Everything posted by தமிழ் சிறி
-
தேசபந்து தென்னகோன் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்ய உத்தரவு
- உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூளையாக செயல்பட்டவரை எனக்கு தெரியும் – ஞானசார தேரர்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூளையாக செயல்பட்டவரை எனக்கு தெரியும் – ஞானசார தேரர் 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூளையாக செயற்பட்டவரை தமக்கு தெரியும் எனவும், ஜனாதிபதி மற்றும் உயர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அவர் தொடர்பில் அறிவிக்கவுள்ளதாகவும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று (6) மல்வத்து – அஸ்கிரிய பீடாதிபதிகளை தரிசனம் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “நான் இதை பொறுப்புடன் சொல்கிறேன். மூளையாகச் செயல்பட்டவர் யார் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நான் அதை ஊடகங்களுக்கு வெளிப்படுத்த மாட்டேன். ஜனாதிபதிக்கும் நாட்டின் பாதுகாப்புக்கு பொறுப்பானவர்களுக்கும் அறிவிப்பேன்,” என்று தேரர் இதன்போது கூறினார். https://athavannews.com/2025/1424343- சுற்றுலா பயணிடம் இலஞ்சம் கோரிய மூன்று பொலிஸார் கைது!
சுற்றுலா பயணிடம் இலஞ்சம் கோரிய மூன்று பொலிஸார் கைது! ஆஸ்திரிய சுற்றுலாப் பெண் பயணி ஒருவரிடம் இலஞ்சம் கேட்ட குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜென்ட் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தன்னிடமிருந்த வெளிநாட்டு சிகரெட்டுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருக்க 50,000 ரூபா பணம் வழங்குமாறு சந்தேகநபர்கள் கோரியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொள்ளுப்பிட்டி காவற்துறையில் கடமையாற்றும் சார்ஜன்ட் ஒருவரும் இரண்டு கான்ஸ்டபிள்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பிலான மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1424346- யுத்தத்தில் சிக்குண்ட மக்களிற்கான மனிதாபிமான உதவிகள் தடுக்கப்பட்டன ; மருத்துவமனைகள் மீது விமான தாக்குதல் இடம்பெற்றது ஆனால் அது திட்டமிட்ட முறையில் இடம்பெறவில்லை - ரணில்
தன்னை பதவி நீக்கம் செய்ய ஐரோப்பிய ஒன்றியம் முயற்சித்தது – அல் ஜசீராவுடனான நேர்காணலில் ரணில். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) நிலைப்பாட்டை விமர்சித்ததுடன், இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு தன்னைப் பாராட்டுவதற்கு முன்பு அவர்கள் முதலில் தன்னை பதவி நீக்கம் செய்ய முயற்சித்ததாகக் கூறினார். இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் ஆறு முறை பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க சவுதி அரேபியாவை தளமாக் கொண்ட அல் ஜசீராவில் வியாழக்கிழமை (06) மாலை ஒளிபரப்பான அல் ஜசீராவின் ஹெட் டு ஹெட் நிகழ்ச்சியில் பிரிட்டிஷ் ஒளிபரப்பாளர் மெஹ்தி ஹசனுடன் ஒரு பரபரப்பான நேர்காணலில் பங்கெடுத்தார். இதன்போதே ரணில் விக்ரமசிங்க இந்த விடயத்தைக் கூறினார். இந்த நேர்காணலின் போது அவர், பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வழக்குத் தொடுப்பிலிருந்து பாதுகாக்கவில்லை என்று மறுத்தார். 2019 ஆம் ஆண்டு இலங்கையை உலுக்கிய கொடிய பயங்கரவாத தாக்குதல்களுடன் அரசாங்க தொடர்புகள் இருப்பதாகக் கூறப்படுவதை நம்பகத்தன்மையுடன் விசாரிக்க தனது சொந்த நிர்வாகம் தவறிவிட்டது என்ற புதுப்பிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்தார். இலங்கையின் உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து போர்க்குற்ற விசாரணைகளை அரசாங்கம் கையாண்ட விதம் மற்றும் 1980 களின் பிற்பகுதியில் அவரது கண்காணிப்பின் கீழ் செய்யப்பட்ட சித்திரவதை குற்றச்சாட்டுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு சூடான விவாதம் இந்த நேர்காணலில் இடம்பெற்றது. 