Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. முன்னாள் ஜனாதிபதி ரணிலின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த சில நாட்களுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெறுவார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவளித்த அனைவருக்கும், குறிப்பாக அரசியலமைப்பு சர்வாதிகாரத்திற்கு எதிரான இயக்கத்தில் ஈடுபட்டவர்களுக்கு நன்றி. சிகிச்சை முடிந்ததும் ரணில் விக்ரமசிங்க பொதுமக்களிடம் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ணில் விக்ரமசிங்கவுக்கு, கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் நேற்று மாலை பிணை வழங்கியது. இந்த வழக்கு கொழும்பு கோட்டை நீதிவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணையின் போது முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலை காரணமாக அவர் நீதிமன்றத்தில் நேரடியாக முன்னிலையாகவில்லை. எனினும், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து ஜூம் தொழில்நுட்பம் மூலம் அவர் முன்னிலையானார். விசாரணையின் பின்னர் நோய் நிலைமையை கருத்திற் கொண்டு, கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதியை தலா 05 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று பிணைகளில் விடுவித்தது. மேலும் குறித்த வழக்கினை மீண்டுக்கும் விசாரணைக்காக ஒக்டோபர் 29 ஆம் திகதி எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டது. ரணில் விக்ரமசிங்க தனது ஜனாதிபதி பதவி காலத்தில் தனிப்பட்ட வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்காக அரசு நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு நேற்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். விளக்கமறியல் காலத்தில் அவர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கும், பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டார். தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்ச‍ை பெற்று வருகிறார். https://athavannews.com/2025/1444767
  2. கலேவெல பகுதியில் நபரொருவர் கொலை; கடற்படை சிப்பாய் கைது! கலேவெல, மகுலுகஸ்வெவ பகுதியில் நபரொருவர் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். பொலிஸாரின் கூற்றுப்படி, 119 அவசர தொலைபேசி இலக்கத்தின் மூலம் ஒருவர் தாக்கப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டதாகக் கூறி முறைப்பாடு அளிக்கப்பட்டது. விசாரணையின் போது, அந்த நேரத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பாதிக்கப்பட்டவரை, மற்றொரு நபர் மோட்டார் சைக்கிளில் சென்று வழிமறித்து, தாக்கி, பின்னர் கொலை செய்ததாக தெரியவந்துள்ளது. இறந்தவர் தேவஹுவ பகுதியைச் சேர்ந்த 59 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக 26 வயதுடைய கடற்படை சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவருடன் நீண்டகாலமாக ஏற்பட்ட தகராறு காரணமாக சந்தேக நபர் இந்தக் கொலையைச் செய்துள்ளதாக விசாரணைகளில் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் சடலம் தம்புள்ளை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மகுலுகஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1444773
