Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. மோட்டார் சைக்கிளில் முன்னுக்கு வாறவரை... "ஜிம்மியும்", இரண்டாவதாக வாறவரை... "பிரவுணியும்" திரத்திக் கொண்டு போய் அடுத்த சந்தியிலை விடுங்க. நாங்கள் மாநாடு நடத்தும் போது ... இவங்கள் ஏன், குறுக்காலை வாறாங்கள். 😂
  2. போலி இலக்கத் தகடுகளுடன் பயணித்த சொகுசு காருடன் பெண் மருத்துவர் கைது! போலி இலக்கத் தகடுகளுடன் கூடிய சொகுசு காரை செலுத்தி வந்த பெண் மருத்துவர் ஒருவர், கண்டி பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி வாரியபொல சுமங்கல மாவத்தையில் பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து நடத்தப்பட்ட திடீர் சோதனையின் போது இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. சந்தேக நபரின் கணவரும் ஒரு மருத்துவர், இந்த காரின் உரிமை அவரது கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் அதில் உள்ள உரிமத் தகடுகள் அவரது சகோதரர்களில் ஒருவருக்குச் சொந்தமான காரின் உரிமத் தகடுகள் என்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேகத்திற்குரிய மருத்துவர் கண்டி, பேராதனையில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனையில் பணிபுரிகிறார். மேலும் இந்த சம்பவம் குறித்து கண்டி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. https://athavannews.com/2025/1446040
  3. இந்தியா.... ஈழத்தமிழருக்கு எதிராகவும், சிங்களவருக்கு ஆதரவாகவும் தானே இது வரை நடந்து வந்துள்ளது. இனிமேலும் அப்படித்தான் நடக்கும். ஈழத்தமிழர்களை கருவறுத்த இந்தியா என்ற நாடு சுக்கு நூறாக உடைந்து நாசமாகப் போகவேண்டும். அப்போதான்... ஈழத்தமிழனுக்கு விடிவு கிடைக்கும்.
  4. ஊசி போடாத நாய்களின் உரிமையாளர்களுக்கு 25000 ரூபா தண்டப் பணம் என்பது மிக அதிகம் போல் உள்ளது. அங்கு பல சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் மக்களால் இவ்வளவு பெருந்தொகைப் பணம் கட்ட முடியாதே.
  5. காணாமல்போனர் விவகாரம்; விசேட குழுக்களை நியமிக்க அனுமதி! காணாமல்போன ஆட்கள் தொடர்பான முறைப்பாடுகள் பற்றிய விசாரணைகளை நடத்துவதற்காக தகைமையுடன் கூடிய நபர்களை உள்ளடக்கிய குழுக்களை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தலும், நிருவகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும்) சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் தாபிக்கப்ப்பட்டுள்ளது. காணாமல் போன மற்றும் காணக்கிடைக்காமை ஆட்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு அவர்களுடைய உறவுகளுக்கு அறிக்கைகளை வழங்குதல் இவ் அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதுவரை குறித்த அலுவலகத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ள 16,966 முறைப்பாடுகளில் விசாரணைகளுக்காக மேலும் 10,517 முறைப்பாடுகள் காணப்படுகின்றன. அதற்கமைய இன்னலுற்றவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்காக 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் விசாரணை மற்றும் குறித்த கடமைகளை நிறைவேற்றுவதற்கான விசேட கருத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கும், குறித்த பணிகளுக்காகவும் ஓய்வுநிலை நீதிபதிகள், சிரேஷ்ட நிர்வாக அலுவலர்கள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட தகைமையுடன் கூடிய நபர்கள் 75 பேருடன் கூடிய உப பணிக்குழு 25 குழுக்களை நியமிப்பதற்கும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://athavannews.com/2025/1446035
