Everything posted by நிலாமதி
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வருடா வருடம் விளையாட்டுப்போட்டியை திறம்பட நடத்தி யாழ் களத்தை கல கலப்பாக்கும் கிருபனுக்கும் இம்முறை முதலாம் ரெண்டாம் மூன்றாம் இடத்தை பிடித்தவர்களுக்கும் என்னை கீழே மிதிப்படாமல் காத்த வாதவூரானுக்கும் என் நன்றிகள் . கிருபனுக்கு மேலதிக பாராட்டுக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிறி,..என்றும் நலமுடன்,வளமுடன் வாழ்க
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
பிறப்பதற்கும் இறப்பதற்கும் நடுவிலே மனம் பெரிய பெரிய கனவு கண்டது முடியல வாழ்வதற்கும் வாழ்வதற்கும் நடுவிலே விதி வருவது எந்த உருவத்திலோ தெரியல. இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையிலே நடக்கும் ரகசியத்தை இன்னும் எவரும் அறியவில்லை பெருகிவரும் மனிதகுலம் உலகிலே எதற்கு பிறக்கிறது என்று இதுவரைக்கும் புரியலை பெற்றவரும் மற்றவரும் பிரிவு தானம்மா நீ பெற்றெடுத்த பிள்ளைகளும் வேறு தானம்மா உற்ற பொருள் செல்வம் எல்லாம் சொந்தம் ஏதம்மா இந்த உலகத்திலே எல்லாம் உனக்கு இரவல் தானம்மா
-
அன்பு ௐ
புதிய உறுப்பினர் நமச்சிவாயம் வருக! நல்வரவாகுக
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சுவி அண்ணா இந்தளவு மகிழ்ச்சி இல்லை . எதோ குருட்டு லக் என்பார்கள் . எல்லாம் டக் டிக் டோஸ் ...விளையாட்டுத்தான்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
1) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), நெதர்லாந்து எதிர் பாகிஸ்தான் PAK 2)முதல் சுற்று குழு C:சனி 07 பெப்: 9:30 AM, ஏடன் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் மேற்கிந்திய தீவுகள் WI 3)முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 1:30 PM, வாங்கெடே, இந்தியா எதிர் ஐக்கிய அமெரிக்கா IND 4)முதல் சுற்று குழு D:ஞாயிறு 08 பெப்: 5:30 AM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் நியூசிலாந்து NZ 5)முதல் சுற்று குழு C:ஞாயிறு 08 பெப்: 9:30 AM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் நேபாளம் ENG 6)முதல் சுற்று குழு B:ஞாயிறு 08 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் அயர்லாந்துIRE 7)முதல் சுற்று குழு C:திங்கள் 09 பெப்: 5:30 AM, ஏடன் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் இத்தாலி SCOT 8)முதல் சுற்று குழு B:திங்கள் 09 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), ஓமான் எதிர் சிம்பாப்வேZIM 9)முதல் சுற்று குழு D:திங்கள் 09 பெப்: 1:30 PM, அகமதாபாத், கனடா எதிர் தென்னாபிரிக்கா SA 10)முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 5:30 AM, டெல்லி, நமீபியா எதிர் நெதர்லாந்து NED 11)முதல் சுற்று குழு D:செவ்வாய் 10 பெப்: 9:30 AM, சென்னை, நியூஸிலாந்து எதிர் ஐக்கிய அமீரகம் NZ 12)முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 1:30 PM, கொழும்பு (SSC), பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அமெரிக்கா USA 13)முதல் சுற்று குழு D:புதன் 11 பெப்: 5:30 AM, அஹமதாபாத், ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா SA 14)முதல் சுற்று குழு B:புதன் 11 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் அயர்லாந்து AUS 15)முதல் சுற்று குழு C:புதன் 11 பெப்: 1:30 PM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ENG 16)முதல் சுற்று குழு B:வியாழன் 12 பெப்: 5:30 AM, பல்லேகல, சிறிலங்கா எதிர் ஓமான் OMA 17)முதல் சுற்று குழு C:வியாழன் 12 பெப்: 9:30 AM, வாங்கெடே, இத்தாலி எதிர் நேபாளம்ITA 18)முதல் சுற்று குழு A:வியாழன் 12 பெப்: 1:30 PM, டெல்லி, இந்தியா எதிர் நமீபியா NAM 19)முதல் சுற்று குழு B:வெள்ளி 13 பெப்: 5:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் ஸிம்பாப்வேZIM 20)முதல் சுற்று குழு D:வெள்ளி 13 பெப்: 9:30 AM, டெல்லி, கனடா எதிர் ஐக்கிய அமீரகம்UAE 21)முதல் சுற்று குழு A:வெள்ளி 13 பெப்: 1:30 PM, சென்னை, நெதர்லாந்து எதிர் ஐக்கிய அமெரிக்காUSA 22)முதல் சுற்று குழு B:சனி 14 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), அயர்லாந்து எதிர் ஓமான் IRE 23)முதல் சுற்று குழு C:சனி 14 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் இங்கிலாந்து ENG 24)முதல் சுற்று குழு D:சனி 14 பெப்: 1:30 PM, அஹமதாபாத், நியூஸிலாந்து எதிர் தென்னாபிரிக்கா SA 25)முதல் சுற்று குழு C:ஞாயிறு 15 பெப்: 5:30 AM, வாங்கெடே, நேபாளம் vd மேற்கிந்தியத் தீவுகள்WI 26)முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 9:30 AM, சென்னை, நமீபியா எதிர் ஐக்கிய அமெரிக்காUSA 27)முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), இந்தியா