Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

island

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by island

  1. ஒட்டுக்காக மனுசன் இங்கே மரத்தில் ஏறுறான் பாரு! ஏறிக் குடிச்சுட்டு இறங்கி வந்தால் கட்டுப்பணம் கூட காலி. 😂😂😂😂😂😂
  2. ஏன் என்னைக் கேட்கின்றீர்கள்? நான் எந்த கொலையையாவது சரியென்று நான் இங்கு கொண்டாடினேனா? அது சரி நீங்கள் ஏன் அர்சனாவின் இந்த கேடு கெட்ட கேவலமான செயலுக்கு வக்காலத்து வாங்குகின்றீர்கள்? இலங்கை அரசியலில் அரசியல் கொலைகளை செய்து விட்டு அதை மறைத்து நல்லவர்களாக நடிபவர்கள் பலர் எல்லா இனத்திலும் உள்ளார்கள். அதை உதாரணம் காட்டி குடும்பதகராறுக்காக மனைவியின் தலையை வெட்டிய கொலையும் அதுவும் ஒன்றென எனக்கு கல்வி கற்பித்த எந்த வாத்தியாரும் கற்பிக்காது எனது அதிஷரம்.
  3. துயரமான செய்தி. இறந்தவர்கள் அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
  4. தனது சமூத்தில் நடந்த ஒரு கொடூர குற்ற சம்பவத்தை கண்டிக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் மக்கள் பிரதிநிதி ஒருவர் அந்த கொலையை ஒரு திரைப்பட காட்சியை போல் funny யாக வர்ணித்து உரையாடுவதும், தனது நண்பியிடம், “நீங்களே வெட்டின சந்தோசத்துல் இருக்கினீர்கள் போல” என சிரிப்பை அடக்கமுடியாத மகிழ்சசியுடன் உரையாடுவதும் அதை சமூக வலைத்தளத்தில் பகிர்வதும் ஒரு civilised சமுதாயத்தில் இயல்பானது என்று நினைக்கின்றீர்களா?
  5. யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் எதிர்காலத்தில் மாகாணசபை முதலமைச்சர் என்ற உயர் பதவிக்கு போட்டியிட இருக்கும் அர்சனா ஒரு கொலை நிகழ்வுக்கு ஆதரவாக அதை ஒரு funny யாக மகிழ்ச்சியாக எப்படி நனது நண்பியுடன் உரையாடுகிறார் பாருங்கள். மாகாணத்தின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் ஒரு பதவிக்கு வர விரும்பும் ஒருவரால் இப்படி உரையாட முடிகிறதென்றால் வன்முறையை, ஒரு குற்றச்செயலை வெளிப்படையாக ஆதரித்தாலும் தமிழ் மக்கள் எனக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை தான் இதற்கு காரணம். https://youtu.be/RyiniZWcsAA?si=QCmSOFuqBStO9450
  6. இருவருக்கும் ஆபத்து என்ற உணர்வு வந்தவுடன் நண்பர்களாகிவிட்டனர். இதுவே மனிதன் என்றால் கிடைத்த சந்தர்ப்பத்தை விடாமல் உடல் வலு குறைந்தவனை போட்டு தள்ளியிருப்பான்.
  7. எங்கோ கோடிக்கணக்கான கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள செவ்வாய்கிரகமும், வியாழன் கிரகமும், சனிக்கிரகமும் எப்படி பூமிக்கு தேடிவந்து ஒரு குறிப்பிட்ட சிலரை மட்டும் தேடிப்பிடித்து அவர்கள் வாழ்வில் மட்டும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக அது பூமியை நோக்கி பயணிக்கும் மீடியம் என்ன? குறிப்பிட்ட மக்களை தாக்கி முடிய அது எப்படி தான் தாக்க வேண்டிய அடுத்தவர்களை தேடி செல்கிறது என்பதை ஆதாரங்களுடன் எவரவது விளக்க முடியுமா?
