Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. அன்று பிரதமர்... அரசியல்வாதிகளை தமது பாடசாலை நிகழ்வுகளுக்கு அழைப்பதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து பாடசாலைகளையும் கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார். இன்று பிரதமர்... யாழ்ப்பாணம் வந்த பிரதமர் யாழ். இந்துக் கல்லூரியில்... Anusha Nadarajah
  2. 2025ஆம் ஆண்டின் துண்டுவிழும் தொகை 2,200 பில்லியன் ரூபாய். இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு அமைய 2025ஆம் ஆண்டில் அரச வருமானம் 4,990 பில்லியன் ரூபாவாக காணப்படுகின்றது. 2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கு அமைய அரசாங்கத்தின் மொத்த செலவீனம் 7,190 பில்லியன் ரூபாயாகக் கணிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க 2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் துண்டுவிழும் தொகை 2,200 பில்லியன் ரூபாயாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1421772
  3. தேசிய மக்கள் சக்தி அரசின் வரவு – செலவு திட்டம் ஜனாதிபதியினால் சபையில் முன்வைப்பு. தேசிய மக்கள் சக்தி அரசின் வரவு – செலவு திட்டம் ஜனாதிபதி அனுர குமாரவினால் இன்று சபையில் முன்வைக்கப்பட்டது. இதன் போது ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கள் இதோ… வரி செலுத்துவோரின் ஒவ்வொரு ரூபாவிற்கும் நீதியை அரசாங்கம் உறுதி செய்யும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, இலஞ்சம் வாங்குவதற்கு அஞ்சும் சமூகத்தை உருவாக்குவோம். இந்த அரசாங்கம் ஊழல்களை சகித்துக் கொள்ளாது எனவும் இலஞ்சம் பெற முயற்சிப்பவர்கள் அச்சப்பட வேண்டும். 2025 பெப்ரவரி 01 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மோட்டார் வாகன இறக்குமதியின் தாராளமயமாக்கல் 2025 ஆம் ஆண்டிற்கான வருமான ஆதாயத்தின் பெரும்பகுதியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வரிக் கொள்கை நடவடிக்கைகள் 2025 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15.1 வீதமான வருமான இலக்குகளை அடைய இலங்கைக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வணிகங்கள் முழுவதும், குறிப்பாக VAT-ல் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களில், Point-of-Sale (POS) இயந்திரங்களைப் பயன்படுத்துவது, டிஜிட்டல் பரிவர்த்தனைகளை எளிதாக்குவதற்கும், பணத்தைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும் ஒரு முக்கிய முயற்சியாக செயல்படுத்தப்படும். கடந்த நிர்வாகத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாடகை வருமான வரியை தொடர்வதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ஆக அதிகரிக்க அரசாங்கம் தலையிடும். 2020 ஜனவரி 01 ஆம் திகதிக்கு முன்னர் ஓய்வுபெற்ற அனைத்து ஓய்வூதியர்களுக்கான ஓய்வூதிய அதிகரிப்பு மூன்று கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படும். அரச சேவையில் ஆட்சேர்ப்பு, பதவி உயர்வுகள் மற்றும் இடமாற்றங்கள் ஆகியவை அரசியல் செல்வாக்கு அற்ற தகுதிகள் மற்றும் திறன்களின் அடிப்படையில் கண்டிப்பாக அமையும். பொதுச் சேவையில் அத்தியாவசிய வெற்றிடங்களை நிரப்ப 10,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்த அவர், இந்த ஆண்டு முதல் அத்தியாவசிய பொது சேவைப் பணிகளில் 30,000 நபர்களை பணியமர்த்துவதற்கான மூலோபாய ஆட்சேர்ப்பு திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்து. அரச துறை ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை 24,250 ரூபாவிலிருந்து 40,000 ரூபாவாக உயர்த்தி சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சம்பள உயர்வு மூன்று கட்டங்களாக அமல்படுத்தப்படும். தனியார் துறை ஊழியர்களுக்கான மாதாந்த குறைந்தபட்ச ஊதியத்தை ஏப்ரல் மாதத்தில் 21,000 ரூபாவிலிருந்து 27,000 ரூபாவாக அதிகரிப்பதற்கு முதலாளிமார் சம்மேளனம் ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளனர். மேலும் ஊதியம் 2026 ஆம் ஆண்டு முதல் 30,000 ரூபாவாக உயர்த்தப்படும் என்றார். “தேசிய கலாசார விழா” நவம்பரில் ஆரம்பிக்கப்பட்டு டிசம்பரில் நிறைவு பெறும். இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் இந்த விழா தனியார் துறையின் உதவியுடன் ஏற்பாடு செய்யப்படும். குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான வீட்டுத் திட்டங்களை புனரமைப்பதற்காக அரசாங்கம் 1,000 மில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளது. மீள்குடியேற்றத்திற்கு 1500 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும். நாட்டிற்கு விசேட பங்களிப்புகளை வழங்கும் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கொட்டாவாவில் வீடமைப்புத் திட்டம் ஒன்று நிர்மாணிக்கப்படும். தோட்ட வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக