Everything posted by தமிழ் சிறி
-
பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு 71 தடவைகள் அழைப்பு!
பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு 71 தடவைகள் அழைப்பு! கடந்த 2018 ஆம் ஆண்டு 52 நாள் ஆட்சி கவிழப்பு சூழ்ச்சியின்போது பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு 71 தடவை அழைப்பு விடுத்த போதும் அதனை நிராகரித்திருந்தாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் ஏழாவது மக்கள் வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று மாலை மீரிகம நகரில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே சஜித் பிரேமதாச மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நான் சந்தர்ப்பவாத அரசியலை பின்பற்றுவதில்லை. 2018 ஆம் ஆண்டு 52 நாள் சூழ்ச்சியின் போது பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு 71 தடவைகள் அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அந்த அழைப்பை நான் நிராகரித்திருந்தேன். அந்தப் பிரதமர் பதவிக்காக மக்கள் எனக்கு வாக்கு அளிக்கவில்லை. எனவே சந்தர்ப்பவாத பெருச்சாளித்தன அரசியலை மேம்படுத்தி பதவிகளின் பின்னால் செல்வதற்கு எனக்கு விருப்பமில்லை. அந்தக் கொள்கையினால் தான் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் பதவியை பொறுப்பேற்க்குமாறு கூறிய போதும் அதனை நான் நிராகரித்தேன். அவ்வாறு அந்த சந்தர்ப்பத்தில் சென்று இருந்தால் இந்த நாட்டை சூறையாடி, வளங்களையும் பணத்தையும் திருடிய திருடர்களின் ஒன்றாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். திருடர்களை பாதுகாக்கின்ற வாசல் காவலாளியாகவும் இருந்திருப்பேன். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொறுப்புகளின் ஊடாகவும் பணத்துக்காகவும் சோரம் போவதற்கு நான் தயார் இல்லை. எந்த ஒரு பிரபலமான பதவியாக இருந்தாலும் எவ்வாறான முன்மொழிவுகளை முன் வைத்தாலும் பொதுமக்களை மையப்படுத்திய அரசியலில் இருந்து விலகி செயல்படபோவதில்லை. சஜித் பிரேமதாச ஆகிய என்னையும் எனது குழுவையும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் விலை பேச முடியாது. முழு நாடும், மலை போல் இருக்கும் கடனுக்குள் சிக்கி இருக்கிறது. மக்களின் வாழ்க்கைத் தரம் சுருங்கி இருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில், பல சிரமங்களை எதிர்கொண்டுள்ள 220 இலட்சம் மக்களை அந்தத் துன்பத்திலிருந்து மீட்டெடுத்து அவர்களை வளப்படுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்கும்” இவ்வாறு சஜித் பிரேமதாச தெரித்துள்ளார். https://athavannews.com/2024/1396479
-
காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையில் சேவையில் ஈடுபடவுள்ள “சிவகங்கை” கப்பல்
நாகப்பட்டினம் -காங்கேசன்துறை கப்பல் சேவை தொடர்பில் புதிய அறிவிப்பு! நாகப்பட்டினத்திற்கும், காங்கேசன்துறைக்குமான பயணிகள் கப்பல் சேவை வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது எதிர்வரும் 31ஆம் திகதி வரையில் இந்த நடைமுறை காணப்படும் எனவும், பயணிகள் வருகை அதிகரிப்பின் அடிப்படையில், எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி முதல் நாளாந்தம் கப்பல் சேவையை முன்னெடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது இதற்கமைய, வாரத்தில் செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று தினங்களில் மாத்திரமே நாகப்பட்டினத்திற்கும், காங்கேசன்துறைக்குமான பயணிகள் கப்பல் சேவை முன்னெடுக்கப்படும். https://athavannews.com/2024/1396486
-
தீவிரமடைந்து வரும் மக்கள் போராட்டம்: வெனிசுலாவில் பதற்றம்
ஈழப்பிரியன்... அவர்கள், குழப்படி ஆட்களா?