  6. வடக்கில் பெண் நாய்களுக்கு கருத்தடை! வடக்கில் கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்த பெண் நாய்களுக்கு கருத்தடை செய்யும் திட்டம் நடைபெறவுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சு, வடக்கு மாகாண சுகாதார அமைச்சு, வடக்கு மாகாண விவசாய அமைச்சு ஆகியன இணைந்து இச் செயற்றிட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் ஏற்கனவே ஆராயப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்களின் செயலர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. அந்தவகையில் பெண் நாய்களுக்கு கருத்தடை செய்யுத் இந்தத் திட்டம் மூன்று ஆண்டுகளுக்கு தொடரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப செயற்றிட்டம் நெடுந்தீவில் இடம்பெறவுள்ளதுடன் ஒவ்வொரு மாவட்டங்களிலும் நகரங்களில் இதன் ஆரம்ப செயற்றிட்டத்தை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1446002
  7. வடக்கில் பெண் நாய்களுக்கு கருத்தடை! வடக்கில் கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்த பெண் நாய்களுக்கு கருத்தடை செய்யும் திட்டம் நடைபெறவுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சு, வடக்கு மாகாண சுகாதார அமைச்சு, வடக்கு மாகாண விவசாய அமைச்சு ஆகியன இணைந்து இச் செயற்றிட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் ஏற்கனவே ஆராயப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்களின் செயலர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. அந்தவகையில் பெண் நாய்களுக்கு கருத்தடை செய்யுத் இந்தத் திட்டம் மூன்று ஆண்டுகளுக்கு தொடரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப செயற்றிட்டம் நெடுந்தீவில் இடம்பெறவுள்ளதுடன் ஒவ்வொரு மாவட்டங்களிலும் நகரங்களில் இதன் ஆரம்ப செயற்றிட்டத்தை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1446002
  8. அரசுக்கு சொந்தமான 33 நிறுவனங்களை மூடுவதற்கு அனுமதி! தற்போது தொழிற்பாட்டு நிலையில் இல்லாத 33 அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை முறையாக மூடுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் அரசாங்கத்தின் மறுசீரமைப்பு முயற்சியின் இரண்டு கட்டங்களின் கீழ் மூடப்பட உள்ளன. பொதுமக்களுக்கு சேவைகளை வழங்கல் மற்றும் மூலோபாய ரீதியான பொருளாதார செயற்பாடுகளை ஊக்குவித்தல் போன்ற நோக்கங்களை அடைவதற்காக, குறித்த காலத்திற்கு முன்னர் தாபிக்கப்பட்டுள்ள ஒருசில அரச தொழில் முயற்சிகள் தாபிக்கப்பட்டதன் நோக்கங்கள் சமகாலத்துடன் ஏற்புடையதாக இன்மை மற்றும் சந்தைத் தேவைகளுடன் பொருந்தாமை போன்ற காரணங்களால் தொடர்ந்தும் பேணிச் செல்வதற்குவது நடைமுறைக்குச் சாத்தியமற்றது, குறைவான நிதிச் செயலாற்றுகை போன்ற காரணங்களால் செயலிழந்து காணப்படுகின்றன. தேசிய பொருளாதாரத்திற்கு அல்லது அரச சேவைகளை வழங்குவதற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குகின்ற நியதிச்சட்ட நிறுவனங்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசுக்குச் சொந்தமான கம்பனிகள் போன்ற பல்வேறு வகைகளுக்குரிய அரச தொழில் முயற்சிகள் அரசுக்கு செலவுச் சுமையாக தொடர்ந்தும் மேற்கொண்டு செல்வதற்குப் பதிலாக, குறித்த நிறுவனத்தைக் குலைத்து முடிவுறுத்துவது பொருத்தமென அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனையைக் கருத்தில் கொண்டு, குறித்த அமைச்சின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள விசேட குலைத்தல் பிரிவின் மேற்பார்வையின் கீழ் தற்போது தொழிற்பாட்டு நிலையில் இல்லாத 33 அரச தொழில் முயற்சிகளை 02 கட்டங்களாக முறையாக குறைத்து முடிவுறுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://athavannews.com/2025/1446031