அரசாங்கம் 4,267 மில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளது. மலையக தமிழ் இளைஞர்களின் தொழில் பயிற்சி, வாழ்வாதார அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு மேலதிகமாக 2,450 மில்லியன் ரூபாவும், தோட்ட சமூகத்தின் பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகளுக்காக 866 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்திற்கு 5000 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும். யானை-மனித மோதலைத் தீர்க்க அரசாங்கம் 640 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. சுமார் 5,611 கிலோமீற்றர் மின்சார வேலிகளை மேம்படுத்துவதற்காக 300 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், புனரமைப்புக்காக 1,456 கிலோமீற்றர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. யானை-மனித மோதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக 240 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கடனைத் தீர்ப்பதற்காக 20 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும். அரசாங்கம் வங்கிகளுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு 2025 ஆம் ஆண்டில் கடன் மூலதனத்தை திருப்பிச் செலுத்துவதற்காக 10,000 மில்லியன் ரூபாவையும், வட்டி செலுத்துதலுக்காக 10,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும். இந்த மரபுவழிக் கடன் சேவைச் செலவுகள் அரசாங்கத்தால் தீர்க்கப்பட்டவுடன், இயக்க இலாபத்தை உறுதிப்படுத்துவதற்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முழுப் பொறுப்பாகும். பழைய ரயில் பயணிகள் பெட்டிகளை புனரமைக்க 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும். 2025 ஆம் ஆண்டிற்கு புதிய ரயில் பெட்டிகளை இணைக்க ரயில்வே திணைக்களத்திற்கு 250 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும். 100 சாதாரண பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கு 3000 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும். நவீன வசதிகளுடன் கூடிய தொழில்நுட்பம் கொண்ட பேருந்துகள் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்படும். இலங்கையின் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்குத் திரும்பும்போது அவர்களுக்கு மிகவும் தாராளமான வரி இல்லாத கொடுப்பனவை அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. ஏப்ரல் பண்டிகை காலத்துக்காக சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக உலர் உணவுப் பொதிகளை வழங்குவதற்கு 1,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும். மூத்த பிரஜைகளுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்குவதற்காக 15 பில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 60 வயதுக்கு மேற்பட்ட நபர்கள், சந்தையில் நிலவும் வட்டி விகிதங்களை விட, 3 சதவீத வருடாந்திர கூடுதல் வட்டி விகிதத்துடன் 1 மில்லியன் ரூபா வரையிலான ஓராண்டு நிலையான வைப்புத்தொகைக்கு தகுதி பெறுவார்கள். இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு 250,000 ரூபாவிலிருந்து 1 மில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்படும். இளைஞர்களின் தற்கொலை வீதத்தை கருத்தில் கொண்டு, மாணவர்கள் மற்றும் இளம் பருவத்தினருக்கான விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை சேவைகளை விரிவுபடுத்தும் நடுத்தர கால வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த 250 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும். கல்வி அமைச்சுடன் இணைந்து சுகாதார அமைச்சினால் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும். சிறுநீரக நோயாளர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு 7,500 ரூபாவிலிருந்து 10,000 ரூபாவாக அதிகரிக்கப்படும். அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்துக்காக 232.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும். வடக்கு தென்னை முக்கோணத்தில் 16,000 ஏக்கர் தென்னை பயிரிட 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும். நாட்டின் பால் உற்பத்தித் துறையின் அபிவிருத்திக்காக 2500 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்படவுள்ளது. குறைந்த வருமானம் பெறும் முதியோருக்கான கொடுப்பனவு 3,000 ரூபாவிலிருந்து 5,000 ரூபாவாக உயர்த்தப்படும். நெல் மற்றும் அரிசியை ஒழுங்குபடுத்துவதற்காக நெல் சந்தைப்படுத்தல் சபை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும். சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து திருகோணமலையில் 61 எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஐந்து மாகாணங்களில் பாடசாலைகளின் விளையாட்டு அபிவிருத்திக்காக அரசாங்கம் 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பொது நூலகத்தை மேம்படுத்த 100 மில்லியன் ஒதுக்கப்படும். