Everything posted by தமிழ் சிறி
-
சிரிக்கலாம் வாங்க
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- "காதலர்தின", சிரிப்புகள். (14.02.)
😂 🤣- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- சிரிக்க மட்டும் வாங்க
- "காதலர்தின", சிரிப்புகள். (14.02.)
- சிரிக்கலாம் வாங்க
சதுரம், முக்கோணம், வட்டம். 😂- கனேடியத் தூதுவர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் சந்திப்பு!
கனேடியத் தூதுவர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் சந்திப்பு! வடக்கு மாகாணத்திற்கு இலங்கைக்கான கனேடியத்தூதுவர் எரிக் வோல்ஷ் நேற்று (14) வெள்ளிக்கிழமை விஜயம் மேற்கொண்டுள்ளார். வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஷ் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு சென்றதுடன்இ வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடி இருந்தார். இதன் போது இலங்கைக்கான கனேடியத் தூதுவருக்கு வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள்இ தேவைப்பாடுகள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புக்கள்இ சுற்றுலாத்துறையின் அபிவிருத்திஇ பாதை வலையமைப்பு தொடர்பாக மேம்பாடு ஆகிய விடயங்கள் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். மேலும் பலாலி விமான நிலையத்துக்கு கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து சேவைகள் இடம்பெற்றால் சிறப்பானது எனவும், அத்துடன் தற்போதைய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுவதாகவும் குறிப்பிட்ட தூதுவர். அரசாங்கம் கூறிய விடயங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் மக்கள் ஆவலாக இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார். https://athavannews.com/2025/1421535- புகையிரதத் திணைக்களம் விடுத்துள்ள புதிய அறிவிப்பு!
புகையிரதத் திணைக்களம் விடுத்துள்ள புதிய அறிவிப்பு! கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து பயணத்தைத் ஆரம்பித்த காங்கேசன்துறை இரவு தபால் புகையிரதம் இன்று முதல் மொரட்டுவை புகையிரத நிலையத்திலிருந்து பயணத்தைத் ஆரம்பமாகும் என புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, மொரட்டுவ புகையிரத நிலையத்திலிருந்து மாலை 6.55 மணிக்குப் புறப்படும் காங்கேசன்துறை இரவு தபால் புகையிரதம் கல்கிஸ்ஸை, தெஹிவளை மற்றும் வெள்ளவத்தை புகையிரத நிலையங்களில் இருந்து கோட்டை புகையிரத நிலையத்தை அடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், இரவு 8 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து புறப்படும் என புகையிரத திணைணக்களம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1421548- யாழுக்கு விஜயம் செய்தார் பிரதமர் ஹரிணி
யாழ்.மாவட்டம் கல்வியில் சிறந்து விளங்குவதாகவும் பிரதமர் தெரிவிப்பு! யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு இன்று பிரதமர் ஹரினி அமரசூரிய விஜயம் செய்துள்ளார். இதன்போது அவர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் விளையாட்டில் ஈடுபட்டிருந்த மாணவர்களிடமும்,கல்லூரி அதிபர் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடிய தேவைகளையும் கேட்டறிந்து கொண்டார். அத்தோடு, கல்லூரி அருங்காட்சியகம், மாணவர்களின் இணைப்பாட விதான செயற்பாடுகளையும் அவர் பார்வையிட்டிருந்தார். இதன்போது கல்லூரி மண்டபத்தில் பிரதமர் உரையாற்றியதுடன் பிரதமருக்கு பாடசாலை அதிபரால் நினைவுப் பரிசொன்றும் கையளிக்கப்பட்டுள்ளது. அங்கு கருத்து தெரிவித்த பிரதமர், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகளைப் பாராட்டியதுடன், யாழ்ப்பாண மாவட்டத்தில் கல்விக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்படுவது எல்லோருக்கும் தெரிந்த விடயம் எனவும், யாழ்ப்பாண மாவட்டம் கல்வியில் சிறந்து விளங்குவதாகவும் தெரிவித்தார். அத்தோடு, பாடசாலை கல்விக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும், தனியார் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார். மேலும், சமுதாயத்தில் கல்வியின் முக்கியத்துவத்தை பிரதமர் எடுத்துரைத்ததுடன், கல்வியின் ஊடாக சிறந்த பிரஜைகளை உருவாக்க வேண்டும் எனவும், அதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். இந்நிகழ்வில், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். இதேவேளை, பிரதமர் ஹரினி அமரசூரிய இன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளிலும், பொதுமக்கள் சந்திப்புக்களிலும் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1421528- பணயக் கைதிகளை விடுவித்த ஹமாஸ் அமைப்பு !
