Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிராக பிடியாணை! புதிதாக தெரிவு செய்யப்பட்ட யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவம் தொடர்பான வழக்கில் நீதிமன்றில் ஆஜராகத் தவறியதை கருத்திற் கொண்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், கொழும்பு, பேஸ்லைன் வீதியில் வீதி விபத்தொன்றை ஏற்படுத்தியதுடன், மற்றுமொரு வாகன சாரதியை தாக்கி பலத்த காயம் ஏற்படுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது குறித்த வழக்கு விசாரணையில் இன்று நீதிமன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஜராகத் தவறியதையடுத்து, யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிடியாணை பிறப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுளா ரத்நாயக்க உத்தரவிட்டார். முன்னதாக வழக்கு விசாரணை நாளன்று அவருக்கு எதிராக நீதிவான் நீதிமன்றத்தால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனினும், அது நிறைவேற்றப்படவில்லை. https://athavannews.com/2024/1409911
  2. வீதியில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது மோதிய லொறி – 5 பேர் உயிரிழப்பு. கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள நாட்டிகை பகுதியில் நெடுஞ்சாலைசாலை பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக அவ்வழியாக வரும் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன. விதி புணரமைப்பு பணி நடைபெறும் பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில், வீதியோரத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்த பகுதியில் தமிழகத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்த லொறி, தடுப்புகளை உடைத்துக்கொண்டு உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது ஏறி விபத்தை ஏற்படுத்தியது. இந்த கோர விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 தமிழர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகாலையில் இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. விபத்தை ஏற்படுத்திய லொறி ஓட்டுநர் மற்றும் உதவியாளரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், லாரி ஓட்டுநர் குடிபோதையில் லாரியை இயக்கியது தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2024/1409886
  3. பிரான்ஸ், ஜேர்மன், இங்கிலாந்துடன் ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை! ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த வாரம் பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் இங்கிலாந்துடன் அணுசக்தி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெஹ்ரான் (24) தெரிவித்துள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை (29) நடக்கவிருக்கும் இந்த பேச்சுவார்த்தையானது ஈரானின் வெளிவிவகார அமைச்சினால் ஞாயிற்றுக்கிழமை (24) அறிவிக்கப்பட்டது. பாலஸ்தீனம், லெபனான் பிரச்சினைகள், அணுசக்தி விவகாரம் உட்பட பல பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படும் என ஈரானிய வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பாகேய் (Esmaeil Baghaei) கூறினார். இங்கிலாந்து அதிகாரிகள் இந்தப் பேச்சுவார்த்தையை உறுதிப்படுத்தினர். எனினும், பேச்சுவார்த்தை எங்கு நடைபெறும் என்பதை லண்டனோ அல்லது தெஹ்ரானோ வெளிப்படுத்தவில்லை. https://athavannews.com/2024/1409784
  4. சீச்சீ…. நான் அதை பெரிது படுத்தவில்லை. 😂 ஆனால்…. அடுத்த தேர்தல் மட்டும், “புஸ்பா புருசன்” என்ற மாதிரி… பையனிடம் தோற்றவர் என பெயர் வந்து விடுமோ என்று பயமாக உள்ளது. 🤣
  5. டக்ளசுக்கு உள்ள கெட்டித்தனம்…. பிள்ளையானிடம் இல்லை. 😂 இப்ப நாங்கள், பிரதேசவாதம் கதைக்கின்றோம் என்று ஒரு குரூப் வரும். எஸ்கேப்பு. 🤣
  6. 60 கேள்விகளுடன்... போட்டியை திறம்பட நடாத்திய கந்தப்புவிற்கும், பல சிக்கலான, கணிக்க சிரமமான.. கேள்விகளாக இருந்தும், துணிவுடன் கலந்து கொண்டு சிறப்பித்த அந்த 26 உறவுகளுக்கும், மனமார்ந்த நன்றிகள். 🙏 எனக்கு... @goshan_cheஐ @வீரப் பையன்26 வென்ற அதிர்ச்சியில் இருந்து மீள இன்னும் சில நாட்கள் எடுக்கும் என நினைக்கின்றேன். 😜 🤣
  7. எப்பிடி இருந்த நான் இப்பிடி ஆயிட்டேன். கழுதை தேய்ந்து, கட்டெறும்பான கதை. ஆபிரகாம் சுமந்திரன் 2015´ம் ஆண்டில் இருந்து பெற்ற வாக்குகள் 50% இறங்கு முகத்தில். ஒவ்வொரு தேர்தலிலும் 50 வீத வாக்குகள் குறைந்து கொண்டு போயுள்ளது. 2015´ம் ஆண்டு - 58,043 வாக்குகள். 2020´ம் ஆண்டு - 27,834 வாக்குகள். 2024´ம் ஆண்டு - 15,039 வாக்குகள்.
