Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. கணேமுல்ல சஞ்சீவவின் சடலத்தை உரிமை கோர முன்வராத உறவினர்கள்! கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த கணேமுல்ல சஞ்சீவ என அழைக்கப்படும் குமார சமரரத்னவின் சடலத்தை கோருவதற்கு உறவினர்கள் எவரும் முன்வரவில்லை. இதனையடுத்து, அவரது சடலம் கொழும்பு பொலிஸ் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், குடும்ப உறுப்பினர்களின் உரிமை கோரலுக்காக காத்திருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பல் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ நேற்று (19) காலை புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் இலக்கம் 05 நீதிவான் நீதிமன்ற அறையில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். பூசா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், சட்ட நடவடிக்கைகளுக்காக சிறை அதிகாரிகளால் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் 19 கொலை வழக்குகளில் சந்தேக நபர் என பொலிஸார் தெரிவித்தனர். நீதிமன்ற வளாகத்தினுள் துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ரிவால்வர் ரக துப்பாக்கியையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளதுடன், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட இரு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். கைதான பிரதான சந்தேக நபர் 34 வயதான மொஹமட் அஸ்மான் ஷெரிப்தீன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேக நபர் இலங்கை இராணுவ கமாண்டோ படைப்பிரிவின் முன்னாள் உறுப்பினர் ஆவார். குறித்த நபர் சட்டத்தரணி போன்று மாறுவேடமிட்டு துப்பாக்கிச் சூடு நடத்த பயன்படுத்திய ஆயுதத்தை குற்றவியல் நடைமுறைச் சட்டப் புத்தகத்தில் மறைத்து வைத்து நீதிமன்ற வளாகத்துக்குள் கொண்டு சென்றதாகவும் கண்டறியப்பட்டது. இதனிடையே, இன்று (20) காலை புதுக்கடை நீதிமன்ற வளாகத்தின் நுழைவு வாயில்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் கடைப்பிடிக்கப்பட்டிருந்தது. https://athavannews.com/2025/1422247
  2. நீதிமன்ற துப்பாக்கி சூடு; சந்தேக நபரை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்! வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்கடை நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் ஒழுங்மைக்கப்பட்ட குற்றவியல் கும்பல் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தமை தொடர்பில் கொழும்பு, குற்றப் பிரிவு விசாரணைகள‍ை ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய சந்தேக நபரான பெண் ஒருவரை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். சந்தேக நபரின் விபரம் பெயர்: பின்புர தேவாஹே இஷார செவ்வந்தி வயது: 25 தே.அ.அ.இல: 995892480v முகவரி: 243/01, நீர்கொழும்பு வீதி, ஜயா மாவத்தை, கட்டுவெல்லேகம சந்தேக நபர் தொடர்பான தகவல்களை பின்வரும் இலக்கங்களுக்கு அறிவிக்கலாம்: பணிப்பாளர் கொழும்பு, குற்றப்பிரிவு – 0718591727 கொழும்பு குற்றப்பிரிவு – 0718591735 சந்தேக நபர் தொடர்பான சரியான தகவல்களை வழங்குவோருக்கு பிரதிப் பொலிஸமா அதிபர் பிரியந்த வீரசூரியவின் நிதியிலிருந்து ரொக்கப் பரிசை வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல் அளிப்பவர்களின் ரகசியத்தன்மையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் அறிவித்துள்ளனர். Athavan Newsநீதிமன்ற துப்பாக்கி சூடு; சந்தேக நபரை கண்டுபிடிக்க பொதும...வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்கடை நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் ஒழுங்மைக்கப்பட்ட குற்றவியல் கும்பல் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தமை தொடர்பில...
