Everything posted by தமிழ் சிறி
-
அமுலுக்கு வரும் அமெரிக்கா மீதான சீனாவின் புதிய வரி!
அமுலுக்கு வரும் அமெரிக்கா மீதான சீனாவின் புதிய வரி! உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் போர் அதிகரித்து, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேலும் பல நாடுகளுக்கு வரி விதிக்கப்படும் என அச்சுறுத்தல் விடுத்துள்ள நிலையில், சில அமெரிக்கப் பொருட்களுக்கு சீனா விதித்துள்ள இறக்குமதி வரி திங்கட்கிழமை (10) முதல் அமலுக்கு வருகிறது. அனைத்து சீனப் பொருட்களுக்கும் 10% புதிய அமெரிக்க வரிகள் அமலுக்கு வந்த சில நிமிடங்களுக்குப் பின்னர், பீஜிங் பெப்ரவரி 4 அன்று வரி திட்டத்தை அறிவித்தது. ஞாயிற்றுக்கிழமை (09) ட்ரம்ப், அமெரிக்காவிற்கு அனைத்து எஃகு மற்றும் அலுமினியம் இறக்குமதி மீது 25% வரி விதிக்கப்படும் என்று கூறினார். விரைவான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ட்ரம்ப், ஏனைய நாடுகளின் மீது பரஸ்பர கட்டணங்களைத் திட்டமிடுவதாக கூறினார் – ஆனால், எந்த நாடுகள் இலக்கு வைக்கப்படும் என்பதை அவர் குறிப்பிடவில்லை. இது தொடர்பான முழு அறிவிப்பு திங்கட்கிழமை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க பொருட்கள் மீதான சீனாவின் அண்மைய வரிகளில் அமெரிக்க நிலக்கரி மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு பொருட்கள் இறக்குமதிக்கு 15% எல்லை வரி அடங்கும். அமெரிக்க மசகு எண்ணெய், விவசாய இயந்திரங்கள் மற்றும் பெரிய எஞ்சின் கார்களுக்கு 10% வரி விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம், சீன அதிகாரிகள் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் மீது ஏகபோக எதிர்ப்பு விசாரணையை மேற்கொண்டனர், அதே நேரத்தில் வடிவமைப்பாளர் பிராண்டுகளான கால்வின் க்ளீன் மற்றும் டாமி ஹில்ஃபிகர் ஆகியவற்றின் அமெரிக்க உரிமையாளரான PVH பீஜிங்கின் சந்தேகத்திற்கிடமான “நம்பமுடியாத நிறுவனம்” பட்டியலில் சேர்க்கப்பட்டது. சீனா 25 அரிய உலோகங்கள் மீது ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது, அவற்றில் சில பல மின் பொருட்கள் மற்றும் இராணுவ உபகரணங்களுக்கான முக்கிய கூறுகளாகும். அமெரிக்காவின் எஃகு மற்றும் அலுமினியம் இறக்குமதிக்கு 25% வரி விதிக்கும் திட்டங்களின் ட்ரம்ப் அறிவிப்பு கனடா மற்றும் மெக்சிகோவுடன் ஒப்பந்தங்களை எட்டிய சில நாட்களுக்குப் பின்னர், அவர் நாடுகளின் அனைத்து பொருட்களுக்கும் 25% கட்டணங்களைத் தவிர்த்தார். அவர் ஜனாதிபதியாக தனது முதல் பதவிக் காலத்தில் இதேபோன்ற நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தினார். எஃகு மீது 25% மற்றும் அலுமினியத்தின் மீது 10% வரிகளை விதித்தார், ஆனால் பின்னர் கனடா, மெக்சிகோ மற்றும் பிரேசில் உட்பட பல வர்த்தக பங்காளிகளுக்கு வரியில்லா ஒதுக்கீட்டை வழங்கினார். பைடன் நிர்வாகம் வெள்ளை மாளிகையை கைப்பற்றும் வரை ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதி வரிகள் தீர்க்கப்படவில்லை. இந்த புதிய கட்டணங்கள் அடுத்த நாட்களில் அமல்படுத்தப்பட்டால், எந்தெந்த நாடுகளுக்கு இதே போன்ற விலக்குகள் வழங்கப்படும் என்பது குறித்து ஞாயிற்றுக்கிழமை குறிப்பிடப்படவில்லை. பரஸ்பர கட்டணங்களைச் செயல்படுத்துவதற்கான அவரது எண்ணம், அமெரிக்கப் பொருட்களுக்கு விதிக்கப்படும் அதே விகிதங்களில் கட்டணங்களை விதிக்கும் தேர்தல் பிரச்சார உறுதிமொழியை நிறைவேற்றும். உலகளாவிய கட்டணங்களுக்கு விலக்கு அளிக்க பரிசீலித்து வருவதாக வெளியான அறிக்கைகளுக்குப் பிறகு, வாகனங்களுக்கான இறக்குமதி வரி இன்னும் கிடப்பில் உள்ளது என்றும் அவர் கூறினார். அமெரிக்க கார்களின் இறக்குமதி மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) வரிகள் அமெரிக்க வரிகளை விட அதிகமாக இருப்பதாக ட்ரம்ப் பலமுறை முறைப்பாடு அளித்துள்ளார். கடந்த வாரம், ட்ரம்ப் பிபிசியிடம் ஐரோப்பிய ஒன்றிய பொருட்களின் மீதான கட்டணங்கள் “மிக விரைவில்” நிகழலாம் என்று கூறினார். எவ்வாறெனினும், ட்ரம்ப் சமீபத்திய நாட்களில் சீனப் பிரதமர் ஜி ஜின்பிங்குடன் புதிய கட்டணங்கள் தொடர்பில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமெரிக்க ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்த அவசரப்படவில்லை என்றும் வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2025/1420560
-
விற்பனையில் சரிவை சந்தித்து வரும் டெஸ்லா!