எதிர் பாகிஸ்தான்IND 28)முதல் சுற்று குழு D:திங்கள் 16 பெப்: 5:30 AM, டெல்லி, ஆப்கானிஸ்தான் எதிர் ஐக்கிய அமீரகம்UAE 29)முதல் சுற்று குழு C:திங்கள் 16 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், இங்கிலாந்து எதிர் இத்தாலி IT 30)முதல் சுற்று குழு B:திங்கள் 16 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் சிறிலங்காAUS 31)முதல் சுற்று குழு D:செவ்வாய் 17 பெப்: 5:30 AM, சென்னை, கனடா எதிர் நியூசிலாந்து NZ 32)முதல் சுற்று குழு B:செவ்வாய் 17 பெப்: 9:30 AM, பல்லேகல, அயர்லாந்து எதிர் சிம்பாப்வேZIM 33)முதல் சுற்று குழு C:செவ்வாய் 17 பெப்: 1:30 PM, வாங்கடே, ஸ்கொட்லாந்து எதிர் நேபாளம்SCOT 34)முதல் சுற்று குழு D:புதன் 18 பெப்: 5:30 AM, டெல்லி, தென் ஆப்பிரிக்கா எதிர் ஐக்கிய அமீரகம்SA 35)முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), நமீபியா எதிர் பாகிஸ்தான் PAK 36)முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 1:30 PM, அஹமதாபாத், இந்தியா எதிர் நெதர்லாந்துIND 37)முதல் சுற்று குழு C:வியாழன் 19 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், இத்தாலி எதிர் மேற்கிந்தியத் தீவுகள்WI )முதல் சுற்று குழு B:வியாழன் 19 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் ஸிம்பாப்வேSL 39)முதல் சுற்று குழு D:வியாழன் 19 பெப்: 1:30 PM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் கனடா AFG முதல் சுற்று குழு B:வெள்ளி 20 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் ஓமான் AUS 41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IN PAK IND PAK USA NED NAM 42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியலிடுக. கேள்வி 41) க்கு பதிலாக கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும். (அதிகபட்சம் 3 புள்ளிகள் கிடைக்கும்) குழு A: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக IND குழு A: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயர் ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக PAK 43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! NAM முதல் சுற்று குழு B: 44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கும்) AUS SL AUS SL IRE ZIM OMA 45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியலிடுக. கேள்வி 16) க்கு பதிலாக கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிகபட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு B: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக SL குழு B: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக AUS 46)முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!OMA முதல் சுற்று குழு C : 47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றிற்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG WI ENG WI SCOT NEP ITA 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியலிடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிகபட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு C: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியலிடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிகபட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு C: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக WI குழு C: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக ENG 49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! SCOT முதல் சுற்று குழு D : 50) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றிற்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) NZ SA SA AFG AFG CAN UAE 51) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியலிடுக. கேள்வி 50) க்கு பதிலாக கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிகபட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு D: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக SA குழு D: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக AFG 52) முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! CAN சுப்பர் 8 சுற்றுப் போட்டி கேள்விகள் 53) முதல் 64) வரை. 