Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. 👉 https://www.facebook.com/watch?v=615000964377174 👈 ஓட ஓட விரட்டியடிக்கப்பட்ட சி.வி.கே சிவஞானம்! நைசாக... நழுவிய, சாணக்கியன்! செம்மணி போராட்ட களத்தில் பெரும் பரபரப்பு. Samugam 24×7
  2. சுமந்திரன்... நரியன். எங்கை தனக்கு அடி விழும் என்று முன்பே தெரியும். 😂 ஏற்கெனவே சுமந்திரனுக்கு... அவுஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து என்று சர்வதேச லெவலில் வாங்கிக் கட்டிய அனுபவம் உண்டு. 🤣 செம்மணிக்கு தான் போனால்... கோட்டு, சூட்டு எல்லாம் கழட்டி துவைத்து எடுத்து விடுவார்கள் என்று தெரியும். அதுதான்... தான், பதுங்கிக் கொண்டு, சிவஞானத்தை நோட்டம் பார்க்க அனுப்பியவர். அதுகும் வந்து, வளமாய் வாங்கிக் கட்டிக் கொண்டு போயிருக்குது. 😂
  3. பொதுமக்களால் ஓட ஓட கலைக்கப்பட்ட தமிழரசு கட்சியின் சீ.வி.கே சிவஞானம்! யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் நடைபெற்று வரும் அணையா விளக்கு போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற வடமாகாண சபை அவைத்தலைவரும், தமிழரசு கட்சியின் பதில் தலைவருமான சீ.வி.கே சிவஞானம் போராட்ட களத்தில் நின்ற மக்களால் அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளார். செம்மணியில் நடைபெற்று வரும் அணையா விளக்கு போராட்டம் இன்று (25) 3ஆவது நாளாக தொடர் போராட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்நிலையில் மதியம் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற சீ.வி.கே சிவஞானத்தை அங்கிருந்த மக்கள் வெளியேறுமாறு கோஷங்களை எழுப்பி போராட்ட களத்தில் இருந்து வெளியேற்றி இருந்தனர். யாழ்ப்பாணத்தில் பலர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என பகிரங்கமாக குற்றச்சாட்டப்பட்டு வரும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினருடன் கூட்டு சேர்ந்து யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி சபைகளில் தமிழரசு கட்சி ஆட்சி அமைத்துள்ளதாகவும், அவ்வாறானவர்களுடன் கூட்டு சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள தகுதியற்றவர்கள் என கூறியே போராட்டக்களத்தில் இருந்து சீ.வி.கே சிவஞானத்தை அப்புறப்படுத்தியதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. Vaanam.lk
  4. செம்மணியில் செருப்பை விட்டு விட்டு ஓடிய.... NPP பாராளுமன்ற உறுப்பினர்கள். Inuvaijur Mayuran
  5. உச்சிக் கம்பத்தில் நின்று... குறளி வித்தை காட்டினாலும், காசு வாங்க.. கீழை இறங்கித்தான் வர வேண்டும். அற்ப ஆசன ஆசைகளுக்காக தமிழ் விரோத & துரோகக் குழுக்களோடு கூட்டுவச்சிட்டு, வெள்ளை வேட்டியோட மக்கள் மத்தியில் வந்து அரசியல் செய்ய வெளிக்கிட்டால் என்ன நடக்கும் என்பது இன்று தெளிவாகியிருக்கும். கே. சிவஞானம் & சாணக்கியன்🪕🤥 மற்றவையும் கவனம்🧘🏿‍♂️ Rj Prasath Santhulaki
  6. ‘அணையா தீபம்‘ போராட்டக்களத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் அரசியல் தலைவர்கள்! செம்மணியில் புதையுண்டுள்ள உறவுகளுக்கு, சர்வதேச நீதி கோரி செம்மணி வளைவுப் பகுதியில் கடந்த 23 ஆம் திகதி முதல் 3 நாட்கள் ”அணையா தீபம்’ எனப்படும் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் குறித்த போராட்டத்தின் இறுதி நாளான இன்று பெருமளவான மக்கள் குறித்த பகுதியில் ஒன்று கூடி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். இதன்போது போராட்டக் களத்திற்கு தமிழ் அரசியல் தலைவர்களான இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், மற்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் சென்றுள்ள நிலையில் அங்கிருந்த போராட்டக்காரர்கள் அவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர்ளை வெளியேறுமாறு கூச்சலிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து குறித்த அரசியல் தலைவர்கள் போராட்டக் களத்திலிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1437082
