Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

island

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by island

  1. கருணாநிதி வரமுடியாமல் போனது 2011 ல் மட்டுமல்ல 1989/1990 ல் ஆட்சியில் இருந்த போது அந்த செல்வாக்கில் புலிகளைத் தமிழகத்தில் தாராளமாக நடமாட விட்ட குற்றத்திற்காக ஆட்சி கலைக்கப்பட்டது. அதன் பின்னர் (ராஜீவ் கொலையின் பின்னர்) 1991 ல்நடந்த தேர்தலில் கருணாநிதியுடன் இன்னொருவரைத் தவிர அனைவரையும் படுதோல்வியுறச்செய்து ராஜீவ் கொலையாளிகளுக்கு உதவியதாக கருதிக் கொண்டு கருணாநிதிக்கு தமிழ்நாட்டு வாக்காளர்கள் தண்டனை வழங்கினர். கருணாநிதியின் அரசியல் வரலாற்றில் படு மோசமான தோல்வி அது தான். அதற்கு காரணம் ராஜீவ் கொலை. அதனுடன் ஒப்பிட்டால் 2011 ல் பெற்ற தோல்வி சாதாரணமானது.
  2. புண்ணுக்கு வலியா மருந்துக்கு வலியா? நீங்கள் உங்கள் நாட்டுப் பிரச்சனைக்கு போராடியது உங்கள் பிரச்சனை. அடுத்த நாட்டவரான அவர்கள் உதவினார்கள். தடா பொடா போன்ற கொடிய சட்டங்களுக்கு மத்தியிலும் போராடினார்கள். உங்களுக்கு உதவ வந்ததால் அவர்களில் சிலரும் ராஜீவ் கொலை வழக்கில் தேவையற்று சிக்கினார்கள். அந்த நன்றியை இவ்வளவு எளிதாக உங்கள் சீமான் நாம் தமிழர் என்ற சுய நல கள்ளக் கும்பலுக்காக மறப்பது அழகல்ல. நீங்கள் கூறிய இந்த திராவிட கும்பல் அன்று தடுத்திரா விட்டால் 1982 இலேயே இந்திய அரசு பிரபாகரனை இலங்கையிடம் ஒப்படைத்தருக்கும். உங்கள் சீமானுக்கு அரசியலுக்கு கண்டென்டே கிடைத்திருக்காது.
  3. அதெப்படி தள்ளி விட முடியும். நீங்கள் ஆயிரம் தரவுகளை ஆதாரபூர்வமாக திரட்டினாலும் ஒரு எளிய தமிழ்பிள்ளையில் Fake முகநூல் பதிவுக்கு அது ஈடாகுமா? 😂
  4. இது தவறான தகவல். நீங்கள் கூறிய முவரில் வைகோ தான் முதலிடத்தில் இருக்கிறார். விடுதலைப்புலிகளை நேற்றும் ஆதரித்தேன், இன்றும் ஆதரிக்கிறேன், நாளையும் ஆதரிப்பேன் என்று தன்மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்ட நிலையிலும் துணிச்சலாக தெரிவித்தவர் வைகோ. (அதற்காக அவரது அரசியலை நான் ஆதரிக்கவில்லை) புலிகளை ஆதரித்து ஐரோப்பிய நாடுகளில் உரையாற்றிய பின்னர் நாடு திரும்பியதும் அவரை கைது செய்வேன் என்று ஜெயலலிதா கூறிய பின்னரும் துணிச்சலாக குறித்த திகதியில் நாடு திரும்பி கைதானவர் வைகோ. அதற்கு அடுத்து திருமாவளவன். அதற்கடுத்ததாகவே ராம்தாஸ் வருவார். ராம் தாஸை விட சுபவீரபாண்டியன், கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷன்ன் என்று பல திராவிட இயக்கத்தினர் புலிகளுக்காக சிறை சென்றவர்கள். எல்லோரையும் தவிர்ததுவிட்டு ராம் தாஸை மட்டும் தூக்கிப் பிடிப்பது ஏன்?
  5. மருத்துவத்தில் புலமை பெற்ற நீங்கள் வரலாறு, சமூகவியல், பொருளாதாரம் என்று பல விடயங்களில் ஆழ்ந்து சிந் திக்கும் படியான கருத்துக்களை வாசகர்களுக்கு புரியும்படி உங்கள் அறிவுத்தேடலைக் காட்டுவதுடன் அதுவே யாழ் இணையத்தின் பலமும. கூட. யாழ் இணையம் வெறும் சமூக ஊடக குப்பைகளை இணைக்கும் குப்பைத் தொட்டியாக மாறுவதை தடுக்கும் உங்களைப் போன்ற கருத்தாளர்களின் பங்களிப்புக்கு நன்றிகள்.
