Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. சப்பாத்தி…. வாயை மூடிக் கொண்டு இருந்திருந்தாலே, சப்பாத்திக்கு பரிசு கிடைத்திருக்கும். 😂 “நுணலும் தன் வாயால் கெடும்” என்ற மாதிரி ஆகி விட்டது. விதி. 🤣
  2. இந்தியாவில் இலங்கை சார்பாக பதக்கங்களை குவித்த மலையக சாதனை வீரர்! நுவரெலியா பூண்டுலோயா பகுதியை சேர்ந்த துரைசாமி விஜின் இந்தியாவில் 2025 ம் ஆண்டுக்கான அகில இந்திய மெய்வல்லுனர் போட்டியில் இலங்கை சார்பாக கலந்து கொண்டு மூன்று தங்க பதக்கதை வென்றுள்ளார் . இந்த போட்டியானது இந்தியா ராஜஸ்தான் RR கல்லூரி விளையாட்டு மைதானதில் நடைபெற்றது . இவர் சுற்றி எறிதல் ,பருதிவட்டம் எறிதல் மற்றும் 5000 M வேக நடை ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு மூன்று தங்கபதக்கதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. அவர் தெரிவிக்கையில் இந்த மெய் வல்லுனர் போட்டியில் குறிப்பாக இந்தியாவில் இருந்து 12 மாநிலங்களும் பூட்டான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளை சேர்ந்த 2000கும் அதிகமான வீர வீராங்கனைகள் கலந்து கொண்டு இருந்ததாக ஆதவன் செய்தி பிரிவினருக்கு தெரிவித்தார் . அவர் இந்த சந்தோஷ தருணத்தில் அவரின் தாய் தந்தையருக்கும் இந்த அருமையான வாய்பை அளித்த இலங்கை நாட்டிற்கும் அவரது பயிற்றுவிப்பாளர்களுக்கும் அவருக்கு அனுசரணை வழங்கிய பிரதான அனுசரணையாளர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்தார். மேலும் அவர் உலக ரீதியில் நடைபெறும் மெய்வல்லுனர் போட்டிகளில் கலந்துகொண்டு பல பதக்கங்களை இலங்கைக்கு பெற்றுக்கொடுக்க தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்து இருந்தார் . அதுமட்டும் அன்றி விவாடி அகில இந்திய மருத்துவ சங்கதினாரால் சிறப்பு விருதும் வழங்கி கௌரவிக்கபட்டார் . திறமையானவர்களுக்கு எங்கு சென்றாலும் சிறப்பு இடம் இருப்பதாக இந்த தருணதில் உணர்வதாக தெரிவித்த அவர் அவரை போன்று இன்னும் பல வீர வீராங்கனைகள் வெற்றிகளை குவிக்க வேண்டும் என்றும் ஒலிம்பிக் வரை செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார். https://athavannews.com/2025/1420876
  3. சி.ஐ.டி.யின் கீழ் புதிய புலனாய்வு பிரிவுகள்! சிக்கலான விசாரணைகளைக் கையாள்வதில் செயல்திறனை மேம்படுத்துவதற்காக இலங்கை காவல்துறை அதன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கீழ் புதிய பிரிவுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மறுசீரமைப்பில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID), சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவு மற்றும் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியவை அடங்கும். மேலும், மேல் மற்றும் தென் மாகாணங்கள் தவிர்ந்த அனைத்து மாகாணங்களிலும் மாகாண குற்றப்பிரிவுகள் அமைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர். குற்றவியல் மற்றும் நிதி விசாரணைகளுக்கான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் (SDIG) நிதிக் குற்றம் மற்றும் சட்டவிரோத சொத்து விசாரணைகளை மேற்பார்வையிடுவார். அதே நேரத்தில் ஆறு சிறப்பு பிரிவுகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம், சைபர் கிரைம், மனித கடத்தல், கடல்சார் குற்றங்கள் மற்றும் புலனாய்வு பகுப்பாய்வு ஆகியவற்றில் கவனம் செலுத்தும். https://athavannews.com/2025/1420865
