Everything posted by தமிழ் சிறி
-
நாட்டில் ஏற்பட்ட மின் தடைக்கு, குரங்கே காரணம் !
- "காதலர்தின", சிரிப்புகள். (14.02.)
- சிரிக்க மட்டும் வாங்க
- சிரிக்கலாம் வாங்க
- ஜனாதிபதி ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு விஜயம்!
‘TIME 100 Gala Dinner’ இராப்போசன விருந்துபசாரத்தில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி! ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயில் பெப்ரவரி 11 முதல் 13 வரை நடைபெறும் 2025 சர்வதேச அரச உச்சி மாநாட்டில் (WGS) பங்கேற்பதற்காக எமது நாட்டில் இருந்து புறப்பட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட குழுவினர் இன்று பிற்பகல் டுபாய் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளனர். அங்கு ஐக்கிய அரபு இராச்சிய வெளிநாட்டு வர்த்தகத் துறை இராஜாங்க அமைச்சர் தானி பின் அஹமட் அல் செய்யூத் உள்ளிட்ட அரச பிரதிநிதிகளால் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினருக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்வில் ஐக்கிய அரபு இராச்சிய பதில் தூதுவர் தக்ஷிலா ஆர்னோல்டா, டுபாய் மற்றும் வடக்கு எமிரேட்ஸிற்கான இலங்கை கொன்சூலர் ஜெனரல் அலெக்ஸி குணசேகர உள்ளிட்ட டுபாயில் உள்ள இலங்கை தூதரக பிரதிநிதிகள் குழுவினரும் கலந்து கொண்டிருந்தனர். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று பிற்பகல் மாஸ்டர் இன்வெஸ்ட்மென்ட் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், ராஸ் அல் கைமா ஆட்சியாளரின் மருமகனுமான ஷேக் அப்துல்லா பின் முஹம்மது அல் காசிமியை சந்திக்க உள்ளார். இதில் இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையிலான பொருளாதார மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து டுபாயில் அமைந்துள்ள புகழ்பெற்ற எதிர்கால அருங்காட்சியகத்தில்(Future Museum) நடைபெறும் ‘TIME 100 Gala Dinner’ இராப்போசன விருந்துபசாரத்திலும் ஜனாதிபதி பங்கேற்க உள்ளார். வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தும் இந்த விஜயத்தில் ஜனாதிபதியுடன் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1420706- யாழில் மீனவ அமைப்பை சந்தித்த சீன உதவித் தூதுவர்
சீனாவின் ‘சகோதர பாசம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நிவாரண பொருட்கள்! சீனாவின் ‘சகோதர பாசம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது குறித்த நிகழ்வானது மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள துள்ளு குடியிருப்பு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்றது. அதன்படி கட்டுக்காரன் குடியிருப்பு மற்றும் துள்ளுக்குடியிறுப்பு பகுதிகளில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பின் தங்கிய குடும்பங்களுக்கு குறித்த உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. இதன்போது, இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி சூ யன் வெய் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வைத்ததுடன் நிகழ்வின் போது 350 குடும்பங்களுக்கு தலா 6490 ரூபா பெறுமதியான பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன்,மன்னார் பிரதேசச் செயலாளர்.எம்.பிரதீப்மற்றும் சீன தூதரகத்தின் உயரதிகாரிகள் துறைசார் அதிகாரிகள் என கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1420695- தையிட்டி விகாரை விவகாரம்: தமிழ் அரசியல்வாதிகளுக்கு உதய கம்மன்பில எச்சரிக்கை!
