Everything posted by தமிழ் சிறி
-
இலங்கையில் பிரபலமான சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல்; அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை
அறுகம்பை பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பில் 6 பேர் கைது! தேசிய பாதுகாப்பு மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட குற்றச்சாட்டில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களில் வெளிநாட்டு பிரஜை ஒருவரும் உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். அறுகம்பை வளைகுடா பகுதியில் தாக்குதல் நடத்தலாம் என கிடைத்த புலனாய்வு தகவல் மற்றும் கொழும்பில் உள்ள முக்கிய நிதித் தளங்களை புகைப்படம் எடுத்த சம்பவங்கள் தொடர்பிலேயே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஆபத்து ஏற்படக் கூடும் எனத் தகவல் கிடைத்தவுடன் அவர்களின் பாதுகாப்பையும் தேசிய பாதுகாப்பையும் உறுதிப்படுத்த சந்தேக நபர்களை உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த குற்றச்சாட்டில் நாங்கள் மாலைத்தீவு பிரஜை மற்றும் ஐந்து இலங்கையர்களை கைது செய்யது, விசாரணை மேற்கொண்டு வருகின்றோம். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் தாக்குதல் திட்டம் தொடர்பான இறுதி முடிவுக்கு வர முடியாது. எனவே, இவர்களின் கைது தொடர்பான தேவையற்ற விளக்கங்கள் மற்றும் போலியான செய்திகளை வெளியிடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் விஜித ஹேரத் மேலும் குறிப்பிட்டார். https://athavannews.com/2024/1406900
-
லொஹான் ரத்வத்தவின் வீட்டில் இலக்கத் தகடுகள் இல்லாத கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
லொஹான் ரத்வத்த தொடர்பில் விசேட அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த விளக்கமறியலில் வைக்கப்பட்டதன் பின்னர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டமை தொடர்பில் சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி.திஸாநாயக்க அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் அவர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சருக்கு விசேட பாதுகாப்பு மற்றும் மருத்துவ சிகிச்சைகளை வழங்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் அமைச்சராக அவர் முன்னர் பதவி வகித்ததன் காரணமாக, நீதிவான் அவரது விசேட பாதுகாப்பிற்கான ஏற்பாடுகளை இந்த உத்தரவில் உள்ளடக்கியுள்ளார். சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு வாகனத்தை வைத்திருந்த குற்றச்சாட்டில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதி மிரிஹான பொலிஸாரால் கட்டுகஸ்தோட்டையில் வைத்து கைது செய்யப்பட்டார். அன்றிரவு, நுகேகொடை பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை எதிர்வரும் நவம்பர் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதற்கு அமைவாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள லொஹான் ரத்வத்த, மருத்துவப் பிரச்சினைகள் காரணமாக சிகிச்சை பெற வேண்டியதன் அவசியத்தை சிறைச்சாலை வைத்தியசாலையின் சுகாதார அறிக்கை சுட்டிக்காட்டியதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி.திஸாநாயக்க கூறியுள்ளார். https://athavannews.com/2024/1406911
-
இல்லாத ஒன்றுக்கு கனவு காண்பதை விட யதார்த்தமானதை அடைய முயற்சிப்பதே சிறந்தது - டக்ளஸ்
அல்வாயன்... இந்தக் காணொளியையா சொன்னீர்கள்.
-
இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் $37.5 பில்லியனாக உயர்வு!
இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் $37.5 பில்லியனாக உயர்வு! 2024 ஜூன் மாத இறுதியில் இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் 37.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை வகுத்தல், திட்டமிடல் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டிற்கான அமைச்சின் மத்திய ஆண்டு நிதி நிலை அறிக்கையிலேயே இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 2024 ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரை மொத்தக் கடன் சேவைக் கொடுப்பனவுகள் 503 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். இதில் 275.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அசல் திருப்பிச் செலுத்துதலுக்காகவும், 227.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வட்டி செலுத்துதலுக்காகவும் ஒதுக்கப்பட்டது. 2022 ஏப்ரல் 12 ஆம் திகதியன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசாங்கத்தின் இடைக்காலக் கடன் நிறுத்தக் கொள்கைக்கு இணங்க, இருதரப்பு மற்றும் வணிகக் கடனாளிகளிடமிருந்து பாதிக்கப்பட்ட கடன்களுக்கான வெளிப்புறக் கடன் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக, 2024 ஜூன் மாத நிலவரப்படி, செலுத்தப்படாத கடன் சேவையானது 5.67 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், வட்டி 2.53 பில்லியன் டொலர்களாகவும் காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1406915
-
சைபர் எதிரியாக இந்தியாவை வகைப்படுத்திய கனடா!
