Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. என்ன இழவோ… தெரியவில்லை, சாமம் 12 மணிக்கு முழிப்பு வந்திடுது. இனி… திரும்ப நித்திரை வர மூன்று மணி ஆகும். சரி… சரி… நீங்கள் இன்னும் நித்திரை கொள்ளவில்லையா, அல்லது… ஒண்டுக்கு இருக்க எழும்பினீங்களா. 🤣
  2. பொய் சொன்னால்… சாமி கண்ணை குத்தும். 😂 இலங்கை முஸ்லீம்களின் யோக்கியதை, எனக்கு வடிவாய் தெரியும். நீங்கள் அவர்களுக்கு, வெள்ளை அடிக்க வேண்டாம். 🤣
  3. நீங்கள் றீல் விடுகிறீர்கள். 🤣 கனடா ஹரி ஆனந்த சங்கரி, நம்ம கிளிநொச்சி உடும்பு ஆனந்தசங்கரியின் மகன் என்று பலரும் சொல்கிறார்கள். அதன் உண்மைத் தன்மை பற்றி தெரிந்தவர்கள் கூறினால் நல்லது. சோழ அரச வம்ச வாரிசு என்பதெல்லாம்... உடான்ஸ் சாமியாரின் உருட்டு. 😂
  4. தனது இரண்டு பிள்ளைகளையும் சிங்களவருக்கு திருமணம் முடித்து கொடுத்தவர்... சிங்களவர்களுடன் வாழ்வது பெருமை என்று சொன்ன சுமந்திரன், இப்போ... தேர்தல் நேரம், இனப்பரம்பல் பற்றி கதைத்து, மக்களை முட்டாள் ஆக்கப் பார்க்கின்றாரா? உங்களது அரசியல் சித்து விளையாட்டு எல்லாம்... அரதப் பழசு. இப்போ... மக்கள் உசாராகி விட்டார்கள், இனியும் மக்களின் காதில் பூ சுற்றலாம் என நினைத்தால்.... உங்களைப் போன்ற முட்டாள்கள் வேறு எவரும் இருக்க முடியாது.
  5. ஹரி ஆனந்தசங்கரி நாட்டுப் பற்று உள்ளவர். அத்துடன் திறமைசாலி. அவர் மீண்டும் அமைச்சராக வர வேண்டும் என்பதே எனது விருப்பம்.
  6. 👉 https://www.facebook.com/reel/536881486084084 👈 👆 கண் முழியால்... பாகிஸ்தான்காரனுக்கு பயம் காட்டும் இந்திய இராணுவம். 😂
  7. நான்... பியர் குடிப்பதை நிறுத்தி, நான்கு வருடமாகி விட்டது ஈழப்பிரியன். இப்ப... ஒன்லி மில்க் தான் குடிப்பது. 😂
  8. செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு அடுத்த மாதம் 15ஆம் திகதி ஆரம்பம்! யாழ்ப்பாணம் – செம்மணி சிந்துப்பாத்தி மயானத்தில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில், எதிர்வரும் 15ஆம் திகதி அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்துள்ளார். செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் தலைமையில் நேற்று நடைபெற்றது. கலந்துரையாடலில் நல்லூர் பிரதேச சபையின் பிரதிநிதிகள், சட்டமருத்துவ அதிகாரிகள், பொலிஸார், என்புச் சிதிலங்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸாரிடம் முறையிட்ட தரப்புகள் கலந்துகொண்டனர். புதைகுழியை அகழ்வதற்கான நிதி மத்திய அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதி அகழ்வுப் பணிகளை மேற்கொள்ளவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி ஆய்வுப் பணிகளை முன்னெடுத்த, மூத்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ராஜ் சோமதேவ , இதுதொடர்பான ஆய்வை மேற்கொள்வதற்குத் தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்தார். இந்நிலையில் எதிர்வரும் 3ஆம் திகதி ஆரம்பகட்ட கள ஆய்வுப் பணிகளையும் முன்னெடுக்கவுள்ளார். சிந்துப்பாத்தி மயானத்தில் இருந்து இதுவரை மீட்கப்பட்ட 40 மனித எச்சங்களில், இரண்டு விலங்குகளின் என்புகள் எனவும் ஏனைய அனைத்தும் மனித என்புத் தொகுதிகளுடன் தொடர்புடையவை என்ற விடயமும் ஏற்கனவே நீதிமன்றின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1430074
