Everything posted by புலவர்
-
சிங்கங்களும், பன்றிகளும், அறுவான்களும், குறுக்கால போவான்களும்? - நிலாந்தன்
இந்திய விசுவாசிகள் இந்திய ஒட்டுக்குருக்களைச் சேர்த்துக் கொண்டு பொதுக்கட்டமைப்பு என்று சொல்லி பொது வேட்பாளரை நிறுத்தினார்கள்.தங்கள் வாக்குகளை ஒரு தமிழ் பொது வேட்பாளருக்கு செலுத்துவதன் மூலம் சிங்கள பெரும்பான்மை அரசியல் வாதிகளுக்கு தங்கள்வாக்குகளை அளிக்க விரும்பாத தமிழ்மக்கள் தங்கள் வாக்குகளைப் பொது வேட்பாளருக்கு அளித்தார்கள்.அரசியல் அறம் அறவே அற்ற ஒட்டுக் குழுக்கள் சங்குச்சின்னத்தை அறமற்று அபகரித்துக் கொண்டன. பொதுக்கட்டமைப்பை கட்டுப் படுத்தும் பலமற்ற பத்தி எழுத்தாளர்கள் இப்பொழுது புலம்பி என்ன பயன்?நிலாந்தன் ஒரு தமிழ்த்தேசிய விசுவாசி அவருக்குத் தமிழ்த்தேசிய மன்னனி கொள்ளகயில் விட்டுக்கொடுக்காமல் இருப்பது அலர்ஜியாக இருக்கிறது.
-
தவராசா தலைமையில் உதயமானது ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு; யாழில் களமிறங்குகிறது
- தவராசா தலைமையில் உதயமானது ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு; யாழில் களமிறங்குகிறது
- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
என்ன புத்திசாலித்தனம்!!!ஒருத்தன் வேட்புமனுவுக்கு விதானையிடம் குடும்பக் காட் நிரப்பின மாதிரி நிரப்பி வைச்சிருக்கிறான்.....இதிலை 5 வது இடத்திலை மகள். மகள் திருமணம் செய்ததாலை Surname கணவனின் பெயர்...ஆகா!எப்படிப்பட்ட ஜனநாயகநாடு இது!- தவராசா தலைமையில் உதயமானது ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு; யாழில் களமிறங்குகிறது
தமிழரசுக் கட்சியில் தகுதியானவர்களை போட்டியிடுவதை தடுத்த அராஜகம் மாவை பதவி விலகுவதற்கு காரணமான சுமந்திரன் மற்றும் வைத்தியர் சத்தியலிங்கத்தை தோலுரித்து மனம் திறந்தார் சந்தர்ப்பம் https://fb.watch/v9YWOb3BIN/- யாழ் . தேர்தல் மாவட்டத்தில் தமிழரசின் வேட்பாளர்கள்
இனித்தான் யார்காலை யார்வாருகிறார்கள் என்பது நடக்கும்.எல்லோரும் வீட்டை விட்டுப் போய் விட்டார்கள். தமிழரசுக்கட்சியின் தலைவர் பதவியில் ஒருமுறையாவது இருக்க வேண்டும் என்று சிறியர் மட்டும் தனியாக ஒட்டிக்கொண்டிருக்கிறார்.ஆனால் அவர்களின் உடல்மொழி அவர்களின் ஒற்றுமையைக் காட்டிக் கொடுக்கின்றது. வேட்பாளர் தெரிவில் சிறிதரன் தோற்று விட்டார்.- தீர்மானம் எடுக்க முடியாது ; தமிழ் மக்கள் பொதுச்சபை தடுமாற்றம் !