  8. ஒரு சில கடும் போக்கு இஸ்லாமிய நாடுகள் அவ்வாறான சட்டங்கள. இருக்கலாம். மற்றய நாடுகளில் அப்படியான சட்டங்கள் இல்லையெனினும் திருமண ஒப்பந்தத்தை மீறும் இவ்வாறான செயல்கள் உலகில் எங்கும் விரும்பபடுவதில்லை. அதை சமூகரீதியில் அங்கீகரிப்பதும் இல்லை. சட்டப்படி பிரிந்து போவதே இதற்கான அறிவார்ந்த தீர்வு. இவ்வாறான சைக்கோதனமன கொலைகள் உலகம் முழுவதும் நடந்தே உள்ளன. ஆனால் ஒரு சமூகமாக அதை கொண்டாடும் மனநிலை கொலையாளியை ஒரு வீரனாக பாராட்டும் செயல்கள் என்பது அவமானகரமானது என்பதே எனது நிலைப்பாடு.
  9. அந்த பெண் தவறு செய்தாரா இல்லையா என்பது இங்கு பிரச்சனை அல்ல. கணவனின் வாக்குமூலத்தின் பிரகாரம், அந்த பெண் செய்தது ஒரு தவறு என்றால், கணவன் செய்தது கொடூர குற்றச்செயல். (Crime) அந்த கொடூர க்கொலையை இனத்தின் கூட்டு உளவியல் கொண்டாடும் மனநிலை கேவலமானது என்பதே இங்கு முக்கியமானது இறந்த பின்னர் தலையை வெட்டி சென்ற கொடூர கொலை பெருமளவு மக்களால் கொண்டாடப்படுகிறது என்பதும் அந்த கொலையை செய்தவன் கதாநாயகனாக புகழப்படுவது என்பதும் ஒரு சைக்கோ மனநிலை. அந்த சமூகத்தில் வளர்ந்துவரும் குழந்தைகள் கொடூரக் கொலைகளை ஒரு முன்மாதிரியாக பார்கக தொடங்குவர். தலைவர் இருந்திருந்தால் எதை செய்திருப்பாரோ அதை அந்த வீரத்தமிழன் செய்து தமிழரின் வீரத்தை மானத்தை காப்பாற்றி உள்ளார் என்பதான பல பதிவுகள் சமூக வலைத்தளமெங்கும் கொட்டிக்கிடக்கின்றன. இது எமது இனத்திற்கே அவமானம் இல்லையா? அதற்கு பல லைக்குகள் வேறை. இந்த கொலையை கண்டிபவர்களை நோக்கி உனது மனைவியும் இவளைப் போன்ற வே … தானே என்று அவர்களது குரல்களை அடக்கும் யுக்தி எவ்வளவு வக்கிரமானது. இதை ஒரிருவர் மட்டுமல செய்தால் கடந்து போகலாம். ஆனால் இவ்வாறானவர்களே எமது மக்களின் சமூக வலைதளங்களில் பெரும்பான்மையினர். அத்துடன் ஒருவர் தனது முகநூலில் கொலை செய்யப்பட்ட சுவர்ணலதாவின் இறுதிக்கிரிகைகளில் எடுக்கப்பட்ட உடலின் புகைப்படத்தை பகிர்ந்து தனது பிரதேசமான ஆலையடி வேம்பு பிரதேசத்திலும் விரைவில் இப்படியான ஒரு சம்பவம் நிகழவேண்டும் என்று தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். ( இந்த முகநூல்பதிவின் Screenshot ல் அந்த பெண்ணின் உடலும் கொலை செய்யப்பட வேண்டியவர்கள் என்று அவரால் சுட்டிக்காட்டப்பட்ட பெண்கள் பற்றிய சில தனிநபர் விபரங்களும் இருப்பதால் அதை இங்கு இணைப்பது உசிதமல்ல) அடுத்த கொலையை ஆவலுடன் எதிர்பார்ககும் அவருக்கும் பல லைக்குகள் வந்திருந்தன என்றால் இந்த சைக்கோ மனநிலை அதிகளவான எமது மக்களுக்கு இருப்பதானது இவர்களுக்கெல்லாம் சட்டவாக்க அதிகாரம் கிடைத்தால் ஷரியா சட்டம் போன்ற காட்டுமிரண்டி சட்டங்களை உருவாக்குவர் என்பதை காட்டுகிறது.