  3. கணேமுல்ல சஞ்சீவவின் கொலையாளியை ஏற்றிச்சென்ற வேன் சாரதி கைது! பாதாள உலகக்குழு உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் நேற்று (19) புத்தளம் பாலவிய பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் குறித்த நபர் தப்பிச் செல்ல உதவிய வேன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் குறித்த துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய பெண்ணையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிரதான துப்பாக்கிதாரி, கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் 72 மணித்தியாலங்களுக்கு விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தககது. https://athavannews.com/2025/1422228
  4. மீத்தெனிய துப்பாக்கி சூடு; உயிரிழந்தோர் எண்ணிக்கை மூன்றாக உயர்வு! மீத்தெனிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. அதன்படி, குறித்த துப்பாக்கிச் சூட்டில் சமப்வ இடத்தில் உயிரிழந்த 39 வயதுடைய நபரின் மகனும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காலி தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் (18) இரவு 10.15 மணியளவில் தனது மகன் மற்றும் மகளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, மோட்டார் சைக்கிளின் சாரதியான கல்பொத்த பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபர் மீது அடையாளம் தெரியாத நபர்களினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இந்த துப்பாக்கிச் சூட்டில் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், அவரது 06 வயதுடைய மகள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார். இந்த நிலையில், துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒன்பது வயதுடைய பாதிக்கப்பட்டவரின் மகனும் நேற்று மாலை உயிரழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கு T-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அதேநேரம், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணையையும் அவர்கள் ஆரம்பித்துள்ளனர். https://athavannews.com/2025/1422159
  5. கல் ஓயாவில் தடரம் புரண்ட ரயில்; 5 யானைகள் உயிரிழப்பு! கல்ஓயா பகுதியில் யானைகள் கூட்டத்துடன் மீனகயா ரயில் மோதி ஏற்பட்ட விபத்தினால் மட்டக்களப்பு மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் இன்று (20) அதிகாகாலை யானைக் கூட்டத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் பரிதாபகரமாக ஐந்து யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதன் காரணமாக மட்டக்களப்பு மார்க்கத்தினூடான ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி இயக்கப்படவிருந்த புலத்திசை ரயில் சேவையையயும் இரத்து செய்வதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், தடம் புரண்ட ரயில் என்ஜினை மீண்டும் தண்டவாளத்தில் நிமிர்த்தி வைப்பதற்கான முயற்சிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளாகவும் குறிப்பிடப்படுகின்றது. https://athavannews.com/2025/1422162
  6. தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகர் செல்லையா பொன்னுச்சாமி காலமானார்! பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான எஸ்.பி. சாமி என அழைக்கப்படும் செல்லையா பொன்னுச்சாமி தனது 89 ஆவது வயதில் காலமானார். அன்னாரது புகழுடல் நாளை மாலை 04 மணிக்கு யாழ்ப்பாணம், நல்லூர் செட்டித்தெருவில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை இறுதி கிரியைகள் இடம்பெற்று, காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரையில் அஞ்சலி உரைகள் நிகழ்வுகள் இடம்பெற்று, தகன கிரியைக்காக வேலணை சாட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என அன்னாரின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். https://athavannews.com/2025/1422193
