Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. ஒரு பக்கம் கிளீன் ஸ்ரீலங்கா. மறு பக்கம் டிஜிட்டல் ஸ்ரீலங்கா.
  2. ட்ரம்பின் நிதியுதவி முடக்க அறிவிப்பால் இலங்கையில் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு! USAID (சர்வதேச வளர்ச்சிக்கான யுனைடெட் ஸ்டேட்ஸ் ஏஜென்சி) நிதியுதவியை முடக்குவதற்கான அமெரிக்க அரசாங்கத்தின் முடிவு, இலங்கையின் அரச சார்பற்ற நிறுவனத் துறையை நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இது ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களின் தொழிலை பாதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் நிர்வாகத்தில் கவனம் செலுத்தும் பல நிறுவனங்கள் நிதியுதவி நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து தங்கள் திட்டங்களைத் தக்கவைக்க போராடுகின்றன. மனித உரிமைகள், நல்லாட்சி மற்றும் பெண்கள் மற்றும் LGBTQ உரிமைகள் ஆகியவற்றில் பணிபுரியும் கணிசமான எண்ணிக்கையிலான இலங்கை அரச சார்பற்ற நிறுவனங்கள் USAID ஆதரவுடன் இயங்குகின்றன. இந்த நடவடிக்கை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது “அமெரிக்கா முதல்” கொள்கையின் கீழ் வெளிநாட்டு உதவியை குறைக்கும் உந்துதலுடன் ஒத்துப்போகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவன அதிகாரி ஒருவர், “இந்த முடிவு எங்களை கடுமையாக பாதிப்படையச் செய்துள்ளது, இதனால் நாங்கள் ஊழியர்களை விடுவித்தோம், முடக்கம் தொடர்ந்தால், பல திட்டங்கள் சரிந்துவிடும்” என்று கூறினார். அரசாங்கத் திறன் துறைக்கு (DOGE) தலைமை தாங்க ட்ரம்ப்பால் நியமிக்கப்பட்ட பில்லியனர் எலோன் மஸ்க் சம்பந்தப்பட்ட சர்ச்சைக்கு மத்தியில் நிதியுதவி நிறுத்தப்பட்டது. 2023 இல் அமெரிக்கா கிட்டத்தட்ட 180 நாடுகளுக்கு விநியோகித்த 72 பில்லியன் டொலர் வெளிநாட்டு உதவியில் பாதிக்கு மேல் USAID நிர்வகிக்கிறது. ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்க வெளிநாட்டு உதவியை மொத்தமாக முடக்கிய ஒரு வாரத்திற்குப் பின்னர், சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க முகவர் நிலையத்தின் எதிர்காலம் – வெளிநாடுகளில் அமெரிக்காவின் மனிதாபிமான உதவி நடவடிக்கைகளின் மையத்தில் உள்ள நிறுவனம் – நிச்சயமற்றதாகவே உள்ளது. ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகள் USAID ஐ வெளியுறவுத் துறையின் அதிகாரத்தின் கீழ் வைப்பது குறித்து தீவிரமாக விவாதித்து வருகின்றனர். கடந்த வாரத்தில், நூற்றுக்கணக்கான USAID ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் அல்லது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர், முகவர் நிலையத்தில் பணிபுரியும் 60 மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டனர் மற்றும் அமெரிக்க வெளிநாட்டுப் பணிகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. ஆயிரக்கணக்கான தொடர்புடைய வேலைகள் வரவிருக்கும் நாட்களில் பணியிடை நீக்கம் அல்லது பணி நீக்கம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன. https://athavannews.com/2025/1419516
  3. புதிய யுகத்தை குறிக்கும் வகையில் Govpay திட்டம் ஆரம்பம்! டிஜிட்டல் கொடுப்பனவுகளில் புதிய யுகத்தை குறிக்கும் வகையில் Govpay திட்டம் பெப்ரவரி 7 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக ‘Govpay’ திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் பூர்வாங்க நிகழ்வு பெப்ரவரி 7ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது. பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான டிஜிட்டல் முறை மூலம் தடையின்றி கொடுக்கல் வாங்கல் செய்யக்கூடியவாறு, இத்திட்டத்தின் ஊடாக அரச நிறுவனங்களுடனான கொடுக்கல் வாங்கல்களை சீரமைத்து நவீனமயப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2025/1419517