பணயக் கைதிகளை விடுவித்த ஹமாஸ் அமைப்பு ! பணயக் கைதிகளை பரிமாறிக்கொள்வதற்காக இன்று சனிக்கிழமை விடுவிக்க இருக்கும் மூன்று இஸ்ரேலிய கைதிகளின் பெயர்களை ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. காசா போர்நிறுத்த ஒப்பந்தங்களை மீறியதாக கூறி பணயக்கைதிகளை விடுவிப்பதை ஒத்திவைப்பதாக ஹமாஸ் அமைப்பு முன்னதாக கூறியிருந்தது. ஆனால் கெயிரோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் அதனை கடைபிடிப்பதற்கு ஹமாஸ் ஒப்புக்கொண்டது. நேற்று வெள்ளிக்கிழமை வெளியான அறிக்கையின்படி இஸ்ரேலிய ரஸ்யரான தாஷா ட்ருபுனோ, இஸ்ரேலிய அமெரிக்கரான சாகுள் ஜெகல்ஜேன் மற்றும் இஸ்ரேலிய ஆர்ஜன்டினரான யார் ஹான் ஆகிய பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டு இருந்தனர் . காசாவின் எதிர்காலம் குறித்து அரபு நாடுகளின் புதிய முன்மொழிவுகளை வரவேற்பதாக அமெரிக்க வெளியுறவு செயலர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார். இஸ்ரேல், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அவர் பயணம் மேற்கொண்டுள்ளார். காசாவைவிட்டு பாலஸ்தீனர்கள் நிரந்தரமாக வெளியேறி வேறு இடங்களில் குடியேற வேண்டும் என்ற அமரிக்க அதிபர் ட்ரம்பின் முன்மொழிவுக்கு அரபு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ரஸ்ய அதிபர் புட்டினுடன் நேரடியாக பேசியுள்ள நிலையில் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் உக்ரைனை தவிர்க்ககூடாது என்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியும் உக்ரைனின் கூட்டணி நாடுகளும் எச்சரித்துள்ளன. அமைதியை விரும்புவதாக கூறும் அதிபர் புட்டினை உலக நாடுகள் நம்பிவிடக்கூடாது என்று எச்சரித்த உக்ரைன் அதிபர் வொலடிமிர் செலன்ஸ்கி அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வொன்ஸை சந்தித்தபோது உக்ரைன் மக்களை அமெரிக்கா கைவிட்டுவிடக்கூடாது என்று வலியுறுத்தினார். மூன்று ஆண்டுகளாக நடந்துவரும் ரஸ்ய படையெடுப்புகளை நிறுத்துவதற்கான அதிபர் ட்ரம்பின் திடீர் அறிவிப்பு குறித்து அமெரிக்காவின் நேட்டோ கூட்டணி நாடுகளும் கவலை தெரிவித்திருந்தன. இந்நிலையில் ரஸ்யா நடத்திய தாக்கதலால் செர்னோபில் விமான நிலையத்தின் கதிரியக்க பாதுகாப்பு கணிசமாக சேதமடைந்தள்ளதாக யுக்ரைன் கூறியுள்ளது. கதிரியக்க பாதகாப்பு பகுதியை ட்ரோன் தாக்கியதாகக் கூறியுள்ள அதிபர் செலன்ஸ்கி அப்போது ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்தார். கதிரியக்க அளவு அதிகரிக்கவில்லை என்றும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். 1986ஆம் ஆண்டு உலகின் மிக மோசமான அணு விபத்து நடந்தபோது சுமார் 30பேர் கொல்லப்பட்டதுடன் பலர் பாதிக்கப்பட்ட்டமை குறிப்பிடாதக்கது. உக்ரைனின் எதிர்காலம் குறித்து வாதிக்க உக்ரைன் அதிபர் வொலடிமர் செலஸ்கி அமெரிக்க அதிகாரிகளை மியுனிக்கில் சந்தித்தார். உக்ரைன் மீதான ரஸ்ய போர் குறித்து விலாடிமிர் புட்டினுடன் ட்ரம்ப் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளார். ரஸ்ய படையெடுப்பால் நாடு முழுவதும் நகரங்கள் அழிக்கப்பட்டு பலரது வாழ்க்கை சீர்குழைந்துள்ளது. முக்கியமான அணை அழிக்கப்பட்டநிலையில் சாப்ருஸ்யாவின் தெற்கே உள்ள நீர்தேக்கம் இப்போது வறண்டுள்ளதாகவும் அறியப்படுகின்றது. https://athavannews.com/2025/1421549- உடல் நலப் பாதிப்பு - பாப்பரசர் மருத்துவமனையில் அனுமதி
போப் பிரான்சிஸ் வைத்தியசாலையில் அனுமதி! மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக மேலதிக பரிசோதனைகளுக்காக ரோமில் உள்ள மருத்துவமனையில் திருத்தந்தை பிரான்சிஸ் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது. இதேவேளை கடந்த இரண்டு ஆண்டுகளில் போப் பலமுறை காய்ச்சல் மற்றும் பிற உடல்நலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிந்தார் அத்துடன் அவர் தனது இளமை பருவத்தில் நுரையீரல்களில் ஒன்றை அகற்றினார் மற்றும் நுரையீரல் தொற்றுநோயால் அவதிப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1421520- சண்டைச் சேவல் கறிக் குழம்பு.