2022 ஆம் ஆண்டு வெகுஜன போராட்டங்களைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பு அளித்தீர்களா என்று இங்கு ஊடகவியலாளரினால் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரணில் விக்ரமசிங்க, என் நாட்டில் வழக்குத் தொடருவது குறித்து முடிவெடுப்பது சட்டமா அதிபர் தான், அவர் ஒரு அரசியல் பிரமுகர் அல்ல – நாங்கள் அவருக்கு முன் ஆதாரங்களை மட்டுமே அனுப்ப முடியும் என்றார். கோட்டாபய மற்றும் அவரது சகோதரரான முன்னாள் பிரதமர் மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இருவரும் ஊழல் மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகவும், நாட்டை பெரும் நிதி நெருக்கடியில் தள்ளியதாகவும் பரவலாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். 2022 ஆம் ஆண்டு விக்கிரமசிங்கே ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பின்னர், கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்யாமல் நாட்டிற்குள் திரும்ப அனுமதித்தது குறித்தும் இங்கு கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரணில் விக்ரமசிங்க, அவர்கள் மீண்டும் நாட்டுக்குள் உள்ளே வரலாம். அவர்கள் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. நான் எப்படி அதை செய்ய முடியும்? நான் ஒரு சர்வாதிகாரியா? – என்றார். 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பில் தொடர்புடைய “பிற சக்திகளை” ஐ.எஸ்.ஐ.எஸ்-சார்புடைய அமைப்பால் நடத்தப்பட்டதாக கத்தோலிக்க திருச்சபையின் புதிய குற்றச்சாட்டுகள் குறித்தும் ஊடகவியலாளர் ஹசன் இதன்போது வினவினார். அதற்கு பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க, இந்தக் குற்றச்சாட்டுகளை “அனைத்தும் முட்டாள்தனம்” என்றும் “கத்தோலிக்க திருச்சபையின் அரசியலுக்கு” ஒரு எடுத்துக்காட்டு என்றும் கூறினார். இலங்கையில் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் முட்டாள்தனமாகப் பேசுகிறாரா?” என்று ஹசன் மறுபடியும் வினவினார். அதற்கு “ஆம்,” என ரணில் விக்கிரமசிங்க கூறினார். 2019 ஆம் ஆண்டு பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க, உள்ளூர் கார்டினல் மெல்கம் ரஞ்சித்தின் பொது அறிக்கைகளுக்கும், தொலைக்காட்சி பதிவுக்கு முன்பு அல் ஜசீராவின் தலைமை குழுவிற்கு கார்டினல் தெரிவித்த பிரத்யேக கருத்துக்களுக்கும் பதிலளித்தார். அல் ஜசீராவுடனான தொலைபேசி அழைப்பில், உண்மையிலேயே சுயாதீனமான விசாரணைக்கான திருச்சபையின் கோரிக்கையை விக்ரமசிங்கே கவனிக்கத் தவறிவிட்டார் என்றும், விக்ரமசிங்கவின் ஜனாதிபதி காலத்தில் முந்தைய விசாரணை மற்றும் அறிக்கை “அது எழுதப்பட்ட காகிதத்திற்கு மதிப்புக்குரியது அல்ல” என்றும் மெல்கம் ரஞ்சித் கூறியிருந்தார். இலங்கையின் உள்நாட்டுப் போருக்கு உண்மை மற்றும் சமரசம் குறித்து ஹசன், விடுதலைப் புலிகள் (LTTE) பக்கம் திரும்பியபோது, 2009 இல் முடிவடைந்த மோதலில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கு நீதி வழங்கப்பட்டதா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, இல்லை. எந்த சமூகத்திற்கும் நீதி இதுவரை வழங்கப்படவில்லை – என்றார். அத்துடன், போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் தடுக்கப்பட்டதையும், சில மருத்துவமனைகள் குண்டுத் தாக்குதல்களில் தாக்கப்பட்டத்தையும் அவர் ஒப்புக் கொண்டார், ஆனால் அத்தகைய குண்டுவெடிப்புகள் முறையாக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டவை என்பதை மறுத்தார். ஐ.