Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. இங்கிலாந்தின் விசா கட்டுப்பாடுகளில் இலங்கையும் உள்ளடக்கம்! பாகிஸ்தானியர்கள், நைஜீரியர்கள் மற்றும் இலங்கையர்கள் உள்ளிட்ட நாட்டினரிடமிருந்து வேலை மற்றும் படிப்பு விசா விண்ணப்பங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை பிரித்தானிய உள்துறை அலுவலகம் எடுத்துள்ளது. பிரித்தானிய அரசாங்கம் இடம்பெயர்வு புள்ளிவிவரங்களைக் குறைக்க முயற்சிப்பதால், குடியேற்ற திருத்தத்தின் ஒரு பகுதியாக இந்தத் திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று நம்பகத் தகுந்த வட்டாரங்களை மேற்கொள்ளிட்டு டைம்ஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. தொழிலாளர் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதாக உறுதியளித்தது. கடந்த மாதம் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள், பிரித்தானியாவுக்குள் முக்கிய விசா வழிகளுக்கு விண்ணப்பிக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை ஒரு வருடத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலாகக் குறைந்துள்ளதாகக் குறிப்பிடுகின்றன. தொழிலாளர், படிப்பு மற்றும் குடும்ப விசா பிரிவுகளில் விண்ணப்பங்கள் மார்ச் 2025 வரையிலான ஆண்டில் மொத்தம் 772,200 பேரை உள்ளடக்கியது. இது முந்தைய 12 மாதங்களில் கிட்டத்தட்ட 1.24 மில்லியனை விட 37% குறைவு என்று பிரித்தானிய உள்துறை அலுவலக தரவு தெரிவிக்கிறது. இந்த சரிவு, 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முந்தைய கன்சர்வேடிவ் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சட்ட இடம்பெயர்வு விதிகளில் ஏற்பட்ட மாற்றங்களை பிரதிபலிக்கும். இதில் வெளிநாட்டு பராமரிப்பு தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களை அழைத்து வருவதற்கான தடை மற்றும் திறமையான தொழிலாளர்களுக்கான சம்பள வரம்பில் £38,700 ஆக கூர்மையான உயர்வு ஆகியவை அடங்கும். https://athavannews.com/2025/1430791
  2. உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்கெடுப்பு ஆரம்பம்! இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களுக்கான 8,287 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு ஆரம்பமாகி நடை பெற்றுவருகின்றது அதன்படி இன்று (செவ்வாய்கிழமை) காலை 7.00மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4.00 மணி வரை இடம்பெறவுள்ளது இதன்படி வாக்காளர்கள் அனைவரும் உரிய ஆவணங்களுடன் வாக்களிப்பு மத்திய நிலையங்களுக்கு சென்று, உரிய நேரத்தில் தமது வாக்குகளைப் பதிவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று நாடு முழுவதும் 13,759 வாக்களிப்பு மத்திய நிலையங்களில் ஆரம்பமாகியுள்ளது. வாக்குப்பதிவு மாலை 4:00 மணி வரை நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர், 5,783 மத்திய நிலையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது 339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக இந்தத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக 1 கோடியே 71 இலட்சத்து 56,338 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இந்த முறை தேர்தலில், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களிலிருந்து 75,589 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 8,287 