  8. மீராவோ, அல்வாயனோ.... மாண்புமிகு அமைச்சர் சந்திரசேகரனை மலையகத் தமிழர் என ரீதியில் பிரித்து எழுதியிருப்பார்கள் என்று நினைக்கவில்லை. அவரை ஒரு சிங்களக் கட்சியின் அமைச்சராக பிரதிபலித்தே அந்தக் கருத்தை எழுதியிருப்பார்கள். அவர்கள் சொல்ல வந்ததை விரிவாக சொல்லாததால் அர்த்தம் மாறு பட்டிருக்கலாம். அவர்கள் சொல்லாத ஒன்றை... கற்பனை பண்ணி, அல்லது மிகைப் படுத்தி எழுதுவது ஏற்புடையது அல்ல. இது களத்தில் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும். தவறான புரிதலால்.... @colomban னுக்கு ஏற்பட்ட மனவருத்தத்துக்கு... உண்மையிலே மிகவும் மனம் வருந்துகின்றேன். 🙏
  9. அர்ச்சுனாவின் சமூக ஊடக கணக்குகள் ஆராயப்படும் – சபாநாயகர் தெரிவிப்பு யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் சமூக ஊடக கணக்குகள் ஆய்வு செய்யப்படும் எனவும், அவரது கருத்து தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்படும் எனவும் சபாநாயகர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே சபாநாயகர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய சம்பவம் இடம்பெற்றபோது சபாநாயகர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கவில்லை. எனவே அது குறித்து கருத்துத் தெரிவிப்பதற்கு முடியாது. எவ்வாறு இருப்பினும் குறித்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இது தொடர்பில் கலந்துரையாடப்படும். அத்துடன் அவர் கூறிய ஈழம் தொடர்பான கருத்து சத்தியப்பிரமாணத்துடன் முரண்படுவதாக உள்ளது. எவ்வாறாயினும், சத்தியப் பிரமாணம் செய்வதற்கு முன்னரே தாம் ஈழம் தொடர்பான கருத்துகளை முன்வைத்ததாக இராமநாதன் அர்ச்சுனா கூறுகிறார். அவரது நோக்கம் என்னவென்பது தெரியவில்லை. எனவே, அவரது சமூக ஊடக கணக்குகள் ஆராயப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்கப்படும்” இவ்வாறு சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1409743
  10. வரலாறு படைத்த மேக சூரியாராச்சி! வியட்நாமில் அண்மையில் இடம்பெற்ற ‘Mr World 2024′ போட்டியில் இலங்கையைச் சேர்ந்த மேக சூரியாராச்சி (Megha Sooriyaarachchi) மக்களின் விருப்பத் தேர்வு விருதினை வென்றுள்ளார். இலங்கையின் கலாசாரத்தை பெருமையுடனும், அழகுடனும் வெளிப்படுத்தியமைக்காக ‘தேசிய ஆடைக்கான மக்கள் தெரிவு’ விருதினையும் அவர் வென்றுள்ளார். இதேவேளை இப் போட்டியின் இறுதி கட்டத்தில் இரண்டு விருதுகளைப் பெற்ற ஒரே போட்டியாளர் மேக சூரியாராச்சி எனக் கூறப்படுகின்றது. அதுமட்டுமல்லாது மிஸ்டர் வேர்ல்ட் போட்டியின் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்த முதல் இலங்கையர் என்ற வரலாற்றையும் மேக சூரியாராச்சி படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1409750
  11. கூகுள் மேப்ஸை நம்பி பயணித்ததால் ஏற்பட்ட விபரீதம்! இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில், கூகுள் மேப்ஸ் வழிகாட்டுதலை நம்பி சேதமடைந்த பாலத்தின் மீது காரை செலுத்தி சென்றதில் ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். அரைகுறையான நிலையில் சேதமடைந்த பாலத்தில் பயணித்த காரானது 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சோக சம்பவம் சனிக்கிழமையன்று நிகழ்ந்தது. வாகன சாதிகள் ஒரு திருமணத்தில் பங்கேற்பதற்காக பரேலிக்குச் சென்றனர். திருமண மண்டபத்தை அடைய கூகுள் மேப்ஸை நம்பி