Everything posted by vasee
-
உக்ரைன் விமானப்படைத் தளபதி பதவியிலிருந்து நீக்கம்
இந்த தளபதியினை ஒரு மாதம் கூட தனது பதவியினை நிறைவு செய்ய அனுமதிக்கவில்லை, முப்படைகளின் தலமையாக உள்ள செலன்ஸ்கி புதிய தொழில்னுட்பங்களும் பயிற்சிகளும் போரில் மாற்றம் ஏற்படுத்தும் எனும் நம்பிக்கையில் அனைத்து முயற்சிகளிலும் ஈடுபடுகின்றார், உக்கிரேன் படையினருக்கு நேட்டோவின் அதி சிறந்த இராணுவ தளபாடங்களுக்கும் இராணுவ பயிற்சிகளும் வழங்கி போரினை முன்னெடுத்தாலும் போரில் எதிர்பார்த்த மாற்றம் ஏற்படவில்லை, அதற்கான காரணக்களை உதவி வழ்ங்கும் நாடுகளுக்கு கூற வேன்டிய நிலையில் இவ்வாறான பலிக்கடாக்கள் தேவைப்படுகிறது. பல தளபதிகளை வேலை நீக்கம் செய்து தவறு தளபதிகளின் மேல் என்பதாக காட்ட முயற்சிப்பது ஒரு புறம் இராணுவ முக்கியத்துவம் அற்ற சாகச இராணுவ நடவடிக்கைகளை ஒரு சினிமா சாசகசம் போல செய்து மென்மேலும் இராணுவத்திற்கு நெருக்கடி கொடுப்பது என ஒரு குழப்பகரமான் சூழ்நிலைக்குள் உக்கிரேனிய படையினரை வைத்துள்ளார், ஒவ்வொரு மேற்கு இராணுவ தளபாடம் வரும் போது அது தொடர்பான மிகைப்படுத்தலுடன் போரில் குதிக்கும் உக்கிரேனிய படைகளை சோவியத் கால இராணுவ சாதனங்களை வைத்தே இரஸ்ஸியா, அவற்றினை வெற்றி கொள்வதற்கு T72 இரக டாங்கிகளின் சாதனைகளை உதாரணமாக கூறலாம். புதிய தளபாடங்களும் பயிற்சிகளும் ஆரம்பத்தில் ஊடக கவனம் பெற்றாலும் காலப்போக்கில் அவை காணாமல் போவதற்கு காரணம் இரஸ்சியாவின் தகவமைப்பு திறமைதான் காரணம். போரில் இந்த தளபாடங்கள் உக்கிரேனிய துருப்பினர்களை குழப்பத்தினை உருவாக்குவதாக கூறுகிறார்கள். இறந்துபோன உக்கிரேனிய F-16 விமானி ஒரு அனுபவமிக்க விமானி என கூறுகிறார்கள், அவர் F-16 பயிற்சி பெற்றவர், உக்கிரேன் கூறுவது போல விமானியின் தவறு என கூறி அந்த வீரரை அவமானப்படுத்தியுள்ளார்கள், அதற்கான நொண்டிச்சாட்டாக இரு வேறுபட்ட கருவிகளின் அமைப்புகளுக்கு தகவமைக்க முடியாமை என ஒரு புறம் கூறினாலும் வானிலிருந்து வானிற்கு பாயும் ஏவுகணை தாக்குதலை வேறுபட்ட வேக இலக்குகளின் மீதான தாக்குதலை சரியாக கணிக்கமுடியாமையினாலேயே இந்த தவறு நிகழ்ந்ததாக கூறப்படுகின்றது, இவ்வாறான குற்றச்சாட்டு இதுதான முதல் தடவை அல்ல, இவரைப்போல ஒரு சிறந்த விமானியின் இறப்பிற்கும் இவ்வாறான குற்றச்சாட்டே முன்னரும் வைக்கப்பட்டிருந்தது, இது ஒரு உக்கிரேனிய வழமையான நொண்டிச்சாட்டாக உள்ளது போல இருக்கிறது. மறுவளமாக மேற்கு தன்னிடம் உள்ள அனைத்து சிறந்த அதி நவீன ஆயுதங்களையும் உக்கிரேனிற்கு வழங்கிவிட்டு அதற்கான பலனை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது, இது மேற்கின் பொறுமையினை சோதிப்பதாக உள்ளது, மேற்கிற்கு நேரடி வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு அதனை நிறைவேற்ற முடியாத நிலையில் பல சிறந்த வீரர்களை அவர்கள் இறந்த பின்னரும் அவமானப்படுத்துவதும் தளபதிகளை மாற்றுவதும் தொடர்வதால் ஒரு கட்டத்தின் பின் மேற்கு பொறுமையிழந்து போரை முடிவிற்கு கொண்டு வர முனையலாம், ஆனால் கரீசு அம்மையார் (இவர்தான் வெல்வார் என நான் கணிக்கிறேன்) தொடர்ந்து உக்கிரேனிற்கான உதவி தொடரும் என கூறியுள்ளார். இந்த போரை மேற்கு நாடுகள் அனுசரிப்பதற்கு காரணம் அமெரிக்க நிர்பந்தம், இந்த போரில் யார் வென்றாலும் தோற்றாலும் இவர்கள் அனுப்புகின்ற ஆயுதங்கள் ஒரு நாள் தம் தாய் நாட்டிற்கே திரும்ப வரும்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