  7. கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்! கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தினுள் நேற்றைய தினம் (19) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவ உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் கணேமுல்ல சஞ்சீவ’ எனப்படும் சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலைச் சம்பவத்துடன் வெளிநாட்டில் தலைமறைவாக வாழும் குற்ற கும்பலைச் சேர்ந்த மூவருக்குத் தொடர்பு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டுபாய் மற்றும் பிரான்ஸில் தலைமறைவாக உள்ள குற்ற கும்பலை சேர்ந்த கெஹெல்பத்தர பத்மே, பட்டுவத்தே சாமர மற்றும் ஜூட் பிரியந்த ஆகியோரே குறித்த கொலை சம்பவத்திற்கு திட்டம் தீட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இலங்கையின் மிகவும் பலம் பொருந்திய பாதுகாப்பான இடமான நீதிமன்ற வளாகத்தில் குறித்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளமை நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, நீதித்துறை ஆகியவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1422198
  8. அமுதக் கரங்கள் திட்டம் இன்று முதல் ஆரம்பம். தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எதிர்வரும் முதலாம் திகதி தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை கொண்டாட தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் என அனைவரும் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கொளத்தூரில் ‘அமுதக் கரங்கள்’ திட்டத்தை துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் இன்று முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் திகதி வரை 365 நாட்களும், நாள் ஒன்றுக்கு 1000 பேருக்கு வெவ்வேறு இடங்களில் காலை உணவு வழங்கும் ‘அமுதக் கரங்கள்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1422200
  9. உக்ரேன் ஜனாதிபதியை, சர்வாதிகாரி என சாடிய ட்ரம்ப்! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை (19) உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை ஒரு “சர்வாதிகாரி” என்று கண்டனம் செய்தார். மேலும் அவர் அமைதியைப் பாதுகாக்க விரைவாக செயற்பட வேண்டும் என்றும், அவ்வாறு இல்லாவிடின் ஜெலென்ஸ்கி தனது நாட்டை இழக்கும் அபாயத்தை எதிர்கொள்ளக் கூடும் என்றும் எச்சரித்தார். ட்ரம்பின் இந்த கருத்தானது இரு தலைவர்களுக்கிடையிலான பகையை ஆழப்படுத்தியதுடன் ஐரோப்பிய அதிகாரிகளையும் எச்சரித்தது. ரஷ்யாவின் 2022 படையெடுப்பிற்கு உக்ரேன் தான் காரணம் என்று ட்ரம்ப் கூறிய ஒரு நாளுக்குப் பின்னர் – ரஷ்யா-உக்ரேன் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ட்ரம்பின் அணுகுமுறை மொஸ்கோவிற்கு பயனளிக்கும் என்று ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகளிடையே கவலைகளை அதிகரித்தது. அவர் ஜனாதிபதியாக ஒரு மாதத்திற்குள், போரில் ரஷ்யாவை தனிமைப்படுத்தும் பிரச்சாரத்தை புட்டினுடனான தொலைபேசி அழைப்பு, சவுதி அரேபியாவில் உக்ரேனை ஓரங்கட்டிய மூத்த அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுக்கள் மூலம் முடிவுக்கு கொண்டுவந்தார். இந்த நிலையில், புதன்கிழமை சமூக ஊடகங்களில் பதிவிட்ட ட்ரம்ப் ஜெலென்ஸ்கியை தேர்தல்கள் இல்லாத ஒரு சர்வாதிகாரி என்றும் சாடினார். இதற்குப் பதிலளித்த உக்ரேன் வெளிவிவகார அமைச்சர் Andrii Sybiha, தனது நாட்டை விட்டுக்கொடுக்க யாரும் கட்டாயப்படுத்த முடியாது என்றார். ஜெலென்ஸ்கியின் ஐந்தாண்டு பதவிக்காலம் 2024 இல் முடிவடைய வேண்டும், ஆனால் ரஷ்யாவின் படையெடுப்பிற்கு பதிலளிக்கும் வகையில் உக்ரேன் 2022 பெப்ரவரியில் விதித்த இராணுவச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி, நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்த முடியாது. சவுதி அரேபியாவில் நடந்த அமெரிக்க-ரஷ்யா பேச்சுவார்த்தையில் கெய்வ் விலக்கப்பட்டதற்கு