Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. சின்னக் கதிர்காமர் என்று அழைக்கப்படும் சுமந்திரன் தரப்புக்கு, விகாரை இருப்பதில் நல்ல விருப்பம் போல் தெரிகின்றது. இப்படியான போராட்டங்களில்... ஆளை காணக் கிடைக்குதில்லை.
  2. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் இந்தியாவில் கைது! வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இருந்து இந்தியாவின் மதுரைக்கு சென்ற கு.திலீபன் அங்கிருந்து பிறிதொரு கடவுச் சீட்டில் வெளிநாடு செல்ல முற்பட்டுள்ள நிலையில் தமிழகப் பொலிஸாரால் கடந்த திங்கள் கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கு.திலீபன் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1421052
  3. @கிருபன் ஜீ... இரண்டு பிழை திருத்தங்களை அறியத் தருகின்றேன். "Mitchell Starc" விளையாடாத படியால், இந்திய வீரர் Arshdeep Singh ஐ தெரிவு செய்கின்றேன். "Jasprit Bumrah" விளையாடாத படியால், Mohammed Shami ஐ தெரிவு செய்கின்றேன். சிரமத்திற்கு மன்னிக்கவும். நன்றி.
  4. நாகப்பட்டினம்-இலங்கை இடையேயான கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு! நாகப்பட்டினம் – இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறைக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் கப்பல் சேவை கடந்த நவம்பர் 18 ஆம் திகதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த கப்பல் சேவையானது ஜனவரி முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படும் எனக் கப்பல் நிறுவனம் தெரிவித்திருந்தது. எவ்வாறாயினும் சீரற்ற வானிலை காரணமாக கப்பல் போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், குறித்த கப்பல் போக்குவரத்து சேவை இன்று முதல் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், தொழில்நுட்ப அனுமதி கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து எதிர்வரும் 15 ஆம் திகதி மீண்டும் தீர்மானிக்கப்படும் எனக் கப்பல் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1421012
  5. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நீதியமைச்சர்! சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளை விரைவில் நிறைவு செய்வதற்காக புதிய வேலைத்திட்டங்களை தயாரிக்கவுள்ளதாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். துஷ்பிரயோகம் இடம்பெற்ற தினத்திலிருந்து வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கு சுமார் 05 வருடங்கள் செல்வதாக அவர் குறிப்பிட்டார். காலம் தாழ்த்தி வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு சாட்சி வழங்கப்படும் போது பாதிக்கப்பட்ட சிறுவர்களினால் சம்பவம் தொடர்பான முழுமையான தகவல்களை நினைவில் வைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படுமெனவும் அவ்வாறு இடம்பெறும் போது குற்றவாளிகள் தப்பிக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகவும் நீதியமைச்சர் கூறினார். அத்துடன் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் சட்டமா அதிபரே வழக்கு தாக்கல் செய்வதாகவும் அவரது பணிக்குழாத்தில் ஆளணிப் பற்றாக்குறை நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார். சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் தனியான பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் வழக்கு விசாரணைகளை விரைவில் முடிவுறுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் நீதியமைச்சர் ஹர்ஷன நாணாயக்கார மேலும் நம்பிக்கை வௌியிட்டுள்ளார். https://athavannews.com/2025/1421036
  6. சுட்டிக் காட்டியமைக்கு நன்றி, எப்போதும் தமிழன்.
