Everything posted by தமிழ் சிறி
-
இந்த ஆண்டிற்கான "நோபல் பரிசு" பெற்றவர்கள்.
இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு! 2025 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகளான ஜான் கிளார்க், மைக்கேல் டெவோரெட் மற்றும் ஜான் மார்டினிஸ் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சார சர்க்யூட்களில் மைக்ரோஸ்கோபிக் குவாண்டம் மெக்கானிக்கல் டனல் மற்றும் ஆற்றல் அளவீட்டைக் கண்டுபிடித்ததற்காக அமெரிக்காவை சேர்ந்த ஜான் கிளார்க், மைக்கேல் எச்.டெவோரெட் மற்றும் ஜான் எம். மார்டினிஸ் ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படும் என்று ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் இன்று ஸ்டாக்ஹோமில் அறிவித்தது. நூற்றாண்டு பழமையான குவாண்டம் இயக்கவியல் தொடர்ந்து புதிய ஆச்சரியங்களை வழங்குவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. குவாண்டம் மெக்கானிக்ஸ் அனைத்து டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கும் அடித்தளமாக இருப்பதால், இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நோபல் பரிசு குழுவின் தலைவர் ஓலே எரிக்சன் கருத்து தெரிவித்தார். மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு விஞ்ஞானி ஆல்ஃபிரட் நோபல் நினைவாக ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வென்றவர்கள் குறித்த அறிவிப்பு நேற்று முதல் வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த மேரி இ பிரன்கோவ், ஃப்ரெட் ராம்ஸ்டெல் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டது. இவ்விருது அறிவிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தங்க பதக்கம், பட்டயம், ரொக்கப் பரிசு 11 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர் அதாவது இலங்கை மதிப்பில் 3 கோடி ரூபா உள்ளிட்டவை ஆல்பிரட் நோபல் நினைவு நாளான டிசம்பர் 10-ம் திகதி வழங்கப்படும் என்பதும் குறிப்பிடதக்கது. https://athavannews.com/2025/1449789
-
சுமந்திரன் பதவி விலகினால் ஏற்படப் போகும் மாற்றம் ..!
பண்டார வன்னியன் காலத்திலிருந்து... காட்டிக் கொடுத்த எட்டப்பன் காக்கை வன்னியன் ஈறாக, தேசியத் தலைவர் பிரபாகரன் வரை... டக்ளஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான் என்று... தமிழனை எதிரிகளிடம் காட்டிக் கொடுத்து வயிறு வளர்த்துக் கொண்டே வந்திருப்பது தமிழ் இனத்தின் சாபக்கேடு. மற்றைய இனங்களில்.... அந்த இனத்திற்கு ஒரு ஆபத்து வரும் போது... தமது மொழியின் எதிர்கால நலன் கருதி மொத்த இனமும் ஒரு அணியில் ஒற்றுமையாக திரண்டு தம் இனத்திற்காக குரல் கொடுக்கும். ஆனால் உலகின் மூத்த இனமான தமிழ் இனத்தில் மட்டும்.... அற்ப சலுகைகளுக்காகவும், எதிரி போடும் எலும்புத் துண்டிற்காகவும்... மதம் மாறியும், இனம் மாறியும்.. இனத்தை காட்டிக் கொடுப்பவர்களும், காட்டிக் கொடுப்பவர்களுக்கு வெள்ளை அடித்து... முட்டுக் கொடுப்பவர்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்து இனத்தை கருவறுத்துக் கொண்டே இருப்பார்கள். இவர்களை ஓட்டுக் குழுக்கள் என்றும், வெள்ளை வேட்டி கள்ளர் என்றும், செம்பு தூக்கிகள் என்றும்... காலத்திற்கு காலம் ஒவ்வொரு அடைமொழியுடன் அழைத்தாலும்... எருமை மாட்டின் மீது மழை பெய்த மாதிரி ஒரு அசுமாத்தமும் இல்லாமல் இருப்பது இவர்களின் தனிக் குணம். மற்றைய இனங்களில் இப்படி சோரம் போகின்றவர்களுக்கு, முதுகில் பச்சை மட்டையால் நாலு சாத்து சாத்தி... உப்புக்கருவாடு போட்டிருப்பார்கள்.
-
கருத்து படங்கள்
- நாகொடையில் பேனா வடிவிலான துப்பாக்கி மீட்பு!