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- அர்ஜுனன் மகேந்திரனை சட்டத்தின் முன் நிறுத்துவேன்! -அநுர
சிங்களவர்களில் கை வைக்க மாட்டார்கள். ஒரு பேச்சுக்கு சொன்னாலும், விழுகின்ற வாக்கும் புட்டுக் கொண்டு போகும் என்று அவருக்கு தெரியும்.- வெடிகுண்டு தாக்கப்பட்ட காருடன் வந்த பொன்சேகா
அனுதாப ஓட்டு எடுக்க முயற்சி பண்ணுகின்றார். அவர் மறியலில்… கையில் தட்டும், அரைக் கால்சாட்டையுடன் சாப்பாட்டுக்கு வரிசையில் நின்ற போது வராத அனுதாபம் இதுக்கா வரப் போகுது. 😂- உங்கள் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்.
முதலில் இந்தப் படத்தைப் பார்த்தபோது இதன் அர்த்தம் புரியவில்லை... ஒரு சிறிய துவாரத்தில் பாம்பின் வால் வெளியே நீட்டிக்கொண்டிருப்பதை ஒரு பூனை பார்ப்பதாகவும், அது எலியின் வால் என்று நினைத்துக்கொண்டு வெளியே வரும் வரை அந்த வாலை இழுக்க முயற்சி செய்ததாகவும் தெரிகிறது... . பிறகுதான் புரிந்தது... இந்த புகைப்படம் இத்தாலியின் பிரபல ஓவியர் மார்கோ மெல்கிராட்டியின் படைப்பு, அவரது ஓவியத்தின் பொருள்: "யாருடன் விளையாடுகிறீர்கள் என்று தெரியாமல், அபாயத்தை தொடுகிறீர்கள், ஏனென்றால் அறியாமை, பணத்தை நோக்கிய தேடல், விரைவான தீர்வுகளை நாடுதல், பொறுமையின்மை போன்ற குணங்களால் இன்று நாம் சூழப்பட்டுள்ளோம்." இன்றைய வேகமான மற்றும் பிஸியான வாழ்க்கையில், நாம் காண்பது உண்மையின் ஒரு சிறிய பகுதியை மட்டுமே.... நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம் ?? சுகாதார நிலைமைகளை, நமது ஆரோக்கியத்தை எலியின் வால் என்று நாம் கருதுகிறோம் & சுவருக்குப் பின்னால் இருப்பது உண்மையான நாகப்பாம்பு என்று ஒருபோதும் யூகிக்க மாட்டோம். எனவே உங்கள் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுங்கள். உங்கள் உடல்நிலையை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள். நாகப்பாம்பின் வாலை எலி வாலாகக் கருதி விளையாட்டாக இருக்காதீர்கள். எப்போதுமே, வாழ்க்கை முக்கியமானது, ஆரோக்கியம் அதைவிட முக்கியமானது. இந்தப் படத்தை நினைவில் கொள்ளுங்கள்: நீங்கள் முழு படத்தையும் பார்க்க முடியாது. முழுப் படத்தையும் பார்க்க முடிந்தால், நாம் சிறியது என்று நினைப்பது உண்மையில் நம்மை விடப் பெரியது என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். எனவே உங்கள் உடல்நிலையை கவனித்து ஆரோக்கியமாக இருங்கள். Usha Ravikumar- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- விமல் தரப்பினர் நல்லூர் கந்தனை வழிபட்டனர்
அத்துடன்...கோவிலுக்கு, கறுப்புக் கண்ணாடியும் போட்டுக் கொண்டு வந்திருக்குது.- அர்ஜுனன் மகேந்திரனை சட்டத்தின் முன் நிறுத்துவேன்! -அநுர
அர்ஜுனன் மகேந்திரனை சட்டத்தின் முன் நிறுத்துவேன்! -அநுர நான் தேர்தலில் வெற்றிபெற்றால், மத்திய வங்கியில் நிதி மோசடி செய்துவிட்டு சிங்கப்பூரில் தலைமறைவாகியுள்ள அர்ஜுன மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வந்து சட்டத்தின் முன் நிறுத்துவேன் ”என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க வாக்குறுதியளித்துள்ளார். கிரிபத்கொட பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு உறுதியளித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” அனுராதபுரத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது ரணில் விக்கிரமசிங்க என்னை அவமதித்து பேசினார். அநுர இதற்கு பதிலளியுங்கள் என ரணில் கூறும் பொழுது அவரது வார்த்தை தவறியதை அனைவரும் அவதானித்திருந்தனர். மேலும் நாங்கள் அவரை அவமதிக்க விரும்பவில்லை. தேசிய மக்கள் சக்தியில் இருந்து இந்த நாட்டை ஆள்வதற்கு யார் இருக்கின்றனர் என ரணில் உட்பட அனைவரும் கேட்கின்றனர். ஏனைய கட்சிகளிலும் யார் இருக்கின்றனர்? நான் ஒரு பதில் தருகிறேன். மத்திய வங்கி மோசடி தொடர்பில் நீதிமன்றினால் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள, சிங்கப்பூருக்கு