நாங்கள் முன்பு செலன்ஸ்கி வேறு நாட்டில் தஞ்சம் கோருவார் என விவாதித்திருந்தோம், அதனை நீங்கள் மறுத்திருந்தீர்கள், ஆனால் தற்போது நான் கூறவில்லை இணையத்தில்தான் கலாய்க்கிறார்கள் செலன்ஸ்கி one way ticket இல்தான் அமெரிக்கா செல்வதாக😁, செலண்சிகியின் பதவிக்காலம் முடிந்தும் பதவியினை விட்டு விலகாமல் இருப்பவர் எதற்காக ஓட வேண்டும்? அண்மையில் கூட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடம் 50 பில்லியன் இரஸ்சியாவின் பணத்தினை (வாக்குறுதி கொடுக்கப்பட்ட) தருமாறு வேன்டுகோள் விடுத்திருந்தார், நாட்டை விட்டு ஓடுபவராக இருந்தால் எதற்காக இதெல்லாம் செய்கிறார்?
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
செம்ரெம்பரில் செலன்ஸ்கி அமெரிக்கா செல்கிறார், திரும்பி உக்கிரேன் போக மாட்டார் என கூறுமளவிற்கு தற்போதய நிலமை மோசமாக உள்ளது என்பது உண்மை, உக்கிரேனிற்கு ஆயுத பிரச்சினை இல்லை ஆளணிப்பற்றாக்குறை, கோட கால முடிவிற்குள் 60000 உக்கிரேனியர்களூக்கு உக்கிரேனில் ஐரோப்பிய ஒன்றியம் உக்கிரேனிற்குள் வைத்து பயிற்சி வளங்கப்படவுள்ளதாக கூறுகிறார்கள், அதில் வெளிநாட்டு இராட்ணுவத்தினரைஅழைத்து வந்து பயிற்சி வளங்கப்பட்ட பின்னர் உக்கிரேனிற்காக போரிட வெளிநாட்டு இராணுவத்தினர் பயன்படுத்தப்படலாம்.
-
தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையினை இலங்கையில் அங்கீகரித்தவர்கள் நாம் : சிறிதுங்க தெரிவிப்பு
அண்மையில் வேலையில் ஐரோப்பிய பின்புலம் உள்ள பெண்மணி ஒருவர் கேட்டார் இந்தியாவில் ஒரே பாலின திருமணம் எப்போதிருந்து அமுலில் உள்ளது என கேட்டார், எனக்கு தெரியாது அங்கு ஒரே பாலின திருமனத்திற்கு ஏன் தடை போடப்போகிறார்கள் என கேட்டேன் (விஸ்ணு கதை தெரிந்தமையால் புராண இதிகாசங்களிலேயே இருக்கின்றமையால் இந்த பிரச்சினை இருக்காது என நினைத்தேன்) கூகிளில் தேடி விட்டு கூறினார் இல்லை, அனுமதி இல்லை என கூறினார். ஒருவரது விருப்பு வெறுப்பு என்பது ஒவ்வொருவரது தனிப்பட்ட விடயம், அதே போல சுயநிர்ணய உரிமை என்பது அனைத்து சமூகங்களுக்கும் உண்டு, அதனை வைத்து சிறப்பாக செயற்பட்டால் நாடு வளர்ச்சிப்பாதையில் செல்லும், அவர்கள் பிரிந்து போய்விடுவார்களோ என பயப்பிடும் அளவிற்கு எம்மில் ஏதாவது தவறு இருந்தால்தான் அதற்கு கவலைப்படவேன்டும், இப்படியான ஆக்கிரமிப்பு சிந்தனையாளர்கள் தமது குடும்பத்தில் உள்ள உறவுகளிடமும் நம்ம்பிக்கையற்றே இருப்பார்கள், ஆனால் இவர் இந்த வகையினை சேர்ந்தவரா இல்லையா என்பதனை காலம்தான் பதில் சொல்லும்.
-
கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!
