Everything posted by தமிழ் சிறி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பாஞ்ச் அண்ணையின் பிறந்தநாளுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளது. ஏப்பிரல் 14 அன்றுதான் அவரின் பிறந்தநாள்.
-
தமிழை தவிர வேறு மொழி??
அனைவரும் கேட்க வேண்டிய அருமையான காணொளி. இணைப்பிற்கு நன்றி விசுகர்.
-
"காதலர்தின", சிரிப்புகள். (14.02.)
ஆழமான காதல்..... கள்ளக் காதல்... 🤣🤣🤣
-
"காதலர்தின", சிரிப்புகள். (14.02.)
- அர்ச்சுனா எம்.பி.யின் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் படுகாயம்!
வலம்புரி ஹோட்டேலில்... டாக்டர் சாப்பிட்ட காசை விட, உடைந்த பொருட்களுக்கு பில் அதிகமாக வந்திருக்கு. Butter Naan - 320 x 2 = 640 ரூபாய் மாட்டு இறைச்சி கறி - 850 ரூபாய் எலுமிச்சை சாறு - 320 ரூபாய் வைத்தியர் சாப்பிட்ட காசு, மொத்தம் 1810 ரூபாய். உடைந்த பொருட்கள்.... 30 பீங்கான் கோப்பை. ஒன்றின் விலை 100 ரூபா x 30 = 3000ரூபாய். உள்ளூர் வரியுடன் மொத்தம்.... 5291 ரூபாய்.- சண்டைச் சேவல் கறிக் குழம்பு.
“சண்டைச் சேவல் கறிக் குழம்பு” பொதுவா நாட்டுக்கோழிக் குழம்புக்கு நாட்டுக்கோழி அடிப்பது வேறு! சண்டைச் சேவல் நாட்டுக்கோழி குழம்பு சாப்பிட்டு இருக்கிங்களா? சேவற் சண்டையில் ஒரு கண் போனது, இறக்கை அடி வாங்கியது, நிறைய அலகு குத்து வாங்கியது, காலில் அடிபட்டது போன்ற சேவல்களை பலர் கறிக்கு விற்றுவிடுவார்கள். இந்தச் சேவல்கள் எல்லாம் ஆட்டுக்கறியை விட கடினமானவை! குக்கரில் வேக வைத்தால் கூட 10 - 12 விசில்கள் வைத்தால் மட்டுமே ஓரளவு நன்கு வேகும்! உசிலம்பட்டி செல்லும் வழியில் செக்கானூரணி அருகே இதை அற்புதமாக சமைப்பார்கள்! நல்ல கொதிக்கும் நீரில் 2 மணிநேரம் ஊறவைத்து இறக்கை மற்றும் மயிர்களை அகற்றி சுத்தம் செய்து பிறகு மீண்டும் கொதிக்கும் நீரில் 3 மணிநேரம் மூழ்க வைத்து அதன் பின்பே சமைப்பார்கள்! சமையலிலும் கறி கிட்டத்தட்ட 45 நிமிடங்களுக்கு மேல் குழம்பில் வேகும்! இப்படி சமைத்தால் தான் அப்படியே திருநெல்வேலி அல்வா போன்ற பதத்தில் அந்தக் கறி வெந்திருக்கும்! ரோஜா இதழ்களை பறித்தது போல கறி எலும்பில் இருந்து கழன்று வரும்! கசகசா, தேங்காய், முந்திரி அரைத்த மசாலாவுடன் கிராம்பு, ஏலம், பட்டை மசாலா வாசத்துடன் அதை ருசிப்பதே பேரானந்தம்! அதிலும் செக்கிலாட்டிய நல்லெண்ணெய் சொட்டச் சொட்ட அந்தக் குழம்பை சுடு சோற்றில் போட்டு பிசைந்து கூடவே அவித்த நாட்டுக் கோழி முட்டையோடு உண்பதே பூலோக சொர்க்கம் எனப்படும். கார் டயரைப் போன்ற கறியை பஞ்சு மிட்டாய் போல வேக வைத்து தருவது பெரிய பக்குவம் ஆகும்! கிட்டத்தட்ட ஓர் இரவு முழுக்க இந்தக் கறி வெந்தால் மட்டுமே இந்த பக்குவம் கிடைக்கும்! இன்றும் மதுரையில் இந்த