தப்பிச் சென்ற அர்ஜுன மகேந்திரா இலங்கைக்கு அழைத்து வரப்படுவார். மத்திய வங்கிக்கு பொறுப்பான அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தான் இந்த கொடுக்கல் வாங்கலுக்கு ஆலோசனை வழங்கியதாக கோப் குழுவிடம் அர்ஜூன மகேந்திர பதில் அளித்தார். அர்ஜுனன் மகேந்திரனை அழைத்து வருவதே எனது முக்கிய வேலை. இதை வாய்வார்த்தையில் கூறாது செயலில் காண்பிக்க விரும்புகிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1396387- ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் முதன்முறையாக சட்டமன்ற தேர்தல்!
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் முதன்முறையாக சட்டமன்ற தேர்தல்! இந்தியா – ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த 370 சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக அங்கு சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, அடுத்த மாதம் 3 ஆம், 10 ஆம் மற்றும் அக்டோபர் முதலாம் திகதி என மூன்று கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அக்டோபர் 4 ஆம் திகதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளதுடன், ஜம்மு-காஷ்மீர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட போவதாக பாஜக அறிவித்துள்ளது. https://athavannews.com/2024/1396362- தீவிரமடைந்து வரும் மக்கள் போராட்டம்: வெனிசுலாவில் பதற்றம்
தீவிரமடைந்து வரும் மக்கள் போராட்டம்: வெனிசுலாவில் பதற்றம். வெனிசுலாவில் கடந்த மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் நிக்கலோஸ் மதுரோ வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று வெனிசுலா தலைநகரில் அதிகளவான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு மேலும் அதிகரித்துள்ளது. வெனிசுலாவில் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் சர்ச்சைக்குரிய வெற்றிக்கு எதிராக வெனிசுலா முழுவதும் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் மக்களுடன் இணைந்து போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளனர். நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ தலைமறைவாக இருந்த நிலையில் தற்போது ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களுடன் இணைந்து போராட்டங்களை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் வெனிசுலா தலைநகரில் இருந்து வெளியேறப்போவதில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ குறிப்பிட்டுள்ளார். மக்களை திரட்டி நாட்டில் கிளர்ச்சியை ஏற்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டுள்ள மதுரோவின் ஆதரவாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பொலிஸாரும் இராணுவமும் சம்பவ இடத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த மாதம் வெனிசுலாவில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்ற நிலையில் நிக்கலோஸ் மதுரோ வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. தேர்தலில் 51.02 வீத வாக்குகளை மதுரோ பெற்றுள்ளதுடன் அவரை எதிர்த்து போட்டியிட்ட பிரதான வேட்பாளர் 44.02 வீத வாக்குகளை பெற்றுள்ளதாக அந்நாட்டு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தது. எனினும் வாக்குகளை எண்ணுவதில் மோசடி இடம்பெற்றுள்ளதாக எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியிருந்தது. மேலும் ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டுள்ள நிக்கோலஸ் மதுரோவின் வெற்றியை அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் ஏற்காத நிலையில் மதுரோவுக்கு ரஷ்யா, சீனா, கியூபா உள்ளிட்ட நாடுகள் வாழ்த்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1396391- கருத்து படங்கள்
- ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 39 வேட்பாளர்களின் பெயர் பட்டியல்!
- நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிப்போம்!
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிப்போம்! தான் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை முற்றாக ஒழிக்கப்படுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் நான்காவது வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ருவன்வெல்ல தெஹியோவிட்ட பிரதேச சபை மைதானத்தில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் உரையாற்றிய போதே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இந்த நாட்டை அடி பாதாளத்துக்குள் தள்ளிய ராஜபக்ஷாகளுக்கு பிரதான பாதுகாவலராக இந்த நாட்டின் ஜனாதிபதி இருந்து வருகிறார். நான் இந்த ஜனாதிபதி கதிரைக்கு மக்களின் வாக்குகளாலே தெரிவு செய்யப்பட வேண்டும். இந்த நாட்டின் உரிமையாளராக அன்றி தற்காலிக பொறுப்பாளராக பொது மக்களின் சேவகனாக இருந்து திருடர்களால் திருடப்பட்ட நாட்டின் சொத்துக்களை மீண்டும் நாட்டுக்கு பெற்றுக் கொடுப்பேன்” இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1396322- விமல் தரப்பினர் நல்லூர் கந்தனை வழிபட்டனர்
வந்தவர்களும் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்ற இனவாத ஊத்தைவாளிகள் தானே.- இரசித்த.... புகைப்படங்கள்.
யாராய் இருக்கும். சில வேளை நம்ம @வீரப் பையன்26 கிரிக்கெட் பார்க்கிறாரோ… 😂- நம்பிக் கெட்டோம்
சில காலத்திற்கு முன் பார்த்த காணொளி ஒன்றில்… கனடாவில் இருந்து சென்ற தமிழ் தொழிலதிபர் ஒருவர், மண்டைதீவில் பெரும் உல்லாச விடுதி ஒன்று கட்டி, பலருக்கு வேலை வாய்ப்பு கொடுக்க ஆயத்தமான போது… நமது தமிழ் அரசியல்வாதி ஒருவர் 10% லஞ்சமாக கேட்டாராம். அத்துடன் அவர் வெறுத்து… தனது திட்டத்தை சிங்களப் பகுதிக்கு மாற்றி, வெற்றிகரமாக இயங்கிக் கொண்டு இருக்கின்றது. வேறு பலரும் தாயகத்துக்கு உதவி செய்ய வந்த போது… சில தமிழ் எம்.பி.க்கள் கமிஷன் கேட்டு வெறுப்பேற்றியதாக சொன்னார்கள்.- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்கலாம் வாங்க
- காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தினால் யாழ். மாவட்டத்தில் விசாரணை!
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணை வடமாகாணத்தில் இன்று. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகள் 2 ஆவது நாளாக வடமாகாணத்தில் இன்றும் இடம்பெற்றுள்ளது. இதன்படி யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் இன்று இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்த குறித்த நடவடிக்கையின்போது கரவெட்டி, பருத்தித்துறை, மருதங்கேணி பிரதேச செயலகங்களை உள்ளடக்கியதாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் ,சங்கானை, காரைநகர், நல்லூர், சாவகச்சேரி, சண்டிலிப்பாய், நெடுந்தீவு, ஊர்காவற்துறை, வேலணை ஆகிய பிரதேச செயலகங்களை உள்ளடக்கியவாறு விசாரணைகள் இடம்பெற்றுள்ளது. 2000 ஆம் ஆண்டிற்கு பின்னர் காணாமல் போனோர் தொடர்பாக காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நபர்களின் குடும்பங்களுக்கான விசாரணைகள் இன்று மாலை மணிவரை முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் காணாமல்போனவர்கள் தொடர்பாக இதுவரை பதிவு அலுவலகத்தில் பதிவுகளை மேற்கொள்ளாதவர்கள் இன்றைய தினம் பதிவுகளை மேற்கொள்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது, குறிப்பாக 2009 ஆம் ஆண்டு யுத்தசூழ்நிலையி;ன் போது காணாமல்போனவர்கள் மற்றும் குறித்த காலகட்டத்தில் நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலைகாரணமாக காணாமல் போனவர்கள்தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு பதிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1396297- பொதுக் கட்டமைப்பும் மூன்று கட்சிகளும்! நிலாந்தன்.
