Everything posted by தமிழ் சிறி
-
தங்கத்தின் விலையில் புதிய உச்சம்; ஒரு பவுண் 306,000 ரூபா!
5,000 டொலர்களை விஞ்சிய தங்கத்தின் விலை; இலங்கையில் ஒரு பவுண் ரூ.397,000 அதிகரித்து வரும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகளுக்கு சர்வதேச சந்தையில் திங்களன்று (26) தங்கம் ஒரு அவுன்ஸ் 5,000 அமெரிக்க டொலர்களை தாண்டி சாதனை அளவை எட்டியது. கிரீன்லாந்து தொடர்பாக அமெரிக்காவிற்கும் நேட்டோவிற்கும் இடையிலான பதட்டங்கள் நிதி மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை குறித்த வளர்ந்து வரும் கவலைகளை அதிகரித்துள்ள நிலையில் இந்த விலை உயர்வு வந்துள்ளது. முன்னதாக 5,092.71 அமெரிக்க டொலர்களை எட்டிய பின்னர், திங்களன்று 03.23 GMT நிலவரப்படி ஸ்பாட் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 1.98% உயர்ந்து $5,081.18 ஆக இருந்தது. பெப்ரவரி டெலிவரிக்கான அமெரிக்க தங்க எதிர்காலம் 2.01% உயர்ந்து அவுன்ஸ் ஒன்றுக்கு $5,079.30 ஆக இருந்தது. 2025 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை 64% உயர்ந்தது – நிலையான பாதுகாப்பான புகலிட தேவை, அமெரிக்க நாணயக் கொள்கை தளர்வு, வலுவான மத்திய வங்கி கொள்முதல் – டிசம்பரில் பதினான்காவது மாதமாக சீனாவின் தங்கம் வாங்கும் நடவடிக்கை நீடிப்பு மற்றும் பரிமாற்ற-வர்த்தக நிதிகளில் சாதனை வரவு ஆகியவை இந்த விலை உயர்வுக்கு காரணமாக அமைந்தன. இந்த நிலையில், இந்த ஆண்டு விலைகள் 17% க்கும் அதிகமாக அதிகரித்துள்ளன. அமெரிக்க நிர்வாகம் மற்றும் அமெரிக்க சொத்துக்கள் மீதான நம்பிக்கை நெருக்கடியே இந்த விலை உயர்வுக்கு காரணம். கடந்த வாரம் ட்ரம்ப் நிர்வாகம் எடுத்த சில ஒழுங்கற்ற முடிவுகளால் இந்த விலை தூண்டப்பட்டது என்று Capital.com இன் மூத்த சந்தை ஆய்வாளர் கைல் ரோடா கூறினார். எனினும், கிரீன்லாந்தை கைப்பற்ற ஐரோப்பிய நட்பு நாடுகள் மீது வரிகளை விதிக்கும் அச்சுறுத்தல்களில் இருந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த புதன்கிழமை திடீரென பின்வாங்கினார். இருந்தாலும், சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை கனடா பின்பற்றினால், அதன் மீது 100% வரியை விதிப்பதாக வார இறுதியில் அவர் கூறினார். இலங்கை நிலவரம்; கொழும்பு, செட்டியார் தெருவின் தங்க விலைகளுக்கு அமைவாக இலங்கையில் இன்று (26) 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 3,97,000 ரூபாவாக காணப்படுகிறது. அதேநேரம், 22 கரட் தங்கத்தின் விலையானது 3,67,200 ரூபாவாக காணப்படுவதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2026/1461493
-
கொழும்பு பிரபல பாடசாலை மாணவனுடன் 3 ஆசிரியைகள் உல்லாசம்: வீடியோவால் சர்ச்சை
உங்களுக்கு... கொடுத்து வைத்த நண்பர்கள் உள்ளார்கள். 😂 நமக்கும் இருக்கிறார்களே.... "வீடியோ வந்திட்டுதா, வீடியோ வந்திட்டுதா..." என்று, நள்ளிரவு என்றும் பாராமல், தொலைபேசியில்... ஒரே தொல்லை கொடுக்கிறார்கள். 🤣
-
கொழும்பு பிரபல பாடசாலை மாணவனுடன் 3 ஆசிரியைகள் உல்லாசம்: வீடியோவால் சர்ச்சை
