Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. "யூ ரியூப்", "ரிக் ரொக்" காரருக்கு... இப்ப கஸ்ரகாலம் போலை இருக்கு. பின்னை.... கிடைத்த சுதந்திரத்தை அளவுக்கு மீறிப் பாவித்தால், இதனையும் அனுபவிக்கத்தான் வேண்டும். அவர்கள் தம்மை சுய பரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது.
  2. அல்ஜசீராவில் ரணில்! ஐநாவின் 58ஆவது கூட்டத் தொடர் நடந்து கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில்,ரணில் விக்ரமசிங்கவை அல்ஜசீரா அம்பலப்படுத்தியிருக்கிறது. 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐநாவில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானமானது பொறுப்புக் கூறலுக்கானது. அதாவது நிலைமாறு கால நீதிக்கானது. இந்தத் தீர்மானத்தில் இலங்கை அரசாங்கம் இணை அனுசரணையாளராக செயல்பட்டது. அதாவது அரசாங்கமும் சேர்ந்து அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியது. அதற்கு முன் நிறைவேற்றப்பட்ட எல்லாத் தீர்மானங்களும் அரசாங்கத்துக்கு எதிரானவை. இலங்கை அரசாங்கங்களால் ஏற்றுக் கொள்ளப்படாதவை.அதற்கு பின்வந்த தீர்மானங்களும் அத்தகையவைதான். 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட நிலைமாறு கால நீதிக்கான அந்தத் தீர்மானத்துக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியபொழுது ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தார். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்தார். அதாவது இலங்கைத் தீவில் நிலைமாறு கால நீதிக்கான ஐநா தீர்மானத்திருகு ரணிலும் மைத்திரியும் பெற்றோர் ஆவர். ஆனால் 2018 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன அந்தத் தீர்மானத்தைக் காட்டிக்கொடுத்தார். மஹிந்தவோடு இணைந்து அதற்கு எதிராகத் திரும்பினார். அதனால் பழி அவர் மீதுதான் விழுந்தது. அதாவது நிலைமாறு கால நீதியின் பெற்றோரில் ஒருவராகிய மைத்திரி தன் குழந்தையைக் குப்பைத் தொட்டிக்குள் வீசினார் என்று. ஆனால் இரண்டாயிரத்தி இருபத்தி நாலாம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவதற்காக உருவாக்கப்பட்ட மக்கள் அமைப்பு,யாழ்ப்பாணம் உரும்பிராயில் சுமந்திரனைச் சந்தித்தபோது அவர் என்ன சொன்னார்? ரணில் விக்கிரமசிங்கதான் அதைக் குழப்பியவர் என்று சொன்னார். ரணில் விக்கிரமசிங்க நிலைமாறு கால நீதிக்கு விசுவாசமாக இருக்கவில்லை என்றும் சொன்னார். ஆனால் அவர் அதை உரும்பிராயில் வைத்துச் சொல்வதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்பு திருநெல்வேலியில்,யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட வளாகத்தில், ரணிலும் அமர்ந்திருந்த மேடையில் உரையாற்றும் பொழுது என்ன சொன்னார்? 2005 ஆம் ஆண்டு உங்களைத் தெரிவு செய்யாமல் விட்டதற்காக தமிழ் மக்கள் வருந்துகிறார்கள் என்ற பொருள்பட உரையாற்றினார். இலங்கைத் தீவில் நிலைமாறு கால நீதி எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தியது. அதற்கு ரணிலும் பொறுப்பு; மைத்திரியும் பொறுப்பு. மட்டுமல்ல அவர்களோடு பங்காளிகளாக இருந்த தமிழ்த் தரப்பைச் சேர்ந்த சம்மந்தரும் பொறுப்பு ; சுமந்திரனும் பொறுப்பு. 