சைபர் எதிரியாக இந்தியாவை வகைப்படுத்திய கனடா! பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கனேடிய அரசாங்கம் அதன் அண்மையை நடவடிக்கையாக இந்தியாவை ஒரு “சைபர் எதிரியாக” வகைப்படுத்தி, இணைய பாதுகாப்பில் உள்ள விரோத நாடுகளின் பட்டியலில் சேர்த்துள்ளது. இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான இராஜதந்திர நெருக்கடி நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் நிலையில் கனேடிய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை வந்துள்ளது. இந்த தீர்மானத்துக்கு இந்திய வெளி விவகார அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், கனடா இந்தியாவின் உலகளாவிய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளது. இதனிடையே கனடா, அங்குள்ள தமது தூதரக ஊழியர்கள் மீது கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்திய அதிகாரிகளை கனடா ஒடியோ மற்றும் வீடியோ கண்காணிப்பில் வைத்துள்ளதாகவும், இதுபோன்ற நடவடிக்கைகளின் மூலம் அவர்கள் துன்புறுத்தப்படுவதாகவும் அச்சுறுத்தப்பட்டதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1406919
-
இஸ்ரேல், அதன் நட்பு நாடுகளுக்கு விரைவில் பதிலடி – ஈரானிய உச்ச தலைவர்!
இஸ்ரேல், அதன் நட்பு நாடுகளுக்கு விரைவில் பதிலடி – ஈரானிய உச்ச தலைவர்! தெஹ்ரான் மற்றும் பிராந்தியத்தில் தாம் ஆதரிக்கும் குழுக்களை குறிவைத்து இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடான அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுப்போம் என ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி (Ayatollah Ali Khamenei) சபதம் மேற்கொண்டார். யேமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள், லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கம் மற்றும் பாலஸ்தீனிய இஸ்லாமியக் குழுவான ஹமாஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய தெஹ்ரான் ஆதரவு ஆயுதக் குழுக்களின் கூட்டணிக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு மத்தியில் ஈரான் உச்ச தலைவரின் இந்த கருத்து வந்துள்ளது. 1979 ஆம் ஆண்டு தெஹ்ரானில் உள்ள அமெரிக்க தூதரகம் கைப்பற்றப்பட்டதன் ஆண்டு நிறைவை முன்னிட்டு, சனிக்கிழமை (02) மாணவர்களுடனான சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்ததாக ஈரானின் அரசு நடத்தும் பிரஸ் டிவி தெரிவித்துள்ளது. இதன்போது மேலும் உரையாற்றிய அவர், எதிரிகள் (ஈரான், அமெரிக்கா) சந்தேகத்திற்கு இடமின்றி பற்களை உடைக்கும் பதிலைப் பெறுவார்கள். உலகளாவிய ஆணவத்தை எதிர்கொள்ள ஈரான் இராணுவ, அரசியல் மற்றும் தளவாட நடவடிக்கைகளுடன் முழுமையாக தயாராக உள்ளது. தயக்கமின்றி தீர்க்கமாக “உலகளாவிய ஆணவத்திற்கு” எதிராக ஈரானிய மக்கள் போராட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஈரானும் இஸ்ரேலும் நீண்டகாலமாக எதிரிகளாக இருந்து வருகின்றன. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸின் தாக்குதல்கள் மற்றும் காசா மீதான இஸ்ரேலிய படையெடுப்பைத் தொடர்ந்து இந்த போட்டி ஆழமடைந்தது. ஹமாஸ் மற்றும் ஹிஸ்பொல்லாவின் தலைவர்களை இஸ்ரேல் கொன்றதற்கு பதிலடியாக, யூத அரசின் மீது இஸ்லாமிய குடியரசான ஈரான் கடந்த ஒக்டோபர் 1 ஆம் திகதி சுமார் 200 ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. இந்த ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் ஈரான் மீது இஸ்ரேல் கடந்த வாரத் தாக்குதல் நடத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1406934