திஸ்ஸ ரஜமகா விகாரை விவகாரம்: தமிழ் அரசியல்வாதிகளுக்கு உதய கம்மன்பில எச்சரிக்கை! ”யாழ். தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ ராஜமகா விகாரை மீது தமிழர்கள் எவரும் கைவைக்க இடமளிக்கமாட்டோம்” என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். அத்துடன் தையிட்டி திஸ்ஸ ராஜமகா விகாரையை இடிக்க வேண்டும் என்று கூச்சலிடும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு இந்த விடயங்களைத் தெரிவித்துக்கொள்வதாகவும் உதய கம்மன்பில எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ ராஜமகா விகாரை சிங்கள – பௌத்தர்களுக்குச் சொந்தமானது என்றும் அது அமைந்துள்ள காணியும் தற்போது விகாரை நிர்வாகத்துக்கே உரித்தானது என்றும் தெரிவித்த அவர் இந்த விவகாரம் தொடர்பில் கதைப்பதற்குத் தமிழ் மக்களுக்கும், தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் எந்த அருகதையும் கிடையாது என்றும் மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1420646- பாலச்சந்திரனின் மரணச் செய்தி கேட்டு மனமுடைந்தாராம் மகிந்த! இப்படிக் கூறுகிறார் நாமல்
சிறு பிள்ளை வேளாண்மை….- கருத்து படங்கள்
- நாட்டில் ஏற்பட்ட மின் தடைக்கு, குரங்கே காரணம் !
- லசந்த படுகொலை சந்தேகநபர்கள் மூவரை விடுதலை செய்ய சட்டமா அதிபர் ஆலோசனை - நாளை எதிர்ப்பு போராட்டம்
- இளைஞனை கடத்தி 80 இலட்சம் ரூபா பணத்தை அபகரித்த கும்பல்!
யாழ் வாலிபரை கடத்தி பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது! ஆரியகுளத்தை சேர்ந்த ஒருவரை கடத்தி 80 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் யாழ்ப்பாணம் பொலிஸாரால் ஒரு பெண் உட்பட நான்கு சந்தேக நபர்கள் நிதி மோசடி வழக்கின் கீழ் கைது செய்யபட்டுள்ளனர் . பொலிஸாரின் கருத்தின் படி வாலிபர் வேலைக்காக ஐரோப்பாவுக்கு செல்ல திட்டமித்திருந்த நிலையில். கைது செய்யபட்ட பெண் 80 லட்சம் ரூபாய் குடுத்தால் அவரை 2 வாரங்களுக்குள் அனுப்பி வைபதாக உறுதியாளித்துள்ள நிலையில் சில நாட்களுக்கு பிறகு அந்த பெண் மூன்று பேருடன் இணைந்து வாலிபரை கடத்தி சென்று பெண்ணின் வங்கிக்கு பணத்தை மாற்றி உள்ளார். அதனை தொடர்ந்து சந்தேகநபர்கள் ஆள் இல்லாத பகுதியில் வாலிபரை இறக்கி விட்டு சென்றதாக போலீசார் தெரிவிக்கின்றனர். விசாரணைகளை தொடர்ந்து சந்தேக நபர்கள் கைது செய்யபட்டதுடன் கடத்தலுக்காக பயன்படுதபட்ட வாகனமும் பறிமுதல் செய்யபட்டதாக போலீசார் மேலும் தெரிவிதனர் . https://athavannews.com/2025/1420619- நாட்டில் ஏற்பட்ட மின் தடைக்கு, குரங்கே காரணம் !
