Everything posted by island
- தமிழ் பொது வேட்பாளர் சிறந்ததொரு நகர்வு - நாமல் ராஜபக்ஷ
- தமிழ் பொது வேட்பாளர் சிறந்ததொரு நகர்வு - நாமல் ராஜபக்ஷ
-
தமிழ் பொது வேட்பாளர் சிறந்ததொரு நகர்வு - நாமல் ராஜபக்ஷ
சசிவர்ணம், நாங்கள் எதை பற்றி பேச தொடங்கினோமோ அதை விட்டு வேறு விடயங்களுக்கு திசை திருப்ப பார்கின்றீர்ர்கள். இத்திரியில் எனது கருத்துக்கு நீங்கள் மறுப்பு தெரிவித்த விடயம் இலங்கை இந்திய ஒப்பந்த அமுலாக்கத்தை புலிகள் குழப்பினார்களா இல்லையா என்பதை பற்றி மட்டுமே. ஆகவே வேறு விடயங்களுக்கு தாவாமல் அதை பற்றி மட்டும் பேசுவோம் யுத்தம் தொடங்கிய பின்னர் நடந்த இந்திய இராணுவத்தின் அத்துமீறல்களை பற்றி நாம் பேசவும் இல்லை அதை நான் மறுக்கவும் இல்லை. இந்திய இராணுவம் இலங்கையில் இருக்கும் வரை இந்தியா ஒப்பந்தத்தை அமுலாக்கவிழைந்ததும் அதை அமுல் செய்ய விடாமல் புலிகள் போராடி ஒப்பந்தத்தை கிடப்பில் போடவைத்ததும் நடந்த உண்மைகள். இலங்கை அரசியலில் ஆர்வம் உள்ள நாளாந்தம் பத்திரிகை வாசிக்கும் ஒருவரல் கூட அறிந்து கொள்ளக் கூடிய வெளிப்படையான உண்மை அது. அன்ரன் பாலசிங்கத்தின் ராஜதந்திரத்தின் மூலம் இந்திய, இலங்கை ஆடசி மாற்றதின் சாதக விளைவுகளை பயன்படுத்தி இந்திய இராணுவம் வெளியேற நிர்பந்திக்கப்பட்ட பின்னர், இந்தியா தமிழர் பிரச்சனையில் பாராமுகமாகவே இன்னும் கூறப்போனால் முழுமையாக தமிழருக்கு எதிர்ப்பு நிலையையே கடைப்பிடித்தது என்பது யாவரும் அறிந்த உண்மை. அதனால் ஒப்பந்தத்தில் தமிழர் சார்பான சரத்துகளை அமுலாக்கும்மாறு இலங்கையை நிர்பந்திக்கவில்லை. ஆனால், ஒப்பந்தத்தில் தனது நாட்டின் நலன்கள் சார்பான சரத்துக்களை அமுல்படுத்தும் விடயத்தில் கறாறக நடந்திருக்கும் என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை.
-
தமிழ் பொது வேட்பாளர் சிறந்ததொரு நகர்வு - நாமல் ராஜபக்ஷ
@Kandiah57 உங்கள் கருத்துக்கள் உறுதியானவை. உறுதியான, வெட்டி விழுத்தமுடியாத, உயர்ந்து நிற்கும் ஆலமரமாக உங்கள் மண்டைக்குள் உள்ள மூளைக்குள் வளர்ந்து நிற்கும் அந்த விரூட்சத்தில் இருந்து புறப்படும் உங்கள் கருத்துக்கள், கேள்விகளுக்கு பதிலளிப்பது சாதாரண இயல்பான மனித அறிவுடன் இருப்பவர்களுக்கு மிகவும் கடினமானது. சாதாரணமாக கருத்துகளில் தெரிவிக்கப்பட்ட முழுமையான அர்த்தத்தை, செய்தியை விடுத்து வசனங்களை இரண்டாகப் பிரித்தும், சொல்லு சொல்லாக அதை வாசித்தும் அதற்கு பதிலெழுதும் தங்கள் பாணியே ஒரு அழகுதான். இவை அனைத்தும் உங்களது உறுதியான ஆலமரமாக வளர்ந்து நிற்கும் அந்த விரூட்சத்தில் இருந்து பிறப்பெடுப்பவை. தொடர்ந்தும் அப்படியே உறுதியாக இருங்கள்.