எல்லாவற்றையும் முடிவு எடுப்பது பணம் என நினைக்கின்றேன் சுவியர். அதுகும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களிடம் பணத்திற்கு முன், பாசம் தோற்று விடும். வீட்டில்... லக்ஷ்மி மாதிரி பால் கொடுத்த பசு மாட்டையே, ஒரு கட்டத்திற்கு மேல் பராமரிக்க முடியமால், கண்ணீர் சிந்த விற்று விடுகின்றார்கள். 😢- கருத்து படங்கள்
- மும்மொழியிலான தேசிய பாடசாலைக்கு பிரதமர் விஜயம்!
மும்மொழியிலான தேசிய பாடசாலைக்கு பிரதமர் விஜயம்! இந்திய அரசின் நிதியுதவியின் கீழ் பொலன்னறுவை, கதுருவெல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் மும்மொழியிலான தேசிய பாடசாலையின் தற்போதைய நிலை தொடர்பில் ஆராய்வதற்கான கண்காணிப்பு விஜயம் மற்றும் குறித்த பாடசாலையின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று இன்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் இடம்பெற்றள்ளது. வலயத்தின் அனைத்து இன, மதங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சகல பிள்ளைகளுக்கும் கல்வியை பெறுவதற்கான வசதியை நோக்கமாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்டுவரும் இந்தப் பாடசாலையின் நிர்மாணிப்பணிகள் பல வருடங்களாக மந்தகதியில் இடம்பெற்றமை தொடர்பில் இதன்போது பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டிருந்தது. அதன்படி இந்திய அரசின் நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்படும் முன்பக்க கட்டடத்தின் பணிகள் 75% நிறைவடைந்துள்ளதுடன், அதன் மீதமுள்ள பணிகளை நிறைவு செய்வதற்கு ரூ.150 மில்லியன் செலவாகுமெனவும், இரண்டாவது கட்டடம் இலங்கை அரசின் நிதியின் கீழ் நிர்மாணிக்கப்படுவதுடன் அதன் பணிகள் 40% நிறைவடைந்துள்ளதாகவும், மீதமுள்ள பணிகளை நிறைவு செய்வதற்கு ரூ. 400 மில்லியன் தேவைப்படுவதாகவும் கட்டட நிறுவனத்தினால் சுட்டிக்காட்டப்பட்டது. பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் ஒரே நேரத்தில் 1600 மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடக்கூடிய வசதிகள் இங்கு காணப்படுவதுடன், விசேட கல்வி பிரிவு, மொழி வகுப்பறை, e-learning வகுப்பறை, விடுதி, நிர்வாக கட்டடம், ஆய்வுகூட வசதிகள், அடிப்படை வசதிகள் உட்பட ஆசிரியர் உத்தியோகபூர்வ இல்லம் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டதாக பாடசாலையை நிர்மாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக கட்டட நிறுவன பொறியியலாளர்கள் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தார். இந்த வளங்கள் அழிவடைவதற்கு இடமளிக்காது, பிள்ளைகளின் கல்விக்கென அவற்றை கட்டியெழுப்புவதற்கு தேவையான பிரேரணைகள் மற்றும் திட்டங்களை உடனடியாக முன்வைக்குமாறு பிரதமரினால் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டது. இதில் கண்காணிப்பு விஜயத்தில் வீடமைப்பு பிரதியமைச்சர் டீ.பீ.சரத், பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பத்மசிறி பண்டார, பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ரத்னசிறி, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வியமைச்சின் செயலாளர் நாலக கலுவௌ, வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச, பொலன்னறுவை மாவட்ட செயலாளர் சுஜந்த ஏக்கநாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1421499- "கிளீன்......"