கொழும்பு மருதானையில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற சிங்கள ஆண்கள் பாடசாலையில் 19 வயது தலைமை மாணவ தலைவர் ஒருவர் அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கும் நான்கு ஆசிரியர்களுடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ள வீடியோ கடந்த வாரம் கசிந்துள்ளது, இதனால் நான்கு ஆசிரியர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள், அதே நேரம் அந்த மாணவனது மாணவ தலைவர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோக்களை அவரது நண்பர் ஒருவரால் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது. அந்தப் பாடசாலையின் Head Prefect. படிப்பில் கெட்டிக்காரன், விளையாட்டில் வீரன், ஆசிரியர்களுக்குப் பிடித்தமான கீழ்ப்படிதலுள்ள மாணவன். சுருக்கமாகச் சொன்னால் "Perfect Gentleman". 2025-2026 ஆம் ஆண்டின் அந்தத் தலைமைப் பதவியை அவன் ஏற்கும் போது முழுக் கல்லூரியும் எழுந்து நின்று கைதட்டியது. ஆனால் அந்தப் புனிதமான சீருடைக்குள்ளே ஒளிந்திருந்த மற்றொரு முகம் யாருக்கும் தெரியாது. அது அவனுடைய ஸ்மார்ட்போனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். எப்படி காலம் மாறிவிட்டது என்று பாருங்கள், புனிதமான ஆசிரியர்கள் இப்படி எல்லாம் நடந்துகொண்டு ஆசிரியர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்துயுள்ளார்கள். Crimenews
-
கொழும்பு பிரபல பாடசாலை மாணவனுடன் 3 ஆசிரியைகள் உல்லாசம்: வீடியோவால் சர்ச்சை
🔥 பாடசாலையா? இல்ல… ஒழுக்கம் புதைக்கப்பட்ட அரங்கமா? ஒரு காலத்தில் ஒழுக்கம் கற்பித்த இடம் இன்று ஒழுக்கமே கேலி செய்யப்பட்ட இடம். கொழும்பு மருதானையில் உள்ள பிரசித்திபெற்ற சிங்கள ஆண்கள் பாடசாலையில் நடந்த இந்த சம்பவம், ஒரு மாணவனின் வீழ்ச்சி மட்டும் அல்ல — 👉 முழு கல்வி அமைப்பின் முகத்திரையை கிழித்த சம்பவம். ⸻ 🎓 “Perfect Gentleman” – புனித வேஷத்தின் பின்னால் என்ன? 📌 படிப்பில் கெட்டிக்காரன் 📌 விளையாட்டில் வீரன் 📌 ஆசிரியர்களின் செல்லப்பிள்ளை 📌 2025–2026 Head Prefect முழுக் கல்லூரியும் எழுந்து நின்று கைதட்டிய அந்த நிமிடம், ஒரு நாடகத்தின் முதல் காட்சி தான் என்பதை யாருக்கும் தெரியவில்லை. அந்த புனிதமான சீருடை, 👉 ஒழுக்கத்தை மறைக்க பயன்படுத்தப்பட்ட கவசமாக மாறியிருந்தது. ⸻ 📱 ஸ்மார்ட்போன் – புதிய குரு, புதிய தேவன் அவன் கையில் இருந்தது, 📵 புத்தகம் அல்ல 📵 ஒழுக்கம் அல்ல 👉 ஸ்மார்ட்போன். அதில் பதிந்திருந்தது, 👉 பாடங்கள் அல்ல 👉 மதிப்புகள் அல்ல 👉 ரகசிய உறவுகள். அந்த ரகசியங்கள் இன்று சமூக ஊடகங்களின் வழியாக நிர்வாணமாகி விட்டன. ⸻ 🧑🏫 “ஆசிரியர்கள்” – யார் இவர்களுக்கு சான்றிதழ் கொடுத்தது? ஒரு கேள்வி மட்டும் போதும்: மாணவர்களுக்கு ஒழுக்கம் கற்பிக்க வேண்டியவர்கள் மாணவர்களிடமே எல்லை மீறினால் அடுத்த தலைமுறைக்கு எதை கற்பிப்பார்கள்? சில ஆசிரியர்கள், 👉 பதவியை மறந்து 👉 பொறுப்பை மறந்து 👉 சீருடையை மறந்து ஒரு மாணவனின் அதிகாரத்தை அனுபவிக்கும் கருவியாக மாறியுள்ளனர். இது தவறு அல்ல… 👉 குற்றம். ⸻ 📹 வீடியோ கசிவு – குற்றவாளி யார்? “வீடியோ வெளியிட்ட நண்பன் தவறு” “சமூக ஊடகம் ஆபத்து” ஆம்… ஆனால் உண்மையான குற்றவாளிகள்? ❓ எல்லை மீறியவர்கள் ❓ கண் மூடி ரசித்த அமைப்பு ❓ காலம் காலமாக மறைத்த நிர்வாகங்கள் ⸻ 🏫 கல்வி அமைச்சு – எத்தனை அறிக்கைகள்? எத்தனை மறைப்புகள்? “விசாரணை நடக்கிறது” “அறிக்கை கேட்கப்பட்டுள்ளது” இந்த வார்த்தைகளை நாம் எத்தனை தடவை கேட்டிருக்கிறோம்? 