  7. பொலிஸார் மீது கத்திக்குத்து தாக்குதல்! பெண்கள் உட்பட மூவர் கைது! மட்டக்களப்பு சின்ன ஊறணி (வன்னியில்) பகுதியில் தொலைக்காட்சி திருடிய திருடனை கைது செய்ய சென்ற பொலிசார் மீது பெண்கள் உட்பட 6 பேர் கொண்ட குழுவினர் கத்தியால் குத்தி, பொல்லுகளால் தாக்குதல் நடாத்தியதில் இரு பொலிசார் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று(25) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. தாக்குதலை மேற்கொண்ட குழுவைச் சேர்ந்த இரு பெண்கள் ஒரு ஆண் உட்பட 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் 3 பேர் தப்பி சென்றுள்ளதாகவும் மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பகுதியிலுள்ள வீடு ஒன்றில் தொலைக்காட்சி பெட்டி ஒன்றை திருடிச் சென்ற சம்பவம் தொடர்பாக பொலிசார் ஒருவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புபட்ட வன்னி என அழைக்கப்படும் சின்ன ஊறணி பகுதியைச் சேர்ந்த திருடன் ஒருவர் தலைமறைவாகி வந்துள்ளார். இந்த நிலையில் குறித்த திருடன் அவரது வீட்டில் இருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து சம்பவதினமான இன்று (25) பிற்பகல் 01.30 மணியளவில் குறித்த நபரை கைது செய்வதற்காக இரு பொலிசார் சிவில் உடையில் அங்கு சென்று கைது செய்ய முற்பட்டனர். இதன் போது அங்கு பொலிசார் மீது திருடன் கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்ட நிலையில் அங்கிருந்த இரு பெண்கள் உட்பட குழுவினர் பொலிசார் மீது தாக்குதலை மேற்கொண்டதில் இரு பொலிசார் பலத்த காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் தாக்குதலை நடாத்திய திருடன் உட்பட 3 பேர் தப்பி ஓடியுள்ளனர். இதனை தொடர்ந்து பொலிசார் மீது தாக்குதலை நடாத்திய திருடனின் தாயார் மனைவி ஆகிய இரு பெண்கள் ஆண் ஒருவர் உட்பட 3 பேரை பொலிஸார் கைது செய்தனர் . இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1437122
  8. இஸ்ரேல் போர்: காசாவில் 4 லட்சம் பேர் மாயம்! “காசாவில் கடந்த 2 வருடங்களில் 4 இலட்சம் பேர் மாயமாகியுள்ளனர்” என ஹார்வர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. காசா மீது கடந்த 2023ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றது. இப்போரினால் இதுவரை காசாவில் சுமார் 60,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில் அண்மையில் இது குறித்து ஹார்வர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் பல்வேறு அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அதன்படி, 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் காசாவில் 3,77,000 பேர் காணாமல் போயுள்ளனர் எனவும் காணாமல் போனவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள் என்றும் தெரிய வந்துள்ளது. அத்துடன் போருக்கு முன்னர் காசாவில் 22 லட்சம் பேர் வசித்து வந்துள்ளனர் எனவும், தற்போது 19 லட்சம் பேர் மாத்திரமே அங்கு உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மீதான தாக்குதல்களும், மனிதாபிமான உதவிகளைத் தடுப்பதும் மக்கள் தொகை எண்ணிக்கை குறைவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அத்துடன் இப் போரின்போது மக்கள் இடம்பெயர்ந்திருக்கலாம் அல்லது காணாமற் போய் இருக்கலாம் என்றாலும் கணிசமான எண்ணிக்கையிலானோர் இறந்திருக்கலாம் என்ற முடிவுக்கே வரக் கூடியதாக இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும்” உலக நாடுகள் மற்றும் மனிதாபிமான அமைப்புகள் காஸா மக்களுக்கு உதவியை வழங்க முன்வந்தாலும், அதை பெற வரும் மக்கள் மீது இஸ்ரேலிய ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த மே மாத இறுதியில் இருந்து இன்று வரை, மனிதாபிமான உதவிகளைப் பெற முயன்றபோது 450 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 3,500 பேர் காயமடைந்துள்ளதாகவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1437103
