Everything posted by தமிழ் சிறி
-
‘வளமான நாடு – அழகான வாழ்க்கையை’ கட்டியெழுப்ப கைகோர்ப்போம் – சுதந்திர தின வழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி
‘வளமான நாடு – அழகான வாழ்க்கையை’ கட்டியெழுப்ப கைகோர்ப்போம் – சுதந்திர தின வழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி. கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான நாடு – அழகான வாழ்க்கையைக்’ கட்டியெழுப்ப, ஒற்றுமை, உறுதிப்பாடு மற்றும் சகோதரத்துவத்துடன் கைகோர்க்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். நாட்டின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளதாவது, பல சவால்களுக்கு மத்தியில் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்து, நாடு முன்னேறி வரும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், 78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை நாம் கொண்டாடுகிறோம். இலங்கையர்களாகிய நாம் அனைவரும் இணைந்து போராடி, ஒன்றரை வருட குறுகிய காலத்தில் குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றத்தை அடைவதில் வெற்றி பெற்றுள்ளோம். சவால்களுக்கு மத்தியில், கூட்டாகவும் உறுதியுடனும் செயற்பட்டு நமது நாட்டை தூய்மையான அரசியல் கலாசாரத்திற்குள் கட்டியெழுப்பப்பட்ட அழகான இலங்கையாக சர்வதேச அளவில் முத்திரை பதிப்பதில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். நாம் பெற்றுள்ள பேரண்டப் பொருளாதார நன்மைகள் இலங்கையின் அனைத்து பிரதேசங்களிலும் உள்ள அனைத்து இன சமூகங்களுக்கும் சென்றடைவதை உறுதி செய்வதே எமது அடுத்த முக்கிய நோக்கம் ஆகும். அவ்வாறு இன்றி, புதிதாக கட்டியெழுப்பப்படும் அபிவிருத்தி செயல்முறையின் உண்மையான வெற்றியை அடைவது சாத்தியமில்லை என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அண்மைய காலத்தில் இடம்பெற்ற மிகப் பாரிய இயற்கை அனர்த்தத்தை நாம் சந்திக்க வேண்டியிருந்தது. அந்த அனர்த்தத்தின் அனுபவம் வேதனையாக இருந்தபோதிலும், கடந்த ஒன்றரை வருட குறுகிய காலத்தில் நாம் கட்டியெழுப்பிய உறுதியான அடித்தளங்கள் மற்றும் அனைத்து தரப்பினரின் ஆதரவுடன், மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் பணியில் வெற்றிகரமாக முன்னோக்கிச் செல்கின்றோம். சுதந்திரத்திற்குப் பின்னரான காலங்களில், நமது நாட்டை சரியான திசையில் வழிநடத்தவும், தேசிய ரீதியில் அடையவேண்டிய இலக்குகளை அடையவும், ஒற்றுமையாக வாழவும் வரலாற்றில் கிடைத்த பொன்னான வாய்ப்புகள் பெரும்பாலும் தவறவிடப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த முறை அந்தத் தவறை மீண்டும் செய்யாமல், நமது நாட்டை முன்பை விட மிகவும் முன்னேறிய, வலிமையான மற்றும் கௌரவத்துக்குரிய நாடாக மேம்படுத்துவதற்கு நாம் உறுதியுடன் செயல்படுவோம். நமது பெருமைமிக்க கலாசாரம், பண்டைய வரலாறு மற்றும் சிறந்த பாரம்பரியத்தைப் பாதுகாத்து, அதன் மேல் உறுதியாக நிலைத்து நின்று, இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்பதை இங்கே உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். இருபதாம் நூற்றாண்டில் பிறந்தவர்களின் ,பெருமைமிக்க நாடு பற்றிய கனவு கலைந்த போதும் , இருபத்தியோராம் நூற்றாண்டில் அந்தக் கனவை நனவாக்கி, நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் முன்னேறிய, வளமான மற்றும் சிறந்த நாடாக இலங்கையை கட்டியெழுப்பி, நாம் எதிர்பார்க்கும் புதிய சகாப்தத்தை உருவாக்க முடியும் என நான் திடமாக நம்புகிறேன். இதன்போது, இந்நாட்டின் அனைத்து மக்களின் வலிமை, ஒருமைப்பாடு மற்றும் உறுதிப்பாட்டில் நாம் வலுவான நம்பிக்கை கொண்டுள்ளோம். கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான நாடு – அழகான வாழ்க்கையைக்’ கட்டியெழுப்ப, ஒற்றுமை,உறுதிப்பாடு மற்றும் சகோதரத்துவத்துடன் கைகோர்ப்போம் என்று அனைவருக்கும் அழைப்பு விடுப்பதுடன், சுதந்திரத்தின் உண்மையான நோக்கங்களை அடைவதற்கு, ஊக்கமளிக்கும், அர்த்தமுள்ள தேசிய சுதந்திர தினத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் – என்றார். https://athavannews.com/2026/1463023
-
2025 ஆம் ஆண்டில் ‘GovPay’ செயலி மூலம் 46,000க்கும் மேற்பட்ட போக்குவரத்து அபராதங்கள்!
2025 ஆம் ஆண்டில் ‘GovPay’ செயலி மூலம் 46,000க்கும் மேற்பட்ட போக்குவரத்து அபராதங்கள்! போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை செலுத்த அறிமுகப்படுத்தப்பட்ட ‘GovPay’ பயன்பாட்டைப் பயன்படுத்தி 2025 ஆம் ஆண்டில் 46,000க்கும் மேற்பட்ட வாகன சாரதிகள் தண்டப் பணம் செலுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, மொத்தம் 46,635 வாகன சாரதிகள் ‘GovPay’ செயலி மூலம் அபராதம் செலுத்தியுள்ளனர். இதற்கிடையில், இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜனவரி 24 வரை போக்குவரத்து விதிமீறல்களைச் செய்த 11,715 சாரதிகள் ‘GovPay’ செயலியைப் பயன்படுத்தி அபராதம் செலுத்தினர். அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பிரிவினால் அதிக அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. https://athavannews.com/2026/1463152
-
சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி போராட்டம் ஆரம்பம்!
சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி போராட்டம் ஆரம்பம்! இலங்கையின் 78வது சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படும் போராட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. தமிழர்களுக்கு இது சுதந்திர தினம் இல்லை என தெரிவித்து, இந் நாளை கரிநாளாக அனுஷ்டிக்குமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்தது. அந்த அழைப்புக்கு சமூக மட்ட சிவில் அமைப்புக்கள், தமிழ் தேசியம் சார் அரசியல் கட்சிகள் மற்றும் தென்னிந்திய பிரபலங்கள் ஆதரவை தெரிவித்திருந்தன. இவ்வாறான சூழ்நிலையில் கிளிநொச்சி – கந்தசுவாமி ஆலய முன்றலில் இந்த போராட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. அங்கு ஆரம்பமான போராட்டம் தற்போது பேரணியாக கிளிநொச்சி நகரத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ் தேசியம் சார் அரசியல் கட்சிகள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சிவில் சமூக அமைப்புகள், தமிழ் தேசியவாதிகள், இளைஞர் – யுவதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர். https://athavannews.com/2026/1463127
-
ரஷ்ய – உக்ரைன் போர் நிறுத்த அமைதிப் பேச்சு இன்று ஆரம்பம்
ரஷ்ய – உக்ரைன் போர் நிறுத்த அமைதிப் பேச்சு இன்று ஆரம்பம். ரஷ்யாவுக்கும் யுக்ரைனுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இரண்டாம் கட்ட முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகர் அபுதாபியில் இன்று 04 ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது. இப்பேச்சுவார்த்தை நாளை 05 ஆம் திகதியும் நடைபெறும் என்று யுக்ரைன் ஜனாதிபதி வொல்திமிர் ஷெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் டெலிகிராம் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், யுக்ரைன் பேச்சுவார்த்தை குழுவிடமிருந்து எனக்கு அறிக்கை கிடைத்துள்ளது. இப்போருக்கு உண்மையாகவும், கௌரவமாகவும் தீர்வு காணும் நோக்கில் ஆக்கபூா்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட நாங்கள் தயாராக இருக்கிறோம். என்று குறிப்பிட்டுள்ளார். சுமார் 4 ஆண்டுகளாக நீடித்து வரும் இப்போரை நிறுத்த, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம் கடந்த ஓரண்டாகத் தீவிரமாகச் செயற்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அபுதாபியில் ரஷ்யா, யுக்ரைன், அமெரிக்கா ஆகிய 3 நாடுகளும் பங்கேற்கும் முத்தரப்புச் பேச்சுவார்த்தை இன்று ஆரம்பமாகவுள்ளது. https://athavannews.com/2026/1463017
-
கடாபியின் மகன் லிபியாவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்!
கடாபியின் மகன் லிபியாவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்! லிபியாவின் முன்னாள் தலைவர் கேணல் முஅம்மர் கடாபியின் மகன் சைஃப் அல்-இஸ்லாம் கடாபி (Saif al-Islam Gaddafi) சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு காலத்தில் தனது தந்தையின் வாரிசாக பரவலாக அறியப்பட்ட 53 வயதானவரின் மரணம், அவரது அரசியல் குழுவின் தலைவரால் செவ்வாயன்று (03) உறுதிப்படுத்தப்பட்டதாக லிபிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜின்டான் நகரில் உள்ள சைஃப் அல்-இஸ்லாம் கடாபியின் வீட்டில் “நான்கு பேர் கொண்ட கமாண்டோ” பிரிவு இந்த படுகொலையை நடத்தியதாக அவரது சட்டத்தரணிகள் AFP செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளனர். இருப்பினும் தாக்குதலுக்குப் பின்னால் யார் இருந்திருக்கலாம் என்பது தெளிவாகத் தெரியவில்லை. 1969 முதல் லிபியாவை ஆட்சி செய்த சைஃப் அல்-இஸ்லாம் கடாபி, 2011 இல் ஒரு எழுச்சியின் போது பதவி நீக்கம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அவரது தந்தைக்குப் பின்னர், சைஃப் அல்-இஸ்லாம் கடாபி நீண்ட காலமாக நாட்டில் மிகவும் செல்வாக்கு மிக்க நபராகக் காணப்பட்டார். 1972 ஆம் ஆண்டு பிறந்த இவர், 2000 ஆம் ஆண்டு முதல் கடாபி ஆட்சி வீழ்ச்சியடையும் வரை லிபியாவின் மேற்கு நாடுகளுடனான நல்லிணக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார். தனது தந்தை பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களை மிருகத்தனமாக அடக்குவதில் முக்கிய பங்கு வகித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சைஃப் அல்-இஸ்லாம் கடாபி, ஜின்டான் நகரில் ஒரு போட்டி போராளிக் குழுவால் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். 2011 ஆம் ஆண்டு எதிர்க்கட்சி போராட்டங்களை அடக்குவதில் அவர் வகித்ததாகக் கூறப்படும் பங்கிற்காக, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அவரை விசாரணைக்கு உட்படுத்த விரும்பியது. 2015 ஆம் ஆண்டில், நாட்டின் மேற்கில் உள்ள திரிப்போலியில் உள்ள ஒரு நீதிமன்றத்தால் ஒடுக்குமுறை நடவடிக்கையில் அவர் வகித்த பங்கிற்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது, அங்கு கட்டுப்பாடு ஐ.நா. ஆதரவு அரசாங்கத்தின் கைகளில் உள்ளது. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் கிழக்கில் உள்ள டோப்ருக்கில் உள்ள போராளிகளால் பொது மன்னிப்புச் சட்டத்தின் கீழ் அவர் விடுவிக்கப்பட்டார். கடாபி தூக்கியெறியப்பட்டதிலிருந்து, லிபியா பல்வேறு போராளிக் குழுக்களால் கட்டுப்படுத்தப்படும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது, தற்போது இரண்டு போட்டி அரசாங்கங்களுக்கு இடையில் பிரிக்கப்பட்டுள்ளது. அவரது தந்தை தலைவராக இருந்த காலத்தில், அரசாங்கத்தில் எந்த அதிகாரப்பூர்வப் பங்கும் இல்லாத போதிலும், அவர் கொள்கையை வடிவமைத்து உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினார். இதில் அவரது தந்தை தனது அணு ஆயுதத் திட்டத்தை கைவிட வழிவகுத்தவை அடங்கும். இத்தகைய ஒப்பந்தங்கள் வட ஆபிரிக்க நாட்டின் மீதான சர்வதேசத் தடைகள் நீக்கப்பட்டன, மேலும் சிலர் சைஃப் அல்-இஸ்லாம் கடாபியை மாறிவரும் லிபியாவின் சீர்திருத்தவாத மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய முகமாகக் கருதினர். தனது தந்தையிடமிருந்து அதிகாரத்தைப் பெற விரும்புவதாக அவர் எப்போதும் மறுத்து வந்தார். எனினும், 2021 ஆம் ஆண்டில், காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்ட தேர்தல்களில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதாக சைஃப் அல்-இஸ்லாம் கடாபி அறிவித்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1463108
-
சிரிக்கலாம் வாங்க
- குட்டிக் கதைகள்.
