ஆவர். மேலும் விசாரணையில், மற்ற நால்வரும் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு சட்டவிரோதமாக பயணம் செய்த ஒரு குழு என்பதும், அங்குள்ள இந்திய கடலோர காவல்படை அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் வைத்து மீண்டும் அவர்கள் நாட்டுக்குள் நுழைய முயன்றபோது அவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். https://athavannews.com/2025/1431979Important Information
By using this site, you agree to our Terms of Use.
- வடக்கு முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குகின்றார் சுமந்திரன்! சங்கு கூட்டணியிடம் அவரே தெரிவிப்பு.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.