நா. குழுவின் கூற்றுப்படி, இலங்கை அரசாங்கப் படைகள் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குவதைத் தடுத்தன என்று ஹசன் கூறினார். அது தொடர்பில் பதிலளித்த போரின் இறுதிக் கட்டத்தின் போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்ரமசிங்கே, அது நடந்தது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன் – என்றார். அமெரிக்க வெளிவிகாரத் துறை போர்க்குற்றங்கள் செய்ததாக குற்றம் சாட்டும் ஜெனரல் சவேந்திர சில்வாவை, ஜனாதிபதியாக மீண்டும் இலங்கையின் ஆயுதப் படைகளுக்குத் தலைவராக நியமித்ததற்கான காரணம் குறித்தும் ரணில் விக்ரமசிங்க இதன்போது தெளிவுபடுத்தினார். ஒரு தேர்தலின் போது இராணுவத் தளபதிகளை மாற்றக்கூடாது என்பது ஒரு நடைமுறை, நான் பொறுப்பேற்றபோது, அதைச் சரிபார்த்தேன், ஜெனரல் சில்வா அதில் (போர்க் குற்றங்களில்) ஈடுபடவில்லை என்பதில் நான் திருப்தி அடைந்தேன் என்று அவர் மேலும் கூறினார். 1980களின் பிற்பகுதியில் ஒரு அமைச்சராக தாம் வசித்து வந்த படலந்த என்ற வீட்டுத் தொகுதியில் சட்டவிரோத தடுப்புக்காவல், சித்திரவதை மற்றும் கொலைகள் நடந்ததாக ரணில் விக்ரமசிங்க அறிந்திருந்ததாக அரசாங்க விசாரணை ஆணையகம் கூறிய குற்றச்சாட்டுகளையும் முன்னாள் ஜனாதிபதி இதன்போது மறுத்தார். ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், காலி முகத்திடலில் போராட்டக்காரர்களை கையாண்ட விதம் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து வந்த விமர்சனங்கள் குறித்து ரணில் விக்கிரமசிங்கேவிடம் இங்கு கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஐரோப்பிய ஒன்றியம் சில நிறுவனங்களுக்கு நிதியளித்து, எனது இராஜினாமாவைக் கோரியது, அதன் பின்னரே அதே ஒன்றியம் இலங்கையை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுத்த மனிதராக என்னைப் பாராட்டியது” என்று கூறினார். இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய அரசியல் மற்றும் நிதி நெருக்கடிகளில் ஒன்றின் மத்தியில் 2022 இல் நாடாளுமன்றத்தால் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க, 2024 தேர்தல் தோல்வியை சந்தித்தார். இருந்தாலும் தனது ஜனாதிபதி பதவிக் காலத்தில் மேற்கொண்ட செயல்கள் தொடர்பில் அவர் இந்த நேர்காணலில் பெருமிதம் கொண்டார். இரண்டு ஆண்டுகளில், நான் பொருளாதாரத்தை மீண்டும் பாதையில் கொண்டு வந்தேன். அதாவது பணவீக்கக் குறைப்பு, சுருக்கம். இது மிக மிக கடினம். “நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் எனக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை செய்தேன்,” என்று கூறினார். மேலும், ஜனாதிபதியாக அவர் மத்தியஸ்தம் செய்த ஒரு முக்கிய சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஒப்பந்தத்தை மேற்கொள்ளிட்டு “தான் ஜனாதிபதி பதவியை ஏற்கவில்லை என்றால், நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார சரிவு ஏற்பட்டிருக்கும்” – என்று சுட்டிக்காட்டினார்.https://athavannews.com/2025/1424349- யாழில் சமூக வலைத்தளத்தில் நேரலை காணொளிகளைப் பதிவிட்டு முரண்பாட்டில் ஈடுபட்ட சந்தேக நபருக்கு விளக்கமறியல்
ஆள்... இவர் தான். நல்ல அடி கொடுத்து, பிற கைதிகளுடன் சேர்த்து விலங்கும் மாட்டி, சட்டையையும் கிழித்து அனுப்பி இருக்கின்றார்கள். 😅- லண்டனில் எஸ்.ஜெய்சங்கர் மீதான தாக்குதல் முயற்சி; இங்கிலாந்தின் பாதுகாப்பு குறித்து கேள்வி!