2015இல் நிலைமாறு கால நீதிக்கான தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கிய ரணில் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்ட அல்ஜசீராவின் நேர்காணலில் என்ன கூறுகிறார்? பொறுப்புக் கூறல் தொடர்பில் பொறுப்பற்ற விதமாகப் பதிலளிக்கின்றார்.தன்னை நேர்கண்ட மஹ்தி ஹசனை மடக்குவதாக நினைத்துக் கொண்டு அவர் சொன்ன பதில்கள் அவர் பொறுப்புக் கூறலுக்கு உண்மையாக இல்லை என்பதை வெளியே கொண்டு வந்திருக்கின்றன. அல்ஜசீராவின் “ஹெட் டு ஹிட் “என்ற அந்த நிகழ்ச்சியை ஒரு பேட்டி என்று அழைப்பதை விடவும் குறுக்கு விசாரணை என்றுதான் அழைக்க வேண்டும். அரசியல்வாதிகளை பேட்டி காணச் செல்லும் ஊடகவியலாளர்கள் எப்படி எல்லாம் வீட்டு வேலை செய்திருக்க வேண்டும் என்பதற்கு அது ஒரு தரமான உதாரணம். வீட்டு வேலை செய்யாமல் கேள்வி கேட்கப் போகும் ஊடகவியலாளர்கள் மஹ்தி ஹசனிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். ரணிலைக் அவர் பல இடங்களில் திணறடிக்கிறார். ரணிலின் அரசியல் வாழ்வில் அவர் இந்த அளவுக்கு அவமதிக்கப்பட்ட அல்லது அம்பலப்படுத்தப்பட்ட ஒரு நேர்காணல் இருக்க முடியாது. அந்த நேர்காணலைக் குறித்து முகநூலில், ரணிலுக்கு எதிராக முஸ்லிம் நண்பர்கள் அதிகம் விமர்சனங்களைப் பதிவெற்றி வருகிறார்கள். ரணில் அந்த நேர்காணல் முழுவதிலும் தன்னை ஒரு சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தின் பாதுகாவலனாகவே காட்டிக்கொள்கிறார். அவருடைய லிப்ரல் முகமூடியை மஹ்தி ஹசன் அவமானகரமான விதங்களில் கிழித்தெறிந்து விடுகிறார். அந்த நேர்காணல் முழுவதிலும் ரணில் ராஜபக்சக்களை பாதுகாக்க முயல்கிறார். ஆனால் அதை அதைவிடச் சரியான வார்த்தைகளை சொன்னால் அவர் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பின் நிகழ்ச்சி நிரலை நியாயப்படுத்துகிறார் என்பதே பொருத்தமானது. அவ்வாறு நியாயப்படுத்த முற்படுகையில் அவர் போர்க் குற்றங்கள் தொடர்பாக பொறுப்புக் கூறுவதற்குத் தயாரற்றவராகத் தன்னைக் காட்டிக் கொள்கிறார். முஸ்லிம்களுக்கு பொறுப்பு கூறத் தயாரற்றவராகத் தன்னை காட்டிக் கொள்கிறார்.சிங்கள கத்தோலிக்கர்களையும் அவர் அங்கே அவமதிக்கிறார். முழுக்க முழுக்க ஒரு சிங்கள பௌத்த பெருந்தேசியவாதியாக அந்த இடத்தில் தோற்றம் தருகிறார்.ஆனால் அவர்தான் 2015 ஆம் ஆண்டு நிலைமாற கால நீதிக்கான தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கிய இலங்கை அரசாங்கத்தின் பிரதமராக இருந்திருக்கிறார். எனவே அந்த நேர்காணல் ரணிலை அம்பலப்படுத்தியது என்பதை விடவும் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பை அம்பலப்படுத்தியிருக்கிறது. லிபரல் முகமூடி அணிந்த தலைவரும் சரி அவ்வாறு முகமூடி அணிந்திராத தலைவர்களும் சரி, இடதுசாரி முகமூடி அணிந்த தலைவர்களும் சரி எல்லாருமே இறுதியிலும் இறுதியாக சிங்கள பௌத்த அரசு கட்டமைப்பை பாதுகாப்பவர்கள்தான்.