- தமிழ் பொது வேட்பாளர் சிறந்ததொரு நகர்வு - நாமல் ராஜபக்ஷ
-
தமிழ் பொது வேட்பாளர் சிறந்ததொரு நகர்வு - நாமல் ராஜபக்ஷ
சிங்களவர்களுடன் இணைந்து தீர்வை காணா முடியாதா? அப்படியானால் விட்டுவிடுங்கள். தம்முடன் இணைந்து தீர்வை காணுமாறு அவர்களும் உங்களை வற்புறுத்த போவதில்லை. அவர்களும் உள்ளூர அதை தான் விரும்புவார்கள். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுங்கள். தமிழர்கள் வினை திறனான நடைமுறை சாத்தியமான அரசியலை செய்யாது இவ்வாறு வெட்டி வீர அரசியல் செய்து பொழுது போக்க வேண்டும் அதுவே எமக்கு நல்லது என்றே இனவாதிகள் விரும்புவார்கள். டக்லஸும் கருணாவும் இனப்பிரச்சனைத்மீர்வுக்காக அரசுடன்்இணைந்து செயற்பட்டார்கள் என்று அப்பாவி தனமாக நம்மியதை பற்றி நான் என்ன சொல்ல. 😂 தமிழர் தரப்பு என்றுமே எல்லாமுமே சரியாக தான் மிக திறமையாக அரசியல் செய்தது என்று தெரிவித்திருத்தீர்கள். அதை நம்பிய நான் எதேச்சையாக இணையத்தளங்களில் பல்வேறு உலக பிரபல ஊடகங்களை பார்கக நேர்ந்தது. அதில் எல்லாம் நீங்கள் சொன்னதற்கு மாறான பல தகவல்களை பார்தத உடனையே எனது கம்பியூட்டரை Off செய்துவிட்டேன். அதை உலக நாட்டு ராஜதந்திரிகளோ உலக தலைவர்களோ மக்களோ அவற்றைப் பார்த்தால் அது தமிழருக்கு பாதகம் என்பதற்காக கம்பியூட்டரை நிறுத்தி எவரும் அந்த செய்திகளை பார்ககாமல் செய்துவிட்டேன். எப்படி எனது ராஜதந்திரம். இனி இந்த உலகில் தமிழனை அடிக்க எவராலும் முடியாது. தமிழேன்டா. 😂
-
தமிழ் பொது வேட்பாளர் சிறந்ததொரு நகர்வு - நாமல் ராஜபக்ஷ
நான் ஏற்கனவே கூறியபடி நீங்கள் இணைத்தது ஒரு இயக்கத்தின் பிரச்சார வீடியோ ஆகும். இப்படியான பிரச்சார வீடியோக்கள் ஒரு காலத்தில் உங்களை விட என்னை அதிகம் மயக்கியது. இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திட்ட நாள் முதலே அதை முற்றாக நிராகரித்து அதை அமுல்படுத்த விடாமல் தடுப்பற்கான தமது போராட்டத்தை விடுதலைப்புலிகள் ஆரம்பித்தது வெள்ளிடை மலை. தனி தமிழீழத்துக்கான போராட்டத்தை தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும் என முழு வேட்கையுடனும் உத்வேகத்துடனும் புலிகள் அன்று இருந்ததும் இந்த ஒப்பந்தத்தை அதற்கு வந்த இடையூறாக புலிகள் கருதியதும் எல்லோருமே அறிந்த விடயம் தான். புலிகள் இந்திய இராணுவத்துடன் யுத்தம் புரிந்தது ஒப்பந்தத்தை அமுல் படுத்த அல்ல. மாறாக இந்திய இராணுவத்தை வெளியேற்றி இலங்கை இராணுவத்திடன் தமிழீழத்துக்கான போரை தொடர்ந்து நடத்துவதற்காகவே என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதையே பின்னர் செய்தனர். பிரேமதாசவுடன் பேச்சுவார்ததை ஆரம்பித்ததும் இந்திய இராணுவத்தை வேளியேற்றும் அரசியல் நகர்வுகளுக்காகவே. அது பற்றி அன்ரன் பாலசிங்கம் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். நான் அந்த நடவடிக்கையில் சரி, பிழை கூறவில்லை. அது தொடர்பாக சாதகமான பாதகமான வாத பிரதிவாதங்களுக்கு இடம் உள்ளது என்பது ஏற்றுக்கொள்ள கூடியதே. ஏனெனில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் பல போதாமைகள் இருந்தன. அதற்காக அதில் பல நல்ல அம்சங்களும் இருந்தன. அதில் உள்ளதை இலங்கை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இன்று தமிழர்கள் விரும்புவதில் இருந்தே அதை அறியலாம். ஆனால், அன்று தமிழ் தரப்பால் அது நிராகரிக்கப்பட்டது என்பதும் இன்று அதையாவது நடைமுறைப்படுத்தமாட்டார்களா என்று தமிழ் தரப்பு விரும்புவதும் எவராலும் மறுக்க முடியாத உண்மை.
