Everything posted by தமிழ் சிறி
-
சகோதரியின் பெயரில் ஆள்மாறாட்டம் - வெளிநாட்டுப்பிரஜை கைது!
நீதிமன்றத்தில் ஆஜரானார் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா ! கடவுச்சீட்டு வழக்கில் சந்தேக நபராக பெயர் குறிப்பிடப்பட்டிருந்த, முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே கொழுப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார். மோசடியான முறையில் இலங்கை கடவுச்சீட்டுகளை பெற்ற சம்பவம் தொடர்பில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுத்து, நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (20) உத்தரவிட்டுள்ளது. அதன்படி, குறித்த விடயம் குறித்தான அறிக்கையை இன்று குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தவேளை, முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நீதிமன்றத்தில் அஜராகி வாக்குமூலம் வழங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. https://athavannews.com/2024/1383280 #################### ####################### ஒரு அமைச்சரே... மோசடியான முறையில் கடவுச்சீட்டு பெறும் நிலையில் நாடு இருக்கும் போது.... சாதாரண மக்கள் எம்மாத்திரம். அரசன் எவ்வழி, குடிமக்களும் அவ்வழி.
-
யாழில். பொதுசுகாதார பரிசோதகர்களை அடைத்து வைத்த இருவர் கைது!
யாழில். பொதுசுகாதார பரிசோதகர்களை அடைத்து வைத்த இருவர் கைது! யாழில் உணவு உற்பத்தி மையம் ஒன்றினுள் பொதுசுகாதார பரிசோதகர்களை அடைத்து வைத்த குற்றச்சாட்டில் இருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இது குறித்து மேலும் தெரிய வருவதாவது” பன்னாலை பகுதியில் இயங்கும் உணவு உற்பத்தி மையம் ஒன்றிற்கு சோதனை நடவடிக்கைக்காக நேற்றைய தினம் இரண்டு பொது சுகாதார பரிசோதகர்கள் சென்றுள்ளனர். அதன்போது உற்பத்தி நிலையம் உரிய அனுமதிகள் பெறாது இயங்கி வந்ததமையும், டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவான சூழலை கொண்டிருந்தமையும் சுகாதார பரிசோதகர்கள் கண்டறிந்துள்ளனர். இது குறித்து கேள்வி எழுப்பிய போது சுகாதார பரிசோதகர்களுக்கும் அங்கு பணியாற்றிவரும் ஊழியர்களுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு பின்னர் அது மோதலாக வெடித்துள்ளதாகக் கூறப்படுகின்றது. இதனையடுத்து குறித்த ஊழியர்கள், சுகாதார பணியாளர்களை உற்பத்தி நிலையத்தினுள் வைத்து பூட்டி விட்டு,அங்கிருந்து சென்றுள்ளனர் எனவும், இது குறித்து சுகாதார பரிசோதகர்கள் தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஊடாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு சென்ற பொலிஸார் சுகாதார பரிசோதகர்களை மீட்டுள்ளதோடு, குறித்த பணியாளர்களையும் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1383279
-
இலங்கையில் நாளை துக்க தினம்!
இந்தியாவில் இன்று துக்க தினம் அனுஷ்டிப்பு! மறைந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று ‘இந்தியா’ முழுவதும் துக்க தினம் அனுஷ்டிக்கப்படுமென மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையொட்டி நாட்டில் அனைத்து இடங்களிலும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நேற்று முன் தினம் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார். அவர் அஜர்பைஜான் எல்லை அருகே உள்ள அணைகள் திறப்பு விழாவில் பங்கேற்றுவிட்டு திரும்பும் போதே சீரற்ற வானிலை காரணமாக குறித்த விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்தில் ரைசியுடன் பயணித்த மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் அந்நாட்டரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1383267
-
இலங்கையில் நாளை துக்க தினம்!