  9. அமெரிக்காவை அடையக்கூடிய அணுசக்தி ஏவுகணையை பாகிஸ்தான் உருவாக்குவதாக தகவல்! அமெரிக்காவை அடையக்கூடிய அணுசக்தி முனை கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ICBM) பாகிஸ்தான் இராணுவம் ரகசியமாக உருவாக்கி வருவதாக வொஷிங்டனில் உள்ள உளவுத்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூருக்குப் பின்னர் சீனாவின் ஆதரவுடன் பாகிஸ்தான் தனது அணு ஆயுதங்களை மேம்படுத்த விரும்புவதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில் இந்த அறிக்கை வந்துள்ளது. அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டிய அந்த அறிக்கை, பாகிஸ்தான் அத்தகைய ஏவுகணையை வாங்கத் தொடர்ந்தால், வொஷிங்டன் அந்த நாட்டை அணுசக்தி எதிரியாக அறிவிக்கும் என்றும் கூறியது. அணு ஆயுதங்களை வைத்திருக்கும் எந்தவொரு நாடும் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாகவோ அல்லது எதிரியாகவோ கருதப்பட்டால், அது அணுசக்தி எதிரியாகக் கருதப்படுகிறது. தற்போது, ரஷ்யா, சீனா மற்றும் வட கொரியா ஆகியவை அமெரிக்காவிற்கு எதிரியாகக் கருதப்படுகின்றன. இதனிடையே, பாகிஸ்தானின் அணுசக்தித் திட்டம் இந்தியாவைத் தடுப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதாக இஸ்லாமபாத் எப்போதும் கூறி வருகிறது. அதன் கொள்கை குறுகிய மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துவதாக கூறுகிறது. அணு மற்றும் வழக்கமான போர்முனைகள் இரண்டையும் பொருத்தக்கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் (ICBMs), 5,500 கி.மீ.க்கு மேல் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டவை. தற்போது பாகிஸ்தானிடம் ICBMகள் இல்லை. https://athavannews.com/2025/1437071
  10. நடிகை ஸ்ரீரெட்டி சினிமாவில் பழம் தின்று கொட்டை போட்ட ஆள். 😄 அவர் கால் வைக்காத துறையே இல்லைப் போலுள்ளது. 😂 அமைச்சர் உதயநிதியும்... நடிகை ஸ்ரீ ரெட்டியின் வாடிக்கையாளர் என்பதில் இருந்து, ஸ்ரீரெட்டி சர்வதேச லெவலில் புகழ் பெற்ற ஒருவர்.. நமது தமிழ் சினிமாவில் இருப்பது... நமக்கெல்லாம் பெருமைதானே. 🤣
  11. சரியாகச் சொன்னீர்கள். இப்ப இருக்கின்ற இளம் தலைமுறைக்கு.. சுழிச்சுக் கொண்டு, வெட்டி ஆடுற கெட்டித்தனம் குறைவு என்று நினைக்கின்றேன். போன தலைமுறை... மூக்காலை போய் காதாலை வெளியே வருவார்கள்.
  12. அமைதிக்கான நோபல் பரிசுக்கு டொனால் ட்ரம்பின் பெயர் பரிந்துரை! அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்பின் பெயரை சமீபத்தில் பாகிஸ்தான் பரிந்துரைத்தது. ஆனால் பல போர்களை நிறுத்த முயற்சி மேற்கொண்டாலும் தனக்கு நோபல் பரிசு தர மாட்டார்கள் என்று ட்ரம்ப் ஆதங்கத்துடன் தெரிவித்தார். இந்த நிலையில் அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்பின் பெயர் முறைப்படி பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரான கார்ட்டர், நோபல் குழுவிற்கு எழுதிய கடிதத்தில் ட்ரம்பின் பெயரை பரிந்துரை செய்துள்ளார். இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலை முடிவுக்கு வந்த ட்ரம்பின் பங்கு வரலாற்று சிறப்புமிக்கது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார். இதேவேளை 2025-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு இதுவரை 338 வேட்பாளர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் என்று நோபல் குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1437036