👉 ஒவ்வொரு முறையும் 👉 ஒரு அறிக்கை 👉 சில நாட்கள் அமைதி 👉 பின்னர் மறதி. இந்த முறை அப்படியா? அல்லது உண்மையான நடவடிக்கையா? ⸻ ⚠️ இது ஒரு சம்பவம் அல்ல… எச்சரிக்கை! இது, ❌ ஒரு மாணவனின் தவறு மட்டும் அல்ல ❌ சில ஆசிரியர்களின் வீழ்ச்சி மட்டும் அல்ல 👉 முழு கல்வி அமைப்பு அழுக ஆரம்பித்திருப்பதற்கான சைகை. இன்று வீடியோ, நாளை என்ன? ⸻ 🧨 கேள்வி ஒன்று மட்டுமே மிஞ்சுகிறது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் இனி யாரை நம்புவது? ஆசிரியர்களை தெய்வமாக பார்த்த சமூகம் இனி எதை போற்றுவது? ⸻ 📢 வதந்தி வேண்டாம். மறைப்பு வேண்டாம். கருணை வேண்டாம். 👉 உண்மை வேண்டும். நடவடிக்கை வேண்டும். பாடமாக மாறும் தண்டனை வேண்டும். யாழ்ப்பாணம்
-
இனி வாட்சப் , பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த கட்டணம் – மெட்டாவின் புதிய அறிவிப்பு!
இனி வாட்சப் , பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த கட்டணம் – மெட்டாவின் புதிய அறிவிப்பு! வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடகங்களில் கூடுதல் சேவைகளை பயன்படுத்த கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை விரைவில் அறிமுகம் செய்ய மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தகவல் பரிமாற்ற செயலியாக அறிமுகமான வாட்ஸ் அப் , பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் என்பன இன்று பொது மக்களின் அத்தியாவசிய தேவையாக மாறி விட்ட நிலையில் இவற்றில் கணக்கு இல்லாத நபர்களே இல்லை என்று கூறலாம். இந்நிலையில், வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராமை மேம்படுத்தி வரும் மெட்டா நிறுவனம், கூடுதல் சேவைகளை வழங்கி அதற்கு கட்டணம் வசூலிக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, மேனஸ் என்ற ஏஐ நிறுவனத்தை சுமார் 19,000 கோடி ரூபாய்க்கு வாங்கிய மெட்டா, அதனை பயன்படுத்தி அதிக அளவில் வருவாய் ஈட்ட முடிவு செய்துள்ளது. இன்ஸ்டாகிராமில் சந்தா செலுத்தும் பயனாளர்கள் எத்தனை நபர்களை வேண்டுமானாலும் பின் தொடரலாம் என்றும், தங்களை பின் தொடராத நபர்களின் ஸ்டோரிகளை பார்க்கும் வகையிலும் மாற்றம் கொண்டு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அத்தியாவசிய தகவல் பரிமாற்ற சேவைகள் கட்டணமின்றி தொடரும் என்றும், ஏஐ உதவியை நாடுவதற்கு மட்டுமே கட்டணம் வசூலிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக மெட்டா நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2026/1462014
-
கருத்து படங்கள்
@suvy யை மீண்டும் காண்பதில், மகிழ்ச்சி.
-
கருத்து படங்கள்
- கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்திலுள்ள இலத்திரனியல் நுழைவாயில்கள் இன்றுமுதல் திறப்பு!
கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்திலுள்ள இலத்திரனியல் நுழைவாயில்கள் இன்றுமுதல் திறப்பு! கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்திலுள்ள இலத்திரனியல் நுழைவாயில்கள் இன்று (28) முதல் உத்தியோகபூர்வமாகத் திறக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி நான்கு இலத்திரனியல் நுழைவாயில்கள் இவ்வாறு திறக்கப்படுவதாகத் திணைக்களத்தின் பிரதம குடிவரவு அதிகாரி ஜூட் பெர்னாண்டோ தெரிவித்தார். ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடனேயே இந்த ‘ஈ-கேட்’ திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன் இதன் ஊடாக விமான நிலையத்தின் வினைத்திறனை அதிகரிக்க முடியும் எனவும் பிரதம குடிவரவு அதிகாரி ஜூட் பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார். https://athavannews.com/category/sri-lanka- யாழ்ப்பாண கோட்டை மீளமைப்பு தொடர்பில் சுமந்திரன் நேரில் ஆய்வு!
சங்கிலிய மன்னனின் மந்திரிமனை... சென்ற வருடம் கவனிப்பாரற்று இடிந்து விழுந்து விட்டது. அதனை காப்பாற்ற எந்த அரசியல்வாதியும் அக்கறை செலுத்தவில்லை. இப்ப... கோட்டையை ஆய்வு செய்கிறார்களாம். தேர்தல் வருகிறது என்றால்.... சுத்து மாத்து அரசியல்வாதிகள் போடும் வேடங்கள் அநேகம். முதலில்... உங்கள், தமிழரசு கட்சி, இடிந்து விழுந்து கொண்டு இருக்கின்றது. அதை காப்பாற்றுகின்ற வழியை பாருங்கள்.- விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் உயிரிழப்பு!
விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் உயிரிழப்பு! தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மகாராஷ்டிராவின் துணை முதல்வருமான அஜித் பவார் (Ajit Pawar) இன்று (28) காலை மும்பையில் இருந்து பாராமதிக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட ஒரு துயரமான விமான விபத்தில் உயிரிழந்தார். இந்த விபத்தில் விமானிகள் மற்றும் பவாரின் பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட மேலும் நான்கு பேர் உயிரிழந்தனர். காலை 8 மணியளவில் மும்பையில் இருந்து புறப்பட்ட சிறிய விமானம், ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் தரையிறங்கும் முயற்சியின் போது பாராமதி விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளானது. உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னதாக நான்கு முக்கியமான பொதுக் கூட்டங்களில் பவார் கலந்து கொள்வதற்காக இந்தப் பயணத்தை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தின் பின்னர் குறித்த விமானம் தீக்கிரையானது. விபத்து குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 66 வயதான அஜித் பவார், மூத்த அரசியல்வாதியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனருமான சரத் பவாரின் மருமகன், மக்களவை எம்.பி. சுப்ரியா சுலேவின் உறவினர் ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1461908- இங்கிலாந்தில் கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டிய வறுமை!
இங்கிலாந்தில் கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டிய வறுமை! இங்கிலாந்தில் மிகக் கடுமையான வறுமை கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளதாக ஜோசப் ரவுண்ட்ரீ அறக்கட்டளை எச்சரிக்கிறது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 14.2 மில்லியன் மக்கள் வறுமையில் வாடும் நிலையில், அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத மிக மோசமான நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசு குழந்தைகள் நலனுக்கான கட்டுப்பாடுகளை நீக்கியுள்ள போதிலும், ஒட்டுமொத்த வறுமை விகிதத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை என்று இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. வறுமை ஒழிப்புத் திட்டங்கள் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளதால், ஏனைய எளிய மக்கள் சமூகப் பாதுகாப்பின்றி தவிப்பதாக ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இருப்பினும், குறைந்தபட்ச ஊதிய உயர்வு மற்றும் மின்சாரக் கட்டணக் குறைப்பு போன்ற நடவடிக்கைகள் மூலம் இந்த நெருக்கடியைக் கையாளப் போவதாக அரசாங்கம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2026/1461808- 📢 ஈ.பி.டி.பி-யை எழுச்சி கொள்ள வையுங்கள்! – தோழர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா அறைகூவல்.
பிச்சை எடுத்து பழகியவன்... ஒரு நாளும் சமைத்து சாப்பிட மாட்டான். 😂- வெளிநாட்டில் வாழுவோரும் வாக்களிக்க முடியும்!