  6. அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன, உண்மைகளும் இருந்தன. ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த பல நூல்களையும் அந்த கால பத்திரிகை செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம். உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.
  7. உறவே, இப்படியே போனால் எம்மை இறுதியில் பச்சடி போட்டுவிடுவார்கள் என்பதை முன்னமே துல்லியமாக கணிப்பிட்டு உயிரைக் காப்பாற்ற ஓடி வந்த நீங்கள் உட்பட்ட நாம் அனைவரும் அறிவு ஜீவிகள் தான். 😂
  8. சிறந்த கருத்தோவியம். எமது போராட்டத்திற்கு வெறும் உணர்ச்சி உசுப்பேற்றல்களை தவிர்தது அரசியல் அரசியல் ரீதியில் ரீதியான அறிவுபூர்வமாக வளர்சசிக்கு நெடுமாறன் உட்பட எந்த தமிழக அரசியல்வாதியும் செய்யவில்லை. புறநானூற்று வீரத்தை கூறி உசுப்பேற்றியதை விட்டுவிட்டு அறிவு ரீதியாக நடைமுறை உலக அரசியலைக்கவனித்து சில அறிவுறுத்தல்களை உரிமையான கண்டிப்புடன் செய்திருக்கலாம் என்பது எனது கருத்து. கேட்பவர்கள் அதை செவி மடுத்திருப்பார்களோ என்பது வேறு விடயம்.
  9. சும்மா இருந்து இழுபட்ட திரி @goshan_che வந்ததும் அதிருது. விவசாயி சின்னத்தை விட கோஷானுக்கு அதிக வலு உள்ளது. 💪 பேசாமல் சீமான் கோஷானை தனது கட்சியில் சேர்ததால் கொஞ்சமாவது தேறலாம் போல இருக்கு.
  10. தமது பிரதேசத்தின் உற்பத்தி வளர்சசி, வர்ததக வளர்சசி அதன்மூலமான வேலைவாய்ப்பு மக்களின் வாழ்ககைத்தர உயர்வு ஆகியவற்றை விட இவ்வாறான கோவில்களுக்கு வாரியிறைப்பதில் ஈழத்தமிழர்கள் (புலம்பெயர் தமிழர்கள் உட்பட) அதிக அக்கறையுடன் இருப்பதை அவதானித்த ஏழுமலையான் இந்த ஏமாளித்தனம் உடைய மக்களே தனது வாடிக்கையாளர்கள் என்பதை துல்லியமாக சந்தைஆய்வு (marketings analysis) செய்து இலங்கைக்கு எழுந்தருளி வருகிறார் போலும்.
  11. மகிந்தவும் கோட்டபாயவும் அவரின் கும்பலும் முழுக்க முழுக்க கடும் போக்கு இனவாதிகளாகவே பதவிக்கு வரமுதல் இருந்தே இருந்துள்ளார்கள் என்பது ஏற்கனவே அனைவருக்கும் தெரிந்த விடயம்தான்.
  12. எனது நேரடியான பதிலுக்கு நேர்மையான பதிலை வழங்க முடியாமல் நீங்கள் தடுமாறுவதை ரசித்தேன். 😂 உலகம் முழுவதும் உள்ள எல்லா இனங்களிலும் உள்ள இனவாதிகள் தனிப்பட்ட விடயங்களை அரசியலாக்குவதும் விவாதங்களில் பொய்யுரைப்பதும் வழமையானது தான். உங்களைக் கஷடப்படுத்தியதற்கு மன்னிக்கவும்.
  13. எனக்கு முதலில் நீங்கள் கொடுத்த பதில் தொடர்பாக கேள்வி கேட்டதற்கு (அதாவது இது தனிப்பட்ட குடும்ப விவகாரம் இதற்குள் அரசியலை ஏன் இழுக்கின்றீர்கள் என்று நான் கேட்டதற்கு) நாமேதோ நாகரீகமற்றவர்கள் மனித நேயமற்றவர்கள் என்ற பொருள்பட எழுதிய கருத்துக்கு வழங்கப்பட்ட பதில் இப்படி நீண்டுவிட்டது என்று நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். அப்படி நான் எழுதியதாக நீங்கள் கூறியது உண்மைக்கு புறம்பானது. அந்த கருத்து எங்கே உள்ளது என்று இந்தத் திரியில் காட்டுமாறு மட்டுமே நான் கேட்கிறேன். முடிந்தால் அதை மட்டும் காட்டுங்கள். இல்லை என்றால் நான் அப்படி எழுதியதாக நீங்கள் கூறியது பொய் என்பதை ஒத்துக்கொள்ளுங்கள்.
