Everything posted by island
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
இதை தான் முதலே குறிப்பிட்டேன். இதற்கு என்ன தீர்வு இப்படியே தொடர்ந்து விரோதத்தையும் வெறுப்புணர்வையும் விதைப்பது தீர்வாகுமா? கடந்த காலத்தில் இந்த அணுகுமுறை பலன் தந்ததா?
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
கருத்துக்கு நன்றி கொழும்பன். அதற்கு காரணம் பரஸ்பர அச்ச நிலையும் சந்தேக பார்வையும் அரசியல்வாதிகளால் வளர்க்கப்பட்டதே. அதை ஒழிப்பதற் மூலமும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற் மூலமுமே இந்த பிரச்சனைக்கு தீர்வு காணலாமேயொழிய பழைய சம்பவங்களை கிளறி இருபகுதியும் வெறுப்பை வளர்தது கொள்வதால் மேலும் பாதக நிலையை நோக்கியே செல்வோம். முஸ்லீம. தரப்பு தனி அலகு கேட்டபோது நாம் அதை முற்றாக நிராகரித்ததும் இதே அச்சநிலையே.
-
யாழில் கன்றுத்தாச்சி பசுமாட்டை வெட்டியவர்கள் விளக்கமறியலில்!
கோழியையும் அதன் கருவாக உள்ள முட்டையையும் சேர்தது உணவாக்கும் போது இந்த விலங்கு அபிமானம் தெரிவதில்லை. மீன்களை பிடித்து உணவாக்கும் போது அதில் எத்தனை மீன்கள் கருவுற்றிருக்கின்றன என்பதை எவரும் சிந்திப்பதில்லை. 😂
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
உங்களது இந்த கருத்து தவறானது. இதுவும் ஒரு வகையில் இனவெறியை தூண்டும் கருத்தே. எல்லா இனத்திலும் இனவாதிகள் இருக்கிறார்கள். சிங்கள இனவாதம் என்பது அரசியல்வாதிகளால் கட்டமைக்கப்பட்டது. வரலாற்று தென்னிந்திய தமிழர்களின் படையெடுப்புகளையும் இந்தியாவில் தம்மை விட பெரும் எண்ணிக்கையில் உள்ள தமிழர்களையும் காட்டி அச்சமூட்டி எப்படி ஶ்ரீலங்காவில் சிங்கள இனவாதம் உருவாக்கப்பட்டதோ அதே போல் சிங்கள இனவாதத்தை காட்டி அச்சமூட்டி சிங்களவருக்கு எதிரான இனவாதமும் மனநிலையும் தமிழர் மத்தியில் தமிழர் தரப்புக்களால் கட்டமைக்கப்பட்டு வளர்ததெடுக்கப்பட்டுள்ளது. அடிப்படையில் சிங்களவர்களோ, தமிழர்களோ இனவாதிகள் அல்ல என்பதை, சிங்கள பிரதேசங்களுக்கு சுற்றுலா பயணம் செய்யும் ஒரு தமிழரோ, தமிழர் பிரதேசங்களுக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் ஒரு சிங்களவரோ இதயபூர்வமாக உணர்ந்து கொள்ள முடியும்.