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான கொடுப்பனவை தற்போதுள்ள 750 ரூபாவிலிருந்து 1,500 ரூபாவாக அதிகரித்தல். உத்தேச இலங்கை மின்சார (திருத்த) சட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் 185 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே குழந்தைகளுக்கான மருத்துவமனையில் (LRH) ஆட்டிசம் சிகிச்சை மையத்தை நிறுவ 200 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பல்கலைக்கழக அமைப்பின் அபிவிருத்திக்காக 135 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு தற்போதுள்ள 5000 ரூபாவிலிருந்து 7500 ரூபாவாக அதிகரிக்கப்படும்! பாடசாலை உட்கட்டமைப்பை மேம்படுத்த 1000 மில்லியன் ஒதுக்கப்படும். 2025 ஆம் ஆண்டு சுகாதாரத் துறைக்காக 604 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும். கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டசத்து வழங்குவதற்காக 7500 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும். கட்டம் கட்டமாக பணமில்லா பொருளாதாரத்தை நோக்கி இலங்கை மாறும் போது டிஜிட்டல் பொருளாதார அதிகாரசபை ஸ்தாபிக்கப்படும். டிஜிட்டல் அமைப்புகளின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்வதே எமது முன்னுரிமை. இதற்காக புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். அத்துடன் தரவு தனியுரிமையை சான்றளிக்க தற்போதுள்ள சட்டங்கள் வலுப்படுத்தப்படும். இலங்கையில் புதிய சுற்றுலா தலங்களை அரசாங்கம் ஊக்குவிக்கும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அனுராதபுரம் மற்றும் யாப்பஹுவ போன்ற சுற்றுலாத் தலங்களை அபிவிருத்தி செய்வதற்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும். இந்த இடங்கள் முக்கிய கலாச்சார மற்றும் வரலாற்று தலங்களாக முத்திரை குத்தப்பட்டு சந்தைப்படுத்தப்படும். தற்போதுள்ள அரச வங்கி முறைமையின் கீழ் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (SME) நலனுக்காக அரச அபிவிருத்தி வங்கியொன்று ஸ்தாபிக்கப்படும். தரவு பாதுகாப்பிற்கான சட்டங்கள் வலுப்படுத்தப்படும். பணத்தாள்களின்பயன்பாட்டை படிப்படியாக நிறுத்தப்பட்டு, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை வலுப்படுத்துடன் அதற்கு தேவையான சட்டங்கள் படிப்படியாக பலப்படுத்தப்படும். பொது சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளுக்குத் தேவையான ஒப்புதல்களுடன் ‘அனைத்து சேவைகளும் ஒரே இடத்திலிருந்து’ என்ற கருத்து உருவாக்கப்பட்டு வருகிறது. டிஜிட்டல் பொருளாதாரத்தை துரிதப்படுத்த 3000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் டிஜிட்டல் பொருளாதாரம் தேசியப் பொருளாதாரத்தின் பன்னிரெண்டு சதவீத நிலையை எட்ட வேண்டும் என்பதே இலக்கு. வருடாந்த தகவல் தொழில்நுட்ப வருவாயை ஐந்து பில்லியன் டொலராக உயர்த்த நடவடிக்கை. சுற்றுலாத் துறைக்கு டிஜிட்டல் டிக்கெட் வழங்கும் முறை தொடங்கப்படுவதுடன் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். பண்டாரநாயக்க விமான நிலையத்தின் இரண்டாவது முனையம் ஜப்பானின் உதவியுடன் ஆரம்பிக்கப்படும். அபிவிருத்தி வங்கியொன்று ஆரம்பிக்கப்படும். தற்போதுள்ள அரச வங்கிகளின் கட்டமைப்பில் இருந்து அபிவிருத்தி வங்கி தொடங்கப்படும் என்றும் அபிவிருத்தி கடன் திட்ட யோசனை முறைக்கு அரச வங்கிகள் தங்கள் உடன்பாட்டை வெளிப்படுத்தியுள்ளன. புதிய கண்டுபிடிப்புகளின் ஆராய்ச்சி மற்றும் வணிகமயமாக்கலுக்கு ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பொது வளங்களை மக்கள் பாவனைக்கு திறம்பட பயன்படுத்துவதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அதிக செலவாகும் அனைத்து அரச சொகுசு வாகனங்களும் மார்ச் மாதம் ஏலத்தில் விடப்படும் என்றும் இந்த ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களுக்கு பணம் ஒதுக்கப்படவில்லை. அவர்களுக்கு வாகன அனுமதிகளும் கிடைக்காது. மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த ஆண்டு வாகனங்களோ அனுமதிப்பத்திரங்களோ இல்லை.அத்துடன் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் போஷாக்குக்கான திரிபோஷா திட்டத்திற்கு 5000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். பாடசாலைக் கல்வியினை நவீனமயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் மாணவர்களின் நலன் கருதி பாடசாலைக் கல்வி முறையில் மாற்றம் கொண்டுவரப்படும். பல்கலைக் கழகங்களின் தரத்தினை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். நரம்பியல் வளர்ச்சிக் குறைபாடுள்ள சிறுவர்களுக்காக சிகிச்சை நிலையங்கள் ஆரம்பிக்கப்படும். கடந்த 2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர். கடந்த கால ஆட்சியாளர்களின் மோசமான