  9. பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க பெல்ஜியம் முடிவு! பெல்ஜியம் அரசு பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸா மீதான இஸ்ரேல் போரில், தற்போது வரை 60,000-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் தாக்குதல்களை,இனப்படுகொலை எனக் குறிப்பிட்டு ஏராளமான நாடுகளின் அரசுகள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. ஏற்கெனவே,140-க்கும் அதிகமான சர்வதேச நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ள நிலையில், அப் பட்டியலில் தற்போது பெல்ஜியமும் இணைவதாக, அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் மாக்ஸிமே ப்ரேவோட் அறிவித்துள்ளார். பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது குறித்த பெல்ஜியமின் திட்டங்கள், வரும் செப்.9 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் அறிவிக்கப்படும் என அவர் கூறியுள்ளார். இருப்பினும், காஸாவில் உள்ள அனைத்து இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டு, பாலஸ்தீன கடலோரப் பகுதிகளில் அரசியல் அதிகாரத்தில் இருந்து ஹமாஸ் கிளர்ச்சிப்படை நீக்கப்பட வேண்டுமெனவும் இரண்டு நிபந்தனைகளை பெல்ஜியம் அரசு முன்வைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் அரசால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் உள்ள இஸ்ரேலிய குடியிருப்புகளில் இருந்து வரும் பொருள்களைத் தடை செய்யவும், ஹமாஸ் தலைவர்கள், வன்முறைக் குடியேறிகள் மற்றும் 2 தீவிர வலதுசாரி இஸ்ரேலிய அமைச்சர்கள் ஆகியோர் மீதும் தடைகளை விதிக்கவும் பெல்ஜியம் அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதில், தீவிர வலதுசாரி ஆதரவாளர்களான இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் இட்டாமர் பென் குவிர் மற்றும் நிதியமைச்சர் பெசாலெல் ஸ்மோட்ரிச் ஆகியோர் மீது தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. காஸாவில் உள்ள பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களும், ஆக்கிரமிப்பும் உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டு,நிரந்தர போர்நிறுத்தம் அறிவிக்கப்படவில்லை என்றால்,பாலஸ்தீனம் தனிநாடாக அங்கீகரிக்கப்படும் என பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட ஏராளமான நாடுகள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1445915
  10. போர்த்துக்கல் ஃபுனிகுலர் விபத்தில் 15 பேர் உயிரிழப்பு! போர்த்துக்கல் தலைநகர் லிஸ்பனில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலா தலமான 140 ஆண்டுகள் பழமையான குளோரியா ஃபுனிகுலர் (இழுவை ஊர்தி) தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 18 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஐந்து பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக லிஸ்பனின் அவசர சேவைகள் தெரிவிக்கின்றன. புதன்கிழமை (03) மாலை 6:05 மணியளவில் நடந்த இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் வெளிநாட்டினரும் அடங்குவர். இருப்பினும் அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது அடையாளம் காணப்படவில்லை. இந்த துயரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நாட்டின் ஜனாதிபதி மார்செலோ ரெபெலோ டி சூசா தனது இரங்கலை தெரிவித்தார். ஃபுனிகுலர் என்பது வாகனங்கள் செல்ல இயலாத மலைப்பகுதிகளில் பயன்படும் ஒரு வகை ரயில் அமைப்பு. இது மலையின் மேல் தளத்திலிருந்து கேபிள் கம்பி மூலம் மின் விசையால் இயக்கப்படும். குளோரியா ஃபுனிகுலர் லிஸ்பனில் உள்ள மிகவும் பிரபலமான இடங்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இது 1885 இல் ஆரம்பிக்கப்பட்டது, மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் மின்மயமாக்கப்பட்டது. https://athavannews.com/2025/1445990
  11. தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் முதல் இடம் பெற்ற.... யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் ஆனந்தசோதி லக்சயனுக்கு வாழ்த்துக்கள். 👍
