Everything posted by vasee
-
அமெரிக்கா: டிரம்ப்பை கொல்ல மீண்டும் முயற்சி...? துப்பாக்கி சூட்டால் பரபரப்பு
என்ன சண்டியராக இருந்தாலும் வீட்டில வேறமாதிரித்தான் இருக்கவேண்டும்.😁
-
அமெரிக்கா: டிரம்ப்பை கொல்ல மீண்டும் முயற்சி...? துப்பாக்கி சூட்டால் பரபரப்பு
சும்மா ஒரு வாதத்திற்காக கூறியது, இரஸ்சியர்கள் ட்ரம்பையோ அல்லது கமலாவையோ கண்டு கொள்வதாக தெரியவில்லை.😁
-
ரஷ்ய ராணுவத்தினரால் அடிமைகள் போல் நடத்தப்பட்டோம்: மீட்கப்பட்ட இந்திய இளைஞர்கள் வேதனை
மற்றவர்கள் மதிகும்படி பல நல்ல நல்ல காரியங்கள் செய்வதால்.😁 பந்தி முடியிற நேரம் வந்திருக்கியல், சரி பரவாயில்லை! திரும்ப ஊர் போக கொஞ்சம் லேட்டாகும் அவ்வளவுதான்😁.
-
அமெரிக்கா: டிரம்ப்பை கொல்ல மீண்டும் முயற்சி...? துப்பாக்கி சூட்டால் பரபரப்பு
இந்த பிரச்சினை ஒரு தொற்று வியாதி😁, அது அவர்கள் வாழும் நாட்டிலிருந்து எடுத்துக்கொண்டுள்ளார்கள் (Rule based world order), ஒரு சர்வதேச சட்டம் என்று ஒன்று இருக்கு அதனை மதித்தால்தானே, மன்னன் எவ்வழி மக்களும் அவ்வழி😁 (தனக்கு தேவைப்படும் போது மட்டும் தொட்டுக்கொள்வதற்கு சர்வதேச சட்டம் என்ன ஊறுகாயா?)
-
அமெரிக்கா: டிரம்ப்பை கொல்ல மீண்டும் முயற்சி...? துப்பாக்கி சூட்டால் பரபரப்பு
இந்த சதித்திட்டத்தின் பின்னணியில் இரஸ்சியா இருக்கவே வாய்ப்புக்கள் அதிகம்! ட்ரம்ப் அனுமானிக்க முடியாதவர், அவர் என்ன செய்யப்போகிறார் என்பது அவருக்குத்தான் தெரியும்.
-
ரஷ்ய ராணுவத்தினரால் அடிமைகள் போல் நடத்தப்பட்டோம்: மீட்கப்பட்ட இந்திய இளைஞர்கள் வேதனை
உண்மைதான்! இராணுவத்தில் நிலவரம் எப்போதும் பாதகமாக இருப்பதனாலேயே அதிக கட்டுப்பாடு கொண்ட துறையாக இருக்கிறது, வட இந்தியர்களுடன் வேலை செய்த அனுபவத்தில் அவர்கள் ஒரு வித்தியாசமானவர்கள்.நாங்கள் ஒரு புதிய உற்பத்தியினை ஆரம்பிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தோம், நான் தலைமை பொறுப்பு எடுப்பதில்லை இருந்தும் என்னை இந்த மாதிரியான சிக்கலில் மாட்டி விடுவார்கள், அப்படித்தான் அந்த உற்பத்தி முயற்சியில் வேலை செய்யும் போது என்னுடன் ஒரு வட இந்தியர் ஒரு பாகிஸ்தானியருடன் வேலை செய்ய வேண்டியிருந்தது அவர்களின் மத அனுட்டானங்களின் பிரகாரம் பலதடைவை வழிபட வேண்டும் அதனை உணர்ந்தமையால் அவர்கள் கழிவறைக்கு செல்வதாக கூறி ஒவ்வொரு முறையும் கூறும் போது எனக்கு அதனை பற்றி சொல்லத்தேவை இல்லை நீங்களாகவே எப்போது வேண்டுமானாலும் சென்று வாருங்கள் என கூறியிருந்தேன். ஒரு கட்டத்தின் பின் இருவரையும் காணவில்லை ஒரு மணித்தியாலம் ஒன்றைரை மணித்தியாலம் என நேரம் செல்ல செல்ல முழு வேலையின் அழுத்தங்களையும் நானே பார்க்க வேண்டியதாக இருந்தது (பல பரிசோதனைகள் செய்யவேண்டும்), ஆனால் அந்த இருவரையும் காணவில்லை! எமக்கு உதவியாக இருந்த இயந்திரவியலாளர் நிலமையினை உணர்ந்து எனக்கு உதவ முயன்று ஒரு கட்டத்தில் பொறுமையிழந்துவிட்டார். இந்த மாதிரியானவர்கள் இந்திய இராணுவத்தில் பயிற்சிக்காலத்திற்குக்கூட தாக்குப்பிடிக்கமாட்டார்கள். முன்னர் 86 களில் புலிகள் அமைப்பில் இணைய விரும்புகின்றவர்களை முதலில் சென்றியில் விடுவதுண்டு பின்னர் அந்த நிலைகளின் பக்கமாக துப்பாக்கியால் சுடுவார்களாம் அதில் பெரும்பாலானோர் அலறி அடித்துக்கொண்டு ஓடி விடுவார்களாம், அதில் நிற்பவர்களை மட்டும் எடுத்துக்கொள்வார்களாம். போர் அழுத்தம் நிறைந்த ஒன்று ஆனால் தலமை தாங்குபவர்கள் அந்த அழுத்தத்தின் தீவிரத்தினை அணி வீரர்களுக்கு கடத்தக்கூடாது என்பார்கள் அப்படி கடத்தினால் அணிவீரர்கள் மனதளவில் அழுத்ததிற்குள்ளாவார்கள் அது அவர்களை இலகுவாக சோர்வடைய செய்துவிடும், மோசமான தளபதிகள் தமது இயலாமையினை அணிவீரர்களின் மேல் இறக்கி வைத்துவிடுவார்கள்.