நடவடிக்கைகளினால் மக்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அது மட்டுமல்லாது வரிசையில் நின்ற மக்கள் மரணித்த சம்பவங்களும் பதிவாகியிருந்து. ஆனால் அந்த நிலை தற்பொழுது மாற்றம் பெற்றுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்லும் முயற்சிகளை நாம் முன்னெடுத்துள்ளோம். நாங்கள் கடனைத் திரும்பச் செலுத்துவதற்கு இன்னும் 3 வருட கால அவகாசம் உள்ளது. அதற்குள் எமது நாட்டை அபிவிருத்தி பாதைக்குக் கொண்டு செல்ல முடியும். எமது அரசாங்கத்தில் ஊழலை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் . இலங்கையின் ஏற்றுமதித் துறையில் மாற்றம் கொண்டு வரப்படும். இதற்காக தேசிய ஏற்றுமதித் திட்டம் ஒன்றினை அறிமுகப்படுத்தி இலங்கையின் ஏற்றுமதி அதிகரிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். அத்துடன் சந்தை வாய்ப்பினை விரிவு படுத்தி ஏற்றுமதியை முதன்மையாகக் கொண்ட முதலீடுகள் அதிகரிக்கப்படும். எமது அரசாங்கத்தில் அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும். அத்துடன் தரமான மற்றும் உரிய விதத்தில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பழைய சுங்கச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டு, புதிய சுங்கச் சட்டம் நடைமுறைபடுத்தப்படும். புதிய தொழில் முயற்சிகளுக்கு ஊக்குவிப்பு வழங்கப்படும். அரசாங்கத்திற்கு சொந்தமாக காணிகளை பயனுள்ள விதத்தில் பயன்படுத்தி அதன் மூலம் நாட்டிற்கு வருமானத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். டிஜிட்டல் பொருளாதாரத்தை முன்னேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். நாட்டில் உள்ள அனைத்து பிரஜைகளுக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட பொதுச் சொத்துக்களை பயனுள்ள விதத்தில் பொதுமக்களின் நலத் திட்டங்களுக்காகப் பயன்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வழங்கப்படமாட்டாது. https://athavannews.com/2025/1421729
  4. ஜல்லிக் கட்டுப் போட்டியில் காளை முட்டியதில் 59 பேர் வைத்தியசாலையில் அனுமதி! திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே தவசிமடை பகுதியில் புனித அந்தோணியார் சர்ச் திருவிழாவை முன்னிட்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 59 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த போட்டியில் 725 காளைகளும், 350 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டிருந்ததாகவும், போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற வீரர்களுக்கும் காளைகளின் உரிமையாளர்களுக்கு பெறுமதியான பரிசு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இப்போட்டியில் கலந்து கொண்ட வீரர்களில் 59 பேர் காளைகள் முட்டியதில் காயமடைந்துள்ளனர் எனவும், அவர்கள் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த போட்டிக்காக 300க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1421696
  5. நாடு கடத்தப்பட்ட 112 இந்தியர்களுடன் அமிர்தசரஸில் தரையிறங்கிய அமெரிக்க விமானம்! சட்டவிரோதமாக தங்கியிருந்ததற்காக அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 112 இந்தியர்களைக் கொண்ட மூன்றாவது குழுவை ஏற்றிச் சென்ற அமெரிக்க இரணுவ விமானம் ஞாயிற்றுக்கிழமை (16) இரவு அமிர்தசரஸில் தரையிறங்கியது. அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான C-17 Globemaster விமானம் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் அமிர்தசரஸ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்தின் சட்டவிரோதக் குடியேற்றவாசிகளுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த 10 நாட்களில் இதுபோன்ற மூன்றாவது வருகை இதுவாகும். நாடு கடத்தப்பட்ட 112 பேரில் 44 பேர் ஹரியானா, 33 பேர் குஜராத், 31 பேர் பஞ்சாப், 2 பேர் உத்தரபிரதேசம் மற்றும் தலா ஒருவர் உத்தரகாண்ட் மற்றும் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்தவர்கள். சட்டவிரோதமாக குடியேறிய சிலரின் குடும்பத்தினர் அவர்களை வரவேற்பதற்காக அமிர்தசரஸில் உள்ள ஸ்ரீ குரு ராம் தாஸ் ஜீ சர்வதேச விமான நிலையத்திற்கு இதன்போது வருகை தந்திருந்தனர். குடியேற்றம், சரிபார்ப்பு மற்றும் பின்னணி சோதனைகள் உட்பட அனைத்து சட்ட நடவடிக்கைகளும் முடித்த பின்னர், நாடு கடத்தப்பட்டவர்களை அவர்களுக்கு சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருந்தது. சனிக்கிழமை இரவு, 116 சட்டவிரோத இந்தியக் குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற இரண்டாவது அமெரிக்க இராணுவ விமானம், அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியது இந்த 116 நாடுகடத்தப்பட்டவர்களில், 65 பேர் பஞ்சாப்பைச் சேர்ந்தவர்கள், 33 பேர் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள், 8 பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள், தலா 2 பேர் உத்தரப் பிரதேசம், கோவா, மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள். மேலும் இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் இருந்து தலா ஒருவரும் அடங்குவர். மூன்று விமானங்களிலும் இதுவரை மொத்தம் 332 சட்டவிரோத இந்திய குடியேறிகளை அமெரிக்கா நாடு கடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. Athavan Newsநாடு கடத்தப்பட்ட 112 இந்தியர்களுடன் அமிர்தசரஸில் தரையிறங்...