சொர்க்கத்துக்கு வருவோரின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போனது . கடவுள் உடனே ஒரு தேவதையை அழைத்து , "நீ என்ன பண்ணுவியோ தெரியாது . ஆனா இனிமே சொர்க்கத்துக்கு வரவங்க கூட்டம் பாதியாகணும்." என்று சொல்லி விட்டுப் போய் விட்டார். தேவதையும் உட்கார்ந்து யோசித்தது. அதற்கு ஒரு அருமையான யோசனை வந்தது . அதாவது, சொர்க்கத்துக்குள் நுழைய நினைப்போரிடம் அவர்கள் எப்படி இறந்து போனார்கள் என்று கேட்க வேண்டும் . யாருடைய இறந்த விதம் வித்தியாசமாக இருக்கின்றதோ, அவர்களை மட்டும் சொர்க்கத்திற்குள் அனுமதிக்க வேண்டும் . தேவதைக்கு இந்த யோசனை மிகவும் பிடித்துப் போக , உடனேயே அதை செயல்படுத்த முடிவெடுத்தது. அப்போது இறந்து போன ஒருத்தன் உள்ளே நுழையும் போது , அவனிடம் சொர்க்கத்தின் புதிய விதியை தேவதை கூற , அவனும் அவன் இறந்த கதையை கூற ஆரம்பித்தான். "எனக்கு கல்யாணம் ஆகி 5 வருசம் ஆகுவது. குழந்தைங்க இல்ல. என் பொண்டாட்டி எனக்கு துரோகம் பண்றானு எனக்கு ஒரு நாள் தோணிச்சு. நான் ஒரு அபார்ட்மெண்ட்ல குடியிருக்கேன். என்னோட வீடு 5 ஆவது மாடில இருக்கு. ஒரு நாள் வேலைக்கு போறதா பொய் சொல்லிட்டு , பாதியிலேயே வீட்டுக்கு வந்துட்டேன். என் பொண்டாட்டி என்னைய எதிர்பாக்கல . என்னைப் பாத்ததும் , 'ஏதாச்சும் மறந்து விட்டிட்டு போய்ட்டிங்களா? ' ன்னு கேட்டா. நான் அவளுக்கு பதில் சொல்லாம வீடு பூரா தேடிப் பாத்தேன். ஆனா ஒருத்தனையும் காணோம். கடைசியா பால்கனிய (BALCONY) போய் பாத்தேன் . நான் தேடி வந்த பன்னாடை அங்க பால்கனி க்ரில்ல புடிச்சி தொங்கிகிட்டு இருந்தான் . எனக்கு ரொம்பக் கோபம் வந்துச்சி . அவன் வெரல்ல ஓங்கி ஓங்கி மிதிச்சேன். வலி தாங்காம அவன் பிடிய விட்டுட்டு கீழ விழுந்துட்டான். நான் கீழ எட்டி பாத்தேன் . அந்த நாய் சாவாம ஒரு புதர் மேல விழுந்து கெடந்தான் . நான் உடனே கிச்சனுக்குள்ள போய் , பிரிட்ஜை இழுத்துகிட்டு வந்து , பால்கனி மேல கஷ்டப்பட்டு தூக்கி வச்சு , அந்த பிரிட்ஜை கீழ விழுந்து கெடந்த அவன் மேல போட்டு , அவன நசுக்கி கொன்னுட்டேன். இதெல்லாம் செஞ்ச பின்னாடி எனக்கு சந்தோஷத்துல நெஞ்சு வலி வந்து, அங்கேயே விழுந்து செத்துட்டேன்." அவன் கதையை கூறி முடித்ததும், தேவதை புன் சிரிப்புடன், "நீ உள்ளே போகலாம் ." என்றது . அவன் போன சற்று நேரம் கழித்து , இன்னொருவன் வந்தான். அவனிடமும் தேவதை புது விதியை பற்றி கூற , அவன் அவனுடைய கதையை கூற ஆரம்பித்தான். "நான் ஒரு அபார்ட்மெண்ட்ல 6 ஆவது மாடில குடியிருக்கேன். நான் எப்பவும் ப்ரீயா இருந்தா பால்கனில யோகா பண்றது வழக்கம் . அன்னைக்கு அப்படித்தான் தலைகீழ நின்னுக்கிட்டிருந்தேன். திடீர்னு பேலன்ஸ் மிஸ் ஆகி கீழ விழுந்துட்டேன். நல்ல வேளையா 5 ஆவது வீட்டு பால்கனி கிரில் கம்பிய பிடிச்சுக்கிட்டேன். அந்த வீட்டுல ஒரு புருஷனும் அவனோட பொண்டாட்டியும் மட்டும் இருக்காங்க . திடீர்ன்னு வெளிய வந்த அந்தம்மாவோட புருஷன் , பால்கனில தொங்கிகிட்டு இருந்த என் கைய மிதிக்க ஆரம்பிச்சான். நான் வலி தாங்காம கீழ விழுந்துட்டேன் . நல்ல வேளையா நான் விழுந்த எடத்துல ஒரு புதர் இருந்ததால நான் சாகல. ஆனா என்னோட முதுகு ஒடஞ்சி போச்சி. அந்தம்மாவோட புருஷனுக்கு என் மேல அப்படி என்னதான் கோபம்னு எனக்குத் தெரியல. கொஞ்ச நேரத்துல மேல இருந்து ஒரு பிரிட்ஜ் அ என் மேல தள்ளி வுட்டு என்ன கொன்னுட்டான்." அவன் பேசி முடித்ததும் , தேவதைக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு அவனை உள்ளே போக அனுமதியளித்தது. மூன்றாவதாக ஒருத்தன் வந்தான் . அவனிடமும் தேவதை புது விதியை பற்றி கூறியது . அவனும் அவன் இறந்த கதையை கூற ஆரம்பித்தான். "எனக்கும் பக்கத்து தெருவுல ஒரு அபார்ட்மெண்ட்ல குடியிருக்குற ஒருத்தனோட பொண்டாட்டிக்கும் இடையில 2 வருஷமா கள்ள தொடர்பு இருந்துச்சி. அவ புருஷன் வேலைக்கு போனதும், அவ எனக்கு போன் பண்ணுவா. ஒடனே நானும் அவ வீட்டுக்கு போய்டுவேன். அன்னைக்கும் அப்படித்தான் அவ எனக்கு போன் பண்ணுனா . நானும் உடனே கெளம்பி அவ வீட்டுக்கு போனேன். ஆனா கொஞ்ச நேரத்திலேயே அவ புருஷன் வந்து கதவ தட்ட ஆரம்பிச்சான் . அவ உடனே என்ன பிரிட்ஜ்க்குள்ள வச்சு பூட்டிட்டு கதவ தெறக்க போனா . நான் பிரிட்ஜ்க்குள்ளேயே பயந்து போய் உக்காந்திருந்தேன். அப்புறம் என்னாச்சுன்னா...? Paranji Sankar- கருத்து படங்கள்
- 4 மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியேறினார்-ஷிரந்தி ராஜபக்ஷ!