சண்டை சேவல் கறி மிக மிக பிரபலம்! மிக மிக டிமாண்ட்!! ஏனெனில் பாக்யராஜின் முருங்கையை விட இது முந்நூறு மடங்கு வீரியம் உடையது என்ற நம்பிக்கையே! இன்றும் புது மாப்பிள்ளைக்களுக்கு மறுவீட்டில் தருகின்ற விருந்தில் சேவல் கறி முதலிடம் பிடித்து இருக்கிறது! உருளைக்கிழங்கு, சோயா பீன்சுடன் முக்கால் கிலோ சேவல் கறியுடன். சாஃப்டான பிராய்லர் கோழி 1/4 கிலோ சேர்த்து சமைப்பது மதுரைப் பக்கத்து விருந்து வழக்கமாகும்! சேவலின் அந்தரங்கப் பகுதி, ஈரல், மாங்கா, கழுத்து, மண்டை, கால் போன்றவை நிச்சயம் நாம் ருசிக்க வேண்டிய ஒன்றாகும்! இந்தப் பாகங்கள் இதன் ருசியை மட்டுமின்றி ருசிகரமான தாம்பத்ய உறவுக்கும் காரணம் என நம்புகின்றனர்! இந்தக் குழம்பை சோற்றுக்கு மட்டுமின்றி. இட்லி, தோசை, ஆப்பத்திற்கும் ஆபத்தில்லாத அல்டிமேட் தொடுகறி ஆகும்! இந்தக் கறியில் பிரியாணியும் செய்யலாம்! எலும்புக் கறி, பருப்பு, சுரைக்காய், மாங்காய் போட்ட தால்ஸாவும், தயிர் வெங்காயமும் உங்களை ஒரு சட்டி பிரியாணியை ருசிக்க வைக்கும்! இதிலும் அவித்த முட்டை தனி! சூடான கோதுமை புரோட்டா, சப்பாத்தி, ரொட்டி வகைகளுக்கும் இந்த சேவல் கறிக்குழம்பு ஒரு நல்ல இணையாகும். புலாவ், ஃப்ரைடு ரைஸ் போன்ற உணவுகளுக்கும் பிரட், பன் போன்ற ரொட்டிகளுக்கும் சிறந்த தொடுகறி இந்த சண்டைச் சேவல் கறிக் குழம்பாகும்! வெங்கடேஷ் ஆறுமுகம்- "காதலர்தின", சிரிப்புகள். (14.02.)
அதுக்கு... அவங்க புருஷன், ஒத்துக்கணுமே... 😂 🤣- ஒரே மாதிரியான இலக்கத் தகடுகள் கொண்ட இரு கார்கள் மீட்பு!
ஒரே மாதிரியான இலக்கத் தகடுகள் கொண்ட இரு கார்கள் மீட்பு! தெஹிவளை மற்றும் தலுகம பகுதியில் ஒரே மாதிரியான இலக்கத்தகடு கொண்ட இரண்டு கார்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாணந்துறை, வலானாவில் உள்ள மத்திய ஊழல் தடுப்புத் தாக்குதல் படையின் (CACAF) பொலிஸ் புலனாய்வு அதிகாரிகளால் நேற்று (13) கார்கள் கைப்பற்றப்பட்டன. விசாரணைகளைத் தொடர்ந்து, ஒரு வாகனம் தெஹிவளை சீ வீதியில் இருந்தும் மற்றைய வாகனம் தலுகம முதியன்சே வத்தையிலிருந்தும் கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்ட வாகனங்கள் தெஹிவளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், உண்மையான காரை இனங்கண்டு கொள்வதற்காக அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தினால் வாகனங்களை சோதனையிடுவதற்கு நீதிமன்ற உத்தரவு பெற்றுக் கொள்ளப்படவுள்ளது. https://athavannews.com/2025/1421377- துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் தலைமறைவு
துவக்கை விற்று, துபாய்க்கு போயுள்ளார் போலுள்ளது.- தெல்லிப்பழை வைத்தியசாலையில் அடிக்கல் நாட்டு விழா!