லண்டனில் எஸ்.ஜெய்சங்கர் மீதான தாக்குதல் முயற்சி; இங்கிலாந்தின் பாதுகாப்பு குறித்து கேள்வி! லண்டனில் “காலிஸ்தானிய குண்டர்களால்” இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மீதான தாக்குதல் முயற்சிகளைத் தொடர்ந்து வெளிவிவகார அமைச்சர்களுக்கான ஐக்கிய இராச்சியத்தின் பாதுகாப்பு ஒரு கேள்விக்குறியாக மாறியது. இந்த சம்பவம் ஜனநாயகத்திற்கும், இந்தியாவில் உள்ள நண்பர்கள் மற்றும் நட்பு நாடுகளுக்கும் அவமானம் என்று பொது மன்றத்தில் பிரச்சினையை எழுப்பிய பிரித்தானிய எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் சட்ட மன்ற உறுப்பினர் பாப் பிளாக்மேன் கூறினார். இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் பிளாக்மேன் வலியுறுத்தினார். மேலும், இராஜதந்திரிகளின் பாதுகாப்பு நெறிமுறைகள் தொடர்பான பொருத்தமான அமைச்சரவை அறிக்கைகளை உறுதி செய்யுமாறு அவைத் தலைவரைக் கேட்டுக்கொண்டார். இது தொடர்பில் மேலும் உரையாற்றிய அவர், நேற்று (புதன்கிழமை) இந்திய வெளிவிகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், இந்த நாட்டில் இந்திய மக்கள் மத்தியில் உரையாற்றி முடிந்ததும் ஒரு பொது இடத்தில் இருந்து வெளியேறும்போது தாக்குதல் முயற்சி முன்னெடுக்கப்பட்டது. காலிஸ்தானி குண்டர்களால் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது. இது ஜெனீவா மாநாட்டிற்கு எதிரானது, மேலும் அவர் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய காவல்துறையும் பாதுகாப்புப் படையினரும் தவறிவிட்டதாகத் தெரிகிறது. இப்போது, இது ஜனநாயகத்திற்கு ஒரு அவமானம், இது இந்தியாவில் உள்ள நமது நண்பர்கள் மற்றும் நட்பு நாடுகளுக்கு ஒரு அவமானம். மேலும் இது மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே, இந்த நாட்டிற்கு வெளியூர் இராஜதந்திரிகள் வரும்போது, அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யப் போவது குறித்து உள்துறைச் செயலாளரோ அல்லது பொருத்தமான அமைச்சரோ இந்த அவையில் ஒரு அறிக்கை வெளியிடுவதைத் தலைவர் உறுதி செய்வாரா? என்றும் அவர் இதன்போது கேள்வி எழுப்பினார். ஜெய்சங்கருக்கு எதிரான சம்பவத்திற்கு தொழிலாளர் கட்சித் தலைவர் லூசி பவல் மன்னிப்பு கேட்டார். லண்டனில் உள்ள சாத்தம் ஹவுஸ் சிந்தனைக் குழுவில் நடந்த ஒரு நிகழ்விலிருந்து வெளியேறும்போது இந்திய வெளிவிவகார அமைச்சர் தாக்கப்பட்டார். மார்ச் 6 (புதன்கிழமை) மாலை மத்திய லண்டனில் உள்ள சாத்தம் ஹவுஸுக்கு வெளியே இந்த சம்பவம் நடந்தது. ஆன்லைனில் பரவி வரும் ஒரு காணொளியில், காலிஸ்தானிய குண்டர்கள் ஜெய்சங்கர் பயணித்த வாகனத்தை நோக்கி ஓடி வருவதும், லண்டன் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் இந்திய தேசியக் கொடியைக் கிழிப்பதும் காட்டப்படுகிறது. ஜெய்சங்கர் கலந்துரையாடலில் பங்கேற்ற இடத்திற்கு வெளியே காலிஸ்தான் ஆதரவு ஆதரவாளர்கள் கொடிகளை ஏந்தி போராட்டம் நடத்தினர். வர்த்தகம், சுகாதாரம், கல்வி, மக்களிடையேயான உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை உள்ளடக்கிய இந்தியா-இங்கிலாந்து விரிவான மூலோபாய கூட்டாண்மையை வலுப்படுத்த ஜெய்சங்கர் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1424368- துப்பாக்கி, வெடிமருந்துகளுடன் விமானத்தில் ஏற முற்பட்ட சிறுவன் – அவுஸ்திரேலியாவில் பரபரப்பு.