-
நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தினால் நேட்டோவுடன் நேரடி யுத்தமாக கருதுவோம் - புட்டின்
இதுதான் நல்லவனா இருந்தா பிரச்சினை, இரஸ்சியாவே பயமுறுத்துகின்ற நிலைக்கு நேட்டோவை கீழிற்க்கிய செலன்ஸ்கி, இரஸ்சியாவிற்குள்ளேயே நேட்டோ இராணுவ தளபாடங்களை கொண்டு போய் விட அதனை வைத்து அவர்கள் நேட்டோ ஏதோ ஏப்பை சாப்பை போல படம் காட்டுகிறார்கள். ஆனாலும் நேட்டோவிலும் தவறுள்ளது எந்த ஆயுதங்கொடுத்தாலும் பெரிதாக பில்லடப் கொடுத்து கொடுக்க அந்த தளவாடங்களை சோவியத் கால ஆயுதங்களால் அழித்து அதனை படம் பிடித்து இணையத்தில் போட்டு அவர்களது தொல்லைக்கு இப்ப அளவே இல்லாமல் போகிறது. எனக்கு இப்ப உண்மையிலேயே நேட்டோ பீதியில் உள்ளதா என சந்தேகமாக இருக்கிறது. இந்த அழிவினை வெளியில் இருந்து பார்ப்பதால் அதன் தீவிரம் தெரியவில்லை எங்களுக்கு, கேர்ஸ்க் ஊடுருவலுக்கெதிராக இரஸ்ஸிய படையினர் அண்மையில் ஆரம்பித்த பதில் தாக்குதலில் கைப்பற்றப்பட்ட இடங்களில் சில உக்கிரேனிய துருப்புக்களின் இறந்த உடல்கள் 2 அல்லது 3 வாரத்திற்கு மேலான உருக்குலைந்த நிலையில் இருக்கின்றன, அப்பகுதியில் இருந்த உக்கிரேன் சக துருப்பினருக்கு அதனை அடக்கம் செய்ய முடியாத அளவு நெருக்கடி இருந்திருக்க வேண்டும். போரில் ஈடுபடுபவர்களுக்கும் அங்குள்ள மக்களுக்கும்தான் இழப்பு, நெருக்கடி, வலிகள் ஆனால் அதனை வைத்து பனம் பார்க்கும் இந்த அரசியல்வாதிகளை பாருங்கள் எந்த வித குற்ற உணர்ச்சியுமில்லாமல் இலாப நட்டக்கணக்கு பார்க்கிறார்கள்.
-
ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்கு ஆலோகனை வழங்க தயார் – ஜெய்சங்கர் கருத்து
இது ஒன்றும் சிக்கலான விடயம் இல்லை, அமெரிக்க தலையீடுகளில் ஒரே விதமான மாதிரி இருக்கும்; அது பணம் பார்ப்பதுதான். நீங்களே ஒரு வர்த்தகர்தான், உங்களுக்கு தெரியாததா? இலாபமில்லாமல் அமெரிக்கா ஏன் இதில் தலையிட போகிறார்கள்? அமெரிக்க அரசியல்வாதிகள் கூறும் உக்கிரேன் ஒரு சிறந்த முதலீடு என்று அதற்கு அவர்கள் கூறும் காரணி 12 ரில்லியன் பெறுமதியான தங்க சுரங்கங்கள் மேற்கு உக்கிரேனில் உள்ளது அதனை அமெரிக்காவிடம் கொடுத்துவிட்டால் பிரச்சினை முடிந்து விடும். அதற்கு உக்கிரேனின் நிலையினை மோசமாக்கிய பின்னர் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றன் மூலம் அதனை செய்யலாம், அல்லது வேறு வகைகளில் செய்ய முயற்சிக்கலாம், அதனால் நீண்ட தூர ஏவுகணைகளை கொடுத்து மேலும் உக்கிரேனின் நிலையினை துருதமாக மோசமாக்குவதனூடாக முதலீட்டு இலாபத்தினை விரைவாக பெறமுடியும். இந்த முயற்சியில் அனைவருக்கும் இலாபம் இரஸ்சியாவிற்கு இரஸ்சியர்கள் வாழும் கிழக்கு உக்கிரேனையும், மேற்கு உக்கிரேனில் உள்ள 12 ரில்லியன் வளங்கள் அமெரிக்க மற்றும் மேற்கு கூட்டணிக்கு, உக்கிரேனுக்கு நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமை.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
SPX 500 உயர்வதற்கான ஆரம்ப அறிகுறி தெரிகிறது, வாங்குவதற்கான ஏது நிலைகளை அவதானித்து கொண்டுள்ளேன்.