4 மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியேறினார்-ஷிரந்தி ராஜபக்ஷ! இன்று காலை 9.30 பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியிரிருந்தார் மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ சற்று முன்னர் அங்கு இருந்து வெளியேறியுள்ளார் வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காக கடந்த 27 ஆம் திகதி பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு வருகை தருமாறு அவருக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அன்றைய தினம் தம்மால் வருகை தர முடியாது எனவும், அதற்காக இரண்டு வார கால அவகாசம் வழங்குமாறும் ஷிரந்தி ராஜபக்ஷ சட்டத்தரணி ஊடாக பொலிஸாருக்கு அறிவித்திருந்தனர். மேலும் இன்று ராஜபக்ச ஆதரவாளர்கள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட பெருமளவானவர்கள் விசாரணைப் பிரிவிற்கு முன்னால் ஒன்று திரண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது https://athavannews.com/2026/1462927- 193 உறுப்பு நாடுகளுக்கு அவசர கடிதம் எழுதிய ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டெரெஸ்.
“ஐநா-வின் பணப் பிரச்சனையை நொடியில் தீர்க்க முடியும்!” – அதிரவைத்த ட்ரம்பின் ‘நிதி’ ஆட்டம்! ஐக்கிய நாடுகள் சபை தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாகவும், நிதி ஆதாரம் இன்றி அந்த அமைப்பு ‘உடனடி நிதி சரிவை’ (mminent financial collapse) எதிர்கொள்ள வாய்ப்புள்ளதாகவும் அதன் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த இக்கட்டான சூழலில்இ அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது வழக்கமான பாணியில், ஐநா சபையின் இந்த நிதிப் பிரச்சனைகளை தன்னால் மிக எளிதாகச் சரிசெய்ய முடியும் என்று கூறி உலக நாடுகளின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பியுள்ளார். அமெரிக்கா தான் ஐநா சபைக்கு அதிகப்படியான நிதியை வழங்கும் நாடாக இருந்து வருகிறது. ஆனால், அமெரிக்காவின் வரிப்பணம் தேவையற்ற முறையில் உலக அமைப்புகளுக்கு வாரி வழங்கப்படுவதாக ட்ரம்ப் நீண்ட காலமாகவே அதிருப்தி தெரிவித்து வருகிறார். ஐநா-வின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத் திறமை குறித்துக் கேள்வி எழுப்பியுள்ள அவர், அந்த அமைப்பு அமெரிக்காவிற்குத் தகுந்த மதிப்பையோ அல்லது பலனையோ தருவதில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார். தன்னால் இந்தப் பிரச்சனையை எப்படிச் சரிசெய்ய முடியும் என்பது குறித்துப் பேசிய ட்ரம்ப், அமெரிக்கா வழங்கும் நிதியைக் குறைப்பதன் மூலமும், மற்ற நாடுகளை அதிகப் பங்களிக்க வைப்பதன் மூலமும் ஐநா சபையைச் சீர்திருத்த முடியும் என்று நம்புகிறார். ‘அமெரிக்கா இனி மற்ற நாடுகளின் செலவுகளைத் தன் தலையில் சுமக்காது’ என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், ஐநா சபை தனது செலவுகளைக் குறைத்துக்கொண்டு பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே தனது முந்தைய ஆட்சி காலத்தில்இ உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் யுனெஸ்கோ போன்ற சர்வதேச அமைப்புகளுக்கான நிதியை ட்ரம்ப் நிறுத்தியது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் அதே போன்றதொரு கடுமையான போக்கை அவர் ஐநா சபையின் மீதும் பிரயோகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஐநா சபையின் பல்வேறு உலகளாவிய நலத்திட்டங்கள் மற்றும் அமைதி காக்கும் பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஐநா பொதுச்செயலாளர் குட்டெரெஸ் விடுத்துள்ள எச்சரிக்கையில், உறுப்பு நாடுகள் தங்களின் நிலுவையில் உள்ள நிதியை வழங்காவிட்டால், பணியாளர்களுக்குச் சம்பளம் வழங்குவது கூடச் சிரமமாகிவிடும் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், ட்ரம்பின் தற்போதைய கருத்துக்கள் ஐநா சபைக்குப் பணத்தைக் கொடுப்பதற்குப் பதிலாக, அந்த அமைப்பையே முழுமையாக மாற்றி அமைக்க வேண்டும் என்ற நோக்கில் இருப்பதால் சர்வதேச தூதரக அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர். ட்ரம்பின் இந்த ‘அமெரிக்கா ஃபர்ஸ்ட்’ (America First) கொள்கை, சர்வதேச அரசியலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. https://athavannews.com/2026/1462918- கிராமி விருதை வென்றார் தலாய் லாமா
ட்ரம்புக்கு…. இந்த விசயம் தெரியுமா? தெரிந்தால்… தனக்கும், இந்த விருது வேணும் என்று அடம் பிடிப்பார். 😂- “தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
சுமந்திரனுக்கு.... இப்போ ஒரு பதவியும் இல்லாததால்.... ஏற்பட்ட அவமானத்தை மறைக்க... நானும் "ரவுடி" தான் என்ற நினைப்பில் செய்கின்ற வேலைகளை எல்லாம்... அவருக்கு எதிராகவே திரும்புகின்றது. ஜனாதிபதி தேர்தலில் சங்கு சின்னத்தில் தமிழர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்த களமிறங்கிய அரியநேந்திரனை கட்சியில் இருந்து வெளியேற்றிவிட்டு, தனது பதவிக்காக சங்கோடு புதிய உறவை ஆரம்பித்திருக்கிறார் சுமந்திரன்.- “தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
அர்ச்சுனாவுக்கும்... முதல் அமைச்சராகும் ஆசை உள்ளது. கடந்த தேர்தலில், அர்ச்சுனா பாராளுமன்ற உறுப்பினராக வந்ததே... சுமந்திரனின் எதிர்ப்பு வாக்குகள் தானே. கௌசல்யா எடுத்த வாக்குகளை கூட, சுமந்திரனால் எடுக்க முடியாமல் போய் விட்டது. வரும் மாகாணசபைத் தேர்தலில்.... சுமந்திரனும், அர்ச்சுனாவும் வாக்குகளை பிரிக்க... அனுரா கட்சி, வடமாகாண சபையை கைப்பற்றி, முதல்வராக வருவார்கள். தேசியக் கட்சியையும், அர்ச்சுனாவையும் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வந்தது சுமந்திரனின்... லூசுத்தனமான வேலைகள் மட்டுமே. இப்போ... தனக்கு ஒரு இடமும் இல்லாமல், தனது கட்சிக்குள்ளேயே குழிபறிப்பு செய்து, நிலைமையை இன்னும் மோசமாக்கிக் கொண்டு இருக்கின்றது, சுமந்திரன் என்ற வெங்காயம்.- கருத்து படங்கள்
- சீனாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேருக்கு மரண தண்டனை விதிப்பு!