  13. உயர்ஸ்தானிகரின் யாழ் விஜயத்தை முன்னிட்டு காட்சிப்படுத்தப்பட்ட பதாகைகள்! ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் வோக்கர் டர்க் (Volker Türk) இன்று யாழிற்கு வருகை தரவுள்ளார். இந்நிலையில் தமிழினப்படுகொலையை வெளிப்படுத்தும் முகமாக யாழ் பல்கலைக்கழக முன்றலில் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1437013
  14. மன்னாரில் தந்தை செல்வாவின் சிலை உடைப்பு! ஒருவர் கைது! மன்னார் நகர மத்தியில் மாவட்டச் செயலகத்திற்கு முன் அமைக்கப்பட்டிருந்த தந்தை செல்வாவின் சிலை இன்று (25) அதிகாலை இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது. தந்தை செல்வாவின் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை முக்கியஸ்தர்கள் இன்று (25) காலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். தந்தை செல்வாவின் உருவச் சிலையில் காணப்பட்ட அவரது தலை முழுமையாக அகற்றப்பட்ட நிலையில் அவரது சிலைக்கு அருகில் இருந்து தலைப்பாகம் மீட்கப்பட்டுள்ளது. சம்பவத்தை அறிந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், இலங்கை தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள்,உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்,மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் ஆகியோர் சம்பவ இடத்தில் பிரசன்னமாகியிருந்தனர். இதுதொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் பொலிஸார் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2025/1437002
  15. துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் சடலங்கள் மீட்பு! மிதெனிய, தொரகொலயா பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளான நிலையில் இரண்டு இளைஞர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 25 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூடு இன்று (25) காலை நடந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டின் நோக்கம், சூப்பாக்கிச் சூடு மேற்கொண்ட நபர்கள் குறித்த விபரம் இன்னும் வெளியாகவில்லை. எவ்வாறெனினும், மூன்று சிறப்பு புலனாய்வு குழுக்கள் மித்தெனிய பொலிஸாருடன் இணைந்து இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. https://athavannews.com/2025/1436982
  16. பகிடிவதை சம்பவம்; தென்கிழக்கு பல்கலையில் 22 மாணவர்கள் இடைநீக்கம்! பகிடிவதை சம்பவத்தைத் தொடர்ந்து 22 மாணவர்களை கல்வி நடவடிக்கைகளில் இருந்து தென்கிழக்கு பல்கலைக்கழக அதிகாரிகள் இடைநீக்கம் செய்துள்ளனர். இது தொடர்பில் பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், புதிய மாணவர்கள் குழு ஒன்று கொடூரமான பகிடிவதை செய்யப்படுவதைக் காட்டும் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து இந்த இடைநீக்கங்கள் அமல்படுத்தப்பட்டன. ஆரம்பகட்ட உள் விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் மாணவர்களை இடைநீக்கம் செய்யும் முடிவு எடுக்கப்பட்டது என்றார். இடைநீக்கம் செய்யப்பட்ட நபர்கள் பொறியியல் பீடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டுகளைச் சேர்ந்த மாணவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கைக்கு மேலதிகமாக, சம்பவம் குறித்து பொலிஸார் முறையான விசாரணையைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பல்கலைக்கழகங்களுக்குள் பகிடிவதை உட்பட அனைத்து வகையான வன்முறைகளையும் தடுக்கும் நோக்கில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நலக்க கலுவேவே ஒரு சிறப்பு பணிக்குழுவை நியமித்துள்ளார். https://athavannews.com/2025/1436991