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
நானும்… படித்த இளைஞர்கள் பக்குவமாக நடந்து கொள்வார்கள் என நம்பி, கந்தப்புவின் யாழ் கள பாராளுமன்ற போட்டியில்… //யாழ். மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்?// என்று கேட்கப் பட்ட கேள்வி ஒன்றுக்கு… அர்ச்சுனா இராமநாதன் என பதிலளித்து விட்டேன். 🙂
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
வெறும் மண்ணில் இருந்து... இலையில் சாப்பிடுகின்றார்கள். ஆக... 50% மண்சோறு. 😂 சப்பாத்து கால்களுடன் நிற்பவர்கள் சுமந்திரனின் தனிப்பட்ட பாதுகாப்பு படையினர். சொந்த மண்ணில் நடமாடவே... குண்டர்களின் பாதுகாப்பு தேவைப்படுகின்ற ஆள் தான் அவர். ஏனென்றால்... செய்து வைத்திருக்கிற வேலைகள் அவ்வளவும் சுத்துமாத்துகள். 🤣
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
1) வாத்தியார் 2) கந்தையா 57 3) வசி 4) சுவைபிரியன் 5) தமிழ்சிறி 6)கிருபன் 7)alvayan 8 ) சுவி 9) பையன்... சுவியர்... ஏற்கனவே போட்டியில் கலந்து கொண்ட 9 பேரை மேலுள்ள பட்டியலில் இணைக்க வில்லை என்பதை தற்போதுதான்... புரிந்து கொண்டேன். 🙂
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
தேர்தலில் வெற்றி பெற வேண்டி... மண் சோறு சாப்பிட்ட சுமந்திரனும் ************. 😂
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
மன்னிக்கவும்.... நம்ம @suvy யை தவற விட்டு விட்டேன். 😲 உண்மையில் மிக வருத்தப் படுகின்றேன் சுவியர். 🥰 ❤️
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
"ஈழத்து மண் சோறு". அறிமுகப் படுத்தியவர்: ஆபிரகாம் சுமந்திரன். 😃 சுத்துமாத்து சுமந்திரனின்... மற்ற ஒரு தேர்தல் "டிராமா". 😎 வெறும் மண்ணில் இருந்து சாப்பிட்டால்... சனம் பரிதாபப் பட்டு வாக்கு போடும் என நினைத்து விட்ட கோமாளி. 😂 🤣
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
அங்கஜன் இராமநாதன் போட்டியிடும்.. "ஜனநாயக தேசிய கூட்டணியின்" உரிமையாளர் யார் என்று பல காலமாக தேடி, இன்றுதான் முகநூலில் கண்டு பிடித்தேன். தகவல் கீழே உள்ளது. 👇 //அன்பார்ந்த தமிழ் மக்களே நீங்கள் எவருக்கு வாக்களித்தாலும் பரவாயில்லை ஆனாலும் தபால் பெட்டி சின்னத்தில் உங்களை ஏமாற்ற வருகின்ற ராஜபக்ச குடும்பத்தின் அடிமைகளாக யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் அங்கஜன் கும்பல், வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் சிறீ ரெலோ உதயராசா, டிக்டொக் ராசன் கும்பல் குறித்து மிக கவனமாக செயற்படுங்கள். உங்கள் கிட்னிகளையும் இருந்த இடத்திலிருநாதே திருடக்கூடிய ஆசாமிகளே இவர்கள். கடந்த காலங்களில் வெற்றிலை, மொட்டு, கை, கஸ் சிலிண்டர் சின்னங்களில் உங்களை ஏமாற்றிவந்த இந்த ஊழல் பெருச்சாளிகள் இந்தமுறை தபால் பெட்டிக்குள் ஒழிந்து வருகிறார்கள். யுத்தகாலத்தில் மகிந்த ராஜபக்ச மேற்கொண்ட அனைத்து அட்டூழியங்களுக்கும் துணையாக நின்ற சிங்கள நபரே இவர். தற்போது இந்தக் கட்சியை உருவாக்கி அங்கஜன், வியாழேந்திரன், மனோ கணேசனின் தம்பி பிரபா கணேசன், ஆட்கடத்தல் பேர்வழி உதயராசா போன்ற ராஜபக்ச குடும்பத்தின் அடிமைகளை இணைத்துக்கொண்டு பிரதமர் ஆகப் போகிறாராம். தென்னிலங்கையில் மிக மோசமாக படுதோல்வி அடையப்போகும் கட்சியே இது. ஆகவே அங்கஜன் போன்றவர்களின் வெடிப் புழுகுகளுக்கு இம்முறையும் ஏமாந்து போகாதீர்!// Kunalan Karunagaran