பதிலளித்த ஜெலென்ஸ்கி செவ்வாயன்று, அமெரிக்க ஜனாதிபதி மொஸ்கோவால் நிர்வகிக்கப்படுவதாக சாடிப் பேசினார். இதற்கு பதிலளிக்கும் விதமாகவே ட்ரம்பின் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன. இதனிடையே, அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் புதன்கிழமை ட்ரம்பை தாக்குவதற்கு எதிராக ஜெலென்ஸ்கிக்கு எச்சரிக்கை விடுத்தார். கடந்த ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்ற ட்ரம்ப், உக்ரேன் போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவருவதாக பலமுறை சபதம் செய்தார். அவர் புட்ன் மற்றும் ஜெலென்ஸ்கிக்கு புதன்கிழமை தனித்தனியாக தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு உரையாடினார். இதனிடையே தற்சமயம் ரஷ்யா உக்ரேனின் ஐந்தில் ஒரு பகுதியைக் கட்டுப்படுத்துகிறது, மேலும் பல மாதங்களாக கிழக்கில் மெதுவாக முன்னேறி வருகிறது. அதே நேரத்தில் உக்ரேனின் சிறிய இராணுவம் மனிதவள பற்றாக்குறையுடன் போராடுகிறது, மேலும் மேற்கு ரஷ்யாவில் ஒரு பகுதியை வைத்திருக்க முயற்சிக்கிறது. இந்த நிலையில், எந்தவொரு சமாதான ஒப்பந்தத்தின் கீழும் உக்ரேனின் பிரதேசத்தை விட்டுக்கொடுக்கவும் நிரந்தரமாக நடுநிலை வகிக்கவும் ரஷ்யா கோரியுள்ளது. கைப்பற்றப்பட்ட நிலத்தில் இருந்து ரஷ்யா வெளியேற வேண்டும் என்று உக்ரேன் கோருகிறது, மேலும் மாஸ்கோவின் தாக்குதலைத் தடுக்க நேட்டோ உறுப்பினர் அல்லது அதற்கு சமமான பாதுகாப்பு உத்தரவாதத்தை விரும்புகிறது. போர் தொடங்கியதில் இருந்து அமெரிக்காவும் ஐரோப்பாவும் உக்ரேனுக்கு பல பில்லியன் டொலர்களை இராணுவ உதவியாக வழங்கியுள்ளன. https://athavannews.com/2025/1422168
  10. அமெரிக்காவின் நாடு கடத்தல்; பனாமாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர் உட்பட சுமார் 300 பேர்! அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் உட்பட பல்வேறு நாடுகளைச் சுமார் 300 சட்டவிரோத குடியேறிகள் தற்போது பனாமா ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆவணமற்ற வெளிநாட்டினருக்கு எதிரான பாரிய அடக்குமுறையின் ஒரு பகுதியாக இவர்கள் பனாமாவின் தலைநகரில் அமைந்துள்ள Decápolis என்ற சொகுசு ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சர்வதேச அதிகாரிகளால் ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கையில் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகளுக்காகக் காத்திருக்கும் போது, இந்த நபர்கள் ஹோட்டலை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை என்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவி வரும் படங்கள் மற்றும் வீடியோக்களில், ஹோட்டலின் ஜன்னல்களில், “தயவுசெய்து எங்களுக்கு உதவுங்கள்” மற்றும் “நாங்கள் பாதுகாப்பாக இல்லை” என்று நாடுகடத்தப்பட்டவர்கள் வாசனங்களை எழுதி வெளிப்படுத்தியுள்ளனர். அதே நேரத்தில் பொலிஸ் அதிகாரிகள் ஹோட்டல் வளாகத்தில் பாதுகாப்பில் இருப்பதனையும் காண முடிகின்றது. Athavan Newsஅமெரிக்காவின் நாடு கடத்தல்; பனாமாவில் தடுத்து வைக்கப்பட்ட...அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் உட்பட பல்வேறு நாடுகளைச் சுமார் 300 சட்டவிரோத குடியேறிகள் தற்போது பனாமா ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பி...
  11. நீங்கள் சொல்லுறதும் சரி. ✅ நான் மேலே… பகிடிக்குத்தான் எழுதினேன், சீரியசாக எடுக்காதீர்கள். 🙂
  12. துப்பாக்கிதாரி 34 வயது “அஸ்மான் சரிப்தீன்” என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் சற்று முன்னர் புத்தளம், பாலாவி பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம்.com
  13. 👉 https://www.facebook.com/reel/2369917176705518 👈 கராட்டி, குங்பூ, சீனடி, சிலம்படி... எல்லாம் தெரிந்த வைத்தியர் அர்ச்சுனாவிடமிருந்து பொதுமக்களுக்குத்தான் பாதுகாப்பு தேவை. 😂