இலங்கையில் நாளை துக்க தினம்! இலங்கையில் நாளை (செவ்வாய்கிழமை)யை துக்கத் தினமாக இலங்கை அறிவித்துள்ளது. இதன்படி அனைத்து அரச அலுவலகங்களிலும் தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்கவிடுமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது இதேவேளை ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட 09 பேர் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தோரை நினைவு கூறும் வகையில் துக்கத் தினத்தை இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. https://athavannews.com/2024/1383227
-
வினா விடை
வருகின்ற வெசாக் போயா தினத்தில், சிறையில் அடைக்கப் பட்டுள்ள ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி, விடுதலை செய்வாரா...? மாட்டாரா...? 😂 🤣
-
ஞானசாரதேரருக்கு மன்னிப்பு வழங்கவேண்டும் - ஜனாதிபதிக்கு பௌத்த மததலைவர்கள்கடிதம்
கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு தொடர்பில் அறிவிப்பு! கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதான மதகுருக்கள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். இலங்கையில் சிங்கள பௌத்த தேசியத்திற்காக கலகொடஅத்தே ஞானசார தேரர் கடந்த காலங்களில் குரல் எழுப்பியதாகவும் அவரை பொது மன்னிப்பில் விடுதலை செய்ய வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது இதன்படி, வெசாக் போயா தினத்தில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் சமூக ஆதரவுடன் செயற்பட்ட ஞானசாரஹிமிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இதேவேளை 2016 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் சந்திப்பின் போது இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஞானசார தேரர் கைது செய்யப்பட்டு ஏழு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1383133
-
ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு
ஈரானின் புதிய ஜனாதிபதியாக மொஹமட் முக்பர் தெரிவு! ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நேற்றைய தினம் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்துள்ள நிலையில் அந்நாட்டின் புதிய ஜனாதிபதியாக மொஹமட் முக்பர் (Mohammad Mokhber) தெரிவு செய்யப்பட்டுள்ளார். இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் அஜர்பைஜான் நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள ஜோல்பா நகருக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது. குறித்த விபத்தில் ஹெலிகொப்டரில் பயணித்த அனைவரும் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்பில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் அந்நாட்டின் துணை ஜனாதிபதியான மொஹமட் முக்பர், புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். https://athavannews.com/2024/1383096
-
கருத்து படங்கள்
- தமிழினப்படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தலுக்குரிய ஏற்பாடுகள் பூர்த்தி
- வட மாகாணத்திற்கு எதிர்வரும் 24 ஆம் திகதி இருநாள் விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி
ஜனாதிபதியால்… மூன்று தியேட்டர்களும் திறந்து வைக்கப்பட இருப்பது… சினிமா ரசிகர்களுக்கு பால் வார்த்த மாதிரி ஒரு இனிப்பான செய்தி. 😂- கருத்து படங்கள்
- மே18.2024 – நிலாந்தன்!
மே18.2024 – நிலாந்தன்! மீண்டும் ஒரு நினைவு நாள் தமிழ் மக்களைக் கூட்டிக் கட்டியிருக்கிறது திரட்டி யிருக்கிறது.இம்முறையும் ஆயிரக்கணக்கானவர்கள் முள்ளிவாய்க்காலை நோக்கித் திரண்டிருக்கிறார்கள்.விசேஷமாக பன்னாட்டு மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் அங்கே காணப்பட்டார்.கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் தமிழ் அதிகாரி ஒருவரும் அங்கே காணப்பட்டார்.சுமந்திரனும் உட்பட செல்வம் அடைக்கலநாதன்,சித்தார்த்தன்,சிறீரீதரன்,கஜேந்திரன் முதலாய் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் அங்கே காணப்பட்டார்கள். சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அங்கே காணப்பட்டார்கள்.மதகுருக்கள்,சிவில் சமூகப் பிரதிநிதிகள்,அரசியல் செயற்பாட்டாளர்கள் போன்றவர்களும் அங்கே காணப்பட்டார்கள்.ஈழத் தமிழர்களை பொருத்தவரை கட்சி பேதமின்றி,இயக்க பேதமின்றி,வடக்கு கிழக்கு என்ற பேதம் இன்றி,சமய பேதமின்றி,சாதி பேதமின்றி, தமிழ் மக்கள் ஒன்றாகக் கூடும் ஒரே நிகழ்வு மே 18 தான்.