  4. யோஷிதவின் பாட்டிக்கு பயணத் தடை! யோஷித ராஜபக்சவின் பாட்டி டெய்சி பாரஸ்டிற்கு (Daisy Forrest) கடுவலை நீதிவான் நீதிமன்றம் பயணத்தடை விதித்துள்ளது. பணமோசடி வழக்கு மற்றும் 59 மில்லியன் ரூபாய் கூட்டுக் கணக்கு தொடர்பான விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டே இந்தப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு முதல் விசாரணையில் யோஷித ராஜபக்ஷ நிதி தொடர்பாக திருப்திகரமான விளக்கத்தை அளிக்க முடியவில்லை எனக் கண்டறியப்பட்டதை அடுத்து, பணமோசடிச் சட்டத்தின் கீழ் இருவர் மீதும் பொலிஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். விசாரணையின்படி, டெய்சி பாரஸ்டுடன் பராமரிக்கப்படும் கூட்டுக் கணக்கு உட்பட, நிலையான வைப்புத்தொகை மற்றும் வங்கிக் கணக்குகளில் கேள்விக்குரிய நிதி வைக்கப்பட்டது. வழக்கின் சந்தேக நபராக பாரஸ்டைப் பெயரிடுமாறு சட்டமா அதிபர் பொலிஸாருக்கு உத்தரவிட்டார். இதன் விளைவாக, பணமோசடிச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு, யோஷித ராஜபக்ஷ மற்றும் பாரஸ்ட் இருவரும் சந்தேக நபர்களாக ஞாயிற்றுக்கிழமை (11) கடுவலை நீதிவான் நீதிமன்றத்தில் முறைப்படி பெயரிடப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். https://athavannews.com/2025/1420879
  5. வாகன இறக்குமதிக்குத் தயக்கம் காட்டும் இறக்குமதியாளர்கள்! இலங்கையில் வாகன இறக்குமதி செய்யக்கூடிய இறக்குமதியாளர்கள், தற்போது வாகன இறக்குமதிக்கு தயக்கம் காட்டி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதிலும், பெருமளவில் வாகனங்களை இறக்குமதி செய்வதில் இறக்குமதியாளர்கள் ஆர்வம் காட்டவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. வாகன இறக்குமதிகளின்போதான கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் வாகனங்களுக்கான வரி விதிப்பு போன்ற காரணிகளினால் இவ்வாறு இறக்குமதியாளர்கள் தயக்கம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக கொள்வனவாளர்களை தேடிக்கொள்வதில் நிலவும் சிரமங்களினால் வாகன இறக்குமதி மந்த கதியில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், வாகனம் தேவைப்படுவோர் முன்பதிவு செய்வதன் அடிப்படையில் தற்பொழுது வாகன இறக்குமதியாளர்கள் வாகனங்களை வரையறுக்கப்பட்ட அடிப்படையில் இறக்குமதி செய்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இறக்குமதியாளர்கள் ஊடாக வாகனம் கொள்வனவு செய்யப்படும் போது கொள்வனவு செய்வோர் மீது மேலதிக வரி விதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் வாகனங்களின் விலைகள் அதிகரிப்பதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளதுடன், பெரிய வாகன இறக்குமதி நிறுவனங்கள் கூட முன்பதிவு அடிப்படையில் மட்டும் வாகனங்களை இறக்குமதி செய்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1420860
  6. நமது யாழ்.களத்து... மின்சார பொறியியலாளர் @ராசவன்னியன் அவர்களை, உடனடியாக மேடைக்கு வரும்படி அழைக்கின்றோம். 😂 ஸ்ரீலங்காவில் மின்தடை ஏற்பட்டால்.... குரங்குகளில் பழியை போட்டு அரசியல்வாதிகள் தப்பித்து விடுகின்றார்கள். இது உண்மையா... என கண்டறிந்து சொல்லுங்கள் வன்னியன் சார். 🤣
  7. முதலை ... செருப்பு போட்டிருந்தவரை தின்றும் பசி அடங்கவில்லையா? 😂
  8. பாஞ்ச் அண்ணே..... இந்த ஊடக அறிக்கை, இன்று காலை வெளியிடப் பட்டதா. 😁 அவர்கள் சொல்வதிலும் நியாயம் உள்ளது. 😂 அனுரா அரசாங்கத்துக்கு, அனுமாரின் சாபம் கிடைக்கப் போவது உண்மை. 🤣