-
ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்கு ஆலோகனை வழங்க தயார் – ஜெய்சங்கர் கருத்து
இந்த போர் முடிவுக்கு வருவதற்கான அறிகுறி தெரிகிறது, ஆனால் செலன்ஸ்கியின் ஒற்றை (America one way trip)😁 வழிப்பயனத்தினை பிளிங்ரன் நிறுத்தி விட்டார் போலிருக்கிறது? பிளின்ரன் கையோடு உக்கிரேன் முன்னால் தலை இராணுவ அதிகாரியினையும் அழைத்துக்கொண்டு அல்லவா உக்கிரேன் வந்துள்ளார் (செலன்ஸ்கியுடன் முரண்பட்டவர்), சிஙக்த்டினை வாலில் கட்டி கூட்டி வந்த நரி போல.😁 மறு வளமாக போலந்து தான் இன்னமும் எந்த படையினரையும் திரட்டவில்லை என தற்போது குத்துக்கரணம் அடித்துள்ளது, அப்படி எண்றால் இது நாள் வரை 160 ஆவது இயந்திரமாக்கப்பட்ட படைப்பிரிவு என அறிக்கை விட்டதெல்லாம் பொய்யா? ஆனால் ஒன்று மட்டும் உறுதியாகிவிட்டது, தேரை இழுத்து தெருவில விட்டிட்டாங்கள் என்பதுதான்.
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களிடையே விவாதம் – மூன்றாம் உலக போர் ஏற்படும் என எச்சரிக்கை
என்ன கதாசிரியர் நீங்கள், தேர்தல்களால் எந்த மாற்றமும் ஏற்படாது என்பதனை குறிப்பிடுவதற்காகவே அந்த ஆரம்ப விபரிப்பு. பாருங்கள் அமெரிக்காவின் தலைவிதியினை; ட்ரம்ப், பைடன் ? ஏன் அமெரிக்காவில் நல்ல தலைவர்களுக்கு பஞ்சமா? நான் இரவு வேலை செய்த ஒரு நாள் , நீண்ட நேர வேலை மற்றும் குடும்பத்தினரை ஏற்றி இறக்கும் வேலை என அதிக நேரம் போய்விடும் ஒரு 4 மணிநேரம் நித்திரை கொண்டால் சிறந்த நாளாக இருக்கும் அப்படிப்பட்ட நாளில் எனது அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு வந்து நித்திரை கொள்ள ஆரம்பித்தேன், பக்கத்து வீட்டுக்கார முதியவர் அழைப்பு மணியினை அடித்தார், என்னவென்று விசாரிதேன் தனது மனைவி மற்றும் மகளை காணவில்லை என கூறினார், இது வழமைக்கு மாறான விடயம் என்றார் நான் அவரது மகளுக்கு அவரிடமிருந்து தொலைபேசி இலக்கத்தினை வாங்கி தொடர்பு கொண்டேன் அவர் சொன்னமாதிரி பதீல்லை. என்ன காவல்துறையிடம் புகார் செய்யப்போகிறீர்கலா என கேட்டே (ஒரு பேச்சுக்கு) அவர் ஓம் என்றார், சரி என காரில் அவரினை ஏற்றிக்கொண்டு காவல் நிலையத்திற்கு சென்றேன். காவல்துறை அதிகாரி விசாரித்துவிட்டு முதியவரை காட்டி கூறினார் அவருக்கு மாறாட்டம் வந்துள்ளது பார் கையில் வீட்டு தொலைபேசி, ரி வி ரிமோட் என அனைத்தையும் வைத்திருக்கிறார், எனக்கு அப்போதுதான் புரிந்தது. உலக அமைதி விடயத்தில் எரியிறதை எடுத்தால் புகைவது தானாக நின்றுவிடும்.
-
ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்கு ஆலோகனை வழங்க தயார் – ஜெய்சங்கர் கருத்து
ஏற்கனவே பதில் கூறிவிட்டேன் உங்களுக்கு விளங்கவில்லை என கருதுகிறேன்.
-
38 நாடுகளின் பயணிகளுக்கு விசா சலுகை; எங்களுக்கு இல்லையா? - பாகிஸ்தான் போர்க்கொடி
இலஙகைக்கு இந்தியாவிலிருந்து போதை பொருள் கடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது, அத்துடன் ஈஸ்ரர் தாக்குதலை இந்திய ரோ அமைப்புத்தான் செய்ததாக இலங்கை குற்றபுலானாய்வாலர் கூறுவதாக ஒரு அமைச்சர் கூறியதாக நினைவுள்ளது. சார்க் அமைப்பில் உள்ள ஒரு நாட்டின இலங்கை புறக்கணிப்பதன் பின்னணியில் இந்தியா இருக்கலாம்.