இதில் இப்பொழுது கடைசியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் தேசிய மக்கள் சக்தியும் அடங்கும். ரணில் அல்ஜசிராவில் அம்பலப்படுத்தப்படுவதற்கு முன்னரே கடந்த 25 ஆம் திகதி ஜெனிவாவில் புதிய வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தனது உரையில் என்ன சொல்லியிருக்கிறார்?. அதன் பின் கடந்த மூன்றாம் திகதி ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய வாய்மூல அறிக்கை வெளியிடப்பட்ட பின் அதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் வழங்கிய பதிலில் என்ன கூறப்பட்டுள்ளது? தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பொறுப்புக்கு கூறத் தயாராக இல்லை என்பதே ஐநாவில் அவர்கள் வெளிப்படுத்திய செய்தியின் சாரம்.அதாவது சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பு என்றைக்குமே பொறுப்புக்கூறாது.அது ராஜபக்சக்களாக இருந்தாலும் சரி,ரணிலாக இருந்தாலும் சரி,சந்திரிகாவாக இருந்தாலும் சரி, மைத்திரியாக இருந்தாலும் சரி, அனுராவாக இருந்தாலும் சரி,யாருமே பொறுப்புக் கூற மாட்டார்கள். இதில் இங்கே தமிழ் மக்கள் கவனிக்க வேண்டிய மற்றொரு விடயம் உண்டு. ஐநா கூட்டத் தொடர்களின் போதுதான் சனல் நாலு வீடியோக்கள் வெளிவந்தன.ஈஸ்டர் குண்டு வெடிப்பு தொடர்பான ஒப்புதல் வாக்கு மூலங்களை வெளிப்படுத்தும் வீடியோக்கள் வெளிவந்தன. இப்பொழுதும் ஐநா கூட்டத் தொடரின் போதுதான் ரணிலை அம்பலப்படுத்தும் அல்ஜஸீராவின் வீடியோவும் வெளிவந்திருக்கிறது. அது ரணிலை மட்டும் அம்பலப்படுத்தவில்லை. இலங்கைத் தீவின் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பு பொறுப்புக்கூறும் பண்பு இல்லாதது என்பதையும் மறைமுகமாக வெளிப்படுத்துகின்றது.ஐநா கூட்டத் தொடர் நடக்கும் காலங்களில் இலங்கை அரசாங்கங்களின் மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் உத்திகளா இவை? ஆனால் கடந்த 15 ஆண்டுகளிலும் அந்த அழுத்தங்கள் தமிழ் மக்களுக்கு எதைப் பெற்றுத் தந்தன? அதேசமயம் மேற்கு நாடுகளுக்கு எதைப் பெற்றுக் கொடுத்தன? https://athavannews.com/2025/1424473
  3. முன்னாள் போலீஸ் மா அதிபரை இலங்கை போலீசார் தேடிய போது... 😂 Prashanthan Navaratnam
  4. பறிமுதல் செய்யப்படுமா தேசபந்துவின் சொத்துக்கள்? பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்ந்து நீதிமன்றத்தில் முன்னிலையாவதைத் தவிர்த்து வந்தால், சட்ட ரீதியாக அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். இன்று (09) முகத்துவாரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். வெலிகம, பெலேன பகுதியில் உள்ள உணவகமொன்றுக்கு அருகில் 2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனைக் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1424506
  5. சத்தியமூர்த்தி கலந்து கொள்ளவில்லைப் போலுள்ளது.
