Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. பொலிஸ் மா அதிபா் விவகாரம் – நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை அவசியம் – பிரதமா் தினேஸ்! தற்போது பதவியிலிருக்கும் பொலிஸ் மா அதிபரை பதவியிலிருந்து விலக்க, நாடாளுமன்றத்தில் பிரேரணையொன்றை கொண்டுவந்து பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற வேண்டும் என பிரதமர் தினேஸ் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளாா். நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவா் இதனைத் தொிவித்தாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில், பொலிஸ் மா அதிபராக கடமையாற்றியவர், பாதுகாப்பு மற்றும் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கி வந்தார். இந்தநிலையில், கடந்த 25 ஆம் திகதி உயர்நீதிமன்றமானது, பொலிஸ் மா அதிபருக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான அடுத்த அமர்வு நவம்பர் 11 ஆம் திகதி நடைபெறும் என்றும் திகதி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், நவம்பர் மாதம் என்பது ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து ஒருமாதம் கடந்து இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். புதிய ஜனாதிபதி பதவியேற்கும் காலத்தில்தான் இந்த வழக்கு விசாரணை அடுத்ததாக இடம்பெறும். பொலிஸ் மா அதிபர், தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்பட வேண்டிய இந்தத் தருணத்தில் தான் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது நாடாளுமன்றுக்குள்ளும் தற்போது குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. அரசமைப்புச் சட்டத்தின் 4 ஆவது உறுப்புரையில் வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்துவதற்காக நீதியான தேர்தலை நடத்த வேண்டும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், உயர்நீதிமன்றமானது இந்தத் தடையை விதிக்கும் முன்னர், தேர்தல் ஆணைக்குழுவின் கருத்தைக் கேட்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. அரசமைப்பின் 44 (அ) 2 ஆம் உறுப்புறுமையின் கீழ், 14 நாட்களுக்குள் பொலிஸ் மா அதிபரை நியமிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவானது, ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் திகதியை அறிவித்துள்ளது. இந்த நிலையில், அரசமைப்புச் சபையின் அனுமதியுடன் பொலிஸ் மா அதிபர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். இதற்காக தற்போது பதவியிலிருக்கும் பொலிஸ் மா அதிபரை பதவியிலிருந்து விலக்க, நாடாளுமன்றத்தில் பிரேரணையொன்றை கொண்டுவந்து பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவைப் பெற வேண்டும். இப்போதும் பொலிஸ் மா அதிபராக இடைக்கால தடை விதிக்கப்பட்ட பொலிஸ் மா அதிபரே இருக்கிறார் என பிரதமர் தினேஸ் குணவர்த்தன மேலும் குறிப்பிட்டுள்ளாா். https://athavannews.com/2024/1393654
  2. சுயாதீன (சுயேட்சை) வேட்பாளராகக் களமிறங்கும் ரணில்! ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுயாதீன வேட்பாளராகக் களமிறங்கவுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் சட்டத்தரணி ரொனால்ட் சி பெரேராவினால் குறித்த தொகை வைப்பு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அதன்படி, ஜனாதிபதி சார்பாக அவரது சட்டத்தரணி தேர்தல் ஆணைக்குழுவில் சுயாதீன வேட்பாளருக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2024/1393644
  3. விரைவில் நிறைவடையவுள்ள பாம்பன் ரெயில் பாலம்! பாம்பன் புதிய ரெயில் பாலத்தின் கட்டமைப்புப் பணிகள் செப்டெம்பர் மாதம் நிறைவடையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் கருத்துத் தெரிவிக்கையில்” ராமேஸ்வரத்தில் புதிதாக அமைக்கப்படும் பாம்பன் பால பணிகள் செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒக்டோபர் முதல் ராமேஸ்வரம் – மண்டபம் இடையே ரெயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் சுமார் 40 ரெயில்வே மேம்பால திட்டப்பணிகளில் ரெயில்வே துறை தனது பணிகளை முடித்துள்ளது. நிலம் கையகப்படுத்துவதில் ஏற்படும் தாமதத்தால் மாநில அரசின் பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுகின்றது” இவ்வாறு தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1393509