  7. தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போதே மின் தடை ஏற்படவில்லை – குரங்கு சேட்டை வேண்டாம். தமிழீழ விடுதலைப் புலிகள் உள்நாட்டு யுத்தத்தின் போது 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கியை தீயிட்டு கொழுத்திய போது கூட, நாடளாவிய ரீதியில் மின்துண்டிக்கப்படவில்லை. அவ்வாறிக்கையில் குரங்கின் மீது பழி சுமத்தி குரங்கு சேட்டைகள் காண்பிக்க வேண்டாம். அளவுக்கதிகமாக மக்களை ஏமாற்றவும் முற்பட வேண்டாம் என்று ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தை எச்சரித்துள்ளது. கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஞாயிறன்று ஏற்பட்ட மின்தடைக்கு மின்சக்தி அமைச்சர் குரங்குகள் மீது பழி சுமத்தினார். 33,000 மெகாவோல்ட் கொண்ட மின் பிறப்பாக்கி விடுதலைப் புலிகளால் தீ வைக்கப்பட்ட போது கூட இவ்வாறு தேசியளவில் மின்சாரம் துண்டிக்கப்படவில்லை. அவ்வாறிருக்கையில் ஒரு குரங்கால் முழு நாட்டுக்கும் மின் துண்டிப்பை ஏற்படுத்த முடியுமா? அமைச்சரால் குறிப்பிடப்பட்ட இந்த கருத்து பாரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பின்னர் கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளே இதற்கு காரணம் என்று அமைச்சர் குறிப்பிட்டார் என சுட்டிக்காட்டியிருந்தார். https://athavannews.com/2025/1420934
  8. உலக அரச உச்சி மாநாட்டுடன் இணைந்ததாக ஜனாதிபதி மற்றும் அரச தலைவர்களுக்கு இடையில் பல சந்திப்புகள்! 2025 ஆம் ஆண்டு நடைபெறும் உலக அரச உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (11) பல அரச தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொண்டார். இதன்போது, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்புக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (11) இடம்பெற்றது. இலங்கை அரசியலில் அரசாங்கத்தின் சிறப்பான வெற்றிக்காக பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு வாழ்த்து தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை வலுப்படுத்துவது மற்றும் சந்தையை பல்வகைப்படுத்துவது குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் கவனம் செலுத்தியதுடன், புதிய மூலோபாய திட்டத்தின் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடினர். தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்டம் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமரிடம் விளக்கமளித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தற்போதைய அரசாங்கம் ஊழலற்ற, வெளிப்படையான பொருளாதார முகாமைத்துவத்தை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தார். அதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்திற்கு நல்லதொரு அடித்தளத்தை அமைக்கும் வகையில் செயற்பட முடியும் என்பதையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. அதனையடுத்து, பிரித்தானிய முன்னாள் பிரதமர் டோனி பிளேயார் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றதுடன், பிரித்தானியாவின் நிபுணத்துவம் மற்றும் பல்வேறு துறைகளில் பயிற்சிகளை பெற்றுக்கொள்ளவதற்கு இலங்கைக்கு காணப்படும் இயலுமையையும் டோனி பிளேயார் சுட்டிக்காட்டினார். அத்துடன், இலங்கையில் சுகாதாரம், துறைமுகம் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து முன்னாள் பிரித்தானிய பிரதமரிடம் தெரிவித்த ஜனாதிபதி, அதற்காக முதலீட்டாளர்களை ஈடுபடுத்துமாறும் அழைப்பு விடுத்தார். காலநிலை இடர்பாடுகளை