  12. இது என்ன… “வடக்கன்ஸ்” பெரிய அட்டகாசமாக இருக்கிறாங்கள். 😂 மது வெறியில் தனது வீட்டு மடியில் இருந்து விழுந்து செத்தாலும், நட்ட ஈடு கேட்கிறாங்கள். 🤣 டாஸ்மாக்கின் “வீரனை” குடித்துவிட்டு… வீர விளையாட்டு எல்லாம் நடக்குது. 😂🤣
  13. செம்மணி விவகாரம்; விசாரணையில் பொறுப்புக்கூறலை உறுதி செய்யுமாறு மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்து! யாழ்ப்பாணம், செம்மணி மனித புதைகுழி தொடர்பான விசாரணையில் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கு வலுவான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணையம் (HRCSL) வலியுறுத்தியுள்ளது. சாட்சிகள் மற்றும் ஊடகங்களை அச்சுறுத்துவதைத் தவிர்க்குமாறு பொலிஸாருக்கும், விசாரணையில் தலையிடுவதைத் தவிர்க்குமாறு இலங்கை இராணுவத்திற்கும் அது அழைப்பு விடுத்தது. சில நிறுவன நிறுவனங்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றினாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நீதியை உறுதி செய்வதற்காக முறையான இடைவெளிகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று ஆணையம் வலியுறுத்தியது. இந்த விசாரணையில் 200க்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 90 சதவீதத்திற்கும் அதிகமான உடல் பாகங்கள் ஆடைகள் இல்லாமல் கண்டெடுக்கப்பட்டு ஆழமற்ற குழிகளில் புதைக்கப்பட்டதாக ஆணையம் குறிப்பிட்டது. இது நீதிக்குப் புறம்பான கொலைகள் என்ற சந்தேகத்தை எழுப்புவதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது. https://athavannews.com/2025/1445906
  14. இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் தொழிற்சாலை; விசாரணைகள் தீவிரம்! நுவரெலியாவில் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) போதைப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். ‘கெஹெல்பத்தர பத்மே’ எனப்படும் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த நபர் இந்தத் தொழிற்சாலையில்04 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை முதலீடு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், குறித்த தொழிற்சாலையை இயக்குவதற்காக நுவரெலியாவில் ஒரு வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக 2000 கிலோவுக்கும் அதிகமான இரசாயனங்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாகவும் அவர் கூறினார். மேலும், இந்த பாதாள உலக நபர்கள் போலி கடவுச்சீட்டுகளை பெறுவதற்காக அரசியல் தொடர்புகள், பொலிஸ் அதிகாரிகளுடனான தொடர்புகள் மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளுடனான தொடர்புகள் பற்றிய தகவல்கள் வெளிச்சத்திற்கு வநதுள்ளன. இந்த விவரங்களை உறுதிப்படுத்த மேலும் ஆழமான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். https://athavannews.com/2025/1445900
  15. விசா பிரச்சினையால் இலங்கை வீரர்களின் ஆசிய கராத்தே கனவு கலைந்தது! சீனாவில் நடைபெறும் 23 ஆவது ஆசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க நேற்று (02) புறப்படவிருந்த இலங்கை கராத்தே விளையாட்டு வீரர்கள் விசா பிரச்சினையை எதிர்கொண்டனர் இதனால், அவர்களால் திட்டமிட்ட பயணத்தையும் மேற்கொள்ள முடியாது போனதாக தெரிவிக்கப்படுகிறது. அறிக்கைகளின்படி, திட்டமிடப்பட்ட விமான நேரம் இருந்தபோதிலும் விளையாட்டு வீரர்களுக்கு விசாக்கள் கிடைக்கவில்லை. இதன் விளைவாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்த அணியினர் மன உளைச்சலை எதிர் கொண்டனர். 23 ஆவது ஆசிய கராத்தே சாம்பியன்ஷிப் செப்டம்பர் 5 முதல் 7 வரை சீனாவில் நடைபெற உள்ளது. இதில் 29 இலங்கை விளையாட்டு வீரர்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த தகுதி பெற்றுள்ளனர். விமான கட்டணம், விசா செயலாக்கம் மற்றும் பிற தளவாட ஆதரவு உள்ளிட்ட செலவுகளை ஈடுகட்ட இலங்கை கராத்தே-டோ கூட்டமைப்பு ஒவ்வொரு பங்கேற்பாளரிடமிருந்தும் ரூ. 