53)சுப்பர் 8: குழு 2:சனி 21 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y2 எதிர் Y3 AFG 54)சுப்பர் 8: குழு 2:ஞாயிறு 22 பெப்: 9:30 AM, பல்லேகல, Y1 எதிர் Y4 SL 55)சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 22 பெப்: 1:30 PM, அஹமதாபாத், X1 எதிர் X4 IND 56)சுப்பர் 8: குழு 1:திங்கள் 23 பெப்: 1:30 PM, வாங்கெடே, X2 எதிர் X3 AUS 57)சுப்பர் 8: குழு 2:செவ்வாய் 24 பெப்: 1:30 PM, பல்லேகல, Y1 எதிர் Y3 PAK 58)சுப்பர் 8: குழு 2:புதன் 25 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y2 எதிர் Y4 AFG 59) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 9:30 AM, அஹமதாபாத், X3 எதிர் X4 SA 60) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 1:30 PM, சென்னை, X1 எதிர் X2 IND 61)சுப்பர் 8: குழு 2:வெள்ளி 27 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y1 எதிர் Y2 AFG 62)சுப்பர் 8: குழு 2:சனி 28 பெப்: 1:30 PM, பல்லேகல, Y3 எதிர் Y4 SL 63)சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 9:30 AM, டெல்லி, X2 எதிர் X4 AUS 64)சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ், X1 எதிர் X3 IND சுப்பர் 8 குழு 1: 65) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றிற்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND AUS X1 X2 X3 X4 66)சூப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியலிடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிகபட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) சுப்பர் 8: குழு 1: முதலிடம் - ? (3 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக IND சுப்பர் 8: குழு 1: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக AUS 67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! WI சுப்பர் 8 குழு 2: 68) சூப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றிற்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) AFG SI Y1 Y2 Y3 Y4 69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியலிடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கும்) சுப்பர் 8: குழு 2: முதலிடம் - ? (3 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக AFG சுப்பர் 8: குழு 2: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயர் ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக SL 70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! ENG அரையிறுதிப் போட்டிகள்: அரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றைப் பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்க பார்க்க வேண்டும். 71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: புதன் 04 மார்ச்: 1:30 PM, ஏடன் கார்டன்ஸ்/கொழும்பு (RPS), IND 72) ரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: வியாழன் 05 மார்ச்: 1:30 PM, வாங்கெடே, AUS இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 71)க்கும் 72) க்கும் கொடுக்கப்பட்ட விடைகள் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தர வேண்டும்.73) 73 ) உலகக் கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு 08 மார்ச்: 1:30 PM, அஹமதாபாத்/கொழும்பு (RPS) அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 ல் வெற்றி பெறும் அணி IND உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 74)இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? (3 புள்ளிகள்) IND 75)இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) NAM 76) இந்த தொடரில் அதிக ஓட்டங்கள் பெற்றவர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Suryakumar Yadav 77) இந்த தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 78)இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவர்கள் 4 புள்ளிகள்) VARUN Yadav 79)இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 80)இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) ABISEK 81) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்?(3 புள்ளிகள்,கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் அந்தப் பதிலுக்கானஅணியில் இருக்க வேண்டியஅவசியமில்லை! ) AUS 82)இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Kuldeep Yadav 83)இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்க வேண்டிய அவசியமில்லை! ) IND 84) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)Suryakumar Yadav 85)இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்க வேண்டிய அவசியமில்லை! ) IND
-
யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
துணைவியை இழந்து தவிக்கும் மோகனுக்கும் பிள்ளைகளுக்கும் உறவுகளுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அதிர்ச்சியாக இருக்கிறது . ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை .துயரில் இருந்து மீண்டு வர வேண்டுகிறேன் .