  10. நிறை குடம் போலொரு திரைப்படம் வந்தால் ரசிகனுக்கதுதான் சுபதினம் என்று வாலி எழுதி (அந்த வாலிதான் @வாலி நம் கள உறவோ நானறியேன்) சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடலில் ஒரு வரி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ் ரசிகர்களுக்கு அந்த சுபதினம் வரவில்லை. அந்த ஏமாற்றத்தையே இந்த படமும் தந்தது.
  11. இந்த விடயம் தொடர்பாக மிகவும் தெளிவான அறிவார்ந்த பார்வையுடனான தாயகத்தில் இருந்து சட்டத்தரணி ஒருவரின் கருத்து. https://m.facebook.com/story.php?story_fbid=1103923524906211&id=100058657202134
  12. அடிக்கடி பல தடவைகள் எனது கருத்துக்களுக்குள் வந்து, அதற்கு தர்கக ரீதியில் பதில் சொல்லாமல் என்னை முஸ்லீமாக இனம் காட்டி வசைமாரி பொழிவதில் மும்முரமாக உள்ளீர்கள். அதற்கான காரணம் என்ன? இதற்கு பதில் கூறும் கருத்தியல் நேர்மை உங்களிடம் இல்லை என்பது எனக்கு தெரியும். இருந்தாலும், சக உறவுகளும் அறியவேண்டும் என்பதற்காக கேட்கிறேன்.
  13. சோதிடம் கூறும் ஒரு சாமியாரிடம் சேர்ந்து வேலை செய்த நபர் ஒருவர் வழங்கிய பேட்டி ஒன்று பார்ததேன். பிறக்கப்போகும் பிள்ளை ஆணா, பெண்ணா என்று யாராவது தம்பதிகள் வந்தால் ஒரு துண்டு சீட்டில் பெற்றோர் பெயருடன் பெண்பிள்ளை என்று எழுதி அதை ஒரு உறையில் போட்டு பூஜை செய்துவிட்டு, தம்பதியினரிடம் மாற்றி கூறுவாராம். அதாவது ஆண்பிள்ளை என்று கூறுவாராம். பின்னர் அந்த கவரை கடவுள் சிலைக்கு கீழ் வைத்து விட்டு உங்கள் குழந்தைக்காக தினமும் பூஜை செய்யப்போவதாக கூறுவாராம். ஆண்பிள்ளை பிறந்தால் அவர் சொன்னது பலித்து விட்டது என்று அந்த கவரை திரும்ப உடைக்காமல் அப்படியே அமுக்கிவிடுவாராம். தற்செயலாக பெண்பிள்ளை பிறந்தால் அவர்களிடம் நான் பெண்பிள்ளை என்று தானே உங்களுக்கு கூறினேன் என்று கதையளப்பாராம். பெற்றோர் நம்பவில்லை என்பதால் கவரை அவர்கள் முன்பாகவே பிரித்து அதில் பெண்பிள்ளை என்று எழுதியிருப்பதை காட்டுவாராம். பெற்றோரும் நாம் தான் தவறாக விளங்கி விட்டோம் சாமி சரியாக தான் சொல்லியிருப்பார் என்று திருப்தியடைவார்களாம்.
  14. மன்னிக்கவும் வாலி, நீங்கள் கூறியது போல பெண்கள் சிந்திக்க வெளிக்கிட்டால் இலங்கையில் உள்ள பல ஆயிரம் ஆண்களின் தலை எப்போதோ உருண்டிருக்கும். இலங்கையின் ஆண்களின் ஜனத்தொகையில் பாரிய வீழ்சசியும் ஏற்பட்டிருக்கும். மாதவியிடம் சென்று வந்த கோவலனை கண்டிக்காமல் வரவேற்று பணிவிடை செய்த காரணத்தால் அந்த கண்ணகியை இன்றும் கற்புக்கரசியாக கொண்டாடி கோவில் கட்டி கும்பிடும் சமூகமல்லவா! கண்ணகி அன்று இதை செய்திருந்தால் பாதகி என்றிருப்பார்கள்.