பொதுக் கட்டமைப்பும் மூன்று கட்சிகளும்! நிலாந்தன். தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மூன்று கட்சிகள் ஜனாதிபதியையும் எதிர்க்கட்சி தலைவரையும் சந்தித்திருக்கின்றன. ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியப் பொதுக்கூட்டமைப்புச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அழைப்பு விடுத்தார்கள். கட்டமைப்பாக அழைக்கவில்லை. ஆனாலும் கட்டமைப்பில் உள்ள பெரும்பாலானவர்களை அழைத்தார்கள்.ஆனால் பொதுக் கட்டமைப்பாக அழைக்கிறோம் என்று அழைப்பில் குறிப்பிடப்படவில்லை. எதற்காக அழைக்கிறோம் என்றும் இரு தரப்புமே கூறவில்லை. இதில் மக்கள் அமைப்பின் பிரதிநிதிகள் ஏழு பேர்களும் மேற்படி இரண்டு சந்திப்புகளுக்கும் செல்லவில்லை. தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகள் செல்லவில்லை. ஆனால் மூன்று கட்சிகள் சென்றன. அவை தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் பிரதிநிதிகளாக அங்கே செல்லவில்லை. ஆனாலும் அவர்கள் அவ்வாறுதான் சென்றார்கள் என்று வெளியில் நம்பப்படுகின்றது. ஏனென்றால் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவரும் பொதுக் கட்டமைப்பை ஒரு கட்டமைப்பாக அணுகவில்லை என்றாலும் கூட, அது பொதுக் கட்டமைப்பு என்பதற்காகத் தான் அந்த அழைப்பு விடுக்கப்பட்டது. இதை இன்னும் ஆழமான பொருளில் சொன்னால் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் நிறுத்தும் பொதுக் கட்டமைப்பை அவர்கள் அழைத்தார்கள். தமிழ் பொது வேட்பாளர் அவர்களுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியதே அதற்குக் காரணம். எனவே அந்த இரண்டு அழைப்புகளும் வெளிப்படையாக பொதுக் கட்டமைப்புக்கு என்று கூறப்படாவிட்டாலும், பொதுக் கட்டமைப்பை நோக்கியவை தான். இந்த அடிப்படையில் சிந்தித்தால், அந்த மூன்று கட்சிகளும் அந்த இரண்டு சந்திப்புகளுக்கும் போயிருக்கக் கூடாது.ஆனால் அதற்கு அவர்கள் கூறும் விளக்கம் என்ன ? நாட்டில் உள்ள கட்சிகள் என்ற அடிப்படையில், நாட்டின் தலைவர் ஓர் அழைப்பை விடுக்கும் பொழுது சென்று சந்திப்பதுதான் அரசியல் நாகரீகம் என்று கூறப்படுகிறது. தவிர, நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி அழைக்கும் பொழுது அவர்கள் சென்று சந்திப்பது இயல்பானது. இம்மூன்று கட்சிகளில் இரண்டு கட்சிகளிடம் மொத்தம் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்டு. எனவே அந்த அடிப்படையில் மேற்படி சந்திப்புகள் இடம்பெற்றதாக ஒரு விளக்கம் தரப்படுகின்றது. பொதுக் கட்டமைப்பின் ஊடக அறிக்கை ஒரு பொதுக் கட்டமைப்பாக அந்த சந்திப்பில் தாங்கள் பங்குபற்றப் போவதில்லை என்று தெளிவாகக் கூறிவிட்டது. மூன்று கட்சிகளும் பொதுக் கட்டமைப்பின் சார்பாகத் தங்கள் பங்குபற்றியதாகத் தெரிவிக்கவில்லை. ஆனால்,பொதுக் கட்டமைப்பை