  6. இலங்கைத் தமிழரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டம் ஆரம்பம்! இலங்கைத் தமிழரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று காலை 10 மணியளவில், வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஆரம்பமாகியது. தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றுவரும் இக் கூட்டத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் சமர்ப்பிப்பு, வேட்பாளர்கள் தெரிவு மற்றும் தேர்தலைக் கையாளுதல் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாகக் கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் எம்.எ சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான து.ரவிகரன், க.கோடீஸ்வரன், எஸ்.சிறிதரன், ஞா.சிறிநேசன், குகதாசன், சிறிநாத் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1424494
  7. வடக்கின் பெரும் சமரில் வெற்றி வாகை சூடிய பரி யோவான் கல்லூரி. வடக்கின் பெரும் சமர் என அழைக்கப்படும் பரி யோவான் கல்லூரிக்கும் யாழ். மத்திய கல்லூரிக்கும் இடையில் நேற்று நடைபெற்ற போட்டியில் பரி யோவான் கல்லூரி வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ். மத்திய கல்லூரி, அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து தமது முதலாவது இன்னிங்ஸில் 131 ஓட்டங்களை பெற்றது. தொடர்ந்து, துடுப்பெடுத்தாடிய பரி யோவான் கல்லூரி தமது முதலாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 181 ஓட்டங்களை பெற்றது. இதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது இன்னிங்ஸில் யாழ். மத்திய கல்லூரி 142 ஓட்டங்களை பெற்றது. தொடர்ந்து, 93 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பரி யோவான் கல்லூரி,5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. https://athavannews.com/2025/1424491
  8. அனைத்து ஆண்களுக்கும் கட்டாய இராணுவ பயிற்சி – டொனால்ட் டஸ்க் அதிரடி அறிவிப்பு! போலந்தில் அனைத்து ஆண்களையும் இராணுவ பயிற்சிக்கு உட்படுத்தும் வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருவதாக அந் நாட்டின் பிரதமர் டொனால்ட் டஸ்க் (Donald Tusk) தெரிவித்துள்ளார். போலந்து நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாகவும் அனைத்து வயது வந்த போலந்து ஆண்களுக்கும் கட்டாய இராணுவ பயிற்சி அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். போர் நிலைமை ஏற்படுமாயின் ஒவ்வொரு ஆணும் தயாராக இருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும் எனவும், இந்த ஆண்டு இறுதிக்குள் இதற்கான மாதிரி திட்டம் தயாரிக்கப்படும் எனவும் ,இதன் மூலம் நாட்டு இராணுவத்தின் தயார்நிலை உறுதி செய்யப்படும்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளின் தற்போது 1.3 மில்லியன் இராணுவ வீரர்கள் இருக்கின்றனர் எனவும் ஆனால் போலந்தில் 2 இலட்சம் இராணுவ வீரர்களே உள்ளனர் எனவும், தற்போதுள்ள இரண்டு இலட்சம் வீரர்களை 5 இலட்சமாக அதிகரிப்பதற்காகவே இத்தீர்மானத்தின் நோக்கம் எனவும் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1424501
  9. கனடாவில் துப்பாக்கிச்சூடு – 12 பேர் காயம். கனடாவின் டொராண்டோவின் கிழக்கே உள்ள ஸ்கார்பரோ நகரிலுள்ள கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சுமார் 12 பேர் காயமடைந்துள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் 20 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் என்பதுடன் அவர்கள் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு இரண்டு நபர்களால் நடத்தப்பட்டதாகவும் சந்தேக நபர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து, தப்பியோடிய சந்தேகநபர்களை அந்நாட்டு பொலிஸார் தேடி வருகின்றனர். https://athavannews.com/2025/1424461
  10. அர்ச்சுனாவில்… மற்றைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இல்லாத நிறைய விடயம் உள்ளதை மறுப்பதற்கு இல்லை. ஆனால்… தமிழரின் உணர்வு பூர்வமான விடயங்களில்… “சேம் சைட் கோல் அடித்து” சிங்களவனை காப்பாற்றும் வேலையையும் செய்து விடுகின்றார். இதனை அவர் தெரிந்துதான் செய்கின்றாரா… அல்லது, முந்திரி பருப்பு மாதிரி… எல்லாத்துக்கும் முந்திக் கொண்டு நிற்கும் அவசரக்குடுக்கை தனத்தால் ஏற்பட்டதா என தெரியவில்லை. பின்னையதை… கட்டுப்படுத்தினால், தற்போது இருக்கும் அரசியல்வாதிகளில் சிறந்த ஒருவர் என சொல்லலாம்.