சென்றுள்ளனர். அந்த ஜிபிஎஸ் மேப் அவர்களை உடைந்த மேம்பாலத்தின் மீது வழி காட்டியுள்ளது. அதை நம்பி பாலத்தில் பயணித்த கார், 50 அடி உயரத்தில் இருந்து ஆற்றில் விழுந்ததுள்ளது. விபத்து நடந்த போது போதிய சூரிய வெளிச்சம் இல்லை என்பதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. சேதமடைந்த காரையும், இறந்து கிடந்த மூன்று பேரையும் உள்ளூர்வாசிகள் கண்டதாக ஆரம்பகட்ட விசாரணை தெரிவிக்கின்றது. விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இந்த சம்பவத்திற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை குற்றம் சாட்டினர். மேலும், பாலம் ஏன் முடிக்கப்படாமல் உள்ளது என்றும், கட்டமைப்பின் ஒரு முனையில் தடுப்புகள் எதுவும் நிறுவப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பினர். அலட்சியம் காட்டிய கட்டுமானத் துறை மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறினர். https://athavannews.com/2024/1409765
  12. சுயேச்சை குழு - 17 அர்ச்சுனா - 20,487 வாக்குகள். கௌசல்யா - 15,789 வாக்குகள். தமிழரசு கட்சி. சிவஞானம் சிறிதரன் - 32,833 வாக்குகள். ஆபிரகாம் சுமந்திரன் - 15,039 வாக்குகள்.
  13. முதல் நாள்... பாராளுமன்ற அமர்வின் அமளியின் பின், அர்ச்சுனா அமைதியாக இருக்கின்றார் போலுள்ளது. புலி... பதுங்குவது, பாய்வதற்காகவோ. 😂
  14. தமிழரசியலில் ஒரு மிஸ்டர் பீன்ஸ்! நிலாந்தன். தொடக்கத்திலிருந்தே அர்ஜுனா சர்ச்சைகளின் மையமாக இருந்தார். சர்ச்சைகள்தான் அவரை வைரல் ஆக்கின. சர்ச்சைகள்தான் அவரை பிரபல்யம் ஆக்கின.சர்ச்சைகள்தான் அவருடைய அரசியல் பிரவேசத்துக்கான முதலீடு. அரசியலில் மிகக் குறுகிய காலத்துக்குள் எழுச்சி பெற்றவர் அவர். இப்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் அதிகம் ஊடகக் கவனிப்பை பெற்ற ஒருவராக குறிப்பாக,சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் குவிமையப்படுத்தப்படும் ஒருவராக அவர்தான் காணப்படுகிறார். ஏனென்றால் அவர் ஒவ்வொரு நாளும் எதையாவது வில்லங்கமாகச் செய்து விடுகிறார். பின்னர் அதை அவரே பெருமிதமாகப் பகிரவும் செய்கிறார். அவருக்கு இப்பொழுது கிடைக்கும் ஊடக கவர்ச்சி நெகட்டிவானது.ஆனால் அவர் அதை ரசிக்கிறார். கிட்டத்தட்ட சுமந்திரனும் தமிழரசியலில் அப்படி ஒரு நெகட்டிவ் கவர்ச்சியைத்தான் அதிகமாகப் பெற்றார். அதன் மூலமே தமிழரசியலில் எப்பொழுதும் பேசப்படும் ஒருவராக விளங்கினார். இப்பொழுது அர்ஜுனா. அர்ஜுனா நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதிலிருந்து அவரையும் கிண்டல் செய்து அவரைத் தெரிவு செய்த யாழ்ப்பாணத்தவர்களையும் கிண்டல் செய்து விமர்சனங்கள், மீம்ஸ்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவரைப் போன்ற ஒருவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியதன்மூலம் தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே தோற்கடித்து விட்டதாக, தமிழ் மக்களுக்குள் ஒரு பகுதியினர் கருதுவதாகத் தெரிகிறது. ஆனால் உலகின் மிகப்பெரிய ஜனநாயகமும் உலகப் பேரரசும் ஆகிய அமெரிக்காவில் ஒரு ட்ரம்ப் தெரிவு செய்யப்படலாம் என்றால், ஏன் அர்ஜுனாவை யாழ்ப்பாணத்தவர்கள் தெரிவு செய்யக்கூடாது என்று கேட்டால் அதற்கு என்ன பதில்? அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்ப்பும் ஒரு சர்ச்சைகளின் நாயகன்தான். வழமையான அரசுத் தலைவருக்குரிய பாரம்பரியங்களை