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
அரசியலில் பழைய பகைமைகளை மறந்து, மாற்றங்களை ஏற்றுக்கொள்வது ஒரு முக்கியமான நடவடிக்கை. இதன் மூலம் பலவகையான பலன்களை பெறலாம். ஒருவரின் பழைய எதிர்ப்புகளைப் பற்றிக் குறுகிய பார்வை கொண்டிருக்கும் போது, சமூக வளர்ச்சியும், முன்னேற்றமும் பாதிக்கப்படும். அதே நேரத்தில், பழைய பகைமைகளைப் புறக்கணித்து, மாற்றங்களை வரவேற்பது, சமூகத்தில் சமாதானத்தையும் ஒற்றுமையையும் உருவாக்குவதொடு பகைமை, பரஸ்பர சந்தேகம் காரணமாக காரணமாக ஏற்பட்ட பல பிரச்சனகளுக்கு தீர்வு காண்பதற்கான சூழ்நிலையை உருவாக்கும். இனக்குரோதம், சமூகத்தின் பல்வேறு குழுக்களிடையே விரோதத்தை உருவாக்கி, அவற்றின் ஒற்றுமையை நசுக்கக் கூடியது. இதனால், மாற்றங்களை ஏற்றுக்கொள்வது முக்கியமாக மாறுகிறது, ஏனெனில் மாற்றங்களே நமது மொத்த சமூகத்தில் புதிய வாய்ப்புகளை உருவாக்குகின்றன. அரசியல் தலைவர்கள் பழைய பகைமைகளை மறந்து, இனத்துவேஷத்துக்கு தீர்வுகளை கண்டுபிடிக்க வேண்டும், இது சமுதாயத்தில் பொது நலனையும், நீண்டகால முன்னேற்றத்தையும் உறுதி செய்யும். இதுவே நாகரீகம் அடைந்த மனிதர்கள் செய்வது. இனக்குரோதத்தை வளர்ககும் அற்ப மனிதர்கள் தொடர்பாக மக்கள் அவதானமாக இருத்தல் வேண்டும்.
-
மக்கள் விருப்பப்படி பொதுத்தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி ஆற்றல் மிக்க புதுமுகங்களைக் களமிறக்கவேண்டும் - சுமந்திரன்
பதினைந்து வருடமாக மட்டும் அல்ல அதற்கு முன்பும் மக்கள் அரசியல் மயப்படுத்தப்படவில்லை. வாக்கு அரசியலை தொடங்கி வைத்த தமிழரசுக்கட்சி இனப்பிரச்சனையை தீர்ககும் அரசியலை விட மக்களை உசுப்பேற்றி உணர்சிவசப்படுத்தி பதவிகளை பெறுவதை மட்டுமே செய்தது. அதன் விளைவான ஆயிதப்போரட்டம். ஆயுதப்போரளிகளும் மக்களை அரசியல் மயப்படுத்தவில்லை . உணர்சிவசப்படுத்தி தாயகத்தில் ஆட்சேர்ப்பதும் புலம் பெயர் நாடுகளில் நிதி சேர்ப்பதுமே அரசியல் என்றே தமது ஆயுதப் போரை தொடர்ந்தனர். முன்னைய இரண்டு பகுதியினரின் அரசியல் அறிவற்ற தவறுகளின் விளைவே தற்போதைய சுயநல அரசியல். தற்போதும் பழைய தவறான அரசியலின் தொடர்ச்சியே நடக்கிறது. அதை மாற்றாதவரை இப்படி ஆளையாள் திட்டும் அரசியலே தொடரும். 75 வருட அரசியல் சூனியநிலைமை தொடர்கிறது. உண்மையில் இந்தியாவை எமது மக்களோ அரசியல்வாதிகளோ நம்பவில்லை. இந்தியாவைக் கையாள தெரியாமல் தடுமாறுகிறார்கள் என்பதே உண்மை. ஶ்ரீலங்கா அரசு மிகச் சிறப்பாக கையாளுகிறது என்பதை மறுக்க முடியாது. மூர்ககமாக எதிர்ப்பது அல்லது அப்படியே அவர்கள் சொன்னதை கேட்பது தான் எம்மவரின் தற்கொலை அரசியல். இரண்டுமே எம்மை அழித்தது.
-
பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அறிவிப்பு
தூய தமிழ் தேசிய முகங்கள் என்றால் அவயள் என்ன சோப் போட்டு குளிப்பினம்? Hamam Soap? Rexona? Lux?