-
தமிழ் பொது வேட்பாளர் சிறந்ததொரு நகர்வு - நாமல் ராஜபக்ஷ
அரசியல் என்பது காய்தல. உவத்தல் இன்றி நடந்த உண்மைகளை நேர்மையான ரீதியில் வெளிப்படையாக உரையாடுவது. அதன் மூலமே தெளிவு பெற முடியும். அதுவே முன்னேற்றதிற்கான வழி. உங்கள் பார்வையில் உள்ளது போல அரசியல் பக்தி விசுவாச இலக்கியம் அல்ல. நீங்கள் இணைத்தது வெறுமனே விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பிரச்சார வீடியோ மட்டுமே.
-
தமிழ் பொது வேட்பாளர் சிறந்ததொரு நகர்வு - நாமல் ராஜபக்ஷ
இந்தியா இலங்கைக்கிடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் என்பதால், அவர்களுக்கு மட்டுமே பொறுப்பு உள்ளது போலவும், தமிழருக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் அமைந்துள்ளது உங்கள் பதில். அந்த ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதை தடுக்க அல்லது அதை அமுல்படுத்த விடாமல் தடுக்க தமிழரின் முழுப்பலமும் வளங்களும் பயன்படுத்தப்பட்டு அதில் வெற்றி கண்டதை மறைக்க பாரக்கின்றீர்கள். அதை நிராகரித்து அமுல்படுத்தவிடாமல் தடுத்த விடயம் பற்றி சாதக பாதகமான முறையில் தர்க்கரீதியான வாதங்களை முன்வைக்க முடியும். ஏனெனில் அதில் போதாமை பல உண்டு. ஆனால், இந்திய இலங்கை ஒப்பந்தம் இந்திய பிரந்திய நலன்களுடன் இணைத்தே உருவாக்கப்பட்ட போதிலும், அதில் ஈழத்தமிழர் நலன்களும் சேர்ந்து முன்னிறுத்தப்பட்டதை மறுக்க முடியாது. வடகிழக்கு தமிழரின் பாரம்பரிய பிரதேசம் என்பது அங்கீகரிக்கப்பட்டமை, சிங்களம் மட்டும. சட்டம் முடிவுக்கு கொண்டு வந்து தமிழும் அலுவல் மொழியாக அங்கீகரிக்கப்பட்டமை, நிபந்தனையுடன் கூடிய வட கிழக்கு இணைப்பு, காணி, பொலிஸ் அதிகாரங்களுடன. கூடிய மாகாணசபை என சீதகமான அம்சங்களை கொண்டிருந்தாலும் ஜே. ஆர் அரசு இதை மனமுவந்து கொடுக்கவில்லை. விடுதலை புலிகளால் ஒப்பந்தத்திற்கு காட்டப்பட்ட பாரிய எதிர்ப்பும் ஒப்பந்த அமுல் படுத்துதுதலுக்கு போடப பட்ட முட்டுக்கட்டைகளும் தொடர்ந்த யுத்தமும் பேரினவாத அரசுகளுக்கு வரப்பிசாதமாக அமைந்தன. அதை சாட்டாக வைத்து இழுத்தடித்தனர். முள்ளிவாய்கால் இறுதி முடிவு தமிழரின் அரசியல் பலத்தை பாதாளத்தை நோக்கி நகர்த்தியது இனவாதிகளுக்கு மேலும் பலத்தை கொடுத்தது. அதனால் தமிழர் விரும்பும் அரசியல் தீர்வுக்கான