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இதற்கிடையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை கண்காணிக்க சுமார் 3,000 கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பெஃப்ரல் (PAFFREL) அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டிஆராச்சி தெரிவித்தார். இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 65,000 இற்கும் மேற்பட்ட பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது தேர்தல் சட்டங்களை மீறுவோர் தொடர்பாக சட்டத்தை கடுமையாக அமல்படுத்துவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் காலத்தில் ஏற்படக்கூடிய பேரிடர் நிலைமைகள் குறித்து அறிவிப்பதற்கும், நிவாரணம் வழங்குவதற்கும் விசேட கட்டுப்பாட்டு அறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார் https://athavannews.com/2025/1430704
  3. ட்ரோன் தாக்குதல்; மொஸ்கோவில் மூடப்பட்ட விமான நிலையங்கள்! மொஸ்கோவை குறிவைத்து உக்ரேன் தொடர்ந்து இரண்டாவது இரவாக இரவு முழுவதும் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தலைநகரின் நான்கு முக்கிய விமான நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன என்று ரஷ்யாவின் விமானப் போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பான ரோசாவியாட்சியா டெலிகிராமில் தெரிவித்துள்ளது. மொஸ்கோவின் மேயர் செர்ஜி சோபியானின், சமூக ஊடகங்களில் குறைந்தது 19 உக்ரேனிய ட்ரோன்கள் “வெவ்வேறு திசைகளில் இருந்து” நகரத்தை அடைவதற்கு முன்பே அழிக்கப்பட்டதாகக் கூறினார். சில ட்ரோன்களின் பாகங்கள் நகரத்திற்குள் செல்லும் முக்கிய நெடுஞ்சாலைகளில் ஒன்றில் விழுந்ததாகவும், ஆனால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார். தாக்குதல் குறித்து உக்ரேன் இன்னும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. மொஸ்கோவைப் போலவே, பென்சா மற்றும் வோரோனேஜ் உள்ளிட்ட பிற ரஷ்ய நகரங்களின் ஆளுநர்களும் செவ்வாய்க்கிழமை (06) அதிகாலை இரவு வரை ட்ரோன்களால் குறிவைக்கப்பட்டதாகக் கூறினர். ரஷ்ய இராணுவ வலைப்பதிவர்களின் உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகள் மொஸ்கோவின் தெற்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் ஜன்னல்கள் ட்ரோன் தாக்குதல்களால் சேதமடைந்ததை காண்பிக்கின்றன. உக்ரேனின் ட்ரோன் தாக்குதலை ரஷ்யா தொடர்ந்து இரண்டாவது இரவு நடத்தியதாக அறிவித்துள்ளது. ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு திங்களன்று ஒரே இரவில் 26 உக்ரேன் ட்ரோன்களை அழித்ததாகக் கூறியது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உக்ரேன் மீது ரஷ்யா முழு அளவிலான படையெடுப்பை நடத்தியதிலிருந்து, கீவ் மொஸ்கோ மீது பல ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. மார்ச் மாதத்தில் அதன் மிகப்பெரிய தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்திற்குள் உக்ரேன் ஊடுருவ முயற்சிப்பதாக திங்களன்று வெளியான செய்திகளுக்குப் பின்னர் இந்த தாக்குதல் வந்துள்ளது. https://athavannews.com/2025/1430712
  4. 👉 https://www.facebook.com/reel/1142556031222435 👈 தந்தை... பிள்ளைக்கு ஐஸ் கிறீம் கொடுக்கப் படாது என்று எவ்வளவு முன் ஏற்பாட்டுடன் செல்கிறார் என பாருங்கள். அப்படி இருந்தும் ஐஸ்கிரீம் காரன் ஒலி எழுப்புகின்றான். அதற்கும் தயாராகவே... குழந்தையின் காதை, சத்தம் கேட்காத வண்ணம் மூடி உள்ளார்.