நாகொடையில் பேனா வடிவிலான துப்பாக்கி மீட்பு! காலி, நாகொடை பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பேனா வடிவிலான துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளை வைத்திருந்ததற்காக 23 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாகொடை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலைத் தொடர்ந்து நேற்று (06) மாலை இந்த கைது இடம்பெற்றுள்ளது. கைப்பற்றப்பட்ட துப்பாக்கி, பேனா வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு தோட்டாவை மட்டுமே சுடும் திறன் கொண்டது. கைது செய்யப்பட்ட நேரத்தில் இரண்டு சுடப்படதாத தோட்டாக்கள், பயன்படுத்தப்படாத தோட்டங்கள் என்பவற்றை பொலிஸார் மீட்டனர். மாபலகமவைச் சேர்ந்த சந்தேக நபர், விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் நாகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1449702- யாழில் காணி உறுதிப்பத்திரம் தொடர்பான முறைப்பாட்டின் கீழ் பெண் சட்டத்தரணி கைது
வட மாகாண சட்டத்தரணிகள் இன்று ஒருநாள் பணிப்புறக்கணிப்பில்! உரிய வகையில் தேடுதல் ஆணை இல்லாது பொலிஸாரால் சோதனை முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வட மாகாண சட்டத்தரணிகள் இன்று (7) ஒருநாள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் அனைத்து நீதிமன்றங்கள் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா உள்ளிட்ட மாவட்டங்களை பிரதிநிதித்துவம் செய்யும் சட்டத்தரணிகள் இணைந்து போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்துள்ளனர். இந்தப் போராட்டமானது யாழ்ப்பணத்தில் உள்ள நீதிமன்ற வளாகம் முன்னிலையில் இன்று காலை (07) ஆரம்பமானது. இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக நீதிமன்ற நடவடிக்கைகள் ஸ்தம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் காணி உறுதி மோசடிகளில் ஈடுபட்டார்கள் என சட்டத்தரணிகள் சிலருக்கு எதிராக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் நேற்று முன்தினம் காணி மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளான சட்டத்தரணி ஒருவரை கைது செய்யும் நோக்குடன் அவரது வீட்டுக்கு சென்ற பொலிஸார் வீட்டினுள் சென்று தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். வீட்டினுள் சென்று தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுக்க எவ்வித நீதிமன்ற அனுமதியும் பெறாது பொலிஸார் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து தேடுதல் மேற்கொண்டதாகவும் , பொலிசாரின் நடவடிக்கையை கண்டித்து வடமாகாண சட்டத்தரணிகள் இன்றைய தினம் நீதிமன்றங்களில் வழக்குகளுக்கு தோன்றாது பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதுடன் , நீதிமன்றங்களுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இதேவேளை , காணி மோசடி குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுத்துள்ள சட்டத்தரணிகள் தம்மை பொலிஸார் கைது செய்வதனை தடுக்கும் முகமாக நாளைய தினம் (08) நீதிமன்றங்களில் முன் பிணை கோரவுள்ளதாகவும் அறியமுடிகிறது. https://athavannews.com/2025/1449742- இந்தியா – பாகிஸ்தான் மோதலை முடிவுக்கு கொண்டுவர முக்கிய பங்கு வகித்ததாக ட்ரம்ப் மீண்டும் தெரிவிப்பு!
இந்தியா – பாகிஸ்தான் மோதலை முடிவுக்கு கொண்டுவர முக்கிய பங்கு வகித்ததாக ட்ரம்ப் மீண்டும் தெரிவிப்பு! வர்த்தக அச்சுறுத்தல்களைப் பயன்படுத்தி இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இராணுவ மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதில் தான் முக்கிய பங்கு வகித்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று (06) மீண்டும் ஒருமுறை கூறியுள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் மோதல்கள் அதிகரித்திருந்த நிலையில், அணு ஆயுதம் ஏந்திய இரண்டு நாடுகளையும் போர் நிறுத்தத்தை நோக்கித் தள்ளியது அவரது ஆக்ரோஷமான வரி உத்தி என்று கூறிய ட்ரம்ப், தான்தான் உலகளாவிய அமைதியை நிலைநாட்டுபவர் என்று கூறினார். அவரது வரி அச்சுறுத்தலைப் பாராட்டிய அவர், அது வொஷிங்டனுக்கு “நூற்றுக்கணக்கான பில்லியன் டொலர்களை” ஈட்டித் தருவதாகக் கூறினார். அமெரிக்கத் தலைவர் இதுபோன்ற கூற்றுக்களை கூறுவது இது முதல் முறை அல்ல. மே 10 ஆம் திகதி, வொஷிங்டனின் மத்தியஸ்தத்தில் “நீண்ட இரவு” பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் “முழுமையான, உடனடி” போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதாக ட்ரம்ப் சமூக ஊடகங்களில் அறிவித்திருந்தார். அதன் பின்னர் ஆகஸ்ட் மாதம், இரண்டு ஆசிய அண்டை நாடுகளுக்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக வொஷிங்டன் வர்த்தகத்தை நிறுத்தி வைப்பதாகவும், அதிக வரிகளால் புது டெல்லிக்கு அழுத்தம் கொடுப்பபோம் என பிரதமர் மோடியை மிரட்டியதாக ட்ரம்ப் கூறினார். எனினும், பாகிஸ்தான் இராணுவத்தின் இராணுவ நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் ஜெனரல், இந்த விவகாரம் தொடர்பாக நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் மோடியை அணுகிய பின்னர், போர் நிறுத்தம் குறித்த புரிதல் எட்டப்பட்டதாக இந்தியா கூறி வருகிறது. பாகிஸ்தான் ஆரம்பத்தில் இந்தக் கூற்றை மறுத்தாலும், பின்னர் அதை ஏற்றுக்கொண்டது. https://athavannews.com/2025/1449725- காசா போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இரகசிய பேச்சுவார்த்தை!