  9. சிறுவர்களின் மரணம் குறித்து பிரேத பரிசோதனை மேற்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானம் ! திடீரென உயிரிழக்கும் ஐந்து வயதுக்குக் குறைவான சிறுவர்களின் மரணத்துக்கு காரணம் கண்டறியப்படவில்லை என்றால் குறித்த சிறுவர்களின் சடலத்தை பிரேத பரிசோதனைக்குட்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (29) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்போது சுகாதார அமைச்சின் இந்தத் தீர்மானத்துக்கு எதிரான ஆட்சேபனை எதுவும் இருக்குமாயின் அந்தக் குழுவில் சமர்ப்பிக்க முடியுமென்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தார். அத்துடன் ”தாய், சேய் சுகாதாரம் தொடர்பில் ஆசிய நாடுகளில் உயர்தரத்தை கொண்ட நாடாக இலங்கை விளங்குவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். எனினும் கடந்த 2022ஆம் ஆண்டு 1,800 சிறுவர்கள் அகால மரணமடைந்துள்ளனர் எனவும், அவர்களில் ஐந்து வயதுக்கு குறைவாக 3,300 சிறுவர்கள் காணப்படுகின்றனர் எனவும், இது மிகவும் அபாயகரமான நிலைமையாகும் எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் இதுதொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாகவும், உலக நாடுகள் மத்தியிலும் இதுதொடர்பில் விதிமுறைகள் இருக்கின்றன எனவும், அதற்கமைய, உயிரிழப்புக்கான காரணத்தை அறியாத, ஐந்து வயதுக்கு குறைவான சிறுவர்களின் மரணங்கள் தொடர்பில் பிரேத பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்பது சுகாதார அமைச்சின் பரிந்துரையாகும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அத்துடன் காரணத்தை கண்டறியாமல் அந்த உயிரிழப்பை கைவிட்டால் அவர்களின் உயிரிழப்பு வீதம் அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தாய்மாரின் உயிரிழப்பு தொடர்பில் முறையான பரிசோதனைகளை மேற்கொண்டு, முறையான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து, அந்த உயிரிழப்புக்கான காரணங்களை கண்டறிவதனூடாகவே தாய்மாரின் உயிரிழப்புகளை தாம் மட்டுப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1430077
  10. சுகாதார பரிசோதகர், ஆறாயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்டு... இருந்த நல்ல வேலையை இழந்து விட்டார்.
  11. இலங்கை முஸ்லீம்கள் ஏன் இன்னும், இந்தியத் தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை. சிலவேளை.... வழக்கம்போல் வரும் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை முடிந்த பின் நடத்தலாம் என்று இருக்கின்றார்களோ.
  12. அமெரிக்கா.... இவர்களுக்கு இடையில் புகுந்து பேச்சு வார்த்தை நடத்தினால்... நிச்சயம் இரண்டு பேரும் சண்டை பிடிப்பாங்கள். 😂 🤣
  13. விரிவான தகவலுக்கு நன்றி நிழலி. இங்கும் பல நிறுவனங்கள் ஐ.ரி. சம்பந்தமான வேலைகள் செய்ய இந்தியாவில் இருந்து பெருமளவிலான இந்தியர்களை வேலைக்கு எடுத்துள்ளது. அதிலும் பெரும்பாலானோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். ஈழத்தவர்களின் கோவில் பூசை நாட்களில்... நிறையப் பேர் வருவார்கள். அவர்களைப் பிடித்து சாமி தூக்க விட்டால் மிகுந்த மகிழ்ச்சியுடன் கோவில் பணிகளை செய்வார்கள். இந்தியாவில் தம்மை சாமிக்கு கிட்டவே விட மாட்டார்கள் என்று சொல்வார்கள். இங்கு அவர்களை சாமி தூக்க விடுவதால் அவர்களுக்கு நல்ல புளுகம். அவர்களுடன் வேலை செய்யும் மற்றைய வட இந்தியர்களையும் கூட்டி வருவதால்... கோயில் எப்போதும் களை கட்டியபடி இருக்கும். 🙂 இப்போது எம்மவர்களை விட... அவர்களின் வருகை அதிகமாக உள்ளதை காணக் கூடியதாக உள்ளது.