இந்த முறையும் அந்த நாளின் புனிதம்;அந்த நாளின் மகிமை தாயகத்தில் நிலைநாட்டப்பட்டது. அந்த நாளின் மகிமை என்பது எல்லாத் தமிழ் தரப்புகளும் அங்கே திரள்வதுதான். முள்ளிவாய்க்காலுக்கு வெளியே தமிழ் பகுதிகளெங்கும் பரவலாக நினைவு கூர்தல் நடந்திருக்கின்றது.கொழும்பிலும் நடந்திருக்கிறது.புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் வழமை போல பெருமெடுப்பில் நடந்திருக்கின்றது. எனினும்,விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவரையும் அவருடைய குடும்பத்தவர்களையும் நினைவு கூர்வதா இல்லையா என்ற விடயத்தில் புலம்ம்பெயர்ந்த தமிழ்ப் பரப்பில் உடைவு தென்படுகின்றது.கடந்த 15 ஆண்டுகளில் தமிழ் சமூகத்தில் ஏற்பட்ட ஆகப்பிந்திய உடைவு அது. தமிழ் மக்கள் இன்னும் எத்தனை துண்டுகளாக உடையப் போகின்றார்களோ? தமிழர்கள் எத்தனை துண்டுகளாக உடைந்தாலும் நினைவு நாட்கள் அவர்களை திரட்டிக் கட்டி விடும் என்று அரசாங்கத்திற்கு தெரியும்.அதனால் தான் கிழக்கில் மே 18ஐ அனுஷ்டிக்க முற்பட்ட அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள் மற்றும் சாதாரண மக்களுக்கு எதிராக கடுமையான கெடுபிடிகள் ஏவி விடப்பட்டுள்ளன ஆனால் வடக்கில் நிலைமை அப்படியல்ல. வடக்கில் மே 18ஐ அனுஷ்டிப்பதற்கு போலீசார் பெரிய அளவில் தடைகள் எதையும் விதிக்கவில்லை. சில இடங்களில் படைவீரர்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சியை வாங்கி அருந்தியிருக்கிறார்கள். வடக்கில் கஞ்சி காய்ச்சுவதற்குத் தடைகள் இருக்கவில்லை.தமிழர் தாயகப் பகுதியில் ஒப்பீட்டளவில் அதிகரித்த அளவிலும் பரவலாகவும் கஞ்சி காய்ச்சப்பட்டது வடக்கில்தான்.பல்கலைக்கழக மாணவர்களும் உட்பட கட்சிகளும் செயற்பாட்டு அமைப்புகளும் சமூக நிறுவனங்களும் தாமாக முன்வந்து.தன்னார்வமாக முள்ளிவாய்க்கால் கஞ்சியைச் சமைத்துப் பரிமாறியிருக்கிறார்கள். ஆனால் கிழக்கில் போலீசார் அதைத் தடுக்க முற்பட்டிருக்கிறார்கள். கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்ட பின்னரும் கூட, கிழக்கில் போலீசார் முள்ளிவாய்க்கால் கஞ்சி சமைப்பதை தடுக்க முனைந்தார்கள். சில இடங்களில் அடுப்பை கால்களால் தட்டி நெருப்பை அணைக்க முற்படுகிறார்கள். கடந்த ஆண்டும் மாவீரர் நாளை முன்னிட்டும் கிழக்கில் கெடுபிடிகள் அதிகமாகக் காணப்பட்டன.இந்த விடயத்தில், அதாவது நினைவுகளை அனுஷ்டிக்கும் விடயத்தில் அரசாங்கம் வடக்கை வேறாகவும் கிழக்கை வேறாகவும் கையாள்வதற்குக் காரணம் என்ன? இரண்டு காரணங்களைக் கூறலாம். முதலாவது காரணம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கிழக்கில் காலூன்ற முற்படுகின்றது.கடந்த ஆண்டு திலீபனின்நினைவு நாளின்போது, அந்தக் கட்சியானது ஒரு வாகன ஊர்தியை திருகோணமலை வழியாக எடுத்துச் சென்றபொழுது அந்த வாகன அணி தாக்கப்பட்டது. அதன் பின் மாவீரர் நாளை அனுஷ்டிக்க முயன்ற கட்சியின் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டார்கள்.இம்முறையும் மே 18ஐ முன்னிட்டு அக்கட்சியின் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.அல்லது நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அதாவது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது கிழக்கில் பலமடைவதை அரசாங்கம் தடுக்க முயற்சிப்பதை இது காட்டுகிறது. இது ஒரு காரணம். இரண்டாவது காரணம் கிழக்கில் ஏற்கனவே பலமடைந்து வரும் பிள்ளையான்,வியாழேந்திரன் போன்றவர்களைத் தொடர்ந்தும் பலப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது.கிழக்கில்,கிழக்குமைய அரசியலை ஊக்குவிப்பதன் மூலம், வடக்கையும் கிழக்கையும் அதாவது தமிழர் தாயகத்தை உடைக்கலாம்.அதேசமயம், கிழக்குமையக் கட்சிகள் பெருமளவுக்கு முஸ்லிம்களுக்கும் எதிரானவை. அங்கே அக்கட்சிகளைப் பலப்படுத்தினால் கிழக்கில் தமிழ் முஸ்லிம் உறவுகளை மேலும் பகை நிலைக்குத் தள்ளலாம். அதன்மூலம் வடக்குக் கிழக்கு இணைப்புக்கு எதிராக முஸ்லிம்களைத் தூண்டி விடலாம். அதாவது அரசாங்கத்தின் நோக்கம் மிகத்தெளிவானது.கிழக்கில் கிழக்குமையக் கட்சிகளைப் பலப்படுத்துவது. அதற்கு நினைவு கூர்தலை அங்கே அனுமதிக்கக்கூடாது.ஏனென்றால் நினைவு நாட்கள் தமிழ் மக்களை ஒன்றாக்கும் சக்திமிக்கவை .அவை வடக்கையும் கிழக்கையும் அதாவது தமிழர்களின் தாயகத்தை,தாயக ஒருமைப்பாட்டைப் பலப்படுத்தும் சக்தி மிக்கவை.எனவே வடக்கையும் கிழக்கையும் பிரிக்க நினைப்பவர்களைப் பொறுத்தவரை, நினைவு கூர்தலை கிழக்கில் அனுமதிக்கக் கூடாது.