மேலும் நான்கு மியன்மார் மாஃபியா உறுப்பினர்களை தூக்கிலிட்ட சீனா! மியன்மாரில் மோசடி மையங்களை நடத்திய பிரபல பாய் (Bai) குடும்ப குற்றக் கும்பலைச் சேர்ந்த நான்கு பேரை சீனா தூக்கிலிட்டுள்ளதாக பெய்ஜிங்கின் அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குவாங்டாங் மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தால் மோசடி, கொலை, காயம் மற்றும் பிற குற்றங்களுக்காக தண்டனை பெற்ற குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பங்காளிகள் 21 பேரில் இந்த நான்கு பேரும் அடங்குவர். பாய் குடும்பத்தின் குற்றச் செயல்கள் ஆறு சீன குடிமக்களின் மரணத்திற்கும், ஒருவர் தற்கொலைக்கும், பலருக்கு காயங்களுக்கும் வழிவகுத்தன என்று தண்டனையை அறிவித்த நீதிமன்றம் கூறியது. கடந்த நவம்பரில் நீதிமன்றம் 21 பேரில் ஐந்து பேருக்கு மரண தண்டனை விதித்தது. இதில் குலத்தின் மூதாதையர் பாய் சூசெங், தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் உடல்நலக்குறைவால் இறந்தார் என்று அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென்கிழக்கு ஆசியாவில் ஆயிரக்கணக்கான சீனர்களை சிக்க வைத்துள்ள மோசடி நடவடிக்கைகளை ஒடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கடந்த வாரம் சீனா மிங் குடும்ப மாஃபியாவைச் சேர்ந்த 11 பேரை தூக்கிலிட்டது. பல ஆண்டுகளாக, பைஸ், மிங்ஸ் மற்றும் பல குடும்பங்கள் மியான்மரின் எல்லை நகரமான லாக்கீங்கில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அங்கு அவர்கள் கேசினோக்கள், சிவப்பு விளக்கு மாவட்டங்கள் மற்றும் சைபர் குற்ற நடவடிக்கைகளை நடத்தினர். https://athavannews.com/2026/1462608- 📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –
சுமந்திரன், சங்கு கூட்டணி.... உதயம். 😂 🤣 சுத்துமாத்து சுமந்திரனுக்கு.... மாகாண சபைத் தேர்தலில், சங்கு ஊத சபதம். ஊ..... ஊ..... ஊ..... ஊ.....- இனி வாட்சப் , பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த கட்டணம் – மெட்டாவின் புதிய அறிவிப்பு!
தேர்தல் நேரம்… வோட்டுக்கு, பணம், குவாட்டர், பிரியாணி கொடுத்து வென்று.. மக்களை ஐந்து வருடம், கொத்தடிமையாக வைத்திருப்பதும், இதே வகைதான் தோழர். 😂- கொழும்பு பிரபல பாடசாலை மாணவனுடன் 3 ஆசிரியைகள் உல்லாசம்: வீடியோவால் சர்ச்சை
அப்பா.... என்னை, "நாலந்தா" ஸ்கூல்லை சேர்த்து விடு. நல்லாய் படிப்பேனப்பா... 😂- திருகோணமலை , முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்!
எங்களுடைய சனத்துக்கு... தாங்கள் மேதாவிகள் என்ற நினைப்பு. தெரிந்தவன் நல்லதுக்கு சொல்வதையும்... கேலி செய்வது, தமிழரில் ஒரு கெட்ட குணம்.- தொடர் இலக்கங்களை அழித்த படகுகளில் அத்துமீறும் இந்திய கடற்தொழிலாளர்கள் – நயினாதீவு கடற்தொழிலாளர்கள் மீதும் கல் வீச்சு
காணொளி: 👉 https://www.facebook.com/reel/1239508898275962 👈 உங்களை நோக்கி அவன் சுடுவதற்காக துப்பாக்கியை நீட்டுவதில் என்ன தவறு? இந்த லட்சணத்திலதான் கச்சதீவை கேட்கிறீர்கள்... கடல் வளத்தை வகைதொகையின்றி அழித்துவரும் இந்திய இழுவை மடிப் படகுகள், யாழ்ப்பாணம் நயினாதீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையேயான கடற்பகுதியில் ஆத்துமிறிய மீன்டியில் தினமும் ஈடுபட்டுவந்த நிலையில் நேற்றிரவு யாழ் மீனவர்களிடம் ஒரு படகு பிடிபட்டுள்ளது. இலங்கையின் கடற்பாதுகாப்பை மீறி எவ்வாறு இந்திய இழுவை மடிப்படகுகள் தீவகத்துக்குள் நுழைகின்றதன? இலங்கை வடபிராந்திய கடற்படை என்ன நித்திரை கொள்கிறதா? நேற்றிரவு நயினாதீவு கடலில் உள்நுளைந்த இந்திய இழுவை மடிப்படகுகளை நேரடியாக வீடியோ கோல் மூலம் யாழ்ப்பாண இந்திய தூதரக அதிகாரிகளுக்கு நயினாதீவு மீனவர்களால் காண்பிக்கப்பட்டது. (முகநூலில் இருந்து.)- சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஸ்டிப்பது – நிலாந்தன்!
சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஸ்டிப்பது – நிலாந்தன்! ஸ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஷ்டிப்பதற்கு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள்.இதுதொடர்பான சந்திப்புகளை அவர்கள் தமிழர் தாயகம் எங்கிலும் முன்னெடுத்து வருகிறார்கள். கட்சிகள்,செயற்பாட்டாளர்கள்,காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் அமைப்புக்கள், மதத்தலைவர்கள், என்று பல்வேறு தரப்புக்களையும் மாணவ பிரதிநிதிகள் சந்தித்து வருகிறார்கள். “மாணவர்களே போராட்டத்தின் கூர்முனைகள்” என்று ஹெர்பர்ட் மார்க்யூஸ் கூறினார்.கம்யூனிசத்தின் எழுச்சிக்குப் பின் இழப்பதற்கு எதுவுமில்லாத பாட்டாளி வர்க்கம்தான் போராட்டத்தின் கூர்முனை என்று கருதப்பட்டு வந்த ஒரு பின்னணியில்,கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த, ஹெர்பர்ட் மார்க்யூஸ் மாணவர்களே போராட்டத்தின் கூர் முனை என்று கூறினார். ஆனால், தமிழர் தாயகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் எந்த ஒரு தமிழ்த் தேசியக் கட்சிக்கும் மாணவ அமைப்பு கிடையாது. மாணவர்களை அரசியல் உணர்திறன் மிக்கவர்களாக மாற்றி போராட்டத்தை முன்னெடுக்க தேவையான அரசியல் இயக்கங்களும் தமிழ் மக்கள் மத்தியில் இல்லை. இப்படிப்பட்டதோர் வெற்றிடத்தில்தான்,கடந்த 16 ஆண்டுகளிலும் பல்கலைக்கழக மாணவர்கள் அவ்வப்போது உணர்ச்சிகரமாக எழுச்சி கொண்டு போராடியிருக்கிறார்கள்.கடந்த 16ஆண்டுகளிலும் பல்கலைக்கழக மாணவர்கள் வீரமாகப் போராயிருக்கிறார்கள்.அரசியல் கைதிகளுக்காக,நினைவு கூரும் உரிமைக்காக,காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதிக்காக….என்று பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராடியிருக்கிறார்கள். “எழுக தமிழ்கள்”,”பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான ஆர்ப்பாட்டம்” போன்றவற்றின் வெற்றிக்காக உழைத்திருக்கிறார்கள். மாணவர்கள் அவ்வாறு போராட்டத்தை ஒருங்கிணைக்கும்போது கட்சிகளும் உற்சாகமாக களத்தில் இறங்குகின்றன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவ்வாறான பேரெழுச்சிகளைக் காண முடியவில்லை.ஒரு மக்கள் இயக்கம் இல்லாத அரசியற் சூழலில்,பல்கலைக்கழக மாணவர்களை அரசியல் உணர்திறன் மிக்கவர்களாகச் செதுக்கியெடுக்கும் சக்தி எந்தத் தமிழ்த் தேசியக் கட்சியிடமாவது உண்டா ? இக்கட்டுரை எழுதப்படுகையில் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் ஆகிய மாவை சேனாதிராஜாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்படுகிறது.மாவை என்று கூறி யாருடையதோ ஒரு முகத்தைச் செதுக்கி,சிலையாக்கி,திறந்து வைத்திருக்கிறார்கள்.அதைத் தனியே எழுத வேண்டும். அதைவிட முக்கியமாக இங்கே எழுத வேண்டியது என்னவென்றால், அந்தத் திறப்பு விழாவில் கட்சியின் பதில் தலைவரோ பதில் செயலரோ அழைக்கப்பட்டிருக்கவில்லை என்பதுதான்.கட்சியின் பதில் தலைவராகிய சிவஞானமும் பதில் செயலர் ஆகிய சுமந்திரனும் கட்சியின் விவகாரங்களை பெருமளவுக்கு கட்டுப்படுத்தும் ஒரு வளர்ச்சி ஏற்பட்டிருக்கும் பின்னணியில், அவர்கள் இருவரையும் புறக்கணித்துவிட்டு சிலை திறக்கப்பட்டிருக்கிறது. மேலும் மாவை சேனாதிராஜாவின் நினைவுக் கூட்டத்தில்,நினைவுப் பேருரை ஆற்றியது யார் என்றால் மறவன்புலவு சச்சிதானந்தம் ஆகும். அண்மையில் அவர் சிவஞானத்தையும் சுமந்திரனையும் கடுமையான வார்த்தைகளால் குற்றம் சுமத்தி விமர்சித்திருந்தார்.அவர் சிவஞானத்துக்கு எதிராக முன் வைக்கும் விமர்சனங்களுக்கு எதிராக நீதிமன்றத்தை நாட முடியும் என்று சுமந்திரனுக்கு ஆதரவாக எழுதும் “காலை முரசு” பத்திரிகை எழுதியிருக்கிறது. அவ்வாறு சுமந்திரனையும் சிவஞானத்தையும் விமர்சித்த ஒருவரை அழைத்து மாவையின் நினைவு நாளை அனுஷ்டித்ததன் மூலம் கட்சிக்குள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலவும் உட்பூசல் நினைவு நாட்களையும் விட்டு வைக்கவில்லை என்று தெரிகிறது. மாவை இறந்தபோது அவருடைய இறுதி நிகழ்விலும் அந்த உட்கட்சிப் பூசல் அசிங்கமாக வெளிப்பட்டது. இப்பொழுது அவருடைய முதலாம் ஆண்டு நினைவு நாளிலும் வெளிப்படுகிறது. அதாவது மாவை இறந்து ஓராண்டு கழிந்து விட்டது.ஆனால் கட்சிக்குள் உட்பகை தொடர்ந்து புகைந்து கொண்டேயிருக்கிறது.அந்த உட்பகையை தீர்த்துக் கொள்ள கட்சியால் முடியவில்லை. இரண்டு அணிகளுக்கும் இடையே கட்சி கிழிபடுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளிலும் சுமந்திரன் கட்சிக்குள் தன் பிடியைப் பலப்படுத்தி வருகிறார். அவருடைய அணி அணி சிறீதரனை பெருமளவுக்குச் சுத்திவளைத்து விட்டது. ஆனாலும் கட்சியின் தலைமைத்துவத்தை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர இன்றுவரை சுமந்திரனால முடியவில்லை. உள்ளதில் பெரிய கட்சி இவ்வாறு உட்பகைக்குள் சிக்கி தன் சக்தியை வீணாக்கிக் கொண்டிருக்கிறது.