அவர் பெருமளவுக்கு கட்டுடைக்கின்றார். ஒரு அரசுத் தலைவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற பவித்திரமான வரையறைகளை உடைத்துக் கொண்டு அவர் வெளியே வருகிறார். உலகப் பேரரசு ஒன்றின் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்ற பொதுவான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என்று அவர் வலிந்து நடிப்பதில்லை. சில சமயங்களில் அவர் ஆங்கிலத் திரை உலகின் நகைச்சுவை நாயகன் “மிஸ்டர் பீன்சை” ஞாபகப்படுத்துவார். “மிஸ்டர் பீன்ஸ்” மேற்கத்திய பண்பாட்டின் நடுத்தர வர்க்கத்தின் நவநாகரீக பிம்பங்களை உடைப்பவர்.”டீசன்ட்” என்று கருதப்படும் விடயங்களில் வழமைக்கு மாறாக நடப்பதுதான் அவருடைய வழமை. நவ நாகரிக நடுத்தர வர்க்கமும் மேட்டுக்குடியும் எதையெல்லாம் டீசன்ட் என்று கருதுகின்றனவோ, பாதுகாக்கின்றனவோ, அவற்றையெல்லாம் மிஸ்டர் பீன்ஸ் கேள்விக்கு உள்ளாக்குவார்; சிரிக்கத் தக்கவையாக்குவார். அல்லது சிரிப்புக் கிடமாக்குவார். அவர் நவநாகரீக உலகின் புனிதங்களை உடைப்பார், பௌத்திரமான வரையறைகளை உடைப்பார். மிஸ்டர் பீன்ஸைப் பார்த்துச் சிரிப்பவர்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிப்பவர்கள்தான். தங்களுக்குள் இருக்கும் நடுத்தர வர்க்க சுபாவத்தை சுயவிமர்சனம் செய்து கொள்பவர்கள்தான். அர்ஜுனாவின் நடவடிக்கைகளிலும் அந்தப் பண்பு உண்டு. அவர் எதையுமே சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. யாரையுமே சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ளவில்லை. எதுவெல்லாம் சீரியஸ் ஆனவையாக , டீசன்ட் ஆனவையாக , இங்கிதமானவையாகக் கருதப்படுகின்றனவோ,,அவற்றையெல்லாம்ல்லாம் அவர் கட்டுடைக்கின்றார். அவற்றையெல்லாம் அவர் வேடிக்கையாகுகின்றார். அவர் எதிலுமே ஒளிவுமறைவு இல்லாதவர்போல தன்னை வெளிப்படுத்துகிறார். தன் தவறுகளையும் தன் வாயாலே சொல்கிறார். அவருடைய சொந்த வாக்குமூலங்களே எதிர்காலத்தில் அவருக்கு எதிராகத் திரும்ப முடியும். ஆனால் அவர் தன்னைத் தானே தற்காத்துக் கொள்ளத் தெரியாத அல்லது தற்காத்துக் கொள்ள முடியாத ஒரு பிரபல்யம். ஐரோப்பாவில் வசிக்கும் ஒரு நண்பர் என்னிடம் கேட்டார், இவருடைய வேடிக்கையான நடவடிக்கைகள் அவருடைய அடிப்படை இயல்பா? அல்லது அவர் வேண்டுமென்று அவ்வாறு நடிக்கின்றாரா? என்று.ஏன் அவர் நடிக்க வேண்டும்? என்று கேட்டேன். அவர் கண்டபடி எதிரிகளைச் சம்பாதித்துக் கொள்கிறார். எனவே அந்த எதிரிகளிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கு ஒரு கோமாளி வேடத்தை அவர் பூண்டிருக்கலாம் அல்லவா? என்று கேட்டார். நான் சொன்னேன், அவர் நடிக்கவில்லை அதுதான் அவருடைய இயல்பு. இயல்பாக இருப்பதுதான் அவருடைய பலமும் பலவீனமும். அவர் நேரலையில் எப்பொழுதும் இயல்பாகத் தோன்றுகிறார். கமராவுக்கு முன் நிற்கிறேன் என்பதற்காக நடிக்கவோ அல்லது இறுக்கமாக,சீரியஸாகத் தன்னை காட்டவோ அவர் முயல்வதில்லை. அதை வெளிப்படைத் தன்மையாக ஏற்றுக் கொள்பவர்கள் அவரை ஆர்வத்தோடு பார்க்கின்றார்கள். தமிழரசியலின் சீரியசான, இறுக்கமான, சிரிப்புக் குறைந்த பண்பில் இருந்து முற்றிலும் வேறுபட்டு அவர் நிற்கிறார். எல்லாவற்றையுமே சிரிப்பாக்குகிறார். தானும் ஒரு சிரிப்புப் பொருளாக “மீம்சாக”, மிஸ்டர் பீன்சாகத் தோன்றுகிறார். பத்தாவது நாடாளுமன்றத்தில் தொடக்க அமர்விலேயே அவர் எங்களைச் சிரிக்க வைத்து விட்டார். தொடக்கமே பரபரப்புத்தான்.