சூழ்நிலை தற்போதைய நிலையில் மிகவும் பாதகமான நிலையில் உள்ளது. இந்தியா 37 வருசமா என்ன மசிரை புடுக்கினதா என்ற உங்கள் கேள்விக்கு பதில், அதற்கான எந்த தேவையும் இப்போது இந்தியாவுக்கு இல்லை. அவர்கள் அதை செய்ய போவதும் இல்லை. தீர்வை தருவதற்கு அது ஒன்றும் சடப்பொருள் இல்லை. புண்ணுக்கு வலியா மருந்துக்கு வலியா? அரசியல் தீர்வு காணப்படாவிட்டால் அதிகம் பாதிக்கப்பட போவது தமிழர்கள் என்பதால் தமிழர்களுக்கு இதில் அதிக பொறுப்பு உள்ளது. விரும்பியோ விரும்பாமலோ. எப்படியும் தீர்வை சிங்களவர்களுடன் இணைந்தே தமிழர்களால் உருவாக்க முடியும். அதை விட வேறு வழி இல்லை என்பதே ஜதார்ததம். வேண்டுமானால் தமிழருக்குள் மட்டும் வெட்டி வீரம் பேசி மகிழலாம். அது தீர்வுக்கு கிஞ்சித்தும் பலனளிக்காது.
-
தமிழ் பொது வேட்பாளர் சிறந்ததொரு நகர்வு - நாமல் ராஜபக்ஷ
இந்த காணி , பொலிஸ் அதிகாரம் வேண்டாம் என்று தானே 1987 ல் அதை தமிழர்கள் குழப்பினார்கள். அதை விட மிக அதிகம் தேவை என று போய் இன்று 1987 ல் கிடைத்தது கூட கிடைக்க போவதில்லை என்பது தான் நிஜம். காலம் எப்போதும் ஒரே நிலையில் நிற்பதில்லை மாறிக் கொண்டே போகும் . 1929 ல் சிங்கள தலைவர்கள் சமஸ்டியை வலியுறுத்திய போது அன்றைய தமிழர்கள் அதை நிராகரித்தனர். தமிழ் தலைவர்களை சமஸ்டிக்கு இணங்க வைக்க சிங்களத் தலைவர் பண்டாரநாயக்கா அன்று முயன்று தோல்வியடைந்தார். இன்று காலங்கடந்து தமிழர்கள் சமஸ்டியை கேட்கிறார்கள். 2002 ல் பேச்சுவார்தை தொடங்கிய பின்னர் நோர்வேயில் உள்ளக சுயநிர்ணயத்துடன் கூடிய சமஸ்டியை ஆராய்வது கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு சமஸ்டியை ஆராய வல்லுனர. குழு நியமிக்கப்பட்ட பின்னர் தமிழர்களால் அது நிராகரிக்கப்பட்டது. இன்று அதை வேண்டிப் போராட்டம். இதற்கு தான் கூறுவது காற்றுள்ள போது தூற்றிக் கொள்ள வேண்டும் என்று. இளமை துடிப்பில் தன்னை மன்மதன் என்று கற்பனை செய்து திருமணத்துக்கு ஆயிரம் நிபந்தனைகள் வைத்து வந்த பெண்கள் எல்லோரையும் நிராகரிப்பவர்களுக்கு வயதான பின்னர் அதே எந்தப் பெண்ணும் கிடைப்பது அரிதாக தான் இருக்கும். தமிழரின் அடுத்த சந்ததியாவது அறிவை பயன்படுத்த வேண்டும்.
-
தமிழ்ப் பொது வேட்பாளாின் தோ்தல் விஞ்ஞாபனம் நாளை வெளியீடு!