சர்வதேச தலைப்புகளில் இடம்பிடித்த இலங்கை குரங்கு! இலங்கையில் நேற்று (9) ஒரு எதிர்பாராத குற்றவாளியான குரங்கு, நாடு தழுவிய மின்தடையை ஏற்படுத்தியதாகக் கூறப்பட்டு, முழு தேசத்தையும் இருளில் மூழ்கடித்தது. இதையடுத்து அந்தக் குரங்கானது சர்வதேச தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்திருந்தது. பாணந்துறை உப மின்நிலையத்தில் உள்ள மின் கட்டமைப்பில் காலை 11:30 (0600 GMT) மணியளவில் குரங்கு ஒன்று மோதியதன் காரணமாக நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டிருந்தது. முதலில் தொழில்நுட்பக் கோளாறாகக் கருதப்பட்ட இந்தச் சம்பவம் உண்மையில் குரங்கினால் ஏற்பட்டது என்பதை எரிசக்தி அமைச்சர் உறுதிப்படுத்தினார். எவ்வாறெனினும் மின்சாரத்தை மீட்டெடுக்க அதிகாரிகள் கிட்டத்தட்ட 5 முதல் 6 மணி நேரம் உழைத்தனர். படிப்படியாக மின்சாரம் நேற்று மாலையாகும் போது வாமைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் மின் துண்டிப்பின் வினோதமான தன்மை உலகளாவிய கவனத்தை தூண்டியிருந்ததுடன், பல்வேறு நாடுகளின் பிரதான தலைப்புச் செய்திகளிலும் இடம்பிடித்திருந்தது. அதேநேரம், நுரைச்சோலை அனல் மின் மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்கள் செயலிழந்ததன் காரணமாக பல பகுதிகளில் நேற்றிரவு மீண்டும் மின் விநியோகம் தடைப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1420543- யாழ். பல்கலைக்கழகத்தில் இரு மாணவர் குழுக்களிடையே மோதல்
யாழ். பல்கலையில் மோதல்; இரு மாணவர்கள் காயம்! யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவர்களிடையே நேற்யை (09) தினம் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால், காயமடைந்த இரு மாணவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். நேற்றைய தினம் புதுமுக மாணவர்களின் வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது. இதன்போது 3ஆ ம் மற்றும் 4 ஆம் ஆண்டு மாணவர்களிடையே முறுகல் நிலை ஏற்பட்டு பின்னர் கைகலப்பு ஏற்பட்டது. இதன்போது ஏற்பட்ட மோதலிலேயே இரண்டு மாணவர்கள் காயமடைந்த நிலையிலேயே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். https://athavannews.com/2025/1420552- வகுப்பொன்றில் மாணவர்களின் தொகையை 35 ஆக குறைக்கும் திட்டம் பரிசீலனையில்!
வகுப்பொன்றில் மாணவர்களின் தொகையை 35 ஆக குறைக்கும் திட்டம் பரிசீலனையில்! ஒரு வகுப்பில் மாணவர்களின் எண்ணிக்கையை 35 க்கும் குறைவாக வைத்திருக்கும் யோசனையை பரிசீலித்து வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆசிரியர் மற்றும் அதிபர்கள் சங்கத்திற்கு அறிவித்துள்ளார். கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் தொழிற்சங்க ஒன்றியத்துக்கும் பிரதமருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். இக்கலந்துரையாடலில் கொழும்பு பிராந்தியத்தில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்தமை தொடர்பான தகவல்களை முன்வைத்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அரச பாடசாலைகளில் மாணவர் சேர்க்கை படிப்படியாக குறைந்து வருவது தொடர்பான உண்மைகளை தெரிவித்துள்ளார். மேலும், ஒரு வகுப்பில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையை 35 கட்டுப்படுத்தும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லாது என்பது குறித்தும் உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டன. பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை இவ்வாறான நிலையில் இருந்தால், பிரபல பாடசாலைகள் மற்றும் தனியார் பாடசாலைகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்படாவிட்டால், மாணவர்கள் குறைவாக உள்ள பாடசாலைகள் மூடப்படுவதை தவிர்க்க முடியாது எனவும் இதன்போது அவர் சுட்டிக்காட்டியிருந்தார். https://athavannews.com/2025/1420575- ஜனாதிபதி ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு விஜயம்!
சற்று முன்னர் நாட்டிலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி! ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள 2025 இன் உலக அரசுகளுக்கான உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சற்று முன்னர் இலங்கையிலிருந்து புறப்பட்டுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார, டுபாயில் நடைபெறும் 2025 ஆம் ஆண்டு உலக அரசுகளுக்கான உச்சி மாநாட்டில் உரையாற்றவுள்ளதுடன், பரஸ்பர ஆர்வமுள்ள பல்வேறு துறைகள் குறித்து ஜனாதிபதி முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார். அவர் ஐக்கிய அரபு இராச்சியத்தின் உப ஜனாதிபதியும், பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமையும் சந்திக்கவுள்ளார். மேலும், உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளும் பல நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் அரசாங்கங்களுடன் ஜனாதிபதி அநுரகுமார இருதரப்பு சந்திப்புகளை மேற்கொள்வார். இலங்கைக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தகவல் தொழிநுட்பம், செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி, சுற்றுலா, நிதி மற்றும் ஊடகத் துறைகளில் உள்ள பல முன்னணி உலகளாவிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளார். ஜனாதிபதியின், ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான இவ்விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1420588- நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நெற்புதிதெடுத்தல் நிகழ்வு!