  14. நீங்கள் எழுதியதாக நானும் குறிப்பிடவில்லையே! அவ்வாறான கருத்துக்கள் இந்த திரியில் வைக்கப்பட்டிருந்த போதிலும் அதைவிடுத்து தமிழருக்கு எதிராக என்னால் அவதூறு கூறப்பட்டதாக உண்மைக்கு புறம்பாக நீங்கள் தெரிவித்த கருத்தைப்பற்றியே கேள்வி கேட்டேன். அந்த கருத்து என்ன என்று கேள்வி கேட்டேன். அதற்கு பதிலளிக்க உங்களால் முடியாததால் வழமையான பாணியில் வேறு ஒன்றைப் பிடித்து தொங்க முயற்சித்துள்ளீர்கள். பரவாயில்லை உங்களால் அப்படியாக என்னால் எழுதப்பட்ட கருத்தைக் காட்ட முடியாது என்பதை புரிந்து கொள்ளுகிறேன்.
  15. இந்தத் திரியில் நீங்கள் பதிலளித்த எந்த கருத்திலாவது தமிழரை பற்றி அவதூறு கூறிய கருத்து இருந்ததா? அது எது என்று கூறமுடியுமா? அப்படியிருக்க அவ்வாறு இருந்ததாக பச்சைப்பொய்கூறியதும் தேவையற்று அரசியலை இழுத்ததும் ஏன்? மாறாக இதை வைத்து அந்த குடும்பத்தை நோக்கிய இனவாத கருத்துக்களே இங்கு வைக்கப்பட்டிருந்தன.
  16. சாத்தான் இங்கு நடை பெற்றது ஒரு குடும்பத்துக்குள் நடந்த தனிப்பட்ட கொலைச்சம்பவம். இதே போன்ற பல கொலைச்சம்பவங்கள் புலம் பெயர் நாடுகளில் தமிழர் குடும்பங்களுக்குள்ளும் நடைபெற்றுள்ளன. இதற்குள் அரசியலை இழுத்து பந்தி பந்தியாக புராணம் பாடும் அளவுக்கு நட்டு கழன்றவர்களாக நாம் இருக்கவேண்டியதில்லை.
  17. தமிழ் திரைப்படங்களை விட கேரளப்படங்கள் மக்களின் ஜதார்த்ததமை பிரதிபலிப்பனவாகவும் சிறப்பாகவும் உள்ளன. கேரள திரைப்டங்களில் வரும் கதாப்பாத்திரங்கள், வீடுகள், மக்களின் பழக்க வழக்கங்கள் யாழ்பாண மக்களின் வாழ்ககை முறையை பிரதிபலிப்பனவாக இருக்கும். ஈழத்தமிழ் மக்களுக்கும் கேரள மக்களுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளதை மலையாளத் திரைப்படங்களில் காணலாம். பல மலையாள திரைப்படங்களை போல இந்த மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படமும் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது. 👍👍👍👍
  18. எனக்கும் தெரியும் அப்படியான அறிக்கையை உங்களால் இணைக்க முடியாது என்று. இருந்தால் தானே இணைக்க. 😂😂😂
  19. அவர் மக்கள் பிரதிநிதி தான். மக்கள் பிரதிநிதியாக ICC முன்னெடுத்த யுத்தக்குற்ற விசாரணையை தவணை வாங்கியதன் மூலம் தடுத்தார் என்றால் அது ICC யின் இணையத்தளத்தில் அறிக்கையிடப்பட்டிருக்கும். அல்லது வழக்கை தாக்கல் செய்த நாட்டின் அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் அந்த அறிக்கையின் இணைப்பை மட்டும்தான் கேட்டேன். அப்படி ஒன்று இருந்தால் அதை இணையுங்கள்.