ஒரு ஊடகவியலாளாரின்? பொறுப்பற்ற கருத்து. ஊடகங்களால் மக்களினை தம் விருப்பத்திற்கேற்ப திருப்ப முடியும் இதனைதான் த்ற்போதய ஊடகத்துறை உள்நாட்டு அரசியலில் மட்டுமல்ல உலக அரசியலிலும் செய்கிறார்கள், ஆனால் அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு பொறுப்பேற்க தயாராக இருந்த வண்ணம் இதனை செய்யவேண்டும்
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
பெரும்பாலும் இரு நாட்டின் எல்லைப்பகுதிகளில் ஜாமர்கள் இருந்திருக்கலாம், எதிர்பாராத வேறு எல்லைகளினூடாக ஊடுருவல் செய்திருக்கவும் வாய்ப்பு இருக்கலாம். தற்போது இரஸ்சியா தனது நாட்டினை சுற்றி எதிரிகளை உருவாக்கிவிட்டுள்ளது, போலந்து படையினர் (தன்னார்வலர் எனும் போர்வையில்) பெருமளவில் இந்த போரில் ஈடுபடுகிறார்கள் என கூறுகிறார்கள். உக்கிரேனிய படைகளின் தற்காப்பு நிலைகளுக்கிடையேயான தொடர்பாடல் பிரச்சினை நிலவுவதாக கூறுகிறார்கள், இது ஒருங்கிணைந்த தாக்குதலை பாதிப்பதாக கூறுகிறார்கள், இது ஒரு எதிர்மறையான தாக்கமாக உக்கிரேனுக்கு இருந்தாலும் வெறு நேச நாட்டு எல்லைகள் இந்த யுத்தத்திற்கு பயன்படுத்தக்கூடியதாக இருந்தால் அது உக்கிரேனுக்கு சாதகமான அம்சமாக இருக்கும், அவை மோசமான அத்துமீறலாக இல்லாதவரை பிரச்சினை வராது என கருதுகிறேன். ஆனால் இந்த போரை தொடர்வதால் உக்கிரேனிற்கும், இரஸ்சியாவிற்கும் பெரிதாக நன்மைகள் கிடைக்காது; ஆனால் பெருமளவில் இழப்புகள் தொடர்கதையாகும், ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்ட்டாட்டம், பாதிக்கப்படுவது இரண்டு நாடுகளும்தான், ஒரு காலத்தில் இணைந்து பயணித்தவர்கள் இலகுவாக சமசரமாக முடியும், ஆனால் அதனை மற்றவர்கள் விரும்பமாட்டார்கள் ஏனென்றால் இந்த போரினால் அவர்கள் ஆதாயம் பெறுகிறார்கள்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
இது ஒரு பலவீனம்தான்.
-
யுக்ரேன் மிகக் குறைந்த செலவில் ரஷ்ய ராணுவத்துக்குச் சவால் விடுவது எப்படி?
பிபிசி இன் இந்த வகை பிரச்சார வகை கட்டுரைகள் மக்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே யதார்த்தங்களில் இருந்து திசை திருப்ப முடியும், உண்மைகளை கூறுவதனால் போரின் மீதான வெறுப்பு இன்னும் அதிகமாகிவிடும் என்பதற்காக இவ்வாறான பிரச்சார கட்டுரைகளை பதிவிடுகிறார்கள் என கருதுகிறேன். கடந்த திங்களன்று F-16 இனை உக்கிரேன் இழந்தது, அதனை வெளியிட முடியாதவாறான நிலை உக்கிரேனுக்கு இருந்தது, அதற்குக்காரணம் மேற்கு நாடுகள் இந்த இழப்பினால் எதிர்கால உதவிகளை நிறுத்தி விடலாம் என்பதாலோ அல்லது உக்கிரேனால் சொல்லமுடியாத வேறு ஏதாவது காரணம் இருந்திருக்கலாம், ஆனால் வோல்ஸ்ரிட் ஜெனல் இந்த செய்தியினை வெளியிட அதன் பின் உக்கிரேன் விமானியின் தவறு என முதலில் கூறி தற்போது தமது பேற்றியாட்டின் மூலம் சுட்டு வீழ்த்தியதாக கூற்கிறார்கள், உண்மை நிலவரம் உக்கிரேனிற்கு மட்டும் தெரிந்திருக்கலாம். மேற்கு ஊடகங்கள் கேர்க்ஸ் ஊடுருவலுக்கு கொடுத்த பிரச்சாரத்தில் ஒரு பங்காவது அதனால் ஏற்படப்போகும் விளைவுகளை பற்றி விவாதித்திருந்தால் தற்போது கிழக்கு உக்கிரேன் மற்றும் கேர்க்ஸில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்காது, உக்கிரேனிய வீரர்கள் உண்மைநிலவரங்கள் பகிரப்படவேண்டும் என கோரிக்கை விடும் நிலைக்கு நிலவரங்கள் ஏற்பட்டிருக்காது. உக்கிரேனிய வீரர்கள் இராணுவ கட்டமைப்பு மறு சீரமைக்கவேண்டும் என கோருகிறார்கள் என கூறப்படுகிறது, உயர் பதவி வகீக்கும் இராணுவ உத்தியோகத்தர்களின் தகுதியின்மை களநிலவரத்தினை பாதிப்பதாக கருதுகிறார்கள், இவ்வகையான குழப்பநிலை ஒரு நெருக்கடிக்குள் சிக்கியிருக்கும் இராணுவத்தின் பண்பாகப்பார்க்கப்படுகின்றது, தற்போது உக்கிரேன் இராணுவம் ஒரு கடுமையான நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது, இவ்வாறான கட்டுரைகளால் இவ்வகையான பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாது.