இலங்கை தமிழர்கள் பேச்சுவார்ததைகளை என்றுமே குழப்பவில்லை. தமிழீழ தமிழர்களும் ஐரோப்பிய தமிழர்களும் இலங்கை சிங்கள அரசியல்வாதிகளும் தான் தான் குழப்பினார்கள். 😂😂😂
-
சுமந்திரன் கூட்டமைப்புக்கு தெரியாமல் எப்படி வந்தாரோ, அதேபோல அவர் தெரியாமல் துரத்தப்படுவார்
சுமந்திரனை துரத்தினால் தமிழ் தேசியத்தை காக்க யாரை திட்டுவது? பிறகு தமிழ் தேசியவாதிகளுக்கு போர் அடிக்காதா? 😂
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
இரு இனங்கள் வாழும் ஒரு நாட்டில் அரசியல் ஜனநாயக வழி முறையிலான ரீதியில் ஒரு வழி முறையில் சமஷ்டி அரசியலமைப்பு உருவாக வேண்டுமென்றால் அந்த இரு இனங்களுக்குமிடையில் பரஸ்பர நம்பிக்கையும் ஒரளவாவது நல்லுறவு அவசியம். அது இல்லாமல் சமஷ்டி அரசியலமைப்பு உருவாகுவது சாத்தியமா? அப்படி சாத்தியம் என்றால் அதன் வழிமுறை என்ன? இன்றைய நிலையில் ஜனாதிபதியாக தேர்வு செய்யபடுபவர் நினைத்தாலும் சமஷடி அரசியலமைப்பை உருவாக்க முடியாது என்பது எனது கருத்து.
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
நீங்கள் உங்களது வழமையான காணியான சுற்றிவளைத்து பேசும் முறையை கைவிட்டு நேரடியாக பேச வேண்டும் நேரடியாக பேசுவதே முறையானது. இப்போதுள்ள நிலையில் தூண்டிலை பெறுவது என்று நீங்கள் குறிப்பிட்டது தமிழீழத்தை பெற முயற்சிக்க வேண்டும் என்பதையே. அதை நீங்கள் வெளிப்படையாக கூறினால் நாங்கள் உங்களுடன் வாதாடாமல் எங்களுடைய வேலைகளை பார்கக போவமில்ல.
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
நீங்கள் தீர்ககதரிசி விசுகு. ஆயுத போராட்டம் தொடங்கிய உடனேயே எப்படியும் இவனுகள் போராட்டம் எப்படியும் சரிவரப்போவதுல்லை இனி என்னை தூங்க விடமாட்டாங்கள் இவங்கள் என்பதை துல்லியமாக கணித்து பெட்டி படுக்கைகளுடன் லாச்சப்பலுக்கு வந்து விட்டீர்கள் தனியே படுக்க. 😂 குட் நைற. மிஸ்ரர் விசுகு.
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
தற்போதைய நிலையில் ஒரு ஜனாதிபதி தேர்தலில் பேரம் பேசுவதன் மூலம் ஒரு சமஷ்டி தீர்வு என்பதெல்லாம் நடக்காது என்பது சாதாரண மக்களாகிய எமக்கே தெரிந்த உண்மை. இனரீதியாக பிளவுபட்டு ஒருவர் மீது ஒருவர் பாரிய சந்தேக பார்வையுடன் இருக்கும் இரு இனங்கள் ஒரு சமஷடி தீர்வை நோக்கி செல்வது சுலபமல்ல. அதற்கு நீண்ட காலம் எடுக்கலாம். பரஸ்பரம் நம்பிக்கைகளை கட்டி எழுப்பாமல் இது சாத்தியமே இல்லை. அதற்கான சாத்தியங்களை உருவாக்கும் அரசியலை செய்யாமல் வெற்று கோஷங்களுடனும் வீர வசனங்கள், வெறுப்பு பேச்சுகள் எதையும் சாதிக்கப்போவதில்லை. நாம் உலகிற்கு என்ன செய்தியை சொன்னாலும் உலகம் இருவரும் பரஸ்பரம் பேசி இதை தீர்குமாறே வற்புறுத்தும். இதுவே உலக நடைமுறை. இன்றைய நிலையில் நடைமுறை பிரச்சனைகள், மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கூடிய பிரச்சனைகள் பலவற்றை வைத்து பேரம் பேசி வட கிழக்கில் எமது இனத்தின் இருப்பை வலுப்படுத்த வேண்டியதே இன்றைய அவசர தேவை. அதை விடுத்து சுய நலத்துக்காக வெறித்தனமான தேசியவாதம் பேசுவது, அப்பி பேசி தேர்தல் அரசியலில் எம்மால் தீர்வு பெற்று விட முடியும் என்று பம்மாத்து காட்டுவது எமது இருப்பை தமிழ் பிரதேசங்களில் இன்னும் பலவீனப்படுத்தும். அவ்வாறு பலவீனப்பட்ட பின்னர் உலகில் எவரும் எம்மை திரும்பி கூட பார்கக போவதில்லை.