  5. நீட் தேர்வு எழுத்துவதற்குரிய மேல் சட்டை இங்கு விற்பனைக்கு உள்ளது. 😂
  6. இவங்கள் சூனியம் வைப்பாங்கள் என்றுதான்.... சீனாக்காரன் வேலியை உயர்த்தி போட்டிருக்கின்றான் போலுள்ளது. அப்ப ... இவை மினைக்கெட்டு வைத்த சூனியத்துக்கு பவர் இல்லாட்டிலும் காரியமில்லை, ரிட்டர்ன் ஆகி விட்டது என்றால் ஆபத்து அல்லவா. இதைப் பார்த்துத்தான்... "சொந்த செலவில் சூனியம் வைக்கிறது" என்ற பழமொழி தமிழில் வந்தது என நினைக்கின்றேன். ஆய்வாளர் மணி, ரவீந்திரன் துரைசாமி, மாரிமுத்து, சவுக்கு சங்கர் எல்லாரும் இப்ப எங்கே. அவர்களின் காணொளிகளை பார்த்து வருடக் கணக்காகி விட்டது. இன்னும் அவித்துக் கொட்டிக் கொண்டு இருக்கின்றார்களா அல்லது சாயம் வெளுத்து.. ஓய்விற்கு போய் விட்டார்களா. 😂🤣
  7. இந்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்... சீன எல்லையில், சூனியம் வைத்த மாதிரி... பாகிஸ்தான் எல்லையில் சூனியம் வைக்க முடியாதா...? 😂
  8. அரகலய போராட்டத்தின் போது... கோத்தபாய வசித்த ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிய தருணம்... அங்கிருந்து ஒரு கோடி ரூபாயை போராட்டக்காரர்கள் கண்டு பிடித்து, அதனை நீதிமன்றில் ஒப்படைத்தார்கள். கணக்கில் வராத அந்த ஒரு கோடி ரூபாய் கோத்தாவுக்கு எப்படி கிடைத்தது என்று இதுவரை எவரும் விசாரணை நடத்தவில்லை. சட்டம் எல்லாம்... அப்பாவி மனிதர்களுக்குத்தான். திமிங்கிலங்கள் வழமை போல தப்பிக் கொண்டே இருக்கும்.
  9. பருத்தித்துறை கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம்! யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்கரை பகுதியில் பெண்ணொருவரின் சடலம் நேற்றைய தினம் (04) கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலம் தும்பளை பகுதியை சேர்ந்த 36 வயதுடைய பெண்ணுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது. சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். ஒரு பிள்ளையின் தாயான குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் , பிள்ளையுடன் அவர் தும்பளை பகுதியில் வசித்து வந்துள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. https://athavannews.com/2025/1430574
  10. வவுனியாவில் கொள்ளையிடப்பட்ட 80 இலட்சம் பெறுமதியான நகை மீட்பு! வவுனியாவில் 80 இலட்சம் பெறுமதியான 35 பவுன் தங்க நகைகளினை மீட்டுள்ளதாக வவுனியா நெளுங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பாக வவுனியா கணேசபுரம் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து 35 பவுன் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டதாக முறைப்பாடு கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் இக்கொள்ளை சம்பவம் தொடர்பாக வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி டி.எம்.ஏ.சமரகோன் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டு விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இந் நிலையில் நேற்று மாலை கொக்குவெளி பகுதியில் வைத்து 29 வயது இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவரிடம் இருந்து 35 பவுன் தங்க நகைகளும் மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுங்குளம் பொலிஸாரால் முன்னெடுத்துவருவதுடன் இன்றையதினம் சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1430625