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
உங்களுக்கும் எனக்கும் நல்ல வழி பிறக்கட்டும் .
-
எதிர்பாராத காட்சிப்படுத்தல்களுடன் குறுங்காணொளிகள்
ஏராளனின் அத்தனை பகிர்வுகளும் அருமை .ரசித்தோம் . நன்றியும் பாராட்டுக்களும் உரித்தாகுக
-
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! - 2026
யாழ் கள உறவுகள் யாவருக்கும் நலமும் செல்வ வளமும் நோய் நொடியற்ற வாழ்வும் அமைய என் பிரார்த்தனைகள் .
-
சிரிக்கலாம் வாங்க
இறங்க வேண்டிய இடம் .ஏரங்குடி ஏறங்கடி ஏறங்கடி ஏறங்கடி
-
ஜேர்மனியில் யாழ் இளைஞர் விபரீத முடிவு.!
கடன் பட்டு வெளி நாடு சென்ற பின் தான் "அக்கரைகள் பச்சை இல்லை என புரிகிறது" பையனும் இல்லை.கடனை உழைத்து கொடுக்க வழியும் இல்லை. ...தீர வர ஆராய்ந்து யாராவது உறவுகளின் உதவி யோடு இன்னும் கொஞ்சக் காலம் கடத்தி இருக்கலாம். முன்பு ஒரு காலத்தில் உயிர் காத்திட சென்றார்கள் .தற்போது உழைக்கவேணும் வெளி நாட்டில் வாழ்கிறேன் என்று என்று பந்தா காடடனும் என்று உயிரை பயணம் வைத்து செல்கிறார்கள்.
-
மன்னாரில் உயிருக்கு போராடும் 40 பேர்.. காப்பாற்ற முடியாத நிலையில் அதிகாரிகள்
குறித்த 40 பேரையும் மீட்க சென்ற இராணுவ அதிகாரிகளின் படகு கிராமத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் திரும்பி வந்துள்ளது.
-
மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!
இந்த வயசில "லவ்" பெயிலியர் இல்லை லிவர் பெயிலியராக இருக்கும். கொஞ்ச நஞ்ச குடியா குடிச்சாங்கள். 😃
-
வணக்கம்உறவுகளே
வணக்கம் ...பெயர் கேள்விப்படட ஞாபகம் இருக்கு . வெண்ணிலா ஜமுனா காலத்தில் ...கலகலப்பாக கலந்து கொண்டவர் என நினைக்கிறேன் .
-
கார்கால மழையில் நனைகின்ற மலரே.