எதிர்கொள்ளுதல், நல்லாட்சி, விவசாயம் போன்ற துறைகளில் நிபுணத்துவம் மற்றும் பயிற்சிகளை இலங்கை பெற்றுக்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டிய டோனி பிளேயார், இலங்கையின் தற்போதைய ஆட்சிக்கு பாராட்டுத் தெரிவித்தார். குறிப்பாக, தற்போதைய அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் ஊழலற்ற நிர்வாகத்திற்கும் டோனி பிளேயார் இதன்போது பாராட்டு தெரிவித்தார். வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஜனாதிபதியுடன் இந்த விஜயத்தில் கலந்து கொண்டுள்ளார். https://athavannews.com/2025/1420913
  9. அர்ச்சுனா எம்.பி.யின் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் படுகாயம்! நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் தாக்குதலுக்கு உள்ளாகிய நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (11) இரவு யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றுக்கு இராமநாதன் அர்ச்சுனா சென்று அங்கு காணொளி பதிவில் ஈடுபட்டார். இதன் போது அங்கு நின்ற நபர் தன்னை காணொளி பதிவு செய்ய வேண்டாம் என அர்ச்சுனாவிடம் தெரிவித்திருந்தார். இதன்போது அர்ச்சனா அதனை மீறி காணொளி பதிவில் ஈடுபட்டார். இந்நிலையில் அர்ச்சுனாவுக்கும் குறித்த நபருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது. இதன்போது அர்ச்சுனா பீங்கான் ஒன்றினை எடுத்து குறித்த நபரின் தலையில் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த நபர் யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற அர்ச்சனா, குறித்த நபர் தன் மீது தாக்குதல் நடாத்தியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார் என பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2025/1420957
  10. ட்ரம்பின் கட்டண அச்சுறுத்தல்; அமெரிக்காவுக்கான பயணத்தை தவிர்க்கும் கனேடியர்கள்! அமெரிக்க கட்டண அச்சுறுத்தல்களால் தேசபக்தியின் எழுச்சிக்கு மத்தியில் அதிகமான கனேடியர்கள் தங்கள் அமெரிக்க பயணங்களை இரத்து செய்துவிட்டு வேறு நாடுகளுக்கு விடுமுறைக்கு செல்வதாக கனடாவின் பயண முகவர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கனேடிய இறக்குமதிகள் மீது 25 சதவீத சுங்க வரிகளை விதிக்கப் போவதாக அச்சுறுத்தியுள்ளார். அதே போல் கனடாவை 51 ஆவது மாநிலமாக உள்வாங்குவதற்கு “பொருளாதார சக்தியை” பயன்படுத்துவது குறித்தும் யோசனை வெளியிட்டுள்ளார். திங்களன்று (10), கனடா மற்றும் பிற இடங்களில் இருந்து அனைத்து எஃகு மற்றும் அலுமினியம் இறக்குமதிகள் மீது 25 சதவீத வரிகளை விதிக்கும் உத்தரவுகளிலும் அவர் கையெழுத்திட்டார். இது மார்ச் 12 ஆம் திகதி அமுலுக்கு வரும். பெரும்பாலான கனேடிய பொருட்களின் மீதான பரந்த கட்டணங்கள் மார்ச் தொடக்கம் வரை குறைந்தது 30 நாட்களுக்கு இடைநிறுத்தப்படும். வர்த்தகப் போரின் அச்சுறுத்தல்கள் கனேடிய பெருமையை உயர்த்துவதற்கு வழிவகுத்தன மற்றும் கனேடிய தேசபக்தி அதிகரித்து வருவதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இப்போது அதிகமான கனேடியர்கள் தங்கள் அமெரிக்கப் பயணங்களை இரத்து செய்துவிட்டு, வேறு நாடுகளுக்கு விடுமுறையை கழிக்கச் செல்வதாக கனடாவின் பயண முகவர்கள் தெரிவித்துள்ளனர். வான்கூவரை தளமாகக் கொண்ட பயணக் குழுவின் பயண ஆலோசகரான மெக்கென்சி மெக்மில்லன், கனேடியர்கள் பெரும்பாலும் அமெரிக்காவைத் தவிர்க்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார். அமெரிக்க பயணத் துறைக்கான யு.எஸ். டிராவல் அசோசியேஷனின் கூற்றுப்படி, கனடாவில் இருந்து உள்வரும் பயணத்தில் 10 சதவீதம் சரிந்தால், 2.