  4. ராஜவன்னியன்... நானும் இதனை இணையத்தில் பார்த்து விட்டுத்தான் இங்கே பதிந்தேன். @suvyயரும் கண்டதாக சொன்னார். பகிடி என்னவென்றால்.... யாரோ எழுதிய இந்தக் கதையை தமது சொந்தக் கதை போல் பிரசுரிக்கின்றார்கள். தமிழ்நாட்டிலுள்ள சில மேடைப் பேச்சாளர்களும் தமது உரையின் போது.. இந்தக் கதையையும் சொல்வதாக சிலர் குறிப்பிட்டு இருந்தார்கள். இந்தக் கதையை... வாசிக்க நல்ல சிரிப்பாக இருந்தது. அவர் சொன்ன விதம் அவ்வளவு சிறப்பு. இதே போன்ற இன்னொரு கதையின் இணைப்பையும் கீழே தருகின்றேன். நேரம் இருக்கும் பொது வாசித்துப் பாருங்கள் ராஜவன்னியன். நிச்சயம் சிரிப்பு வரும். 😂 👇
  5. இவ்வளவு பாதுகாத்ததும்... இந்த ஒன்றுக்குத்தானா. 😂 🤣
  6. "நியூயோர்க் ஸ்ரைலில்" சாரம் கட்டும் முறை. 😂 🤣
  7. மலிபன் பிஸ்கெட்டுகளின் ரசிகன் நான். இப்போதும் இங்குள்ள தமிழ்க்கடைக்குப் போனால்... இரண்டு பக்கற் பிஸ்கெட்டாவது வாங்கிக் கொண்டு வருவேன். அதன் வரலாறை அறியத் தந்த ஈழப்பிரியனுக்கு நன்றி. 🙂
  8. காணொளியில் உள்ளது போல் சாரம் கட்டினால்.... காலையில் கட்டிய சாரம் இரவு படுக்கப் போகும் மட்டும் அவிழாது. 😂 🤣
  9. மான்செஸ்டர் விமான நிலைய சம்பவத்தின் புதிய மற்றும் தெளிவான வீடியோ. இவர்கள் ஒரு பிரித்தானிய போலீஸ் பெண்ணை தாக்கி மூக்கை உடைத்த குற்றவாளிகள். ஒழுங்கையும் ஒழுக்கத்தையும் மீட்டெடுத்த மான்செஸ்டர் காவல்துறைக்கு பாரிய ஆதரவு.
  10. பாகிஸ்தான் இளைஞர்கள் மீது பிரித்தானிய பொலிஸார் தாக்குதல்! பிரித்தானியாவில் மான்செஸ்டர் விமானநிலையத்தில் பொலிஸார் அதிகாரிகள் சிலர், பாகிஸ்தானை சேர்ந்த இளைஞர்களை காலால் தாக்கும் காணொளியொன்று சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் நேற்றிரவு நடத்தப்பட்டுள்ள நிலையில், ரோச்டேல் பொலிஸ் நிலையத்திற்கு வெளியே, நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரி ஒருவர், பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வீடியோவில், இளைஞர் ஒருவர் தரையில் விழுந்து கிடப்பதையும், அவரை நோக்கி இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள், மின்சாரம் பாய்ச்சும் துப்பாக்கியை நீட்டும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அத்துடன், மற்றொரு இளைஞனின் தலையை பொலிஸ் அதிகாரி ஒருவர் காலால் மதிப்பதையும் அவதானிக்க முடிகின்றது. மேலும், மற்றொரு இளைஞர் மீது மிளகு தண்ணீர் வீசி, அவரின் கழுத்தை மடக்கி இளைஞனை கீழே தள்ளும் காட்சியும் பதிவாகியுள்ளது. அத்துடன், தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோவில், நபர் ஒருவரை ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் தரையில் வீழ்த்துவதையும் கைகளை பின்பக்கமாக இழுத்து வைத்திருப்பதையும், அந்த நபரை அதிகாரி ஒருவர் காலால் உதைப்பதையும் காணமுடிகின்றது. இதில் பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்கான ஒரு இளைஞன் தான் சாதாரண மக்கள் எனக் கூறுவதையும் அவதானிக்க முடிகின்றது. இந்த சர்ச்சைக்குறிய வீடியோ வெளியானதை தொடர்ந்து பிரித்தானிய, பொலிஸார் குறித்து கேள்வி எழுந்துள்ளது. பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட பின்னரே இந்த சம்பவங்கள் இடம்பெற்றதாகவும், இதில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மான்செஸ்டர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், இந்த தாக்குதலுக்கு இனவெறியே காரணம் என மெட்ரோபொலிட்டன் காவல்துறையின் முன்னாள் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1393611
  11. 22 சிங்கள பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை: வவுனியாவில் போராட்டம்! வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட 22 சிங்கள பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாகத் தெரிவித்து வலயக்கல்வி பணிமனை முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது 22 சிங்கள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையினால் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளை முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமனைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரமாக இடம் பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிகளவான மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1393527
