Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சைக்கிள் சின்ன கூட்டமைப்பில் இணைந்தனர் சிறீகாந்தா , சிவாஜிலிங்கம். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் கடந்த வாரம் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா தலைமையிலான சனநாயக தமிழரசுக் கட்சி இணைந்திருந்த நிலையில் அக்கூட்டமைப்பினை பலப்படுத்தும் வகையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான ந. சிறீகாந்தா தலைமையிலான தமிழ்த் தேசிய கட்சியும் இணைந்துள்ளது. நேற்றுமுன்தினம் நடைபெற்ற தமிழ்த் தேசிய கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் நேற்றைய தினம் இக்கூட்டமைப்பில் உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டதாகவும் சட்டத்தரணி ந. சிறீகாந்தா புதிய சுதந்திரன் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளராக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. சில ஒற்றர்களின் ஊடுருவல் காரணமாக பல கட்சிகளாக உடைந்து சின்னாபின்னமாகிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினை மீள் உருவாக்கும் காலம் இவ்வாறான தமிழ்த்தேசிய கட்சிகளின் ஒற்றுமையின் காரணமாக கனிந்துள்ளதாகவும் தற்போது உருவாகியுள்ள இக்கூட்டமைப்பு நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் அதிகளவான ஆசனங்களை கைப்பற்றும் வாய்ப்பு காணப்படுவதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கணிப்பு கூறுகின்றனர். Kunalan Karunagaran
  2. 3000 டொலர்களை விஞ்சிய தங்கத்தின் விலை! சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது வரலாற்றில் முதன் முறையாக வெள்ளிக்கிழமை (14) அவுன்ஸ் ஒன்றுக்கு மூவாயிரம் அமெரிக்க டொலர்களை தாண்டியது. அமெரிக்க ஜனாதிபதியின் திடீர் கட்டணக் கொள்கை, பொருளாதார மந்தநிலை மற்றும் பங்குச் சந்தை வீழ்ச்சி குறித்த அச்சங்கள் தொடர்பில் முதலீட்டாளர்கள் கணக்கிட்டு வருவதால் தங்கத்தின் விலையானது உச்சத்துக்கு சென்றுள்ளது. வெள்ளிக்கிழ‍ைமை சந்தை அமர்வின் தொடக்கத்தில் ஸ்பாட் தங்கம் ஒரு அவுன்ஸ் 3,004.86 அமெரிக்க டொலர்கள் என்ற உச்சத்தை எட்டியது. பின்னர் மதியம் 02:01 ET (1801 GMT) நிலவரப்படி 0.1% குறைந்து 2,986.26 அமெரிக்க டொலர்களாக பதிவானது. அதேநேரம், அமெரிக்க தங்க எதிர்காலம் 0.3% உயர்ந்து 3,001.10 டொல்களில் முடிவடைந்தது. வர்த்தகப் போர்களின் போது முதலீட்டாளர்கள் தங்கத்தை பெரும்பாலும் பாதுகாப்பான புகலிடமாக நாடுகிறார்கள். மேலும், இந்த ஆண்டு அதன் விலை சுமார் 14 சதவீதம் உயர்ந்துள்ளது. ஜனவரியில் பதவியேற்ற ஜனாதிபதி ட்ரம்பின் வரிகளின் தாக்கம் மற்றும் பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட விற்பனையின் தாக்கம் குறித்த அச்சம் இதற்கு ஒரு காரணமாகும். தங்கத்தின் விலை மத்திய வங்கியின் தேவையால் ஆதரிக்கப்பட்டுள்ளது, முக்கிய வாங்குபவரான சீனா பெப்ரவரியில் தொடர்ந்து நான்காவது மாதமாக அதன் தங்க இருப்புக்களை அதிகரித்துள்ளது. அமெரிக்க கொள்கை நிச்சயமற்ற தன்மை முதலீட்டாளர்களின் தேவையை ஆதரிக்கக்கூடும் என்பதால், 2025 ஆம் ஆண்டின் இறுதியில் அதன் விலை $3,100-$3,300 செல்லும் என்றும் வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். இதேவ‍ேளை, வெள்ளிக்கிழமை வெள்ளி ஒரு அவுன்ஸ் $33.80 ஆகவும், பிளாட்டினம் 0.1% உயர்ந்து $995.20 ஆகவும், பல்லேடியம் 0.6% உயர்ந்து $963.76 ஆகவும் இருந்தது. இதேவ‍ேளை, இலங்கையில் 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது இன்றைய தினம் 235,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் விலையானது பவுண் ஒன்றுக்கு 217,300 ரூபாவாகவும் காணப்படுவதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1425269