-
கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!
2009 இல் சிட்னியில் இலங்கையில் நிகழும் மனித அழிவை தடுத்து நிறுத்த கோரி மக்கள் பல வெளிநாட்டு தூதரங்களுக்கு மனுக்கொடுத்தார்கள், இந்திய தூதரகத்திற்கு மனுக்கொடுத்த போது அதனை அவர்கள் வாங்க மறுத்துவிட்டார்கள், அந்த நிகழ்வுகளை முன்னின்று நிகழ்த்திய ஒரு மாணவர் (25 வயதிற்கு மேலான அவர் வெளிநாட்டு மாணவராக கல்வி கற்று கொண்டிருந்தார் என நினைக்கிறேன்), உடனடியாக ஒரு கோசம் ஒன்றினை ஆரம்பித்தார்; "சோனியா, மாபியா!" என அவரை பின்பற்றி மற்றவர்களும் அவர் சோனியா என கூற மற்றவர்கள் மாபியா என கூற அங்கு நின்ற மற்றொருவர் வேண்டாம் என்றார், அவர் கூறிய உடல்மொழியில் அந்த கோசம் எவ்வளவு அருவருக்கதக்கதாக இருந்தது என்பதனை கோசமிட்டவர் உணர்ந்து உடன் நிறுத்திவிட்டார் (ஆனால் அவர் இதனை முன் கூட்டியே திட்டமிட்டே வந்திருப்பார் என நினைக்கிறேன்). படித்தவர்கள்தான் மற்றவர்களை தமது சுய நலஙளுக்காக தவறாக வழிநடத்துவார்கள், இந்த நிகழ்வில் சில சுயநலமிகள் தங்கள் விருப்பத்தினை மற்றவர்களை உசுப்பேற்றி நிகத்தியுள்ளார்கள், கலகக்காரர்கள் வெறும் அம்பு மட்டும்தான். இதில் கலகம் செய்தவர்கள் உண்மையாக தமது சமூகத்திற்கு நன்மை செய்ய விரும்பியிருப்பார்கள், ஆனால் இந்த தவறாக வழிநடத்துபவர்கள் ஒரு இரத்தம் உறிஞ்சும் அட்டைகள் மாதிரி தாம் சார்ந்த சமூகத்தினை கூட விற்று வயிறு வளப்பவர்கள், அவர்கள் உள்ளேயும் இருப்பார்கள் வெளியேயும் இருப்பார்கள், மோசமானவர்கள். எமது சமூகம் பல சமூக பீடைகளால் பீடிக்கப்பட்டுள்ள சமூகம், ரசோதரன் கூறுவது போல ஆதிக்க வெறியினை எம்மை நல்வழி படுத்தும் மதங்களூடாகவே பெறுகிறார்கள், இஸ்லாமியர்களை குறை கூறும் நாம் அவர்களவிற்கு இல்லை என்ற்றாலும் அதே அடிப்படை பண்புகள் அவர்களை குறை கூறும் இவர்களிடமும் உள்ளது.
-
எளிதில் மூப்படையாத சீமேநே பழங்குடிகள் பற்றி தெரியுமா? அவர்களின் வாழ்க்கை முறை என்ன?
இந்த இங்கிலாந்துக்காரன் உலகத்தை பிடிக்க வெளிகிடாமல் இருந்திருந்தால் பிரச்சினை எங்களுக்கு வந்திருக்காது😁.
-
கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!
முட்டை வீசுவது ஒரு வகையில் மற்றவர்களை இழிவுபடுத்துவதற்காக, இங்கு தென்னிந்திய திரை இசை கலைஞர்கள் மேல் இவ்வாறு நிகழ்த்தப்பட்டமையாலேயே இதனை பேசு பொருளாக்குகிறார்கள் ஆனால் இதே விடயங்களை கனடிய தமிழர் பேரவை உறுப்பினர் மீது நிகழ்த்தப்பட்டால் அதனை சரியான செயல் என கூறியிருப்பார்கள் ( இப்போது இவர்களால் தமது மானம் கப்பலேறிவிட்டது என்பதால் இந்த கவலையாக இருக்கலாம்). மற்ற இனத்தவர்களும் இவ்வாறு மற்றவர்கலை கேவலப்படுத்தும் வேலைகளில் ஈடுபடுவதுண்டு, அவர்கலை கண்டிக்காமல் அவர்களுக்கு ஊக்கமளிக்க சன்மானமும் வழங்குவார்கள். இதனால் பாதிக்கப்பட்ட தென்னிந்திய திரை உலகம் முழுவதும் இந்த அவமதிப்பிற்கெதிராக இனி புலம்பெயர் தேசங்களில் நிகழ்வுகளில் கலந்து கொள்ளமாட்டோம் என இவர்களை புறக்கணிப்பார்களா? எமது புராண இதிகாசங்களிலே கூட இவ்வாறு ஒருவரை அவமதிக்கும் போது கண்ணன் வந்து காப்பாற்றுவதாக கூறப்பட்டுள்ளது, இதனை கேட்டு வளரும் குழந்தைகள் அதே மாதிரி செய்யாமல் வேறுமாதிரி நடந்தால்தானே தவறு.