  12. சுவியர்.... வயலில் நடக்கும் போது, நரி கடித்தால், அரசாங்கத்திடம் இருந்து நல்ல காசு எடுக்கலாம். ஆனால் நரிதான்... கடிக்க மாட்டேன் என்று ஓடி ஒளிக்கிறது. 😂
  13. அட... இன்று காலை நான், நடந்த வயல். 👍 😂 நரி... கூச்ச சுபாவம் உள்ளது என்று சொல்வார்கள். மனித நடமாட்டத்தை கண்டவுடன் ஓடி ஒளித்து விடும். ஓநாய்தான் ஆபத்தானது. இந்த வயலில் ஓநாய் இல்லை என்று நினைக்கின்றேன். ஆனாலும் மனதில் ஒரு வித பயத்துடன்தான் நடப்பது. 🤣
  14. 🚶‍♀️🚶🚶🏼‍♂️🚶‍♀️🚶🚶🏼‍♂️ அப்படி சொல்லாதீங்க.... விடிய 4:30 க்கு எழுந்து,பக்கத்தில் உள்ள வயல் பகுதியில் 7 கிலோ மீற்றர் வேக நடை, நடந்து போட்டு வந்திருக்கின்றேன். 🚶🏼‍♂️🚶🚶‍♀️
  15. சாரத்துடன் அந்தப் பார்வை... நல்லாயிருக்கு. 👍 ஜட்டி... போட்டுக் கொண்டுதான் , நிலம் கொத்த வேணும். 😂 இல்லாட்டி... பூரான், பூச்சி கடித்துப் போடும். 🤣 இப்பதான்... பார்த்து, கருத்து எழுதியிருக்கு அல்வாயான். 😂 🤣
  16. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சரத் பொன்சேகா! 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இதை அவர் தனது X கணக்கில் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார். இதேவேளை அண்மையில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் “இராணுவ தளபதி தேசத்துக்கு வழங்கிய வாக்குறுதி – இந்த யுத்தம் அடுத்த தளபதி வரையில் நீடிக்க இடமளியேன்” என்ற தலைப்பில் எழுதப்பட்ட நூல் வெளியீட்டு விழா நடைபெற்றிருந்தது. இதன்போது பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் சேவைக்கு பாராட்டு தெரிவித்த ஜனாதிபதி, யுத்தத்தை வெற்றிகொண்டது மாத்திரமன்றி, பல்வேறு அரசியல் சவால்களுக்கும் முகம்கொடுத்தவர் என்ற வகையில் எதிர்காலத்தில் நாட்டிற்கு பெரும் சேவையாற்ற முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1393494
  17. பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு இழப்பீடு வேண்டும் – சஜித் கோாிக்கை! தகனமா, அடக்கமா என்ற விவகாரத்தில் மன்னிப்புக் கேட்டு பிரச்சினையில் இருந்து தப்பி ஓட முயற்சிக்க வேண்டாம் எனவும் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு அரசாங்கம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் விசேட கூற்று ஒன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். கொரோனா காலப்பகுதியில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட கட்டாய தகனக் கொள்கைக்கு மன்னிப்பு கேட்பதென்பது ஒரு சிறந்த விடயம் எனவும் இந்த தீர்மானத்திற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அமைச்சரவையில் அங்கம் வகித்த அமைச்சர்கள் ஆதரவளித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், இதன் மூலம் முஸ்லிம் மக்களின் சமய, கலாசார உரிமைகள் முற்றாக மீறப்பட்டதாகவும் நாட்டில் இனவாதமும் மதவாதமும் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டள்ளார். முஸ்லிம்களை இலக்கு வைத்து அடக்கமா தகனமா என்ற தீர்மானம் எந்த நபரின் அறிக்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்டது? இது தொடர்பாக ஆலோசனை வழங்கியது யார்? இந்த ஆலோசனை தொடர்பாக அரசியல் தலைமைகள் பரிசீலித்து ஆராய்ந்து பார்க்காததன் காரணம் என்ன போன்ற விடயங்களையும முன்வைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனைகளை கைவிட்டு, முஸ்லிம் மக்களுக்கு எதிராக இவ்வாறான குற்றச் செயலைச் செய்ய தவறான தீர்மானங்களை எடுத்தவர்களைக் வெளிப்படுத்தி, தகனமா அடக்கமா விவகாரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், முஸ்லிம் மக்களிடம் மன்னிப்புக் கேட்டு பிரச்சினையில் இருந்து தப்பி ஓட முயற்சிக்க வேண்டாம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1393496

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.