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
எப்படி தேடினாலும் கிடைக்காது. சல்லடை போட்டு தேடிப்பாருங்க அப்பவும் கிடைக்காது. வசை பாடுதல் என்பதன் அர்ததமாவது தெரியுமா? அட உங்களிடம் போய் இப்படியான தர்ககரீதியான கேள்விகளை கேட்கலாமா? அது என்ன முக மூடியா? எனது Island என்ற Profile ஐ தானே கூறுகிறீர்கள் அப்ப பெருமாள் என்பது உங்க ஆத்தா வைச்ச பெயரா? 😂 birth certificate, passport எல்லாம் ஐயா இந்த பெயரில் தானே வைச்சிருகிறார். 😂
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
விமர்சனம், வசைபாடல் இரண்டுக்கும் நிறைந வேறுபாடுகள் உள்ளன. ஒரு இனத்தின் அல்லது நாட்டின் அரசியலில் பாரிய தாக்கத்ககதை ஏற்படுத்தும் எந்த அரசியல் செயற்பாடுகளையும் விமர்சிக்கும் உரிமை மக்களுக்கு உண்டு. எவரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. அரசியல் செயற்பாடுகளின் மீது விமர்சனம் வைத்ததை தவிர நான் புலிகளை தனிப்பட்ட ரீதியில் வசைபாடிய ஒரு இடத்தையேனும் இங்கு காட்ட முடியுமா?
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
இனவாதமற்ற நாடு என்பது ஒவ்வொரு பிரஜைக்கும் சமநிலை, சம உரிமைகள் மற்றும் சமப்பாடு வழங்கப்படும் ஒரு சமூகமாக இருக்க வேண்டும். அத்தகைய நாடு மக்கள் மக்களின் இன, மத, மொழி, தோற்றம், கலாசாரம் அல்லது பிற தனிப்பட்ட அடையாளங்களின் அடிப்படையில் வேறுபாடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். இனவாதமற்ற நாடு என்பது ஒற்றுமை, பன்மை, சமநிலை மற்றும் பரஸ்பர மரியாதையை அடிப்படையாகக் கொண்ட நாட்டு அமைப்பாக இருக்கும். இதை அடைவதற்கு அநுர என்ன திட்டங்களை வைத்திருக்கிறார் என்ன அரசியலமைப்பு மாற்றங்களை செய்யப் போகிறார் என்பது எனக்கு தெரியாது. காலங்காலமாக புரையோடிப்போயிருக்கும் இனவாதத்தை ஒழிப்பது நிச்சயம் சவாலான விடயம். “நான் மந்திரவாதியல்ல ஆனால் இதை ஒழிக்க நான் எனது பதவிக்காலத்தில் என்னால் முடிந்த அளவு பாடுபடுவேன்” என்று தெரிவித்துள்ளார். இனவாதத்தின் தீமைகள் பற்றி சிங்கள பிரதேசங்களிலும் அவர்கள் மத்தியில் அதிகமாக உரையாடி உள்ளார். அவர் தனது ஆட்சியை ஆரம்பிக்க முதலே அவரை இனவெறியர் என்று கட்டமைத்த பிரச்சாரத்தை ஆரம்பித்தது நிச்சயமாக தீய நோக்கிலேயே! இனவாதம் என்பது, தமிழர் மத்தியில் புரையோடிப்போயிருக்கும் சாதிவாதத்தையும் உள்ளடக்கியது. சிங்கள இனவாதம் குறைந்தாலும் அது குறையுமா என்பது சந்தேகமே. தமிழ் தேசியப் பரப்பில் தலைவர்களாக இவ்வாறான பல இனவெறியர்கள் இருந்தும் அவர்களை “இனவெறியர்” என்று அழைப்பார்களா? அதுவும் இனவாதம் தான் என்பதை, வரலாற்றில் எமது தவறுகளை மறைத்து எழுதும் அது பற்றி பேசுபவர்கள் மீது அவதூறுகளை பதிலாக தெரிவிக்கும் எம்மவர் இங்கு ஒத்துக்கொள்ளப்போவதில்லை என்பதோடு அதை ஜஸ்ரின் கூறியபடி சத்தமின்றி மொள்ள கடந்து செல்லவே பலரும் இங்கு விரும்புவர்.