சட்டவிரோதமாக தங்கியிருந்ததற்காக அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 112 இந்தியர்களைக் கொண்ட மூன்றாவது குழுவை ஏற்றிச் சென்ற அமெரிக்க இரணுவ விமானம் ஞாயிற்றுக்கிழமை (16) இரவு அமிர்தசரஸில் தரையிறங்கிய...
  6. அமெரிக்காவில் பெய்த கன மழையால் 9 பேர் உயிரிழப்பு! தென்கிழக்கு அமெரிக்காவின் சில பகுதிகளில் பெய்த மழையால் சாலைகள் மற்றும் வீடுகள் நீரில் மூழ்கியதால், வார இறுதியில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்தனர். கென்டக்கி ஆளுநர் ஆண்டி பெஷியர் தனது மாநிலத்தில் எட்டு பேர் இறந்துவிட்டதாகக் ஞாயிற்றுக்கிழமை கூறியதுடன், உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என்றும் எச்சரித்தார். வெள்ள நீரில் சிக்கித் தவித்த நூற்றுக்கணக்கான மக்கள், பலர் தங்கள் வாகனங்களில் சிக்கிக் கொண்டனர். கென்டக்கி, ஜார்ஜியா, அலபாமா, மிசிசிப்பி, டென்னசி, வர்ஜீனியா, மேற்கு வர்ஜீனியா மற்றும் வட கரோலினா ஆகியவை இந்த வார இறுதியில் புயல் தொடர்பான எச்சரிக்கையில் உள்ளன. ஏறக்குறைய அந்த மாநிலங்கள் அனைத்தும் கடந்த செப்டம்பர் மாதம் ஹெலீன் சூறாவளியால் பேரழிவைச் சந்தித்தன. இதனிடையே, எட்டு மாநிலங்களைச் சேர்ந்த அரை மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு மின்சாரம் இல்லாமல் இருந்தன என்று poweroutage.us தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1421721
  7. நுணாவிலானுக்கு, உளம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 🥰 வாழ்க வளமுடன். 🙏
  8. பாகிஸ்தானியர்கள்... சுழியர்கள். 😂 அமெரிக்கனுக்கு... அல்வா கொடுப்பார்கள். 🤣
  9. விபத்துக்குள்ளாகி கோமாவிலிருந்த ஐரிஷ் குதிரைப் பந்தய வீரர் மரணம்! அயர்லாந்தின் குதிரைப் பந்தய விளையாட்டு வீரரான மைக்கேல் ஓ’சுல்லிவன் (Michael O’Sullivan) தனது 24 ஆவது வயதில் உயிரழந்துள்ளார். கடந்த பெப்ரவரி 6 ஆம் திகதி துர்ல்ஸில் குதிரை பந்தயத்தின் போது நடந்த விபத்தில் கொர்க் பல்கலைக்கழக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் கோமா நிலையில் இருந்த அவர் ஞாயிற்றுக்கிழமை (16) அதிகாலை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது மரணம் ஐரிஷ் குதிரையேற்றம் ஒழுங்குமுறை வாரியத்தினை (IHRB) பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. IHRB இன் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஜெனிஃபர் புக் ஒரு அறிக்கையில், இந்த நம்பமுடியாத கடினமான நேரத்தில் மைக்கேலின் குடும்பத்தினர் உயிரிழந்த வீரரின் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர், அவ்வாறு செய்வதன் மூலம் மற்ற நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கையில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் – என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், மைக்கேலின் வெற்றி மற்றும் அவரது பணிவு பலரை ஊக்கப்படுத்தியிருக்கும், மேலும் அவரை அறிந்த அனைவருடனும் இன்று இழப்பின் உணர்வைப் பகிர்ந்து கொள்கிறேன் என்றும் ஜெனிஃபர் புக் தெரிவித்தார். Athavan Newsவிபத்துக்குள்ளாகி கோமாவிலிருந்த ஐரிஷ் குதிரைப் பந்தய வீர...அயர்லாந்தின் குதிரைப் பந்தய விளையாட்டு வீரரான மைக்கேல் ஓ'சுல்லிவன் (Michael O'Sullivan) தனது 24 ஆவது வயதில் உயிரழந்துள்ளார். கடந்த பெப்ரவரி 6 ஆம் திகதி துர்ல்ஸில் குதிரை பந்தயத்தின் போது நடந்த விப...
  10. இலங்கைத் தமிழரசுக் கட்சி எடுத்துள்ள புதிய தீர்மானம்!இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் இன்று மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.சிவஞானம் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1421674
  11. கனேடிய தூதுவர், கள்ளு அடித்து விட்டு கதைக்கிறார் போலுள்ளது. அதுகும் ... சூட்கேஸுகளை பஸ்சில், யாழ்ப்பாணம் அனுப்பி விட்டு... கொழும்பில் இருந்து சென்னைக்கு சென்று அங்கிருந்து விமானம் மூலம் யாழ்ப்பாணத்திற்கு வருகிறார்களாம். 😂