உணர்வுபூர்வமான பாடல் ...பாடலுக்கும் வெளியீட்டுக்கும் நன்றி மாவீரர் தெய்வங்களுக்கு வீர வணக்கம்
-
இனிமேல் மரணங்கள் இப்படித்தான் இருக்கு மா? படித்ததும் பகிர்ந்ததும்
இனிமேல் மரணங்கள் இப்படித்தான் இருக்கும்*. “ சென்னை பெசண்ட் நகரில் அமைந்திருந்தது அந்த பங்களா! காலை 8மணி என்பதால் சாலை வழக்கப்படி பரபரப்பாக இருந்தது..! சரியாக 8.15க்கு அந்த வீட்டின் முன் நகரின் பிரபலமான மருத்துவமனைக்குசொந்தமான ஆம்புலன்ஸ் வந்து நின்றது..! அதிலிருந்து ஐஸ்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த உடலை மருத்துவமனை ஊழியர்கள் இறக்கி வீட்டிற்குள் வைத்துவிட்டு பணத்தைப்பெற்றுக்கொண்டு புறப்பட்டனர்..!ஆம்!! அநத குடும்பத்தலைவர் சுப்பிரமணிதான் நேற்றிரவு மாஸிவ் அட்டாக்கில் உயிர் விட்டிருந்தார்... பிணத்தின் கால்மாட்டில் வந்து நின்ற அவர் மனைவி மாலா முகத்தைப்பார்த்து கண் கலங்கினாள்..,.! மணி 8.45- நகரின் பிரபலமான பிரௌசிங் சென்டரிலிருந்து வந்த இரு நபர்கள் கேமிராவை பொருததி வீடியோ கான்பரன்சில் அவரது உடல் உலகெங்கும் தெரியச்செய்துவிட்டுச்சென்றனர்!! பக்கத்துவீட்டு ராவ் வந்து துக்கம் விசாரித்துவிட்டுசென்றார்....! ஆஸ்திரேலியா- சிட்னியில் ஒதுக்குப்புறமான இடத்தில் அமைந்திருந்த அநத வீட்டின் வீடியோ கான்பரன்சிங்கில் தெரிந்த தன் தந்தையின் உடலைப்பார்த்து விசும்பினாள் சுப்பிரமணியத்தின் மகள் மஞ்சு..! மதியம் 1மணிக்கு வீட்டுக்கு சாப்பிட வந்த அவள் கணவன் ஈஸ்வரன் " என்ன? Body தெரியறதா? சரிசரி, எனக்கு சாப்பாடு போடு. நான் அர்ஜெண்டா போகணும்" என்று கூறிய படியே சாப்பாடு மேஜையில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தான்... சிங்கப்பூர் நகரின் சற்றே ஒதுக்குப்புறமான பகுதியில் அமைந்திருந்தது கோபாலன் வீடு..! சுப்பிரமணியத்தின் இரணடாவது புத்திரன்!! "ஏண்டி! நாம ஒரு எட்டு போய்ட்டு வந்திருக்கலாமோ?" என்றான் கோபாலன், சற்றே கவலையுடன்..! " சும்மா இருங்க! போன வருஷம்தானே போய்ட்டு வந்தோம்? நாம போனா மட்டும் போன உயிர் வந்திடவா போகுது? பேசாம நெட்லயே பார்த்துக்கங்க!" என அழகாகப்பேசினாள் அவனது சகதர்மினி பாமா.. கோபாலன் மௌனமானான்!! USAவில் லாஸ்ஏஞ்சல்ஸ் அருகேயுள்ள ஏஞ்சல்ஸ் அபார்ட்மெண்டில் 45 வது மாடியில் இருந்தான் சீனிவாசன்..! சுப்ரமணியத்தின் ஜேஷ்ட குமாரன்!! காலை செய்தியை கேட்டபோதிருந்தே கலங்கிப்போயிருந்தான்.! கிருஷ்ணனின் மனைவி லிண்டா அவன் அருகே வந்து நின்று அவனது கையைப்பிடித்துகொண்டாள்.. "Don't worry dear! You know, we can't do anything against the nature!!" என்று ஆறுதல் கூறினாள்..! அவளைத்திருமணம் செய்துகொண்டதால்தான் இன்று அவன் கிரீன்கார்டு சிட்டிசனாக அங்கே நிரந்தரமாகி இருக்கிறான்!! " why are you looking sad dad? Is anything going wrong? " என்று அவனைப்பார்த்து பாசத்துடன் கேட்டாள் அவனது 5வயது மகள் ரோஸலின்..! அவனது கண்கள் மானிட்டர் மீதே