அர்ஜுனா நாடாளுமன்றத்துக்கு ஒரு அதிர்ச்சி. அவர் நாடாளுமன்றத்தையும் அது புனிதம் என்று கருதும் நடைமுறைகளையும் அபத்தமாக்கி விட்டார். தமிழ் மக்களின் கடந்த சுமார் 75 ஆண்டு கால அனுபவத்தின்படி நாடாளுமன்றத்துக்குள்ளால் மீட்சி கிடைக்கப் போவதில்லை. நாடாளுமன்றம்தான் தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்புச் சட்டங்களை நிறைவேற்றியது. ஜிஜி பொன்னம்பலத்தில் தொடங்கி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வரையிலும் மூன்று தலைமுறைகளின் காலப்பகுதிக்குள் ஆற்றப்பட்ட எல்லா உரைகளும் ஹன்சாட்டில் பதிவு செய்யப்பட்டதற்குமப்பால் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக வெளிவந்ததற்குமப்பால் தமிழ் மக்களுக்கு திருப்தியான,பாதுகாப்பான எதையுமே பெற்றுத்தரவில்லை. நாடாளுமன்றத்தை ஒரு அபத்த மேடையாக மாற்றிய சிங்கள பௌத்த அரசியல் பாரம்பரியத்துக்கு தமிழ் மக்கள் கொடுத்த ஒரு தண்டனையாக அர்ஜுனாவைக் கருத வேண்டும் என்று ஒரு நண்பர் முகநூலில் எழுதியிருந்தார். அர்ஜுனாவின் வெற்றியும் தோல்வியும் அவர் இறுக்கமின்றி இயல்பாகத் தோன்றுவதுதான்.அவருடைய வெளிப்படைத் தன்மைதான். அவர் தன்னைத் தற்காத்துக் கொள்ளாமல் எதிரிகளைச் சம்பாதிக்கிறார். தன்னை தற்காத்துக் கொள்ளாமல் நேரலையில் வருகிறார். தன்னைத் தற்காத்துக் கொள்ளாமல் கண்டபடி கதைக்கிறார். நீதிக்காகப் போராடும் ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியிலிருந்து, அவ்வாறு தற்காப்புணர்வற்ற ஒருவர் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். அதற்கு முதலாவது பிரதான காரணம், அவர் ஒரு மருத்துவராக இருந்து கொண்டு மருத்துவத்துறைக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்தமை. அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை எதிர் கொண்டமை. இரண்டாவது காரணம், தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் தலைமைத்துவ வெற்றிடம். தங்களுடைய உடனடிப் பிரச்சினைகளைப் பேசவல்ல, தங்களுடைய வெறுப்பையும் எதிர்ப்பையும் வெளிக்காட்டவல்ல தலைவர்களுக்காகத் தமிழ் மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த ஏக்கத்தின் விளைவாகவே அர்ஜுனா வெற்றி பெற்றார். மூன்றாவது காரணம், சமூக வலைத்தளங்களின் பெருக்கமும் யூட்யூப்களின் பெருக்கமும். செய்தி இப்பொழுது பணம். பரபரப்பு இப்பொழுது பணம். யூடியுப்கள் பார்வையாளர்களை எப்படி அதிகப்படுத்தலாம், வருமானத்தை எப்படிக் கூட்டலாம் என்றுதான் அதிகமாகச் சிந்திக்கின்றன. இதில் தேசத்தைக் கட்டியெழுப்பும் யூடியுப்கள் எத்தனை? இப்படிப்பட்டதோர் ஊடகச் சூழலும் அர்ஜுனாவை வீங்கச் செய்தது. சமூக வலைத்தளங்கள் ஊதிப் பெருப்பித்த ஒரு பலூன் அவர். நாலாவது காரணம், அவருடைய வெளிப்படைத் தன்மை, இறுக்கமில்லாத அப்பாவித்தனமான வெளிப்படைத்தன்மை. தமிழ்த் தேசிய அரசியலின் சீரியஸான,இறுக்கமான,சிரிப்பில்லாத பண்புக்கு எதிராக அர்ஜுனா சீரியஸான எல்லாவற்றையுமே சிரிப்புக்கிடமாக மாற்றுகிறார்.அதுவும் அவருக்குக் கவர்ச்சியைக் கொடுத்தது. பத்தாவது நாடாளுமன்றம் அவரை எவ்வளவு காலத்துக்குச் சகித்துக் கொள்ளும் என்பதனை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஆனால் கடந்த 15 ஆண்டுகளிலும் தமிழ் மக்கள் தென்னிலங்கை மையக் கட்சி ஒன்றுக்கு கணிசமான அளவுக்கு நேரடியாக வாக்களித்திருக்கும் ஒரு பின்னணிக்குள், தமிழ்த் தேசியப் பிரதிநிதித்துவம் கடந்த நாடாளுமன்றத்தை விடவும் இந்த முறை மேலும் இரண்டு ஆசனங்களால் குறைந்து போயிருக்கும் ஒரு பின்னணிக்குள், அதாவது சீரியசான, பின்னடைவான ஓர் அரசியல் சூழலுக்குள், தமிழ் மக்களின் இறுக்கத்தைத் தளர்த்தி, எல்லாவற்றையும் சிரித்துக் கடக்கும் ஒரு அனுபவத்தைத் தர ஒரு மிஸ்டர் பீன்ஸ் கிடைத்திருக்கிறாரா? சிரிப்போம். கடப்போம். https://athavannews.com/2024/1409694