  3. திருமணத்திற்கு பின் ஆபாசாமான உரையாடலில் ஈடுபட கூடாது – உயர் நீதிமன்றம் தீர்ப்பு திருமணத்திற்குப் பிறகு கணவனோ மனைவியோ தங்களது ‘எதிர்பாலின’ நண்பர்களுடன் ‘ஆபாசமான’ முறையில் உரையாட கூடாது என்றும், எந்தக் கணவரும் தனது மனைவியிடமிருந்து இதுபோன்ற செயல்களை பொறுத்துக்கொள்ள மாட்டார் என்று மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விவாகரத்து வழங்கிய கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் மனைவி மேன்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் விவேக் ருசியா மற்றும் கஜேந்திர சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனைவி தனது ஆண் நண்பர்களுடன் அவளது பாலியல் வாழ்க்கை குறித்து ஆபாசமான முறையில் வாட்சப்பில் சாட் செய்ததை நீதிமன்றத்தில் கவனத்தில் கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்தது. அதாவது, “திருமணத்திற்குப் பிறகு கணவரோ, மனைவியோ தங்களது நண்பர்களுடன் கண்ணியமற்ற முறையில் ஆபாசமான உரையாடலில் ஈடுபட கூடாது. தனது மனைவி மொபைல் மூலம் இத்தகைய மோசமாக பேசுவதை எந்த கணவரும் பொறுத்துக்கொள்ள மாட்டார். திருமணத்திற்குப் பிறகு கணவன்-மனைவி இருவரும் நண்பர்களுடன் மொபைல் மற்றும் பிற வழிகளில் உரையாடலாம். ஆனால் அந்த உரையாடல் கண்ணியமானதாக இருக்க வேண்டும். கணவரின் எதிர்ப்பு தெரிவித்தும் மனைவி தனது ஆண் நண்பர்களுடன் தொடர்ந்து மோசமாக உரையாடுவது நிச்சயமாக கணவருக்கு மனரீதியிலான கொடுமையை ஏற்படுத்தும்” என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இறுதியில், கணவருக்கு விவாகரத்து வழங்கிய குடும்ப நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்றுக்கொண்டு மனைவியின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. https://athavannews.com/2025/1425265
  4. இசைப்பிரியாவுக்கும் , கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் பெண்களுக்கும் நீதி கிடைக்காதா? – சாணக்கியன் சாடல். அனுராதபுரம் வைத்தியசாலையில் பெண் வைத்தியருக்கு நிகழ்ந்த வன் கொடுமைக்கு நீதி வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், இந்த நாட்டிலே இராணுவத்தினரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட இசைப்பிரியாவுக்கு நீதி வழங்க ஏன் அரசாங்கம் முன்வரவில்லை என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் (15) உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த நாட்டிலே ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள். அதற்கு ஏன் இந்த அரசாங்கமும் நாட்டு மக்களும் நடவடிக்கை எடுப்பதற்கு கொந்தளிக்கவில்லை. இனவாதம் இல்லை என்று சொல்லும் இந்த அரசாங்கம் தான் மோசமான இனவாதிகள். கடந்த கால அரசாங்கங்கள் தங்களை இனவாதிகளாக அடையாளப்படுத்திக் கொண்டு தமது செயல்பாடுகளை முன்னெடுத்தார்கள். ஆனால், இந்த அரசாங்கம் இனவாதம் இல்லை என கூறுகிறார்கள். ஆனால் முழுக்க முழுக்க இனவாதத்தில்தான் ஈடுபடுகிறார்கள். இசைப்பிரியா ஒரு பெண் இல்லையா? இசைப்பிரியாவுக்கு இந்த நாட்டிலே நீதி தேவையில்லையா எனவும் சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். https://athavannews.com/2025/1425262
  5. இன்று.. குரங்கு, யானை, மர அணில் போன்றவைகளின் கணக்கெடுப்பு நடைபெற்றது.