  9. தமிழரசு கட்சியின்... "டுபாக்கூர்" டம்மி ஊடக பேச்சாளரை விட, 🐵 மங்கிகளின்.... ஊடக பேச்சாளர் திறமைமயானவராகவும், புத்திசாலியாகவும் தெரிகின்றார். 🐒
  10. நெல் களஞ்சியசாலைகள் இதுவரை திறக்கப்படவில்லை! -விவசாயிகள் குற்றச் சாட்டு. அரசாங்கம் நெல்லுக்கான உத்தரவாத விலையை கடந்த வாரம் அறிவித்திருந்த போதும் நெல் களஞ்சியசாலைகள் இதுவரை திறக்கப்படவில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். நெல்லுக்கான உத்தரவாத விலையாக, நாட்டு நெல் கிலோ ஒன்று 120 ரூபாய்க்கும், சம்பா நெல் கிலோ ஒன்று 125 ரூபாய்க்கும், கீரி சம்பா நெல் கிலோ ஒன்று 132 ரூபாய்க் கும் கொள்முதல் செய்யப்படும் என அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அரசாங்கம் நிர்ணயித்த உத்தரவாத விலையில் நெல்லை கொள்வனவு செய்வதற்காக கடந்த வியாழக்கிழமை முதல் களஞ்சியசாலைகள் திறக்கப்படும் என நெல் சந்தைப்படுத்தல் சபை அறிவித்திருந்தது. எனினும், பல மாவட்டங்களில் நெல் களஞ்சியசாலைகள் சுத்தம் செய்யப்பட்ட போதும், நிதி பற்றாக்குறையின் காரணமாக இதுவரை நெல் கொள்வனவு இடம்பெறவில்லை என விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதேநேரம், கடந்த வருடம் நவம்பர் 26 ஆம் திகதி முதல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் சேதமடைந்த பயிர்களை ஆய்வு செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக விவசாய மற்றும் கமநலக் காப்புறுதி சபை அறிவித்துள்ளது. அதன்படி, சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீடு வழங்க ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அம்பாறை மாவட்டத்தில் 7,657 ஏக்கர் நிலத்திற்கான 8,705 விவசாயிகளின் கணக்குகளில் 122 மில்லியன் ரூபாய் பணம் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலன்னறுவை மாவட்டத்தில் 6,239 விவசாயிகளுக்கு 9,067 ஏக்கருக்கு 114 மில்லியன் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்ட விவசாயிகளின் கணக்குகளில் பயிர் சேத நிதியை வரவு வைக்கத் தொடங்கியுள்ளதாகவும், அதன்படி, சேதமடைந்த 4,324 ஏக்கர் பயிர்களுக்கு 3,272 விவசாயிகளின் கணக்குகளில் 70 மில்லியன் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் காப்புறுதி சபை குறிப்பிட்டுள்ளது. https://athavannews.com/2025/1420795
  11. மின்வெட்டு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை! நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது எக்ஸ் கணக்கில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அரசாங்கத்தை விமர்சித்துள்ளார். மின்சாரத் தடைக்கு முதலில் குரங்கு மீது பழி சுமத்திய அரசாங்கம், பின்னர் முன்னைய அரசாங்கங்கள் மீது பழி சுமத்துவதாக அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். எனினும், தற்போதைய அரசாங்கம் உண்மையான பிரச்சினையை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கவில்லை. சூரிய மின் உற்பத்தியை அதிகரிக்காமல் இருப்பதும், குறைந்த தேவைக் காலத்தை நிர்வகிக்காத மோசமான நிர்வாகமே மின்வெட்டுக்கு முக்கிய காரணம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2025/1420729