-
இருளில் மூழ்கியது உக்ரைன்: இரு நாடுகள் இடையே மீண்டும் போர் தீவிரம்
செலன்ஸ்கி மேற்கிற்கு நெருக்கடி கொடுக்கிறார் என நினைக்கிறேன், இரஸ்சிய உக்கிரேன் போரில் உக்கிரேனிற்கு தோல்வி ஏற்பட்டால் அது மேற்கின் தோல்வி என்பது உலகிற்கே தெரியும், அதனால் செலன்ஸ்கி தற்போதய போரில் இரஸ்சிய ஊடுருவலுக்கு மட்டும் ஈடுபாடு காட்டுவதுடன் இந்த போரில் மேற்கின் அதி நவீன ஆயுதங்களை சோவியத் கால ஆயுதங்கள் மூலம் அழிவடைய செய்வதன் மூலம். கேர்க்ஸ் போரில் அமெரிக்க, இங்கிலாந்து டாங்கிகளை இரஸ்சியாவின் T72 (புலிகளால் இந்திய இராணுவத்தின் இந்த டாங்கிகளை சாதாரண RPG அழிக்கப்பட்ட மிக பழைமையான) டாங்கிகள் வேட்டையாடுகின்றது, இதற்கு மேல் இரஸ்சிய டாங்கியின் REA கவச பாதுகாப்பினை மேற்கு டாங்கிகளிற்கு விளக்குமாற்றிற்கு பட்டு குஞ்சம் கட்டுவது போல் செய்து மேலும் அசிங்கப்படுத்துகிறார்கள் உக்கிரேனியர்கள். இதனை உக்கிரேன் திட்டமிட்டே செய்கிறதா என எனக்கு சந்தேகம் உண்டு, இரஸ்சியாவினையும் அதே நேரத்தில் உத்தரவு போடும் மேற்கையும் சமகாலத்தில் அசிங்கப்படுத்தவேண்டும், அதே நேரத்தில் மீள முடியாத இராஜதந்திர நெருக்கடியினை மேற்கிற்கு ஒருங்கே கொடுப்பதாகவும் இருக்கவேண்டும். மேற்கு விரும்பாத விடயத்தினை உக்கிரேன் செய்யும்போது அதனை வெளிப்படையாக கண்டித்தால் மேற்கின் கொளகை ரீதியான தோல்வியினை ஒப்பு கொள்ளவேண்டும் எனும் நிலை, அமெரிக்க தேர்தலுக்கு முன்பாக உக்கிரேன் பல இடங்களில் பெருமளவினை இழப்பதன் மூலம் அமெரிக்காவிற்கு நெருக்கடியினை ஏற்படுத்தி தனக்கு தேவையானவற்றை பெறும் முயற்சியில் ஈடுபடுகிறது என நினைக்கிறேன். மேற்கிடமிருந்து எந்த வித கட்டுப்பாடற்ற நிதி மற்றும் ஆயுதம், ஆயுத பயன்பாடு (நீண்ட தூர ஏவுகணைகள்) என்பவற்றினை பெறுவதே நோக்கமாக இருக்கலாம். செலன்ஸ்கி தற்போது மேற்கின் கைப்புள்ள இல்லை, தற்போது மேற்குதான் செலன்ஸ்கியின் கைப்புள்ள, இரஸ்சியாவினை மேற்கு வென்றாலும் உக்கிரேனிடம் மேற்கு தோற்றுத்தானாகவேண்டும். ஆனால் உக்கிரேனிடம் தோற்றாலும் அது வெளியில் தெரியாது அதனாலசிங்கமாக இருக்காது.