நிலைத்திருந்தது.......!! ன்னையில் காலை 10.30..! பெசண்ட் நகரில் சுப்பிரமணியம் உடல் மீது ஒரு பெரிய மாலையைக்கொண்டுவந்து போட்டார் ராவ்..! வெளியே யாரோ வரும் அரவம் கேட்டது..! தான் போனவாரம் புதிதாய் வாங்கிய BMW ல் சம்பந்தி சாந்தமூர்த்தியுடன்(யெஸ், தட் பாமாவின் அப்பா) வந்து இறங்கினார் நீலகண்ட சாஸ்திரிகள்..! அவரது கையில் லேப்டாப்பும் சிலபல எலக்ட்ரானிக் டிவைஸ்களும் இருந்தன....! சுப்பிரமணியத்தின் உடலைப்பார்த்ததும் கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன் அவர் தன்னிடம் கூறியது சாஸ்திரிகள் நினைவுக்கு வந்தது. " எப்படியாவது என் பெரிய மகன் கையால எனக்கு கொள்ளி வைக்கணும்! அதுதான் எனக்கு கடைசி ஆசை சாஸ்திரிகளே!" என்று தம்மிடம் கூறியதை நினைவு கூர்ந்து நீண்ட பெருமூச்சு விட்டார்!... நேரம் பிற்பகல் 3மணியைத்தாண்டியது..! இறுதி ஊர்வலத்திற்கு சாஸ்திரிகள் ஏற்பாடு செய்தபடி அட்வான்ஸ் டெக்னாலஜியுடன் கூடிய தனியார் வாகனம் வந்து நின்றது. காரியங்கள் மளமளவென நடந்தன.! ஓரிரு சடங்குகளைச்செய்தபின் உடல் வாகனத்தில் ஏற்றப்பட்டது..! BMWகாரில் வந்திருந்த நான்கைந்து உறவினர்கள் ஏறிக்கொள்ள அடுத்த பத்தாவது நிமிடம் சடலம் சுடுகாட்டை அடைந்தது... மணி 4.30 சுடுகாட்டில் இருந்த உதவியாளன் "என்ன சாமி, இந்தக்காலத்துல யாருமே விறகு வெச்சி பொணத்தை எரிக்கறதே இல்ல! கரண்ட்லயும் gasலயும் தான் எரிக்கறாங்க! , நீங்க என்னடான்னா வெறகே வேணும்னு கேக்கறீங்க!" என்றான் சாஸ்திரிகளிடம்..! "நீ தொணதொணன்னு பேசாம வேலையைப் பாருப்பா!" என்றார் சாஸ்திரிகள். விறகுக்கட்டைகள் அடுக்கப்பட்டு அதன்மீது சுப்பிரமணியம் உடல் வைக்கப்பட்டது.. சிலபல எலக்ட்ரானிக் வேலைகளைச்செய்தபிறகு தனது லேப்டாப்பை ஆன் செய்து யாருடனோ வீடியோவில் பேசினார். உடலைச்சுற்றி பெட்ரோல் ஊற்றினார். பெட்ரோல் மீது பட்டாசு போன்ற ஒரு டிவைசை வைத்தார். வீடியோ காமிராவில் சில மந்திரங்களை சொல்லியபடி "சரி சீனிவாசன், நீ இக்னிட்டரை ஆன் பண்ணு!" என்றார். திரையில் தெரிந்த அமெரிக்காவிலிருந்த சீனிவாசன் தன் கையிலிருந்த கேஸ் அடுப்பின் லைட்டர் போன்ற ஒரு வஸ்துவை கம்ப்யூட்டர் மானிட்டரை நோக்கி கண்களில் கண்ணீருடன் அழுத்த அடுத்த கணம் சென்னை பெசண்ட் நகரில் சுடுகாட்டில் கிடத்தப்பட்டிருந்த சுப்பிரமணியத்தின் உடலின் மீது ஊற்றியிருந்த பெட்ரோல் குபுக்கென பற்றியது..! ஒரு இரண்டு நிமிடம் அமைதியாக நின்றிருந்த அனைவரும் பின் ஒவ்வொருவராக கலைந்தனர்.. கொள்ளி வைத்த சீனிவாசன் தன் தந்தையின் மீது பாசம் மேலிட அமெரிக்காவில் குமுறிக்குமுறி அழுதான்... இண்டர்நெட்டில் அப்பாவின் முகம் பல பழைய நினைவுகளை அவன் கண் முன் கொண்டு வந்தது...! சுப்பிரமணியத்தின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மனநிறைவுடன் தானும் வீட்டுக்கு கிளம்பினார் சாஸ்திரிகள்..” படித்ததும் பகிர்ந்ததும்
-
சிரிக்கலாம் வாங்க
- உணவு செய்முறையை ரசிப்போம் !