  20. பெருமாள் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் போது அந்தக் கேள்வி புரியாமல் இருந்தால் கேள்வியை மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டும். தப்பு தபகாக பதிலளிக்க கூடாது. எனது கேள்வி International criminal court ஶ்ரீலங்கா இல் நடந்த யுத்தக்குற்றங்களை விசாரிக்க இணங்கியதா? இணங்கி இருந்தால் ICC இன் இணையத்தளத்தில் அதுபற்றி குறிப்பிடப்பட்டுள்ளதா? வழக்கைத் தொடுக்க இணங்கிய அதை முன்னெடுத்த நாடு எது? அந்த நாட்டின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் அது பற்றிக் அறிக்கையிடப்பட்ட அறிக்கை இணைப்பை தர முடியுமா? தமிழ் மக்களின் பிரதி நிதி என்ற ரீதியில் சுமந்திரன் வழக்கை தொடுக்க முன்வந்த நாட்டுக்கோ அல்லது அனைத்துலக நீதி மன்றுக்கோ யுத்தக் குற்றங்களை விசாரணை செய்ய வேண்டாம் என்றோ அல்லது தவணை வாங்கியதாகவோ வலியுறுத்தியதாக வழக்கை தொடுக்க வந்த நாட்டினாலோ அல்லது ICC யாலோ அறிக்கையிடப்பட்ட அறிக்கையை இங்கு இணைக்க முடியுமா? குமாரசாமி குறிப்பிட்டபடி அவ்வாறு சுமந்திரன் தவணை வாங்கியிருந்தால் மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு வந்த திகதி என்ன? இவற்றை இணைப்பதன் மூலம் சுமந்திரனை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்த முடியுமல்லவா? சுமந்திரன் மக்கள் பிரதிநிதி தான். அதனை சேர்தது நான் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முயலலாமே! நான் ICC இணையத்தளங்களில் தேடிப்பார்தேன். அவ்வாறு எதுவும் இல்லை. அதனால் தான் உங்களை கேட்டேன்.
  21. சரி மறதி நோய் எனக்கு இருக்கு என்று நினைத்துக்கொண்டு நான்கேட்ட இணைப்பை இணைத்து விடுங்கோ.
  22. சரி உங்கள் கூற்றுப்படி தவணை வழங்கப்பட்டதாயின் 1. அனைத்துலக நீதி மன்றில் ஶ்ரீலங்காவில் நடைபெற்ற யுத்தக்குற்றங்களை விசாரிக்க முற்படுகையில் சுமந்திரன் தவணை கேட்டிருந்தால் அடுத்த தவணை எப்போது வழக்கப்பட்டு அது முன்னெடுக்கப்பட்டது? 2. அதில் ஆஜராகிய சட்டத்தரணி யார்? 3. இது தொடர்பாக ICC இன் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அறிக்கையிடப்பட்டதா? அந்த ICC இணையத்தள அறிக்கை இணைப்பை இங்கு இணைக்க முடியுமா?
  23. நான் கேட்டது அனைத்துலக நீதி மன்றத்தினால்( International criminal court, Haag) இலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் விசாரிக்கப்பட எடுத்துக் கொள்ள உடன்பட்டதற்கான ஆதாரம். அல்லது யுத்தக குற்றங்களை ICC க்கு எடுத்து செல்ல ஶ்ரீலங்கா அரசுக்கெதிராக வழக்கு தொடர உடன்பட்ட நாட்டின் உத்தியோகபூர்வ அறிக்கை அதனை சுமந்திரன் தடுத்ததற்கான ஆதாரம். இதை உறுதிப்படுத்தும் சர்வதேச ஊடகங்களின் செய்தி. (தமிழ் ஊடகங்கள் அல்ல)
  24. இலங்கை தனது நாட்டுப் பிரஜைக்கு All countries passport வழங்குவதை இந்தியா தடுக்கும் சட்ட உரிமை உள்ளதா?
  25. சுமந்திரன் உட்பட தற்போதைய அரசியல்திவாதிகள் எல்லோருமே பயன்றற வெறும் வெற்றுக்கோஷங்களை முன்னிறுத்திய அரசியலை மட்டுமே செய்கிறார்கள் என்பதே எனது பார்வை. மக்களின் அன்றாட பிரச்சனைகளை கூட தீர்த்து வைக்க முடியாத வெத்து வேட்டுகள் இவர்கள் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. மக்களின் நடைமுறைப் பிரச்சனைகளை தீர்க்கும் விடயத்தில் டக்லஸ் செய்வதைக் கூட செய்ய வலுவற்ற வெத்து வேட்டுகளாகவே சுமந்திரன் உட்பட தமிழ் அரசியல்வாதிகள் உள்ளார்கள் என்பதை கண்கூடாக பார்க்கிறோம். ஆனால், யுத்தக்குற்றங்களை விசாரிக்க அனைத்துலக நீதிமன்றத்தை நோக்கி வழக்கு தொடுக்க மேற்குநாடுகள் முன்வந்த போது சுமந்திரன் என்ற தனி நபர் அதை தடுத்துவிட்டார் என்பதற்கான நம்பகமான எந்த செய்தியையும் சர்வதேச ஊடகங்களில் நான் காணவில்லை. அப்படியான நம்பகரமான அனைத்துலக ஊடகச் செய்தி இருந்தால் இணைத்தால் நானும் அதை வாசிக்கலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.