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவழிக்கப்பட்டு 14,000 அமெரிக்க வேலைகள் பாதிக்கப்படும் என்றார். அமெரிக்காவிற்கான சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் முதன்மையான ஆதாரமாக கனடா உள்ளது. 2024 இல் 20.4 மில்லியன் வருகைகள், $20.5 பில்லியன் செலவை உருவாக்கி 140,000 அமெரிக்க வேலைகளை ஏற்படுத்தி கொடுத்ததாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2025/1420995
  11. 14 ஆண்டுகளுக்குப் பின்னர் சிங்கப்பூருக்குக் கிடைத்த அங்கீகாரம்! இலஞ்ச ஊழல் குறைந்த உலக நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் 3 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. உலக அளவில் லஞ்ச ஊழல் விவகாரங்களைக் கண்காணிக்கும் ‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ அமைப்பு வெளியிட்டுள்ள கடந்த ஆண்டுக்கான லஞ்ச ஊழல் கண்ணோட்டக் குறியீட்டு அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய பசிபிக் வட்டாரத்தில் லஞ்ச ஊழல் குறைந்த நாடாக இருந்த நியூசிலாந்தைப் பின்னுக்குத் தள்ளி சிங்கப்பூர் முன்னேறியுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்தப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் உலக அளவில் 180 நாடுகளில் மூன்றாம் இடத்துக்கு சிங்கப்பூர் வந்திருப்பது, 2020ஆம் ஆண்டிலிருந்து அது அடைந்திருக்கும் ஆக உயர்ந்த தரநிலை எனவும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு சிங்கப்பூர் ஐந்தாம் இடத்தில் இருந்தது. கடந்த 2012ஆம் ஆண்டு, உலக அளவில் 100க்கு 87 புள்ளிகளைப் பெற்று ஆகச் சிறந்த நிலையை சிங்கப்பூர் அடைந்திருந்தது. இம்முறை சிங்கப்பூர் 100க்கு 84 புள்ளிகளைப் பெற்றதன் மூலம் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதேவேளை உலகப் பட்டியலின் முதலிடத்தில் டென்மார்க் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக நீடிக்கிறது. 100க்கு 90 தரப் புள்ளிகளை அது பெற்றுள்ளது. அதற்கு அடுத்த நிலையில் 88 புள்ளிகளுடன் பின்லாந்து வந்துள்ளது. சிங்கப்பூருக்கு அடுத்து, 82 புள்ளிகளுடன் நான்காம் இடத்தை நியூசிலாந்தும் 81 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தை லக்சம்பர்க்கும் பிடித்துள்ளன. 180 நாடுகளில் பொதுத் துறையில் நிலவும் லஞ்ச ஊழல் தொடர்பாக நிபுணர்களும் வர்த்தகர்களும் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் குறியீட்டுப் புள்ளிகளை ‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ அளவிடுகிறது. வலுவான, சுதந்திரமான அமைப்புகளோடு நியாயமாக தேர்தல்களை நடத்தும் நாடுகளுக்கும் அடக்குமுறை சர்வாதிகார ஆட்சிமுறை நிலவும் நாடுகளுக்கும் இடையிலான கூர்மையான வேறுபாடுகளை இலஞ்ச ஊழல் கண்ணோட்டக் குறியீடு வெளிப்படுத்துவதாக அறிக்கை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1420962
  12. இரவு 7:30 க்கு, மீன் வாங்கி துப்பரவாக்கி, சமைத்து, சாப்பிட… நள்ளிரவு ஆகி விடுமே. ஆனாலும்… முரல் மீனின் சுவைக்கு எதுகும் ஈடாகாது. 👍🏽
  13. அர்ச்சுனாவின் பிரச்சினைகளை கவனிக்க என்றே, தனி பொலிஸ் படை அமைக்க வேண்டும் போல் உள்ளது. 😂 அதற்கு முதல் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்து… ஆள் “நோர்மல்” ஆன நிலையில் இருக்கின்றாரா உறுதிப் படுத்த வேண்டும். 🤣
  14. அல்வாயன்… மீனின் நடுப்பகுதியில் வரும் அந்தப் கறுப்பு பொருளை, விரல்களால் சிறிது நேரம் தேய்க்க போய் விடும்.