சுத்துமாத்து சுமந்திரனுக்கு 99 வீதமான எதிர்ப்பு வாக்குகள்… வெளி நாட்டில்தான் உள்ளது. 🤣 சென்ற நாடுகள் எல்லாம், "செருப்படி" வாங்கிய செம்மல் அவர்.- கருத்து படங்கள்
- பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஹெரோயினுடன் கைது
பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஹெரோயினுடன் கைது. பதுளை பொலிஸ் பிரிவின் குற்றத் தடுப்புப் பிரிவில் கடமையாற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் உத்தியோகத்தரிடமிருந்து 4 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அம்பகஸ்துவ பிரதேசத்தில் வைத்து அம்பகஸ்துவ பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இவர் சிக்கியுள்ளார். சம்பவம் தொடர்பில் அம்பகஸ்துவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2026/1461687- யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்களை சந்தித்த சர்வதேச இராஜதந்திரிகள்!
யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்களை சந்தித்த சர்வதேச இராஜதந்திரிகள்! பல்வேறு சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புகளின் பங்களிப்புகாக யாழ் மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களாகப் பணியாற்றும் பெண் அரசியல் தலைவர்களை சர்வதேச இராஜதந்திரிகள் நேற்றையதின்பம் (26) சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இலங்கைக்கான கனடா உயர் ஸ்தானிகர், மாலைதீவு உயர்ஸ்தானிகர் மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம் UNDP துணை வதிவிடப் பிரதிநிதி ஆகியோரே குறித்த கலந்துரையாடலை முன்னெடுத்தனர். இதன்போது திறந்த மற்றும் சிந்தனைக்கான இடத்தை உருவாக்கல், பெண்களின் தலைமை பற்றிய உரையாடல், பொது அலுவலகங்களில் பெண்கள் நுழைவதற்கும் மற்றும் நிலைநிறுத்துவதற்கும் பெண்கள் தொடர்ந்து எதிர்கொள்ளும் தடைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இதன்போது பெண்களின் அரசியல் பங்கேற்பை முன்னேற்றுவதற்கு ஒத்துழைப்புக் கூட்டாண்மை மூலம் ஆதரவு அமைப்புகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவமும் உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1461683- பாதிரியார் ஒருவரைத் தாக்கிய சம்பவம்: பொலிஸ் அதிகாரிகள் மீண்டும் விளக்கமறியலில்!
கத்தோலிக்க பாதிரியாரை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஆறு பொலிஸ் அதிகாரிகளும் பணி நீக்கம்! கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, கம்பஹா பிராந்திய குற்ற விசாரணைப் பணியகத்தின் மோட்டார் சைக்கிள் படைப்பிரிவைச் சேர்ந்த 6 பொலிஸ் அதிகாரிகளும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நேற்று (26) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். அத்துடன், 29 ஆம் திகதி அடையாள அணிவகுப்பு நடத்தவும் நீதவான் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையிலேயே குறித்த சந்தேகநபர்கள் 6 பேரும் இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கத்தோலிக்கப் பிரிவின் கட்டுப்பாட்டில் உள்ள கொட்டதெனியாவவில் உள்ள ஒரு பண்ணையில் உதவி தோட்ட நிர்வாகியாகப் பணிபுரியும் அருட்தந்தை, திப்பிட்டிகொட தேவாலயத்தில் வழிபாட்டை நடத்திவிட்டுத் திரும்பும் போதே தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தின் போது குறித்த அருட்தந்தையை மோட்டார் சைக்கிள் போக்குவரத்து பிரிவைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கடுமையாகத் தாக்கிய நிலையில் அவர் நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2026/1461737- சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டு பிரஜைகளிடம் வாகனங்களை கொடுப்பவர்களுக்கு சட்ட நடவடிக்கை
சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டு பிரஜைகளிடம் வாகனங்களை கொடுப்பவர்களுக்கு சட்ட நடவடிக்கை. சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டு பிரஜைகளிடம் வாகனங்களை செலுத்த கொடுக்கும் வாகன உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மாஅதிபர் டபிள்யு. ஜி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார். பொலிஸ் ஊடகப் பிரிவில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் இதனை தெரிவித்துள்ளார். நாட்டில் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், வீதி விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2026/1461768- லட்டு கொடுத்து குழந்தையைக் கடத்திய நபர்!