  14. ஒரு வயதான அம்மா துவக்கால் சுட்டுவிட்டா. இதுதான் பரபரப்பாக பொலிசுக்கு வந்த தொலைபேசி. அதைவிடப் பெரிய அதிர்ச்சி... அவ சுட்டுக் கொன்றது, அவவின் சொந்தக் கணவனை.😳 பொலிசாருக்கு டென்ஷனால் தலை கிறுகிறுத்தது. ஏனென்றால் அவ கொன்ற காரணம்......🥶 அவ தனது வீட்டில், தண்ணீரால் கழுவிக் கொண்டிருந்த போது, வெளியே சென்ற கணவன் கழுவிய தரையில் காலடி எடுத்து வைத்து விட்டார் என்பதற்காக.🧐🥺 அதிர்ச்சி அடைந்த பொலீஸ் அதிகாரி, உடனே ரேடியோ தொலைபேசி மூலம் தனது பொலிஸ் நிலையத்துக்கு தொடர்பு கொண்டு உடனடியாக பொலிசாரை அங்கு சென்று அந்த அம்மாவை கைது செய்யும் படி உத்தரவிட்டார்.😉🧐 நீண்ட நேரமாயும் போன பொலிசாரைக் காணவில்லை. குழம்பிப் போன பொலீஸ் அதிகாரி, தொலைபேசியில் கோபமாக..... " இன்னுமா கைது செய்யவில்லை என்று உறுமினார்.😡 அதற்கு அங்கு போன பொலிஸார் சொன்னார்கள்......🤭 " நோ சேர்... இன்னும் இல்லை. கழுவிய தரை, இன்னும் காயவில்லை..!😁😄😂 Rj Prasath Santhulaki
  15. யாழ்ப்பாண மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை விட, கனடாவில் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகம். 😂 🤣
  16. தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி நிழலி. மூன்று இலங்கைத் தமிழர்களும், ஒரு தமிழக தமிழருமாக... நான்கு தமிழர்கள் கனடா பாராளுமன்றத்தை அலங்கரிப்பது.. மகிழ்ச்சியுடன் பெருமையாகவும் உள்ளது. இம்முறைதானா அதிக தமிழர்கள் தெரிவாகி உள்ளார்கள். அல்லது முன்பும் பலர் தெரிவு செய்யப்படு இருந்தார்களா.
  17. அவசரப் படாதீர்கள் சாத்தான். மா... புளிச்சுக் கொண்டு இருக்கின்றது. எப்படியும் இன்று இரவு சண்டை தொடங்கும் என்று வெளிநாட்டு ஊடகங்களில் எதிர்வு கூறுகின்றார்கள். நீங்கள்... சண்டையை உன்னிப்பாக அவதானிக்க, சோளன் பொரி (பொப் கோர்ன்) வாங்கி வைத்து இருங்கள். 😂
  18. //ஜோனீட்டா நாதன் அவர்கள் வரலாற்றுப் பெருமை வாய்ந்த முறையில் முதன்முறையாக பொதுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளார். // வென்றவர்களில் இருவர் இலங்கைத் தமிழர்கள், ஜோனீட்டா நாதன் தமிழகத் தமிழர்.
  19. புரிந்து விட்டது இவர்தான் அந்தப் பையன். மலரும் நினைவுகள். 😂
  20. இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவு மந்திரிகளுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை! இந்தியா, பாகிஸ்தான் விவகாரம் குறித்து இருநாட்டு வெளியுறவு மந்திரிகளுடன் அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் மார்க்கோ ரூபியோ பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த 22ஆம் திகதி தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம், சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீவிரவாத தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்திய அரசு அறிவித்ததுடன் பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகளை இரத்து செய்யப்படுவதாகவும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் நாட்டவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் இந்திய மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதே போல் பாகிஸ்தான் அரசு, தனது வான்வெளியில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாகவும், சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாகவும் அறிவிப்புகளை வெளியிட்டது. அத்துடன் இருநாட்டு அரசுகளும் தங்கள் இராணுவ படைகளை தயார் நிலையில் வைத்திருக்கின்றன. இந்நிலையில் , இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவு மந்திரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் டாமி புரூஸ் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், “அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் மார்க்கோ ரூபியோ இன்னும் ஓரிரு தினங்களில் இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவு மந்திரிகளுடன் பேச உள்ளார். இந்தியா, பாகிஸ்தான் விவகாரத்தை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். வெளியுறவுத்துறை மட்டுமின்றி, பல்வேறு அளவுகளிலும் இருநாட்டு அரசுகளிடம் பேச உள்ளோம்.” இவ்வாறு அவர் தெரிவித்தார். https://athavannews.com/2025/1430010
  21. இந்திய, பாகிஸ்தான் எல்லையில் நின்று சர்க்கஸ் காட்டிக் கொண்டு நிற்கிறார்கள். 😂 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.