நினைவு நாட்களை அனுஷ்டிப்பதில் மட்டும் அல்ல,அரசுக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகளிலும்,இந்தியாவைக் கையாளும் விடையத்திலும் இந்த உட்கட்சி பூசல் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அப்படிப்பட்டதோர் பின்னணியில்,சுமந்திரன் அணி கிவுல் ஓயா அபிவிருத்தி திட்டத்திற்கு எதிராக ஓர் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறது. அந்த ஆர்ப்பாட்ட நடவடிக்கையிலும் உட்கட்சிப் பூசல் பிரதிபலிப்புகளை ஏற்படுத்துமா தெரியவில்லை. இவ்வாறு உள்ளதில் பெரிய கட்சி,தானே தனக்குள் மோதி, தன் சக்தியை வீணாக்கிக் கொண்டிருக்கும் ஓர் அரசியல் சூழலில்,யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கட்சிகளை தமது கோரிக்கைகளை நோக்கித் திரட்டுவார்களா? தமிழ்த் தேசிய அரசியல் எனப்படுவது சாராம்சத்தில் ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்துக்கு எதிராகப் போராடுவது மட்டுமல்ல.அது தமிழ்த் தேசிய வியூகத்தின் ஒரு பகுதி மட்டும்தான். இதயமான பகுதி எதுவென்றால், தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதுதான். தமிழ் மக்களை கட்சி பேதம் கடந்து ஒரு திரளாகத் திரட்டினாலே போதும்.அதுவே பலம். அவ்வாறு திரட்டப்பட்ட மக்கள் தென்னிலங்கைக் கட்சிகள் நோக்கிப் போக மாட்டார்கள்.தேசமாகத் திரட்டப்படாத மக்களே தென்னிலங்கைக் கட்சிகளால் கவரப்படுகிறார்கள். ஆனால் தமிழரசுக் கட்சி தன்னிடம் உள்ள பலமான கீழ்மட்டக் கட்டமைப்பை வைத்துக்கொண்டு,தானே பெரிய கட்சி, தானே தலைமை தாங்கும் கட்சி என்று கூறிக் கொண்டாலும்,தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதில் தோல்வி அடைந்து விட்டது. அக்கட்சி மட்டுமல்ல எல்லாத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதிலும் தோல்வியடைந்து விட்டன; தங்களை கட்சிகளாகப் பலப்படுத்திக் கொள்வதிலும் தோல்வியடைந்து விட்டன. இவ்வாறு தங்களைப் பலமான கட்சிகளாகத் திரட்டிக் கொள்ள முடியாதவர்கள் எப்படித் தமிழ் மக்களைத் திரட்டுவார்கள்? இப்படிப்பட்டதோர் அரசியல் சூழலில், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரெழுச்சியைப் போன்ற ஒரு பேரெழுச்சியைக் காட்ட தமிழ் மக்களால் கடந்த சில ஆண்டுகளாக முடியவில்லை என்பதுதான் துர்ப்பாக்கியமான ஒர் அரசியல் யதார்த்தமாகும். தையிட்டியில் நடக்கும் கவன ஈர்ப்பு போராட்டங்களைத்தவிர பேரெழுச்சிகள் என்று சொல்லத்தக்க எழுச்சிகளை தமிழ்த் தேசிய அரசியலில் கடந்த சில ஆண்டுகளாகக் காண முடியவில்லை.இந்நிலையில்,சுதந்திர தினத்தைக் கரி நாளாக அனுஷ்ட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை எதிர்ப்பது மட்டுமல்ல, அதுபோன்ற அரச எதிர்ப்பு மற்றும் ஆக்கிரமிப்புக்கு எதிரான நடவடிக்கைகள் எல்லாவற்றின் விடயத்திலும், தமிழ்த் தேசிய அரசியலானது கடந்த 16 ஆண்டுகளுக்கு மேலாக ரியாக்ரிவ் ஆகத்தான் அதாவது பதில் வினையாற்றும் அரசியலாகத்தான் காணப்படுகிறது.ப்ரோ ஆக்ட்டிவாக-செயல் முனைப்புடையதாக இல்லை. அரசாங்கத்தின் நிலப்பறிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக அல்லது சிங்கள பௌத்த மயமாக்கல் நடவடிக்கைகளுக்கு எதிராக அல்லது ஐநா கூட்டத் தொடர்களை முன்னிட்டு தமிழ் மக்கள் அவ்வப்போது எதிர்ப்பு நடவடிக்கைகளை ஈடுபடுகிறார்கள்.ஆனால் இந்த நடவடிக்கைகள் யாவும் ஒரு மையத்தில் இருந்து திட்டமிடப்படுவதில்லை. இது முதலாவது பலவீனம்.அவை தொடர்ச்சியானவை அல்ல என்பது இரண்டாவது பலவீனம்.மூன்றாவது பலவீனம்,இவை அனைத்தையும் தொகுத்துப் பார்க்கும்போது அவை பதில் வினையாற்றும் அரசியல் நடவடிக்கைகள்தான்.அதாவது தமிழ்த் தேசிய அரசியலை செயல் முனைப்போடு முன்னெடுக்கின்ற புரோஆக்டிவ் ஆன நடவடிக்கைகள் அல்ல. இப்பொழுது கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிரான போராட்டமும் அத்தகையது தான்.சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஷ்டிப்பதும் அத்தகையதுதான். இவை போன்ற ரியாக்ட்டிவ் நடவடிக்கைகளின்மூலம் தமிழ் மக்களை அரசியல் உணர்திறன் மிக்கவர்களாக மாற்றுவதில் எவ்வளவு தூரம் வெற்றிபெற முடிந்திருக்கிறது என்ற கேள்விக்கு விடை முக்கியம். தமிழ்த் தேசிய அரசியலானது தொடர்ந்தும் கட்சி அரசியலாக, ரியாக்ரிவ் ஆனதாக காணப்படுகிறது.உள்ளதில் பெரிய கட்சி தானே தன்னைத் தோற்கடித்துக் கொண்டிருக்கும் ஓர் அரசியற் சூழலில், அதை ப்ரோஆக்டிவ் ஆக முன்னெடுக்கும் அரசியல் இயக்கம் எதுவும் அரங்கில் இல்லாத வெற்றிடத்தில்,பல்கலைக்கழக மாணவர்களின் தலையில் அதிகம் பொறுப்பு சுமத்தப்படும் ஓர் அரசியற் சூழலில்,2009க்குப் பின்னரான 16 ஆவது சுதந்திர தினம் வருகிறது. https://athavannews.com/2026/1462539- தொடர் இலக்கங்களை அழித்த படகுகளில் அத்துமீறும் இந்திய கடற்தொழிலாளர்கள் – நயினாதீவு கடற்தொழிலாளர்கள் மீதும் கல் வீச்சு
