Everything posted by island
-
தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
மக்களின் அன்றாட பிரச்சனைகள் என்ன என்பதை பாராளுமன்ற உளுப்பினர்கள் தம்மை தெரிவு செய்த தொகுதி மக்களிடம் பேசி அறிந்து கொள்ள வேண்டும். பின்னர், சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடனோ, அமைச்சருடனோ, அமைச்சு அதிகாரிகளினதோ கவனத்துக்கு கொண்டு வருவதன் மூலம் தீர்க்க தம்மாலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அவை தீர்க்கப்பட்டதா என்பதை, அடிக்கடி அம்மக்களுடன் சந்திப்புகளை மேற்கொள்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம். தொடர்சசியான உழைப்பின் மூலம் அவற்றை தீர்க்க முயற்சி செய்யலாம். அதை விட பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினருக்கு ஒதுக்கப்படும் நிதியை முறையாக பயன்படுத்தியும் இதனை செய்யலாம். மக்களின் நூறு வீத தேவைகளையும் நிச்சயமாக ஒரு பாராளுமன்ற உறுப்பினரால் தனது பதவிக்காலத்தில் செய்ய முடியாதெனிலும் பெரும்பாலான விடயங்களில் முன்னேற்றத்தை அடையலாம்.
-
தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
மக்கள் தங்களின் அன்றாடம் எதிர் நோக்கும் அடிப்படை பிரச்சனைகளை தீர்ததுவைக்க கூடிய வேட்பாளர்களை தெரிவு செய்ய வேண்டும். அது எந்த கட்சி என்றலும பரவாயில்லை. அதுவே இன்றைய தேவை.
-
வடக்கு மக்களுக்கு அதிகாரப்பகிர்வு அவசியமாக இல்லை; பொருளாதார பிரச்சினையே இருக்கிறது என்கிறார் ரில்வின் சில்வா
அத்துடன் காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளாத எமது கடந்த கால தவறுகளாலும் தான் என்பதை கூறினால் இங்கு பலருக்கு பிடிப்பதில்லை. இருப்பினும் அந்த கசப்பான வரலாற்றை ஏற்றுக்கொண்டு பயணிப்பதே எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும். War at biiter end என்று வந்த இறுதி அறிக்கையின் உட்பொருளை புலம் பெயர் செயற்பாட்டாளர்களில் சிலராவது புரிந்து கொண்டிருந்தால், அல்லது பாலகுமார், யோகி, கலைக்கோன் மாஸ்ரர் போன்ற உன்னதமான போராளிகள் இறுதியில் உயிர் தப்பி தாயகத்திலோ வெளி நாட்டிலோ செயற்படு நிலையில் இருந்திருந்தால் இன்றைய நிலை முன்னேற்றகரமாக இருந்திருக்கும் என்பது எனது கணிப்பு. ஏனெனில் ஒரு அரசியல் போராட்டத்தில் நடைமுறை மாற்றங்களை எப்படி உள்வாங்கி, பழைய தவறுகளை திருத்தி எவ்வாறு பயணிக்கவேண்டும் என்ற தெளிவு இவர்களுக்கு உள்ளது.