காசா போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இரகசிய பேச்சுவார்த்தை! காசா போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்க அமைதி திட்டம் குறித்த இறுதி ஒப்பந்தத்தை அடைவதற்கான மறைமுக பேச்சுவார்த்தைகள் எகிப்தின் ஷார்ம் எல்-ஷேக் நகரில் ஆரம்பமாகியுள்ளன. இதன்மூலம் இஸ்ரேலிய பணயக் கைதிகளையும் பலஸ்தீன பணயக் கைதிகளையும் விடுவிப்பதற்கான ஒப்பந்தம் சாத்தியமாகும் என கூறப்படுகிறது. ஹமாஸ் அமைப்பு, அமைதி திட்டத்தின் சில முன்மொழிவுகளுக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் பல கோரிக்கைகளுக்கு இதுவரையில் பதில் அளிக்கவில்லை எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை எதிர்வரும் சில நாட்களில் சிறைபட்டவர்களின் விடுதலை குறித்து அறிவிக்க முடியும் என நம்புவதாக இஸ்ரேல் பிரதமர் கடந்த சனிக்கிழமை தெரிவித்திருந்தார். மேலும், காஸா அமைதி திட்டத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் இந்த திட்டத்தை அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள் எனவும் திட்டம் அமுலுக்கு வந்தால் மத்திய கிழக்கில் முதல் முறையாக அமைதி நிலவும் எனவும் பணயக்கைதிகளை உடனடியாக மீட்போம் எனவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றது எனவும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1449713- இங்கிலாந்தில் BYDஇன் விற்பனை 880 சதவீதம் அதிகரிப்பு!
இங்கிலாந்தில் BYDஇன் விற்பனை 880 சதவீதம் அதிகரிப்பு! சீனாவின் கார் தயாரிப்பு நிறுவனமான BYD, செப்டம்பர் மாதத்தில் சீனாவிற்கு வெளியே அதன் மிகப்பெரிய சந்தையாக இங்கிலாந்து மாறியுள்ளது என்று கூறுகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 2025 செப்டம்பர் மாதத்தில் அதன் விற்பனை அங்கு 880% அதிகரித்துள்ளது. கடந்த மாதம் இங்கிலாந்தில் 11,271 கார்களை விற்றதாக நிறுவனம் கூறுகிறது, அதன் Seal U sports utility (SUV) வாகனத்தின் பிளக்-இன் ஹைப்ரிட் பதிப்பு அந்த விற்பனையில் பெரும்பகுதியைக் கொண்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மின்சார வாகனங்களின் (EV) விற்பனை சாதனை அளவை எட்டியதாக கார் தொழில்துறை அமைப்பான மோட்டார் உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் (SMMT) புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து இது வந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா போன்ற பிற முக்கிய சந்தைகளைப் போலல்லாமல், சீன மின்சார வாகனங்களுக்கு நாடு வரிகளை விதிக்காததால், BYD போன்ற நிறுவனங்களுக்கு இங்கிலாந்தில் குறிப்பாக கவர்ச்சிகரமானதாக உள்ளது. மேற்கத்திய போட்டியாளர்களை விட மலிவான மொடல்களை வழங்கும் BYD, செப்டம்பரில் இங்கலிந்து சந்தையில் அதன் பங்கு 3.6% ஆக உயர்ந்துள்ளதாகக் கூறியது. வரும் மாதங்களில் நிறுவனம் மேலும் புதிய கலப்பின மற்றும் மின்சார கார்களை அறிமுகப்படுத்தும் என்று BYD இன் இங்கிலாந்துக்கான முகாமையாளரம் போனோ ஜி கூறினார். கடந்த ஆண்டு ஒக்டோபரில், ஐரோப்பிய ஒன்றியம் சீன மின்சார வாகனங்களின் இறக்குமதியை 45% வரை வரிகளுடன் பாதிக்கும் என்று அறிவித்தது. இந்த நடவடிக்கை ஐரோப்பிய கார் தயாரிப்பாளர்கள் நியாயமற்ற சீன-அரசு மானியங்கள் என்று ஐரோப்பிய ஒன்றியம் நம்புவதால் பாதிக்கப்படுவதிலிருந்து பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது முன்னோடி ஜோ பைடன் இருவரும் ஆதரித்த உயர் கட்டணங்களால் BYD போன்ற சீன கார் தயாரிப்பாளர்கள் அமெரிக்காவிலிருந்து திறம்பட மூடப்பட்டுள்ளனர். https://athavannews.com/2025/1449698- 40,000 மொபைல்கள் திருட்டு; சர்வதேச கொள்ளை கும்பல் இங்கிலாந்தில் கைது!