விற்பனையில் சரிவை சந்தித்து வரும் டெஸ்லா! உலகின் மிகப் பெரும் செல்வந்தரும், டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க்கின் அரசியல் விமர்சனங்களால், ஐரோப்பாவின் மூன்று முக்கிய சந்தைகளில் டெஸ்லா கார்களின் ஜனவரி மாத விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது. குறிப்பாக , பிரான்சில் 63 சதவீதமும், ஜேர்மனியில் 59.50 சதவீதமும், பிரித்தானியாவில் 12 சதவீதமும் வீழ்ச்சியைக் கண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நாடுகளின் அரசியல் விவகாரங்களில் எலான் மஸ்க் தலையிடுவதாலும், அந்நாட்டு அரச தலைவர்கள் மற்றும் கொள்கைகளை விமர்சனம் செய்வதாலும் அந்நாடுகளைச் சேர்ந்த மக்கள், டெஸ்லா கார்களை வாங்க மறுப்பு தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக அண்மையில் ஜேர்மனியின் சான்சிலர் ஓலாப் ஷோல்ஸை முட்டாள் என்றும், ஜனாதிபதி வால்டர் ஸ்டெய்ன்மியரை சர்வாதிகாரி என்றும் மஸ்க் சாடியிருந்தார். அதேபோல், ஜேர்மனியின் வலதுசாரி கட்சியான ஏ.எப்.டி.இ கட்சிக்கு மஸ்க் ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து, பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான், இவரை ஐரோப்பிய அரசியலில் தலையிடுவதாக விமர்சனம் செய்திருந்தார். மேலும் பிரித்தானியாவிலும், அந்நாட்டு ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் சம்பந்தமான கொள்கைகள் மற்றும் பிரக்சிட் தொடர்பாகவும் மஸ்க் விமர்சனம் செய்தார். இதுபோன்ற விமர்சனங்கள், இந்த நாடுகளின் மக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியதன் காரணமாக, டெஸ்லா கார்களை மக்கள் புறக்கணித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்சார வாகன சந்தையில், சீன நிறுவனங்கள் மற்றும் ஐரோப்பிய நிறுவனங்களின் போட்டி, மின்சார வாகனங்களுக்கான மானியம் குறைப்பு ஆகியவையும் இந்நாடுகளில் டெஸ்லா கார்களின் விற்பனை வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளன. இதனால், டெஸ்லா கார்களுக்கு பதிலாக, போக்ஸ்வேகன், பி.எம்.டபிள்யூ.இ ஜாகுவார் மற்றும் மினி மின்சார கார்களை வாங்குவதில் ஐரோப்பிய மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1420584
-
அரசியல்வாதிகள் யார்? | இந்துமைந்தர்களின் பேச்சால் அதிர்ந்த அரங்கம்.
யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களுக்கும், கொழும்பு இந்துக் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே நடந்த விவாதம் அது. விவாதத்தின் தலைப்பு: “ஈழமணித்திருநாட்டிலே தமிழ் மக்கள் எதிர் நோக்கும் அன்றாட இடர்களுக்கு பெரிதும் காரணமாக இருப்பவர்கள் அரச ஊழியர்களா அல்லது அரசியல்வாதிகளா?” என்பதாகும் யாழ். இந்துக் கல்லூரி மாணவர்கள்…. அரச ஊழியர்கள் என்றும், கொழும்பு இந்துக் கல்லூரி மாணவர்கள்…. அரசியல்வாதிகள் என்றும் வாதாடினார்கள். ஆக… அரச ஊழியர்களையும், தமிழ் அரசியல்வாதிகளையும் மாணவர்கள் கிழித்து தொங்க விட்டுள்ளார்கள். 😂 இணைப்பிற்கு நன்றி, @ஈழப்பிரியன் 👍🏽
-
நாட்டில் ஏற்பட்ட மின் தடைக்கு, குரங்கே காரணம் !
சீனாவால் கட்டப் பட்ட நுரைச்சோலை மின் நிலையம் ஒரு வாழ் நாள் நோயாளி. என்ன நேரத்தில் அடிக்கல் நாட்டினார்களோ.. அ ரில் இருந்து இன்று வரை பிரச்சினைதான். அது கட்டிய செலவை விட… திருத்திய செலவு அதிகம் என்று சொல்வார்கள். 😂
-
தையிட்டி விகாரை இடிக்கப்பட வேண்டும்! -சிவஞானம் ஸ்ரீதரன்
நல்ல ரைமிங் பதில். ரசித்தேன். 👍🏽 😂
-
ரஷ்ய ஜனாதிபதியை ‘முட்டாள்’ என விமர்சித்த பாடகர் உயிரிழப்பு!