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
துரோகத்தை வேரறுப்போம் என்று இன்று வீர முழக்கமிடுகிறார் திருமதி சசிகலா ரவிராஜ். ஆனால், துரோகிக்கும், தியாகிக்கும் ஈழத்தமிழ் தேசிய அரசியலில் நூலிழை வித்தியாசம் தான் உள்ளது என்பதற்கு இவரது கணவர் ரவிராஜ் அவர்களே உதாரணம். 1998 ல் யாழ் மேயராக இருந்த பொன் சிவபாலன் புலிகளின் கிளைமொர் குண்டு வெடிப்பில் பலியானார். அந்த நேரத்தில் பொன் சிவபாலனுடன் நெருக்கமாக பணியாற்றியவர் அப்போது உதவி மேயராக இருந்த, திரு. ரவிராஜ் அதிர்ஷ்டவசமாக வேறு பணிகள் இருந்ததால் அன்றைய கூட்டத்தில் பங்கு பற்றவில்லை. அன்று பங்கு பற்றியிருந்தால் அன்று மேயருடன் இவரும் கொல்லப்பட்டிருப்பார். அன்று கொல்லப்பட்டிருந்திருந்தால் தமிழ் தேசியவாதிகள் பார்வையில் ரவிராஜ் இன்றும் ஒரு துரோகி. அவரின் மனைவி துரோகியின் மனைவி. அன்று வேறு பணிகள் இல்லாமல் இருந்ததால் ரவிராஜின் அதிஷடம் மாமனிதரானார். குண்டு வெடிப்பின் பின்னர் புலிகளுக்கு பயந்து மேயர் பதவியை ஏற்க முதலில் மறுத்த ரவிராஜ் எனினும் கட்சியின் வேண்டுகோளுக்கிணங்க பின்னர் சிறிது காலம் மேயராக பணியாற்றினார். இவரது அதிஷரம் மாநகரசபையின் ஆயுட்காலம் சிறிது காலத்தில் முடிந்தது.
-
வடக்கு - கிழக்கில் 15ஆசனங்கள் உறுதி- சுமந்திரன் தெரிவிப்பு!
ஶ்ரீலங்கா ஒற்றையாட்சி அரசியலமைப்பு பாராளுமன்றம் சென்று ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு விசுவாசமாக இருப்பேன் என்று சத்தியப்பிரமாணம் செய்ய அனைத்து தீவிர தமிழர தேசியவாதிகளுக்கிடையில் கடும் போட்டி. தாயகம், தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணய உரிமை, ஒரு நாடு இரு தேசம் கோஷ்டிகளும் போட்டி போட்டுக்கொண்டு ஒற்றையாட்சிக்கு விசுவாசம் தெரிவிக்க இவ்வளவு ஆவலாக இருக்கிறார்கள் என்று பார்ததால் புலம் பெயர் தேசிய வியாபாரம. செய்யும் கும்பலும் தமது விசுவாசிகளை ஒற்றையாட்சிக்கு விசுவாசம் தெரிவிக்க அனுப்ப கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறார்கள். 😂😂
-
AKD தீர்வு தருவார்?????
வரலாறும் உண்மையும் கசக்கத் தான் செய்யும், சுடத்தான் செய்யும், என்று கூறியவருக்கே முழுமையான உண்மை வரலாறு சுட்டுவிட்டது. 😂
-
AKD தீர்வு தருவார்?????
வரலாறு என்பது இந்த பொண்ணு பாடமாக்கி ஒப்புவித்ததது போல், “ அம்மா அண்ணா அடிச்சுப்போட்டான், எனக்கு நுள்ளிப்போட்டான்” என்று தனது தவறை மறைத்து தாயிடம் முறையிடும் சிறுபிள்ளையின் முறைப்பாடு அல்ல. இந்த கதையாடல்களை உலகம் திரும்பிக்கூட பார்ககவில்லை. எமக்குள் உசுப்பேற்றி வீணாக அழிந்தது தான் மிச்சம். வரலாற்றில் கிடைக்கும் சந்தர்பங்கள் ஒவ்வொன்றையும் தொடர்சசியாக (இறுதியாக ஒஸ்லோ) கோட்டைவிட்ட எம்மவரின் முட்டாள்தனத்தையும் உள்ளடக்கியதே வரலாறு. டொனமூர் அரசியலமைப்பின் உருவாக்கத்தின் போது சிங்களத்தரப்பு சமஸ்டியை பிரேரித்த போது அதை நிராகரித்து, நியாயமற்ற 50 : 50 கோரிக்கையை வைத்து காலத்தை இழுத்தடித்து வெறும் உசுப்பேற்றலை மட்டும் செய்த செயலும் வரலாறு தான். 1932 தேர்தலை புறக்கணித்ததன் மூலம், முக்கியமான தீர்மானங்கள் எடுக்கும் போது தமிழர் பிரதிநிதிகளை அனுப்பாமல் விட்ட மூடத்தனமும் வரலாறுதான். அதன் பின்னரான வெறும் உசுப்பேற்றல் ஜதார்ததத்தை நிராகரித்து மாயையைகளை நம்பிதும் வரலாறு தான். மேலே உள்ள சிறுவர் பேச்சுப்போட்டியை காசிநாதர் போன்ற கூத்தாடிகள் சிலாகிக்கலாம். ஆனால் அறிவுடை மனிதர்கள் எப்போதும் உண்மை வரலாறுகளை படித்து அன்ன்படியே தமது வாழ்வை நெறிப்படுத்துவர். கூத்தாடிகள் தமது கூத்தாட்ட content க்காக எழுதிய கதையாடல்களை வரலாறாக நம்பியதால் தான் தமிழரின் தேசிய அரசியல் கழுதை தேய்ந்து கட்டெறும்பானது போல் இன்றைய பிச்சை வேண்டாம் நாயை பிடி என்ற நிலை.