அதுதான் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகின்றது. ஆனால் கிழக்கில் நினைவு கூர்தலைத் தடுக்கும் அதே அரசாங்கம் இன்னொரு புறம்,உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றைப்பற்றி உரையாடுகின்றது. உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு எனப்படுவது நிலைமாறு கால நீதியின் கீழ் உருவாக்கப்பட வேண்டிய ஒரு கட்டமைப்பு. நிலை மாறுகால நீதி எனப்படுவது 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட முப்பத்தின் கீழ் ஒன்று ஐநா தீர்மானத்தின் அடிப்படையில் அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு பொறுப்பு.அதன்படி உருவாக்கப்பட வேண்டிய ஒரு கட்டமைப்புத்தான், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஆகும். ஆனால் நிலைமாறு கால நீதியின் கீழ் பாதிக்கப்பட்ட மக்கள் நினைவு கூரும் முழு உரிமையையும் பெற்றிருக்கிறார்கள். குறிப்பாக நிலை மாறுகால நீதியின் நான்கு தூண்களில் ஒன்று ஆகிய “இழப்பீட்டு நீதி” என்ற பகுதிக்குள் அது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இழப்பீட்டு நீதியின் கீழ்,தமிழ் மக்கள் போரில் இனஅழிப்பு செய்யப்பட்டவர்களை நினைவுகூரும் உரிமையுடையவர்கள் ஆகும். தனிப்பட்ட முறையில் அல்லது கூட்டாக நினைவுச் சின்னங்களை நிறுவி நினைவு நாட்களை அனுஷ்டிப்பதற்கு தமிழ் மக்களுக்கு உரிமை உண்டு. ஆனால் கிழக்கில் அது மறுக்கப்பட்டுள்ளது.அரசாங்கத்தின் நல்லெண்ண முயற்சிகளை,நல்லிணக்க முயற்சிகளை தமிழ் மக்கள் ஏன் நம்புவதில்லை என்பதற்கு கிழக்கில் கடந்த வாரம் போலீசார் நடந்து கொண்ட விதம் ஓர் ஆகப்பிந்திய சான்று ஆகும். இதே அரசாங்கம் போரில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்வதற்கு ஒரு பொதுச் சின்னத்தை உருவாக்கும் நோக்கத்தோடு நிபுணர் குழு ஒன்றை உருவாக்கி வைத்திருக்கிறது. அந்நிபுணர் குழு மாவட்டங்கள் தோறும் பயணம் செய்து மக்கள் கருத்துக்களை கேட்டது.தமிழ்ப் பகுதிகளில் அவர்களுக்கு கருத்துக்கூறிய அனேகர், பொது நினைவுச் சின்னத்தை நிராகரித்திருக்கிறார்கள். கொலை செய்தவர்களையும் கொல்லப்பட்டவர்களையும் ஒன்றாக நினைவு கூர முடியாது என்று தமிழ் மக்கள் மேற்படி நிபுணர் குழுவுக்குக் கருத்து கூறியிருக்கிறார்கள். அதாவது அரசாங்கம் நினைப்பதுபோல ஒரு பொது நினைவுச் சின்னத்தை உருவாக்குவது இலகுவானது அல்ல என்பதைத் தமிழ் மக்கள் நிபுணர்களுக்கு அழுத்தமாகத் தெரிவித்திருக்கிறார்கள்.அவ்வாறு ஒரு பொது நினைவுச் சின்னத்தை உருவாக்க முற்படும் அரசாங்கம் நினைவை ஒரு உணவின்மூலம் பகிர முற்படும் தமிழர்களைத் தடுக்கின்றது. ஒர் உணவைப் பார்த்து அதாவது கஞ்சியைப் பார்த்து அரசாங்கம் பயப்படுகிறது என்றால் அதன் பொருள் என்ன? அந்தக் கஞ்சி கடத்தக்கூடிய அல்லது பேணக்கூடிய நினைவுகளைக் கண்டு அரசாங்கம் அஞ்சுகிறது என்றுதானே பொருள் ? “மக்கள் ஒன்றுகூடுவதன் மூலம் உணவைப் பரிமாறிக்கொள்வதன் மூலம் நோய் பரவும் என்பதாலேயே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக”மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா கேள்வி எழுப்பியுள்ளார். அப்படியென்றால் ஏன் மே தினக்கூட்டங்களை தடை செய்யுமாறு பொலிஸார் நீதிமன்றங்களை கேட்டுக்கொள்ளவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.வெசாக் கொண்டாட்டங்கள்,தேர்தல் பிரச்சார பேரணிகளையும் தடைசெய்யுமாறு பொலிஸார் நீதிமன்றங்களிடம் வேண்டுகோள் விடுப்பார்களா என கேள்வி எழுப்பியுள்ள அவர்,இதன் காரணமாகவே ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்கும் முயற்சிகளை ஜெனீவாவில் மற்றுமொரு தீர்மானத்தை தடுப்பதற்கான ஏமாற்று நடவடிக்கை என தமிழ்மக்கள் கருதுகின்றார்கள் எனவும் தெரிவித்துள்ளார். எனினும்,இம்முறை நினைவு கூர்தலுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கிழக்கில் தமிழ் மக்களைப் பயமுறுத்தப் போதுமானவைகளாக இல்லை என்பதோடு, முக்கியமாக திருக்கோணமலையில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதற்கு முஸ்லிம் சட்டத்தரணிகள் தாமாக முன்வந்து உதவியிருக்கிறார்கள் என்பது இங்கு முக்கியமாகச் சுட்டிக் காட்டப்பட வேண்டியது. அரசாங்கம் நினைப்பதுபோல கிழக்கில் நிலைமைகளைக் கையாள முடியாது என்பதனை அது காட்டுகின்றதா? https://athavannews.com/2024/1383017- வவுனியாவில் முள்ளிவாயக்கால் நினைவேந்தலில் குழப்பத்தினால் வெளியேறிய சர்வ மத தலைவர்கள் !