  15. மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள். மாவீரர் நினைவை அனுஷ்டித்த யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு நன்றி.
  16. இந்திய தூதுவர் சந்திப்புக்கள். அதிலும்... குழுவாக, கூட்டாக, சம்பந்தனுடன், சாணக்கியனுடன், தன்னந் தனியாக... என்று, சுமந்திரன் இந்தியத் தூதுவர்களை சந்திப்பதில் "படு பயங்கர கில்லாடி". 😂 நேற்றைய அவர்களின் சந்திப்பை பார்த்து, சுமந்திரனுக்கு... ஒரே, "புழுக்கமாக" இருந்திருக்கும். 🤣
  17. இந்திய தூதுவர் சந்திப்புக்கள். அதிலும்... குழுவாக, கூட்டாக, சம்பந்தனுடன், சாணக்கியனுடன், தன்னந் தனியாக... என்று, சுமந்திரன் இந்தியத் தூதுவர்களை சந்திப்பதில் கில்லாடி. அப்போதெல்லாம்... ஓவியம் கீறுபவர்கள் கண்ணை இறுக மூடிக் கொண்டு இருப்பார்கள். 😂 ஸ்ரீதரன் சந்தித்தவுடன் விழுந்தடித்து... ஓவியம் கீறத் தொடங்கி விடுவார்கள். அது... அவர்களின் டிசைன். 😃 இதற்குள்... தாங்கள் நடுநிலைமை என்று சொல்லிக் கொண்டு திரிவார்கள். நாங்க... அதை நம்பீட்டம். 🤣
  18. முருகேசு என்பவர் உயரமான மரத்தில் இருந்து தவறி விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை வீட்டிற்கு தூக்கிச் சென்றனர். அங்கு வந்த டாக்டர் அவரை பரிசோதித்து பார்த்துவிட்டு... “ முருகேசு இறந்து விட்டார்” என்று கூறினார். ஆனால் அடிபட்ட முருகேசு கண்ணை விழித்து... “ நான் இறக்கவில்லை டாக்டர். உயிரோடுதான் இருக்கிறேன்” என்றார். உடனே அருகில் இருந்த முருகேசு மனைவி “ வாயை மூடுங்கள். உங்களுக்கு என்ன தெரியும்? டாக்டருக்கு தெரியாததா” என்று அதட்டினாள். 😂😂 குறிப்பு: நம்புங்கள்! இந்த பதிவிற்கும் மேலே உள்ள படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 🤣 தோழர் பாலன்
  19. ஜனாதிபதி அநுரகுமாரவின் 56 ஆவது பிறந்த தினம் இன்று! ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்றைய தினம் தனது 56 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். இவர் இலங்கையின் மத்திய மாகாணத்தில் மாத்தளை மாவட்டம் கலேவலை என்னும் ஊரில் 1968 நவம்பர் 24 இல் பிறந்தார். அநுரகுமார தனது பாடசாலைக் கல்வியை தம்புத்தேகமை காமினி மகா வித்தியாலயத்திலும், தம்புத்தேகமை மத்திய கல்லூரியிலும் கற்றார். தனது பாடசாலையில் இருந்து பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான முதலாவது மாணவராக விளங்கிய இவர் பாடசாலை நாட்களில் இருந்தே மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாட்டாளராக இருந்ததோடு, அக்கட்சியில் 1987 இல் இணைந்து, மாணவர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நுழைந்த அவர் சில மாதங்களுக்குப் பிறகு அச்சுறுத்தல் காரணமாக வெளியேறி ஓராண்டு கழித்து 1992 இல் களனி பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்பட்டு, 1995 இல் இளம் அறிவியல் பட்டத்துடன் வெளியேறினார். 2000 இல் நாடாளுமன்றத் தேர்தலை அடுத்து கட்சியின் தேசியப் பட்டியலில் நாடாளுமன்றம் சென்றார். 