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
தற்போது... களத்திற்கு வந்து எழுதுபவர்கள் மேலே உள்ள 66 பேர் என நினைக்கின்றேன். ஒரு மணித்தியாலம் இருந்து, பெயர்களை தேடி எடுத்ததில்... இந்த 66 பேரும்தான் கிடைத்தார்கள். சிலரை... தவற விட்டிருக்கலாம் என நினைத்துத்தான் உங்கள் நினைவிற்கு வேறு யாராவது வருகின்றார்களா என கேட்டேன்.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
கோசான்... உங்கள் பார்வைக்கு, நீங்கள் அந்த நேரம் யாழ்.களத்தில் இல்லாததால்... வேறொரு பதிவில் பதிந்த எனது பதிவை... மீளப் பதிகின்றேன். இம்முறை யாழ்ப்பாணத்தில் மக்கள் தொகை குறைவு என்பதால்... ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களாக குறைத்து விட்டார்கள். //சென்ற பாராளுமன்றத்தில் இருந்த உறுப்பினர்களின் அடிப்படையில்.... திருகோணமலை மாவட்டம்: (4 இடங்கள்.) 2 முஸ்லீம், 1 தமிழ். (குகதாசன்.), 1 சிங்களம். மட்டக்களப்பு மாவட்டம்: (5 இடங்கள்.) 4 தமிழ், ( சாணக்கியன், கோவிந்தன் கருணாகரன், வியாளேந்திரன், பிள்ளையான்) 1 முஸ்லீம். யாழ்ப்பாண மாவட்டம்: (7 இடங்கள்) (அங்கஜன், சுமந்திரன், விக்னேஸ்வரன், ஸ்ரீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், டக்ளஸ் தேவானந்தா, சித்தார்த்தன். வன்னி மாவட்டம் : (6 இடங்கள்) 2 முஸ்லீம், 4 தமிழ்.(அடைக்கலநாதன், திலீபன், சாள்ஸ் நிர்மலநாதன், நோகராதலிங்கம்.) தேசியப் பட்டியல்: சுரேன் ராகவன், செல்வராசா கஜேந்திரன், தவராஜா கலை அரசன். திகாமடுல்ல எனப்படும் அம்பாறை மாவட்டத்தில்... (7 இடங்கள்) 4 முஸ்லீம், 3 சிங்களம். அங்கு தமிழர்கள் இரண்டு பேர் வரக் கூடிய சந்தர்ப்பம் இருந்தும்.... ஒற்றுமை இன்றி பிரிந்து நின்று பல தமிழ் கட்சிகளில் போட்டியிடுவதால், அங்குள்ள தமிழர்களின் வாக்குப் பிரிந்து ஒரு தமிழரும் வெல்ல முடியவில்லை என்பது சோகம். சென்ற பாராளுமன்றத்திற்கு வடக்கு கிழக்கில் இருந்து தேர்ந்து எடுக்கப் பட்டவர்கள் 16 பேர். தேசியப் பட்டியல் 3 பேர். மொத்தம் 19 பேர்.//
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
இதிலை 95 வீதமான ஆட்களுக்கு, இலங்கை தேர்தலில் வாக்களிக்க முடியாது. எல்லாரும் "பாரின் சிற்றிசன்" எடுத்து வைத்திருக்கின்ற ஆட்கள். 😃 ஈழப்பிரியன்... தற்போது களத்திற்கு வந்து போகும் உறுப்பினர்களின் பெயர் தவற விடப் பட்டிருந்தால் நீங்களே பதிந்து விடுங்கள். 🙂
-
முல்லைத்தீவுக்கு செல்லவுள்ள பிரதமர் – ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அகற்றம்
இந்த முறை... முல்லைத்தீவு தொகுதி தமிழ் கட்சிகளிடம் இருந்து பறி போகப் போகின்றது போலுள்ளது. ஜனாதிபதி தேர்தலிலேயே... பெருமளவான வாக்குகள் அனுரவுக்குத்தான் கிடைத்தது. இப்போ... பிரதமர் ஹரிணி அமரசூரியவும் அம் மக்களை குறி வைத்து தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளளார். தமிழரசு கட்சி... போன பஸ்ஸுக்கு, கை காட்டிக் கொண்டு நிற்கத்தான் லாயக்கு. 😂