விமர்சிப்பவர்கள் பொது வேட்பாளர் விமர்சிப்பவர்கள் அவ்வாறுதான் வியாக்கியானம் செய்கின்றார்கள். பொதுக் கட்டமைப்பு உடைந்து விட்டது, பொதுக் கட்டமைப்புக்குள் ஐக்கியம் இல்லை, அந்த மூன்று கட்சிகள் கூட்டுப் பொறுப்பின்றி நடந்து கொண்டு விட்டன,பொதுக் கட்டமைப்பில் உள்ள மக்கள் அமைப்புக்கும் கட்சிகளுக்கும் இடையில் உருகிப் பிணைந்த கூட்டு உருவாகவில்லை… என்றெல்லாம். விமர்சனங்கள் வருகின்றன முதலில் ஒன்றை தெளிவுபடுத்த வேண்டும். கட்சிகளும் மக்கள் அமைப்பும் இணைந்து உருவாக்கிய கட்டமைப்பு தமிழ்த் தேசிய வரலாற்றில் ஒரு புதிய தோற்றப்பாடு.அவ்வாறு ஒரு கட்டமைப்பை உருவாக்கும் பொழுது அதற்கென்று ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கை எழுதிக் கொண்டமையும் ஒரு புதிய தோற்றப்பாடுதான்.கடந்த 15 ஆண்டுகளாக பலரும் எதிர்பார்த்த;எழுதி வந்த ஒன்று.அது இப்பொழுது ஏறக்குறைய ஒரு மாதக் குழந்தைதான்.அதில் பலவீனங்கள் உண்டு.அங்கே தவறுகள் நடக்கும்.அங்கே முழுமையான கூட்டுப் பொறுப்பை, உருகிப் பிணைந்த இணைப்பை எதிர்பார்க்க முடியாது.அதைப் படிப்படியாகத்தான் ஏற்படுத்தலாம்.இவ்வாறு கட்சிகளையும் மக்கள் அமைப்பையும் இணைத்து ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது? ஏனென்றால் தமிழர் அரசியலில் எல்லாமே சிதறிப் போய் இருக்கின்றன என்பதனால்தான், தமிழரசியலின் சீரழிவு காரணமாகத்தான் அவ்வாறு ஒரு கட்டமைப்பு தேவைப்பட்டது.தமிழரசியல் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக சீரழிந்து வருகிறது. தமிழ்க் கட்சிகளை ஐக்கியப்படுத்துவதற்காக குடிமக்கள் சமூகங்கள் இன்று நேற்று உழைக்கவில்லை.கடந்த 15 ஆண்டுகளாக உழைத்து வருகின்றன.மறைந்த முன்னாள் மன்னார் ஆயரின் தலைமையில்,தமிழ் சிவில் சமூக அமையத்தில் இருந்து தொடங்கி இப்பொழுதுள்ள பொதுமக்கள் சபை வரையிலும் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் அரசியல் செயற்பாட்டாளர்களும் இந்தக் கட்சிகளை ஒன்றிணைப்பதற்காக விடாமல் முயற்சித்து வருகிறார்கள்.அதில் தற்காலிக வெற்றிகளை அவர்களால் பெற முடிந்திருக்கிறதே தவிர நிரந்தர வெற்றிகளைப் பெற முடியவில்லை. இவ்வாறான ஒரு துர்பாக்கியமான அரசியல், சிவில் சமூகப் பின்னணியில், இப்பொழுது உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு மாதக் குழந்தையாகிய தமிழ்த் தேசியப் பொது கட்டமைப்பும் ஒரு தற்காலிக வெற்றியாக மாறிவிடக்கூடாது என்ற கரிசனை குடிமக்கள் சமூகங்களுக்கு மட்டுமல்ல எல்லாத் தமிழ் மக்களுக்கும் இருக்க வேண்டும். ஏனென்றால் ஒற்றுமையைத் தவிர தமிழ் மக்களுக்கு வேறு தெரிவு கிடையாது. ஒற்றுமை சிதைந்தால் அதை விட்டுவிட்டு வேறு ஒன்றை யோசிக்கலாம் என்று கூறுவதற்கு வேறு தெரிவே கிடையாது. தமிழ் மக்கள் ஒன்றுசேரத் தவறினால் தமிழ்க் கட்சிகளை ஒரு மையத்தில் ஒன்றிணைக்கத் தவறினால்,அது அடுத்தடுத்த தேர்தல்களில் எதிரொலிக்கும் என்பதை விடவும் ஆபத்தான விடயம் என்னவென்றால், தமிழ் மக்கள் ஒரு தூர்ந்து போகும் சமூகமாக மாறிவிடுவார்கள் என்பதுதான். எனவே தமிழ்ச் சமூகம் தூர்ந்து போய் ஒரு தேசமாக இல்லாமல் சிதறிப் போவதற்கு அனுமதிக்க முடியாது.