  15. முருகனும் பிள்ளையாரும் மாம்பழத்ததுக்கு தம்முள் சண்டையிட்ட போது சிவன் பேசாமல் ஏலத்துக்கு விட்டு யார் அதிக பணம் கொடுக்கிறார்களோ அவருக்கு பாம்பழம் என்று விட்டிருக்கலாம்.😂
  16. மேற்படி கொலைச் சம்பவம் நேற்று சமூக ஊடகங்களிலும் வெளியாகி இருந்தது. ஆனால் பெரும் பாலான மக்களின் பின்னூட்டங்களில் இந்த மோசமான வன்முறை கலாச்சாரத்தை கண்டிக்காமல் நியாயப்படுத்தி எழுதி இருந்ததை காணக்கூடியமதாக இருந்தது. சிலர் குற்றசெயல் என்பதன் வீரியத்தை குறைத்து குடும்ப ஆலோசனை கருத்துகளை/ ஒருவனுக்கு ஒருவன் தமிழ் கலாச்சார பெருமைகளை தெரிவித்திருந்தனர். கணவனுக்கு துரோகம் நினைக்கும் பெண்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கும் என்று கூட சில கருத்துக்கள் வந்திருந்தன. துரோகத்தின் வலியை விட கொலை பெரிதல்ல என்று கூட கொலை செய்தவருக்கு ஆதரவான கருத்து ஒன்று வந்திருந்தது . அவற்றை வாசித்த போது எமது சமூகம் மூடப்பட்ட தலிபான் மனநிலையில் வாழ்கிறதோ என்று எண்ண தோன்றுகிறது. சமீபத்தில் ஒரு திரியில் @goshan_che கூட இதையே தெரிவித்திருந்தார். நடந்தது உணர்சசி வசப்பட்ட படு மோசமான கொலை. எந்த வகையிலும் நியாயபடுத்த முடியாத ஒரு விடயம்ஆனால் இதை நியாயப்படுத்தும் பின்னூட்டங்களை என்னெ கூறுவது? இவற்றை வாசிக்கும் சிறுவர்/ சிறுமியர் கூட இப்படியான கொலைகளை ஏற்றுக்கொள்ளும் , இதை முன்மாதிரியாக கொள்ளும் மனநிலையை இது ஏற்படுத்தாதா?
  17. இப்போது ஆயுத போராட்டத்துக்குரிய சூழ்நிலையும் இல்லை. ஒரு அறிவார்ந்த அரசியல் போராட்டத்தை செய்யக்கூடிய புலிகள் அமைப்பில் இருந்த( பாலகுமார், யோகி, புலித தேவன் போன்ற) உறுப்பினர்களும் உயிருடன் இல்லை. இந்த நிலையில் புலிகள் அமைப்புக்கான தடை நீடிக்கப்படுவது தமிழருக்கு நல்லதே. தடையை எடுத்து விட்டால் புலிகள் அமைப்பில் அங்கம் வகித்த இருந்த சுயநலமிகளும் புலம் பெயர்ந்த மாபியாக்களும் இயக்க சின்னங்களை தகது சுயநலத்துக்கு பயன்படுத்தி தமிழர் நிலையை இருப்பதை விட இன்னும் மோசமாகுவர். தம்மை ஏக தலைமை என்ற பல்லவியை பாட தொடங்குவர். ஆகவே இப்போதைய நிலையில் தடை தொடர்வது தமிழருக்கு நன்மையே. ஒரு அறிவார்ந்த அரசியல் போராட்டதை முன்னெடுக்கவோ ஒரு நியாயமான நடைமுறை சாத்தியமான அரசியல் தீர்வுக்கான நகர்வுகளை செய்ய புலிகள் அமைப்பு தேவையில்லை. விருப்பமிருந்தால் மனமிருந்தால் இப்போதிருபவர்களாலேயே அதற்கான அரசியலை சுதந்திரமாக செய்ய முடியும்.