  12. விகாரை அரசியல் – நிலாந்தன்.“கிளீன் ஸ்ரீலங்கா” திட்டம் என்பது சுத்தம் செய்வதை மட்டும் குறிக்கும் ஒரு நிகழ்ச்சித் திட்டமன்று. அதற்குப் பின்னால் ஒரு பெரிய நோக்கம் உள்ளது. நமது சூழல் மட்டுமல்ல. நமது உள்ளத்தில் உள்ள அழுக்குகள் முதல் ஒரு பண்பாடான வாழ்க்கைக்கான தடைகளை அகற்றுவதும் இத்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.” இவ்வாறு கூறியிருப்பவர் பிரதமர் ஹரினி. கடந்த ஒன்பதாம் திகதி,காலை, மட்டக்குளி கடற்கரைப் பூங்காவில் இடம்பெற்ற “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் ‘அழகிய கடற்கரை கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்’ நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். “உள்ளத்தில் உள்ள அழுக்குகளையும் ஒரு பண்பாடான வாழ்க்கைக்கான தடைகளையும் அகற்ற ” வேண்டும் என்று ஹரிணி கூறுகிறார். அப்படியென்றால் இலங்கைத் தீவின் நீண்டகால அழுக்கு எது? இனவாதம் தான். அதை அகற்ற வேண்டும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் அதைச் செய்ய முடியுமா ? முடியும் என்று நம்பத்தக்கவிதமாக அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அமையவில்லை. கடைசியாக நடந்த மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அனுரவின் முகபாவனையிலும் அது தெரியவில்லை. அதைவிட முக்கியமாக நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக வடக்கிலும் கிழக்கிலும் பிரதான சாலைகளில் அமைந்திருந்த சில சோதனைச் சாவடிகளும் கேந்திர முக்கியத்துவம் மிக்க இடங்களுக்குள் நுழையும் வாசல் பகுதியில் அமைந்திருந்த சோதனைச் சாவடிகளும் அகற்றப்பட்டன. ஆனால் தேர்தல் முடிந்த பின் அவை மீண்டும் முளைத்து விட்டன. இந்த விடயம் கடந்த வாரம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஐநா உயர் அதிகாரிகள் குழுவுக்குச் சுட்டிக்காட்டப்பட்டது.ராணுவ மயநீக்கம் என்பது எவ்வளவு கடினமானது என்பதனை விளங்கிக்கொள்ள இது உதவும். இப்படித்தான் இருக்கிறது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மாற்றங்கள்.இவ்வாறான ஏமாற்றகரமான ஒரு பின்னணியில்,தையிட்டி விகாரையில் கையை வைத்து அடுத்தடுத்த தேர்தல்களில் வெற்றி வாய்ப்புகளைக் குறைத்துக் கொள்ள அரசாங்கம் தயாராக இருக்குமா? இலங்கைத் தீவின் இன யதார்த்தம் அதுதான். தமிழ்ப் பகுதிகளில் எதிர்ப்புக் கூடும் பொழுது அதைக்காட்டி சிங்கள பௌத்த வாக்குகளைத் திரட்டலாம்.தமிழ் எதிர்ப்பைத் தணிப்பதற்காகத் தமிழ் மக்களுக்கு விட்டுக் கொடுத்தால்,சிங்களபௌத்த வாக்குகளை இழக்க வேண்டியிருக்கும்.சில மாதங்களில் உள்ளூராட்சி சபைத் தேர்தலும் பின்னர் மாகாண சபைத் தேர்தலும் வைக்கப்பட வேண்டும்.எனவே இது ஒரு தேர்தல் ஆண்டு. இத்தேர்தல் ஆண்டில் சிங்கள பௌத்த வாக்காளர்களை இழப்பதா அல்லது தையிட்டியைக் கிளீன் பண்ணுவதா என்று அரசாங்கம் முடிவு எடுக்க வேண்டும். அந்த விகாரையை படையினரிடமிருந்து பொறுப்பெடுத்து புத்தசாசன அமைச்சு நிர்வகிக்கப் போவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் படைப் பரிமாணத்தைக் குறைத்து சிவில் பரிமாணத்தைக் கூட்டுவதன்மூலம் தமிழ் மக்களின் எதிர்ப்பைத் தணிக்கலாம் என்று அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. அவ்வாறு நடந்தால் படைத்தரப்பு அந்த பகுதியில் இருந்து விலகி ஒதுங்கி நிற்கும் என்று எதிர்பார்க்கலாம்.ஆனால் புத்தசாசன அமைச்சையும் படைத்தரப்பையும் பிரித்துப்பார்க்க முடியாது.சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பின் வெவ்வேறு பகுதிகள் அவை.எனவே புத்த சாசன அமைச்சு அதனை நிர்வகித்தாலும் படையினரின் நிழலில்தான் அது தொடர்ந்து பாதுகாக்கப்படும். உதாரணமாக, தையட்டியில் இருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் மாதகல் கடற்கரையில் சம்பில் துறைமுகம் காணப்படுகிறது. இது புராதன இலக்கியங்களில் குறிப்பிடப்படும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒரு புராதன துறைமுகம் ஆகும். ஆனால் இப்பொழுது அந்தப் பகுதி முழுவதுமாக சிங்களபௌத்த மயப்படுத்தப்பட்டு விட்டது.அதற்குச் சிங்கள இலக்கியங்களில் கூறப்படும் ஜம்புகோளப் பட்டினம் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. அப்பகுதி முழுவதும் சிங்கள பௌத்தக் கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. யுத்த வெற்றிவாதத்தின் சுற்றுலாப் பயணிகளாக வரக்கூடிய சிங்கள மக்களைக் கவர்வதற்கு அங்கே ஒரு பெரிய விருந்தினர் விடுதி கட்டப்பட்டுள்ளது. சம்பில்துறை ஜம்பு கோளப் ப்பட்டினமாக மாறிவிட்டது. அந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து அங்கு வாழும் இந்துக்கள் ஒரு பெரிய சிவன் சிலையை அங்கே நிறுவியிருக்கிறார்கள். ஆனால் அந்த பகுதிக்குப் போய் வந்தால் தெரியும், சிங்கள பௌத்த மயமாக்கப்பட்ட அந்தப் பகுதிக்குள் பரம சிவன் அனாதை போல நிற்கிறார். சம்பில்துறையைப் போலவே தையிட்டிக்கும் வரலாற்று முக்கியத்துவம் உண்டு.ஏற்கனவே அங்கு ஆதி பௌத்த விகாரை ஒன்று காணப்பட்டது என்று வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.