  11. இன்றைய தமிழரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில்… எத்தனை பேரின் மண்டை உடைந்தது ? எத்தனை பேரின் வேட்டி அவிழ்ந்தது ? தகவல் அறிய, ஆர்வமுடன் காத்து இருக்கின்றேன். 😂
  12. சென்ற கிழமை பிரிந்து சென்ற கட்சிகளை, தங்களுடன் இணைந்து போட்டியிடுமாறு சுமந்திரனும், சி.வி.கே. சிவஞானமும் அழைப்பு விடுத்து இருந்தவர்கள். சுமந்திரனை நம்பி… ஒருவரும் இணைய முன்வரவில்லை என்றவுடன், இப்போ… “மீசையில் மண்படவில்லை” என்ற கணக்காக தனித்துப் போட்டி என்று சுமந்திரன் அறிவிக்கின்றார். சில மாதங்களிற்கு முன்…. உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட தமிழரசு கட்சியில் வேட்பாளர்கள் இல்லை என்றும்… இளைஞர்களை கட்சியில் வந்து இணையுமாறு சிவஞானம் அழைப்பு விடுத்திருந்தார். இவர்களை நம்பி யாராவது போவார்களா. சென்ற பாரளுமன்ற தேர்தலில்… கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சி சார்பில், மன்னாரில் போட்டியிட இருந்த பெண்ணை, அவர்களின் கட்சிப் பதாகையும் தயாரிக்கப் பட்டு வெளிவந்த நிலையில்… அந்தப் பெண்ணை தமிழரசு கட்சி சார்பில் போட்டியிட வைத்த கேவலத்தையும் நாம் பார்த்தோம்.
  13. வீடியோ… எனது கண்ணில் படவில்லை புலவர். ஆனால் நிச்சயம் எடுக்கப்பட்டிருக்கும் என்றே நம்புகின்றேன்.
  14. யாழில் மாணவியை வீடியோ எடுத்த யூடியூபர் – விபரங்களை கோரியுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு. யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல யூடியூபர் ஒருவர், ஏழ்மையான குடும்பம் ஒன்றிற்கு உதவுவதாக கூறி அவர்களின் வீட்டிற்குள் நுழைந்து அங்கு இளம் பெண் ஒருவரை கட்டாயப்படுத்தி வீடியோ எடுக்க முயன்ற சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியதைத் தொடர்ந்து சம்பவத்துடன் தொடர்புடையவர்களின் பெயர், விபரங்களை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கோரியுள்ளது. வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்வதாக கூறி குறித்த யூடியூபர் பல காணொளிகளை வெளியிட்டு வருகிறார். அதிகமாக புலம்பயந்தோரிடம் பணத்தைப்பெற்று இந்த செயற்பாட்டை செய்து வருவதாக காணொளிகளில் குறிப்பிட்டுள்ளார் அந்தவகையில்,குடும்பம் ஒன்றிற்கு உதவி செய்வதாக தெரிவித்து குறித்த யூடியூபர் பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளார். இதன்போது அங்கிருந்த இளம் பெண் தன்னை காணொளி எடுக்க வேண்டாம் எனக் கூறிய போதிலும் வலுக்கட்டாயமாக அவரை காணொளி எடுக்க முயன்றுள்ளார். எனினும் அந்தப் பெண் அதற்கு மறுத்ததால் ய கடுமையாக வார்த்தைப் பிரயோகங்களால் குறித்த யூடியூபர் அந்த பெண்ணையும் அவரின் தாயையும் திட்டியுள்ளார். இதன்போது ’18 வயசு ஆகிட்டு இன்னும் பால் குடி மறக்கேலையோ ‘உங்கட மகளை கூப்பிடுங்கோ’ என்று சொன்னபடி குறித்த பெண்ணின் அறையின் வாசல் வரை சென்றதுடன் குறித்த பெண்ணை கேலி செய்தும் பேசியுள்ளார். இந்நிலையில் குறித்த காணொளி நேற்று சமூக ஊடகங்களில் வைரலான நிலையில் குறித்த நபர் மற்றும் குறித்த குடும்பம் தொடர்பிலான விபரங்களை வழங்குமாறும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கோரியுள்ளது. Athavan Newsயாழில் மாணவியை வீடியோ எடுத்த யூடியூபர் - விபரங்களை கோரியு...யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல யூடியூபர் ஒருவர், ஏழ்மையான குடும்பம் ஒன்றிற்கு உதவுவதாக கூறி அவர்களின் வீட்டிற்குள் நுழைந்து அங்கு இளம் பெண் ஒருவரை கட்டாயப்படுத்தி வீடியோ எடுக்க முயன்ற சம்பவம் தொடர்பான...