  15. எமது உணவு வகைகளான…. புட்டு, இடியப்பம், இட்டலி, தோசை போன்றவற்றை செய்வதற்கு நீண்ட தயாரிப்பு முறையும், நுண்ணியமான செய்முறையும் காரணமாக இருக்கலாம் என நினைக்கின்றேன். இடியப்பம், புட்டு தயாரிக்க மா… பதமாக அவித்து, அரித்து எடுத்து… கணக்கான சூடு அளவில் தண்ணீர் விட்டு குழைத்து எடுக்க வேண்டும். தண்ணீர் கொஞ்சம் கூடிக் குறைந்தாலே… பிழைத்து விடும். இட்டலி, தோசைக்கும்…. முதல் நாள் அரைத்து, புளிக்க வைத்து பதமாக சுட வேண்டும். இதனை பழகி வர… நீண்ட காலம் எடுக்கும். அதனால்… பிற நாட்டவர் எமது உணவுகளை தாம் தயாரிக்க அதிகம் அக்கறை காட்டுவதில்லை என நினைக்கின்றேன். எமது உணவுகள் தயாரிக்க…. இடியப்ப உரல், இடியப்ப தட்டு, புட்டுக்குழல், இட்டலி சட்டி என்று ஸ்பெஷல் உபகரணங்கள் தேவை. அதனை மினைக்கெட்டு வாங்கி சமைக்க எல்லோரும் ஆர்வம் காட்ட மாட்டார்கள். பிற நாட்டவர்… எமது உணவு விடுதிகளில் போய் சாப்பிடப் போனாலும், அங்குள்ள அழுக்கான நிலைமையும், உணவு பரிமாறுபவரின் உடைகளும்… மற்றவர்களை தலை தெறிக்க ஓட வைக்கும். 😂
  16. தகவல்களுக்கு நன்றி ராஜவன்னியன். இங்கு ஒரு குரங்கால்… நாடு முழுக்க மின்சாரம் தடைப்பட்டதாக, மின்சார துறை அமைச்சர் கருத்து கூறி… அரசாங்கத்தின் தவறை குரங்குகளின் மீது சுமத்தி இருந்தார். ஏற்கெனவே தேங்காய் தட்டுப்பாட்டிற்கும் குரங்குளின் மீது பழி சுமத்தி இருந்தது போதாது என்று… இது வேறு. 😂 சில வருடங்களுக்கு முன்பு… தமிழ் நாட்டில் மின்சாரம் தடைப் பட்டதற்கு… அணில்கள் காரணம் என்று ஒரு அமைச்சர் கூறியது உங்களுக்கு நினைவு இருக்கலாம். 🤣
  17. மாசி மாதம் எண்டாலே... மாதகல் முரல் மீனுக்கு நாக்கு தவியா தவிச்சிடும்... ஓம் என் அன்பு மனைவீட பிறந்த கிராமம்... மாசி மாதம் வந்திட்டா பட்டுவோட அம்மப்பா சொல்லிட்டு திரிவார் தம்பி ஒரு நாளைக்கு முரல் வாங்குவம் எண்டு ஆனா என்ன விலையெண்டாலும் அஞ்சாறு நாள் வாங்கீடுவார்... சரி வாங்கோ கடக்கரைக்கு போவம்... அங்க தம்பி மார் கூம்பு வலைய கொண்டு ஏழுமணிக்கு கடலுக்கு போவினம் ஒரு ரெண்டுகடல் மைல் தூரம் போக நேரம் சரியா இருக்கும்... அப்ப பாத்து இளம் முரல் மீனுகள் வெளிச்சத்துக்கு துள்ளி பாய்வினம். அந்த நேரத்தில கச்சிதமா வலைய வீசி அள்ளீடுவாங்கள் தம்பி மார்...பிறகு ஒரு எட்டுமணி மட்டில கரைக்கு வரவே வாங்கின மீன் மாயமாகீடும்... அவைக்கு அவ்வளவு கிராக்கி.... சரி மீனை வாங்கிக்கொண்டு வீட்டை ஓடி வந்து மீனை கோடிப்பக்கம் கொண்டுபோய் ஒரு சட்டீல போட்டு அலசீட்டு அரிவாளில இருந்து செதில் அடிச்சு செட்டைய மண்ணில தடவி(வழுக்காம இருக்க) வெட்டி சொண்டையும் வெட்டி போட்டு பூவோட சொட்டு மேல் குடல உருவீட்டு வயித்த நெரிச்சு சரிமானகடையல உருவிட்டு நல்லா நாலு தண்ணீல அலசி கழுவினா மீன் சமையலுக்கு தயார்... சரியெண்டு குசுனீக்க போனா மனிசி சின்னவெங்காயம் இரு இருவது பல்லு ரெண்டா பிளந்த பச்சமிளகாய் ஒரு பத்து ஒரு தேங்காயில புழிஞ்சரரெண்டு வகை பால்(முதல் பால் கப்பிப்பால்) தயாரா இருக்கும்... அங்கால வெள்ளை புட்டு சிவத்தை புட்டு இடியப்பம் எண்டு அதுவும் சைட்டா கமகமத்துக்கொண்டு வேகும்.... 😍😍 இப்ப பெரிய மீன் ஒரு பதினஞ்சு முழுசா சொத்திக்கு எடுத்து வைச்சிட்டு பிஞ்சு மீன் ஒரு இருவது பொரியலுக்கு...