40,000 மொபைல்கள் திருட்டு; சர்வதேச கொள்ளை கும்பல் இங்கிலாந்தில் கைது! கடந்த ஆண்டில் இங்கிலாந்தில் இருந்து சீனாவிற்கு 40,000 திருடப்பட்ட மொபைல் தொலைபேசிகளை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒரு சர்வதேச கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. தொலைபேசி திருட்டுகளுக்கு எதிரான இங்கிலாந்தின் மிகப்பெரிய நடவடிக்கையாக இது அமைந்ததாக மெட்ரோபொலிட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது. இதன்போது, 18 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், 2,000 க்கும் மேற்பட்ட திருடப்பட்ட மொபைல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. லண்டனில் திருடப்பட்ட அனைத்து மொபைல்களிலும் பாதி வரை ஏற்றுமதி செய்ததற்கு இந்தக் கும்பல் காரணமாக இருக்கலாம் என்று பொலிஸார் நம்புகின்றனர் – இங்கிலாந்தில் பெரும்பாலான மொபைல்கள் இங்குதான் திருடப்படுகின்றன. கடந்த வாரம், திருட்டு, திருடப்பட்ட பொருட்களைக் கையாளுதல் மற்றும் திருட்டு சதி செய்ததாக சந்தேகத்தின் பேரில் மேலும் 15 பேரை அதிகாரிகள் கைது செய்தனர். சந்தேக நபர்களில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் பெண்கள், ஒரு பல்கேரிய நாட்டவர் உட்படவரும் அதில் அடங்குவர். கடந்த நான்கு ஆண்டுகளில் லண்டனில் திருடப்பட்ட தொலைபேசிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. 2020 இல் இது 28,609 ஆக இருந்தது, 2024 இல் 80,588 ஆக உயர்ந்துள்ளது. இங்கிலாந்தில் திருடப்பட்ட அனைத்து மொலைபல்களில் நான்கில் மூன்று சதவீதம் லண்டனில் திருடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2025/1449692- நிறைவேறவுள்ள ஜெனீவா தீர்மானம் மிக மோசமானது; சுமந்திரனுக்கு இதில் பங்குண்டு; கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு
சுத்துமாத்து சுமந்திரன் என்றுமே….. தமிழ் இனம் சார்ந்தோ, தமிழரசு கட்சி சார்ந்தோ…. கொள்கை அளவில், பாதிக்கப் பட்ட தமிழ் மக்களுக்காக நல்ல முடிவு எடுக்கும் மனிதன் கிடையாது. செய்வது முழுக்க “பின்கதவு சுத்துமாத்து” வேலைகள்தான். கடந்த காலங்களில் கூட…. ஜனாதிபதிகளாக இருந்த மகிந்த, கோத்தா, மைத்திரி, ரணில் போன்றவர்களை…. தமிழரசு கட்சிக்கும், சக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெரியாமல், இரகசியமாக பின் கதவால் சென்று சந்தித்து விட்டு வந்து, அதனைப் பற்றி வெளியில் எதுவும் சொல்லாமல் “அமுசடக்கி திருடன்” போல் இருப்பது அவரின் வழமையான செயல். ஜனாதிபதிகளை பின்கதவால் சந்தித்த செய்திகள் பத்திரிகைகளில் கசிந்த பின்பு…. தான், இவர் அங்கு சென்று இரகசிய சந்திப்பு நடத்தியது வெளியே தெரிய வரும். அதே போன்று தான்… வெளி நாட்டு தூதுவர்களையும் கட்சி சார்பாக அல்லாமல், தனியாக சென்று சந்தித்து…. சந்திப்பில் என்ன விடயமாக பேசப் பட்டது என்பது குறித்தும் வெளிப்படைத் தன்மை இல்லாமல் “இருட்டுக்குள், திருட்டு பேரம்” பேசுவதை வழமையாக கொண்ட கீழ்த்தரமான நடத்தை கொண்ட தமிழ் மக்களுக்கு எள்ளளவும் பிரயோசனமற்ற ஆபத்தை விளைவிக்கும் கேடு கெட்ட மனிதன்தான் சுமந்திரன். சுமந்திரன்…. காலம் காலமாக செய்து வரும், இந்தத் திருட்டுத்தனமான