அதை வைத்து சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பானது அந்தப் பகுதியை சிங்கள பௌத்த மயப்படுத்தி வருகின்றது. அந்த ஆதி பௌத்த விகாரையானது அநேகமாக தமிழ் விகாரையாகவும் இருக்கலாம். ஆனால் இப்பொழுது தமிழர்கள் மத்தியில் பௌத்தம் பயிலப்படும் மதமாக இல்லை. எனவே அதைத் தமிழ் பௌத்த விகாரையாகக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை இல்லை. அந்த ஆதி விகாரை இருந்த இடம் அப்படியே இருக்கிறது.இப்பொழுது கட்டப்படும் விகாரையானது ஒரு புதிய இடத்தில் கட்டப்படுகிறது. மிகக்குறிப்பாக அது ஒரு சிங்கள பௌத்த விகாரையாகத்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ் அடையாளம் கிடையாது. அதைவிட முக்கியமாக, அது ஒரு தனியார் காணியில் கட்டப்பட்டுள்ளது.அந்தக் காணியின் உரிமையாளர் ஒரு ஓய்வு பெற்ற நில அளவையாளரான மலேசியன் பெஞ்சனியர் என்று கூறப்படுகிறது.அவருடைய பெண் வாரிசு ஒன்று மலேசியாவில் இருந்து வந்து அந்த விகாரைக் காணி தொடர்பாக ஒரு தமிழ் அரசியல்வாதியோடு உரையாடியதாகவும் தகவல் உண்டு.பின்னர் படைத்தரப்பினரை அவர் சந்தித்ததாகவும் ஒரு தகவல் உண்டு.அவர் ஒரு முதிய பெண் என்றும் இப்பொழுது எங்கே இருக்கிறார். இருக்கிறாரா இல்லையா போன்ற விவரங்களும் தெரியாது என்று மேற்சொன்ன அரசியல்வாதி எனக்குச் சொன்னார். இப்பொழுது பிரச்சினை அந்தக் காணி தனியாருடையதா அரசாங்கத்துடையதா என்பது அல்ல.அது யாருடையதாகவும் இருக்கட்டும். அங்கே கட்டப்பட்ட விகாரை தமிழ் மக்களுக்காக கட்டப்படவில்லை என்பது மட்டும் உண்மை. அது சிங்கள பௌத்த மயமாக்கலின் ஒரு பகுதியாகத்தான் அங்கே கட்டப்பட்டுள்ளது என்பதுதான் இங்குள்ள பிரச்சினை. தமிழ்ப் பகுதிகளில் சிங்கள வியாபாரிகளும் முதலீட்டாளர்களும் காணிகளை விலை கொடுத்து வாங்குகிறார்கள். குறிப்பாக சில இடங்களில் போலீஸ் நிலையம் அமைப்பதற்கு போலீஸ் திணைக்களம் அவ்வாறு தமிழ் மக்களிடம் காணிகளை வாங்கியிருப்பதாகக் கூறப்படுகின்கிறது. எனவே அரசாங்கம் காணியை வாங்குவது இங்கு பிரச்சினை அல்ல. அரசாங்க கட்டுமானங்கள் அமைக்கப்படும் காணியின் உரிமையாளர் யார் என்பதும் இங்கு பிரச்சனை அல்ல. அதாவது இதை வெறும் சட்டப் பிரச்சினையாக மட்டும் கருத முடியாது. மாறாக இங்கே பிரச்சனை அந்த விகாரை எதற்காகக் கட்டப்படுகிறது என்பது தான். சந்தேகத்துக்கிடமின்றி அது தமிழ் மக்களுக்காக கட்டப்படவில்லை.அது 2009க்கு பின்னரான சிங்கள பௌத்த மயமாக்கலின் ஒரு பகுதியாகத்தான் கட்டப்படுகிறது. தையிட்டிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சம்பில் துறைமுகத்தை எப்படி சிங்களமயப்படுத்தியிருக்கிறார்களோ அப்படித்தான் இதுவும். இரண்டுமே 2009க்கு பின்னர் கட்டப்பட்டவை.எனவே இங்கு தமிழ் மக்கள் எதிர்க்க வேண்டிய விடயம் அது சிங்கள பௌத்த மயமாக்கலின் ஒரு குறியீடு என்பதுதான்.எனவே பிரச்சனையை அந்தக் கோணத்தில் இருந்துதான் அணுக வேண்டும். அந்தக் கோணத்தில் இருந்துதான் தீர்க்கவும் வேண்டும். அதை ஒரு சட்டப் பிரச்சினையாக அணுகி சட்டத் தீர்வை எதிர்பார்ப்பது என்பது இலங்கைத் தீவின் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பின் ஒரு பகுதியாக உள்ள சட்டத்தை தமிழ் மக்கள் நம்புகிறார்கள், எதிர்பார்ப்போடு பார்க்கிறார்கள் என்று பொருள்படும். இல்லை. நாட்டின் சட்டம் எப்பொழுதும் தமிழ் மக்களுக்கு எதிராக வளைக்கப்படும் என்பதற்கு குறுந்தூர் மலை, வெடுக்கு நாரிமலை கிழக்கில் மேய்ச்சல் தரை போன்ற உதாரணங்கள் உண்டு. பயங்கரவாத தடைச் சட்டத்தைத் தன்னுள் கொண்டிருக்கும் இலங்கைத்தீவின் சட்டக் கட்டமைப்பானது தமிழ் மக்களுக்கு எதிராக எப்பொழுதும் வளைக்கப்படுவதுண்டு. அதே சட்டக்கட்டமைப்பிடம் தையட்டி விவகாரத்தில் தீர்வை எதிர்பார்க்கலாமா? எனவே இக்கட்டுரையின் தொடக்கத்தில் பிரதமர் ஹரிணி கூறுவதன் அடிப்படையில்,கிளீன் சிறீலங்காவை தையிட்டியில் இருந்து தொடங்கலாமே? https://athavannews.com/2025/1421578
  13. 11 நாடுகளிலிருந்து 170 பாகிஸ்தானியர்கள் நாடு கடத்தல்!சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE), ஓமன் மற்றும் பல நாடுகளில் இருந்து கடந்த 48 மணி நேரத்தில் சுமார் 170 பாகிஸ்தானியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். நாடு கடத்தலை அடுத்து கராச்சியை வந்தடைந்த அவர்களில் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தானின் ஜியோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. குடியேற்ற ஆதாரங்களின்படி, சவுதி அதிகாரிகள் 94 பாகிஸ்தானியர்களை 48 மணி நேரத்திற்குள் நாடுகடத்தியுள்ளனர். கறுப்பு பட்டியலில் உள்ளவர்கள், யாசகம் பெறுபவர்கள், போதைப்பொருள் வியாபாரம், சட்டவிரோதமாக தங்கியிருப்பது, சட்டவிரோதமாக வேலை செய்தல், பணியிடத்தில் இருந்து தலைமறைவு, ஒப்பந்தங்களை மீறுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக இவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, ஐக்கிய அரபு எமிரேட்ஸில், சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் பிற மீறல்களுக்காக தண்டனை அனுபவித்த 39 பாகிஸ்தானியர்கள் கடந்த இரண்டு நாட்களில் நாடு கடத்தப்பட்டதாகவும் ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1421661