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
கருத்துக்கு எதிர்கருத்தாக உங்கள் செந்தோழர் என்று நக்கல். இதுவே தமிழ் தேசியவாமிகளின் கடந்த 75 வருட நடைமுறை. நான் அநுர ஆதரவாளன் அல்ல. இலங்கையின் ஜனாதிபதியாக அவர் தெரிவு செய்யப்டுள்ள நிலையில் இலங்கையில் இதுவரு புரையோடிப்புள்ள இனவாதத்தை அகற்ற போவமாக அவர் உறுதி அளித்துள்ள போது இவ்வாறான அவதூறுகள் தேவையா?
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
அநுர இனவெறியரக இருக்க வேண்டும் என்பதே ரஞ்சித் போன்ற இனவாதிகளின் நோக்கம். ஆனால் தாயகத்தில் உள்ள மக்களினதும் உலகம. முழுவதும் வாழும. லட்சக்கணக்கான மக்களுனதும் நோக்கம் இனிமேலாவது இலங்கையில. இனவாதம் ஒழியவேண்டும் என்பதும் அநுர இனவாதமற்ற ஆட்சியை தரவேண்டும் என்பதும்.
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
ரஞ்சித் எழுதுவதற்கு நான் எப்படி முட்டுக்கடை போட முடியும்? ஆனால், இவ்வாறு முன்முடிவுடன் அவரை போன்ற பலர் சமூகவலைத்தளங்ககளில் கிளம்பி உள்ளார்கள். அவர்களது இனவாத நோக்கங்களை விபரித்து, வாசிக்கும் மக்கள் தெளிவு பெற நான் எனது கருத்துகளை எழுதினேன். அவ்வளவு தான்.
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
எனக்கு கடந்த காலம் பற்றிய புரிதல் நன்றாகவே உள்ளது . இலங்கையில் இனவாதத்தை தூண்டியதிலும் அதை வளர்ததெடுத்ததுலும் சிங்களம், தமிழ் ஆகிய இரு பகுதியிலும் அரசியல் செய்த அனைவருக்கும் சம பங்கு உள்ளது என்பது .
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
அவர் இனவாதமற்ற ஆட்சியை நடத்த போவதாக கூறியுள்ள நிலையில், அவர் தனது ஆட்சியை சரிவர ஆரம்பிக்க முதலே அவசரப்பட்டு அவரை இனவெறியர் என்று பிரச்சாரம் செய்வது சரி என உங்களுக்கு பட்டிருந்தால் என்னால் என்ன செய்ய முடியும்.
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
சிங்கள அதிகாரவர்க்கத்தில் கடுமையான இனவாதிகள் இருக்க வேண்டும் என்ற விருப்பில் எப்போதுமே உள்ள தமிழர் தரப்பு செய்த தூண்டுதல்கள், தவறுகள் பலவற்றை இங்கு கூறினால் ஐயோ பழசை கிளறுகினான் என்று ஒப்பாரி வைப்பவர்களும் தாங்களே! கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட ஜஸ்ரின் சில பழைய விடயங்களை ஆதாரத்துக்காக சுட்டிக்காட்டியபோது அவர் அவர் கூறிய வரலாற்று உண்மையை மறுக்க முடியாமல் போனதால் அவர் தேவையற்று பழசு காவி திரிவதாக கூறியவர. தாங்கள் என்பதை மிக சீக்கிரமே மறந்து விட்டீர்கள். ஜஸ்ரின் மிகசிறப்பாக கூறினார், வரலாற்றில் நடந்த பலவற்றை சுட்டிக்காட்டும் போது பூனைப்பாதங்களால் மொள்ள கள்ள மௌனத்துடன் கடந்து போக விரும்புபவர்களே வரலாற்றை நினைவு கூருகிறோம் என்ற போர்வையில் இன குரோதத்தை இலங்கையில் தக்க வைக்கும் நோக்கில் செயற்படுகிறார்கள்.