இரகசிய சந்திப்புக்களால் தமிழ் மக்களுக்கு ஒரு நன்மையோ, அல்லது ஏதாவது ஒரு முன்னேற்றமோ கிடைத்ததா என்றால்… எதுவுமே இல்லை என்பதுதான் உண்மை நிலை. “தமிழ் மக்களை காட்டிக் கொடுத்து…. தங்களது வயிற்றை வளர்க்கும்” இந்தச் செயல் உடனடியாக, அடியோடு நிறுத்தப் பட வேண்டும். வர இருக்கும் ஜெனீவா தீர்மானம் சம்பந்தமாக…. சுமந்திரன், பிரித்தானியாவுக்கு இரகசியமாக சென்று தமிழ் மக்களை காட்டிக் கொடுக்கும் வேலைகளை செய்யக் கூடிய ஆள்தான் சுமந்திரன். சுமந்திரன், கடந்த காலங்களில் கூட… ஐக்கிய நாடுகள் சபையில், போர்க்குற்ற விசாரணகளுக்கு வெளிநாட்டு விசாரணை தேவை இல்லை, உள்ளக விசாரணையே போதும் என்றும் சொல்லி ஶ்ரீலங்கா சிங்களவருக்கு முட்டுக் கொடுத்து விட்டு வந்த, “தற்குறி”தான் சுமந்திரன். இப்படிப்பட்ட….. சுமந்திரன் போன்ற நாத்தம் பிடித்த அரசியல்வாதிகளால், தமிழ் மக்களின் எதிர்கால இருப்பு, ஆபத்தாக மாறி விட்டது என்பதே கசப்பான உண்மை.- 6 குழந்தைகளின் உயிர்களை பலியெடுத்த இருமல் மருந்து!
டாஸ்மாக்கும்…. சத்து டானிக்தான். 😂 ஆனால் என்ன அதை குடிக்கிறவன் சத்தம் இல்லாமல் மேல்லோகம் போகிறான். 😜 அதற்குள் விசச் சாராயம் குடித்து இறந்தவனுக்கு… 10 லட்சம் ரூபாய், பம்பர் பரிசு. 😂 இது தெரியாமல்… இங்கை நின்று குப்பை கொட்ட வேண்டி இருக்கு. 🤣- இரசித்த.... புகைப்படங்கள்.
- தெஹிவளை மிருகக் காட்சிசாலையில் இருந்து 32 புறாக்கள் திருட்டு.
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து 32 புறாக்கள் திருடப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெஹிவளை பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக அதன் பிரதி பணிப்பாளர் ஹேமந்த சமரசேகர தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு அல்லது சனிக்கிழமை அதிகாலை இந்த பறவைகள் திருடப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பறவைகள் வைக்கப்பட்டிருந்த கூண்டை உடைத்து புறாக்கள் திருடப்பட்டதாகவும், நீதிமன்ற உத்தரவின் பேரில் பல்வேறு சந்தர்ப்பங்களில் வழக்குப் பொருட்களாக தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் புறாக்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக ஒழுக்காற்று நடவடிக்கையாக மிருகக்காட்சிசாலையில் பறவைகள் வைக்கப்பட்டிருந்த பிரிவின் பொறுப்பதிகாரியை இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி பணிப்பாளர் ஹேமந்த சமரசேகர மேலும் தெரிவித்தார். இருப்பினும், இந்தத் திருட்டில் ஈடுபட்ட நபர் அல்லது திருடப்பட்ட புறாக்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை என்று தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விடயம் குறித்து தெஹிவளை பொலிஸாரும் விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளனர். https://www.battinews.com/2025/10/32.html?fbclid=IwY2xjawNQr1ZleHRuA2FlbQIxMABicmlkETBlSUNTVG96M2YzazZWcXQyAR5fo_W4FBwSC1z7TpZFFSS0uAKKSraxCCpAENqBL-Vuq8g4ofAmbqGUEXirMQ_aem_9GebpKWcyuLws0tn8O1l6g- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- இந்த ஆண்டிற்கான "நோபல் பரிசு" பெற்றவர்கள்.
மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு! இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று(6) முதல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் முதலாவது நாளான இன்று மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுக்காக மொத்தம் 338 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. உ லகின் உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு, மருத்துவத்துக்காக அமெரிக்காவை சேர்ந்த 2 விஞ்ஞானிகள் மற்றும் ஜப்பானை சேர்ந்த விஞ்ஞானிக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு தாங்கு திறன் குறித்த ஆய்வுக்காக இந்த விருது அவர்களுக்கு வழங்கப்படுகிறது. உலகின் உயரிய விருதுகளில் ஒன்றாக பார்க்கப்படும் நோபல் பரிசு, கடந்த 1091ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும், மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகியவற்றில் சிறப்பான பங்களிப்பு வழங்கியவர்களுக்கு இந்த விருது கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில், ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இந்தாண்டுக்கான நோபல் பரிசு பெறப்போகும் விருதாளர்களின் பெயர்கள், இன்று முதல் நாள்தோறும் ஒவ்வொரு துறையாக அறிவிக்கப்பட இருக்கிறது. முதல்நாளான இன்று (06) மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெறுபவரின் விபரம் வெளியிடப்பட்டது. இந்தாண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த மேரி பிரங்கோ, பிரட் ராம்ஸ்டெல் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த ஷிமொன் சாகாகுச்சி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நோபல் விருது குழு அறிவித்துள்ளது. இதேவேளை, பாகிஸ்தான் தலைவர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை பரிந்துரைத்ததாக கூறியுள்ளனர். ஆனால் ஜனவரி 31 என்ற காலக்கெடுவுக்கு பின்னர் அவர்கள் பரிந்துரை செய்துள்ளதால் நடப்பு ஆண்டுக்கான விருதுக்கு ட்ரம்ப்பின் பெயர் பரீசீலிக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதேவேளை ட்ரம்ப் தற்போது சர்வதேச உறவுகளை சீர்குலைத்து வருகிறார் என குற்றம்சாட்டும் நோபல் விருது குழு ட்ரம்ப் தனது கொள்கைகளை மாற்றிக்கொண்டால் மட்டுமே நோபல்பரிசு பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படும் என கூறியுள்ளது. இம் முறை நோபல் பரிசுக்கு மனித உரிமை அமைப்புகள், பத்திரிகையாளர்கள், ஐ.நா போன்ற அமைப்புகளை குழுவினர் முன்னிலைப்படுத்தி இருக்கலாம் என கூறப்படும் நிலையில் ஆச்சரியமிக்க அறிவிப்புகளையும் வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. https://athavannews.com/2025/1449649- சுமந்திரன் பதவி விலகினால் ஏற்படப் போகும் மாற்றம் ..!
சுமந்திரன்… இதுவரை தமிழ் மக்களுக்கு, ஒரு ஆணியும் புடுங்கவில்லை. அவர் புடுங்கின ஆணி முழுக்க சிங்களவருக்குத்தான். ஆன படியால் சிங்கள சம்பந்தி சுமன்…. கண்டி, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை போன்ற சிங்களப் பகுதிகளில் போட்டியிட்டு… அவரின் “பாராளுமன்ற கனவை” நிறைவேற்றும் படி… வேண்டிக் கொள்கின்றோம். 😂 தமிழ் பகுதிகளில் நின்றால்… மீண்டும், மீண்டும் மண் கவ்வுவது நிச்சயம். 🤣- சுமந்திரன் பதவி விலகினால் ஏற்படப் போகும் மாற்றம் ..!