  18. மொழிகளை ஒப்பிட்டு இதிலிருந்து இது பிறந்தது என்று அடிபடுவது இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் மக்களிடையே தேவையற்ற குழப்பத்தையும் பிரிவினையையுமே ஏற்படுத்தும். இவ்வாறு செய்யும் போது மொழிவெறியை மட்டுமே வைத்து மக்களிடையே அரசியல் செய்து பிழைப்பு நடத்தும் தீய சக்திகளுக்கு ஊக்கம் கொடுப்பதாக அமையும். உண்மையில் இது மொழியியல் ஆராய்சசி சம்பந்தமான விடையம். மொழியியல் அறிஞர்கள் மட்டுமே தங்களுக்குள் அறிவியல் ரீதியாக விவாதிக்க வேண்டிய விடயம். ஒரு அளவுக்கு மேல் தரவுகள் இல்லாததால் இதை 100 வீதம் நிறுவுவதும் கடினமான விடயம். உண்மையில் தூய மொழி என்று ஒன்று கிடையாது. எல்லாமே நீண்ட மனித வரலாற்றில் மொழிகள் எல்லாமே கலப்படம் தான். அதில் தவறும் இல்லை. உதாரணமாக இலவசமாக கிடைப்பதை ஓசியில் கிடைத்தது என கூறும் வழக்கம் தமிழில் உள்ளது. இது வந்தது பிரிட்டில் கிழக்கிந்திய கொம்பனி இந்தியாவை நிர்வாகம் செய்யயும் போது கடிதங்களை அனுப்பும் போது On Company Service (OC) என்ற முத்திரை சீல் பாவித்தால் கடிதங்களுக்கு முத்திரை ஒட்ட தேவையில்லை. அந்த பாவனை பின்னர் மருவி இலவசமாக பெறுவதற்கெல்லாம் ஓசி என்று கூறும் வழக்கம் உண்டானது. இன்று புலம் பெயர்ந்த நாடுகளில் பிறந்த பிள்ளைகள் கூட இலவசத்தை ஒசி என்று தமிழில் கூறுமளவுக்கு அந்த சொல் மக்களிடையே இரு நூற்றறாண்டு கடந்து சென்றடைந்துள்ளது. யோசித்து பாருங்கள் இரு நூறு ஆண்டுகளிலேயே இவ்வாறு என்றால் நீண்ட மனிதவாழ்வில் எந்த சொற்கள் எப்படி வந்தது என்பதை கண்டறிவது கடினமானது.
  19. சித்தார்ததர் சைவரல்ல. இது தவறு. சித்தார்த்தர் அன்றைய சனாதன வேத மதத்தை எதிர்ததார். கடவுளை மறுத்தார்.
  20. பொதுவாகவே யாழ்பாண தமிழர்களை பொறுத்தளவில் குடாநாடு தாண்டி அதற்கு அப்பால் சென்றால் எல்லோரும் வேற்றினம் தான். பேச்சு நடையில் சற்று வேறுபட்டு இருந்தாலே போதும் அவர்கள் தமிழர்களாக இருந்தாலும் அந்நியர்களாகவே பார்ப்பது எமது கலாச்சாரம். அமைச்சர் சந்திரசேகரனை அவரது அரசியல் கொள்கைகளுக்காக எதிர்க்கும் தமிழ் தேசியவாதிகளை விட விட அவரின் மலையக தமிழ் மொழிநடையை கிண்டல் செய்பவர்களே அதிகம் டக்லஸை கூட இந்தளவுக்கு கிண்டல் செய்யவில்லை. சந்திரசேகரனை அவரின் மொழிநடையை மிகவும் கீழ்தரமாக கிண்டல் செய்கிறார்கள். இந்த யாழ் குறுகிய தேசியவாதிகள். நாங்கள் கப்பல் ஓட்டியவர்கள் சந்திரசேகரம் கப்பலில் வந்தவர் என்று வேற கேலி. அதற்குள் வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சி வேணுமாம் இவர்களுக்கு. 😂😂😂
  21. பரிஸ்டா உணவமல்ல இது. ஏற்கனவே சைவ முட்டை விற்கப்படுகிறதாம்.
  22. வேடன் யாழ்ப்பாண தமிழன் என்று என்று எல்லோரும. பெருமை பேசுறாங்க. ஆனால் வேடனோ நான் (யாழ்) பாணன் அல்ல என்று பாடியுள்ளார். 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.