  17. ஈரான் மீதான தாக்குதல்கள் அணுசக்தி தளங்களை அழிக்கவில்லை -பென்டகன் தகவல். ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்ட வான்வழித் தாக்குதல்களில் இரண்டு அணுசக்தி நிலையங்களை முழுமையாக அழிக்கவில்லை என்று ஒரு புதிய அமெரிக்க உளவுத்துறை அறிக்கை கூறியுள்ளது. இருப்பினும், குண்டுவெடிப்பு மேற்காசிய நாட்டின் அணுசக்தி திட்ட செயற்பாடுகளை சில மாதங்களுக்குள் பின்னுக்குத் தள்ளக்கூடும் என்று தி நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு புலனாய்வு நிறுவனம் (DIA) தயாரித்த அறிக்கை, இரண்டு முக்கிய அணுசக்தி தளங்களான ஃபோர்டோ மற்றும் நடான்ஸ் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று கூறுகிறது. DIA என்பது பென்டகனின் உளவுத்துறைப் பிரிவாகும். மேலும், மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் அமெரிக்க மத்திய கட்டளையுடன் இணைந்து, தாக்குதல்களுக்குப் பின்னர் ஏற்பட்ட சேதத்தை மதிப்பிடுவதற்கு பணியாற்றியது. அறிக்கையின்படி, யுரேனியத்தை செறிவூட்டப் பயன்படுத்தப்படும் முக்கிய உபகரணங்களை சில மாதங்களுக்குள் மீண்டும் இயக்க முடியும். இதன் பொருள் ஈரான் எதிர்பார்த்ததை விட விரைவில் அதன் அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கக்கூடும் என்பதாகும். அமெரிக்க விமானத் தாக்குதல்களுக்கு முன்னர் ஈரான் 400 கிலோ யுரேனியக் குவியலை, 60 சதவீதம் செறிவூட்டப்பட்டதாக மாற்றியதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. தாக்குதல்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட ஃபோர்டோவின் செயற்கைக்கோள் படங்கள், தளத்தின் நுழைவாயிலில் நிலைநிறுத்தப்பட்ட 16 சரக்கு லொறிகளைக் காட்டியது. அவை கையிருப்பை ரகசிய இடங்களுக்கு கொண்டு சென்றிருக்கலாம் என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இது ஈரானின் அணுசக்தி திட்டம் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது என்ற ஜனாதிபதி ட்ரம்பின் கூற்றுக்கு முரணானது. சனிக்கிழமை இரவு தொலைக்காட்சியில் உரையாற்றிய ட்ரம்ப், ஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை மிகப்பெரிய வெற்றியாகப் பாராட்டினார். “இந்தத் தாக்குதல்கள் ஒரு அற்புதமான இராணுவ வெற்றியாகும், இதன் மூலம் ஈரானின் முக்கிய அணுசக்தி செறிவூட்டல் வசதிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன” என்று ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து கூறினார். ஈரானின் மிக முக்கியமான அணுசக்தி தளங்களில் மூன்று, நடான்ஸ், ஃபோர்டோ மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய இடங்களில் உள்ள அணுசக்தி செறிவூட்டல் வசதிகளை அமெரிக்கா அழித்துவிட்டதாகவும் மார்தட்டிக் கொண்டார். ஆனால், பென்டகனின் உள் அறிக்கை வேறுபட்ட கோணத்தை தற்சமயம் வெளிக்காட்டுகிறது. குறிப்பாக ஃபோர்டோ, தாக்குதல்களில் இருந்து தப்பியதற்கான அறிகுறிகளைக் காட்டியதாகவும் அறிக்கை கூறியது. ஃபோர்டோ குறித்து பென்டகன் எச்சரிக்கை ஃபோர்டோ ஈரானின் மிகவும் பாதுகாக்கப்பட்ட வசதிகளில் ஒன்றாகும். இது ஜாக்ரோஸ் மலைகளுக்கு அடியில் சுமார் 45 முதல் 90 மீட்டர் (தோராயமாக 150 முதல் 300 அடி) கடினமான பாறையின் கீழ் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஃபோர்டோவின் நிலத்தடி இருப்பிடம் பென்டகனுக்கு ஏற்கனவே ஒரு கவலையாக இருந்தது. ஜனவரி மாதம் நடந்த ஒரு மாநாட்டில், அமெரிக்காவின் வலிமையான அணுசக்தி அல்லாத குண்டு – 30,000 பவுண்டுகள் எடையுள்ள GBU-57 ‘பதுங்கு குழி வெடிப்பு’ – கூட அந்த வசதியை முழுமையாக அழிக்காது