வவுனியாவில் முள்ளிவாயக்கால் நினைவேந்தலில் குழப்பத்தினால் வெளியேறிய சர்வ மத தலைவர்கள் ! வுனியாவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் ஏற்பட்டிருந்த குழப்பம் காரணமாக சர்வ மத தலைவர்கள் அங்கிருந்து வெளியேறியிருந்தனர். வவுனியா நகரசபை மைதானத்தில் போரில் உயிரிழந்தவர்கள் நினைவாக மூவின மக்களின் நினைவேந்தல் நிகழ்வு என அறிவிக்கப்பட்டு அழைத்து வரப்பட்ட மக்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர். இதன்போது அங்கு அறிவிப்பில் ஈடுபட்டவர்கள் விபத்தில் இறந்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு, யுத்ததில் வெற்றி பெற்றமைக்கான நிகழ்வு, போரில் உயிரிழந்தர்வர்களுக்கான நிகழ்வு, முள்ளிவாய்காலில் மரணித்தவர்களுக்கான நிகழ்வு என மாறி மாறி அறிவித்திருந்த நிலையிலேயே அங்கு குழப்பம் ஏற்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்த ஏற்பாட்டபாளர்கள் இது போரில் இறந்தவர்களை அனுஸ்டிக்கும் நிகழ்வு என அறிவிக்கும்படி தெரிவித்திருந்தனர். இதனால் குறித்த நிகழ்வு எதற்காக என மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டிருந்ததுடன், ஏற்பாட்டுக் குழுவின் நடவடிக்கைக்கு அங்கு வந்திருந்த இளைஞர்கள் சிலரும் விசனம் வெளியிட்டதுடன் முரண்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. குழப்பம் ஏற்பட்டதை தொடர்ந்து வருகை தந்திருந்த தமிழ் மக்கள் தீபம் ஏற்றிவிட்டு வெளியேறிச சென்றிருந்தனர். இதனையடுத்து அதிதிகளாக வருகை தந்திருந்த மதத்தலைவர்களும் அங்கிருந்து வெளியேறிச் சென்றிருந்தனர். https://athavannews.com/2024/1383033- சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக் கோரி பிரித்தானியாவில் போராட்டம்!
சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக் கோரி பிரித்தானியாவில் போராட்டம்! முள்ளிவாய்க்காலில் நடந்த இன அழிப்புக்கு நீதி கேட்டு, ஈழத் தமிழர் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக் கோரி பிரித்தானியாவில் உள்ள தமிழர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். முள்ளிவாய்க்கால் இன அழிப்புக்கு இலங்கை அரசாங்கமே காரணம் என்றும் சர்வதேச விசாரணை அவசியம் என்றும் வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பேரணியில் கலந்து கொண்ட தமிழர்கள், பிரித்தானிய பிரதமரின் இல்லமான டவுனிங் வீதியை நோக்கி பேரணியாக சென்றனர். அத்துடன் தமிழர் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்களுக்கு எதிராகவும் இராணுவமயமாக்கலை முடிவுக்கு கொண்டுவருமாறும் கோஷங்களை எழுப்பி போராடியிருந்தனர். அத்துடன் இன அழிப்பை நினைவுகூரும் வகையில் டவுனிங் வீதிக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள உயிர் நீத்த தமிழர்கள் அடையாள நினைவுச் சின்னத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தியிருந்தமையைம் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1383048- காணாமல் ஆக்குதலில் ஆயுதக்குழுவினர் உள்ளனர் என்பதை இலங்கை அரசாங்கம் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோர வேண்டும் : ஐ.நா அறிக்கை
காணாமல் ஆக்குதலில் ஆயுதக்குழுவினர் உள்ளனர் என்பதை இலங்கை அரசாங்கம் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோர வேண்டும் : ஐ.நா அறிக்கை. வலிந்து காணாமலாக்கப்பட்ட மக்களின் நிலை, அவர்களின் இருப்பிடம் தொடர்பான தகவல்களைக் கண்டறிந்து அதனை வெளியிடுவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்திற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் கண்டறியப்பட வேண்டுமெனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. காணாமலாக்குதலில் பாதுகாப்புப் படையினரும் அவர்களுடன் தொடர்புடைய ஆயுதக்குழுக்களும் ஈடுபட்டுள்ளனர் என்பதை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும், அதற்காக பொதுமன்னிப்புக் கோரப்பட வேண்டுமெனவும் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. வலிந்து காணாமலாக்கப்பட்ட அனைத்து இலங்கையர்களையும் ஒருபோதும் மறந்துவிட முடியாது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களும் அவர்களின் உறவுகளும் நீண்ட காலமாகக் காத்திருப்பதாகவும், உண்மையை அறிந்துகொள்வதற்கான உரிமை அவர்களுக்கு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குற்றங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஆயுத மோதல்கள் நிறைவடைந்து 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், ஆரம்பகட்ட வலிந்து காணாமலாக்கப்படுதல்கள் இடம்பெற்று பல தசாப்தங்கள் கடந்துள்ள நிலையிலும், இலங்கை அதிகாரிகள் உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த இன்றுவரை தவறியுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1382989- தமிழ் பொது வேட்பாளர் யோசனையை ஏற்கமுடியாது : மாவை, சுமந்திரனிடம் இறுக்கமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார் சம்பந்தன்
சுவரில... ஐயாவின் போட்டோ மாட்டியாச்சா. 😂- யாழில் நாய் இறைச்சி கொத்து.
நிழலி... கரப்பத்தான் இல்லை. கரப்பொத்தான் என்றுதான்... சொல்வார்கள். 😂- யாழில் நாய் இறைச்சி கொத்து.
பெயரை சொன்னால்... வாள்வெட்டு கோஸ்ட்டி வந்து வாசலில் நிற்குமே.... 😂- கருத்து படங்கள்
- டயகம சிறுமி விவகாரம்: ரிசாத் பதியுதீன் விடுதலை!
டயகம சிறுமி விவகாரம்: ரிசாத் பதியுதீன் விடுதலை! 3 வருடங்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு சொந்தமான வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றிய டயகம சிறுமி தீயில் எரிந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் இருந்து ரிசாத் பதியுதீன் விடுவிக்கப்பட்டுள்ளார். சிறுமியை பணிப்பெண்ணாக கொடுத்ததாக கூறப்படும் முதலாம் சந்தேகநபரான பொன்னையா பண்டாரம், இரண்டாவது சந்தேகநபரான ரிஷாத் பதியுதீனின் மாமனார் என கூறப்படும் அலி இப்ராஹிம் கிதார் மொஹமட் மற்றும் மூன்றாவது சந்தேகநபர் ரிசாத் பதியுதீனின் மனைவியான கிதார் மொஹமட் ஷிஹாப்தீன் ஆயிஷா அவர்கள் மீது இவ்வாறான வழக்கை தாக்கல் செய்திருந்திருந்தனர். அதன்படி சம்பவம் தொடர்பில் ரிசாத் பதியுதீனின் மனைவி, மாமனார் மற்றும் சிறுமியை பணிப்பெண்ணாக அமர்த்திய நபர் ஆகியோருக்கு எதிராக வழக்குத் தொடருமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டதுடன், நான்காவது சந்தேகநபர் ரிசாத் பதியுதீன் மற்றும் ஐந்தாவது சந்தேகநபர் பதியுதீன் அப்துல் ரிஷாத் ஆகியோர் விடுதலை செய்தார் இந்த மூவருக்கும் எதிராக கொடுரமான வேலையாட்களை பணியமர்த்துதல், மனித கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் கொழும்பு தெற்கு பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. டயகம பகுதியைச் சேர்ந்த ஹிஷாலினி ஜூட் குமார் என்ற சிறுமி, பதியுதீனின் வீட்டிற்கு பணிப்பெண்ணாக வந்திருந்த நிலையில், உடலில் தீப்பற்றியதால் உயிரிழந்துள்ளார். இவ்வாறு மரணம் நிகழ்ந்துள்ளது நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்போது சிறுமிக்கு 15 வயது என்பதுடன் சம்பவம் தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்ட பொரளை பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர். மேலும் அந்த வீட்டில் பணிப்பெண்ணாக பல வருடங்கள் பணியாற்றிய நிலையில், 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3 ஆம் திகதி அவரது உடலில் தீப்பிடித்ததாகவும், பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 15 ஆம் திகதி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1382881- யாழில் நாய் இறைச்சி கொத்து.