  3. ராஜஸ்தானில் அரச தேர்வில் மோசடி: 415 பேருக்கு வாழ்நாள் தடை. ராஜஸ்தானில் அரச வேலைக்கான தேர்வுகளில் மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் பொது தேர்வு ஆணையம் (RPSC) அண்மையில் நடத்திய விசாரணையில், போலி ஊனமுற்ற சான்றிதழ்கள், போலி பட்டப்படிப்பு சான்றிதழ்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான ஆவணங்களை பயன்படுத்தி தேர்வில் பங்கேற்ற 524 பேர் அடையாளம் காணப்பட்டனர். இதனையடுத்து 415 பேருக்கு வாழ்நாள் முழுவதும் அரசு தேர்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 109 பேருக்கு 1 முதல் 5 ஆண்டுகள் வரை தேர்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தடை செய்யப்பட்டவர்களில் 514 பேர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றவர்கள் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், ஒதுக்கீட்டு சலுகை பெற போலி விவாகரத்து சான்றிதழ்களை பயன்படுத்திய சம்பவங்களும் வெளிச்சத்துக்கு வந்துள்ளதால் அதுகுறித்து தனி விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2025/1444790
  4. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையில் இருந்து ஒருபோதும் பின்வாங்க போவதில்லை!- ஜனாதிபதி. எத்தகைய எதிர்ப்புக்கள் முன்வைக்கப்பட்டாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற எமது கொள்கையில் இருந்து ஒருபோதும் பின்வாங்க போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார் அலரி மாளிகையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற தேசிய பிக்குகள் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார். இது குறித்து ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது” அனைவரும் சட்டத்தின் சமமே என்ற கலசாரம் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் உருவாக்கப்படும். செல்வம் அதிகாரம் பதவி இவை எதுவும் அதற்கு விதிவிலக்கல்ல. சட்டத்தின் முன்பு அனைவரும் சமமே. எமது நாட்டில் என்றோ ஒருநாள் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்தாலும். ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களாக இருந்தாலும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டவர்களாக இருந்தாலும் அல்லது பொதுமக்களின் சொத்தினை வீணடித்திருந்தாலும் அவர்கள் அனைவரும் சட்டத்தின் முன்னிறுத்தப்படுவார்கள். அதற்கான அதிகபட்ச நடவடிக்கை எடுக்கப்படும். அதுபழிவாங்கல் அல்ல. தண்டிக்கப்படுவதுமல்ல. நீதித்துறை தொடர்பிலான நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட வேண்டும். இன்று நாட்டில் பொதுவெளியில் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை தொடர்பாக நம்பக்கையற்ற நிலை காணப்படுகிறது. அனைவரும் ஒரே சட்டம் என்ற அடிப்படையில் நாம் நடவடிக்கை எடுப்போம். எமது இந்த தீர்மானத்தில் இருந்து நாம் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம். அரசியல்வாதிகள் தங்களின் அதிகாரபலத்தின் ஊடாக மக்களின் சொத்துக்களை வீணடிப்பதற்கு இடமளிக்க மாட்டோம் என்பதை நாம் நிரூபித்துள்ளோம்” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1444736
  5. யாழ்ப்பாண மத்திய கல்லூரியில் ஒன்றும், வல்வெட்டித்துறையில் ஒன்றுமாக இரண்டு நீச்சல் தடாகங்கள் சென்ற அரசாங்கத்தில் திறந்து வைக்கப் பட்டது. இப்போ அவை… பாசி பிடித்து, நுளம்பு உற்பத்தி செய்யும் மையங்களாக மாறி விட்டதாக சொல்கிறார்கள். 😂 அதே போல் இந்த கிரிக்கெட் மைதானம் பகலில் ஆடு, மாடு மேயவும்… இரவில் கஞ்சா, கசிப்பு, விபச்சாரம் செய்யும் இடமாக மாறினாலும் மாறலாம். 🤣 பிற் குறிப்பு: மண்டைதீவு யாழ்ப்பாணத்தில் இருந்து அவ்வளவு தூரம் இல்லை. இளமைக் காலத்தில் சைக்கிளில் போய் ஈச்சம்பழம் வெட்டிக் கொண்டு வருவோம். அங்கு ஒரு உப வானொலி நிலையமும் இருந்தது. இப்போ என்ன நிலைமையில் இருக்கின்றது என தெரியவில்லை.