தெல்லிப்பழை வைத்தியசாலையில் அடிக்கல் நாட்டு விழா! தெல்லிப்பழை வைத்தியசாலை புற்றுநோய் சிகிச்சை பிரிவுக்கான கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவுக்கான Palliative Care கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்றைய தினம் இடம்பெற்றது. இக்கட்டடத்திற்கான அடிக்கல்லினை வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் நாட்டிவைத்தார். சுமார் 30 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த கட்டடம் அமைக்கப்படவுள்ளதாகவும், இதற்கான நிதிப் பங்களிப்பை வன்னி கோப் எனும் நிறுவனம் வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1421406- கருத்து படங்கள்
- "காதலர்தின", சிரிப்புகள். (14.02.)
- இலங்கையிலிருந்து வெளியேறுவதை உறுதிப்படுத்திய அதானி கிறீன் எனர்ஜி
- தென் சூடான் ஐநா அமைதி காக்கும் பணிகளுக்காக இலங்கை இராணுவம் பயணம்!
தென் சூடான் ஐநா அமைதி காக்கும் பணிகளுக்காக இலங்கை இராணுவம் பயணம்! ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிகளுக்கான தெற்கு சூடான் நிலை 2 மருத்துவமனையில் கடமைகளைப் பொறுப்பேற்க இலங்கை இராணுவ மருத்துவப் படையின் 11வது இராணுவ மருத்துவக் குழு இன்று நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளது . நாட்டிலிருந்து புறப்பட்ட 11வது இராணுவ மருத்துவப் படைக் குழுவில் 16 இராணுவ அதிகாரிகள், இரண்டு கடற்படை அதிகாரிகள் மற்றும் 46 சிப்பாய்கள் உட்பட 64 இராணுவ வீரர்கள் அங்கம் வகிக்கின்றனர். அந்தக் குழுவின் கட்டளை அதிகாரியாக லெப்டினன்ட் கேணல் ஆர்.எம்.டி.பி. ராஜபக்ஷ யுஎஸ்பீ. அவர்களும் இரண்டாவது கட்டளை அதிகாரியாக கே.டி.பி.டி.இ.ஏ. விஜேசிங்கே அவர்களும் கடமையாற்றவுள்ளனர். இதேவேளை இராணுவத் தளபதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் படைத் தளபதியும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே, தொலகே வெளியேறும் 11வது இராணுவ மருத்துவப் படையணிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர். இராணுவ மருத்துவப் படையணி தலைமையக நிலையத் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.ஏ.யு.எஸ். வனசேகர ஆர்.டபிள்யூ.பீ யுஎஸ்பீ, சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் குழு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குறித்த குழுவினை வழியனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1421294- யாழ். செம்மணியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு !
செம்மணி பகுதியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு! யாழ். செம்மணி பகுதிக்கு அருகில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது செம்மணி பகுதிக்கு அருகில் அமைந்துள்ள சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மின் தகன எரியூட்டி அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் காணப்பட்டுள்ளன. அதனை அடுத்து , கட்டட வேலைகளை முன்னெடுத்த ஒப்பந்தக்காரர் , அது தொடர்பில் நல்லூர் பிரதேச சபை மற்றும் மயான அபிவிருத்தி சபையினருக்கு அறிவித்துள்ளார். இது தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ள நிலையில் , கட்டட பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது இதன்போது 1996ஆம் ஆண்டு சுண்டுக்குளி மாணவி கிருஷாந்தி உள்ளிட்ட 4 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை 1995ஆம் ஆண்டு மற்றும் 96ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட பலர் படுகொலை செய்யப்பட்டு , செம்மணி பகுதியில் உள்ள வயல்வெளிகளில் புதைக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது மேலும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக கூறப்படும் பகுதிகள் குறித்த மயானத்தை அண்மித்த பகுதிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1421328- நாமல் ராஜபக்ஷவின் சட்டப்படிப்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் ; குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பணிப்புரை
நாமலின் சட்டப் பட்டம் தொடர்பாக சி.ஐ.டி விசாரணை! நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எவ்வாறு சட்டப் படிப்பு பட்டம் பெற்றார் என்பது குறித்து விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சட்டம் தொடர்பான தனது உயர்நிலை கல்வித் தகைமையை மோசடியான முறையில் பெற்றுக்கொண்டதாக கூறப்படும் பல முறைப்பாடுகளைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பரீட்சை தினத்தன்று நாமல் ராஜபக்ஷ மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக அன்றையதினம் அவருடன் பரீட்சைக்கு தோற்றிய இளைஞர் ஒருவர் முறைப்பாடு பதிவு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1421344- "காதலர்தின", சிரிப்புகள். (14.02.)
போலியான செய்தி குறித்து அரசாங்கம் தெளிவுபடுத்தல்! காதலர் தினத்தன்று (14) பாடசாலைகள் பிரத்தியோக வகுப்புகள் நடத்தப்பட மாட்டாது என பரப்பப்படும் போலிச் செய்திகள் தொடர்பான உண்மைகளை அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. கல்வி அமைச்சின் முத்திரை பதித்து, செயலாளர் கையொப்பமிட்டதாக போலியாக தயிரிக்கப்பட்ட கடிதமொன்றினூடாக, நாடு பூராகவும் இன்று (14) பாடசாலைகள் மற்றும் பிரத்தியேக வகுப்புக்கள் நடைபெற மாட்டாது என்ற போலி பிரச்சாரம் ஒன்று சமூக ஊடகங்களின் ஊடாக பரவி வருகின்றது. இந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் உண்மைக்கு புறம்பானவை என்றும் அவற்றை சமூக ஊடங்களில் பரப்புவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. https://athavannews.com/2025/1421358- விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு… உள்துறை அமைச்சகம் உத்தரவு!
நடிகர் விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு! தென்னிந்திய சினிமா நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான ஜோசப் விஜய்க்கு இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் ‘Y’ அளவிலான பாதுகாப்பை வழங்கியுள்ளது. இதன்படி, தமிழகத்தில் அவருக்கு CRPF பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஆயுதம் ஏந்திய வீரர்கள் உட்பட 8 முதல் 11 காவலர்கள் 24 மணிநேரமும் பாதுகாப்பில் இருப்பார்கள். ‘தளபதி’ என்று தனது ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தை (TVK) ஒரு வருடத்திற்கு முன்பு நிறுவி, 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகி வருகிறார். விஜய் தனது கட்சியின் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதுடன், தேர்தல் வியூகங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் ஒரு பொதுக்குழு கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளார். மேலும், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் முயற்சிகளைப் போலவே மாநிலம் முழுவதும் ரோட்ஷோ நடத்தவும் அவர் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. சரியான திகதிகள் மற்றும் விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், இந்த ஆண்டு நிகழ்வு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போதுள்ள அச்சுறுத்தல் நிலைகள், உளவுத்துறை அறிக்கைகள் மற்றும் விஜய்யின் வளர்ந்து வரும் அரசியல் முக்கியத்துவத்தின் அடிப்படையில் ‘Y’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த அளவிலான பாதுகாப்பு தற்போதைக்கு போதுமானதாகக் கருதப்பட்டாலும், தமிழகத்தில் அரசியல்வாதியாக அவரது உயரும் சுயவிவரத்தை இது பிரதிபலிக்கிறது. இந்த பாதுகாப்பு ஏற்பாட்டிற்கான உத்தரவை இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. https://athavannews.com/2025/1421387- தனது குழந்தைகளுடன் மோடியை சந்தித்தார் எலோன் மஸ்க்!