சுமந்திரன்.... தமிழருக்கு துரோகம் செய்து, சிங்கள அரசியல்வாதிகளை போர்க்குற்ற விசாரணைகளில் இருந்து காப்பாற்றி விட்ட நன்றிக் கடனுக்கு... சென்ற பாராளுமன்ற தேர்தலில் தோல்வியுற்ற சுமந்திரனை... தமது கட்சியின் சார்பில் சிங்களப் பகுதிகளில் போட்டியிட வைத்திருந்தால்... சிங்கள மக்கள் சுமந்திரனை, அமோக வெற்றி பெற வைத்திருப்பார்கள். ஏனென்றால்.... சுமந்திரன், தமிழ் மக்களுக்கு ஆற்றிய சேவையை விட சிங்கள இனத்துக்கும், சிங்கள மக்களுக்கும் ஆற்றிய சேவை அதிகம். சிங்களவர்கள் உண்மையான இனப்பற்று உள்ளவர்களாக இருந்திருந்தால், அடுத்த தேர்தலில்.... மகிந்த, ரணில், சஜித், விமல் வீரவன்ச போன்றோர்... சுத்துமாத்து சுமந்திரனை தத்து எடுத்து தமது கட்சி சார்பில் போட்டியிட வைக்க வேண்டும். வெற்றி நிச்சயம். 😂- கருத்து படங்கள்
ஹம்பாந்தோட்டையில்.... ஒரே "ஐஸ்" போதை வஸ்து. பென்குயின் எல்லாம் உண்மையான ஐஸ் என்று நம்பி.... சறுக்கி விளையாட வந்திருக்குது. 😂- சுமந்திரன் பதவி விலகினால் ஏற்படப் போகும் மாற்றம் ..!
சம்பந்தன் உயிரோடு இருக்கும் மட்டும்... சுமந்திரனை பின்கதவால் பாராளுமன்றத்துக்குள் கூட்டிக் கொண்டு போனார். சம்பந்தன் செத்த பின்.... சுமந்திரனுக்கு பாராளுமன்ற பின்கதவும் அடைக்கப் பட்டு, வீட்டில் குந்த வைத்துள்ளார்கள். 😂 சென்ற பாராளுமன்ற தேர்தலில் சுமந்திரன் மண் கவ்விய பின்.... பாராளுமன்றத்துக்குள் நுழைய... வென்ற பாராளுமன்ற உறுப்பினரான சத்தியமூர்த்திக்கும் வேறு சிலருக்கும் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக வேறு பதவி பெற்றுத் தருவதாகவும், அவர்கள் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா பண்ணி.. அந்த இடத்தை தமக்குத் தரும்படி பல வழிகளில் கெஞ்சி, ஆசை வார்த்தை காட்டியும்... சுமந்திரனை நம்பி அவர்கள் நடுத் தெருவில் நிற்க தயார் இல்லாததால்... அவர்கள் சுமந்திரனின் சூழ்ச்சி வலையில் விழாமல் ஒரேயடியாக மறுப்பு தெரிவித்து விட்டார்கள். 😅 சம்பந்தன் செத்தவுடன்.... சுமந்திரனின் பின்கதவு பாராளுமன்ற ராசியும் கை விட்டுப் போய் விட்டது. இனி சுமந்திரன் தனது வாழ்நாள் முழுக்க பாராளுமன்றத்துக்கு வெளியில் நின்று பாராளுமன்றத்தை "ஆ" வென்று அண்ணாந்து பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான். 😂 🤣- நேபாளத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இதுவரை 47 பேர் உயிரிழப்பு!
நேபாளத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இதுவரை 47 பேர் உயிரிழப்பு! நேபாளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளதுடன் நேபாளத்தின் பிற இடங்களிலும் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தில் சிக்குண்டு மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, நேபாளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வீதிகள் சேதம் அடைந்ததால், போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மீட்பு பணிகளுக்காக நேபாள இராணுவம் வானூர்திகளை அனுப்பியுள்ளதுடன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோரை இராணுவத்தினர் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர். இருப்பினும், குறித்த மோசமான வானிலை காரணமாக, தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீட்பு நடவடிக்கைகள் தடைபட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை மேலும் பலர் மண்ணில் புதையுண்டதாக அஞ்சப்படும் நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். நேபாளத்தின் குறித்த நெருக்கடி நிலையை கருத்திற்கொண்டு அவசர சேவைகள் மற்றும் பேரிடர் மீட்புக் குழுக்கள் தவிர்ந்த ஏனைய அனைவருக்கும் நாளை மற்றும் நாளை மறுதினங்களுக்கு நாடு தழுவிய பொது விடுமுறை நாட்களாக நேபாள அரசு அறிவித்துள்ளது. https://athavannews.com/2025/1449597- சுமந்திரன் பதவி விலகினால் ஏற்படப் போகும் மாற்றம் ..!