என்று பென்டகனின் உயர் அதிகாரிகள் எச்சரிக்கப்பட்டனர். கடந்த வார இறுதியில் நடந்த தாக்குதலில், B-2 குண்டுவீச்சு விமானங்கள் இந்த GBU-57 குண்டுகளில் 12 குண்டுகளை ஃபோர்டோ மீதும், மேலும் இரண்டு நடான்ஸ் மீதும் வீசின. இதற்கிடையில், அமெரிக்க கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் இஸ்பஹானில் சுமார் 30 டோமாஹாக் ஏவுகணைகளை ஏவியது. அறிக்கையை கடுமையாக சாடிய ட்ரம்ப் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான இராணுவத் தாக்குதல்களை அவமானப்படுத்தியதற்காக நியூயோர்க் டைம்ஸ் மற்றும் சிஎன்என் செய்திச் சேவை ஆகியவற்றை ட்ரம்ப் கடுமையாக சாடினார். “ஈரானில் உள்ள அணு ஆயுத தளங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன! டைம்ஸ் மற்றும் சிஎன்என் இரண்டும் பொதுமக்களால் தாக்கப்படுகின்றன,” என்று அவர் ட்ரூத் சமூக ஊடகத்தளத்தில் பதிவிட்டார். அதேநேரம், வெள்ளை மாளிகையும் உளவுத்துறை மதிப்பீட்டை மறுத்து, அந்த அறிக்கையை “போலி செய்தி” என்று அழைத்தது. வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் ஒரு அறிக்கையில், இந்த அறிக்கை ஜனாதிபதி ட்ரம்பை இழிவுபடுத்துவதற்கும், ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க ஒரு கச்சிதமாக செயல்படுத்தப்பட்ட பணியை நடத்திய துணிச்சலான போர் விமானிகளை இழிவுபடுத்துவதற்கும் ஒரு தெளிவான முயற்சியாகும் – என்று கூறினார். இதேவ‍ேளை ஞாயிற்றுக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில், ஈரான் மீதான தாக்குதல் பணியை வழிநடத்த உதவிய கூட்டுப் படைத் தலைவர்களின் தலைவரான ஜெனரல் டான் கெய்ன், அணுசக்தி தளங்கள் “கடுமையான சேதத்தையும் அழிவையும் சந்தித்துள்ளன” என்று கூறினார். ஆனால், இறுதி சேத மதிப்பீடு இன்னும் முடிக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். https://athavannews.com/2025/1436979
  18. ஈரான் மீதான தாக்குதல்கள் அணுசக்தி தளங்களை அழிக்கவில்லை -பென்டகன் தகவல். ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்ட வான்வழித் தாக்குதல்களில் இரண்டு அணுசக்தி நிலையங்களை முழுமையாக அழிக்கவில்லை என்று ஒரு புதிய அமெரிக்க உளவுத்துறை அறிக்கை கூறியுள்ளது. இருப்பினும், குண்டுவெடிப்பு மேற்காசிய நாட்டின் அணுசக்தி திட்ட செயற்பாடுகளை சில மாதங்களுக்குள் பின்னுக்குத் தள்ளக்கூடும் என்று தி நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு புலனாய்வு நிறுவனம் (DIA) தயாரித்த அறிக்கை, இரண்டு முக்கிய அணுசக்தி தளங்களான ஃபோர்டோ மற்றும் நடான்ஸ் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று கூறுகிறது. DIA என்பது பென்டகனின் உளவுத்துறைப் பிரிவாகும். மேலும், மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் அமெரிக்க மத்திய கட்டளையுடன் இணைந்து, தாக்குதல்களுக்குப் பின்னர் ஏற்பட்ட சேதத்தை மதிப்பிடுவதற்கு பணியாற்றியது. அறிக்கையின்படி, யுரேனியத்தை செறிவூட்டப் பயன்படுத்தப்படும் முக்கிய உபகரணங்களை சில மாதங்களுக்குள் மீண்டும் இயக்க முடியும். இதன் பொருள் ஈரான் எதிர்பார்த்ததை விட விரைவில் அதன் அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கக்கூடும் என்பதாகும். அமெரிக்க விமானத் தாக்குதல்களுக்கு முன்னர் ஈரான் 400 கிலோ யுரேனியக் குவியலை, 60 சதவீதம் செறிவூட்டப்பட்டதாக மாற்றியதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. தாக்குதல்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட ஃபோர்டோவின் செயற்கைக்கோள் படங்கள், தளத்தின் நுழைவாயிலில் நிலைநிறுத்தப்பட்ட 16 சரக்கு லொறிகளைக் காட்டியது. அவை கையிருப்பை ரகசிய இடங்களுக்கு கொண்டு சென்றிருக்கலாம் என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இது