580,000 வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை கராத்தே-டோ கூட்டமைப்பின் அதிகாரிகள், விளையாட்டு வீரர்களை விமான நிலையத்திற்கு வருமாறு தெரிவித்து, இன்று காலைக்குள் விசாக்கள் வழங்கப்படும் என்று உறுதியளித்தனர். இருப்பினும், சீனாவுக்கான விமானம் நேற்று பிற்பகல் 2:00 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. மேலும் கூட்டமைப்பு தேவையான விசாக்களை சரியான நேரத்தில் பெறத் தவறியதால், விளையாட்டு வீரர்களின் பங்கேற்பு நம்பிக்கைகள் பொய்த்துப் போயின. இந்த சம்பவம் குறித்த விசாரணைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, கராத்தே விளையாட்டு வீரர்கள் எதிர்கொள்ளும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை குறித்து விசாரணை நடத்தப்படும் என்று விளையாட்டுத் துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன தெரிவித்தார். https://athavannews.com/2025/1445889
  16. ஹரக் கட்டாவை கொலை செய்ய சதித்திட்டம்! சிக்கிய துப்பாக்கிதாரி. பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ஹரக் கட்டாவை நீதிமன்ற வளாகத்தில் கொலை செய்ய திட்டமிட்டு, ஊடகவியலாளர் போல் மாறுவேடமிட்டிருந்த துப்பாக்கிதாரி ஒருவர் மேற்கு மாகாண வடக்கு குற்றப் பிரிவால் கைது செய்யப்பட்டார். குறித்த சந்தேக நபர் நேற்று மஹரகமவில் வைத்து கைது செய்யப்பட்டார். இக் கொலைத் திட்டம், கெஹெல்பத்தர பத்மேவின் வேண்டுகோளின் பேரில் திட்டமிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை சந்தேக நபரிடமிருந்து எரிந்த நிலையில் ஒரு வீடியோ கெமரா மற்றும் துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1445853
  17. பேருந்திலிருந்து தவறி வீழ்ந்த பெண் வைத்தியர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! பெல்மதுல்லை பகுதியில் கடந்த ஆகஸ்ட் 19 ஆம் திகதி தனியார் பேருந்து ஒன்றிலிருந்து தவறி வீழ்ந்த 32 வயதுடைய பெண் வைத்தியர் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் 14 நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் உயிரிழந்தார். இறந்தவர் இரத்தினபுரியைச் சேர்ந்த வைத்தியர் பி. மதரா மதுஷானி என அடையாளம் காணப்பட்டுள்ளார். மட்டக்களப்பு-கொழும்பு பிரதான சாலையில் தனியார் பேருந்தில் அவர் பயணம் செய்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. பெல்மதுல்லை பொலிஸ் நிலையத்திற்கு அருகில், குறித்த பேருந்தின் சாரதி எதிர்பாராத விதமாக திடீரென பிரேக் பிடித்ததால் அவர் பேருந்தில் இருந்து கீழே வீழ்ந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது. https://athavannews.com/2025/1445883
  18. வெனிசுலா கப்பல் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் – 11 பேர் உயிரிழப்பு. வெனிசுலா கடற்கரையை அண்டிய கடற்பரப்பில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கப்பல் மீது அமெரிக்க இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர். தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவின் ஜனாதிபதியாக நிக்கோலஸ் மதுரோ மூன்றாவது முறையாக பதவி வகித்து வருகிறார். அவர், உலகின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவராக செயல்படுவதாகவும், போதைப்பொருள் கும்பல்களுடன் இணைந்து அமெரிக்காவிற்குள் போதைப் பொருட்களை விநியோகம் செய்வதாகவும் கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில் வெனிசுலா கடற்கரையில் ஒரு கப்பலின் மீது அமெரிக்கப் படைகள் இராணுவத் தாக்குதல் நடத்தியதில், 11 பேர் கொல்லப்பட்டனர். வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவுடன் தொடர்புடைய போதைப்பொருள் பயங்கரவாதிகள், சர்வதேச கடல் வழியாக அமெரிக்காவை நோக்கிப் போதைப்பொருட்களை கொண்டு சென்றபோது அவர்களைக் குறிவைத்து இத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்நிலையில், வெனிசுலா ஜனாதிபதி மதுரோவுடன் தொடர்புடைய போதைப்பொருள் பயங்கரவாதிகள் சர்வதேச கடல் வழியாக அமெரிக்காவை நோக்கி போதைப்பொருட்களை கொண்டு சென்றபோது, அவர்களை குறிவைத்து அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1445849