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
வரலாற்றை நினைவு கூறுகிறோம் என்ற போர்வையில் வன்மத்தையும் குரோதத்தையும் விதைப்பது சிங்கள , தமிழ் இனவாதிகளின் வாடிக்கை. முதலில், “இனவெறியன் அநுர” என்ற இத்தலைப்பு சரியானதுதானா என்பதை பொறுப்புடன் யாழ் இணையம் சிந்திக்க வேண்டும். அநுர அங்கம் வகித்த மக்கள் விடுதலை முன்னணிக்குள் பல மாற்றங்கள் வந்து பல இனவாதிகள் வெளியேற்றப்பட்டு ஹரணி அமரசூர போன்ற சமூக ஆர்வலர்கள் உள்வாங்கப்பட்ட நிலையில் அவற்றை கண்ணக்கெடுக்காமல் பழைய ஜேவிபி செய்த அரசியல் நடவடிக்கைகளை ஒட்டு மொத்தமாக அநுர மீது திணித்து அவரை இனவாதாக கட்டமைப்பது தவறானது. அநுர பதவிக்கு வந்து இனவாதத்திற் தீமைகளையும் எவ்வாறெல்லாம் கடந்த காலங்களில் எமது பழைய அரசியல்வாதிகள் இனவாதத்தை வளர்ததார்கள் என்று விரிவாக சிங்கள மக்கள் மத்தியில் எடுத்துரைத்து புதிய பாதையில் இனவாதமற்ற நாட்டை கட்டியெழுப்புவோன் என ற அறைகூவலை விடுத்த நிலையில் அவர் தனது ஆட்சியை முழுமையாக ஆரம்பிக்க முதலே அநுரவை ஒரு இனவெறியர் என்று கட்டமைக்க முன்வருவது வரலாற்றை நினைவுகூற அல்ல. மக்கள் மத்தியில் இனக்குரோதத்தை மறைய விடாமல் அதன் மூலம. தாம் அரசியல் நடத்தும் நயவஞ்சகமே.
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
பொது வேட்பாளர் என்ற மாயமானை ஏவி அதை வைத்து மக்களை உசுப்பேற்றி தமது எண்ணத்தை நிறைவேற்றலாம் என்று கனவு கண்ட இந்த கோஷடிகள் அந்த கனவில் மண் விழுந்த வெப்பியாரத்தில் இப்போது அநுரவுக்கு எதிராக விஷத்தை கக்க தொடங்கியுள்ளார்கள்.
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
அநுர ஆட்சிக்கு எதிராக மக்களை தூண்டி அதற்கெதிராக அநுர நடவடிக்கை எடுக்கப்போய் அதில் தமிழ் மக்கள் இறக்க வேண்டும் தாம் அதை வைத்து வெளிநாடுகளில் புலம்பி அரசியல் வியாபாரங்களை தொடரவேண்டும் என்பதே இந்த சுயநல கும்பல்களின் நோக்கம். அதற்காகவே கடந்த சில நாட்களாக அநுரவுகெஉ எதிரான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள். பழைய பட்டறிவுகளை வைத்தை மக்கள் தெளிவடைந்து இவர்களின் இந்த அயோக்கியத்தனம் ஈடாறாமல் இனவாதம் ஒழிந்த நாடாக தமிழ் மக்கள் அங்கு மகிழ்வாக வாழவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
கடந்த காலங்களில் கூட ஒவ்வொரு முறையும் தெற்கில் இனவாதத்தில் இருந்து விலகி பயணிக்கும் அரசியல் சக்திகள் சற்று பலம் பெற்று இனவாதம் பலமிழக்கும் சமிக்ஞைகள் எப்போதெல்லாம் தோன்றுகினதோ அப்போதெல்லாம் சிங்கள இனவாதத்தை எதிர்தது அரசியல் செய்வதாக காட்டிக்கொள்ளும் தரப்புகள் இவ்வாறு பதட்டம் அடைந்ததுடன் அதை கெடுத்து சிங்கள இனவாத அரசுகள. அங்கு பலம் பெற தம்பன் ஆனதெல்லவற்றும் செய்தன. அதன் தொடர்சசியே இப்போது சமூக வலைத்தளங்களில்லும் சில வலைத்தளங்கள், தொலைக்காட்சிகளிலும் அநுரவை சிங்கள இனவெறியலாக காட்டும் இந்த ஈனத்தனம். சிங்கள இனவாதிகளை விட மிக மோசமான இந்த இனவாதிகள் முறியடிக்கப்பட்டாலே தமிழ் மக்களுக்கு ஒரு விடிவு பிறக்கும்.