அத்துமீறும் இந்திய கடற்தொழிலாளர்கள் – அருகில் சென்ற நயினாதீவு கடற்தொழிலாளர்கள் மீதும் கல் வீச்சு! யாழ்ப்பாணம் நயினாதீவு – நெடுந்தீவுக்கு இடைப்பட்ட கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்தொழிலாளர்கள் தொடர்பில் இந்திய துணைத்தூதரக அதிகாரிகளுக்கு காணொளி ஆதாரங்களுடன் முறையிடப்பட்டுள்ளது. நயினாதீவு கடற்தொழிலாளர்கள் நேற்றைய தினம் இரவு கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டவேளை , இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த இந்திய கடற்தொழிலாளர்களின் படகொன்று அப்பகுதியில் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அவர்களை தமது கடற்பரப்பினுள் இருந்து வெளியேறுமாறு நயினாதீவு கடற்தொழிலாளர்கள் அறிவுறுத்தியும் , அதனையும் மீறியும் தொழிலில் ஈடுபட்டனர். அவர்களின் படகுக்கு அருகில் சென்ற நயினாதீவு கடற்தொழிலாளர்கள் மீது கல் வீச்சு தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளனர். அதனை அடுத்து கைத்தொலைபேசியில் “வீடியோ கோல்” ஊடாக இந்திய துணைத்தூதராக அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்ட , கடற்தொழிலாளர் ஒருவர் , நேரடியாக இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை காண்பித்துள்ளார். அதன் போது படகின் இலக்கத்தினை தூதரக அதிகாரி வினாவிய வேளை , படகின் இலக்கம் அழிக்கப்பட்டிருந்ததனை அவதானித்துள்ளனர். பின்னர் இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்கள் தொடர்பில் காணொளி ஆதாரங்களுடன் முறைப்பாடு ஒன்றினை தூதரக அதிகாரிக்கு நயினாதீவு கடற்தொழிலார்கள் அனுப்பி வைத்துள்ளனர். https://athavannews.com/2026/1462549- சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல்!
சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல்! சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்கள் இந்திய கடற்படையினரால் தாக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது தாக்குதலுக்குள்ளான மீனவர்கள் கராப்பிட்டிய மற்றும் வென்னப்புவ பகுதிக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக வென்னப்புவ துறைமுகத்தில் இருந்து சென்ற இலங்கை மீனவ படகுமீது இந்திய கடலோர காவல்படையினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளiமை அண்மையில் தெரியவந்தது குறித்த மீனவர்கள் மீது கடுமையாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் மீனவர்களின் உடலில் காயங்கள் ஏற்பட்டிருந்தது போதைப்பொருள் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நிலையில் தாக்குதல் நடாத்தியதாக குறித்த மீனவர்கள் தெரிவிக்கின்றனர். ஆழ்கடலில் மீன்பிடி நடவடிக்கையினை நிறைவு செய்து மீண்டும் இலங்கை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது இலங்கை கடல் எல்லைக்குள் வைத்து இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது இதேவேளை தாம் எதிர்கொண்ட அசம்பாவிதம் தொடர்பாக தாக்குதலுக்குள்ளான மீனவர்கள் இலங்கை கடற்படையினருக்கு தகவல் வழங்கியிருந்ததைடுத்து அவர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர் தாக்குதலுக்குள்ளான மீனவர்கள் நால்வர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன் மற்றுமொருவர் வென்னப்புவ பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார் இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக இந்த அரசுடன் ராஜதந்திரமட்டத்தில் கலந்துரையாடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. https://athavannews.com/2026/1462572- “தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
சுத்துமாத்து சுமந்திரன்... மாகாண சபைத் தேர்தலில், தான் வேட்பாளர் என்றவுடன்.... சங்கு கூட்டணியுடன், வட்ட மேசையில் இணைந்து விட்டார். டக்ளஸ் தேவானந்தாவுடன்... பின்கதவு பேச்சுவார்த்தை நடக்கின்றதாம். சங்கு கூட்டணியை ... தொண்டை கிழிய திட்டித் தீர்த்தவர்களும், கை உழைய, கேலிச் சித்திரம் வரைந்த @Kavi arunasalam மும்... தலையை... எங்கே புதைத்துக் கொண்டு இருக்கின்றார்கள். அரசியல் அனாதைகளான... "வெத்து வேட்டுக்கள்" எல்லாம் ஒன்றாக சேர்ந்த தருணம் இது. தேர்தலில் சுமந்திரன் வெல்ல சந்தர்ப்பமே இல்லை. வெட்கம் கெட்டதுகள், ரோச நரம்பு அறுந்ததுகள்.... எல்லாம் வட்ட மேசையில் ஒட்டி இருந்து குளிர் காய்ந்து கொண்டு இருக்குதுகள் "அலுவோசுகள்". ஆக இவர்கள்... தமது பதவியை பெற, எந்த நரக வேலையும் செய்யத் தயாராக இருக்கின்றார்கள். இவர்களுக்கு வெள்ளை அடித்து.. செம்பு தூக்கும் கூட்டத்திற்கு, அறிவு எங்கே போனது.- திருகோணமலை , முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்!
முல்லைத்தீவில் பதிவான நிலநடுக்கத்தின் நேரடிக் காட்சி. காணொளி: 👉 https://www.facebook.com/reel/1430498755323451 👈 - குட்டிக் கதைகள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.