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களிடையே விவாதம் – மூன்றாம் உலக போர் ஏற்படும் என எச்சரிக்கை
ட்ரம்ப், கமலா இருவரில் யாருக்கு வாகு போடுவீர்கள் என கேட்ட எனது 9 வயது குழந்தையிடம், அது அமெரிக்க் தேர்தல் அதில் நாங்கள் வாக்கு போட இயலாது என கூறினேன். உண்மையில் உலகில் உள்ள அனைவருக்கும் அமெரிக்க தேர்தலில் வாக்கு போடும் உரிமை வழங்க வேண்டும்😁, விரும்பியோ விரும்பாமலோ உலகின் தலைவிதியினை நிர்ணயிக்கும் சக்தியாக அமெரிக்கா உள்ளது, இரண்டாம் உலக யுத்ததின் பின்னர் அது போல ஒரு யுத்தம் தோன்றக்கூடாது எனும் நோக்கில் ஐநா போன்ற பல அமைப்புக்கள் உருவாக்கப்பட்டன, சில நேரத்தில் ஒப்புக்கு சப்பாணியாக (?) இந்த் அமைப்பினூடாக அனுமதியினை (திணிப்பினை) பெற்று பிற நாடுகளை ஆக்கிரமித்த அமெர்க்கா தற்போது தன்னிச்சையாக எதுவும் செய்யும் நிலைக்கு வந்துள்லது, ஒரு புறம் இந்த அமைப்புகளை தான் விரும்பும் நாடுகளுக்கெதிராக தீர்மானம் எடுத்தால் அதனை கண்டிக்கும் நிலையில் அமெரிக்கா உள்ளது, குறிப்பாக இஸ்ரேலின் மனித உரிமை மீறல் விடயத்தில் அமெரிக்காவின் பங்கும் அதில் இஸ்ரேலினை பாதுகாக்க எடுக்கும் முயற்சியினையும் குறிப்பிடலாம். தற்போது உலகை ஒரு 3 ஆம் உலகப்போரினை நோக்கி நகர்த்தும் நிலை ஏற்படுவதற்கு காரணமான ஐ நாவின் கையறு நிலை தோன்றுவதற்கு ஒரு நாட்டின் நலன் சார் நேச நாட்டுக்கொள்கைகள் காரணமாகி விட்டது. அமெரிக்காவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்தநிலையில் மாற்றம் ஏற்படது, ஆனால் அமெரிக்க ஒற்றை உலக ஒழுங்கில் மாற்றம் ஏற்பட்டு அதன் விளைவாக பல் துருவ உலக ஒழுங்கில் ஐநாவின் பங்கு முதன்மை படுத்தப்பட்டால் அதற்கான சூழல் உருவாகலாம்.
-
ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்கு ஆலோகனை வழங்க தயார் – ஜெய்சங்கர் கருத்து
உங்கள் கருத்திற்கு நன்றி இந்த வகையான கருத்தாடல்களை ஆங்கிலத்தில் "Whataboutism" என அழைப்பார்கள், ஆனால் நான் அப்படி பார்க்கவில்லை, நல்ல மாணவன் ஆசிரியர் கூறாத விடயங்களையும் புரிந்து கொள்வான், ஏகலைவன் மாதிரி, நீங்களும் ஒரு ஏகலைவந்தான்! நான் கூற வந்த விடயம் தற்போதய போரினால் உலகம் எதிர்கொள்ளும் அபாயமும், சமாதானதிற்கான சவால்களும் அதில் தென்படும் சில சாதகமான அம்சங்களும். உங்களைப்போல உங்களிடமும் கேள்வி 1. எப்படி அமெரிக்கா உலகில் உள்ள அனைத்து நாடுகளை ஆக்கிரமிகும் போது அதனை பயங்கரவாதத்திற்கெதிரான போர் என நம்பும் உங்களால்; இரஸ்சியா உக்கிரேனை ஆக்கிரமிக்கும் போது மட்டும் ஆக்கிரமிப்பாக தெரிகிறது? 2. இலங்கையில் தமிழர்கள் வாழும் வட கிழக்கில் இலங்கை படையினர் மேற்கொள்ளும் படுகொலைகள் இனப்படுகொலையாக தெரிந்த போது தற்போது போர் நிகழும் இரஸ்சியர்கள் வாழும் டொன்பாஸ், லுகான்ஸ் பிராந்தியத்தில் உக்கிரேனியர்களின் படுகொலை உக்கிரேனின் இறையாண்மையாகத்தெரிகிறது. நான் தனிப்பட்ட ரீதியில் உங்களுக்காக வைக்கப்பட்ட வாதம் அல்ல, இது உங்கள் நோக்கத்தினை புரிந்து கொண்டு (திரிகளை சூடாக்குவதற்கு) வைகும் பதில், அதனால் மனம் கோண வேண்டாம்.
-
ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்கு ஆலோகனை வழங்க தயார் – ஜெய்சங்கர் கருத்து