  14. 👉 https://www.facebook.com/watch/?v=1137664734195084👈 (அமெரிக்காவில் மோடி, டிரம்ப் பத்திரிகையாளர் சந்திப்பு.) உள்நாட்டில் "ஹிந்தி படிங்கோ, ஹிந்தி படிங்கோ"னு சொல்ல வேண்டியது. வெளிநாட்டுக்கு போய் என்ன கேட்கிறாங்கனே தெரியாம, பதிலும் தெரியாம, கேள்வியும் புரியாம translators வச்சும் பயன் இல்லாம அப்பாவியா பேந்த பேந்த முழிச்சிட்டு இந்தியா வந்து நேருவையும், காந்தியையும், அம்பேத்கரையும் குறை சொல்ல வேண்டியது. காந்தி, நேரு, அம்பேத்கர் எல்லாம் ஹிந்தியை மட்டும் வைத்துக் கொண்டு ஆங்கிலேயனை வெல்லவில்லை. அந்த காலத்திலேயே கப்பலில் வெளிநாட்டுக்கு சென்று, அன்றே படித்து பட்டம் பெற்று வட்ட மேஜை மாநாடுகளை நடத்தி வென்ற தலைவர்கள். சீனா அதிபரும் translators வைத்து இருப்பார். அவர் கெமிகல் engineer. அவர் doctor of law படித்தவரும் கூட. மொத்த Chinese cabinet ல் 75% PhD பட்டமோ, Techinical Masters முடித்தவர்கள். கெத்தா உட்காந்து அவிங்க சீன மொழியில் பேசினால் English ல் translation செய்த கதையும் உண்டு. நம்ம ஆளிடம் கேட்ட ஒரு கேள்விக்கு, இந்த கேள்விக்கு நானே பதில் சொல்கிறேன் என்கிறார் Trump. நம்ம கிட்ட இருக்கும் cabinet அப்படியா. கோமியம் விக்கிற specialist, மாட்டு hospital கட்டும் சாமியார்கள், குறி சொல்லும் ஜோசியர்கள், மயில் தனது கண்ணீர் மூலம் இனப் பெருக்கம் செய்கிறது என்கிற பிரபலம், நம் முன்னோர்கள் ஒன்னும் முட்டாள்கள் இல்லை என்ற ஒரு uneducated bunch of people. படித்தவர்கள் பிரதமராக வருவது நம் நாட்டுக்கு மட்டுமல்ல அயல் நாட்டு கொள்கை- foreign policy மற்றும் trade negotiations-ல் வெல்ல வாய்ப்புக்களை உருவாக்கித் தரும். International arena-வில் கெத்தா இருக்கும். இதுல ஹிந்தியை வேற தூக்கிட்டு வந்து இந்தி படி , இந்தி படினு உருட்ட வேண்டியது. 56"சீ இன்னும் கூட பேட்டி கொடுக்காம இருக்க ஒரே காரணம் பதில் சொல்லத் தெரியாது என்கிறது மட்டுமல்லாமல், அவருக்கு கேள்விகளே புரியாது என்பதால் தான். இந்த ஒரே காரணத்தினால் தான் அக்சய் குமார் போன்றோருக்கு scripted பேட்டி கொடுக்கிறது, அதாவது கேள்வியும் நானே...அதற்கு பதிலும் நானே, இந்த கேள்விகளைத் தான் நீ கேட்க வேண்டும்! மும்மொழிக் கொள்கையின் மூலம் ஹிந்தி திணிப்பு தேவை இல்லாதது என்று நிரூபணம் ஆன தருணம், மோடியின் தற்போதைய அமெரிக்க பயணம். தமிழ், ஆங்கிலம் இரண்டே போதும் உலகையே வெல்லலாம். தமிழ்நாட்டின் பாதை தான் இந்தியாவுக்கு தேவை. Regional Language + English. #மும்மொழிக்கொள்கைதோல்வி #தமிழ் #தமிழ்நாடு N Deva 😂 🤣
  15. செல்ஃபி எடுக்க முயன்ற வெளிநாட்டுப் பெண் உயிரிழப்பு! ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தவாறு செல்ஃபி எடுக்க முயன்ற வெளிநாட்டுப் பெண்ணொருவர் கீழே தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். பதுளை பிங்கயட்ட, அமுனுவெல்பிட்டிய வீதிக்கு அருகில் இன்று (19) காலை இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த பொடி மெனிக்கே ரயிலில் இருந்தே குறித்த வெளிநாட்டுப் பிரஜை தவறி விழுந்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர் 50 வயதான பெர்சினோமா ஓல்கா என்ற ரஷ்ய பெண் எனவும், அவர் ரஷ்யாவிலிருந்து 12 பேர் கொண்ட குழுவுடன் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது. மேலும் அவர் இன்று காலை குழுவுடன் பதுளைக்கு வந்து, பதுளையில் உள்ள எல்ல பகுதிக்கு பயணித்துக்கொண்டிருந்த போது ரயிலில் தொங்கியப்படி செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார் எனவும், அந்த நேரத்தில் தண்டவாளத்தின் ஓரத்தில் இருந்த மண்மேட்டில் மோதி கீழே விழுந்துள்ளார் எனவும் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2025/1422131
  16. கட்டிய கணவனுக்கு... "ஐஸ்" கொடுத்து, பணிவிடை செய்யும் மனைவி கிடைப்பது, இறைவன் கொடுத்த வரம். 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.