துப்பாக்கி, வெடிமருந்துகளுடன் விமானத்தில் ஏற முற்பட்ட சிறுவன் – அவுஸ்திரேலியாவில் பரபரப்பு. அவுஸ்திரேலியாவில் துப்பாக்கி, வெடிமருந்துகளுடன் விமானத்தில் ஏறிய 17 வயது சிறுவன் மீது பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர். வியாழக்கிழமை மெல்போர்ன் அருகே உள்ள விமான நிலையத்திற்குள் பதுங்கிச் சென்று விமானத்தில் ஏற முயன்ற குறித்த சிறுவனை, துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளுடன் பயணிகள் மடக்கிப் பிடித்தனர். அவலோன் விமான நிலையத்தில் பாதுகாப்பு வேலியில் இருந்த ஒரு துளை வழியாக அந்த சிறுவன் விமான நிலையத்தின் ஓடுபாதை பகுதிக்குள் நுழைந்துள்ளார். பின்னர், அவர் சுமார் 160 பயணிகளுடன் சிட்டினிக்கு புறப்படத் தயாராகவிருந்த JQ 610 ஜெட்ஸ்டார் விமானத்திற்குள் ஏற முற்பட்ட போது மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளதாக விக்டோரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவலோன் விமான நிலையத்தில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த சிறுவன் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டார். அந் நாட்டு நேரப்படி வியாழன் பிற்பகல் 2.20 மணியளவில் விக்டோரியாவின் இரண்டாவது பெரிய விமான நிலையத்தில் உள்ள வேலியில் உள்ள ஒரு துளை வழியாக அவர் புகுந்து, பின்னர் விமானத்தை நோக்கி நடந்து சென்றதாகக் கூறப்படுகிறது. Athavan Newsதுப்பாக்கி, வெடிமருந்துகளுடன் விமானத்தில் ஏற முற்பட்ட சிற...அவுஸ்திரேலியாவில் துப்பாக்கி, வெடிமருந்துகளுடன் விமானத்தில் ஏறிய 17 வயது சிறுவன் மீது பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர். வியாழக்கிழமை மெல்போர்ன் அருகே உள்ள விமான நிலையத்திற்குள் பதுங்கிச் சென்று வி...- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நீங்கள் இருவரும்.. டக்கென்று புரிந்து கொண்டீர்கள். மிக்க மகிழ்ச்சி. காணொளி என்றால், யூ ரியூப் முகவரியை பதிய வேண்டும். முகநூல் காணொளிகளை யாழ். களத்தில் நேரடியாக இணைக்க முடியாது. அதன் இணைப்பை பதிந்தால்... பார்வையாளர்கள் சுட்டியை அமத்தி காணொளிகளை பார்வையிட முடியும். உதாரணம்: யூ ரியூப்: 👉 https://www.youtube.com/watch?v=52kDVborPj 👈 முகநூல்: 👉 https://www.facebook.com/watch/?v=743323616693101 👈- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
@செம்பாட்டான் நீங்கள் படத்தை நேரடியாக கொப்பி பண்ணினால்.. படம் அனுமதித்த அளவைவிட பெரிது என காட்டும். அதனால்... மவுசால் இணைக்கப் பட வேண்டிய படத்தை கிளிக் பண்ணும் போது, படத்தின் அட்ரஸ் என்று ஒரு தெரிவு காட்டும். அதனை கொப்பி பண்ணி, பதியும் போது... படம் இணைக்கப் பட்டு விடும். இதே முறையில்தான் நான் செய்கின்றனான்.- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
படங்களை இணைப்பதற்கு.... @கிருபன் ஜீ, @ஈழப்பிரியன் போன்றோர், அழகு தமிழில் விரிவாக விளங்கப்படுத்துவார்கள் என நம்புகின்றேன்.- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நோன்பு பிடிக்காமல்... கிரிக்கெட் விளையாடிய மொஹமெட் ஷமிக்கு, முஸ்லீம் ஜமாத் தலைவர் கண்டனம்.- பணம் மோசடி செய்த குற்றச்சாட்டில் மர்வின் சில்வா கைது