-
AKD தீர்வு தருவார்?????
எங்க நடந்த பேச்சுப்போட்டி இது. பொண்ணு குடுத்த பேச்சை பாடமாக்கி நல்லா பேசுது. எப்படியும் பேச்சுப்போட்டியில் இந்த பொண்ணு பரிசு பெற்றிருக்கும்.
-
அருச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு
மக்களுக்கு நல்லா கணக்கு விடலாம் தானே! 😂
-
வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் தேசியமக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார்! -அநுர-
வட கிழக்கில் வெல்பவர் யாராக இருந்தாலும் ஆளும. அரசுடன் நல்லுறவை வளர்த்து அதன் மூலம் வட கிழக்கு தமிழ் மக்களின் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும். அதற்கு தான் மக்கள் அவர்களை தெரிவு செய்கிறார்கள். அரசுடன் இணைந்து அமைச்சர் பதவிகளை எடுக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. ஆனால் அநுரவுடன் ஒத்துளைத்து மக்களுக்கு நன்மை யார் செய்தாலும் அது வரவேற்கப்பட வேண்டியதே. மக்களும் அவ்வாறானவர்களை தான் தெரிவு செய்ய வேண்டும்.
-
சலாம் போடாததால் வேட்பாளர் தெரிவிலிருந்து நீக்கம்! - தமிழரசு முன்னாள் செயலாளர் மிதிலச்செல்வி காட்டம்
சீற் கிடைக்கவில்லை என்று வெளியேறியவர்கள் தொகை சீற்றை விட அதிகம் போல இருக்கு. 😂
-
சிவராம் படுகொலை – லலித் குகன் காணாமலாக்கப்பட்டமை – விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு உத்தரவு
இதை தானே நானும. கூறினேன். அதையே எனக்கு திருப்பி சொல்வீர்களா? நீங்கள் எப்படி உங்கள் செல்லங்கள் செய்த கொலைகளை மறைக்க விரும்புகின்றீர்களோ அதே போல் அவர்களும் தமது செல்லங்கள் செய்த கொலைகளை மறைக்கவே விரும்புவார். இதில் ஒரு பொறுப்பான ஜனாதிபதியாக, அநுர சற்றே மேம்பட்ட சில முன்னேறகரமான நடவடிக்கைகளை எடுத்தாலே போதுமானது என்ற நிலையிலேயே நாம். அதை அவர் செய்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-
சிவராம் படுகொலை – லலித் குகன் காணாமலாக்கப்பட்டமை – விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு உத்தரவு
அரலந்தலாவை போன்ற பல படுகொலைகளை நாம் கடந்து செல்ல விரும்புவதைப் போல அநுராவும் இலங்கை இராணுவம் செயத படுகொலைகளை கடந்து செல்ல விரும்புவார் என்பதையே கூறினேன். புரிகிறதா?
-
சிவராம் படுகொலை – லலித் குகன் காணாமலாக்கப்பட்டமை – விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு உத்தரவு
நீங்களே 1987 ல் நடந்த ஒரு குற்ற சம்பவத்தை கூறி அதை செய்த கருணாவை தூக்கில் போடவில்லையே என்று ஆவேசப்பட்டீர்கள். உங்களுக்கு ஆதரவாக அதை ஏன் முன்பே செய்யவில்லை என்று தானே கேட்டேன்.அதற்கும் ஏன் ஆத்திரப்படுகின்றீர்கள்?