  6. ஏப்ரல் முதல் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு. வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிக்கப்பட்ட சம்பள உயர்வுகளை ஏப்ரல் முதல் அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சிங்கள புத்தாண்டை கொண்டாடும் வகையில், மாத சம்பளம் வழங்குவதற்கான வழக்கமான திகதிக்கு முன்னதாக ஏப்ரல் 10 ஆம் திகதி அவற்றை வழங்கவும் அரசாங்கம் தயாராகி வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட பின்னர், ஒரு வார காலப்பகுதியில் அதிகரிக்கப்பட்ட சம்பளம் மற்றும் ஊக்கத்தொகைகள் தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அரச ஊழியர்களின் குறைந்தபட்ச மாதாந்த அடிப்படை சம்பளத்தை 24250 ரூபாயிலிருந்து 40000 ரூபாவாக 15750 ரூபாயால் அதிகரிக்கவும் தற்காலிக இடைக்கால கொடுப்பனவு மற்றும் சிறப்பு கொடுப்பனவுகளை அடிப்படை சம்பளத்தில் இணைக்கவும் வரவு செலவுத்திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1425244
  7. ஜனாதிபதியின் பங்கேற்புடன் இப்தார் நிகழ்வு! முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பு மாதத்தையிட்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இப்தார் நிகழ்வு இன்று பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றதுள்ளது. இதில் இஸ்லாமிய மதத் தலைவர்களும் ஏராளமான இஸ்லாம் பக்தர்களும் இதில் கலந்து கொண்டதுடன், மேலும் இஸ்லாமிய சமய நிகழ்வுகளுக்கு முன்னுரிமை அளித்து இந்த நிகழ்வு நடைபெற்றது. பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி இந்நிகழ்வில் வரவேற்புரை ஆற்றியதுடன், தேசிய ஒருங்கிணைப்பு பிரதி அமைச்சர் முனீர் முலாபரும் நிகழ்வில் உரையாற்றினர். செயிட் அப்துல்லா செஹீத் மௌலவி “ரமழான் மாதத்தின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் இந்நிகழ்வில்சிறப்பு ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார். சிறப்பு பிரார்த்தனைக்குப் பிறகு, மாலை 6.23 மணிக்கு நோன்பு திறக்கப்பட்டதுடன் அதைத் தொடர்ந்து சிறப்பு விருந்து நடைபெற்றது. அதனையடுத்து இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தவர்களுடன் ஜனாதிபதி சிநேகபூர்வமாக கலந்துரையாடினார். இதில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, வெளிநாட்டலுவல்கள், மேல்மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2025/1425225
  8. வேட்பாளர்கள் இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டால் சட்ட நடவடிக்கை. 2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை சமர்பிக்கும் வேட்பாளர்கள், க.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நேற்று பிற்பகல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் திகதிகளில் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையும் நடைபெறும் என்பதால், வேட்புமனுக்களை சமர்ப்பிக்கும் அனைத்து வேட்பாளர்களும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், எந்தவொரு வேட்பாளரும் இதுபோன்ற இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டால் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு பிறகு வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் செயற்பாடுகள் நிறைவடையும் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் குறித்த திகதிக்குப் பின்னர் எந்தவொரு அணிவகுப்பு, வாகனப் பேரணி அல்லது ஒன்றுகூடல் ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2025/1425247
  9. பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை நாளை முதல் பொது மக்களின் பார்வைக்கு. பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை நாளை முதல் நாடாளுமன்றின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் பொதுமக்கள் பார்வையிட முடியும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார் இந்த விடயம் தொடர்பில் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க கருத்துரைத்த பின்னரே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் நாட்டில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க நேற்று நாடாளுமன்றில் சமர்ப்பித்திருந்தார். இந்த அறிக்கை சட்ட மா அதிபருக்கு அனுப்பப்படும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அல் ஜஷீராவுக்கு வழங்கிய நேர்காணலின் போது பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை என அறிவித்திருந்தார் 1980ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி மீது நீதிக்குப் புறம்பான கொலைகள், சித்திரவதைகள் மற்றும் சட்டவிரோத தடுப்புக்காவல்கள் போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. 