  19. 2025 ஆம் ஆண்டிற்கான வனவிலங்கு புகைப்படக் கலைஞர் விருதை வென்றார் லக்ஷித! லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உலகப் புகழ்பெற்ற வனவிலங்கு புகைப்படக் கலைஞர் Wildlife Photographer of the Year (WPY) போட்டியில் வனவிலங்கு புகைப்படக் கலைஞர் லக்ஷித கருணாரத்ன மீண்டும் ஒரு விருதை வென்று இலங்கைக்கு பெறுமை சேர்த்துள்ளார். “வனவிலங்கு புகைப்படக் கலைஞரின் ஆஸ்கார் விருதுகள்” என்று அழைக்கப்படும் இந்தப் போட்டியில், அவர் இரண்டு தடவைகள் வெற்றி பெற்ற முதல் இலங்கையர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 61 ஆண்டுகால WPY வரலாற்றில் இது ஒரு முக்கியமான சாதனையாகக் கருதப்படுகிறது. 1965 முதல் நடைபெற்று வரும் இந்தப் போட்டிக்கு, இந்த ஆண்டு மட்டும் 120க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 60,636 புகைப்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அதில் 100 புகைப்படங்கள் மட்டுமே விருதுகளுக்குத் தேர்வாகியுள்ளன. லக்ஷிதவின் விருது பெற்ற ‘Toxic Tip’ எனும் தலைப்பிலான புகைப்படம், அம்பாறை மாவட்டத்தில் எடுக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளாக மனித-யானை மோதல்கள் மற்றும் தவறான கழிவு மேலாண்மை தொடர்பான தகவல்களை சேகரித்து வந்த அவர், உணவுக்காக ஒரு பெரிய குப்பைக் கிடங்கில் தேடும் தனி யானையின் புகைப்படத்தைப் பதிவு செய்துள்ளார். இந்த படம், இலங்கையில் பிளாஸ்டிக், பொலிதீன், மைக்ரோபிளாஸ்டிக் போன்ற கழிவுகளை உட்கொள்வதால் யானைகளுக்கு ஏற்படும் ஆபத்துகளை வெளிப்படுத்துகிறது. இத்தகைய கழிவுகள் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்துவதோடு, யானைகளின் ஆயுட்காலத்தையும் குறைக்கிறது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இலங்கை, ஆசியாவில் மனித-யானை மோதல்கள் அதிகம் நிகழும் நாடுகளில் ஒன்றாக உள்ளது. ஆண்டுதோறும் சுமார் 400 யானைகளும், 100க்கும் மேற்பட்ட மனிதர்களும் இந்த மோதல்களில் உயிரிழப்பதாக தரவுகள் கூறுகின்றன. இந்நிலையில் இது தொடர்பாக லக்ஷித கருணாரத்ன கருத்துத் தெரிவிக்கையில்” “இந்த விருது எனக்கானதல்ல; நமது வாழ்க்கை முறை மற்றும் கழிவு மேலாண்மை வனவிலங்குகளை எவ்வாறு பாதிக்கின்றன என்பதற்கான ஒரு எச்சரிக்கை. யானைகள் நமது கலாசார அடையாளத்தின் பகுதியாக உள்ளதால், அவற்றைப் பாதுகாப்பது நமது பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கு சமம்,” எனக் கூறினார். இந்த வெற்றி, இலங்கையை உலக வனவிலங்கு புகைப்படத் துறையில் மீண்டும் உயர்த்தி நிறுத்திய பெருமையான தருணமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1445775
  20. ரணிலின் உடல்நிலை கவலைகளால் ஐ.தே.க.வின் ஆண்டு விழா ஒத்திவைப்பு! எதிர்வரும் செப்டம்பர் 6 ஆம் திகதி நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலையைக் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று (02) கூடிய கட்சியின் நிர்வாகக் குழுவால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுக்கோரல தெரிவித்தார். இந்த மாத இறுதியில் நிகழ்வு மீண்டும் திட்டமிடப்படும். ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்ட மருத்துவ ஆலோசனை மற்றும் கட்சி குழு உறுப்பினர்களின் வேண்டுகோளின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். https://athavannews.com/2025/1445823

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.