லட்டு கொடுத்து குழந்தையைக் கடத்திய நபர்! இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில், தன் குழந்தையுடன் தன் தாய் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த பெண்ணொருவருக்கு மயக்க மருந்து கலந்த லட்டு கொடுத்து நபர் ஒருவர் அவரது குழந்தையைக் கடத்திச் சென்றுவிட்டதாக பொலிசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்திலுள்ள அலிஹார் என்னுமிடத்திலிருந்து தன் 10 மாதக் குழந்தையுடன் தன் தாய் வீடான ஜார்க்கண்டுக்கு புறப்பட்டுள்ளார் . இதனிடையே ரயிலில் பயணித்துக்கொண்டிருந்த ஒருவர் அவருக்கு லட்டு ஒன்றைக் கொடுத்துள்ளார். இது தன் தாய் தன் கைப்பட செய்தது என்று கூறிய அந்த நபர், உதவியாக அவரது குழந்தையையும் தன் கையில் வாங்கிவைத்துக்கொண்டுள்ளார். சிறிது நேரத்தில் சுயநினைவிழந்துவிட்ட பெண், பின்னர் நினைவு திரும்பும்போது அந்த நபரையும் அவரிடமிருந்த தன் குழந்தையையும் காணவில்லை என்பதை புரிந்துகொண்டுள்ளார். இந்நிலையில் தன் குழந்தையைக் கடத்திச் சென்றுவிட்டதாக, அப்பெண், பொலிசாரிடம் புகாரளித்துள்ள நிலையில், CCTV கமெராக்களை ஆய்வு செய்த பொலிசார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://athavannews.com/2026/1461761- கொழும்பு பிரபல பாடசாலை மாணவனுடன் 3 ஆசிரியைகள் உல்லாசம்: வீடியோவால் சர்ச்சை
என்னுடைய கண்ணில், இந்த வீடியோ காட்சிகள் இன்னும் படவில்லை. 😂 சில வேளை... பொய் செய்தியாக இருக்குமோ. 🤣- 2025 ஆம் ஆண்டின் சிறந்த பயணப் புகைப்படக் கலைஞர் போட்டிக்கான முடிவுகள் அறிவிப்பு!
2025 ஆம் ஆண்டின் சிறந்த பயணப் புகைப்படக் கலைஞர் போட்டிக்கான முடிவுகள் அறிவிப்பு! உலகின் பல்வேறு மூலைகளில் உள்ள கலாசாரம், இயற்கை மற்றும் வாழ்வாதாரப் போராட்டங்களை அழகியலோடு வெளிப்படுத்திய ‘ஆண்டின் சிறந்த பயணப் புகைப்படக் கலைஞர்’ போட்டிக்கான முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு விருது பெற்ற புகைப்படங்கள் வெறும் காட்சிகளாக மட்டுமன்றி, வலிமையான கதைகளைச் சொல்லும் சாட்சியங்களாக அமைந்துள்ளன. சுமார் 160 நாடுகளைச் சேர்ந்த அமெச்சூர் மற்றும் தொழில்முறை புகைப்படக் கலைஞர்களிடமிருந்து 20,000 க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. 23 ஆவது ஆண்டாக நடைபெறும் இந்தப் போட்டியில், அசல் தன்மைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டது. செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட படங்களைத் தவிர்க்கும் பொருட்டு, வெற்றியாளர்கள் அனைவரும் தங்களது கெமராவின் அசல் கோப்புகளை சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. 16 சர்வதேச நிபுணர்கள் அடங்கிய குழு, புகைப்படக் கலைஞரின் பெயர் தெரியாத வண்ணம் இந்தத் தேர்வை மிகவும் நேர்மையாக நடத்தியுள்ளனர். இந்த விருதுபெற்ற புகைப்படங்கள் விரைவில் லண்டனில் உள்ள கண்காட்சியில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படவுள்ளன. https://athavannews.com/2026/1461615- ஓய்வூதிய கொடுப்பனவை இரத்து செய்தால் அரசியல்வாதிகள் ஊழல் மோசடியில் ஈடுபடுவார்கள் - உதய கம்மன்பில