மேர்வின் சில்வா... மகிந்தவின் காலடியில் குந்தி இருந்தது, ரூபாவாகினி தொலைக்காட்சி நிலையத்திற்குள் சென்று குழப்பம் விளைவிக்க முற்பட்ட போது, அங்கிருந்தவர்களால் அடி கொடுத்து அனுப்பப் பட்டது, நீர்கொழும்பில் ஒரு அரச ஊழியரை மரத்தில் கட்டி வைத்து அடித்தது என்று... ஒரு தாதாவாக இருந்த ரௌடி. இவர்களை ஈவு இரக்கம் பார்க்காமல் அதி உச்ச தண்டனை கொடுத்து சிறையில் அடைக்க வேண்டும்.- பணம் மோசடி செய்த குற்றச்சாட்டில் மர்வின் சில்வா கைது
மேர்வின் சில்வாவிற்கு விளக்கமறியல்! குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரை மார்ச் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் இன்று (06) மஹர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை களனிப் பகுதியில் ஒரு காணி தொடர்பான போலி ஆவணங்களைத் தயாரித்து பண மோசடி செய்த குற்றச்சாட்டில் மேர்வின் சில்வா நேற்றிரவு கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1424337- இரசித்த.... புகைப்படங்கள்.
மரத்தின் மீது, கலியாண புகைப்படம். 😃- உலக கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கை முன்னேற்றம்!
உலக கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கை முன்னேற்றம்! விசா இல்லாத பயண அணுகலின் அடிப்படையில் உலகளாவிய கடவுச்சீட்டு வலிமையை மதிப்பிடும் அண்மைய ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் இலங்கை 91 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இலங்கை கடவுச்சீட்டானது குறித்த தரவரிசையில் கடந்த ஆண்டு 96 ஆவது இடத்தில் இருந்தது. இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டு தரவரிசையில் ஐந்து இடங்களுக்கு இலங்கையின் கடவுச்சீட்டு முன்னேற்றம் கண்டுள்ளது. இதன்படி, இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் 42 நாடுகளுக்கு பயணிக்க முடியும். மொத்தம் 99 தரவரிசைகளைக் கொண்ட பட்டியலில் ஈரான் மற்றும் சூடானுடன் இலங்கை 91 ஆவது இடத்தைப் பகிர்ந்து கொள்கிறது. உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டை கொண்ட நாடாக சிங்கப்பூர் திகழ்கிறது. சிங்கப்பூர் கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் 193 இடங்களுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம். ஜப்பான் மற்றும் தென் கொரியா கூட்டாக இரண்டாவது இடத்தையும், டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகியவை மூன்றாவது இடத்தையும் பகிர்ந்து கொள்கின்றன. தரவரிசையில் இறுதி இடத்தில் ஆப்கானிஸ்தானின் கடவுச்சீட்டு உள்ளது. அதன் கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் 25 நாடுகளுக்கு மாத்திரம் பயணிக்கலாம். உலகளாவிய குடியுரிமை மற்றும் குடியிருப்பு ஆலோசனை நிறுவனமான ஹென்லி & பார்ட்னர்ஸால் தொகுக்கப்பட்ட ஹென்லி கடவுச்சீட்டு குறியீடு, முன் விசா இல்லாமல் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் எத்தனை நாடுகளுக்குச் செல்லலாம் என்பதன் அடிப்படையில் கடவுச்சீட்டுகளை தரவரிசைப்படுத்துகிறது. https://athavannews.com/2025/1424279- விகடன் இணையதள முடக்கத்தை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