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நெற்புதிதெடுத்தல் நிகழ்வு! நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நெற்புதிதெடுத்தல் (அறுவடை) நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றதுள்ளது தைப்பூச தினத்துக்கு முதல் நாள் கொண்டாடப்படும் ‘புதிர் தினம்’ எனும் இந்த பாரம்பரிய நிகழ்வில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை அறுவடை செய்ய ஆலயத்துக்கு சொந்தமான மறவன்புலவில் உள்ள வயலுக்குச் செல்வார்கள். அந்த வயலில் பூஜை வழிபாட்டுடன் அறுவடை செய்யும் நெல்லில் இருந்து அமுது தயாரித்து நல்லூர் கந்தசுவாமிக்கு படையல் வைத்து பூசைகள் செய்வது வழக்கம். அவ்வாறே இம்முறையும் இடம்பெற்ற படையல் பூஜைகளை தொடர்ந்து பக்தர்களுக்கும் அமுது வழங்கப்பட்டது. இவ்வழிபாட்டு முறை நல்லூர் கந்தசுவாமி கோயிலின் மரபுசார் பண்பாட்டு விழாவாக பேணப்பட்டு வருகிறதுடன் இப்புதிர் விழா 291ஆவது ஆண்டாக இவ்வருடம் கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1420606- மீண்டும் இலங்கைக்கும்-இந்தியாவுக்கும் இடையில் கப்பல் சேவை!
மீண்டும் இலங்கைக்கும்-இந்தியாவுக்கும் இடையில் கப்பல் சேவை! இலங்கைக்கும்-இந்தியாவுக்கும் இடையிலான கப்பல் சேவை எதிர்வரும் 12ஆம் தேதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக கப்பல் சேவையில் ஈடுபடும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது. பல்வேறு காரணங்களால் இடைநிறுத்தப்பட்டிருந்த கப்பல் சேவை பன்னிரண்டாம் திகதி முதல் மீண்டும் தனது சேவையை ஆரம்பிக்க உள்ளதோடு வாரத்தில் ஆறு நாட்கள் குறித்த சேவை இடம்பெற உள்ளதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அத்துடன் செவ்வாய்க்கிழமை தவிர்ந்த ஏனைய நாட்களில் கப்பல் சேவை இடம்பெற உள்ளமையினால் போக்குவரத்துக்கான ரிக்கெட்களை www.sailsubham.com என்ற இணையதளத்தின் மூலமாக அல்லது 021 2224647, 0117642117 இலக்கத்தினூடாகவும் முற்பதிவு செய்து கொள்ளுமாறும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1420645- மகா கும்பமேளா நிகழ்வில் 300 கிமீ நீள போக்குவரத்து நெரிசல்!