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
தமிழர் வரலாற்றில் பிள்ளையார் பிடிக்க குரங்கான கதையாக உலக ஜதார்த்தத்தை புறந்தள்ளி தனி ஆவர்தன வீர அரசியல் செய்து, உள்ளதும் போச்சையா நொள்ளைக்கண்ணா என்ற கதையாய் தமிழர் அரசியல் தொடர்கிறது. படிப்படியாக அங்குலம் அங்குலமாக தமது அரசியல் தந்திரோயபம் மூலம் பெரிய கட்சிகளுக்குள் ஊடுருவி தமது சமுதாயத்தை ஶ்ரீலங்காவில் பலப்படுத்திய முஸலீம் அரசியல்வாதிகளின் தந்திரோபங்களைக் கூட தமிழ் அரசியலில் ஈடுபடும் தாயக/ புலம் பெயர் தமிழ் தேசிய அரசியல்வாதிகளால் செய்ய முடியவில்லை. இன்றைய நிலையில் தமிழரின் பொருளாதார சமூக கட்டமைப்புகளை வட கிழக்கில் பலப்படுத்த தேவையான கோரிக்கைகளை வைத்து பேரம் பேசி அதை நிறைவேற்றி தமது அரசியலைத் தொடர்ந்திருக்கலாம். அதை விடுத்து பொது வேட்பாளர் என று ஒரு கோமாளிக்கூட்டம் கூத்தாட இப்போது எந்த பயனும் அற்ற முடிவையே தமிழரசுக் கட்சியும் எடுத்துள்ளது என்றே நினைக்கிறேன். தமது வெற்று கோஷங்களை வைத்து தமிழ் தேசிய வெறித்தன அரசியலை செய்து மிக விரைவில் இரண்டாவது பெரும்பான்மை என்ற நிலையில் இருந்து மூன் றாவது சிறுபான்மை இனம் என்ற நிலைக்கு தமிழரை கொண்டுவந்துவிட்டே புலம் பெயர் / தாயக தமிழ் தேசிய வெறியர்கள் தமது கண்களை மூடுவார்கள்.
-
தமிழரசுக்கட்சியின் திருகோணமலை உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு
ஈழப்பிரியன் அரிநேந்திரன் ஒன றில் ஜனாதிபதியாக வர வேண்டும். இல்லை வட கிழக்கில், நாம் சமஸ்டி கேட்கும் பிரதேசத்தில் 50 வீதத்துக்கு மேல் எடுத்து சர்வதேசத்துக்கு அதை காட்டி உலகநாடுகள் அதை அங்கீகரிக்க வேண டும். இரண்டுல் எது நடந்தாலும் அவருக்கு வெற்றி. இரண்டிலும் அவர் தோற்றால் அவரை நிறுத்திய எல்லோருக்கும் சங்குதான். இறுதியில் அது தான் நடக்கப்போகிறது.