அடுத்த சங்கு சிறிதரனுக்குத்தான்.- தமிழரசுக் கட்சியின் அனைத்து பொறுப்புக்கள் தொடர்பிலும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவின் அதிரடி முடிவு
- தமிழரசுக் கட்சியின் அனைத்து பொறுப்புக்கள் தொடர்பிலும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவின் அதிரடி முடிவு
https://tamilwin.com/article/kv-thavarasa-resigned-from-all-itak-posts-1728222873 தமிழரசுக் கட்சியின் அனைத்து பொறுப்புக்கள் தொடர்பிலும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவின் அதிரடி முடிவு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அனைத்துப் பதவி மற்றும் பொறுப்புக்களில் இருந்தும் விலகுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். இதன்படி, இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைத் தலைவர் பதவி, இலங்கை தமிழரசுக் கட்சியின் சட்டக் குழு தலைவர், மத்திய குழு உறுப்பினர் ஆகிய அனைத்துப் பொறுப்புக்களில் இருந்தும் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியானது சுமந்திரனின் தன்னிச்சையான செயல் அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இதனை அறிவித்துள்ளார். குறிப்பாக தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் நியமனத்திற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த போது அதில் யாழ். கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தினுடைய மற்றும் கொழும்பு வாழ் மக்களினுடைய கோரிக்கைக்கு அமைவாக தான் விண்ணப்பத்தை கொடுத்திருந்ததாகவும், அதனை எந்தவொரு காரணமும் இல்லாமல் சுமந்திரன் நிராகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், சுமந்திரன் தான் சார்ந்த அணியை வேட்பாளர் பட்டியலில் தெரிவு செய்து கட்சிக்காக தொடர்ச்சியாக பாடுபடுகின்ற மிக முக்கியமான திறமைசாலிகளை உள்ளெடுக்காததன் அடிப்படையிலும் தான் நியமிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்த மக்களுக்கு பொறுப்புச் சொல்ல முடியாத ஒரு கட்டத்தினால் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், தான்தோன்றித் தனமாக தமிழரசுக் கட்சியின் தேர்தலில் தோல்வியுற்ற பின்னரும் கட்சியை பதில் பொதுச் செயலாளர் சத்தியலிங்கத்தின் ஊடாக முழுச் செயற்பாடுகளையும் நிர்வகித்து வரும் சுமந்திரன் கட்சியை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்வதை அனுமதிக்க முடியாது. இந்த ஆண்டு இறுதிக்குள் 300 பில்லியன் ரூபாய் சொத்துக்கள் முடக்கப்படும் அபாயம் இலங்கை தமிழரசுக் கட்சி வரலாற்றில் பல தியாகங்களாலும், வீரம் செறிந்த பல போராட்ட சரித்திரங்களாலும் உருவாக்கப்பட்டது. 2002ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ்த் தேசியத் தலைவரின் உயர்ந்த சிந்தனையின் அடிப்படையில் இந்த வீடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக உருவாக்கப்பட்டது. அந்த வீட்டில் இருந்த அனைவரையும் வெளியேற்றி, தமிழரசுக் கட்சிகளின் தூண்களையும் வெளியேற்றி, மேலும் தென்னிலங்கையின் முகவர் அரசியல் செய்வதற்கு முற்படுகின்ற சுமந்திரனின் தான் தோன்றித் தனமான செயற்பாடு ஒட்டு மொத்த தமிழரசுக் கட்சியையும் அழிக்கும். துரோகத்திற்கு நான் தயார் அல்ல..- அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி தனித்து போட்டியிடவுள்ளது
- தீர்மானம் எடுக்க முடியாது ; தமிழ் மக்கள் பொதுச்சபை தடுமாற்றம் !
https://www.virakesari.lk/article/195618 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதா இல்லை ஏற்கனவே எடுத்த தீர்மானத்தின் பிரகாரம் ஒதுங்கியிருப்பதா இல்லை பொதுக்கட்டமைப்பின் பங்காளிகளாக அரசியல் கட்சிகளை கட்டுப்படுத்தி வைத்திருப்பதா என்று தீர்மானம் எடுக்க முடியாது சிவில் அமைப்புக்களின் ஒருங்கிணைவான தமிழ் மக்கள் பொதுச்சபை தடுமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளது. இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் பங்காளிகளில் ஒன்றான சிவில் அமைப்புக்களின் ஒருங்கிணைவான