  12. நுரைச்சோலை மின் உற்பத்தி நிலைய செயற்பாடுகள் வெள்ளிக்கிழமைக்குள் வழமைக்கு! நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பெப்ரவரி 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்குள் மீண்டும் தேசிய மின்னோட்டத்தில் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மின்சார சபை (CEB) அறிவித்துள்ளது. புனரமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக CEB இன் பொறியியலாளர் தம்மிக்க விமலரத்ன தெரிவித்தார். மறுசீரமைப்புப் பணிகள் முன்னேற்றமடைவதால், வரும் நாட்களில் தற்போது நிலவும் ஒன்றரை மணி நேர மின்வெட்டு குறைக்கப்படலாம் என்றும் அவர் கூறினார். முன்னதாக, திங்கட்கிழமை (10) மற்றும் செவ்வாய் (11) ஆகிய நாட்களில் நாடளாவிய ரீதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்றும், பிற்பகல் 03.30 தொடக்கம் இரவு 09.30 மணிவரையான நேரத்தில் ஒன்றரை மணிநேர மின்வெட்டினை சுழற்சியில் முறையில் நிர்வகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. பெப்ரவரி 09 அன்று, இலங்கை முழுவதும் பரவலான மின்சாரத் தடையை எதிர்கொண்டது, இது முற்பகல் 11.15 மணியளவில் முழு நாட்டினையும் பாதித்தது. பாணந்துறை உப மின்நிலையத்தில் உள்ள மின் கட்டமைப்பில் காலை 11:30 (06.00 GMT) மணியளவில் குரங்கு ஒன்று மோதியதன் காரணமாக நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்தது. இதனால், ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமாக இருந்த குறைந்த மின்சாரத் தேவையின் காரணமாக மின் மறுசீரமைப்பு செயல்முறை சிரமங்களை எதிர்கொண்டது. எவ்வாறாயினும், மாலை 6.00 மணியளவில் மின்சாரம் முழுமையாக மீட்டெடுக்கப்பட்ட நிலையில், நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் ஒரு பிரச்சினை எழுந்தது. அங்கு மூன்று மின் உற்பத்தி இயந்திரங்கள் செயலிழந்தமையினால், தேசிய மின்கட்டமைப்பிற்கு 900 மெகாவாட் இழப்பு ஏற்பட்டதுடன் மின் பற்றாக்குறையை அதிகப்படுத்தியது. இதனால் பல்வேறு பகுதிகளில் மேலும் மின் தடை ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1420724
  13. மறைந்த ஊடகவியலாளர் பாரதியின் இறுதிச் சடங்கு குறித்த முக்கிய அறிவிப்பு! மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதியின் இறுதி சடங்கு, நாளை மறுதினம் (13) யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. தமிழ் ஊடக பரப்பில் 40 வருடங்களுக்கு மேல் ஊடக அனுபவத்தை கொண்ட மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி, உடலநலக் குறைவு காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் காலமானார். இந்நிலையில் அன்னாரின் புகழுடல், யாழ்ப்பாணம் – பலாலி வீதியில், திண்ணை ஹோட்டலுக்கு முன்பாக அமைந்துள்ள அவரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை மறுதினம் 13ஆம் திகதி காலை இறுதி கிரியைகள் மற்றும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று அன்னாரது புகழுடல் தகன கிரியைகளுக்காக நண்பகல் 1 மணியளவில் கொக்குவில் இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படவுள்ளதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். https://athavannews.com/2025/1420748
  14. நாட்டுக்கு வருகை தரும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மொத்தமாக 3,32,439 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. மேலும் பெப்ரவரி மாதத்தின் முதல் 9 நாட்களில் மொத்தம் 79,678 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர் எனவும், பெப்ரவரி மாதத்தின் முதல் 9 நாட்களில் இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1420782