-
லொஹான் ரத்வத்தவின் வீட்டில் இலக்கத் தகடுகள் இல்லாத கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
இவர்தான் சிறையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகளை பிஸ்டலை காட்டி சுடுவன் எண்டவர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ரத்வத்தையின் மகன் மகிந்தா குடும்பத்தின் வால் அவர்களின் படைத்தளபதிகளில் ஒருவர், அமைச்சரா இருந்தவர் தமிழர்கள் என்றாலே வெறுப்புடன் அலைபவர் குமார் பொன்னம்பலம் போன்ற தலைவர்களின் கொலைகளிலும் ஆளுக்கு பங்குண்டு என்று பேசப்பட்டது காலம் எப்பவும் ஒரு பக்கம் போகாது தானே … இப்ப ஆளை தூக்கி ஜெயில்ல போட்டாச்சு மோசடி குற்றச்சாட்டுகளுக்காக. Prashanthan Navaratnam
-
முல்லைத்தீவுக்கு செல்லவுள்ள பிரதமர் – ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அகற்றம்
முல்லைத்தீவுக்கு செல்லவுள்ள பிரதமர் – ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அகற்றம். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் தேசிய மக்கள் சக்தியின் முக்கிய நிகழ்வாக, “நாட்டைக் கட்டியெழுப்பும், நாம் ஒன்றாக திசைகாட்டிக்கு” எனும் கருப்பொருளில் மாபெரும் பொதுக்கூட்டம் நாளைமறுதினம் மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்திற்கு சிறப்பு அதிதியாக பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்து கொள்வதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பில் உள்ள பேருந்து தரிப்பிடம் நிகழ்விற்கான முக்கிய இடமாகத் தேர்வு செய்யப்பட்டு நிகழ்வை விளம்பரப்படுத்தும் பதாகைகள் மற்றும் போஸ்டர்கள் பரவலாக ஒட்டப்பட்டு காணப்படுவதோடு குறித்த பகுதியினை புதுக்குடியிருப்பு பிரதேச சபையினர் ஜே.சி.பி வாகனம் மூலம் துப்பரவு செய்யும் பணி தற்போது நடைபெற்றன. இந்நிலையில், தேசியமக்கள் சக்தியின் பொதுக்கூட்ட நிகழ்வை விளம்பரப்படுத்தும் முகமாக பதாகைகள் மற்றும் போஸ்டர்கள் தேர்தல் விதிமுறையினை மீறி காணப்படுவதாக ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்காவினுடைய (Tisl) தேர்தல் கண்காணிப்பாளர்களால் முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டதனை தொடர்ந்து குறித்த இடத்திலிருந்து பதாதைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. புதுக்குடியிருப்பு பேருந்து நிலையத்தில் நிகழ்வை விளம்பரப்படுத்தும் பதாகைகள் மற்றும் போஸ்டர்கள் பரவலாக ஒட்டப்பட்டு இருந்ததனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்காவினுடைய (Tisl) தேர்தல் கண்காணிப்பாளர்களால் முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டதனை தொடர்ந்து நேரடியாக வந்த அதிகாரிகள் மற்றும் பொலிஸார் குறித்த பதாகைகளை உடனடியாக அகற்றியிருந்தார்கள். https://athavannews.com/2024/1406884
-
40 கிலோ மீட்டர் தூரத்தை 5 நிமிடத்தில் கடக்கும் பறக்கும் ஏர் டாக்ஸி பெங்களூரில் அறிமுகம்
சைக்கிள் காப்பில்... ஆட்டோ ஓடுவது போல, மோட்டார் சைக்கிளில்... "வீலிங்" செய்வது போல.. விமான டாக்சி மூலம் வானத்தில் இருந்து... குத்துக்கரணம் அடித்து, சாகசம் காட்டி... பொது மக்களை மகிழ்விக்கலாம். 😂 புதிய சினிமாப் படங்கள் வெளியிடும் போது... அந்த நடிகரின் கட் அவுட்டுக்கு... வானத்தில் இருந்து பால் ஊத்தி கொண்டாடலாம். 🤣