  6. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 50 இலட்சம் ரூபா பெறுமதியான 3 சரீரப் பிணைகளில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்
  7. ஒருவன் இன்னொருவன் பணத்தை எடுத்ததும் அவனை “பிக்பாக்கட் திருடன்” என கூறி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் அரசியல்வாதி ஒருவன் மக்கள் பணம் 160 லட்சம் ரூபாயை திருடியுள்ளான். அவனை “மிஸ்டர் கிளீன்”( திருவாளர் பரிசுத்தம்) என்று கூறி அவன் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்கின்றனர். இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்கின்றனர். இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கின்றனர். ஆனால் மக்கள் பணத்தை சுருட்டிய ரணில் சட்டத்திற்கும் மேலானவர் என்கின்றனர். அவரை திருடன் என்று கூறக்கூடாதாம். அவருக்கு கை விலங்கு போடக்கூடாதாம். அவரை சிறை மருத்துவனையில் தங்க வைக்க வேண்டும். அதுவும் வசதி இல்லை என்றால் அதைவிட வசதியாக பொது மருத்துவமனையில் வைக்க வேண்டுமாம். எல்லாவற்றையும்விட அவருக்கு சிறை உணவு வழங்கக்கூடாதாம். அவருக்கு வீட்டு உணவு வழங்க அனுமதிக்க வேண்டுமாம். என்னடா நியாயம் இது? அரசியல்வாதிகள் சிறிய தவறுக்காக தண்டிக்கப்படக்கூடாது என்கிறார் மகிந்த ராஜபக்சா. அதாவது மக்கள் பணம் 160 லட்சம் ரூபாயை திருடுவது சிறிய குற்றமாம். அதற்காக தண்டிக்கப்படக்கூடாதாம். மகிந்தா பரவாயில்லை. எங்களுடைய “தமிழ் கிளீன்” சுமந்திரன் அவர்கள் ரணிலை வெள்ளிக்கிழமை நீதிமன்றில் நிறுத்தியது தவறாம். மக்கள் பணம் 160 லட்சம் ரூபாயை திருடிய ரணிலை சிறையில் அடைத்தது தவறு. அவருக்கு உடன் பிணை வழங்கியிருக்க வேண்டும் என்று வேற கூறியிருக்கிறார். அரசியல்வாதிகளை வெள்ளிக்கிழமை கைது செய்யக்கூடாது என்றோ அல்லது கைது செய்தாலும் அவர்களுக்கு பிணை வழங்குவதை எதிர்க்கக்கூடாது என்றோ அவர் எந்த சட்டப் புத்தகத்தில் படித்தார்? தனது நோயாளி மனைவிக்கு உணவு வழங்கவேண்டியிருப்பதால் ரணிலுக்கு பிணை வழங்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் நீதிமன்றில் கெஞ்சினார். ஆனால் இதே ரணில் லண்டனில் தனது மனைவிக்கு சமைக்க ஒரு நாளைக்கு ஆயிரம் பவுண்ட் ( 4 லட்சம் ரூபா) சம்பளத்தில் ஒரு சமையல்காரரை நியமித்தாராம். அப்படிப்பட்ட யோக்கியரைக் காப்பாற்றத்தான் மகிந்த ராஜபக்சா முதல் சுமந்திரன் வரை பலரும் ஓடி வருகின்றனர். ரணில் கைது பல திருடர்களையும் அவர்களது கூட்டாளிகளையும் மக்களுக்கு நன்கு இனங்காட்டியுள்ளது. தோழர் பாலன்
  8. லண்டனில் இரண்டு நாள் தங்கிய மனைவிக்கு சமையல் செய்ய ஒழுங்கு செய்த சமையல்காரரின் ஒரு நாள் சம்பளம் நாலு லட்சம் ரூபா. அப்படி என்ன சாப்பாட்டை அந்த சமையல்காரர் சமைத்துக் கொடுத்தார் என்று கேட்டால், றோயல் கல்லூரிக்கு ஒரு பழைய வீடும் நிறைய நூல்களும் ரணில் வழங்கியுள்ளார் என்கிறார்கள். சுமந்திரன் பதில் தருவாரா? தோழர் பாலன்
  9. வேலிக்கு ஓணான் சாட்சி... 2016ம் ஆண்டு 4 வருடங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் பிரிவின் தலைவராக "எரிக் சொல்ஹம் "நியமிக்கப்பட்ட நிலையில் 2018 அந்த பதவியில் இருந்து விலக நிர்ப்பந்திக்கப்படுகிறார்... காரணம் 22 மாதங்களில் 529 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கோண்டு 488,500 டாலர்கள் செலவு செய்த நிலையில் அதில் 76 நாட்கள் தனிப்பட்ட பயணங்களாக மேற்கொண்டமை கணக்காய்வில் பிடிபட்டது 😄 உண்மை உரைகல்