மூடப்பட்ட விகடன் இணையத்தள தடையை நீக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவு. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு அருகில் பிரதமர் மோடி சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் அமர்ந்திருப்பதைப் போன்று கார்ட்டூன் ஒன்று விகடனின் இணைய இதழான விகடன் ப்ளஸ்ஸில் வெளியிடப்பட்டது. இந்த கார்ட்டூன் தொடர்பாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில், விகடனின் இணையதளம் கடந்த 15-ந்தேதி முடக்கப்பட்டது. எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு வெளியிடவில்லை. மத்திய தொலைத்தொடர்புத் துறைக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அளித்த பரிந்துரையின்படி, விகடன் பத்திரிகையின் இணையதளம் இந்தியாவில் முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விகடன் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நீதிபதி பரதசக்ரவர்த்தி முன்பு நடைபெற்றது. ஆனந்த விகடன் நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜயநாராயணன் ஆஜராகி வாதிட்டார். இது ஊடக சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்றும், இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்றும் வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, இணையதளம் முடக்கத்தை நீக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். அதேசமயம் சம்பந்தப்பட்ட கார்ட்டூனை பிளாக் செய்யுமாறு விகடன் நிறுவனத்துக்கும் அறிவுறுத்தி உள்ளார். https://athavannews.com/2025/1424303- தத்தெடுத்த குழந்தையை கொலை செய்த தம்பதிக்கு மரணதண்டனை
என்ன கொடுமையப்பா. தத்தெடுத்துவிட்டு கொலை செய்கிறார்கள். பிறகு என்ன இழவுக்கு தத்து எடுத்தவர்கள். இப்போ... குழந்தையும் இல்லை. தம்பதிக்கும் மரண தண்டனை. இதிலும் பார்க்க, பேசாமல் இருந்திருக்கலாமே.- தேசபந்து தென்னகோன் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்ய உத்தரவு
👉 https://www.facebook.com/watch/?v=743323616693101 👈 அரகலய போராட்டத்தின் போது, அப்போதைய பொலிஸ் மா அதிபர் தென்னகோன் போராட்டக்காரர்களிடம் சணல் அடி வாங்கும், கண்கொள்ளா காட்சி. 😂- தேசபந்து தென்னகோன் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்ய உத்தரவு
இந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் தென்னகோன், அரகலய போராட்டத்தின் போது... மகிந்த, கோத்தாவின் அடியாட்களுக்கு காலிமுகத்திடலில் அரகலய உண்ணாவிரத போராட்டம் நடத்துபவர்கள் மீது தாக்குதல் நடத்தச் சொல்லி கட்டளையிட்ட காணொளி இணையத்தில் வந்ததைப் பார்த்த சிங்களவர்கள் பொது இடத்தில் நடந்து போன இவரின் மண்டையை உடைத்து அனுப்பியவர்கள். இவர்... கோத்தா, மகிந்த பின் ரணிலின் சட்டத்திற்கு மாறான கட்டளைகளை உடனுக்குடன் செயல்படுத்தியதால் அவர்களின் அன்புக்கு உரியவராக எப்போதும் இருந்தார். இப்போ.... கிரிமினல் போல்... ஒழித்து திரிய வேண்டிய கட்டத்தில் இருக்கின்றார். காலம் விசித்திரமானது. அது எப்பவாவது திருப்பி அடிக்க காத்திருக்கும்.- உக்ரேனுக்கான இராணுவ உதவியை இடைநிறுத்திய ட்ரம்ப்!