  15. நாளைய தினம் ஸ்ரீதரனை, கட்சியை விட்டு நீக்குகிறார்கள், 😂 நானே ராஜா... நானே மந்திரி... என்ற சுமந்திரனுக்கு, சி.வி.கே. சிவஞானம் முடிசூட்டி வைக்கிறார். 😅 அதோடை... தமிழரசு கட்சிக்கு, பால் ஊத்தி, இறுதிச் சடங்கு செய்து வைக்கப் படும். 🤣
  16. சிரியாவில் மோதல் – 200ற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு. அரசுப் படைகளுக்கும், முன்னாள் ஜனாதிபதி ஆதரவுக்குழுவுக்கும் இடையே நடந்துவரும் மோதலால் பதற்றம் நிலவி வருகிறது. சிரியாவில் அரசுக்கு ஆதரவான படைகளுக்கும், முன்னாள் அதிபர் ஆசாத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே நேற்று முன்தினம் முதல் மோதல் நடந்து வருகிறது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டு வருகின்றனர். அங்குள்ள கடற்கரையை ஒட்டியுள்ள 3 கிராமங்களுக்குள் நேற்று அரசு படைகள் திடீரென நுழைந்தன. பின்னர் கண்ணில் பட்ட ஆசாத்தின் ஆதரவாளர்களை கண்மூடித்தனமாக சுட்டனர். இந்த பயங்கர சம்பவத்தில் சுமார் 70 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் இஸ்லாமியக் குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் தலைமையிலான கிளர்ச்சிக் குழுக்களால் அசாத்தின் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டதிலிருந்து இரு தரப்பினருக்கும் இடையே நடந்து வரும் மோதல்கள் மிக மோசமான வன்முறையை ஏற்படுத்தி வருகின்றன. 14 ஆண்டுகால உள்நாட்டுப் போருக்குப் பிறகு சிரியாவை ஒன்றிணைக்க புதிய அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இந்நிலையில் இந்த மோதல் தொடங்கியதிலிருந்து தற்போது வரை 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக பிரிட்டனை தளமாகக் கொண்ட சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இதன்படி கிராமங்களில் நடந்த பழிவாங்கும் தாக்குதல்களில் சுமார் 140 பேர் கொல்லப்பட்டதைத் தவிர, இறந்தவர்களில் குறைந்தது 50 சிரிய அரசுப் படைகளும், 45 முன்னாள் அதிபரின் ஆதரவுக்குழுவினரும் அடங்குவர் என்று கூறப்பட்டுள்ளது. அரசுப் படைகளுக்கும், முன்னாள் அதிபரின் ஆதரவுக்குழுவுக்கும் இடையே நடந்த மோதலால் அங்கு நாடு முழுவதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. https://athavannews.com/2025/1424452
  17. இதே ஆள்தான்.... வங்கியிலும் போய், குழப்பம் விளைவித்திருக்கின்றார். நீங்கள் இணைத்த காணொளியை... மூன்று லட்சத்து ஐம்பதினாயிரம் பேர் பார்த்து, 712 பேர் கருத்து தெரிவித்து உள்ளார்கள். கருத்து தெரிவித்தவர்களின் 95 வீதமானவர்கள், இவரை திட்டி எழுதியுள்ளார்கள். லண்டன் அங்கிள்... சொத்தக் காசில், சூனியம் வைத்த கதையாகி விட்டது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.