-
உச்சக்கட்ட பதற்றம்... பிரித்தானியா மீதும் தாக்குதல் நடத்துவோம் : கடும் தொனியில் எச்சரிக்கும் ரஷ்யா
போரில் ஈடுபடுவர்களுக்கு போர் தொடர்பான பார்வைக்கும் அந்த போரினை வெளியிலிருந்து பார்ப்பவர்களாகிய நாங்கள் ஒரு விளையாட்டின் வெற்றி தோல்வி போல போரினை வரையறுத்து போரினை பார்க்கும் பார்வைக்குமிடையான வித்தியாசம் அது. இந்த போரே ஒரு தேவையற்ற போர், இதற்கான விலையினை எல்லோரும் ஏற்கனவே கொடுக்க தொடங்கியாகிவிட்டது, இங்கு வெற்றி தோல்வி இருப்பதில்லை முடிவுதான் உண்டு; இதிலீடுபடுவர்களுக்கு என்ன நன்மை? இந்த கேர்க்ஸ் போர் கூட ஒரு அமெரிக்க தேர்தலுக்கான போராக நான் கருதுகிறேன் (எனது கருத்து).
-
உச்சக்கட்ட பதற்றம்... பிரித்தானியா மீதும் தாக்குதல் நடத்துவோம் : கடும் தொனியில் எச்சரிக்கும் ரஷ்யா
கேர்க்ஸ் பிராந்தியத்தில் உக்கிரேன் தொடர்ந்தும் தாக்குதல் நடத்துகிறது (ஆனால் ஆச்சரிய தாக்குதல் பலன் முடிவடைந்தமையால் மிகவும் மந்தமான முன்னேற்றம்) அதன் தொடர் முன்னேற்றத்தினை தடுக்க இரஸ்சியா பாதுகாப்பு அகழிகளை உருவாக்கு ஒப்பீட்டளவில் குறைந்த படையினரை வைத்து நிலமையினை சமாளிக்கிறது, மேலும் நகர முடியாமையால் உக்கிரேனையும் மேற்கையும் தூண்டி இன்னொரு களமுனையினை திறந்து அதிலும் மேலும் துருப்புகலையும் ஆயுத தளபாடங்களயும் ஈடுபடுத்தி அதனை சிதறடிப்பதற்காக இரஸ்சியா இப்படி பொறியில் மாட்டி விடுகிறது போல இருக்கிறது, இவர்களும் புரியாமல் இன்னொரு களத்தை திறந்து இன்னுமொரு ஆப்பினை இழுத்துவிட்டு முழிக்கப்போகிறார்கள்.
-
இங்கிலாந்து - இலங்கை கிரிக்கெட் தொடர் செய்திகள்
- ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
இரண்டும் வேறுபட்ட கருத்துடையது, நீங்கள் கூறுவது பயனற்றது என்பதான பொருள்படும் ஆனால் ஐன்ஸ்ரினது கருத்து ஒரே விடயத்தினை செய்து வேறு பட்ட முடிவுகளை எதிர்பார்ப்பது பைத்தியக்காரத்தனம்.- ரஷ்யா பெரும் தாக்குதலுக்கு தயாராகும் வேளையில் யுக்ரேன் செல்வதா? மோதியை எச்சரிக்கும் பாதுகாப்பு நிபுணர்கள்
செலன்ஸ்கியிடம் எல்லோரும் கைதட்டுகிறார்கள் என ஆடையில்லாத மன்னன் ஆக வேண்டாம், பார்த்து புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள சொல்லியிருப்பார்.- ரகு தாத்தா - சுப.சோமசுந்தரம்
பகுத்தறிவு சிந்தனைகள் பற்றிய தெளிவு எமது சமூகத்தில் மிக குறைவாக உள்ளதாக கருதுகிறேன், அறிஞர் அண்ணாவை பற்றியோ பெரியாரை பற்றியோ அறியாதவனாகவே இது வரை உள்ளேன், அதற்கான வாய்ப்புகள் இல்லை என கூறமுடியாது, நாமாகவே அந்த முயற்சிகளை தவிர்த்துவிடுகிறோம் பூனைகலை போல கண் மூடிக்கொண்டு உலகம் இருண்டு விட வேண்டும் என்று விருபுகிறோம். டொமினிக் ஜீவா போன்றோரின் இலக்கியங்கள் வெளி வந்திருந்தாலும் அது வாசகர்களுக்கு ஏனோ எட்டவில்லை, அதற்கு காரணம் என்ன என தெரிய்ஃவில்லை (நானும் வாசிக்கவில்லை). ஆனால் மறு வளமாக ஆதிக்க வெறியர்களை பாடசாலை கல்வி புத்தகத்தில் சிறந்த மனிதர்களாக போற்றப்படுகின்ற நிலை காணப்படுகிறது. பொதுவாக ஆதிக்க வெறியர்கள் தம்மால் அடக்கப்படும் சமூகத்தில் பெண்கள் மேற்கொள்ளும் வன்முறைகளை ஒரு ஆதிக்க அடையாளமாக பயன்படுத்துகிரார்கள், இதற்கு இலங்கையிலுள்ள பெரும்பான்மை சமூகம் போலவோ அல்லது சில சமூகங்கள் செய்ததை போல தமிழ் சமுகம் தமக்குள்ளேயே ஆதிக்க சாதியினர் தாழ்த்தப்பட்ட மக்களின் மேல் நிகழ்த்தியதாக