உக்ரைன் போரை... ஜனாதிபதி செலென்ஸ்கி ஆரம்பத்திலேயே, ரஷ்யாவுடன் பேசி தவிர்த்து இருக்கப் பட வேண்டியது. இப்ப உக்ரைன் நாட்டின் கனிமவளம் அதிகம் உள்ள பகுதியில்... 20 வீதத்தை ரஷ்யாவிடம் பறி கொடுத்து, நாட்டை கற் குவியலாக்கி, பல்லாயிரக் கணக்கானவர்களை இழந்து, பலரை அங்கவீனர்களாக்கி, கடைசியில் ரம்ப்பிடம் சரணடைந்ததுடன்... இப்போ எஞ்சிய கனிம வளத்தையும் அமெரிக்கா எடுக்க ஒப்பந்தம் எழுதப் போகின்றார் கோமாளி செலென்ஸ்கி. சரி... நடந்தது, நடந்து போச்சு. ரஷ்யா பறித்த நாடு போக... மிகுதி உள்ள உக்ரைனுக்கு... புது வரை படத்தை கீறுகின்ற அலுவலை பாருங்கோ.- தேசபந்து தென்னகோன் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்ய உத்தரவு
- கருத்து படங்கள்
- போலியான விளம்பரங்கள்; மத்திய வங்கியின் எச்சரிக்கை!
போலியான விளம்பரங்கள்; மத்திய வங்கியின் எச்சரிக்கை! சிறிய முதலீடுகளுக்கு கணிசமான நிதி வருமானத்தை வங்கி வழங்குவதாக பொய்யாகக் கூறும் மோசடி விளம்பரங்களுக்கு எதிராக இலங்கை மத்திய வங்கி (CBSL) கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த ஏமாற்று விளம்பரங்கள், பொதுமக்களைத் தவறாக வழிநடத்த மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவின் படங்களைத் தவறாகப் பயன்படுத்துகின்றன என்பதை CBSL எடுத்துக்காட்டியது. டிஜிட்டல் தளங்களில் தோன்றும் இந்த பொய்யான விளம்பரங்கள், மத்திய வங்கி ஒரு சிறிய தொகையை முதலீடு செய்யும் நபர்களுக்கு பெரிய தொகையை செலுத்துவதாக தவறாகக் கூறுகின்றன. எனவே, இது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு CBSL பொது மக்களை எச்சரித்துள்ளது. https://athavannews.com/2025/1424187- தேசபந்து தென்னகோன் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்ய உத்தரவு
முன்னாள் பொலிஸ்மா அதிபரை கைது செய்ய பொது மக்களின் உதவியை நாடும் காவல்துறை! பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் (IGP) தேஷபந்து தென்னகோன் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். தேஷபந்து தென்னகோனை கண்டுபிடிக்கும் பணி குற்றப் புலனாய்வுத் துறையிடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் அவரைக் கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் தொடர்புடைய தகவல்கள் தெரிந்தவர்கள் உடனடியாக சிஐடிக்கு தெரிவிக்குமாறு பொலிஸ் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். அத்துடன், முன்னாள் பொலிஸ் மா அதிபர் நாட்டை விட்டு தப்பிச் சென்றதற்கான எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார். https://athavannews.com/2025/1424260- 2025 ஆம் ஆண்டில் இதுவரை 19 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு!
2025 ஆம் ஆண்டில் இதுவரை 19 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு! இந்த ஆண்டு இதுவரையிலான காலப்பகுதியில், அண்மைய குற்றச் செயல்களில் பயன்படுத்தப்பட்ட 13 T-56 துப்பாக்கிகள் மற்றும் கைத்துப்பாக்கிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த தகவலை இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியகட்சகருமான புத்திக மனதுங்க தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டில் இதுவரை 19 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இவற்றில் 12 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் சம்பந்தப்பட்டவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள ஏழு சம்பவங்கள் தனிப்பட்ட தகராறுகளின் விளைவாக மேற்கொள்ளப்பட்டவை. இந்த சம்பவங்கள் தொடர்பாக 68 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேநேரம், பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடத்தி வருவதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார். https://athavannews.com/2025/1424267 - உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூளையாக செயல்பட்டவரை எனக்கு தெரியும் – ஞானசார தேரர்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.