  10. ரணிலுக்கு வைத்தியம் பார்க்கும்... வைத்தியர், ரணிலின் கூட்டாளி. இப்போதைக்கு அவர் ரணிலை... வைத்தியசாலையில் இருந்து நீதிமன்றத்துக்கு அனுப்ப விட மாட்டார் போலுள்ளது. தேசிய மருத்துவமனையில் "நீரிழப்பு" கண்டறியப்பட்டு அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படும் ரணில் விக்கிரமசிங்க, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜராகக் கூட முடியாத அளவுக்கு மோசமான நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது மிகவும் சந்தேகத்திற்குரியது. இந்த மருத்துவ நோயறிதலைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் கடுமையான கேள்விகளை எழுப்புகின்றன, குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரும் முன்னர் பல ஊழல்களுடன் தொடர்புடையவருமான "டாக்டர் ருக்ஷன் பெல்லனாவின் "கீழ் பணிபுரியும் மருத்துவர்களால் இது வெளியிடப்பட்டது என்பதைக் கருத்தில் கொண்டு. விக்கிரமசிங்கவின் உண்மையான நிலை குறித்து ஒரு பாரபட்சமற்ற மருத்துவ விசாரணை நடத்தப்படுவது அவசியம். நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சுயாதீன மருத்துவர்கள் குழு, கூறப்பட்ட நோயறிதல் உண்மையானதா அல்லது பெல்லனாவும் அவரது கூட்டாளிகளும் நீதித்துறையை தவறாக வழிநடத்தவும் உரிய சட்ட செயல்முறையைத் தடுக்கவும் முயற்சிக்கிறார்களா என்பதை ஆராய வேண்டும். உண்மை உரைகல்
  11. ராஜபக்ஷக்களுக்கு எதிராகவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்! -பிமல் ரத்நாயக்க. ரணில் விக்ரமசிங்கவிற்கு மாத்திரமல்ல, விரைவில் ராஜபக்ஷக்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”ரணிலின் வெளிநாட்டுப் பயணத்தின்போது அரச நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டமை நிரூபணமாகியுள்ளதன் பிரகாரமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரச உத்தியோகத்தர்களுக்கு உரித்தான சட்டமே ஜனாதிபதிகளுக்கும் உரித்தாகும், அவர்களுக்குப் பிரத்தியேகமான சட்டம் இல்லை, அதன் பிரகாரமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய வங்கியில் இடம்பெற்ற மோசடி தொடர்பாக விரைவில் விசாரணை நடத்தப்படும் என்றும், அலோசியஸிடம் பணம் பெற்றவர்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் வழங்கியுள்ள ஆணையில், இது முக்கியமான விடயமாகும் எனவே அதனை விரைவில் நிறைவேற்றுவோம்” என பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1444628
  12. இந்த வழக்கு கடந்த 10 வருடமாக நடந்தும் இன்னும் குற்றவாளிகள் தண்டிக்கப் படாதது, சட்டத்தின் சாபக்கேடு. பாடசாலை சென்ற மாணவியை சீரழித்து கொன்றவர்களுக்கு எப்போதோ தண்டனை கொடுத்து… அந்த மாணவியின் பெற்றோரை வழக்கு, கோடு, கச்சேரி என்று அலைய விடாமல் விட்டிருக்க வேண்டும்.
  13. பிரியன் சார்…. இப்ப அங்கஜன் பற்றி விளக்கம் கொடுத்திட்டு, எப்படி வாற கொலிடேக்கு கொட்டடிக்கு போவார். 🤣
  14. இந்தாள் ஏன் குறுக்கால ஓடுது என்று பார்த்தால்… செய்தி: நோர்வேயைச் சேர்ந்த எரிக் சொல்ஹைம் UNEP-க்கான நிர்வாக இயக்குநராக இருந்தபோது அரசுப் பணத்தை பயணச் செலவாக மிக அதிகமாக, அதுவும் அனுகூலமற்ற வகையில் செலவிட்டார் என்று உட்புற ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரம் காரணமாக அவர் 2018-ஆம் ஆண்டில் தனது பதவியை விலக்கிவிட்டார். Inuvaijur Mayuran
  15. ரணிலுக்கு நன்றாகத் தெரியும் எதிர்க்கட்சிகள் எல்லாம் கூடிக்கதைப்பதும் கொந்தளிப்பதும் குதிப்பதும் ரணில்மீது கொண்ட அன்பால் அல்ல "ரணிலுக்கே இந்த நிலை என்றால் நமக்கெல்லாம் என்னவாகும் என்ற பயத்தால்" என்று... யாழ்ப்பாணம்.com

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.