  4. ஏங்க..வண்டில என் பேர எழுதுங்க. Ok.. இனிசியலோட எழுதிடுறேன் ... 🤣
  5. வாகன இறக்குமதியை எளிதாக்க தயார் நிலையில் ஹம்பாந்தோட்டை துறைமுகம்! 2025 பெப்ரவரி 01 ஆம் திகதி முதல் நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டுள்ள வாகன இறக்குமதியை இலகுபடுத்துவதற்கு இலங்கையின் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக நிர்வாகம் தயாராக உள்ளது. 2024 இல், ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் 579,362 வாகனங்களை விடுவித்துள்ளது, இது 2023 இல் 238,997 ஆக இருந்தது. இறக்குமதி மற்றும் டிரான்ஸ்ஷிப்மென்ட் வாகனங்கள் இரண்டையும் கையாளும் வகையில் குறைந்தபட்சம் 4,000 வாகனங்களை சேமிக்கும் திறன் கொண்ட முற்றம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி வில்சன் கியூ குறிப்பிட்டார். வாகனம் கையாளும் செயல்முறையின் ஒவ்வொரு கட்டத்திலும் பாதுகாப்பு மற்றும் பொறுப்புணர்வை பராமரிக்க மொபைல் மற்றும் ரோந்து பணிகளும் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2025/1419506
  6. காற்றின் தரக்குறியீடு தொடர்பான முக்கியத் தகவல்! நாட்டின் பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரக் குறியீடு எதிர்வரும் 24 மணிநேரத்திற்கு மிதமான நிலையில் காணப்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நுவரெலியா நகரில் காற்றின் தரம் ஆரோக்கியமான நிலையில் காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை நாட்டில் நேற்றைய தினம் பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரம் மிதமான நிலையை பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பாக கொழும்பு 07, குருணாகல், வவுனியா, கண்டி, கேகாலை, நுவரெலியா, எம்பிலிப்பிட்டிய, களுத்துறை மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் சீரான நிலையிலும் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் காணப்படும் வேளைகளில காற்றின் தரக் குறியீடு ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரக் குறியீடு அடுத்த 24 மணிநேரத்துக்குள் ஒரு நல்ல நிலைக்கு மேம்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1419505
  7. தமிழகத்தின், ராணிப்பேட்டையில் உள்ள பொலிஸ் நிலையத்தின் மீது பெற்றோல் குண்டு வீச்சு! தமிழகத்தின், ராணிப்பேட்டையில் உள்ள சிப்காட் பொலிஸ் நிலையத்தின் மீது பெற்றோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நள்ளிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் மோட்டார் சைக்கிளில் வந்த இரு மர்ம நபர்கள் இவ்வாறு பொலிஸ் நிலையத்தின் மீது பெற்றோல் குண்டுகளை வீசி விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்த தீவிர விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2025/1419446