அந்த அடிப்படையில் சிந்தித்தால் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள எல்லா அரசியல் சக்திகளையும் தரப்புகளையும் ஐக்கியப்படுத்துவதுதான் ஒரே வழி. ஐக்கியம் இல்லையென்றால் தமிழ்த் தேசியமே இல்லை என்ற ஒரு விளிம்பில் இப்பொழுது தமிழ் அரசியல் வந்து நிற்கின்றது. அந்த அடிப்படையில்தான் ஒரு பொதுக் கட்டமைப்பு யோசிக்கப்பட்டது. தேசம் என்பது ஒரு பெரிய மக்கள் திரள். தேசியவாத அரசியல் எனப்படுவது மக்களை ஆகக்கூடிய பெரிய திரளாகக் கூட்டிக்கட்டுவது. அவ்வாறு மக்களை ஒரு பெரிய திரட்சியாகக் கூட்டிக்கட்டுவது என்று சொன்னால், அந்த மக்கள் மத்தியில் வேலை செய்யும் அரசியல் செயற்பாட்டாளர்களையும் கட்சிகளையும் கூட்டிக்கட்ட வேண்டும். அவ்வாறு கூட்டிக்கட்டத் தவறினால் தமிழ்ச் சமூகம் இப்பொழுது இருப்பதை விடவும் கேவலமான,பாரதூரமான விதத்தில் தூர்ந்து போய்விடும்.அவ்வாறு தூர்ந்து போகக்கூடாது என்பதற்காகத்தான் பொதுக் கட்ட்டமைப்பு.எனவே பொதுக் கட்டமைப்பு உடைய வேண்டும் என்று உழைப்பவர்கள் வெற்றி பெற்று விடக்கூடாது. தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் திரள்வதை விரும்பாத சக்திகள் பொதுக் கட்டமைப்பு உடைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்கள்; விரும்புகிறார்கள்;அதற்காகக் காத்திருக்கிறார்கள்.அவர்களுக்கு வெற்றியைக் கொடுக்கும் விதத்தில் ஒரு மாதக் குழந்தையான பொதுக் கட்டமைப்பை மேலும் பலவீனப்படுத்த வேண்டுமா? அல்லது தமிழ் குடிமக்கள் சமூகங்கள் மேலும் தீவிரமாக,தீர்க்கதரிசனமாக;அர்ப்பணிப்போடு செயல்பட வேண்டியிருப்பதை அது காட்டுகின்றதா? ஏனென்றால் இந்த இடத்தில் மனம் தளர்ந்தால்,இந்த இடத்தில் சோர்வடைந்தால், பிறகு தமிழ் ஐக்கியத்தைக் கட்டியெழுப்ப எத்தனை ஆண்டுகள் செல்லும்? ஏற்கனவே தமிழ் மக்கள் பேரவை தோல்வியுற்ற பின் எட்டு ஆண்டுகள் சென்றன இப்படியொரு கட்டமைப்பை உருவாக்க.ஆரம்ப காலத்தில் ஏற்பட்டிருக்கும் சிறிய சறுக்கல்கள், தளம்பல்கள் போன்றவற்றை பொருட்படுத்தி பலவீனமான ஒரு ஐக்கியத்தை உடைப்பதா? அல்லது அதனை மேலும் பலப்படுத்தி உடைக்கப்பட முடியாத ஒன்றாக உருகிப் பிணைந்த ஒன்றாக வளர்த்தெடுப்பதா? என்ற கேள்விக்கு விடை முக்கியம்.தத்துவ ஞானி ஹெகல் கூறுவார் “வரலாற்றிலிருந்து நாம் கற்றுக்கொண்டது எதையென்றால்,நாம் வரலாற்றிலிருந்து எதையுமே கற்றுக் கொள்ளவில்லை என்பதைத்தான்.இது தமிழ் அரசியலுக்கு குறிப்பாக பொதுக் கட்டமைப்புக்கும் பொருந்தும். அரசற்ற சிறிய ஒரு மக்கள் கூட்டம் எதிர்த் தரப்பு விரும்புவதை செய்ய வேண்டுமா அல்லது செய்யக் கூடாதா? https://athavannews.com/2024/1396287- கருத்து படங்கள்