இந்த இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. பெண்களின் கல்வி இந்த ஆதிக்க சமூகத்தில் குறைவாக இருப்பதே இது போன்ற நிலை நிலவுவதாக நம்புகிறேன், திட்டமிட்டே ஆணாதிக்க சிந்தனையூடாக பெண்களின் கல்வி மறுக்கப்படும் அதே சமூகத்தில் பிறக்கும் குழந்தைகளை நலவழிப்படுத்த முடியாத ஒரு உடைந்து போன சமூகத்தினை இந்த பெண்கள் விட்டு செல்லுகின்ற நிலை காணப்படுகிறது. பாடசாலைகளில் கூட இந்த ஆதிக்க வெறியர்களின் சாதனை ( யாழ்பாணிய சாதியத்தின் தந்தை என அழைக்கப்படுகின்றவர்) என சைவத்தினை வளர்க்க வேற்று மதத்தினருடன் வாதித்ததாக கூறப்படுவதற்கு (அந்த கதை பாட புத்தகத்தில் இல்லை) ஆசிரியர்கள் கூறும் முகம் சுழிக்க வைக்கின்ற கதை உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கலாம், தெரியாதவர்களுக்காக பாடப்புத்தகத்தில் போற்றப்படும் மனிதர் ஒரு கல்லில் அமர்ந்திருந்த நேரம் அவ்வழியாக சென்ற பிரித்தானிய நண்பர் அவரை பார்த்து நீங்கள் கல்லை வழிபடுகிறீர்கள் தற்போது அதே கல்லில் அமர்ந்திருகிறீர்களே என கேட்டாரம் அதற்கு இவர் இதற்கான பதிலை சந்தர்ப்பம் வரும்போது கூறுகிறேன் என கூறினாராம். பின்னொரு நாள் அதே பிரித்தானியர் அவரது மனைவி மற்றும் மக்ளுடன் போகும் போது இவர் அந்த பிரித்தானியரை அவரது அந்த கேள்வியினை நினைவு படுத்திவிட்டு அவரது குடும்ப உறவை இழிவு படுத்தும்விதமாக பிரித்தானியரை பார்த்து கேள்வி ஒன்றினை கேட்டதாக ஆசிரியர்கள் பெருமையாக கூறும் நிலை கானப்படும் சமூகத்தில் இருக்கிறோம். இவ்வாறு உடைந்து போன சமூகங்களில் பெண்கள் கல்வி நிலை மேம்பட்டாலே ஏதாவது மாற்றம் நிகழலாம்.- ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
2009 பின்னரும், ஆயுத போராட்ட காலத்திற்கு முன்ன்னரும் ஒரே மாதிரியான அரசியல் நகர்வுகளையே சிறுபான்மை சமூகத்தினர் முன்னெடுத்து வருகின்றனர், ஏதோ ஒரு அரசியல் கட்சிகளுடன் திரைமறைவு உடன்படிக்கையோ அல்லது வெளிப்படையான உடன்படிக்கையினூடாகவோ, இந்த நடவடிக்கை அமைந்திருக்கிறது, இனியும் மாறப்போவதில்லை, ஆனால் சாதாரண மக்களுக்கு இதனால் ஏதாவது மாற்றம் ஏற்பட்டதா என்பதனை சதாரண மக்கள் சிந்தித்து அதற்கேற்ப தமது முடிவுகளை எடுக்க வேண்டும்.- பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
இந்த வாரம் இரண்டு வர்த்தகம் (S&P 500), முதலாவது வாங்கிய வர்த்தகம்(இலாபம்), இரண்டாவது விற்ற வர்த்தகம் (நட்டம் Stop loss). இரண்டும் Trend pull back trade setup.- பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
சந்தை தொடர்பாக சாதக மனநிலையில் தற்போது இல்லை ஆனால் சந்தை எவ்வாறு செயற்படுகிறது என்பதனை சரியாக கணிப்பதற்கு குறைந்தது ஒரு மாதகாலமாவது பொறுத்திருக்கவேண்டியுள்லது.- சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
- பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