கோசான் சொல்வதுதான் சரி. ✅ இது இயற்கை மரணமாகவே தெரிகின்றது. மேலுள்ள படத்தில்… பாடகரின் உடலும் மிகவும் பொலிவு இழந்து நோயாளி போலவே தெரிகின்றார். ஆகவே புட்டின் மீது வீண்பழி போடுவது அர்த்தமற்ற செயல். 😎
-
தையிட்டி விகாரை இடிக்கப்பட வேண்டும்! -சிவஞானம் ஸ்ரீதரன்
இந்தப் பதிவை…. விமல் வீரவன்ச, சரத் வீரசேகர, உதய கம்மன்பில போன்றோரின் கண்ணில் படும் வரை பகிரவும். 🤣 கோசான்…. ஞாயிற்றுக்கிழமைகளில் சீரியசாக எழுதுபவர். 😂
-
"காதலர்தின", சிரிப்புகள். (14.02.)
- சிரிக்கலாம் வாங்க
- "காதலர்தின", சிரிப்புகள். (14.02.)
மாசி மாதம் ஏற்கெனவே... 27 நாட்கள் உள்ள குறைந்த மாதம். அதற்குள்... 90´ஸ் "கிட்ஸ்"சுக்காக பெப்ரவரி 14´ம் திகதியையும் நீக்கி விட்டால், 26 நாட்களுடன் ஒரு மாதம் உள்ளது, ரொம்ப குறைவாக இருக்குமே. 😂 90´ஸ் "கிட்ஸ்".. வேளா வேளைக்கு காதலிக்காமல், பெண்களை நிமிர்ந்து பார்க்காமல், கலியாணம் கட்டாமல் இருப்பதால்... நாட்டில் எத்தனை பிரச்சினை. 🤣- நாட்டில் ஏற்பட்ட மின் தடைக்கு, குரங்கே காரணம் !
சில பகுதிகளில் வழமைக்குத் திரும்பி வரும் மின்சார விநியோகம்! கொழும்பு தேசிய வைத்தியசாலை, அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பியகம மற்றும் சப்புகஸ்கந்த பகுதிகளுக்கு மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் நாடு முழுவதும் மின்சார விநியோகத்தை வழங்குவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இன்று மாலை 4 மணிவரை தேசிய மின் கட்டமைப்பிலிருந்து தங்கள் சூரிய மின் சக்தி இணைப்பை துண்டிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரை அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1420489- பிரபல மூத்த ஊடகவியலாளர் பாரதி காலமானார்!
பிரபல மூத்த ஊடகவியலாளர் பாரதி காலமானார்! சிரேஷ்ட ஊடகவியலாளரும்,ஞாயிறு தினக்குரல், தினக்குரல் இணையம் ஆகியவற்றின் முன்னாள் ஆசிரியருமான இராஜநாயகம் பாரதிஉடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். கடந்த சில வாரங்களாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று யாழில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினக்குரல்பத்திரிகையின் பிரதம ஆசிரியராக பணியாற்றய அன்னார் அரசியல் ஆய்வு மற்றும் கலை செயற்பாடுகளில் மிகுந்த ஆளுமை உள்ளவராக காணப்பட்டிருந்தார். மேலும் அண்மையில் வீரகேசரியின் சிரேஷ்ட ஊடகவியலாளராக யாழ் காரியாலயத்தின் பொறுப்பு அதிகாரியாகவும் கடமை ஆற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அன்னாரது மறைவிற்கு, நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ஊடகத் துறையைச் சார்ந்தவர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். https://athavannews.com/2025/1420518- போட்டியின்போது காயமடைந்த பிரபல குத்துச்சண்டை வீரர் மரணம்!
போட்டியின்போது காயமடைந்த பிரபல குத்துச்சண்டை வீரர் மரணம்! போட்டியின்போது காயமடைந்த அயர்லாந்தைச் சேர்ந்த பிரபல குத்துச்சண்டை வீரரான ஜான் கூனி சிகிச்சை பலனின்றி தனது 28 ஆவது வயதில் நேற்று உயிரிழந்துள்ளார். கடந்த 1-ம் திகதி நடைபெற்ற பெதர்வெயிட் பட்டத்திற்கான போட்டியின் 9-வது சுற்றில் சக போட்டியாளர் தாக்கியதில் தலையில் பலத்த காயம் அடைந்த ஜான் கூனி உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை செய்ததில் அவருக்கு தலையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் ஒரு வார காலம் தீவிர சிகிச்சையில் இருந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது மரணம் குத்துச்சண்டை உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. https://athavannews.com/2025/1420499- நாட்டில் ஏற்பட்ட மின் தடைக்கு, குரங்கே காரணம் !
நாட்டில் ஏற்பட்ட மின் தடைக்கு குரங்கே காரணம்! பாணந்துறை உப மின்நிலையத்தில் உள்ள மின் கட்டமைப்பில் குரங்கு ஒன்று மோதியதன் காரணமாக நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். அத்துடன் இச் சம்பவத்தால் நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். எனினும் கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட பல இடங்களில் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். நாடு முழுவதும் மின்சார விநியோகத்தை வழங்குவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1420481- பாடசாலை மாணவர்களின் விவாத மேடையும் தமிழ் அரசியலும் – நிலாந்தன்.