  11. பகிடிவதை சம்பவம்; சப்ரகமுவ பல்கலையின் 4 மாணவர்களுக்கு விளக்கமறியல்! பகிடிவதை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நால்வர் எதிர்வரும் மே 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பலங்கொடை, நீதிவான் நீதிமன்றில் இன்று (05) அவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நீதிவான் இந்த உத்தரவினை பிறப்பித்தார். அண்மையில் சக மாணவர் ஒருவரின் மரணம் குறித்து நடந்து வரும் விசாரணைகள் தொடர்பாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (சிஐடி) நேற்று (04) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இது ஒரு பகிடிவதை சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது. ஏப்ரல் 29 அன்று, சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒருவர், ஒரு பகிடிவதை சம்பவத்தால் மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. இறந்தவர் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பொறியியல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த 23 வயதான சரித் தில்ஷான் என்ற இரண்டாம் ஆண்டு மாணவன் ஆவார். மே 1 ஆம் திகதி பல்கலைக்கழகத்தின் மற்றொரு மாணவர் சமனலவேவா பொலிஸ் நிலையத்தில், குறித்த மாணவன் பகிடிவதை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி முறைப்பாடு அளித்தார். இந்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை (மே 2), சமனலவேவா பொலிஸார் 20 பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர். இதற்கிடையில், சரித் தில்ஷான் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் பகிடிவதை சம்பவம் தொடர்பான விசாரணை, மே 3 ஆம் திபதி, பதில் பொலிஸ்மா அதிபரின் (IGP) அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது. https://athavannews.com/2025/1430632
  12. பொலிஸ்மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்ட ஆபரணங்கள் குறித்து நீதிமன்றம் உத்தரவு! 2009ஆம் ஆண்டு இறுதிகட்ட போர் நிறைவிற்கு வந்த காலப்பகுதியில் இலங்கை இராணுவத்தால் விடுதலைப்புலிகளிடமிருந்து மீட்கப்பட்டு பொலிஸ் மா அதிபரிடம் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களை உடனடியாக மதிப்பீட்டிற்கு அனுப்புமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த நகைகளை தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகார சபைக்கு அனுப்பிச் சோதித்து அறிக்கைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் துறை சார்பாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர், கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவுகளை பிறப்பித்தார். குறித்த ஆபரணங்கள் கடந்த 02ஆம் திகதி கொழும்பு பத்தரமுல்லையில் அமைந்துள்ள இலங்கை இராணுவத்தின் தலைமையகத்தில் வைத்து பொலிஸ் மா அதிபரிடம் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டன. இதன்போது பதில் பொலிஸ் மா அதிபரினால் பொறுப்பேற்கப்பட்ட குறித்த ஆபரணங்கள் நீதிமன்ற உத்தரவுக்கமைய தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையினால் அதன் பெறுமதி மதிப்பீடு செய்யப்பட்டதன் பின்னரே இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்படுமென தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1430666
  13. மனைவி சமைக்கும் பிரியாணி சரியில்லை என்றால்... கணவன் பிரியாணியை... தனக்கு ருசியாய் சமைக்க வேண்டியதுதானே. 41 வயது கணவனுக்கு 27 வயது மனைவி. இதுவே... போதும் என்று சந்தோசப் படுடா... மூ*வி.
  14. பாகிஸ்தானுக்குச் செல்லும் நீர் நிறுத்தம்! பஹல்காம் தாக்குதலின் எதிரொலியாக ஜம்மு – காஷ்மீரில் செனாப் நதிக்கு குறுக்கேவுள்ள பாக்லிஹார் மற்றும் சலால் அணைகளில் இருந்து பாகிஸ்தானுக்கு வெளியேறும் நீர் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பிரபல சுற்றுலா தலத்தில் கடந்த 22ஆம் திகதி லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான The Resistance Front (TRF) நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். குறித்த தாக்குதல் சம்பவம் சர்வதேச ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூழும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்திய அரசு, 