  15. வடக்கு மாகாண ஆளுநருக்கும் இலங்கைக்கான சீனத்தூதரகத்தின் பொறுப்பதிகாரிக்கும் இடையில் விசேட சந்திப்பு! வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகனுக்கும் இலங்கைக்கான சீனத்தூதரகத்தின் பொறுப்பதிகாரி ஜு யான்வேய் தலைமையிலான குழுவினருக்கும் இடையில் நேற்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, வடக்கிலுள்ள மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டது. அந்தவகையில், வடமாகாண மீனவர்கள் தன்னை சந்தித்துக் கலந்துரையாடியதாகவும் அவர்கள் பல்வேறு தேவைகளை நிறைவேற்றித்தருமாறு தம்மிடம் கோரிக்கை முன்வைத்தாகவும் சீனத் தூதரகத்தின் பொறுப்பதிகாரி ஆளுநரிடம் தெரிவித்தார். தொடர்ந்து, வடக்கு மாகாணத்தில் விவசாயம், சுற்றுலாத்துறை அபிவிருத்தியின் தேவைப்பாடுகள் தொடர்பாகவும் வடக்கில் வேலை வாய்ப்பு உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் ஆளுநர் சீன அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினார். https://athavannews.com/2025/1420798
  16. இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் கிளிநொச்சிக்கு விஜயம்! இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அக்கியோ இசோமட்டா (Akio Isomata) இன்றைய தினம் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது ஜப்பானிய நிதிப் பங்களிப்புடன் முகமாலைப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் கலோரெஸ் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்ட அவர் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பிலும் அதிகாரிகளுடன் கேட்டறிந்துகொண்டார். https://athavannews.com/2025/1420834
  17. போதைப்பொருள் பாவனை; 17 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம்! போதைப்பொருள் பாவனை குற்றச்சாட்டின் பேரில் கடந்த நான்கு மாதங்களில் மொத்தமாக 17 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இன்று (11) தெரிவித்தார். போதைப்பொருள் பாவிக்கும் பொலிஸ் அதிகாரிகளின் பட்டியல் புலனாய்வுப் பிரிவுகள் மற்றும் விசேட பொலிஸ் பிரிவினூடாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட அதிகாரிகள் கண்காணிக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். அவ்வாறான உத்தியோகத்தர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, போதைப்பொருளை பயன்படுத்தியமை உறுதிப்படுத்தப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். போதைப்பொருள் பாவனையில் குற்றம் சாட்டப்பட்ட எந்தவொரு பொலிஸ் அதிகாரிகளுக்கும் மன்னிப்போ அல்லது இரண்டாவது வாய்ப்போ வழங்கப்பட மாட்டாது. ஏனெனில் இது போன்ற சில நபர்கள் முழு பொலிஸ் சேவையையும் இழிவுக்கு உள்ளாகுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். https://athavannews.com/2025/1420826