தமிழ் மக்கள் பொதுச்சபையானது, ஆரம்பத்தில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியை இணைத்து தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பாக தேர்தலுக்கு முகங்கொடுப்பதென பேச்சுக்களை நடத்தியிருந்தது. பின்னர் இருநாட்கள் அவகாசத்துடன் அக்கட்டமைப்பு விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியுடன் இணைவது பற்றி ஆராய்ந்தது. தொடர்ந்து புலம்பெயர் தரப்பின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து துறைசார்ந்த நபர்களின் கூட்டு ஒன்றுடன் இணைந்து சுயேட்சையாக களமிறங்குவது பற்றி கவனம் செலுத்தியிருந்தது. எனினும் கடந்த 29ஆம் திகதி திருகோணமலையில் கூடிய தமிழ் மக்கள் பொதுச்சபையானது பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும் சங்குச் சின்னத்தினைப் தனியொரு அரசியல் தரப்பு பயன்படுத்துவதில்லை என்றும் தீர்மானம் எடுத்து அறிவித்திருந்தது. இதற்குள் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி சங்குச் சின்னத்தினை தனதாக்கிக் கொண்டது. இந்நிலையில், சங்குச் சின்னத்தினை பயன்படுத்தி அரசியல் தரப்பொன்று பயனடைவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டு திருகோணமலை முடிவை மீளாய்வு செய்யுமாறு வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து கடந்த இரண்டு நாட்களாக இணையவழியில் அதுகுறித்து கலந்துரையாடப்பட்டது. எனினும் இரண்டு நாட்களிலும் முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இந்தக் கலந்துரையாடல்களின்போது ஒரு தரப்பினர் தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும், தேர்தலில் போட்டியி வேண்டும் என்றும், பிறிதொரு தரப்பினர் திருகோணமலை தீர்மானமான தேர்தலில் போட்டியிடாதிருப்பதை பின்பற்ற வேண்டும் என்றும் அடுத்த தரப்பினர் அரசியல் கட்சிகளுடன் மீள் ஒப்பந்தம் செய்து அவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்றும் முன்மொழிவுகளைச் செய்துள்ளனர். இதன்காரணமாக, தமிழ் மக்கள் பொதுச்சபையால் உறுதியான ஒரு தீர்மானத்துக்கு வரமுடியாதுள்ளது. இதனைவிடவும் சங்குச் சின்னத்துக்கு ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி உரிமையாளராகியிமையும் பொதுச்சபைக்கு அதிருப்திகளை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே அடுத்த பொதுத்தேர்தலில் எவ்விதமான முடிவினை தமிழ் மக்கள் எடுக்க வேண்டும், அதில் தனது வகிபாகம் எதுவென்று தீர்மானம் எடுக்க முடியாது தடுமாறிவருகின்றது தமிழ் மக்கள் பொதுச்சபை. இந்நிலையில் நேற்று இரவும் இணைய வெளியில் மீண்டும் கூட்டமொன்று நடைபெற்றுள்ளது. எவ்வாறாயினும் குறித்த கூட்டத்தில் உரையாடப்பட்ட விடயங்கள் இச்செய்தி அச்சுக்குச் செல்லும் வரையில் இறுதியாகவில்லை.- உருளைக் கிழங்கு, வெங்காயத்திற்கான விசேட இறக்குமதி வரி அதிகரிப்பு!
நல்ல விடயம் இறக்குமதி குறைய உள்ளுர்விவசாயிகளின் உற்பத்திபெறுமதி அதிகரிக்கும்.- விவசாயத்தை விட்டுச்சென்ற ஒரு இலட்சம் பேர்!
இது மிகவும் ஆபாத்தானது. ஒருகாலத்தில் சிறிமாவோ பண்டாரநாயக்கா காலத்தில் அரிசி உற்பத்தியில் தன்னிறைவு கண் நாடு. சகல இயற்கைவளங்களையும் நிறைந்த நாடு. விவசாயத்திற்குரிய காலநிலையைக் கொண்ட நாடு. விவசாயத்தைக்கைவிட்டால் அது பொருளாதார ரீதியாக பெரும் அழிவைச்சந்திக்கப் போகின்றது.- ரஜினிகாந்த் உடல் நலத்திற்கு தற்போது என்ன பாதிப்பு?- விரிவான தகவல்கள்
இதுவும் இட்லி சாப்பிட்ட கதைமாதிரியோ. அங்காலை சத்தமில்லாமல் உதயநிதியை துணைமுதல்வராக்கியதற்கு எழுத்து எதிர்ப்பு சலசலப்புகளை மடைமாற்றவும் ரஜனியின் வேட்டையன் நன்றாக ஓடவும் பிளான் பண்ணி ஊடகங்கள் செயற்படுகின்றன.- 13வது திருத்தம் - மீனவர்கள் விவகாரம் குறித்து இலங்கை ஜனாதிபதியுடன் ஜெய்சங்கர் பேச்சு – இந்திய வெளிவிவகார அமைச்சு
அடேய் 13வது திருத்தத்தத்தில் உருப்படியாக இருந்த வடக்கு கிழக்கு இணைப்பை வழக்கு போட்டு நிரந்தரமாகப் பிரித்தவர்களே இந்த ஜேவிபி காரங்கள்தானேயடா!!!- முன்னாள் அமைச்சர்கள் அரச வீடுகளை மீள வழங்க வேண்டும்: காலக்கெடுவும் விதிக்கப்பட்டது