  14. கிருபனுடன் போட்டியில் கலந்து கொண்டு இருப்பவர்கள், 24 பேர் என நினைக்கின்றேன். இன்னும் ஒரு ஆள் கலந்து கொண்டால் 25 ஆட்களுடன் அழகாக இருக்கும். 😂
  15. சுமந்திரனை.... போற, வாற இடம் எல்லாம், மக்கள் விரட்டி அடித்துக் கொண்டு திரிகிறார்கள். 😂 மற்றவர்கள் என்றால்... தூக்கில் தொங்கி இருப்பார்கள். 🤣
  16. மியன்மார் இணையவழி மோசடி முகாம்களில் சிக்கியிருந்த 13 இலங்கையர்கள் மீட்பு!மியன்மாரில் அமைந்துள்ள இணையவழி மோசடி முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 17 இலங்கையர்களில் 13 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்டவர்களில் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட 11 இளைஞர்களும், இரண்டு இளம் பெண்களும் அடங்குவர். தற்சமயம் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் தாய்லாந்து எல்லையில் இருந்து பேங்கொக்கில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு மாற்றப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே, மேலும் நான்கு இலங்கையர்கள் மியான்மரில் தனித்தனி இணையவழி மோசடி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விரைவில் விடுதலை செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. அண்மையில் தாய்லாந்து வெளிவிவகார அமைச்சர் மற்றும் மியான்மர் பிரதிப் பிரதமர் ஆகியோருடன் கலந்துரையாடிய போது, இந்த இணையவழி மோசடி நடவடிக்கைகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்பதற்கான உதவியை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கோரினார். இந்த இராஜதந்திர முயற்சிகளின் விளைவாக, மொத்தம் 13 நபர்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. https://athavannews.com/2025/1421581
  17. இலங்கையுடன் அதானி குழுமம் மீண்டும் பேச்சுவார்த்தை!அதானி குழுமத்தின் உயர்மட்ட நிர்வாகிகள் அடுத்த வாரம் இலங்கை அரசாங்கத்துடன் மீண்டும் கலந்துரையாடல்களை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீவு நாட்டில் ஒரு பெரிய காற்றாலை ஆற்றல் திட்டத்தில் இருந்து விலகுவதாக நிறுவனம் அறிவித்த சில நாட்களுக்குப் பின்னர் இந்த அறிவிப்பு வந்துள்ளது. கோடீஸ்வரர் கௌதம் அதானி தலைமையிலான அதானி கிரீன் எனர்ஜி, மன்னார் மற்றும் பூனரியில் உள்ள இரண்டு 484 மெகாவாட் (MW) புதுப்பிக்கத்தக்க எரிசக்தி காற்றாலைகளை புதுப்பிக்க புதிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் என்று இந்த விடயத்தை நன்கு அறிந்த வட்டாரங்கள் மேற்கொள்ளிட்டு இந்திய செய்திச் சேவையான The Tribune செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையின் புதிய அரசாங்கம் கடந்த மாதம் குறைந்த கட்டணத்தை கோரியதை அடுத்து, தீவு நாட்டின் இரண்டு காற்றாலை மின் திட்டங்களிலிருந்து வெளியேறுவதாக அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் கடந்த வியாழக்கிழமை அறிவித்தது. எனினும் இலங்கை அரசாங்கத்துடன் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும், அவர்கள் விரும்பினால் எதிர்கால ஒத்துழைப்புக்கு தயாராகவுள்ளதாகவும் நிறுவனம் கூறியுள்ளது. அதானி குழுமம், ஜோன் கீல்ஸ் மற்றும் இலங்கை துறைமுக அதிகார சபையுடன் இணைந்து இலங்கையின் கொழும்பில் கொள்கலன் முனையத்தையும் உருவாக்கி வருகிறது. கேள்விக்குரிய திட்டங்களில் மன்னார் மற்றும் பூனரியில் இரண்டு காற்றாலை மின் நிலையங்கள் 442 மில்லியன் டொலர் முதலீட்டில் அமைக்கப்பட உள்ளன. இலங்கை முதலீட்டுச் சபையின் 2023 அறிக்கையின்படி, மன்னார் காற்றாலை மின் நிலையம் 250 மெகாவாட் (மெகாவாட்) திறனில் இயங்க வேண்டும். அதேநேரத்தில், பூனாரியின் ஆலை 100 மெகாவாட்டிற்கு திட்டமிடப்பட்டது மற்றும் 2025 இல் தொடங்க திட்டமிடப்பட்டது. இந்த நிலையில் இலங்கையில் அதானியின் மின் திட்டங்கள் கடந்த சில ஆண்டுகளாக கொந்தளிப்பை எதிர்கொண்டுள்ளன. அதானி குழுமத்துடனான மின்சாரக் கொள்வனவு ஒப்பந்தத்தை ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக இலங்கை இரத்துச் செய்துள்ளதாக கடந்த மாதம் AFP செய்திச் சேவை தீவு நாட்டின் எரிசக்தி அமைச்சின் ஆதாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டிருந்தது. சிறிது நேரத்திற்குப் பின்னர் அதானி குழுமம் இரத்து செய்வதை மறுத்து ஒரு அறிக்கையை வெளியிட்டது. திட்டத்திற்கான கட்டணங்கள் நிலையான செயல்முறையின் ஒரு பகுதியாக மறு மதிப்பீடு செய்யப்படுகின்றன என்பதை தெளிவுபடுத்தியது. முன்னதாக, 2022 ஆம் ஆண்டில், போட்டி ஏல முறையின்றி அதானி கிரீன் எனர்ஜிக்கு காற்றாலை ஆற்றல் திட்டங்களை வழங்கியது குறித்து இலங்கையில் அரசியல் சர்ச்சை ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1421596

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.