  8. ட்ரம்பின் கட்டண உயர்வால் சரிவை சந்தித்த ஆசிய சந்தைகள்! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடா, மெக்சிகோ மற்றும் சீனா மீது வரி விதிப்பதாக அளித்த வாக்குறுதியை தொடர்ந்து திங்கள்கிழமை (03) காலை ஆசிய பங்குகள் சரிந்தன. பெரிய நிறுவனங்களின் வருவாயை பாதிக்கும் மற்றும் உலகளாவிய வளர்ச்சியைத் தடுக்கக்கூடிய சாத்தியமான வர்த்தகப் போருக்கு முதலீட்டாளர்கள் தயாராகி வருகின்றனர். கனடாவும் மெக்சிகோவும் அமெரிக்காவின் பதிலடி கொடுக்கும் கட்டணங்களுடன் பதிலடி கொடுப்பதாகக் கூறியுள்ளன, அதேநேரத்தில் சீனா “தொடர்பான எதிர் நடவடிக்கைகளுக்கு” உறுதியளித்தது மற்றும் உலக வர்த்தக அமைப்பில் ட்ரம்பின் நடவடிக்கைக்கு சவால் விடுவதாக உறுதியளித்தது. அமெரிக்காவில் சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் குடியேற்றத்தை தடுக்க இந்த வரிகள் அவசியம் என்று ட்ரம்ப் கூறியுள்ளார். ஹொங்கொங்கின் ஹாங் செங் குறியீடு 1.3%, ஜப்பானின் நிக்கேய் 225 2.4%, தென் கொரியாவின் கோஸ்பி 3% மற்றும் அவுஸ்திரேலியாவின் ASX 200 1.8% திங்களன்று குறைந்தது. சந்திர புத்தாண்டு விடுமுறைக்காக சீனாவின் பிரதான நிலப்பரப்பில் சந்தைகள் மூடப்பட்டுள்ளன. இதற்கிடையில், அமெரிக்க டொலர் வலிமையைக் காட்டியது, சீனாவின் யுவானுக்கு எதிராக சாதனையாக உயர்ந்தது, அதே நேரத்தில் கனேடிய டொலர் 2003 க்குப் பிறகு மிகக் குறைந்த நிலைக்குச் சரிந்தது. ட்ரம்ப் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது “மிக விரைவில்” வரிகளை விதிக்கவுள்ளதாகவும் ஞாயிற்றுக்கிழமை வொஷிங்டனில் உறுதிபடுத்தியுள்ளார். குறுகிய காலத்தில் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு கட்டணங்கள் பயனளிக்கும் அதே வேளையில், நீண்ட காலத்திற்கு அவை கணிசமான அபாயங்களை ஏற்படுத்தும் என்று அமெரிக்க நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கட்டணங்களை திரும்பத் திரும்பப் பயன்படுத்துவது அமெரிக்காவை நம்புவதைக் குறைக்க மற்ற நாடுகளை ஊக்குவிக்கும், டொலரின் உலகளாவிய பங்கை பலவீனப்படுத்தும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். செவ்வாய்கிழமை நள்ளிரவில் அமலுக்கு வரவுள்ள கட்டணங்கள் குறித்து திங்கட்கிழமை கனடா மற்றும் மெக்சிகோ தலைவர்களிடம் பேசவுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இரு நாடுகளும் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு 25% வரியை எதிர்கொள்கின்றன, அதே நேரத்தில் சீனப் பொருட்களுக்கு 10% கூடுதல் வரி விதிக்கப்படும். https://athavannews.com/2025/1419456
  9. ஏனைய நாடுகளுடனான வர்த்தகப் போரில் அமெரிக்கர்களும் பாதிக்கப்படலாம் – ட்ரம்ப். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மெக்சிகோ, கனடா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் மீது விதித்துள்ள கடுமையான கட்டணங்கள் அமெரிக்கர்களுக்கு “குறுகிய கால” வலியை ஏற்படுத்தக்கூடும் என்று ஞாயிற்றுக்கிழமை (02) தெரிவித்தார். ஏனெனில் உலக சந்தைகளில் வரிகள் வளர்ச்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்தலாம் மற்றும் பணவீக்கத்தை மீண்டும் தூண்டலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். புதிய வரி விதிப்புகள் குறித்து கனடா மற்றும் மெக்சிகோ தலைவர்களுடன் திங்களன்று பேசுவேன் என்றும் ட்ரம்ப் கூறினார். புளோரிடாவில் உள்ள தனது மார்-ஏ-லாகோ தோட்டத்தில் இருந்து வொஷிங்டனுக்குத் திரும்பிய ட்ரம்ப் செய்தியாளர்களிடம் உரையாற்றும் போதே இதனைக் கூறினார். ஐரோப்பிய ஒன்றியத்துடன் கட்டணங்களும் “நிச்சயமாக நடக்கும்” என்று இதன்போது கூறிய டரம்ப், ஆனால் எப்போது என்று சுட்டிக்காட்டவில்லை. கனடா மற்றும் மெக்சிகோ மீது 25% வரியும், சீனா மீது 10% வரியும் விதிக்கும் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதியின் திட்டம் உலகளாவிய வளர்ச்சியைக் குறைக்கும் மற்றும் அமெரிக்கர்களுக்கு விலையை உயர்த்தும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கவும் உள்நாட்டுத் தொழில்களை ஊக்குவிக்கவும் அவை தேவை என்று ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2025/1419450