1960ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இரத்து செய்வதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, ஜம்மு – காஷ்மீரில் ரம்பன் மாவட்டத்தில் செனாப் நதிக்கு குறுக்கேவுள்ள பாக்லிஹார் நீர்மின்சார அணையின் அனைத்து மதகுகளும் மூடப்பட்டுள்ளதாகவும், இதனால் செனாப் நதியின் வழித்தடம் நீரின்றி காய்ந்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ரியாசி மாவட்டத்தில் சலால் அணையின் மதகுகளும் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வடக்கு காஷ்மீரில் ஜீலம் நதிக்கு குறுக்கே உள்ள கிஷன்கங்கா அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரும் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ஜம்மு காஷ்மீர் மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளதுடன் அரசாங்கத்திற்கு தாம் பக்க பலமாக இருப்பதாகவும் உறுதியளித்துள்ளனர். இதனிடையே, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஜமியத்–உலமா–,-ஹிந்த்-ன் தலைவர் அர்ஷத் மதானி, சிந்து நதி நீர் நிறுத்தத்துக்கு அதிருப்தி தெரிவித்துள்ளார். ‘யாராவது தண்ணீரை நிறுத்தினால், அதை நிறுத்தட்டும். இந்த ஆறுகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கின்றன, அவற்றின் தண்ணீரை எங்கே கொண்டு செல்வீர்கள்? இது எளிதானது அல்ல. வெறுப்பின் ஆட்சியாக அல்லாமல், அன்பின் ஆட்சியாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நான் ஒரு முஸ்லிம், நான் இந்த நாட்டில் வாழ்கிறேன். ஆனால் இங்கு ஊக்குவிக்கப்படும் விஷயங்கள் நாட்டிற்கு ஏற்றவை அல்ல என்பதை நான் அறிவேன்’ என்று தெரிவித்துள்ளார். இந்த கருத்துக்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது. சிந்து நதிநீர் ஒப்பந்தத்துக்கு எதிராக நதிநீரை திருப்பிவிட இந்தியா மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியும் போர் நடவடிக்கையாகவே கருதப்படும் என்று பாகிஸ்தான் அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1430624
  15. மயிலே... மயிலே... என்றால், இறகு போடாது. 😂 உடான்ஸ் சாமியார்தான்... ஏதாவது யாகம் நடத்தி, இவங்களை சண்டை பிடிக்க வைக்க வேண்டும். 🤣
  16. 🎤 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும்... இந்த விளையாட்டில் கலந்து கொண்டு, உலகச் சாதனை படைக்க ஊக்கம் கொடுக்க வேண்டும். 😂
  17. பல்கலை மாணவன் தற்கொலை; நால்வர் கைது! சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நான்கு பேர் குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அண்மையில் பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் பகிடிவதை சம்பவத்தால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் விடயம் தொடர்பிலேயே இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உயிரிழந்தவர் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பொறியியல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த 23 வயது இரண்டாம் ஆண்டு மாணவன் ஆவார். குறித்த வழக்கு தொடர்பான விசாரணை குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கடந்த ஏப்ரல் 29 ஆம் திகதி சமனலவேவ பொலிஸ் நிலையத்தில் கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களில் 20 பேரிடமிருந்து வாக்குமூலங்களைப் பெற சமனலவேவ பொலிஸ் நிலையம் 2 ஆம் திகதி நடவடிக்கை எடுத்தது. கைது செய்யப்பட்ட மாணவர்கள் இன்று (5) பலாங்கொடை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1430512
  18. உலக சாதனை படைத்த மாலைதீவு ஜனாதிபதி! மாலைதீவுகளின் ஜனாதிபதி முகமது முயிஸு( Mohamed Muizzu) 15 மணிநேரம் ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தி உலக சாதனை படைத்துள்ளார். இதனை அவரது அவரின் அலுவலகம் நேற்றைய தினம் உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு தொடர்சியாக 14 மணிநேரம் 54 நிமிடங்கள் இடம்பெற்றதாகவும், நடுநடுவே தொழுகைக்காக சிறிது நேரம் நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த சம்பவமானது ஓர் ஜனாதிபதி நிகழ்த்திய உலகச் சாதனையாகப் பார்க்கப்படுகின்றது. முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டில் உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, 14 மணிநேரம் செய்தியாளர் சந்திப்பு நடத்தி உலக சாதனை படைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1430540
  19. அல்காட்ராஸ் சிறைச்சாலையை மீண்டும் திறக்க ட்ரம்ப் உத்தரவு! கலிபோர்னியா கடற்கரையில் அமைந்துள்ள ஒரு தீவில் உள்ள முன்னாள் சிறைச்சாலையான அல்காட்ராஸை (Alcatraz) மீண்டும் திறந்து விரிவுபடுத்த தனது அரசாங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை (05) தெரிவித்தார். இது குறித்து சமூக ஊடகமான ட்ரூத் தளத்தில் பதிவிட்ட அவர், அல்காட்ராஸ் சிறைச்சாலை மீண்டும் திறக்கப்படுவது “சட்டம், ஒழுங்கு மற்றும் நீதியின் அடையாளமாக” செயல்படும் என்று அவர் கூறினார். அல்காட்ராஸில் உள்ள கூட்டாட்சி சிறைச்சாலை 1963 இல் மூடப்படுவதற்கு முன்பு அல் கபோன் போன்ற மோசமான அமெரிக்க குற்றவாளிகளை வைத்திருந்தது. இது இப்போது சான் பிரான்சிஸ்கோவின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். புளோரிடாவிலிருந்து வெள்ளை மாளிகைக்குத் திரும்பிய ட்ரம்ப் இது தொடர்பில் செய்தியாளர்களிடம் கூறுகையில், சிறைச்சாலையை மீண்டும் திறப்பது “எனக்கு இருந்த ஒரு யோசனை” என்றும், அதைச் செயல்படுத்த முடிவு செய்ததாகவும் கூறினார். “இது சட்டம் ஒழுங்கின் சின்னம்,” என்று அவர் கூறினார். தீவின் இருப்பிடம், குளிர்ந்த நீர் மற்றும் வலுவான நீரோட்டங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அல்காட்ராஸ் அமெரிக்காவின் மிகவும் பாதுகாப்பான சிறைச்சாலையாகக் கருதப்படுகிறது. அல்காட்ராஸிலிருந்து வெற்றிகரமாக தப்பித்தவர்கள் யாரும் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்படவில்லை. இருப்பினும் சிறைச்சாலையில் இருந்து தப்பிய ஐந்து கைதிகள் காணாமல் போனதாகவும், நீரில் மூழ்கி இறந்ததாகவும் கருதப்படுகிறது. https://athavannews.com/2025/1430528
  20. இனக்கலவரம் வந்தால்.. தமிழனின் சொத்துக்களை கொள்ளையடிப்பதிலாகட்டும், கள்ளக்காணி பிடிப்பதிலாகட்டும், போரில் தமிழன் சேமித்த நகைகளை திருடுவதிலாகட்டும், தமிழன் விட்டுச் சென்ற வீடுகளில் உள்ள விலை உயர்ந்த பொருட்களை திருடுவதிலாகட்டும் எங்கும்.... மற்றவனின் சொத்துக்களை திருடுவது தான்... இந்த இனத்தின் குணம். திருடித் தின்னப் பிறந்தவர்கள். வெட்கம் கெட்டதுகள்.
  21. வெளிநாட்டு திரைப்படங்களுக்கு ட்ரம்ப் 100% வரி! உலகெங்கிலும் உள்ள நாடுகளுடன் வர்த்தக மோதல்களை அதிகரித்து வருவதால், வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு 100% வரி விதிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உள்நாட்டு திரைப்படத் துறை “மிக விரைவான மரணத்தை” சந்தித்து வருவதால், வரி விதிக்கும் செயல்முறையைத் தொடங்க அமெரிக்க வர்த்தக பிரதிநிதிக்கு அதிகாரம் அளிப்பதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஜனவரி மாதம் வெள்ளை மாளிகைக்குத் திரும்பியதிலிருந்து, ட்ரம்ப் உலகெங்கிலும் உள்ள நாடுகள் மீது வரிகளை விதித்துள்ளார். வரிகள் அமெரிக்க உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் மற்றும் தொழில் வாய்ப்புகளை பாதுகாக்கும் என்று அவர் குறிப்பிடுகிறார். ஆனால், இதன் விளைவாக உலகப் பொருளாதாரம் குழப்பத்தில் தள்ளப்பட்டுள்ளது. மேலும் உலகம் முழுவதும் பொருட்களின் விலைகள் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2025/1430534

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.