  18. ‘மெக்ஸிகோ வளைகுடா’ என்பதை ‘அமெரிக்க வளைகுடா’ என்று பெயர் மாற்றம்! பிப்ரவரி 9 ஆம் தேதியை “அமெரிக்க வளைகுடா தினம்” என்று ஒரு நிர்வாக உத்தரவு மூலம் நியமித்துள்ளார்.மேலும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், மெக்சிகோ வளைகுடாவை “அமெரிக்க வளைகுடா” என்று அதிகாரப்பூர்வமாக மறுபெயரிட்டுள்ளார். அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பின் போது வளைகுடாவின் பெயரை மாற்றுமாறு டிரம்ப் முதலில் பரிந்துரைத்தார், புதிய பெயர் அமெரிக்காவின் வரலாற்று மற்றும் பிராந்திய மரபை சிறப்பாக பிரதிபலிக்கிறது என்றும் . “மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என்று மறுபெயரிடுவோம் – அது ஒரு பெரிய வளையத்தைக் கொண்டுள்ளது என்றும், மேலும் அது ஒரு பரந்த பகுதியை உள்ளடக்கியது” என்று அவர் அப்போது கூறினார். வெள்ளை மாளிகையின் அறிக்கையின்படி, நிர்வாக ஆணை புதிதாக பெயரிடப்பட்ட வளைகுடாவை “டெக்சாஸ், லூசியானா, மிசிசிப்பி, அலபாமா மற்றும் புளோரிடாவால் வடகிழக்கு, வடக்கு மற்றும் வடமேற்கில் எல்லையாக உள்ள அமெரிக்க கண்ட அடுக்குப் பகுதியை உள்ளடக்கியது, இது மெக்சிகோ மற்றும் கியூபாவுடனான கடல் எல்லை வரை நீட்டிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கின்றது. தனது முடிவை கூறிய டிரம்ப், ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பில், “முன்னர் மெக்சிகோ வளைகுடா என்று அழைக்கப்பட்ட நீர்நிலை நீண்ட காலமாக நமது செழிப்பான தேசத்திற்கு ஒரு முக்கிய வளமாக இருந்து வருகிறது, மேலும் அமெரிக்காவின் நீடித்த பகுதியாக உள்ளது, ஏனெனில் உத்தரவில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி இந்த நடவடிக்கையை நான் எடுத்துள்ளேன்” என்று கூறினார். Fox5 DC இன் படி புளோரிடாவின் பாம் பீச்சிலிருந்து நியூ ஆர்லியன்ஸுக்கு சூப்பர் பவுல் LIX க்காக ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் பறந்தபோது, வளைகுடாவைக் கடந்து செல்லும்போது மறுபெயரிடல் முக்கியத்துவத்தை டிரம்ப் எடுத்துரைத்தார். “எங்கள் நாட்டின் வரலாறு மற்றும் சாதனைகளில் அமெரிக்காவின் பெருமையை எனது நிர்வாகம் மீண்டும் நிலைநிறுத்துவதால், இந்த வரலாற்று தருணத்தையும் அமெரிக்க வளைகுடாவின் மறுபெயரிடுதலையும் நாம் அங்கீகரிப்பது மட்டுமே சரியானது” என்று அவர் கூறினார். டிரம்ப்இன் உத்தரவைத் தொடர்ந்து, அமெரிக்க கடலோர பொலிஸார் ஏற்கனவே “அமெரிக்க வளைகுடா” என்ற பெயரைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது, மேலும் மாற்றத்தை இறுதி செய்ய உள்துறை செயலாளர் டக் பர்கம் 30 நாட்கள் அவகாசம் அளித்துள்ளார். இந்த அறிவிப்பு பொது அதிகாரிகள் மற்றும் குடிமக்களை “பொருத்தமான திட்டங்கள், விழாக்கள் மற்றும் செயல்பாடுகளுடன்” அமெரிக்க வளைகுடா தினத்தை அனுசரிக்க ஊக்குவிக்கிறது என்றும் கூறபடுகின்றது. சமீபத்தில், மெக்சிகன் இறக்குமதிகளுக்கு 25 சதவீத வரிகளை விதிப்பதாக டிரம்ப் மிரட்டினார், ஆனால் பின்னர் மெக்சிகோ எல்லையில் 10,000 தேசிய காவல்படை வீரர்களை அனுப்ப ஒப்புக்கொண்டதை அடுத்து அந்த நடவடிக்கையை நிறுத்தி வைத்த நிலையில் டிரம்ப் நிர்வாகத்திற்கும் மெக்சிகோவிற்கும் இடையே நடந்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் இந்த மறுபெயரிடுதல் வருகிறது. https://athavannews.com/2025/1420749
  19. OpenAIஐ வாங்க எலோன் மஸ்க் $97 பில்லியன் சலுகை! எலோன் மஸ்க் தலைமையிலான முதலீட்டாளர்களின் கூட்டமைப்பு, ChatGPTயின் தயாரிப்பாளரான OpenAIஐக் கைப்பற்றும் முயற்சியில் 97.4 பில்லியன் டொலர் சலுகையை வழங்கியது. பில்லியனரின் சட்டத்தரணி மார்க் டோபரோஃப், தொழில்நுட்ப நிறுவனத்தின் அனைத்து சொத்துக்களுக்கான ஏலத்தை திங்களன்று (10) அதன் குழுவிடம் சமர்ப்பித்ததை உறுதிப்படுத்தினார். உலகின் மிகப் பெரிய செல்வந்தரும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வலது