Soy meat is made by processing defatted soy flour through a process called extrusion to create a high-protein, fibrous meat-like texture.- உணவு செய்முறையை ரசிப்போம் !
சோயா மீட் எதிலிருந்து தயாரிக்க படுகிறது ?- இரசித்த.... புகைப்படங்கள்.
இல்லை அண்ணா இலக்கம் மட்டுமே தெரிகிறது .- இரசித்த.... புகைப்படங்கள்.
எனக்கு இந்த படம் பார்க்க முடியவில்லை ஏன் ? இலக்கம் மட்டும் தெரிகிறது .- திறமை எங்கிருந்தாலும் பாராடட படவேண்டும் .
- ரசிக்கலாம் வாங்க
மாற்றங்கள் மனதுக்கு மகிழ்ச்சி தரும்- இனிவரும் காலங்களில் நோயில்லாமல் வாழ..!!
◆ ஒரு பனை ஓலைக் குடிசை...!!! வாசலில் இரண்டு வேப்பமரங்கள்...!!! வெளியே ஒரு விசுவாசமான நாய். ◆ பால் கறக்கும் ஒரு பசுமாடு . இரண்டு உழவு எருதுகள்.. ஒரு ஏர்...இரண்டு மண்வெட்டி... பத்து ஆடுகள்...ஒரு சேவல்...ஐந்து கோழி...+30 குஞ்சுகள் ◆ இரண்டு ஏக்கர் நிலம்.... அதிலொரு கிணறு.... சுற்றிலும் பத்து தென்னை மரங்கள்.. ◆ ஒரு முருங்கை ஒரு கருவேப்பிலை மரமும்;பக்கத்தில் பத்து வாழைமரம்...! அடுத்து ஒரு புளியமரம்...!!! ◆ பிரண்டைக் கொடியும் தூதுவளையும் படர்ந்த ஒரு அகத்திமரம்.. ◆ விளைநிலத்தின் ஓரத்தில் ஆங்காங்கே தானாகவே ஏராளமாய் வளரும் கீ்ரைச் செடிகளும்... ◆ மண் சட்டி கழுவும் இடத்தில் நாலைந்து மிளகாய்ச் செடிகளும்...!!!!! ◆ மீதமுள்ள விளை நிலத்தில் விளையும் கம்பும்...சோளமும்... கேழ்வரகும்.. . தானியக்குதிருக்குள் சேமிக்கப்படும்.இவை மட்டுமே போதும்... எவனையும் எதிர் பாராமல் உலகின் மிக அழகிய வாழ்வை பேரரசனைப் போல் நலமோடு அமைதியாய் வாழ்ந்து அனுபவிக்க. ■ உலகின் சிறந்த தற் சாற்புப் பொருளாதாரம் இதுதான்! நன்றி .........முக நூல் . - உணவு செய்முறையை ரசிப்போம் !
Important Information
By using this site, you agree to our Terms of Use.