பெரிய கண்டுபிடிப்பு. ஓய்வூதியம் கொடுக்கும் போது… ஊழல் செய்யாமலா இருக்கிறார்கள்.- 📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –
சுத்துமாத்து சுமந்திரன் தனது இருப்பை தக்க வைத்து கொள்ள, தனது வெற்றியை உறுதிப்படுத்த, தனது சொந்த வாக்கு வங்கியை அதிகப்படுத்த, தமிழரசு கட்சியை அதன் யாப்பை காட்டி எப்படி எல்லாம் சிதைத்தார். தமிழ் தேசிய ஆதரவாளர்களை நீக்கி, தமிழ் தேசிய உணர்வாளர்களை நீக்கி, தமிழ் தேசிய நீக்கம் செய்து கொண்டிருக்கிறார் பாருங்கள். A. மாவை சேணாதிராசாவை செயற்படவிடாமல் செய்தார் B. அருந்தவபாலனை ஓரம் கட்டினார் C. அரியநேத்திரனை வெளியேற்றினார் D. சிவகரனை தள்ளி வைத்தார் E. சிவமோகனை கலைத்தார் F. விக்னேஸ்வரனை முடக்கினார் G. அனந்தியை வெளியேற்றினார் H. தவராசாவை ஓரம்கட்டினார் I. சரணவபவனை கலைத்தார் J. அன்பில் செவ்வேஸ்ஸை முடக்கி வைத்திருக்கிறார் K. சசிகலா ரவிராஜ் மௌனியாக்கப்பட்டார் L. குகதாசனை ஓரம் கட்டுகிறார் M. கோடீஸ்வரனை ஓரம் கட்டுகிறார் N. சிறீநேசனை முடக்க நினைக்கிறார் O. சத்தியலிங்கம் தமிழ் தேசியம் பற்றி கதைத்தால் தேசிய பட்டியலை பறிப்பேன் என்று கூறி அடிமையாக்விட்டார் P. ரவிகரனின் தேசியபற்றை முடக்குகிறார் Q. சிவஞானத்தை ஊமையாக்கி தனது புகழ் பாடும் அடிமையாக்கி வைத்திருக்கிறார் R. சுரேஸ் பிரேமசந்திரனை ஓட வைத்தார் S. சித்தாத்தன் பிரிந்து போனார் T. அடைக்கலநாதன் வெளியேறினார் U. டக்கிளசுடன் கொஞ்சி குலாவுகிறார் V. சந்திரகுமாருடன், கபிலனுடன், சந்திரசேகருடன், இளங்குமரனுடன் பின்கதவால் உறவு வைத்திருக்கிறார் W. இப்போது தனது வடமாகாண முதலமைச்சர் கனவு வெற்றி பெற சுரேசுடனும் சித்தார்த்தனுடனும் செல்வத்துடனும் சந்திரகுமாருடனும் சேர்ந்து வடமாகாண சபையில் போட்டியிட பார்க்கிறார் X. வடமாகாண சபையில் போதிய ஆசனம் கிடைக்காவிட்டால் டக்கிளசுடனோ Nppஉடனோ கூட்டணி வைத்து முதலமைச்சர் ஆக திட்டமிடுகிறார் Y. தற்போது சிறீதரனை வெளியேற்ற சதி பண்ணுகிறார் Z. தற்போது சுமந்திரன் மத்திய குழு செயற் குழு என்ற பெயரில் தன்னை எதிர்த்து கேள்வி கேட்க வக்கற்ற தனது அடிமைச் செம்புகளையும் தனக்கு வாளி வைப்பவர்களை மட்டுமே வைத்துள்ளார் வாழ்க சுமந்திரனின் தமிழரசுக் கட்சி. Roy Roy- கருத்து படங்கள்
- யாழில் இந்திய குடியரசு தினம்!
யாழில் இந்திய குடியரசு தினம்! இந்தியாவின் 77ஆவது குடியரசு தினமான இன்றைய தினம் இந்திய துணைத் தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்திய தேசியக் கொடியேற்றி நிகழ்வுகள் இடம்பெற்றன இந்திய துணைத்தூதரகத்தில் யாழ்ப்பாணம் இந்திய துணை தூதுவர் சாய் முரளி இந்திய தேசிய கொடியை ஏற்றிவைத்தார். தொடர்ந்து இந்திய ஜனாதிபதியின் குடியரசு தின வாழ்த்து செய்திகள் வாசிக்கப்பட்டதுடன், கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன. https://athavannews.com/2026/1461533 - கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்திலுள்ள இலத்திரனியல் நுழைவாயில்கள் இன்றுமுதல் திறப்பு!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.