தனது குழந்தைகளுடன் மோடியை சந்தித்தார் எலோன் மஸ்க்! இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது இரண்டு நாள் வொஷிங்டன் பயணத்தின் போது, புதிதாக நிறுவப்பட்ட அரசாங்கத் திறன் துறைக்கு (DOGE) தலைமை தாங்கும் சிறப்பு அமெரிக்க அரசாங்க அதிகாரியாக நியமிக்கப்பட்ட எலோன் மஸ்க்கை வியாழக்கிழமை (13) சந்தித்தார். வொஷிங்டனில் அமைந்துள்ள பிளேர் ஹவுஸில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி தனது குழந்தைகளுடன் மோடியை சந்தித்தார். சந்திப்பு குறித்து எக்ஸில் பதிவிட்டுள்ள மோடி, “இந்தியாவின் சீர்திருத்த முயற்சிகள் மற்றும் ‘குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆட்சி’ பற்றி தொழில்நுட்ப பில்லியனருடன் விவாதித்ததாக பதவிட்டார். அத்துடன், விண்வெளி, இயக்கம், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகள் போன்ற பல்வேறு விடயங்களைப் பற்றி நாங்கள் விவாதித்தோம் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார். சந்திப்பு குறித்த மற்றொரு எக்ஸ் பதிவில் மோசடி, எலோன் மஸ்க்கின் குழந்தைகளுடன் தனது புதுமையான தருணங்களின் காட்சிகளைப் பகிர்ந்து கொண்டார், அதில், பில்லியனரின் குடும்பத்தைச் சந்தித்ததும், பலதரப்பட்ட விடயங்களைப் பற்றிப் பேசுவதும் மகிழ்ச்சியாக இருந்தது – என்று பதவிட்டார். டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்கு மீண்டும் திரும்பிய பின்னர் தனது முதல் அமெரிக்க பயணமாக பிரதமர் மோடி வியாழன் அதிகாலை வொஷிங்டன் டிசியை சென்றடைந்தார். மோடியின் அமெரிக்க விஜயம் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1421355- ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை நிச்சயம் மீட்போம்! -நேட்டோவிடம் உக்ரேன் உறுதி
ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை நிச்சயம் மீட்போம்! -நேட்டோவிடம் உக்ரேன் உறுதி. ”ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை தாம் நிச்சயம் மீட்போம் ”என நேட்டோ இராணுவக் கூட்டமைப்பிடம் உக்ரேன் உறுதியளித்துள்ளது. ரஷ்யா கைப்பற்றிய பகுதிகளை உக்ரேனால் இனி திரும்பப் பெற முடியாது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அண்மையில் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் பீட் ஹெக்செத் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்து. இந்நிலையில் குறித்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் உக்ரேன் பாதுகாப்புத் துறை அமைச்சா் ருஸ்தம் உமெரொவ், நோட்டோ தலைவர் மார் க் ரூட்டை, நேட்டோ தலைமையகத்தில் அண்மையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது உக்ரேனுக்கு நேட்டோ அமைப்பு தொடர்ந்து அளித்துவரும் ஆதரவுக்கு நன்றி எனவும், அனைத்து நட்பு நாடுகளும் தங்களுக்கு ஆதரவு அளிக்கின்றன எனவும், அமெரிக்காவும் தம்முடன் தான் உள்ளது எனவும், எனவே உக்ரேனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிப்பதற்கான செயல்பாடுகள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1421343- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சிரிக்கலாம் வாங்க
பாம்பை... பழி வாங்கிய குருவி.😂- நாட்டில் ஏற்பட்ட மின் தடைக்கு, குரங்கே காரணம் !
- அர்ச்சுனா எம்.பி.யின் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் படுகாயம்!
- இரசித்த.... புகைப்படங்கள்.
இது, எங்களின்... Fபமிலி போட்டோ. 😂 நான், அப்பா, அம்மா, தம்பி, தங்கச்சி. 🤣 - அர்ச்சுனா எம்.பி.யின் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் படுகாயம்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.