சுத்துமாத்து சுமந்திரன் தானாக பதவி விலக மாட்டார். விலக்கி வைக்கப் பட வேண்டும். மயிலே… மயிலே… இறகு போடு என்றால் போடாது. புடுங்கி எடுக்க வேண்டும். 😂 வருகின்ற வட மாகாண சபைத் தேர்தலில்… ஆபிரஹாம் சுமந்திரனுக்கு போட்டியிடுகிற எண்ணம் இருக்கின்றது போலுள்ளது. ஏற்கெனவே சுமந்திரனுக்கு தமிழரசு கட்சி தேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும் தமிழ் மக்கள்… இவர் தேவையில்லாத ஆணி என்று தோல்வியை பரிசாக கொடுத்தவர்கள். அதற்குப் பிறகும் வெட்கம், மானம், ரோசம் எதுவும் இல்லாமல்… தானும் ஒரு ஆள் என்று, பல்லை காட்டிக் கொண்டு சூடு, சுரணை இல்லாமல் தமிழ் மக்கள் மத்தியில் உலாவிக் கொண்டு திரிகிறார். ஆபிரஹாம் சுமந்திரன் இனியும் வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டால்….? சுமந்திரனை தோல்வியுறச் செய்ய தமிழரசு கட்சியில் இருக்கும் அதிர்ப்தி வாக்குகள் அனுரா கட்சிக்கே சென்று… முதல் முறையாக சிங்கள கட்சி ஒன்று வட மாகாண சபை முதல்வராக வரக் கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கும். சுத்துமாத்து சுமந்திரன்…. தனக்கு தமிழ் மக்களிடம் செல்வாக்கு இல்லை என்பதை ஏற்றுக் கொண்டு…. இனி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவாமல் அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதே அவருக்கு நல்லது. அதனையும் மீறி, போட்டியிட்டால்…. தமிழ் மக்கள் தமது வாக்குகளால் கொடுக்கும் செருப்பு அடியில்… “சுமந்திரன், பின்னங்கால் பிடரியில் பட கொழும்புக்கு ஓட வேண்டி வரும்” என்று ஊரில் பரவலாக சொல்கிறார்கள்.- சுன்னாகம் பகுதியில் கத்திக்குத்து- ஒருவர் உயிரிழப்பு!
📌👉யாழ்ப்பாணம் ஏழாலையில் சோகம்: வாய்த்தகராறு கத்திக்குத்தாக மாறியதில் கடை உரிமையாளர் பலி‼️‼️‼️ யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏழாலை கிழக்கு பகுதியில் உள்ள வாணிப நிலையம் ஒன்றில் ஏற்பட்ட வாய்த்தகராறு கத்திக்குத்தில் முடிவடைந்ததில், கடை உரிமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று (அக்டோபர் 04) இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்த விபரம் ஏழாலை கிழக்கு பகுதியில் உள்ள வாணிப நிலையத்திற்கு, மதுபோதையில் வந்த இரண்டு இளைஞர்கள் மிக்சர் (உணவுப் பண்டம்) கேட்டுள்ளனர். அப்போது கடை உரிமையாளர், மிக்சருக்கான பணத்தை முதலில் தருமாறு கேட்டுள்ளார். இதன் காரணமாக மிக்சர் வாங்க வந்தவர்களுக்கும் கடை உரிமையாளருக்கும் இடையே கடுமையான வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்தத் தர்க்கம் முற்றிய நிலையில், இளைஞர்கள் கடை உரிமையாளர் மீது கத்திக்குத்துத் தாக்குதலை மேற்கொண்டனர். இதில் படுகாயமடைந்த கடை உரிமையாளர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்தவர் ஏழாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த சிங்காராவேல் தானவன் (வயது 35) என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேக நபர்கள் கைது உயிரிழந்தவரின் சடலம் தற்போது தொல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களையும் சுன்னாகம் பொலிஸார் உடனடியாகக் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். நம்ம யாழ்ப்பாணம்- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இவரை தெரியுமா.- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
முன்னாள் திமுக MLA சங்கரவள்ளியின் மகன் தான் நீதிபதியாம்.. அதனால் நியாயமா இருப்பார் என்று நம்புகிறேன். Sooriya Prakash ################# ################## நீதியரசர் இல்ல விழாவில் கலந்து கொண்ட நம்ம முதல்வர். நீதிதான் மறைந்தது. விஜய் மறையவில்லை அவரின் புகழ் பலமடங்கு ஏறிக்கொண்டுள்ளது. Er. K. Arumugam ################# ############### ############# மகா பிரபுவே வணக்கங்கள் பல.🙏🙂↕️ திருநெல்வேலிகாரன் ########################## எலி, ஏன்... ஜட்டி போட்டுக் கொண்டு ஓடுது என்று பார்த்தேன். இப்படிப் பட்டவரிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும். ஒரு கட்சிக்கு சார்பானவர் நீதிபதியாக இருக்கும் தகுதியை இழந்து விட்டார்.- கருத்து படங்கள்
- நாகொடையில் பேனா வடிவிலான துப்பாக்கி மீட்பு!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.