-
சிங்கங்களும், பன்றிகளும், அறுவான்களும், குறுக்கால போவான்களும்? - நிலாந்தன்
இவரது பொது வேட்பாளர் படு தோல்வியடைந்ததை கூட புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு நிலாந்தன் குழம்பி போயுள்ளார். “கடந்த 15 வருடங்களாக” என்ற வார்ததையை நிலாந்தன் அடிக்கடி உச்சரிக்கிறார். தமிழர் போராட்டம் எப்போது தொடங்கியது என்பதை மறந்துவிட்டாரா? 2009 க் கு முன்பு தமிழீழ தேசிய தொலைக் காட்சியில்(NTT) பிரபல அரசியல் ஆய்வாளராக இவர் இருந்த போது அன்றைய தலைமைக்கு எந்த ஆக்கபூர்வமான ஆலோசனைகளையோ மக்கள் பேரழிவை தடுக்க வேண்டிய இடித்துரைப்போ செய்யாமல் வெறும் ஜால்ரா போடும் ஆய்வுகளை மட்டும் செய்ததேன்? அவ்வாறு அன்று நேர்மையான விமர்சனங்களை செய்திருந்தால் தனது வாழ்வுக்கு பங்கம் வந்துவிடும் என்ற பயத்தில் பாரிய மக்களை அழிவை விட தனது இருப்பே முக்கியம் என்று இவர் நினைத்திருக்கிறார். இவ்வாறு சுயநல நோக்கில் மக்கள் அழிவுகளை வேடிக்கை பார்தத இவர் இப்போது தனது உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் வராது என்ற துணிவில் மற்றவர்களை சகட்டு மேனிக்கு குற்றம் சாட்டுகிறாராம்.
-
சிவராம் படுகொலை – லலித் குகன் காணாமலாக்கப்பட்டமை – விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு உத்தரவு
அப்பபடியா? அரந்தலவவில் 37 பேர் வெட்டியும் சுட்டும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்தது 1987 ம் ஆண்டில். இப்போது அதைச் செய்த அநுர கருணாவை இதற்காக தூக்கில் போடவேண்டும் என்று கூறும் நீங்கள் 2004 ம் ஆண்டுவரை அவர் புலிகள் இயக்கத்தில் இருந்த போது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஏன் கேட்கவில்லை? அது நடந்த பிறகு தானே அவர் கேர்ணலாக பதவி உயர்த்தப்பட்டார். கருணா அம்மான் என்ற செல்லப் பெயரும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார். பல தாக்குதல் நடவடிக்கைகளில் பங்கு பற்றி இருந்தார்.
-
தமிழரசுக்கட்சி ஈழத்தமிழர்களை மடையர்களா நினைக்கிறதா உமாகரன் கேள்வி
தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகளில் தவறுகள் இருக்கலாம். அனைத்தையும் ஆதரிக்க முடியாது. அவர்கள் தம்மை திருத்திக் கொள்ள வேண்டும். ஆனால், வட இந்திய ஆர். எஸ்.எஸ் , இந்துத்துவா ********** உமாகரனுக்கு இதை சொல்லலும் அருகதை கிடையாது. மதவாத நச்சுக்கருத்துகளை ஈழத்தமிழரினையே விதைப்பதை முதலில் இவர் நிறுத்த வேண்டும். பின்னர் தமிழரசுக்கடசியை விமர்சிக்கலாம். தமிழரசு கட்சியை ஆர் எஸ் எஸ் அடிமை ஆக்க முடியவில்லை என்ற கோபமே இவருக்கு. மற்றபடி தமிழ் உணர்வு எல்லாம் இவரது நடிப்பே.
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
இருக்கலாம். மிக குறைந்த வாக்குக்கள் அளிக்கப்பட்டிருக்கையில் 9 ஆசனங்கள் இருக்கையில் 200 வாக்கு ஒரு ஆசனத்துக்கு போதுமானதாக இருந்திருக்கும்.