மகா கும்பமேளா நிகழ்வில் 300 கிமீ நீள போக்குவரத்து நெரிசல்! கோடிக்கணக்கான பக்தர்கள் உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜுக்கு யாத்திரை மேற்கொள்ளும் பணிகளை ஆரம்பித்துள்ளதால், மகா கும்பமேளா செல்லும் வழித்தடங்களில் ஞாயிற்றுக்கிழமை பல கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பிரயாக்ராஜுக்கு செல்லும் பாதையில் 200-300 கிமீ போக்குவரத்து நெரிசல் உள்ளதால், மத்தியப் பிரதேசத்தின் மைஹார் எல்லையில் உள்ள பொலிஸார், பிரயாக்ராஜ் நோக்கி நகர முடியாது என்று தெரிவித்தனர். நெரிசலில் சிக்கித் தவிக்கும் பக்தர்கள் தங்கள் துயரங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர். பிரயாக்ராஜின் போக்குவரத்து நெரிசல் குறித்த வீடியோக்களையும் பகிர்ந்துள்ளனர். கடுமையான போக்குவரத்து நெரிசல்கள் காரணமாக, புனித நீராடுவதற்கு உரிய நேரத்தில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்திற்கு பக்தர்கள் செல்ல முடியாமல் நகரமே முடங்கியுள்ளது. கூட்டம் அதிகமாக இருந்ததால் பிரயாக்ராஜ் சங்கம் ரயில் நிலையமும் வெள்ளிக்கிழமை முதல் மூடப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை, நூற்றுக்கணக்கான வாகனங்கள் சங்கம் சாலையில் வரிசையாக நிற்பதையும், பக்தர்கள் சிரமமின்றி நடமாடுவதற்காக பொலிஸார் தடைகளை ஏற்படுத்தியதால், வாகனங்கள் ஆமை வேகத்தில் நகர்வதையும் காண முடிந்தது. மகா கும்பாபிஷேகம் ஜனவரி 13 ஆம் திகதி தொடங்கியதில் இருந்து இதுவரை 43 கோடி பக்தர்கள் சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி 1.42 கோடி பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் நீராடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2025/1420598- அமுலுக்கு வரும் அமெரிக்கா மீதான சீனாவின் புதிய வரி!
அமுலுக்கு வரும் அமெரிக்கா மீதான சீனாவின் புதிய வரி! உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் போர் அதிகரித்து, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேலும் பல நாடுகளுக்கு வரி விதிக்கப்படும் என அச்சுறுத்தல் விடுத்துள்ள நிலையில், சில அமெரிக்கப் பொருட்களுக்கு சீனா விதித்துள்ள இறக்குமதி வரி திங்கட்கிழமை (10) முதல் அமலுக்கு வருகிறது. அனைத்து சீனப் பொருட்களுக்கும் 10% புதிய அமெரிக்க வரிகள் அமலுக்கு வந்த சில நிமிடங்களுக்குப் பின்னர், பீஜிங் பெப்ரவரி 4 அன்று வரி திட்டத்தை அறிவித்தது. ஞாயிற்றுக்கிழமை (09) ட்ரம்ப், அமெரிக்காவிற்கு அனைத்து எஃகு மற்றும் அலுமினியம் இறக்குமதி மீது 25% வரி விதிக்கப்படும் என்று கூறினார். விரைவான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ட்ரம்ப், ஏனைய நாடுகளின் மீது பரஸ்பர கட்டணங்களைத் திட்டமிடுவதாக கூறினார் – ஆனால், எந்த நாடுகள் இலக்கு வைக்கப்படும் என்பதை அவர் குறிப்பிடவில்லை. இது தொடர்பான முழு அறிவிப்பு திங்கட்கிழமை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க பொருட்கள் மீதான சீனாவின் அண்மைய வரிகளில் அமெரிக்க நிலக்கரி மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு பொருட்கள் இறக்குமதிக்கு 15% எல்லை வரி அடங்கும். அமெரிக்க மசகு எண்ணெய், விவசாய இயந்திரங்கள் மற்றும் பெரிய எஞ்சின் கார்களுக்கு 10% வரி விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம், சீன அதிகாரிகள் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் மீது ஏகபோக எதிர்ப்பு விசாரணையை மேற்கொண்டனர், அதே நேரத்தில் வடிவமைப்பாளர் பிராண்டுகளான கால்வின் க்ளீன் மற்றும் டாமி ஹில்ஃபிகர் ஆகியவற்றின் அமெரிக்க உரிமையாளரான PVH பீஜிங்கின் சந்தேகத்திற்கிடமான “நம்பமுடியாத நிறுவனம்” பட்டியலில் சேர்க்கப்பட்டது. சீனா 25 அரிய உலோகங்கள் மீது ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது, அவற்றில் சில பல மின் பொருட்கள் மற்றும் இராணுவ உபகரணங்களுக்கான முக்கிய கூறுகளாகும். அமெரிக்காவின் எஃகு மற்றும் அலுமினியம் இறக்குமதிக்கு 25% வரி விதிக்கும் திட்டங்களின் ட்ரம்ப் அறிவிப்பு கனடா மற்றும் மெக்சிகோவுடன் ஒப்பந்தங்களை எட்டிய சில நாட்களுக்குப் பின்னர், அவர் நாடுகளின் அனைத்து பொருட்களுக்கும் 25% கட்டணங்களைத் தவிர்த்தார். அவர் ஜனாதிபதியாக தனது முதல் பதவிக் காலத்தில் இதேபோன்ற நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தினார். எஃகு மீது 25% மற்றும் அலுமினியத்தின் மீது 10% வரிகளை விதித்தார், ஆனால் பின்னர் கனடா, மெக்சிகோ மற்றும் பிரேசில் உட்பட பல வர்த்தக பங்காளிகளுக்கு வரியில்லா ஒதுக்கீட்டை வழங்கினார். பைடன் நிர்வாகம் வெள்ளை மாளிகையை கைப்பற்றும் வரை ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதி வரிகள் தீர்க்கப்படவில்லை. இந்த புதிய கட்டணங்கள் அடுத்த நாட்களில் அமல்படுத்தப்பட்டால், எந்தெந்த நாடுகளுக்கு இதே போன்ற விலக்குகள் வழங்கப்படும் என்பது குறித்து ஞாயிற்றுக்கிழமை குறிப்பிடப்படவில்லை. பரஸ்பர கட்டணங்களைச் செயல்படுத்துவதற்கான அவரது எண்ணம், அமெரிக்கப் பொருட்களுக்கு விதிக்கப்படும் அதே விகிதங்களில் கட்டணங்களை விதிக்கும் தேர்தல் பிரச்சார உறுதிமொழியை நிறைவேற்றும். உலகளாவிய கட்டணங்களுக்கு விலக்கு அளிக்க பரிசீலித்து வருவதாக வெளியான அறிக்கைகளுக்குப் பிறகு, வாகனங்களுக்கான இறக்குமதி வரி இன்னும் கிடப்பில் உள்ளது என்றும் அவர் கூறினார். அமெரிக்க கார்களின் இறக்குமதி மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) வரிகள் அமெரிக்க வரிகளை விட அதிகமாக இருப்பதாக ட்ரம்ப் பலமுறை முறைப்பாடு அளித்துள்ளார். கடந்த வாரம், ட்ரம்ப் பிபிசியிடம் ஐரோப்பிய ஒன்றிய பொருட்களின் மீதான கட்டணங்கள் “மிக விரைவில்” நிகழலாம் என்று கூறினார். எவ்வாறெனினும், ட்ரம்ப் சமீபத்திய நாட்களில் சீனப் பிரதமர் ஜி ஜின்பிங்குடன் புதிய கட்டணங்கள் தொடர்பில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமெரிக்க ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்த அவசரப்படவில்லை என்றும் வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2025/1420560- விற்பனையில் சரிவை சந்தித்து வரும் டெஸ்லா!