பாடசாலை மாணவர்களின் விவாத மேடையும் தமிழ் அரசியலும் – நிலாந்தன். பாடசாலை மாணவர்கள் அரசியல்வாதிகளை கிழித்துத் தொங்க விட்டார்கள் என்று கூறிச் செய்திகளும் காணொளிகளும் நேற்றிலிருந்து வந்து கொண்டிருக்கின்றன.யுடியுப்பர்களுக்கு சூடான, உணர்ச்சிகரமான விடயங்கள் கிடைத்திருக்கின்றன. அவர்கள் வழமைபோல தலைப்புக்கும் உள்ளடக்கத்துக்கும் தொடர்பு இல்லாத காணொளித் துண்டுகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக மேலெழுந்து வருகின்ற ஒரு போக்கு இது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் கொழும்பு இந்துக் கல்லூரிக்கும் இடையிலான விவாதப் போட்டிக் களத்தில் எடுக்கப்பட்ட காணொளிகளே அவை. அந்த விவாதப் போட்டிகளின் தலைப்புகள் பெரும்பாலும் அரசியல் பரிமாணத்தைக் கொண்டவை. அதனால் மாணவர்கள் அரசியல்வாதிகளை விளாசித் தள்ளுவார்கள். அவ்வாறு பாடசாலை மாணவர்கள் அரசியல்வாதிகளை விளாசித் தள்ளுவதை தமிழ்ச் சமூகம் ரசிக்கின்றதா? இம்முறை விவாதப் போட்டிக்கான தலைப்பு “ஈழமணித் திருநாட்டிலே தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அன்றாட இடர்களுக்கு பெரிதும் காரணமாக இருப்பவர்கள் அரச ஊழியர்களா அல்லது அரசியல்வாதிகளா?” என்பதாகும். இதில் யாழ். இந்துக் கல்லூரி மாணவர்கள் அரச அலுவலர்களே காரணம் என்று வாதிட்டார்கள். கொழும்பு இந்துக் கல்லூரி மாணவர்கள் அரசியல்வாதிகளே காரணம் என்று வாதிட்டார்கள். இந்த வாதப்பிரதிவாதங்களின் போது இருதரப்பும் அரசியல்வாதிகளையும் அரச அலுவலர்களையும் விளாசித் தள்ளினார்கள். அரச அலுவலகங்களின் மீது குறிப்பாக மருத்துவ சுகாதாரத் துறையின் மீது விமர்சனங்களை முன்வைத்து அதன் மூலமே பிரபல்யமாகி, அந்த பிரபல்யத்தை முதலீடாக்கி, ஒரு மருத்துவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் ஓர் அரசியல் சூழலில், அந்த மருத்துவர் தொடர்ந்தும் ஒரு சர்ச்சைப் பொருளாக, விவாத பொருளாகக் காணப்படும் ஓர் அரசியல் சூழலில், அரச அலுவலர்களையும் அரச அலுவலகங்களையும் தாக்குவது என்பது அதிகம் ஆர்வத்தோடு கவனிக்கப்படும். இம்முறை விவாதப் பொருளாக அது எடுக்கப்பட்டதன் பின்னணியில் அந்த சமகால முக்கியத்துவமும் உண்டு. இதற்கு முந்திய ஆண்டுகளில் இவ்வாறான விவாதக் களங்களில் பெரும்பாலும் அரசியல்வாதிகள்தான் விமர்சிக்கப்படுவதுண்டு. ஆனால் இம்முறை அரசு அலுவலர்கள் மீதும் விமர்சனங்கள் பாய்ந்திருக்கின்றன. கடந்த ஆண்டிலிருந்து தமிழ் அரசியலில் எழுச்சி பெற்று வருகின்ற ஒரு புதிய தோற்றப்பாடு இது. இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், பள்ளிக்கூட பிள்ளைகள் அரசியல்வாதிகளையும் அரச அலுவலர்களையும் விமர்சிக்கின்றார்கள் என்பதல்ல. அந்த விமர்சனங்களை ரசிக்கும் ஒரு மனோநிலை சமூகத்தில் காணப்படுகிறது என்பதுதான். அதுதான் அர்ஜுனா என்ற நாடாளுமன்ற உறுப்பினரை வெற்றி பெற வைத்தது. இன்று வரை அவரை ஒரு பேசு பொருளாக வைத்திருக்கின்றது. இந்த விமர்சனத்தை முன்வைக்கும் மாணவர்களில் எத்தனை பேர் புதிய வாக்காளர்கள் என்பது தெரியவில்லை. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அப்புதிய வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதும் தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக அவர்களுடைய பெற்றோர், உறவினர்கள், குறிப்பாக ஆசிரியர்கள் யாரோ ஒரு அரசியல்வாதிக்குத்தான் வாக்களித்திருப்பார்கள். இந்த எல்லா அரசியல்வாதிகளையும்தான் அந்த மாணவர்கள் விமர்சிக்கின்றார்கள்.அப்படியென்றால் அந்த அரசியல்வாதிகளை தெரிந்தெடுத்த தமது பெற்றோரையும் ஆசிரியர்களையும் தாம் வாழும் சமூகத்தையும் அவர்கள் விமர்சிக்கிறார்கள் என்று பொருள். அவ்வாறு அவர்கள் தமது பெற்றோரால் ஆசிரியரால் தெரிந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை விவாதப் பொருள் ஆக்குவதை இந்த சமூகம் ரசிக்கிறது என்பது அரசியல்வாதிகள் மீதும் அரசு அலுவலர்கள் மீதும் இந்த சமூகம் எந்தளவுக்கு வெறுப்பாக இருக்கிறது என்பதைக் காட்டுகின்றதா? ஆனால் இது உலகின் பெரும்பாலான ஜனநாயகப் பரப்புக்களில் காணப்படும் ஒரு பொதுவான அம்சம். மாணவர்கள் குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்கள் அரசியல்வாதிகளுக்கு அதிலும் குறிப்பாக ஆளுங்கட்சிக்கு எதிராக இருப்பார்கள். அதிகாரத்துக்கு எதிரான எதிர்ப்புணர்ச்சி என்பது எப்பொழுதும் மாணவ சமூகத்தின் மத்தியில் இருக்கும். ஆனால் அதே அதிகாரத்துக்கு அவர்களுடைய பெற்றோர்களோ அல்லது ஆசிரியர்களோ வாக்களித்தும் இருப்பார்கள். இந்த முரண்பாடும் எல்லா ஜனநாயகப் பரப்புகளிலும் இருக்கும். இள ரத்தம் எப்பொழுதும் அப்படித்தான் கொதிக்கும். அதுதான் கடந்த சில ஆண்டுகளாக இந்துக் கல்லூரிகளுக்கு இடையிலான விவாத மேடைகளில் காணப்படும் பொதுப் பண்பாகும். இது போன்ற விவாத மேடைகளில் வெளிப்படையாக அரசியல் விவாதிக்கப்படுவது ஆரோக்கியமானது. பாடசாலை மாணவர் இதுபோன்ற விவாதப் போட்டிகளுக்காக அரசியலை ஆழமாகக் கற்பது வரவேற்கத் தக்கது. விவாதக் களங்களில் உணர்ச்சி பொங்கப் பேசுபவர்களுக்கே கை தட்டல்கள் அதிகம் கிடைக்கும். எனினும் அங்கு அரசியல் அறிவுபூர்வமாக, தர்கபூர்வமாக ,கணிதமாகப் பயிலப்படுகின்றது. இது தமிழ்த் தேசிய அரசியலை அறிவியல் மயப்படுத்த உதவும் மேலும் இந்த விமர்சனங்களை சமூகம் ஏன் அத்துணை ஆர்வமாக ரசிக்கிறது என்பதற்கு பின்னால் உள்ள கூட்டு உளவியலை அரசியல்வாதிகள் விளங்கிக் கொள்ள வேண்டும். இது மாணவர்கள் விவாதத்துக்காக ஒரு சுவாரசியத்துக்காக `என்டெர்டெயின்மென்றுக்காகச்` செய்யும் விளையாட்டு; இதை சீரியஸாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்று பெரும்பாலான அரசியல்வாதிகள் நம்புவது தெரிகிறது. ஏனென்றால் இந்த விவாத மேடைகளில் கூறப்பட்ட கருத்துக்களை செவிமடுத்து அரசியல்வாதிகள் தங்களைத் திருத்திக் கொண்டதாகத் தெரியவில்லை. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்ற விவாத மேடைகளில் கூறப்படும் விமர்சனங்களைத் தமிழ்ப் பொதுப் புத்தியானது ரசிக்கிறது என்ற ஒரு அடிப்படை உண்மை இங்கு உண்டு. தமது அரசியல்வாதிகளை குறிப்பாக தாங்கள் தெரிந்தெடுத்த தங்களுடைய பிரதிநிதிகளையே அவ்வாறு விமர்சிக்கும் ஒரு போக்கு ஏன்? எங்கிருந்து வருகிறது? ஆழமான வெறுப்பும் அவநம்பிக்கையும் அதிருப்தியும் தமிழ் வாக்காளர்கள் மத்தியில் உண்டு என்பதைத்தான் அது காட்டுகின்றதா? கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த தீர்ப்புகள் அதன் பிரதிபலிப்பா ? இந்த இடத்தில் இது ஒரு சம்பந்தப்பட்ட மற்றொரு விடயத்தை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். தமிழ்ப் பொது வேட்பாளரை நியமிப்பதற்காக உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பொதுச்சபையின் உறுப்பினர்கள், மக்கள் மத்தியில் உள்ள தொழிற்சங்கங்கள் கூட்டுறவுச் சங்கங்கள், மீனவ அமைப்புக்கள், கமக்கார அமைப்புகள் போன்ற மக்கள் அமைப்புகளை தொடர்ச்சியாகச் சந்தித்த பெரும்பாலான சந்திப்புகளின்போது ஒரு விடயம் திரும்பத் திரும்ப மக்களால் வலியுறுத்திக் கூறப்பட்டது. அது என்னவென்றால், “நீங்கள் தனியே வாருங்கள். கட்சிகளோடு வராதீர்கள். கட்சிகள் வேண்டாம்.” என்பதுதான். தென்மராட்சியும் உட்பட சில இடங்களில் “நீங்கள் சுயேட்ச்சையாக நில்லுங்கள்” என்றும் கேட்கப்பட்டது. எனவே மாணவர்கள் அரசியல்வாதிகள் மீதும் கட்சிகள் மீதும் வைக்கும் விமர்சனங்களை இளவயதினர் அதிகாரத்தில் இருப்பவர்களின் மீது முன்வைக்கும் வழமையான விமர்சனங்கள் என்று கூறித் தட்டிக் கழித்துவிட்டுப் போக முடியாது. தமிழ்க் கட்சிகள், தமிழ் அரசியல்வாதிகளின் மீதான நம்பிக்கை இழப்பு அதிகரித்து வருகிறது. தாங்கள் வாக்களித்த அரசியல்வாதி மீதே தமிழ் மக்களுக்கு முழு நம்பிக்கை இல்லை. “என்ன செய்வது? வேறு தெரிவு இல்லை. அதனால் அவர்கள் வாக்களித்திருக்கிறார்கள்” என்பதைத்தான் அது காட்டுகின்றதா? எனவே மாணவர்களின் விவாத மேடைகளில் வெளிப்படும் கருத்துக்களில் இருந்து தமிழ்க் கட்சிகளும் அரசியல்வாதிகளும் குறிப்பாகத் தமிழ்த் தேசியவாத அரசியலை முன்னெடுக்கும் தரப்புக்கள் தொகுத்துக் கற்க வேண்டிய ஒரு விடயம் உண்டு. “அது இள ரத்தம் ,வழமை போல கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்கிறது” என்று கூறிக் கடந்து போய்விட முடியாது. அது முழுச் சமூகத்துக்குள்ளும் பரவியிருக்கும் ஓர் அதிருப்தி.அல்லது சலிப்பு. அல்லது வெறுப்பு என்று கூடச் சொல்லலாம். எனவே இந்த விமர்சனங்களை நிதானமாக அணுக வேண்டும். இதுபோன்ற விமர்சனங்கள் சமூகத்தின் ஏனைய தரப்புகள் மத்தியிலும் உண்டா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதிலிருந்து கற்றுக் கொள்ளக்கூடிய பாடங்கள் தமிழ் தேசிய அரசியலை மேலும் செழிப்பாக்க உதவும். அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் இந்துக்களின் விவாதச் சமருக்கு பின்னரும் இப்படி ஒரு கட்டுரை எழுதும் ஒரு நிலைமை வரக்கூடாது. ஏனென்றால் ஏற்கனவே தேசிய மக்கள் சக்திக்கு தமிழர் தாயகத்தில் ஏழு ஆசனங்கள் கிடைத்துவிட்டன. https://athavannews.com/2025/1420465- நாட்டில் ஏற்பட்ட மின் தடைக்கு, குரங்கே காரணம் !