யாழில் நாய் இறைச்சி கொத்து. யாழ்ப்பாணத்தில், உணவகம் ஒன்றில் இருந்து பழுதடைந்த இறைச்சி மற்றும் கறிகள் மீட்கப்பட்டதை அடுத்து , உணவகத்திற்கு நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டுள்ளது. மாவிட்டபுரம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாட்டிறைச்சி கொத்து வாங்கிய நபர் ஒருவருக்கு கொத்து ரொட்டியில் பழுதடைந்த இறைச்சி துண்டு காணப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த இறைச்சி துண்டு , மாட்டிறைச்சி போல் அல்லாது வேறு இறைச்சி போன்று காணப்பட்டதால் , அது குறித்து உணவகத்தில் இருந்தவாறே அப்பகுதி பொது சுகாதார பரிசோதகருக்கு குறித்த நபர் தொலைபேசி ஊடாக முறைப்பாடு செய்துள்ளார். இருந்த போதிலும் , பொது சுகாதார பரிசோதகர் சம்பவ இடத்திற்கு வராத காரணத்தால் , பழுதடைந்த இறைச்சி கொத்தினை புகைப்படம் எடுத்தும் , , கொத்து ரொட்டிக்கான விற்பனை சீட்டையும் பெற்றுக்கொண்டவர் , அது தொடர்பில் தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரியிடம் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பட்டின் பிரகாரம் சுகாதார பரிசோதகர் குழு குறித்த உணவகத்திற்கு சென்று சோதனையிட்ட போது , பழுதடைந்த இறைச்சிகள் மீட்கப்பட்டதுடன் , சுகாதார சீர்கேட்டுடன் உணவகம் காணப்பட்டதுடன் , இறைச்சியை கொள்வனவு செய்தமைக்கான பற்று சீட்டுக்கள் இல்லாதமை கண்டறியப்பட்டது. அதனை அடுத்து குறித்த உணவக உரிமையாளருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து , நீதிமன்ற விசாரணைகளில் உரிமையாளர் தன் மீதான குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து , உரிமையாளரை கடுமையாக எச்சரித்த மன்று , 65 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது. அதேவேளை உணவகத்தில் காணப்படும் குறைப்பாடுகள் தொடர்பிலும் , பொது சுகாதார பரிசோதகர்கள் அறிவுறுத்தலுக்கு அமைய உணவகத்தில் திருத்த வேலைகள் செய்த பின்னர் அது தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் அறிக்கை கிடைக்கப்பெற்று மன்று திருப்தி படும் வரையில் உணவகத்திற்கு சீல் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. https://athavannews.com/2024/1382900- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : வர்த்தக நிலையங்கள் பூட்டு
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : வர்த்தக நிலையங்கள் பூட்டு. முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கு வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு உணர்வுபூர்வமாக ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் உணவகங்கள், மருந்தகங்கள் தவிர்த்த ஏனைய வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு உணர்வுபூர்வமாக ஒத்துழைப்பு வழங்கப்பட்டுள்ளது. பொதுச்சந்தை உள்ளிட்ட அனைத்து வர்த்தக செயற்பாடுகளும் கைவிடப்பட்டுள்ளதை எமது பிராந்திய செய்தியாளர் உறுதிப்படுத்தியுள்ளார். https://athavannews.com/2024/1382941- முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கான பிதிர்கடன் நிறைவேற்றம்.
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கான பிதிர்கடன் நிறைவேற்றம். யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் பிதிர்கடன்களை நிறைவேற்றலையும் இன்றைய தினம் இடம்பெற்றிருந்தது. 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற விடுதலை போராட்டத்திலே முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கான பிதிர்க்கடன் செய்யும் வழிபாடும், ஆத்ம சாந்திக்கான பிரார்த்தனையும் இன்றையதினம் காலை 7.30 மணி முதல் முள்ளிவாய்க்கால் கப்பல் வீதியிலே உள்ள கடற்கரை பகுதியில் விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இடத்தில் நடைபெற்றது. குறித்த பிதிர்கடன் வழிபாட்டில் கட்சி பேதமின்றியும், சாதி, மத பேதமில்லாமல் உறவுகளை இழந்த பெரும்திரளான மக்கள் வருகைதந்து இறந்தவர்களின் பெயர் கூறி பிதிர் கடனை நிறைவேற்றியிருந்தார்கள். இதனை தொடர்ந்து தமிழின படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற இருப்பதும் குறிப்பிடதக்கது. https://athavannews.com/2024/1382917- தடைகளுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் நோக்கி புறப்பட்டுள்ள ஊர்தி
தடைகளுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் நோக்கி புறப்பட்டுள்ள ஊர்தி. முள்ளிவாய்க்கால் வலிகள் சுமந்த மே 18 இறுதி நாளான இன்று கிளிநொச்சி தர்மபுரத்திலிருந்து முள்ளிவாய்க்கால் வலிகள் சுமந்த ஊர்தி நினைவு கொட்டகை அமைக்கப்பட்டிருந்த இடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டு முள்ளி வாய்க்கால் நோக்கி புறப்பட்டுள்ளது. குறித்த ஊர்தியை கடுமையாக பொலிசார் சோதனைக்குட்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1382909- பிரித்தானியாவில் ரீடர்ஸ் டைஜெஸ்ட் (readers digest) சஞ்சிகை இனி வெளியாகாது!