-
தமிழ் மக்கள் வழிகாட்டுவார்கள்- நிலாந்தன்
ரஞ்சித், @ரஞ்சித் இந்த புள்ளிவிபரங்களை நீங்கள் சுயமாக தயாரித்தீர்களா? ஏனென்றால், தேர்தல் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களுக்கும் உங்களால் தயாரித்து இங்கு பிரசுரிக்கப்பட்ட போலி புள்ளிவிபரங்களுக்கும் பாரிய வேறுபாடுகள் உள்ளன. கண் முன்னே ஆதாரங்கள் இருந்தும் இப்படி புள்ளிவிபரங்களை திரிக்கின்றீர்கள் என்றால் ஆதாரங்களை தேடுவது கடினமாக இருந்திருந்தால் என்ன எல்லாம் செய்திருப்பீர்கள். தேர்தல் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட உண்மை புள்ளிவிபரங்களை இங்கு இணைத்துள்ளேன். அதை இணையத்தளத்திற்கு சென்று சரி பாருங்கள். அது சரி, தோல்வியடைந்த தொகுதகளின் வாக்குகளை ஏன் கழிக்க வேண்டும். அந்த தொகுகுதிகளின் பிரதேசங்களை தமிழீழ வரைபடத்தில் இருந்து எடுத்துவிட்டீர்களா? இப்படியான வினோதமான ஒரு தலை பட்சமான வாக்களிப்பு முறையை எங்கு கற்றீர்ர்கள்? ஒரு குறிப்பிட்ட பிரதேசம் தொடர்பான சர்வசன வாக்கெடுப்பு என்றால் அப்பிரதேசத்தில் வாழும் மக்களால் அளிக்கப்பட்ட மொத்தவாக்குகளில் அப்பிரேரணைக்கு அல்லது சட்டமூலதிற்கு ஆதரவாக எத்தனை வாக்குகள் விழுந்துள்ளன என்பதை வைத்தே பிரேரணைக்கு ஆதரவான வாக்கு வீதத்தினைக் கணக்கிடுவது உலக நடைமுறை. உண்மையை சுட்டிக்காட்டினால் அதை ஜீரணிக்க முடியாமல் கோடரிக்காம்பு, துரோகி என்று திட்டித் தீர்ப்பது உங்கள் வழமையான நடைமுறை. இருப்பினும், உண்மை புள்ளிவிபரங்களை கீழே தந்துள்ளேன். உங்களுக்காக அல்ல. உங்களால் பிரசுரிக்கப்பட்ட பொய்யான போலி புள்ளிவிபரங்களை நம்பிவிடாமல் இருக்க யாழ் இணைய வாசகர்களுக்காக தருகிறேன். Electorate Poll Rejected Valid Votes TULF Percentage Keyts 27’673.00 132 27’541.00 17’640.00 64.05% Vaddu 33’456.00 135 33’321.00 23’384.00 70.18% KKS 36’695.00 218 36’477.00 31’155.00 85.41% Manipay 33’001.00 199 32’802.00 27’550.00 83.99% Kopay 33’619.00 149 33’470.00 25’840.00 77.20% Uduppidi 29’706.00 123 29’583.00 18’876.00 63.81% Point Petro 23’306.00 75 23’231.00 12’989.00 55.91% Chavakacheri 31’748.00 91 31’657.00 20’028.00 63.27% Nallur 33’529.00 137 33’392.00 29’858.00 89.42% Jaffna 28’779.00 78 28’701.00 16’251.00 56.62% Kilinochi 21’314.00 56 21’258.00 15’607.00 73.42% Mannar 29’436.00 84 29’352.00 15’141.00 51.58% Mullaitivu 19’672.00 76 19’596.00 10’261.00 52.36% Vavuniya 23’496.00 80 23’416.00 13’821.00 59.02% Trinco 29’379.00 119 29’260.00 15’144.00 51.76% Muhur 27’965.00 115 27’850.00 7’520.00 27.00% Kalkuda 29’459.00 217 29’242.00 12’595.00 43.07% Batticaloa Double 109’509.00 1618 107’891.00 49’091.00 45.50% Paddiruppu 32’532.00 243 32’289.00 15’877.00 49.17% Samanthurai 24’944.00 82 24’862.00 8’615.00 34.65% Kalmunai 26’005.00 101 25’904.00 7’093.00 27.38% Pouvil Double 89’871.00 912 88’959.00 23’990.00 26.97% Puttalam 31’205.00 134 31’071.00 3’268.00 10.52% Total 806’299.00 5174 801’125.00 421’594.00 52.63% Results_1977.PDF (elections.gov.lk)
-
தமிழ் மக்கள் வழிகாட்டுவார்கள்- நிலாந்தன்
வாதவூரான், நீங்கள் தலைப்பை விட்டு வேறு விடயங்ங்களைப் பேசுகின்றீர்கள். பொது வேட்பாளர் என்பது சர்வதேச நாடுகளுக்கு எமது அரசியல் கோரிக்கையின் ஆதரவை காட்ட என்றால் சர்வதேச நாடுகள் உலக நடைமுறையின் பிரகாரமே அதை அங்கீகரிக்கும். எமது விருப்படி தமிழ்வாக்குகள் மட்டுமே செல்லுபடியாகும் என்று சர்வதேச நாடுகளுக்கு கூற முடியாது என்பது உங்களுக்கு தெரியாதா? உங்களது பொது வேட்பாளர் அரியநேந்திரனால் இப்படியான கோரிக்கையை இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கு உத்தியோகபூர்வமாக விடுக்க முடியுமா?