😊😊😊 நான் அளவா உப்பு மஞ்சல் தூள் போட்டு பொரியல் மீனை பிரட்டி வடிய போட்டிருவன்.... அதுக்கு பிறகு கணக்கான மண்சட்டி ஒண்ட அடுப்பில வைச்சு அதுக்க வெட்டின வெங்காயம் மிளகாய் ரெண்டு பேணி கப்பிப்பால விட்டு மூடி போட்டு வேக விடுவன்... அதுக்க இதமான ரெண்டு பாட்டு பாட விட்டிருவம் பட்டுவும் அம்மப்பாவும் அம்பது தடவை குசுனீக்க வந்து நோட்டம் விட்டிட்டு போவினம்... சரி இப்ப மூடிய திறந்து உப்பு அளவா போட்டு மெல்ல மீனை அடுக்கு கப்பி பால முழுவதையும் விட்டு திறந்த படி மீனை வேக விடுவம்... முரல் வாசம் மூக்கை துளைக்கும் அப்பிடியே மனிசீட முகத்தை பாத்து லைட்டா சிரிச்சா காதலும் கூடவே ருசி சேர்த்திடும்... கொதிச்சு வர முதல் பாலை விட்டு அதில புற அகப்பையால மஞ்சல் தூள அமத்தி சாடயா துலாவிவிட்டா ஒரு தரம் கலர் வரும் பாருங்கோ... இப்ப ஒரு கொதியோட சொதிய இறக்கி அதுக்க ரெண்டு தேசிக்காய வெட்டி நல்லா புழிஞ்சு புழி விட்டா ஆ சொதி அசத்தீடும்... லைட்டா உள்ளங்கைல சுடச்சுட விட்டு நக்கினா அடடே அமிர்தமெல்லோ. மனிசியும் ஓரமா கைய நீட்டுவா கொஞ்சமெடுத்து ரொம்ப ஊதிட்டு அவவிட கையில விட்டா ஒரு குட்டிக் கையும் மேல நீளும் ஆருமில்ல பட்டுவோட குட்டிக் கை... சுடுமாத்தை மெல்ல எண்டு சொல்லு பக்குவமா அவாக்கு ஒரு சொட்டு மருந்து... பிறகு அடுப்பில ஒரு தாச்சி சட்டிய வைச்சு நல்லா காய விட்டிட்டு செக்கில ஆட்டின நல்ல நல்லெண்ணை மீனை மூடுற அளவுக்கு விட்டு கொதிக்க வைச்சிட்டு உப்பு மஞ்சல் ஊறி வடிஞ்ச மீனில ஒரு அஞ்ச ஒண்டா மெல்லமா அடுக்கி மூடி விட்டா... "டுப்பு டுப்பு எண்ட சத்தத்தோட தரமா பொரிஞ்சுவர மெல்ல அகப்பையால பிரட்டி விட்டு மத்தப்பக்கமும் பொரிய விட்டு எடுத்தா மீன் பொரியலு ரெடி... அப்பிடியே எல்லாரும் நான் மனிசி பட்டு அம்மப்பா தங்கச்சி எல்லாரும் ஒண்டா இருந்து புட்டு நிறைய சொதி ரெண்டு சொதி மீன் ரெண்டு பொரியல் எண்டு போட்டு வெளுத்து கட்டுறப்ப சொர்க்கத்துக்கு ஒரு விசிட் அடிச்சிட்டு வரலாம்... இப்ப சீசன்... வாழ்க்கை வாழ்வதற்கே ஆதலால் நீங்களும் வாழ்ந்திடுங்கள் தோழர்களே... அன்புடன் கலைவாணன். Organic Farm-Jaffna
  18. குழு நிலைப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை. 1) குழு A: புதன் 19 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து, கராச்சி PAK எதிர் NZ 2) குழு A : வியாழன் 20 பெப் 09:00 AM – பங்களாதேஷ் எதிர் இந்தியா, துபாய் BAN எதிர் IND 3) குழு B: வெள்ளி 21 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா, கராச்சி AFG எதிர் SA 4) குழு B : சனி 22 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து, லாஹூர் AUS எதிர் ENG 5) குழு A : ஞாயிறு 23 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் இந்தியா, துபாய் PAK எதிர் IND 6) குழு A: திங்கள் 24 பெப் 09:00 AM - பங்களாதேஷ் எதிர் நியூஸிலாந்து, ராவல்பிண்டி BAN எதிர் NZ 7) குழு B :செவ்வாய் 25 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா, ராவல்பிண்டி AUS எதிர் SA 8 ) குழு B: புதன் 26 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து, லாஹூர் AFG எதிர் ENG 9) குழு A :வியாழன் 27 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ், ராவல்பிண்டி PAK எதிர் BAN 10) குழு B: வெள்ளி 28 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா, லாஹூர் AFG எதிர் AUS 11) குழு B: சனி 1 மார்ச் 09:00 AM – தென்னாபிரிக்கா எதிர் இங்கிலாந்து, கராச்சி SA எதிர் ENG 12) குழு A: ஞாயிறு 2 மார்ச் 09:00 AM – நியூஸிலாந்து எதிர் இந்தியா, துபாய் NZ எதிர் IND குழு A: 13) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) IND ?? PAK ?? NZ ?? BAN ?? 14) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (3 புள்ளிகள்) IND #A2 - ? (2 புள்ளிகள்) NZ 15) குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! BAN குழு B: 16) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS ?? SA ?? ENG ?? AFG ?? 17) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (3 புள்ளிகள்) AUS #B2 - ? (2 புள்ளிகள்) ENG 18) குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! AFG 😁 அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 14)க்கும் 17) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 19) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: செவ்வாய் மார்ச் 04: 09:00 AM, துபாய், IND அணி A1 (குழு A முதல் இடம்) எதிர் அணி B2 (குழு B இரண்டாவது இடம்) குறிப்பு: * இந்தியா அரையிறுதிக்கு தெரிவானால் முதலாவது அரையிறுதிப் போட்டியில் துபாயில் விளையாடும் 20) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: புதன் மார்ச் 05: 09:00 AM, லாஹூர், AUS அணி B1 (குழு B முதல் இடம்) எதிர் அணி A2 (குழு A இரண்டாவது இடம்) குறிப்பு: * பாகிஸ்தான் அரையிறுதிக்கு தெரிவானால் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் லாஹூரில் விளையாடும் இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 19)க்கும் 20) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 21) சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு மார்ச் 09: 09:00 AM, லாஹூர் AUS அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி குறிப்பு: * இந்தியா இறுதிப் போட்டிக்குத் தெரிவானால் போட்டி துபாயில் நடைபெறும் சம்பியன்ஸ் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 22) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? AUS 23) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? AFG 24) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Rohit Sharma 25) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 24 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 26) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Mitchell Starc 27) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 26 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? AUS 28) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) வீரர்? Rohit Sharma 29) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 28 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 30) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Jasprit Bumrah 31) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 30 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND 32) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Rohit Sharma 33) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 32 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? IND
  19. பௌர்ணமிக்கு மட்டும்… தாராளமாக மின்சாரம் கொடுக்க முடிகின்றது. இந்த நாடு நாசமாய் போவதற்கு, இப்படியான குறுகிய சிந்தனைகளும் முக்கிய காரணம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.