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
இவர்களின் எண்ணம் ஈடேறக் கூடாது. சிங்கள, தமிழ் இனவாதிகளால் கடந்த 75 ஆண்டுகளாக சிதைவடைந்துவரும் தமிழ் மக்களின் வாழ்க்கை இனியும் இந்த இரு பகுதி இனவெறியர்களால் சிதைவடைய அனுமதிக்க கூடாது.
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
அநுரா இனவெறிக்கு எதிராக தெரிவித்த விடயங்கள் தமிழ் இனவெறியர்களை பதட்டமட செய்துள்ளது. தமது தமிழ் தேசிய வியாபாரத்துக்கு புலம்பெயர் தாயக பிரதேசங்களில் பாதிப்பு வந்துவிடும் என்று இத்தரப்புகள் அச்சம் கொண்டுள்ளன. எனவே அநுரா தனது ஆட்சியை சரியாக ஆரம்பிக்க முதலே அவசரமாக பழைய மக்கள் விடுதலை முன்னணி செயற்பாடுகளை தூசி தட்டி எடுத்து அதை வைத்து அநுர மீது வசைமாரி பொழிந்து அநுரவை சிங்கள இனவெறியனாக தமிழ் மக்கள் மத்தியில் காட்டி தமது தமிழ் தேசிய வியாபாரத்தை நடத் முயல்கிறார்கள் என்பது தெரிகிறது.
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
அநுர குமார திஸாநாயக்க இனவெறியனாகாக இருக்க வேண்டும் என்று கடும் போக்கு தமிழ் இனவெறியர்கள் விரும்புகிறார்கள் என்பது தெரிகிறது. இந்த தமிழ் இனவெறியர்களின் விருப்பம் ஈடேடக் கூடாது என்பதே தமிழ் மக்கள் எதிர்பார்பபு.
-
மக்கள் விருப்பப்படி பொதுத்தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி ஆற்றல் மிக்க புதுமுகங்களைக் களமிறக்கவேண்டும் - சுமந்திரன்
அடுத்த தேர்தலில் தமிழ் தேசிய கட்சிகளை நிராகரித்து அநுர கட்சிக்கு மக்கள் வாக்களிக்கவேண்டும். அங்கு உள்ளவர்களுடன் பேசியபோது அப்படி தான் நடக்கும் போல. உள்ளதாக தெரிவித்தார்கள். தமிழ் தேசியத்தை வைத்து அரசியல் வியாபாரம் செய்யும் தமிழரசு கட்சி, கஜே கும்பல் ஆகியவற்றை மக்கள் நிராகரிக்க வேண்டும்.
-
சங்கா?,குத்துவிளக்கா?; தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் இழுபறி
அட சீ! இது தெரிந்திருந்தால் மகேசன் மீதும் சேற்றை வாரி இறைத்து வசை மாரி பொழிந்திருப்போமே! நமக்கு அவ்வளவு விவரம் பத்தாது. இப்படியெல்லாம் எமது பொய அம்பலப்படும் என்று எப்படி தெரியும். 😂