1994 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசாங்கம், பட்டலந்த சித்திரவதைக் கூடத்தை விசாரிக்க ஒரு முழுமையான ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்தார். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவும் ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்தார். ஆதாரங்களை ஆராய்ந்த பின்னர், அதனுடன் தொடர்புடைய அறிக்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் 1998ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் திகதி வழங்கப்பட்ட போதிலும், அப்போதைய அரசாங்கம் அந்த அறிக்கை தொடர்பாக எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்தார். https://athavannews.com/2025/1425250
  10. கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நிறைவு. கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்றைய தினம் காலை திருப்பலியுடன் நிறைவடைந்தது. நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் திருச்செபமாலை ஆரம்பமாகி, தொடர்ந்து திருச்சிலுவை பாதை, திருப்பலி, கருணை ஆராதனை மற்றும் புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி என்பன இடம்பெற்றது. இன்றைய தினம் சனிக்கிழமை, காலை 6 மணிக்கு திருச்செபமாலை ஆரம்பமாகி, யாழ் மறைமாவட்ட ஆயர் தலைமையில் திருநாள் திருப்பலி இடம்பெற்று, திருவிழா இனிதே நிறைவடைந்தது. https://athavannews.com/2025/1425253
  11. ஹோலி பண்டிகையின் போது 7 பள்ளி மாணவர்கள் மீது இரசாயண பொடி வீச்சு – 4 பேரின் நிலை கவலைக்கிடம். நேற்று இந்துமத பண்டிகையான ஹோலி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் கர்நாடகாவின் கடக் மாவட்டத்தில் உள்ள லக்ஷ்மேஷ்வர் நகரில் ஹோலி கொண்டாட்டம் என்ற பெயரில் பள்ளி மாணவிகள் மீது ரசாயன வண்ணம் பூசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று பஸ் நிறுத்தத்தில் பள்ளிக்கு செல்ல காத்திருந்த 7 மாணவிகள் மீது அவ்வழியே பைக்கில் வந்த கும்பல் ஒன்று வலுக்கபட்டயமாக வண்ணப்பொடியை வீசத் தொடங்கியது. அந்நேரத்தில் பஸ் வந்ததால் மாணவிகள் உடனே பஸ்ஸில் ஏறினர். ஆனால் அந்த கும்பல் விடாமல் துரத்திச் சென்று பஸ்ஸில் ஏறி அந்த 7 மாணவிகள் மீது மேலும் வண்ணப்பொடியை பூசியுள்ளது. அந்த வண்ணப்பொடியில் பசுவின் சாணம், முட்டை, ஃபீனைல் மற்றும் பிற இரசாயனங்கள் கலந்திருந்தாக கூறப்படுகிறது. இதனால் 7 மாணவிகளுக்கும் மூச்சுத் திணறல் மற்றும் மார்பில் கடுமையான வலி ஏற்பட்டது. உடனே அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 7 பேரில் 4 மாணவிகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று கூறப்படுகிறது. அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக கடக் GIMS மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஏனைய மூவர் உள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தால் பெற்றோர் மற்றும் அவ்வூர் மக்கள் இடையே கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது. வண்ணம் பூசிவிட்டு பைக்கில் தப்பியோடிய அந்த கும்பலை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். https://athavannews.com/2025/1425241
  12. ‘பரமசிவன் பாத்திமா’... ஆஹா வேறை லெவல் தலைப்பு. நிச்சயம் இந்தப் படம்... இந்துக்களையும், முஸ்லீம்களையும் மற்றும் திராவிடியன்களையும் கவர்ந்து இழுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
  13. நாளை காலை 8:00 மணியில் இருந்து - 8:05 வரை... குரங்கு, யானை, மர அணில் போன்றவைகளின் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது.