செப்ரெம்பர் மாதம் வட்டி விகித குறைப்பு (25 புள்ளிகள்) 0.25% ஏற்படும் என உறுதியாக நம்பப்படுக்கிறது, பொதுவாக வட்டி விகித குறைப்பு பங்கு சந்தையில் மிக சாதகமான விலைவாக ஏறத்தாழ 20 புள்ளிகள் அதிகரிப்பினை ஏற்படுத்தும், ஆனால் 0.50% வட்டி குறைப்பு பற்றியும் பேசப்படுகிறது அவ்வாறாயின் 100 புள்ளிகள் மாற்றம் S&P 500 இல் ஏற்படும் ஆனால் இந்த 0.50% எதிர்மறையான விளைவாக உயராமல் இறங்க கூட அதிக வாய்ப்புண்டு. செப்ரெம்பரில் 0.25% வட்டி விகித குறைப்பு ஏற்பட்டால் சந்தை அதற்கு எவ்வாறு செயற்படுகிறது என்பதனை பொறுத்து இந்த சந்தையின் நிலையினை தீர்மானிக்கலாம், உதாரணமாக விலை உயர்ந்து சென்றால் சந்தை தொடர்ச்சியாக உயர்வடைய வாய்ப்புண்டு மறுவளமாக விலை செய்தி அறிவிப்பில் உயர்ந்து குறித்த நாளிலே விலை வீழ்ச்சி ஏற்பட்டால் சந்தை பலவீனம் உறுதியாகிவிடும். கடந்த மாதம் வேலையில் ஒருவர் S&P 500 இல் முதலீடு செய்யப்போவதாக எனது அபிபிராயம் என்ன என கேட்டார், அப்போது இந்த பங்கு சந்தை தொடர்பில் கவனம் செலுத்தாமையால் எனக்கு அது பற்றி தெரியாது என கூறி ஆனாலும் பொதுவான சந்தை நிலை பலவீனமாக உள்ளமையால் பொறுத்திருந்து விலை வீழ்ச்சி அடைந்த பின் வாங்குமாறு கூறினேன் ( அவர் நீண்ட கால முதலீட்டாளர் - Real estate) அதற்கு அவர் கூறினார் விலை தொடர்ந்து உயர்ந்து செல்கிறது என செய்திகள் எல்லாம் கூறுவதாக கூறினார். எனது கை தொலைபேசியில் S&P 500 பார்த்த போது அவர் சொல்வது சரிதான் விலை தொடர்ந்து உயர்கிறது, ஆனாலும் ஒரு சாமானியனுக்கு அதுவும் ஒரு முதல் முதலீட்டாளனுக்கு இந்த விடயம் தெரிகிறது என்றால் சந்தை முதிர்ச்சியினை எட்டி விட்டது என கூறுவார்கள் என கூறிவிட்டு நகர்ந்துவிட்டேன், அதனை தொடர்ந்து வந்த வாரங்களில் விலை வீழ்ச்சி ஏற்படத்தொடங்கியது எனக்கு தெரியாது அவர் வாங்கி விட்டாரா இல்லையா என, ஆனால் அவர் என்னை கடக்கும் ஒவ்வொரு முறையும் அவர் முகத்தை பார்ப்பேன் ஆனால் அவர் இதுவரை எதுவும் சொல்லவில்லை நானும் அதை விசாரிக்கவில்லை.- ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
3 பாலங்கள் தகர்க்கப்பட்டுவிட்டதாக கேள்விப்பட்டேன், சரியாக தெரியவில்லை. உக்கிரேன் துருப்புக்கள் குறைந்த பயிற்சியுடன் இந்த சாதனைகளை செய்கிறார்கள்? கைது செய்யப்பட்ட உக்கிரேன் துருப்புகள் ஒரு வாரத்திற்கும் குறைவான பயிற்சியுடன் முன் களங்களில் சண்டை இடுகிறார்கள். இரன்டு தரப்பிலும் தொடரும் இப்போரினால் பெருமளவானவர்கள் கொல்லப்படுகிறார்கள், இரு தரப்பும் குறைந்த பயிற்சியுடன் பல அப்பாவி இளைஞர்களை பலி கொடுக்கிறார்கள், ஏற்கனவே இரண்டாம் உலகப்போரினால் பெருமளவான ஆண்கள் இறந்தமையால் இரஸ்சிய ஆண்களின் தொகையினை விட 4 மடங்கு பெண்கள் உள்ளதாக கூறுகிறார்கள். தற்போது உக்கிரேன் தரப்பு பெருமளவில் ஆளணிப்பற்றாக்குறையில் திண்டாடுகிறது, இந்த போரை நிறுத்தாமல் தொடர்ந்தால் எதோ ஒரு பகுதி தோற்றுவிடும், இதில் இந்த இரு தரப்பிற்கும் எந்த பெரிய இலாபமும் இல்லை, நட்டம் மட்டுமே மிஞ்சும் அரசியல்வாதிகள் எங்காவது ஒரு நாட்டில் இந்த போரினால் வந்த காசில் உள்ளாசமாக இருப்பார்கள் ஆனால் போரிட்டவர்கள் உடல் உள ரீதியான பாதிப்புடன் காலம் முழுவதும் வாழவேண்டியதுதான்.- ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
உங்கள் கருத்துப்படத்திற்கு நன்றி, இதுவரை காலமும் குண்டு சட்டியினை குதிரையாக நினைத்து ஒரே இடத்தில் நிற்பதை குறியீடாக குறிக்கும் (மரக்குதிரை போல) செயலைத்தான் குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுவது என நினைத்திருந்தேன், இப்போதுதான் புரிகிறது குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவதைத்தான் குறிக்கிறார்கள் என. - ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.