கையுமான மஸ்க் மற்றும் OpenAI தலைமை நிர்வாகி சாம் ஆல்ட்மேன் ஆகியோருக்கு இடையிலான செயற்கை நுண்ணறிவு குறித்த போட்டியை இந்த நடவடிக்கை அதிகரித்தது. எனினும், ஆல்ட்மேன் இந்த வாய்ப்பை நிராகரித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதேநேரம், “நீங்கள் ஆர்வமாக இருந்தால் டுவிட்டரை $9.74 பில்லியனுக்கு வாங்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும்” கூறி பதிவிட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு டுவிட்டரை $44 பில்லியனுக்கு வாங்கிய மஸ்க் அதன் பெயரை எக்ஸ் என மாற்றியமைத்துள்ளார். 2024 ஆம் ஆண்டில் OpenAI மீது இரண்டு முறை வழக்குத் தொடுத்த பின்னர்‍ இந்த வாய்ப்பை மஸ்க் முன்மொழிந்தார். முதல் முறையாக, 2024 ஜூலையில் நிறுவனம் அதன் ஸ்தாபகக் கொள்கைகளில் இருந்து விலகி, குறிப்பாக வணிகமயமான, இலாபம் சார்ந்த கட்டமைப்பை நோக்கிச் செல்லும் வகையில் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். மனிதகுலத்திற்கான பரந்த நன்மைகளில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, பெருநிறுவன நலன்களால் கட்டுப்படுத்தப்படும் அபாயத்தில் OpenAI இன் பணியை இந்த மாற்றம் ஏற்படுத்தியதாக மஸ்க் சுட்டிக்காட்டினார். இந்த சட்டப் போராட்டம், திறந்த, இலாப நோக்கமற்ற முயற்சியாக AIக்கான மஸ்கின் பார்வை மற்றும் OpenAI இன் வளர்ச்சி மற்றும் இலாபத்தைப் பின்தொடர்வதற்கு இடையே உள்ள பதட்டங்களை எடுத்துக்காட்டுகிறது. 2024 ஆகஸ்ட்டில் மஸ்க் மீண்டும் ஒரு புதிய வழக்கைத் தாக்கல் செய்து, “இலாபத்தை அதிகரிக்க” சக்திவாய்ந்த “செயற்கை பொது நுண்ணறிவு” தொழில்நுட்பத்தை உருவாக்க OpenAI பந்தயத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினார். மேலும், நிறுவனம் மோசடியில் ஈடுபடுவதாகவும் மஸ்க் குற்றம் சாட்டினார். OpenAIக்கு எதிரான எலோன் மஸ்க்கின் வழக்கு அவருக்கும் அவர் கண்டுபிடித்த ChatGPTக்கும் இடையே வளர்ந்து வரும் மோதலிலிருந்து உருவாகிறது. https://athavannews.com/2025/1420801
  20. குவாத்தமாலாவில் 115 அடி பள்ளத்தில் வீழ்ந்து பஸ் விபத்து; 55 பேர் உயிரிழப்பு! குவாத்தமாலா (Guatemala) தலைநகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள பாலத்தில் இருந்து பயணிகள் பஸ் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. திங்கட்கிழமை (10) அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் குறைந்தது 55 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவ இடத்தில் 53 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்த பயணிகளை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அங்கு இருவர் உயிரிழந்து விட்டதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் பஸ் சாலையில் இருந்து விலகி பாலத்தின் கீழே உள்ள செங்குத்தான 115 அடி (35 மீட்டர்) பள்ளத்தாக்கில் அதிகாலையில் விழந்து விபத்துக்குள்ளானதாக அந் நாட்டு தீயணைப்புத் துறை செய்தித் தொடர்பாளர் எட்வின் வில்லக்ரன் கூறியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களில் சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் இரங்கல் தெரிவித்துள்ள குவாத்தமாலா ஜனாதிபதி பெர்னார்டோ அரேவலோ, தேசிய துக்க நாளையும் அறிவித்தார். https://athavannews.com/2025/1420805

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.