புத்தன்… இது உங்களின் சுய ஆக்கம் என்றால், ”யாழ் 27 அகவை - சுய ஆக்கங்கள்” பகுதியில் பதிந்து இருக்கலாமே.- அர்ச்சுனா எம்.பி.யின் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் படுகாயம்!
தகவலுக்கு நன்றி புத்தன்.- அர்ச்சுனா எம்.பி.யின் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் படுகாயம்!
வலம்புரி…. தங்கும் விடுதிகளும் வைத்துள்ளார்கள் என நினைக்கின்றேன். தங்கும் விடுதியும், மேலே சம்பவம் நடந்த உணவகமும் ஒன்றா அல்லது வேறானவையா எனத் தெரியவில்லை. ஆனால்… பெரும்பாலானவர்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கும் தரமான விடுதிகளில் இதனையும் குறிப்பிடுகின்றார்கள்.- அர்ச்சுனா எம்.பி.யின் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் படுகாயம்!
நியாயம்… எனக்கு இந்தத் தாடியை தெரியாது. இப்படிப் பட்ட கீழ்த்தரமான குணநலன் உள்ளவர்கள் எனது நண்பர் வட்டத்தில் இல்லை. ஜேர்மனியில் வசித்தும்…. சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் மற்றவனின் மேசையில் போய் காவாலித்தனம் செய்யும் தாடிக்கும், நான்கு போட்டு அனுப்பியிருக்கலாம். தாடியருக்கு விழ வேண்டிய அடி, மாறி அவரின் சாரதிக்கு விழுந்திட்டுது போலுள்ளது.- மோடி – டிரம்ப் சந்திப்பு: முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
அமெரிக்காவில் மோடி, டிரம்ப் பத்திரிகையாளர் சந்திப்பு. 👉 https://www.facebook.com/exnvasu.srinivasan/videos/1137664734195084/ 👈 பைடனையும், டிரம்பையும் ஒப்பிட்டு ஒரு கேள்வி கேட்டிருக்காங்க... ஒழுங்கா ஆங்கிலம் தெரிஞ்சா பதில் சொல்லியிருப்பாரு..... திருதிருன்னு முழிச்சுன்னு பாக்கவே பாவமா இருக்கு. நக்கலாக டிரம்ப் சிரிச்சிட்டு, "இது உன் கேள்வி.... நானே பதில் சொல்லுறேன்னு கலாய்ச்சு மொத்த பேரும் சிரிக்கிறாங்க. ரொம்ப வேதனையாதான் இருக்கு. Vasu Sumathi- உண்மை தெரிந்தாகனும்
செம்பாட்டான்… உங்கள் அறிமுக தலைப்பு, அழிந்தமை… தற்செயலாக நிகழ்ந்த ஒரு துர்ப்பாக்கிய நிலைமை. அதற்காக கவலைப் படாமல், மீண்டும் புதிதாக ஒரு தலைப்பை ஆரம்பியுங்கள். நிச்சயம் அதில் பலரும் மீண்டும் வந்து வரவேற்பார்கள். 👍🏽- இணையத்தளம் மூலம் 29 இலட்சம் ரூபா மோசடி செய்த இருவர் கைது!
29 லட்ச ரூபாயை… சுளையாக கொடுத்து ஏமாந்தவர்கள், நிச்சயமாக வடக்கு, கிழக்கை சேர்ந்த தமிழர்களாகத்தான் இருப்பார்கள். 😎- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஓம் பையா… இன்னும் மூன்று நாட்கள் உள்ள படியால், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கிடைக்கும் லீவு நேரத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கின்றேன். 🙂- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
மோகன் அண்ணா… பையனின் கருத்தே எனதும். குமாரசாமி அண்ணைக்கு விதிக்கப் பட்டுள்ள கட்டுப்பாட்டை தயவு செய்து தளர்த்தி விடவும். நன்றி.- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
@புலவர், @Ahasthiyan, @சுவைப்பிரியன், @பிரபா, @P.S.பிரபா, @நீர்வேலியான், @Eppothum Thamizhan, @கல்யாணி, @வாதவூரான், @theeya, @கந்தப்பு ஆகியோர் வழமையாக உற்சாகத்துடன் கலந்து கொள்கின்ற ஆட்கள். ஏன் இன்னும் தாமதிக்கின்றார்கள் என்று தெரியவில்லை பையன். - சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.