  10. யார்… அந்த சார்…? இன்னும் அந்த சாரை, தி.மு.க. அரசு கண்டு பிடிக்காததால்… அவங்க கட்சி ஆள்தான் என்று உறுதியாகி விட்டது. இடுப்பை கிள்ளுறது, பிரியாணி களவெடுக்கிறது, பாலியல் சில்மிஷம் செய்யுறவன் எல்லாம்…. தீம்கா கட்சியில்தான் இருக்கிறாங்கள். தலைவன் எவ்வழியோ… தொண்டனும் அவ்வழிதான். (200 றுப்பீஸ்) 😂 🤣
  11. காற்றின் தரத்தை வெறும் கண்ணாலேயே பார்க்கும் அளவுக்கு புகை மூட்டமாக உள்ளது. இது மிகவும் ஆபத்தானது. இதனால் நாட்டு மக்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டால் அதில் இருந்து மீள முடியாது. வாகனங்கள், தொழிற்சாலைகள், குப்பைகளை சகட்டு மேனிக்கு எரித்தல் போன்றவற்றில் கூடிய கவனம் எடுக்க வேண்டும். ஜேர்மனியில் 49, 000, 000 கார்கள் உள்ளன. பார ஊர்திகள் வேறு. இவை வெளியேற்றும் புகைகளை கடினமான சோதனைக்குப் பின்பே, வீதியில் ஓட அனுமதிப்பதால் காற்றின் தரம் மாசு படுவது தவிர்க்கப் படுகின்றது. நல்ல தண்ணீர், நல்ல காற்று போன்றவற்றை கொடுப்பதும்…. அரசாங்கத்தின் பொறுப்புத் தான்.
  12. மிகப் பெரிய தொழில் அதிபர் என்றுபத்திரிகையில் உள்ளது. பெயரைப் பார்க்க, தமிழாராகவும் இருக்குது. ஆனால்… இவரின் பெயரை முன்பு கேள்விப் பட்டதே இல்லை. அனுதாபங்கள்.
  13. சரியாக சொன்னீர்கள் குமாரசாமி அண்ணை. 👍🏽 தலையை மண்ணில் புதைக்கும்… தீக்கோழிகளுக்கு இது புரியாது. 🤣
  14. இப்ப ஆச்சி அரசியல் செய்தால்தான்... ஆட்சியில் இருக்கலாம் போலுள்ளது. 😂 முதலாவது சிங்கள ஆச்சி, மற்றது தமிழ் ஆச்சி. 🤣
  15. சம்பந்தரின் ஆவி.... மாவையரின் செத்த வீட்டுக்கு வந்த பிரபலங்களையும், மக்களையும் பார்த்து பொறாமை பட்டிருக்கும். அதுகும் சம்பந்தரின் பூதவுடல் தந்தை செல்வா கலையரங்கில் வைக்கப் பட்டிருந்த போது 50 பேருக்கும் குறைவானவர்களே வந்திருந்தார்கள். இரவில்... அந்தப் பிணத்தின் அருகே 5 பேர் கூட நிற்கவில்லையாம்.
  16. மாவையின் புகழுடல் தீயுடன் சங்கமம்! மறைந்த இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் புகழுடல் இன்று தகனம் செய்யப்பட்டது. மாவிட்டபுரத்தில் உள்ள அன்னாரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது புகழுடல் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாவிட்டபுரம் தச்சன்காடு இந்துமயானத்தில் அன்னாரது பூதவுடல் தகனம் செய்யப்பட்டது. இறுதி நிகழ்வில் அரசியல்வாதிகள், பொது அமைப்பினர் , மத குருமார்கள் , சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் , என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர். 1942ஆம் ஆண்டு ஒக்டோபர் 27ஆம் திகதி பிறந்த மாவை சேனாதிராஜா, வீட்டில் தவறி விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 29ஆம் திகதி காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1419369
  17. சிவமோகன் குறிப்பிடும் மும்மூர்த்திகள். 1) சுமந்திரன். 2) சிவஞானம். 3) சத்தியமூர்த்தி. என நினைக்கின்றேன்.
  18. தில்லை அண்ணா….உங்களின் இளைய மகளுக்கு, உளம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். 🙏
  19. சிலவேளை இவை வெளிநாட்டு பன்றிகள் என்ற படியால்… நம் ஊர் வைரசுகளை தாங்கும் சக்தி இல்லாமல் இருக்கலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.