திடீர் மின் தடை-காரணம் வெளியானது! பாணந்துறை துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக நாடளாவிய ரீதியில் திடீரென மின் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று காலை முதல் பல இடங்களில் மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த மின் தடை ஏற்பட்டுள்ளது. இதேவேவை தற்போது நிலைமையை மீட்டெடுக்கும் பணியில் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1420459- கருத்து படங்கள்
- அரச பணியாளர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்படும்! -பிரதமர் ஹரிணி அமரசூரிய
அரச பணியாளர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்படும்! -பிரதமர் ஹரிணி அமரசூரிய. “எதிர்காலத்தில் அரச பணியாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும்” என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பிரதமர் மற்றும் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டணியினருக்கு இடையே நேற்று (08) அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். இதன்போது ஆசிரியர், அதிபர் மற்றும் ஆசிரியர் ஆலோசனை சேவைகளிலும் கல்வித் துறையிலும் காணப்படும் பல பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன. குறிப்பாக குறித்த சேவைகளில் காணப்படும் பதவி உயர்வுகள், சம்பள முரண்பாடுகள், தொழில்முறை பிரச்சினைகள், ஆசிரியர் அதிபர் சேவையில் (தேசிய மற்றும் மாகாண) முறையான இடமாற்றங்கள், பாடசாலைகளில் மாணவர்களை சேர்த்தல்,நிதி வசூலித்தல், தேசிய பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு, புதிய கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் பிரிவேனா அமைப்பில் உள்ள சிக்கல் நிலைகளை தீர்ப்பது உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டன. அத்துடன் அரை அரச பாடசாலைகளில் கட்டணம் வசூலிப்பது, வகுப்பு அளவுகளை 35 மாணவர்களுக்கு மட்டுப்படுத்துவது, வகுப்பு அளவுகளை மட்டுப்படுத்துவது மற்றும் ஆசிரியர் ஆலோசனை சேவைக்கான வெட்டுப்புள்ளி பரீட்சைகளை நடத்துவது போன்ற விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. இதனையடுத்து பாடசாலைகளில் மாணவர்களை சேர்க்கும் போது, வெற்றிடங்கள் இல்லை எனில் மாணவர்களை சேர்க்காமல் இருத்தல், கல்வி அமைச்சு இதற்காக சிபாரிசு கடிதங்களை வழங்காது இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர்,எதிர்காலத்தில் ஆசிரியர்கள் உட்பட அனைத்து அரசு பணியாளர்களின் சம்பளத்தையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1420399- டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை செயற்படுத்த இலங்கை தலைவர்கள் இணக்கம்; இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா
இலங்கையில் DigiLocker செயல்முறையை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பு. எதிர்காலத்தில் நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் வசதியான சேவைகளை வழங்குவதற்காக டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவதற்கான திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டு வருவதாக டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (07) நடைபெற்ற பிம்ஸ்டெக் டிஜிட்டல் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “அனைவருக்கும் செழிப்புக்கான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை உருவாக்குதல்” என்ற கருப்பொருளில் பிம்ஸ்டெக் டிஜிட்டல் மாநாடு கொழும்பில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உட்பட வெளிநாட்டு தூதுவர்கள் குழு கலந்து கொண்டது. டிஜிட்டல் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் மற்றும் அரச அபிவிருத்தி ஆகிய தலைப்புகள் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டன. இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, கருத்து தெரிவிக்கையில், “இலங்கையில் DigiLocker செயல்முறையை அறிமுகப்படுத்துவதற்கான கலந்துரையாடல்கள் நடந்து வருகின்றன. UPI செயல்முறையையும் விரிவுபடுத்த நாங்கள் எதிர்பார்க்கிறோம். “டிஜிட்டல் கட்டண முறையாக GovPay ஐ அறிமுகப்படுத்தியதற்காக இலங்கை அரசாங்கத்தை நாங்கள் வாழ்த்துகிறோம்.” என்றார். https://athavannews.com/2025/1420379- நாட்டில் ஏற்பட்ட மின் தடைக்கு, குரங்கே காரணம் !