  14. மோசடி மன்னன் SK கிருஷ்ணாவுக்குப் பிணை வழங்க மல்லாகம் நீதிமன்றம் மறுப்பு. நகர்த்தல் பத்திரம் மூலம் யூடியூப்பர் கிருஷ்ணாவின் வழக்கு இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் பிணைக்கு அனுமதி கோரி விசாரணைக்கு எடுக்கப்பட்டது. ஆனால் சமூக மட்டத்தில் இவரது செயற்பாடுகள் அருவருக்கத்தக்கதாக உள்ளன என்றும் இவர் மீது பல குற்றச்சாட்டுகள் அச்சுறுத்தும்படி உள்ளன என்றும் கருதி பிணை மறுக்கப்பட்டுள்ளது வழக்கு 19/03/2025 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இவர்பற்றி பேச மீண்டும் 18 இரவு சந்திப்போம். நீதியை நிலைநாட்டும் கௌரவ நீதிமன்றத்துக்கு நன்றி. இளவாலை பொலிஸ் ராகவன் குழுவுக்கு நன்றி. இது அனைவருக்கும் ஒரு பாடம். சமூகம் கலாசாரம் என்ற ஒன்றுக்கு நீங்கள் செவி சாய்க்கத்தான் வேண்டும். ஊழல் ஒழிப்பு அணி யாழ்
  15. திருகோணமலை-மூதூர் கொலை சம்பவம்!புதிய திருப்பம். திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இரு பெண்களை வெட்டிக் கொலை தொடர்பில் 15வயதான சிறுமி குறித்த கொலையைச் செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். அதன்படி திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இரு பெண்களை வெட்டிக் கொலை செய்த குற்றச்சாட்டில் பேத்தியான 15 வயது சிறுமியை பொலிசார் கைது செய்திருந்தனர். மூதூர் – தாஹா நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இன்று (14) அதிகாலை சகோதரிகளான பெண்கள் இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர். சம்பவ இடத்திற்கு மூதூர் நீதிமன்ற நீதிபதி திருமதி. தஸ்னீம் பௌசான், சட்ட வைத்திய அதிகாரி, பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் விஜயம் மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டிருந்தனர். குறித்த சம்பவத்தில் சிறிதரன் ராஜேஸ்வரி (வயது 68) சக்திவேல் ராஜகுமாரி (வயது 74) ஆகிய இரு பெண்களே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மூதூர் தாஹா நகர் பகுதியைச் சேர்ந்த குடும்ப நல மருத்துவமாதாக கடமையாற்றிவரும் சிறிதரன் தர்ஷினி என்பவருடைய வீட்டிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் இடம்பெற்ற தினமான இன்று அதிகாலை சிறிதரன் தர்ஷினி மூதூர் வைத்தியசாலையில் வியாழக்கிழமை இரவுக் கடமைக்காக சென்றிருந்த நிலையில் குறித்த வீட்டில் 15 வயதான அவரது மகள், தாயாரான சிறிதரன் ராஜேஸ்வரி மற்றும் பெரியம்மாவான சக்திவேல் ராஜகுமாரி ஆகியோர் மாத்திரம் வீட்டில் இருந்துள்ளனர். இந்நிலையில் அதிகாலை வேளை குறித்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த படுகொலைச் சம்பவத்தின்போது கூரிய ஆயுதங்களைக் கொண்டு தாக்கியதில் இருவருடைய கழுத்துப் பகுதிகளில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டு இருவரும் உயிரிழந்த நிலையில் 15 வயதான மகள் சிறு காயங்களுடன் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதன்போது குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் குறித்த சிறுமியிடம் பொலிஸார் மேற்கொண்ட நீண்ட நேர விசாரணையின் பின்னர் குறித்த சிறுமி தானே குறித்த கொலையைச் செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். அம்மம்மா தனக்கு பேசுவதாகவும், தன்னில் பாசம் இல்லை எனவும் மன அழுத்தம் காரணமாக இருவரையும் கொலை செய்ததாகவும் பொலிசாரிடம் ஒப்புக் கொண்டுள்ளார். இதன் பின்னர் குறித்த சிறுமி பொலிசாரினால் கைது செய்யப்பட்டு மூதூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் திருகோணமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். Athavan Newsதிருகோணமலை-மூதூர் கொலை சம்பவம்!புதிய திருப்பம்திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இரு பெண்களை வெட்டிக் கொலை தொடர்பில் 15வயதான சிறுமி குறித்த கொலையைச் செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். அதன்படி திருகோணமலை மூதூர் பொலிஸ் ப...