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
தமிழ் சிறி. 1994 ம் ஆண்டு தேர்தலையே நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள். அத்தேர்தல் நடை பெற்ற போது யாழ் மாவட்டம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. தமது கட்டுப் பாட்டு பிரதேசங்களில் தேர்தல் நடத்த புலிகள் அனுமதிக்கவில்லை. தீவகம் மட்டும் அரச கட்டுப்பாட்டு பிரதேசமாக இருந்ததால், அங்கு ஈபிடிபி 10744 வாக்குகளை எடுத்தது இந்த வாக்குகள் யாழ் மாவட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குகளாக எடுத்து ஈபிடிபி யாழ் மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியது. தேர்தல் பகிஷகரிப்பின் எதிர்மறை விளைவை தமிழர்கள் தெரிந்து கொண்டார்கள்.
-
தவராசா தலைமையில் உதயமானது ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு; யாழில் களமிறங்குகிறது
தமிழரசுக் கட்சிக்குள் தெற்கு அரசியலைப் புகுத்த முயற்சி என்று இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்துள்ள கொழும்பு மாவட்டத்தின் கிளை தலைவராக நீண்ட காலம் பணியாற்றிய தவராசா தெலிவித்துள்ளார்.
-
மறதி என்பது தமிழர்களின் தேசிய வியாதி
1983 கலவரத்தை நடத்தியவர்கள் அன்றைய ஜே. ஆர் அரசே என்றே தமிழர்கள் அனைவருமே குற்றம் சாட்டினர். இன்று ஜேவிபி பதவிக்கு வந்திருப்பதால் புதிதாய் உருட்ட தொடங்கியுள்ளார்கள்.
-
தவராசா தலைமையில் உதயமானது ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு; யாழில் களமிறங்குகிறது
பெயர்கள் இப்போதே பதிவு செய்து வைத்திருந்தால் எதிர்காலத்தில் அதை விற்று நல்ல வருமானம் பெறலாம். 😂 “மனமுடைந்த தமிழ் தேசிய முன்னணி” இதுவும் நல்ல பெயர் தான்.
-
மறதி என்பது தமிழர்களின் தேசிய வியாதி
இந்த முகநூல் பதிவு தாயகத்தில் இருந்து வந்ததல்ல. பிரான்ஸில் வதியும் அதி தீவிர தேசிய இனவாதி ஒருவரின் முகநூல் பதிவு இது. இதே நபர் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு அநுர வெற்றி பெறுவார் என்று கருத்து கணிப்புகள் கூறியதை தெரிவித்து அநுர வெற்றி பெறுவதே நல்லது. அவர் கடுமையான ஒடுக்குமுறைகளை தமிழர் மீது செய்வார். அதுவே எமக்கு நல்லது அநுர வென ற பின்னர் தமிழீழம் புதிய பாய்சலை தொடங்கும் என்று எழுதியவர். தனது முகநூலில் இப்படியான விஷக்கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருபவர். அவரின் பதிவை தாயகத்தில் மாயையில் போதையில் வாழும் யாராவது மீள்பதிவு செய்திருக்கலாம்.
-
இலங்கையின் பொருளாதாரம் குறித்த அருமையான நேர்காணல்.
இலங்கையின் பொருளாதாரத்தின் கடந்த கால தவறுகள், அதை நிவர்ததி செய்வதற்காக பொருளியல் நிர்வாக ரீதியில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், வட கிழக்கு பொருளியல் மேம்பாடு குறித்த பார்வைகள், ஆலோசனைகள் தொடர்பாக எஸ். துமிலன் அவர்களுடனான நேர்காணல். ஆர்வம் உடையவர்கள் முழுமையாக கேளுங்கள்.
-
ஜனாதிபதி அநுரவுக்கு டக்ளஸ் தேவானந்தா கடிதம்!
இவற்றை சொல்லி இதை செயற்படுத்துவது கடினம். மிகச் சுலபமானது தேர்தல் வரும்போது மேடை போட்டு சோறா? சுதந்திரமா? என்று உசுப்பேற்றினால் அந்த உசுப்பேற்றலில் வாக்குகளை அள்ளி போடுவார்கள் என ற நம்பிக்கை.