- வாக்காளருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகை? – பிரதான வேட்பாளா்கள் கோாிக்கை!
வாக்காளருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகை? – பிரதான வேட்பாளா்கள் கோாிக்கை! ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர் ஒருவருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகை 1000 ரூபா வரை வழங்கப்பட வேண்டுமென பிரதான வேட்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இது தொடர்பான முன்மொழிவுகள் குறித்த இறுதித் தீர்மானம் எதிர்காலத்தில் வர்த்தமானியில் வெளியிடப்படும் எனவும்; அவர் கூறியுள்ளார். தேர்தல் செலவு ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி, வேட்புமனுக்கள் பெறப்பட்ட 5 நாட்களுக்குள் ஒரு வாக்காளருக்குச் செலவிடப்படும் அங்கீகரிக்கப்பட்ட தொகை வர்த்தமானியில் வெளியிடப்பட வேண்டும் எனவும், அது குறித்து முடிவெடுப்பதற்காக வேட்பாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கும் இடையில் தேர்தல்கள் ஆணைக்குழு வளாகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்காக ஒவ்வொரு வேட்பாளரும் செலவிட்ட தொகை தொடர்பான அறிக்கையை ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த 20 நாட்களுக்குள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் வழங்குப்பட வேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக ஒரு வேட்பாளருக்கு அதிக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு உரிய நிறுவனத்திற்கு அறிவித்தல் விடுத்துள்ளது. தேர்தல் காலத்தில் பல்வேறு நன்கொடைகள் செய்து வாக்களிக்க முயற்சிப்பதன் மூலம் வாக்காளர் அவமானப்படுத்தப்படுவதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. https://athavannews.com/2024/1396259- நம்பிக் கெட்டோம்
சம்பந்தரும்... நம்பிக் கெட்டோம், ஏமாற்றி விட்டார்கள் என்று கடைசி காலத்தில் சொல்லி விட்டு... செத்துப் போனார். இப்போ.. ஸ்ரீதரனும் அதையே சொல்கிறார். இதற்குள்... சுமந்திரனும், ரணில்... வாக்குறுதி தந்துள்ளதாக சொல்லிக் கொண்டு திரிகிறார். நடந்த சம்பவங்களில் இருந்து, பாடம் கற்க வேண்டாமா? உங்களது அணுகு முறையை மாற்றாமல்... வருகின்ற எல்லாரும் இதையே சொல்லிக் கொண்டு இருக்கவா உங்களை பாரளுமன்றம் அனுப்பினார்கள். மக்கள் உங்கள் மீது... பயங்கர வெறுப்பில் இருக்கின்றார்கள். இப்படியே... போனால், செல்லாக் காசு ஆகி விடுவீர்கள் என்பதை மறக்க வேண்டாம். - அர்ஜுனன் மகேந்திரனை சட்டத்தின் முன் நிறுத்துவேன்! -அநுர
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.