  16. கஜேந்திரகுமார் , கே.வி. தவராசா இணைவு. தமிழ்த் தேசிய சித்தாந்தத்தினை பலப்படுத்தும் வகையிலும் சிங்கள பேரினவாதத்தின் ஒற்றர்களால் அழிக்கப்பட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பினை மீள் உருவாக்கம் செய்யும் நோக்கிலும் சனநாயக தமிழரசு கட்சியின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி. தவராசா அவர்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் , நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் இணைந்து பயணிக்கவுள்ளதாகவும் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் தமிழர் தாயகத்தில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடவுள்ளதாகவும் அதேபோன்று மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறுமாகவிருந்தால் இக்கூட்டமைப்பின் ஊடாகவே நீதித்துறை சார்ந்த பிரமுகர் ஒருவர் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாகவும் சனநாயக தமிழரசு கட்சியின் பிரமுகரும் , இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞரணி செயலாளருமான ( முன்னாள் ) கருணாகரன் குணாளன் தெரிவித்துள்ளார். பாரம்பரிய கட்சியான இலங்கை தமிழரசு கட்சியில் ஊடுருவியுள்ள சிங்கள பேரினவாத தரப்பின் ஒற்றர்களின் தமிழ்த்தேசிய விரோத செயற்பாடுகளின் காரணமாக அக்கட்சியிலிருந்து வெளியேறிவருகின்றவர்கள் கே. வி. தவராசா தலைமையிலான சனநாயக தமிழரசு கட்சியில் தொடர்ச்சியாக இணைந்து வருவதாகவும் திரு.க.குணாளன் குறிப்பிட்டுள்ளார். தமிழ்மக்களின் நீண்டகால உரிமைப் போராட்டத்திற்கு முழுமையாக வலுச்சேர்க்கும் நோக்கில் இணைந்து பயணிக்கவுள்ள இக்கூட்டமைப்பில் நேர்மை மிகுந்த , வெளிப்படையான செயற்பாடுகளை மேற்கொள்கின்ற அனைத்து தமிழ்தேசிய தரப்பினரும் இணைந்து பயணித்து தமிழ்மக்களின் மனதை வெல்லவேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். Kunalan Karunagaran
  17. கஜேந்திரகுமார் , கே.வி. தவராசா இணைவு. தமிழ்த் தேசிய சித்தாந்தத்தினை பலப்படுத்தும் வகையிலும் சிங்கள பேரினவாதத்தின் ஒற்றர்களால் அழிக்கப்பட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பினை மீள் உருவாக்கம் செய்யும் நோக்கிலும் சனநாயக தமிழரசு கட்சியின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி. தவராசா அவர்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் , நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் இணைந்து பயணிக்கவுள்ளதாகவும் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் தமிழர் தாயகத்தில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடவுள்ளதாகவும் அதேபோன்று மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறுமாகவிருந்தால் இக்கூட்டமைப்பின் ஊடாகவே நீதித்துறை சார்ந்த பிரமுகர் ஒருவர் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாகவும் சனநாயக தமிழரசு கட்சியின் பிரமுகரும் , இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞரணி செயலாளருமான ( முன்னாள் ) கருணாகரன் குணாளன் தெரிவித்துள்ளார். பாரம்பரிய கட்சியான இலங்கை தமிழரசு கட்சியில் ஊடுருவியுள்ள சிங்கள பேரினவாத தரப்பின் ஒற்றர்களின் தமிழ்த்தேசிய விரோத செயற்பாடுகளின் காரணமாக அக்கட்சியிலிருந்து வெளியேறிவருகின்றவர்கள் கே. வி. தவராசா தலைமையிலான சனநாயக தமிழரசு கட்சியில் தொடர்ச்சியாக இணைந்து வருவதாகவும் திரு.க.குணாளன் குறிப்பிட்டுள்ளார். தமிழ்மக்களின் நீண்டகால உரிமைப் போராட்டத்திற்கு முழுமையாக வலுச்சேர்க்கும் நோக்கில் இணைந்து பயணிக்கவுள்ள இக்கூட்டமைப்பில் நேர்மை மிகுந்த , வெளிப்படையான செயற்பாடுகளை மேற்கொள்கின்ற அனைத்து தமிழ்தேசிய தரப்பினரும் இணைந்து பயணித்து தமிழ்மக்களின் மனதை வெல்லவேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். Kunalan Karunagaran
  18. மண்ணில்... பசளை போட்டு, நீர் ஊற்றி வளர்த்தாலும் இவ்வளவு செழிப்பான மிளகாய்கள் கிடைக்காது. இது கூரையில் உள்ள ஓட்டில்... எதுவும் இல்லாமல் காய்த்து குலுங்குவது அதிசயம்தான்.
  19. பையா.... நானும் உங்களை, கலாய்க்க பகிடிக்குத்தான் எழுதினேன். 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.