-
தமிழ் மக்கள் வழிகாட்டுவார்கள்- நிலாந்தன்
இதை ஒரு போதும் நிரூபிக்க உங்களால் முடியாது. இப்படி தமிழருக்குள் மட்டும் கூறி அவர்களை உசுப்பேற்றி உசுபேற்றி ஏற்கனவே தமிழ் தேசியவாதிகளால் சிதைக்கப்பட்ட தமிழரின் அரசியல் பலத்தை மேலும் சிதைக்க மட்டுமே முடியும் சர்வதேசத்துக்கு காட்டுவதானால் அவர்கள் உலக நடைமுறையையே வலியுறுத்துவார்கள். இதுவரை 70 வருடங்களாக நடந்தது அதுதான். அந்த பட்டறிவை பட்டும் கூட தெளிய முடியவில்லை.
-
தமிழ் மக்கள் வழிகாட்டுவார்கள்- நிலாந்தன்
அப்படியானால் சர்வதேசத்துக்கு பெரும்பான்மையை காட்ட போகிறோம் என்று ஏன் பொது வேட்பாளரை நிறுத்தினார்கள்? சிங்கள, முஸ்லீம. மக்களின் வாக்குகளை கணக்கில் எடுக்க கூடாது என்று சர்வதேச நாடுகளுக்கோ ஜநா மன்றத்துக்கோ தமிழர் தரப்பால் உத்தியோகபூர்வமாக கூற முடியுமா? அப்படிக் கூற முடியாது என்றால் சர்வதேசத்துக்கு காட்ட போகிறோம் என்று கூறுவது முட்டாள்தனம் தானே!
-
தமிழ் மக்கள் வழிகாட்டுவார்கள்- நிலாந்தன்
ஒரு பிரதேசத்தை தனி நாடாக அல்லது சமஸ்டி பிரதேசமாக அறிவிப்பதானால் அந்த பிரதேச மக்களின் ஒப்புல் வேண்டும் என்பது தான் சர்வதேச சட்டம். அப்படியானால் அந்த பிரதேசத்தில் உள்ள சிங்கள முஸ்லீம் வாக்காளரது வாக்கு செல்லாது என்று சர்வதேச நாடுகளுக்கு கூறு ஒரு நாட்டை உங்களால் உருவாக்க முடியுமா? அதாவது தூய தமிழனுன் வாக்கு மட்டுமே செல்லுபடியானது என்று ஐநா மன்றத்துக்கு கூறி அங்கீகரிக்கும் படி கேட்பது சர்வதேச சட்டங்களுக்கு அமைவானதா?
- தமிழ் மக்கள் வழிகாட்டுவார்கள்- நிலாந்தன்
-
கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!
பாடகர் ஶ்ரீநிவாஸ் மீது முட்டை வீசியதை விடுங்கள். அதை விட மோசமாக அவரை மிகவும் மோசமான வசை சொற்கால் ஏசி உள்ளது வீடியோக்களில் பதிவாகி உள்ளது. போடா துரோகி, வடக்கத்தையன் இது விட தூஷண வார்ததைகளை அவருக்கு கூறி உள்ளார்கள். மேடையில் இருந்து அந்த ஆர்பாட்டம் செய்த கொடிகளை கையில் வைத்திருந்த காடையர்களை நோக்கி மிகவும் பண்பான முறையில் அவர் உரையாடினார். கனிவாக பேசினார். ஆனால் எதையும் காது கொடுத்து கேட்காத அந்த காடையர்கள் அதை மீறி வடக்கத்தையான் போடா என்று பல தூஷண வார்ததைகளை வார்ததைகளை உபயோகித்தார்கள். இது நிச்சயம் தமிழக மக்களை சென்றடையும்.