மின்தடையால் கிளிநொச்சி வைத்தியசாலை சேவைகள் பாதிப்பு – நோயாளர்கள் அவதி. மின்தடையால் கிளிநொச்சி வைத்தியசாலையின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மின் தடை காரணமாக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் மின் தடை ஏற்பட்டுள்ளதாகவும், மின்பிறப்பாக்கியும் இயங்காத நிலையில் பல்வேறு சிகிச்சைப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நோயாளர் விடுதி உள்ளிட்ட சிகிச்சைக்காக தங்க வைக்கப்பட்டுள்ள மக்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், புதிதாகக் கொண்டு வரப்பட்ட மின்பிறப்பாக்கியும் பொருத்தப்படாத நிலையில் வைத்தியசாலையின் பல்வேறு சேவைகள் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1420455- தையிட்டி விகாரை இடிக்கப்பட வேண்டும்! -சிவஞானம் ஸ்ரீதரன்
தையிட்டி விகாரை இடிக்கப்பட வேண்டும்! -சிவஞானம் ஸ்ரீதரன். ”மக்களின் விருப்புக்கு மாறாக சட்டவிரோதமாக தையிட்டியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சர்வாதிகார விகாரை இடிக்கப்பட வேண்டும்” என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் இது இனவாதக் கருத்தல்ல எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், சட்டம் சமனானது எனக் கூறும் இன்றைய அரசு, தனது நிலைப்பட்டில் இருந்து படிப்படியாக மாறி தனது சுய நிலைக்கு வருகின்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். சமகால அரசியல் தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் நேற்று (08) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” ‘தையிட்டி விகாரை விவகாரம் இன்று தமிழ் மக்களின் இருப்புக்கு சவாலாக மாறியுள்ளது எனவம், மக்களின் காணி அவர்களுக்கே உரியது எனவும் ஆனால் இன்று அது மறுக்கப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் நீண்டகாலமாக இரணுவத்தினரது பிடிக்குள் இருந்த எமது மக்களின் காணிகளில் அவர்களுக்கு தெரியாமலேயே இந்த விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளது எனவும், அரசினதும் பௌத்த கட்டமைப்பினதும் இந்த அதிகார இறுமாப்பு எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதொன்றல்ல எனவும் தெரிவித்துள்ளார். குறித்த காணி நிலங்களின் உரிமையாளர்கள் தமக்கான நியாயம் கேட்டு நீண்டகாலமாக போராடி வருகின்றனர் எனவும் ஆனாலும் அது இதுவரை நிறைவேறவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையின் வேறு சில பகுதிகளில் இந்துக் கோயில்கள் சில இன முரண்பாட்டை உருவாக்கும் என்ற தோரணையில் இடிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் நாட்டில் வாழும் அனைத்து தரப்பினருக்கும் ஒரே சட்டம் என்று கூறும் இந்த அரசு, இந்த விகாரையையும் இன முரண்பாட்டை உருவாக்கும் ஒன்றாக கருதி இடிப்பது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாது விகாரையின் சுற்றுப்புறத்திலுள்ள வேறு சில மக்களின் காணி நிலங்களும் சட்டவிரோதமாக பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அப் பகுதி மக்கள் எதிர்வரும் 12 ஆம் திகதியன்று பெரும் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்க பல்சார் தரப்பினரிடமும் ஆதரவை கோரியுள்ளனர் எனவும், அம் மக்களின் உணர்வுகளுக்கு வலுச்சேர்க்க குறித்த போராட்டத்திற்கு தமது ஆதரவை வழங்க இருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1420395- ஈட்டி எறிதல் போட்டியில் உலக சாதனை படைத்த இலங்கை வீரர்!