2001 தேர்தலில் மீண்டும் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினரானார். பின்னர் 2015 செப்டம்பர் முதல் 2018 டிசம்பர் வரை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் தலைமைக் கொறடாவாகப் பணியாற்றினார். 2014 பெப்ரவரி 2 அன்று, மக்கள் விடுதலை முன்னணியின் 17ஆவது தேசிய மாநாட்டின் போது, சோமவன்ச அமரசிங்கவிற்குப் பின், கட்சியின் புதிய தலைவராக அநுரகுமார திசாநாயக்க நியமிக்கப்பட்டார். 2019 ஓகஸ்ட் 18 ஆம் திகதியன்று, மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான அரசியல் கூட்டமைப்பான தேசிய மக்கள் சக்தி, 2019 ஜனாதிபதி தேர்தலில் அநுர தனது ஜனாதிபதி வேட்பாளராக இருப்பார் என்று அறிவித்தது. இத்தேர்தலில் திசாநாயக்க 418,553 (3%) வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பெற்றார். மீண்டும் 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு 5,634,915 வாக்குகளைப் பெற்று இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகக் தெரிவானார். https://athavannews.com/2024/1409643
  20. உத்தியோகப்பூர்வ குடியிருப்புக்களை கையளிக்காத 30 முன்னாள் எம்.பி.க்கள்! சுமார் 30 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய உத்தியோகப்பூர்வ குடியிருப்புகளை இன்னும் ஒப்படைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய எம்.பி.க்களுக்கு குடியிருப்புகள் வழங்க வேண்டியுள்ள தேவையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை வீடுகளை காலி செய்யும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்றுமுன்தினம் (22) ஏழு எம்.பி.க்கள் தங்களுடைய குடியிருப்புகளை விட்டு வெளியேறியுள்ளனர். இதேவேளை, முன்னாள் எம்.பி.க்கள் குறித்த குடியிருப்புகளை காலி செய்யாவிடின் அந்த குடியிருப்புகளுக்கான நீர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்படும் என நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீர அண்மையில் முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார். எவ்வாறெனினும் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை வழங்கும் வகையில் தற்போது புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாடாளுமன்றத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மாதிவெல வீட்டுத் தொகுதி புதிய நடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் புதிதாக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் 35 க்கும் மேற்பட்டோர் மாதிவெல வீட்டுத் தொகுதியிலிருந்து உத்தியோகபூர்வ வீடமைப்புக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். கொழும்பில் இருந்து 40 கிலோ மீற்றர்களுக்குள் வீடு இல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த உத்தியோகபூர்வ வீட்டுத் தொகுதியில் வீடுகளைப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. மேலும், அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு அமைய இந்த வீடுகள் வழங்கப்படும் என நாடாளுமன்ற சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது. மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர்கள் உத்தியோகபூர்வ வீட்டுத் தொகுதியில் 110 வீடுகள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1409649

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.