விற்பனையில் சரிவை சந்தித்து வரும் டெஸ்லா! உலகின் மிகப் பெரும் செல்வந்தரும், டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க்கின் அரசியல் விமர்சனங்களால், ஐரோப்பாவின் மூன்று முக்கிய சந்தைகளில் டெஸ்லா கார்களின் ஜனவரி மாத விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது. குறிப்பாக , பிரான்சில் 63 சதவீதமும், ஜேர்மனியில் 59.50 சதவீதமும், பிரித்தானியாவில் 12 சதவீதமும் வீழ்ச்சியைக் கண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நாடுகளின் அரசியல் விவகாரங்களில் எலான் மஸ்க் தலையிடுவதாலும், அந்நாட்டு அரச தலைவர்கள் மற்றும் கொள்கைகளை விமர்சனம் செய்வதாலும் அந்நாடுகளைச் சேர்ந்த மக்கள், டெஸ்லா கார்களை வாங்க மறுப்பு தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக அண்மையில் ஜேர்மனியின் சான்சிலர் ஓலாப் ஷோல்ஸை முட்டாள் என்றும், ஜனாதிபதி வால்டர் ஸ்டெய்ன்மியரை சர்வாதிகாரி என்றும் மஸ்க் சாடியிருந்தார். அதேபோல், ஜேர்மனியின் வலதுசாரி கட்சியான ஏ.எப்.டி.இ கட்சிக்கு மஸ்க் ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து, பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான், இவரை ஐரோப்பிய அரசியலில் தலையிடுவதாக விமர்சனம் செய்திருந்தார். மேலும் பிரித்தானியாவிலும், அந்நாட்டு ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் சம்பந்தமான கொள்கைகள் மற்றும் பிரக்சிட் தொடர்பாகவும் மஸ்க் விமர்சனம் செய்தார். இதுபோன்ற விமர்சனங்கள், இந்த நாடுகளின் மக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியதன் காரணமாக, டெஸ்லா கார்களை மக்கள் புறக்கணித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்சார வாகன சந்தையில், சீன நிறுவனங்கள் மற்றும் ஐரோப்பிய நிறுவனங்களின் போட்டி, மின்சார வாகனங்களுக்கான மானியம் குறைப்பு ஆகியவையும் இந்நாடுகளில் டெஸ்லா கார்களின் விற்பனை வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளன. இதனால், டெஸ்லா கார்களுக்கு பதிலாக, போக்ஸ்வேகன், பி.எம்.டபிள்யூ.இ ஜாகுவார் மற்றும் மினி மின்சார கார்களை வாங்குவதில் ஐரோப்பிய மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1420584- அரசியல்வாதிகள் யார்? | இந்துமைந்தர்களின் பேச்சால் அதிர்ந்த அரங்கம்.
யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களுக்கும், கொழும்பு இந்துக் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே நடந்த விவாதம் அது. விவாதத்தின் தலைப்பு: “ஈழமணித்திருநாட்டிலே தமிழ் மக்கள் எதிர் நோக்கும் அன்றாட இடர்களுக்கு பெரிதும் காரணமாக இருப்பவர்கள் அரச ஊழியர்களா அல்லது அரசியல்வாதிகளா?” என்பதாகும் யாழ். இந்துக் கல்லூரி மாணவர்கள்…. அரச ஊழியர்கள் என்றும், கொழும்பு இந்துக் கல்லூரி மாணவர்கள்…. அரசியல்வாதிகள் என்றும் வாதாடினார்கள். ஆக… அரச ஊழியர்களையும், தமிழ் அரசியல்வாதிகளையும் மாணவர்கள் கிழித்து தொங்க விட்டுள்ளார்கள். 😂 இணைப்பிற்கு நன்றி, @ஈழப்பிரியன் 👍🏽- நாட்டில் ஏற்பட்ட மின் தடைக்கு, குரங்கே காரணம் !
சீனாவால் கட்டப் பட்ட நுரைச்சோலை மின் நிலையம் ஒரு வாழ் நாள் நோயாளி. என்ன நேரத்தில் அடிக்கல் நாட்டினார்களோ.. அ ரில் இருந்து இன்று வரை பிரச்சினைதான். அது கட்டிய செலவை விட… திருத்திய செலவு அதிகம் என்று சொல்வார்கள். 😂- தையிட்டி விகாரை இடிக்கப்பட வேண்டும்! -சிவஞானம் ஸ்ரீதரன்
நல்ல ரைமிங் பதில். ரசித்தேன். 👍🏽 😂- ரஷ்ய ஜனாதிபதியை ‘முட்டாள்’ என விமர்சித்த பாடகர் உயிரிழப்பு!
கோசான் சொல்வதுதான் சரி. ✅ இது இயற்கை மரணமாகவே தெரிகின்றது. மேலுள்ள படத்தில்… பாடகரின் உடலும் மிகவும் பொலிவு இழந்து நோயாளி போலவே தெரிகின்றார். ஆகவே புட்டின் மீது வீண்பழி போடுவது அர்த்தமற்ற செயல். 😎 - "காதலர்தின", சிரிப்புகள். (14.02.)
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.