ஈட்டி எறிதல் போட்டியில் உலக சாதனை படைத்த இலங்கை வீரர்! இலங்கை தடகள சங்கத்தால் (Sri Lanka Athletics Association) நேற்று (08) தியகம மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்வுப் போட்டியில் ஈட்டி எறிதல் போட்டியைப் பிரதிநிதித்துவப்படுத்திய சுமேத ரணசிங்க, 82.56 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து உலக சாதனை படைத்துள்ளார். 2025 ஆம் ஆண்டில் உலகில் ஈட்டி எறிதல் போட்டியில் ஒரு தடகள வீரர் எறிந்த அதிகபட்ச தூரம் இதுவாகும். சுமேதாவுக்கு முன்பு, இந்த ஆண்டு அதிக தூரம் ஈட்டி எறிந்த தடகள வீரர் இத்தாலியின் ஜியோவானி ஃப்ராட்டினி ஆவார், அவர் 75.85 மீட்டர் தூரம் எறிந்திருந்தார். இதற்கிடையில்நேற்று நடைபெற்ற தேர்வுப் போட்டியில் பங்கேற்ற ருமேஷ் தரங்கா, 79.58 மீட்டர் தூரம் எறிந்துள்ளார், இது இன்று வரை உலகின் இரண்டாவது உயரமான எறிதலாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1420414- Acuity Partners நிறுவனத்தின் உரிமையாளரானது HNB வங்கி!
Acuity Partners நிறுவனத்தின் உரிமையாளரானது HNB வங்கி! இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB Acuity Partners நிறுவனத்தின் உரிமையை வெற்றிகரமாகக் கையகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த கையகப்படுத்தலுடன், நிறுவனம் HNB Investment Bank (Pvt) Ltd என மறுபெயரிடப்பட்டுள்ளது, இலங்கையின் முதலீட்டு வங்கி துறையில் ஒரு முன்னணி நிறுவனமாக அதன் பங்கை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமையப்பெற்றுள்ளது. Acuity Partners முன்பு HNB மற்றும் வங்கியின் இணைந்த கூட்டு முயற்சியால் நிறுவப்பட்ட ஒரு நிறுவனமாகும், அக்யூட்டி ஸ்டொக் ப்ரோக்கர்ஸ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனமானது கொழும்பு பங்குச் சந்தையின் உறுப்பினராகவும், முன்னணி பங்கு தரகர் நிறுவனமாகவும் உள்ளது. இந்த நிறுவனங்கள் பல்வேறு துறைகளில் நிபுணத்துவத்தை வழங்குவதன் மூலமும், மதிப்பை உருவாக்குவதன் மூலமும் இலங்கையின் நிதி சேவைத் துறையை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்துள்ளன. இந்த மாற்றத்துடன், HNB Investment Bank இணைப்புகள் மற்றும் கையகப்படுத்தல்கள், கடன் மற்றும் பங்குச் சந்தை சேவைகள் மற்றும் நிதி ஆலோசனை தீர்வுகள் உள்ளிட்ட பரந்த அளவிலான சேவைகளை வழங்கும். இந்த கையகப்படுத்தல், HNB Investment Bank இன் செயல்பாடுகளை உள்நாட்டு மற்றும் சர்வதேச நிதி சேவைத் துறையில் அதன் இருப்பை விரிவுபடுத்தவும் HNB எடுத்துள்ள மூலோபாய நடவடிக்கையாகும் இலங்கையின் நிதித் துறையை ஒரு புதிய பரிமாணத்திற்கு கொண்டு செல்வதற்கு இது உதவியாகும் என HNB இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அபேவர்தன தெரிவித்துள்ளார் https://athavannews.com/2025/1420413 @goshan_che, @vasee, @Kadancha- நாட்டில் ஏற்பட்ட மின் தடைக்கு, குரங்கே காரணம் !
நாடளாவிய ரீதியில் மின் தடை! நாடளாவிய ரீதியில் முன் அறிவித்தல் இன்றி இன்று முற்பகல் திடீர் மின் வெட்டு ஏற்பட்டுள்ளது. இன்று காலை மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த மின் தடை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அத்துடன் மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டுவரம் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. https://athavannews.com/2025/1420451- டெல்லி தேர்தல்… அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி!
காங்கிரஸ் கட்சி துடைத்தெறியப்பட்டுள்ளது! -எச்.ராஜா. டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சியை பிடித்துள்ள நிலையில், பா.ஜ.கவின் வெற்றிக்கு பிரதான காரணம் பிரதமர் மோடியின் நலத்திட்டங்களே என பா.ஜ.க தேசியக்குழு உறுப்பினர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். கோவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்த அவர் பிரதமர் மோடியின் நலத்திட்டங்கள் மக்களின் மனதை வென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக மீண்டும் வெற்றி பெற்றுள்ளது எனத் தெரிவித்த அவர், நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று வந்த போதிலும், சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளதாகவும், பாஜக தற்போது 48 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் ஆம் ஆத்மி கட்சி ஆரம்ப கட்டத்தில் மிகவும் எளிமையாக இருந்தவர்கள் எனவும், இன்று ஊழல் செய்து ஆடம்பரமாக உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். இதேவேளை நாட்டிற்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வந்த காங்கிரஸ் கட்சி தற்போது துடைத்து எறியப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் டெல்லியில் உள்ள தமிழர் பகுதிகளில் தானும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் சென்ற போது அங்குள்ள தமிழர்கள் மத்தியிலும், பாஜகவிற்கு ஆதரவு அதிகரித்துள்ளது என்பதை நேரில் பார்க்க முடிந்தது எனவும் இடைத்தேர்தலில் பொதுவாக ஆளும்கட்சி தான் வெற்றி பெறும் எனவும், ஆனால் பணத்தை வழங்கி திமுக வெற்றி பெற்றுள்ளது எனவும் இதனை பெரும் வெற்றியாக திமுக கருத முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2025/1420411 - சிரிக்கலாம் வாங்க
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.