இரஸ்சிய உக்கிரேன் போர் முடிவுக்கு வருவதற்கான சாத்திய கூறுகள் குறைவாகவே இருப்பதாகவே நான் கருதுகிறேன். அமெரிக்க வெளியுறவுச்செயலர் உக்கிரேனிற்கு சென்று செலன்ஸ்கியுடன் பேச உள்ளதாகவும் அதில் இரஸ்ஸியாவிற்குள் நீண்ட தூர ஏவுகணைகள் பயன்பாடு தொடர்பாக பேச உள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க மற்றும் மேற்கு நாடுகள் இரஸ்சியாவிற்கெதிரான போரினை உக்கிரேனின் இறையாண்மையினை பேன அதற்கான ஆயுத ஆளணி வசதிகள் செய்வதனை விடுத்து இரஸ்சியாவினை கோபமூட்டுவதன் மூலம் ஒரு அணுவாயுத போர் ஆபாய நாடாகக்காட்டுவதன் மூலம் எதோ ஒரு அணுகூலத்தினை பெற முயல்வது போல தோன்றுகிறது. தற்போது போலந்தினால் பயிற்றுவிக்கப்படும் உக்கிரேனிய அகதிகளை கொண்ட படையணி ஒரு இலகு காலாற்படைக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது மற்றும் போலந்தின் இலகு காலாற்படைக்கான ஆயுத தளபாடங்கள் என்பன மீண்டும் ஒரு கேர்ஸ்க் போன்ற வேறு தாக்குதல்களை மனதில் வைத்து மேற்கொள்ளப்படுகிறதோ எனும் சந்தேகம் ஏற்படுகிறது. அதே போல் பிரான்ஸினால் பயிற்றுவிக்கப்படும் படையணி கனரக படைப்பிரிவாக பயிற்றுவிக்கப்பட்டு அதற்குரிய பிரான்ஸ் ஆயுதங்களும் வழங்கப்படும் என கூறப்படுகிறது, அத்துடன் கிழக்கு உக்கிரேனில் உக்கிரேன் நிலைகள் தொடராக வீழ்ந்து வருகின்ற நிலையிலும் உக்கிரேன் அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இதற்கு கூறப்படும் ஒரு காரணம் உக்கிரேனிடம் 5 பிரிகேட் படையினர் தயார்நிலையில் இருக்கலாம் என கருதிகிறார்கள், இருந்தும் அவற்றினை கிழக்கு போர் முனையில் பயன்படுத்தப்படவில்லை என கருதுகிறேன். இவற்றினை எல்லாம் பார்க்கும் போது இரஸ்சியாவிற்குள் நீண்ட தூர ஏவுகணை பயன்பாடு, மற்றும் கேர்ஸ்க் போன்ற தாக்குதல்கள் வேறு முனகளினூடாக சம நேரத்தில் மேற்கொண்டு இரஸ்சியாவினை அச்சநிலைக்கு கொண்டு வர முயற்சிப்பதன் மூலம் ஏதேனும் இலக்குகளை அடைய மேற்கு முயற்சிக்கலாம். கேர்ஸ்க் ஊடுருவல் வாரத்தில் 2 அமெரிக்க பி - 52 விமானங்கள் இரஸ்சிய எல்லைக்குள் நுழைய முயற்சித்தாக கூறுகிறார்கள் இந்த முயற்சியின் மூலம் இரஸ்ஸிய தகவல் தொடர்பு நிலைகளை அமெரிக்க தரப்பு ஏற்கனவே அறிந்திருக்கும் என கூறுகிறார்கள், இது ஒரு அணுவாயுத தாக்குதலை இரஸ்சியாவின் மேல் நிகழ்த்துவதற்கு முக்கியமாக தேவையான தரவாக இருக்கும் என கருதுகிறார்கள். இந்த போர் 3 ஆம் உலகப்போரினை ஏற்படுத்த போவதாக கூறுகிறார்கள் ஆனால் அப்படி நிகழும் என நான் கருதவில்லை, இந்த மாதத்தின் பின்னர் உக்கிரேனிய படைப்பிரிவினருக்கான சம்பளம் கொடுப்பதற்கு நிதி கூட இல்லை என கூறுகிறார்கள் (உண்மை தன்மை தெரியவில்லை), உக்கிரேனின் நிலை மிக மோசமாகிக்கொண்டிருக்கிறது மறு வளமாக எதிர் வரும் நாள்களில் இரஸ்சியாவின் நிலையும் மோசமாகலாம் அதனால் உக்கிரேனும் இரஸ்சியாவும் சமாதானத்தினை விரும்புகின்றன ஆனால் சாமி வரம் கொடுத்தாலும் தட்சணை வாங்கிற பூசாரி அனுமதிக்க மாட்டார் என்பது போல அமெரிக்க மற்றும் மேற்கு நாடுகள் போரினை தொடர விரும்புகின்றன. இந்தியா முழு முயற்சியுடன் இந்த சமாதான முயற்ச்சியில் ஈடுபட்டால், உலகிற்கு நன்மை உண்டாகலாம், இந்த சமாதான முயற்சிக்கு இந்தியாவினை விட பொருத்தமான நாடு வேறு எதுவும் தற்போது இல்லை என கருதுகிறேன்.
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
மக்கள் வரிப்பணத்திலிருந்தே மக்களுக்கான சேவைகள் வழங்கப்படுகின்றன, அந்த மக்களிடம் வாங்கும் பணத்தை மக்களுகு வழ்ங்குவதற்கு இடைத்தரகர்களாக உள்ள அரசியல்வாதிகள் அந்த பணத்தை ஆட்டையை போட்டு பெருச்சாளி ஆகுகிறார்கள், தமது பணத்தையே திரும்ப பெறுவதற்கு இந்த ஊழல் பெருச்சாளி அரசியல்வாதிகளின் தயவு தேவைப்படுகிற நிலையில் இருக்கிறது, இந்த அரசியல்வஸ்துக்களுக்கு வாக்களிப்பதை விட்டு விட்டு வரி கட்டுவதை நிறுத்தினால் சில வேளை வழிக்கு வருவரக்கூடும். மக்கள் காசையும் குடுத்து அவர்களின் காலில் விழும் நிலைக்கு இலங்கை அரசியல் மிகவும் தரம் தாழ்ந்துள்ளதா?