ஈரானின் அணுசக்தி திட்டம் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது என்ற ஜனாதிபதி ட்ரம்பின் கூற்றுக்கு முரணானது. சனிக்கிழமை இரவு தொலைக்காட்சியில் உரையாற்றிய ட்ரம்ப், ஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை மிகப்பெரிய வெற்றியாகப் பாராட்டினார். “இந்தத் தாக்குதல்கள் ஒரு அற்புதமான இராணுவ வெற்றியாகும், இதன் மூலம் ஈரானின் முக்கிய அணுசக்தி செறிவூட்டல் வசதிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன” என்று ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து கூறினார். ஈரானின் மிக முக்கியமான அணுசக்தி தளங்களில் மூன்று, நடான்ஸ், ஃபோர்டோ மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய இடங்களில் உள்ள அணுசக்தி செறிவூட்டல் வசதிகளை அமெரிக்கா அழித்துவிட்டதாகவும் மார்தட்டிக் கொண்டார். ஆனால், பென்டகனின் உள் அறிக்கை வேறுபட்ட கோணத்தை தற்சமயம் வெளிக்காட்டுகிறது. குறிப்பாக ஃபோர்டோ, தாக்குதல்களில் இருந்து தப்பியதற்கான அறிகுறிகளைக் காட்டியதாகவும் அறிக்கை கூறியது. ஃபோர்டோ குறித்து பென்டகன் எச்சரிக்கை ஃபோர்டோ ஈரானின் மிகவும் பாதுகாக்கப்பட்ட வசதிகளில் ஒன்றாகும். இது ஜாக்ரோஸ் மலைகளுக்கு அடியில் சுமார் 45 முதல் 90 மீட்டர் (தோராயமாக 150 முதல் 300 அடி) கடினமான பாறையின் கீழ் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஃபோர்டோவின் நிலத்தடி இருப்பிடம் பென்டகனுக்கு ஏற்கனவே ஒரு கவலையாக இருந்தது. ஜனவரி மாதம் நடந்த ஒரு மாநாட்டில், அமெரிக்காவின் வலிமையான அணுசக்தி அல்லாத குண்டு – 30,000 பவுண்டுகள் எடையுள்ள GBU-57 ‘பதுங்கு குழி வெடிப்பு’ – கூட அந்த வசதியை முழுமையாக அழிக்காது என்று பென்டகனின் உயர் அதிகாரிகள் எச்சரிக்கப்பட்டனர். கடந்த வார இறுதியில் நடந்த தாக்குதலில், B-2 குண்டுவீச்சு விமானங்கள் இந்த GBU-57 குண்டுகளில் 12 குண்டுகளை ஃபோர்டோ மீதும், மேலும் இரண்டு நடான்ஸ் மீதும் வீசின. இதற்கிடையில், அமெரிக்க கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் இஸ்பஹானில் சுமார் 30 டோமாஹாக் ஏவுகணைகளை ஏவியது. அறிக்கையை கடுமையாக சாடிய ட்ரம்ப் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான இராணுவத் தாக்குதல்களை அவமானப்படுத்தியதற்காக நியூயோர்க் டைம்ஸ் மற்றும் சிஎன்என் செய்திச் சேவை ஆகியவற்றை ட்ரம்ப் கடுமையாக சாடினார். “ஈரானில் உள்ள அணு ஆயுத தளங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன! டைம்ஸ் மற்றும் சிஎன்என் இரண்டும் பொதுமக்களால் தாக்கப்படுகின்றன,” என்று அவர் ட்ரூத் சமூக ஊடகத்தளத்தில் பதிவிட்டார். அதேநேரம், வெள்ளை மாளிகையும் உளவுத்துறை மதிப்பீட்டை மறுத்து, அந்த அறிக்கையை “போலி செய்தி” என்று அழைத்தது. வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் ஒரு அறிக்கையில், இந்த அறிக்கை ஜனாதிபதி ட்ரம்பை இழிவுபடுத்துவதற்கும், ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க ஒரு கச்சிதமாக செயல்படுத்தப்பட்ட பணியை நடத்திய துணிச்சலான போர் விமானிகளை இழிவுபடுத்துவதற்கும் ஒரு தெளிவான முயற்சியாகும் – என்று கூறினார். இதேவ‍ேளை ஞாயிற்றுக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில், ஈரான் மீதான தாக்குதல் பணியை வழிநடத்த உதவிய கூட்டுப் படைத் தலைவர்களின் தலைவரான ஜெனரல் டான் கெய்ன், அணுசக்தி தளங்கள் “கடுமையான சேதத்தையும் அழிவையும் சந்தித்துள்ளன” என்று கூறினார். ஆனால், இறுதி சேத மதிப்பீடு இன்னும் முடிக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். https://athavannews.com/2025/1436979

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.