பிரித்தானியாவில் ரீடர்ஸ் டைஜெஸ்ட் (readers digest) சஞ்சிகை இனி வெளியாகாது! பிரித்தானியாவில் 86 ஆண்டுகளாக வெளியாகிய ரீடர்ஸ் டைஜெஸ்ட் (readers digest) சஞ்சிகை, இனி வெளியாகாது என அதன் தலைமை ஆசிரியர் இவா மெக்கெவிக் (Eva Mackevic) தெரிவித்துள்ளார். நிதிநெருக்கடி காரணமாக ரீடர்ஸ் டைஜெஸ்ட் (readers digest) பதிப்பினை இத்துடன் முடித்துக் கொள்வதாக, இவா மெக்கெவிக் (Eva Mackevic) தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தனது பதிவில், துரதிர்ஷ்டவசமாக நிதிசார்ந்த பிரச்னைகளை நிறுவனத்தால் தாங்க முடியவில்லை என்பதால் பதிப்பினை வெளியிடுவதை நிறுத்தியுள்ளது. தனது சக ஊழியர்களுக்கும், பத்திரிகையின் எழுத்தாளர்களுக்கும், பல ஆண்டுகளாக ஒத்துழைத்த பிரதிநிதிகளுக்கும் மற்றும் நட்பு நிறுவனங்களுக்கும் நன்றி” என தனது வருத்தத்தினையும் அவர் தெரிவித்துள்ளார். ரீடர்ஸ் டைஜெஸ்ட் (readers digest) 1922 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் டெவிட் வாலஸ் மற்றும் அவரது மனைவி லிலா பெல் வாலஸ் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது. சிறிது காலத்திலேயே புகழ் பெற்ற ரீடர்ஸ் டைஜெஸ்ட் (readers digest) 1929 ஆம் ஆண்டுகளில், இது கணிசமான வாசகர்களையும் கணிசமான வருவாயையும் பெற்றிருந்தது. 1929 இல் 2 இலட்சத்து 90 ஆயிரம் வாசகர்களைப் பெற்ற readers digest சஞ்சிகை அந்த ஆண்டில், 9 இலட்சம் அமெரிக்க டொலர் வருமானத்தையும் ஈட்டியது. அதில், சுகாதார ஆலோசனைகள், நிதி ஆலோசனைகள் மற்றும் சமையல் குறிப்புகள் போன்றவை இடம்பெற்றிருந்தன. ரீடர்ஸ் டைஜஸ்ட்டின் உலகளாவிய பதிப்புகள் 70க்கும் அதிகமான 21 மொழிகளில் 49 பதிப்புகளோடு, கூடுதலாக 40 மில்லியன் மக்களைச் சென்றடைந்தது. ஒரு காலகட்டத்தில் இவ்விதழ் உலகின் 10.5 மில்லியன் எண்ணிக்கையில் விற்பனையைக் கொண்டிருந்தது. இது உலகின் மிகப்பெரிய அளவிலான விற்பனையாகும் இதழாக இருந்தது. அத்துடன் readers digest சஞ்சிகை சீனா, மெக்ஸிகோ, ஸ்பெயின், ஸ்வீடன் மற்றும் பெரு போன்ற நாடுகளில் மிகப்பெரிய அளவில் விற்பனையாகி கொண்டிருந்த இதழாகவும் விளங்கியது. மொத்தம் 23 மில்லியன் பதிப்புகளுடன் சர்வதேச அளவிலான விற்பனையை கொண்டிருந்த readers digest சஞ்சிகை, பிரித்தானியாவில் தனது முதல் வெளியீட்டை 1938 இல் ஆரம்பித்திருந்தது. 2000 ஆம் ஆண்டில் மாதத்திற்கு சுமார் ஒரு மில்லியன் பிரதிகள் வெளியிடப்பட்டதென்றும், அதன்பின்னர் கடுமையாக வீழ்ச்சியடைந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது, கடும் நிதிநெருக்கடி காரணமாக, தன் பிரிட்டிஷ் பதிப்புக்கள் வெளியிடுவதை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது. https://athavannews.com/2024/1382884 - தமிழினப்படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தலுக்குரிய ஏற்பாடுகள் பூர்த்தி
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.