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ஃபோர்ப்ஸ்வணிகம்விண்வெளி & பாதுகாப்பு 2025 ஆம் ஆண்டுக்குள் போரை எதிர்நோக்கி, உக்ரைன் புதிய இயந்திரமயமாக்கப்பட்ட படைப்பிரிவுகளை உருவாக்குகிறது இந்த படைப்பிரிவுகளுக்கு ஆயிரக்கணக்கான துருப்புக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தேவைப்படும். டேவிட் கோடாரி ஃபோர்ப்ஸ் ஊழியர்கள் டேவிட் ஆக்ஸ் கப்பல்கள், விமானங்கள், டாங்கிகள், ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் பற்றி எழுதுகிறார். பின்பற்றவும் 62 ஆகஸ்ட் 26, 2024,மாலை 05:40 EDT ஆகஸ்ட் 26, 2024, 05:52pm EDT இல் புதுப்பிக்கப்பட்டது பயிற்சியில் உக்ரேனிய பராட்ரூப்பர். 82வது வான் தாக்குதல் படையின் புகைப்படம் உக்ரேனிய இராணுவம் புதிய இயந்திரமயமாக்கப்பட்ட படைப்பிரிவுகளை எழுப்புகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் பரந்த போர் எந்த நேரத்திலும் முடிவடையும் என்று உக்ரைனின் தலைவர்கள் எதிர்பார்க்காத அறிகுறி இது. புதிய 2,000 பேர் கொண்ட படைப்பிரிவுகளில் முதல் படை அதன் அனைத்து பில்லெட்டுகளையும் நிரப்புவதற்கு சில மாதங்கள் ஆகலாம் - மேலும் படைகள் போருக்குத் தயாராக இன்னும் மாதங்கள் ஆகலாம். உக்ரேனிய இராணுவப் படையின் கட்டமைப்பை நெருக்கமாகக் கண்காணிக்கும் மிலிட்டரிலேண்ட், புதிய 160வது இயந்திரமயமாக்கப்பட்ட படைப்பிரிவைச் சேர்ந்த பயிற்சியாளர்களை சித்தரிக்கும் புகைப்படங்களைப் பெற்றது . மிலிட்டரிலேண்டின் கூற்றுப்படி, புதிய இயந்திரமயமாக்கப்பட்ட படைப்பிரிவுகள்-அவை அனைத்தும் 160 களில் பதவிகளைக் கொண்டவை-வெளிநாடுகளில் பயிற்சி பெறும் மற்றும் அதே நாடுகளில் வாழும் உக்ரேனியர்களிடமிருந்து பல பணியாளர்களை ஈர்க்கும். 160வது இயந்திரமயமாக்கப்பட்ட படைப்பிரிவு போலந்தில் பயிற்சி பெற்று வருவதாக கூறப்படுகிறது. புதிய படைப்பிரிவுகளை உருவாக்குவது இரண்டு விஷயங்களில் தொடர்கிறது: ஒருவேளை 10,000 அல்லது அதற்கு மேற்பட்ட புதிய ஆட்களை வெற்றிகரமாக அணிதிரட்டுதல் மற்றும் உக்ரேனின் போர் முயற்சிக்கு வெளிநாட்டு ஆதரவு. அணிதிரட்டல் என்பது புதிய படைப்பிரிவுகளின் மனிதவளத்தின் ஆதாரம்; வெளிநாட்டு கூட்டாளிகள் தங்கள் கனரக ஆயுதங்களில் பெரும்பகுதியை வழங்குவார்கள். முந்தைய இராணுவ விரிவாக்கம் முடிந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு 160-களின் தொடர் படைப்பிரிவுகளின் உருவாக்கம் வருகிறது. கடந்த இலையுதிர்காலத்தில் தொடங்கி, உக்ரேனிய இராணுவம் 10 புதிய படைப்பிரிவுகளை உருவாக்கியது: நான்கு இயந்திரமயமாக்கப்பட்ட படைப்பிரிவுகள் , ஐந்து காலாட்படை படைப்பிரிவுகள் மற்றும் ஒரு ஜெகர் படைப்பிரிவு. காலாட்படை படைப்பிரிவுகள் மிகவும் இலகுவானவை-அவை பெரும்பாலும் டிரக்குகளில் சவாரி செய்கின்றன. ஜெகர் பிரிகேட் என்பது டிரக்குகள் மற்றும் இலகுரக கவச வாகனங்களின் கலவையுடன் கூடிய மிடில்வெயிட் படையாகும். இயந்திரமயமாக்கப்பட்ட படைப்பிரிவுகள் மிகவும் கனமானவை: அவை கண்காணிக்கப்பட்ட மற்றும் சக்கர கவச வாகனங்களில் சவாரி செய்கின்றன மற்றும் வழக்கமாக குறைந்தது ஒரு டஜன் தொட்டிகளைக் கொண்ட நிறுவனத்துடன் பயணிக்கின்றன. இராணுவம் தற்போது எத்தனை 160-சீரிஸ் படைப்பிரிவுகளை உருவாக்குகிறது மற்றும் அவை என்ன வகையான படைப்பிரிவுகளாக இருக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இராணுவ விரிவாக்கத்தின் முந்தைய சுற்று ஏதேனும் அறிகுறியாக இருந்தால், 10 இருக்கலாம். காகிதத்தில், 10 படைப்பிரிவுகளுக்கு 20,000 துருப்புக்கள் தேவை. மே மாதம் அமலுக்கு வந்த உக்ரைனின் சர்ச்சைக்குரிய அணிதிரட்டல் சட்டம், வரைவு வயதை 27ல் இருந்து 25 ஆக குறைப்பதன் மூலமும், வரைவு ஏய்ப்பிற்கான அபராதங்களைச் சேர்ப்பதன் மூலமும், தன்னார்வத் தொண்டர்களுக்கு அதிக ஊக்கத்தொகைகளை வழங்குவதன் மூலமும் மேலும் அரை மில்லியன் மக்களை மில்லியன் நபர்களைக் கொண்ட ஆயுதப் படைகளுக்குள் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பல்வேறு தரைப்படைகள்-இராணுவம், மரைன் கார்ப்ஸ் , பிராந்தியங்கள், தேசிய பாதுகாப்பு மற்றும் எல்லை சேவையின் சிறப்புப் பிரிவுகள்-சுமார் 100 போர்ப் படைப்பிரிவுகளை மேற்பார்வையிடுகின்றன மற்றும் பெரும்பான்மையான இராணுவ வீரர்களுக்கு கணக்கு கொடுக்கின்றன. வாஷிங்டன் போஸ்டின் அறிக்கை துல்லியமாக இருந்தால் , வசந்த காலத்தில் 60,000 இறப்புகள் உட்பட, உக்ரைனின் பெரும்பாலான போர் இழப்புகளை தரைப்படைகளும் சந்தித்துள்ளன. உக்ரைன் ஆயுதப் படைகள் முழுவதும் நல்ல இழப்புகளைச் செய்ய