-
லொஹான் ரத்வத்தவின் வீட்டில் இலக்கத் தகடுகள் இல்லாத கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
இந்த எருமை தானே... அமைச்சு பதவியில் இருக்கும் போது, முழு வெறியில் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு துப்பாக்கியுடன் சென்று, தமிழ் கைதிகளை முழங்காலில் இருக்கச் செய்து, தனது துப்பாக்கியை காட்டி சுட்டுக் கொன்று விடுவேன் என்று மிரட்டல் விடுத்தது. மேல் நாட்டில்... அப்படி வாயாலோ, செய்கையாலோ கொலைக்கான எச்சரிக்கை விடுத்தால்... கொலை செய்ய எத்தனித்த வழக்காக பதிவு செய்யப் படும். காலம் எவ்வளவு விசித்திரமானது. நீ செய்ததை, உனக்கே திருப்பி அடிக்கும். வினை விதைத்தவன்... வினையைத்தான் அறுவடை செய்வான்.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
கணிப்புத்தானே... எப்படியும் இருக்கலாம், ரசோதரன். ஆனால்... நிஜம் வேறாக இருக்கும் என்பது என் கணிப்பு. சுமந்திரன் வென்றாலும், தோற்றாலும்... வெடி கொளுத்தி கொண்டாட இரண்டு குரூப், வெகு ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கு. 🤣
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
நன்றி ரசோதரன். 👍 உங்களுடைய கணிப்பு எப்படி இருக்கும் என்று பார்க்க ஆவலாக உள்ளது. 🙂
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
@நிலாமதி, @யாயினி, @nilmini, @Kavallur Kanmani, @தமிழினி, @வல்வை சகாறா, @கறுப்பி, @பெருமாள், @alvayan, @ரசோதரன், @ஈழப்பிரியன், @நீர்வேலியான், @நியாயம், @விசுகு, @goshan_che, @Ahasthiyan, @nedukkalapoovan, @குமாரசாமி, @nochchi, @satan, @Sasi_varnam, @putthan, @உடையார், @Sabesh, @valavan, @Kapithan, @Justin, @Kavi arunasalam, @நிழலி, @nunavilan, @புங்கையூரன், @இணையவன், @மோகன், @நீர்வேலியான், @Sabesh, @Paanch, @பாலபத்ர ஓணாண்டி, @ஏராளன், @நந்தன், @சுப.சோமசுந்தரம், @ராசவன்னியன், @புரட்சிகர தமிழ்தேசியன், @வாலி, @புலவர், @Eppothum Thamizhan, @MEERA, @விளங்க நினைப்பவன், @ரஞ்சித், @பிரபா, @கந்தப்பு, @வாதவூரான், @island, @நன்னிச் சோழன், @தனிக்காட்டு ராஜா, @colomban, @பகிடி, @பசுவூர்க்கோபி, @uthayakumar, @kandiah Thillaivinayagalingam, @theeya, @kalyani, @முதல்வன், @P.S.பிரபா, @Maruthankerny, @ரதி, @vanangaamudi யாழ்கள இலங்கை பாராளுமன்ற போட்டியில் கலந்து கொள்ள இன்னும் 12 நாட்களே உள்ளன. உங்கள் கணிப்பையும் பதிந்து, உங்கள் அரசியல் அறிவை பரீட்சித்துப் பார்க்க அரிய சந்தர்ப்பம். அரசியலில்.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு இருக்கலாம். ஆனால்.... யாழ். களத்தில் ஒரு போட்டி என்று வரும் போது... எல்லோரும் கலந்து கொண்டு சிறப்பிப்பதே, யாழ்.களத்துக்கு நாம் செய்யும் கௌரவம். தாமதிக்காமல் இன்றே கலந்து கொள்ள, உங்களை அன்புடன் அழைக்கின்றோம். 🙂
-
34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்
மிக அருமையான கருத்துக்கள் வளவன். ✔️ 👍 வாய் விட்டு சிரித்தேன். 😂 சுமந்துக்கு யாரோ... வெளி நாட்டில் தன்னை நினைக்கின்றார்கள் என்று மூக்கு உழைந்திருக்கும். 😂 நாளைக்கு... என்ன, கோமாளி கூத்து ஆடப் போகிறாரோ என்று எங்களுக்குத்தான் வயித்தை கலக்குது. 🤣