போதுமான துருப்புக்களை அணிதிரட்ட வேண்டும், அதே நேரத்தில் புதிய படைப்பிரிவுகளுக்கு துருப்புக்கள் மற்றும் அவர்களுக்குத் தேவைப்படும் ஆதரவுப் பிரிவுகளைச் சேர்க்க வேண்டும் . ஒரு மில்லியன் மக்கள் இராணுவத்திற்கு ஆதரவளிக்கும் வெறும் 38 மில்லியன் மக்களைக் கொண்ட நாட்டில் செய்வதை விட இது எளிதானது. உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சகம் வெளிநாட்டில் வசிக்கும் உக்ரேனியர்களின் பெரிய குழுவிலிருந்து ஆட்களை வரவழைக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அசோசியேட்டட் பிரஸ் மூலம் பெறப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஆண்டு பிற்பகுதியில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் 18 மற்றும் 64 வயதுக்குட்பட்ட சுமார் 768,000 உக்ரேனிய ஆண்களுக்கு தற்காலிக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது . கவச வாகனங்களை வழங்குவது சமமாக கடினமாக இருக்கலாம் - வெளிநாட்டு ஆதரவைத் தாங்காமல் உக்ரைன் அதைச் செய்ய முடியும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஒரு இயந்திரமயமாக்கப்பட்ட படைப்பிரிவுக்கு டாங்கிகள், சண்டை வாகனங்கள், ஹோவிட்சர்கள், ராக்கெட் லாஞ்சர்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள், பொறியியல் வாகனங்கள் மற்றும் டிரக்குகள் உட்பட பல நூறு வாகனங்கள் தேவை. பத்து படைப்பிரிவுகளுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் தேவைப்படும் . அதை முன்னோக்கி வைக்க, உக்ரைன் மீதான ரஷ்யாவின் பரந்த போரின் முதல் 29 மாதங்களில், உக்ரேனின் கூட்டாளிகள் சுமார் 12,000 வாகனங்களை போர் முயற்சிக்கு உறுதியளித்துள்ளனர் . அந்த வாகனங்கள் அனைத்தும் புதிய யூனிட்டுகளுக்குக் கிடைக்கவில்லை: அந்த 29 மாதங்களில் உக்ரைன் இழந்த சுமார் 6,400 வாகனங்களை அவை மாற்றுகின்றன. 150-சீரிஸ் படைப்பிரிவுகளின் உருவாக்கம் ஏதேனும் அறிகுறியாக இருந்தால், 160-சீரிஸ் படைப்பிரிவுகள் நடவடிக்கைக்கு தயாராகும் வரை ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேல் ஆகலாம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இவை 2025 படைப்பிரிவுகள் - பரந்த போரின் நான்காவது ஆண்டில் போராடக்கூடிய பிரிவுகள். ட்விட்டரில் என்னைப் பின்தொடரவும் . எனது வலைத்தளம் அல்லது எனது வேறு சில வேலைகளை இங்கே பார்க்கவும் . எனக்கு ஒரு பாதுகாப்பான உதவிக்குறிப்பு அனுப்பவும் . போர்ப்ஸ் சஞ்சிகையில் வெளியான கட்டுரையின் தமிழ் வடிவம், கூகிள் மொழி பெயர்ப்பின் உதவியினூடாக.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
https://www.forbes.com/sites/davidaxe/2024/08/26/anticipating-war-through-2025-ukraine-is-standing-up-new-mechanized-brigades/ போர்ப்ஸ் சஞ்சிகையில் வெலியான கட்டுரை.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
மேற்கு நாடுகளில் தஞ்சம் கோரியுள்ள ஏறத்தாழ 5.5 மில்லியன் உக்கிரேன் அகதிகளில் போரிடக்கூடிய 1.6 மில்லியன் சனத்தொகையினை குறிவைத்து மேற்கு நாடுகளில் தன்னார்வலராக வருபவர்களுக்கு அந்தந்த நாடுகளில் பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளது, முதல் கட்டமாக போலந்தினால் பயிற்றுவிக்கப்பட்ட படை பிரிவு (பிரிகேட்) உக்கிரேனின் 160 ஆவது மெக்கனைஸ் பிரிகேட் ஆக இந்த ஆண்டு இறுதியில் களமிறக்கப்பட உள்ளது. பிரான்ஸ் அரசும் இன்னொரு பிரிகேட்டினை தயார் செய்வதாக கூறப்படுகிறது (அது ஏற்கனவே உக்கிரேன் இராணுவத்தில் உள்ளவர்களா அல்லது அகதிகளாக வந்தவர்களில் இருந்தா என தெளிவாக தெரியவில்லை). உக்கிரேன் போரினை தொடர்வதற்கு மேற்கு முன்முனைப்புடன் உள்ளது தெளிவாகிறது. மறுவளமாக போருக்கு போவதை தவிர்ப்பதற்காக செலுத்தப்படும் இலஞ்சம் தற்போதய புதிய கட்டுப்பாடுகளால் அதன் தொகை பல மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது, ஆனாலும் அதனை தவிர்த்து மக்கள் வெளியேற்றம் நிகழ்கிறது, மேற்கின் மென் அழுத்தம் அகதிகளின் மேல் அதிகரித்தால் உக்கிரேன் அகதிகள் இரஸ்சியாவிற்கு போவதை தவிர வேறு வழியில்லை என நினைக்கிறேன், அது மேற்கின் இந்த போர் தொடர்பான விம்பத்தினை பாதிக்கலாம்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
சிங்கபூர் தொலைக்காட்சி மனதை உலுக்கிம் உக்கிரேன் உண்மை நிலவரங்களை காட்சிப்படுத்தியுள்ளது, வழமையான மேற்கின் பிரச்சாரம் போலல்லாமல் உண்மையான சமூக நலனுடன் சமூக பிரச்சினைகளை கூறுகிறது. வல்லரசுகளின் ஆதிக்க போட்டிக்கு பலிக்கடாவாகிய இன்னொரு தேசத்தின் உண்மை கதை.
-
தமிழ் பொது வேட்பாளர் சிறந்ததொரு நகர்வு - நாமல் ராஜபக்ஷ
விழிப்புலன்ற்ற ஒருவருக்கு பிறந்த குழந்தை, பாலருந்தும் போது மூச்சு திணறி இறந்து விட்டது, அவருக்கு குழந்தை இறந்த விடயத்தினை உறவினர், உங்கள் குழந்தை பாலருந்தும் போது மூச்சு திணறி இறந்துவிட்டது என கூறினார்கள், அதற்கு அவர் பால் எப்படி இருக்கும் என வினவினார் ( இது ஒரு கதைக்காக மட்டும்), அதற்கு உறவினர்கள் கொக்கு போல் வெள்ளையாக இருக்கும் என்றார்கள், அதற்கு அவர் கொக்கு எப்படி இருக்கும் என்றார், இவர்கள் தமது கையினை வளைத்து கொக்கு போல் செய்து காட்டினார்கள் அதனை தடவி பார்த்துவிட்டு இப்படிப்பட்ட முரட்டுப்பாலை குடித்தால்குழந்தை எப்படி இறக்காது என கேட்டார். இலங்கையர்களின் பிரச்சினை இனவாதம், மதவாதம், சாதியம் என பல பிடிவாதங்கள், பாதிக்கப்பட்டவர்களிற்கு மேல் குற்றம் சாட்டி தமது தவறுகளை தொடர்தல், தவறுகளை சுட்டிக்காட்டும் போது அதனை இரும்புக்கரம் கொண்டு அடக்குவது. இதனாலேயே போர் முடிந்த பின்னரும் மொத்த நாடே வங்குரோத்தானது, இது ஒரு தொடர்கதை ஆக தொடரும், இங்கிலாந்திடமிருந்து சுதந்திரம் பெற்றவர்கள் தற்போது அதே சுதந்திரத்தினை இந்தியாவிடம் அடகு வைத்துள்ளார்கள். இந்தியாவின் ஆசீர்வாதம் இல்லாமல் தொடர்ந்து ஆட்சியில் கூட தாக்குபிடிக்க முடியாத நிலையில் உள்ளார்கள். இவர்களுக்கு இது கடைசி வரை புரியப்போவதில்லை, இலங்கையில் உள்ள பிரச்சினைக்கு சிறுபான்மையினர் காரணம் அல்ல என்பதை புரியாதவர்களால் எப்படி நாட்டை வழிநடத்த முடியும்? இலங்கை, வல்லரசுகளின் போட்டிக்கு, கோயிலுக்கு நேர்ந்துவிட்ட முட்டாள் ஆடு.
-
கோட்’ விமர்சனம்.. காந்தியா? ஜீவனா? யார் ஹீரோ.. யார் வில்லன்?.. வெற்றி பெற்றாரா விஜய்?
எனக்கு படம் பிடிக்கவில்லை.
-
தமிழ் பொது வேட்பாளர் சிறந்ததொரு நகர்வு - நாமல் ராஜபக்ஷ
தயவு செய்து எனது உண்மையான ஆர்வத்தினை நீங்கள் தவறாக புரிந்து கொள்ளவேண்டாம். நான் வேலை செய்யும் இடத்தில் ஒரு ஐரிஸ் பின்புலம் கொண்ட அவுஸ்ரேலியர் வேலை செய்தார், அவரது வேலை இயந்திரங்களை சரி செய்வது, அவரை இயந்திர கோளாறினை சரி செய்வதற்காக அழைத்திருந்தேன் பின்னர் எனது ஓய்விற்காக ஓய்வறைக்கு சென்றபோது அவர் ஓய்வறையில் என்னிடம் எதோ சொன்னார், அவர் என்ன சொல்கிறார் என்பது புரியவில்லை, அதனை காட்டிக்கொள்ளாமல் ஒரு புன்னகையினை பதிலாகக்கொடுத்தேன். அவர் திடீரென சாமியாடத்தொடங்கினார் உனக்கு என்னைப்பார்க்க கோமாளி மாதிரியா தெரிகிறது என????? ஏன் இவர் இப்படி உணர்ச்சி வசப்படுகிறார் என புரியாமல் சிந்தித்த போதுதான் புரிந்தது, அவர் தனது இயந்திர பழுதுபார்த்தலின் பின் இயந்திரம் சரியாக இயங்குகிறதா என விசாரிக்கிறார் என😁.
-
கோட்’ விமர்சனம்.. காந்தியா? ஜீவனா? யார் ஹீரோ.. யார் வில்லன்?.. வெற்றி பெற்றாரா விஜய்?
பொதுவாக பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் மோசமாக இருக்கும் (எனது தனிப்பட்ட அபிபிராயம்), இது விதி விலக்காக இருக்குமா?