சொகுசு வாகன பெர்மிட் எடுத்து 4-5 கோடிக்கு விற்றோர் -3 சொகுசு வாகன பெர்மிட் எடுத்து 4-5 கோடிக்கு விற்றோர் -1 சொகுசு வாகன பெர்மிட் எடுத்து 4-5 கோடிக்கு விற்றோர் -2- மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி
மற்றவர்கள் தமிழ்த்தேசியப் போர்வைக்குள் ஒளிந்து இருப்பார்கள். ஒரு பார் லைசென்சை 300 -400 இலட்சங்களுக்கு விற்கலாம் என்றால் யார் வேண்டாம் என்பார்கள்?- ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
2010 இற்குப் மன்னர் துமிழ்அரசியல் பரப்பில் சுமத்திரன் என்ற தமிழ்அரசியல் வாதி இருக்கவில்லை. 2010 இல் சம்பந்தர் பின கதவால் கொண்டு வந்து அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்புக்களையும் கட்சியின் பேச்சாளர் பொறுப்பையும் தன்னிச்சையாக கொடுத்தார். சம்பந்தருக்கு அடுத்த நிலையில் எப்போதும் அவரை வைத்துக்கொண்டார்.சம்பந்தருக்குப் பயந்து கட்சி உறுப்பினர்கள் மூச்சு விடவில்லை. சசம்பந்தர் துணையுடன் சுமத்திரன் கட்சியில் தன்னிச்சையான முடிவுகளை எடுப்பதும் கட்சிக்குள் தன் சார்பான ஆட்களைக் கொண்டு வந்து கட்சிக்குள் தன்பலத்தை தக்க வைத்துக் கொண்டார். காலம் கடந்து சுதாரித்துக் கொண்ட ஏனைய கட்சி உறுப்பினர்கள் இப்பொழுது கையைப் பிசைந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லோருக்குமான தண்டனையை தமிழ்மக்கள்தான் வழங்க வேண்டும்.- உங்கள் தொலை பேசி, கை தவறி கீழே விழுந்தால்... முதலில் நீங்கள் சொல்லும் வார்த்தை என்ன?
சயிச என்றால் ஆங்கிலத்தில் shit என்று சொல்வது மாதிரி நான் முந்தி scheiße என்று சொன்னனான் இப்ப shit என்று சொல்லுவன்.- பொதுத்தேர்தலில் ஒன்றிணைந்து பலமான தரப்பாக போட்டியிடுவது குறித்து தமிழ், முஸ்லிம் கட்சிகள் ஆராய்வு?
நம்பிட்டோம்- தமிழ் கட்சிகள் யாழில் அவசர சந்திப்பு
யாழ் மாவட்டத்துக்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 7 இல் இருந்து 6 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஒரு கூட்டணியக 9 பேர் மட்டுமே யாழ் தேர்தல் மாவட்டத்திற்குப் போட்டியிடலாம். ஆனால் இந்தக் கூட்டணியி; 9 இற்கு மேற்பட்ட கட்சிகள் இருக்கின்றனவே. எல்லோரும் நடக்கவே ஏலாமல் நடந்து போகிறார்கள்.- மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி
மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சிhttps://tamilwin.com/article/we-are-ready-for-general-elections-1727158260 மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வழங்கியுள்ளார். நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலருக்கு மதுபான விற்பனை நிலையத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. தமக்கு ஆதரவு வழங்கிய தரப்பினருக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது.இந்நிலையில் அண்மைக்காலத்தில் வழங்கப்பட்ட மதுபான விற்பனை அனுமதி பத்திரங்களை ரத்துச் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது- ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
குமார் பொன்னம்பலம் ஜனாதிபதித் தேர்தலில் நின்ற பொழுது 22 பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்திருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி புறக்கணித்தது. 1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழீழக் கோரிக்கை முன்வைக்கப்பட்டு பெரும் வெற்றியை தமிழர்விடுதலைக்கூட்டணி வெற்றியடைந்த வேளையிலும் அவர்கள் சொன்'ன புறக்கணிப்பை தமிழ்மக்கள் ஏற்கவில்லை. .குமார் பொன்னம்பலம் வடகிழக்குப்பகுதிகளில் அனைத்துத் தொகுதிகளிலும் பெரும் வாக்குகளைப் பெற்றார்.1978 ஆம் ஆண்டு நடந்த முதலாவது ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையின் பெரும் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற இலங்கையின் முதலாவது ஜனாதிபதி ஜேஆர் ஜெயவர்த்தனாவை எதிர்த்தே இந்த அளவு வாக்குகளைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.- முன்னாள் அமைசசர்களினால் பாவிக்கப்பட்ட பல சொகுசு வாகனங்கள் காலி முகத்திடலில் கைவிடப்பட்டுள்ளன.
ரணில் ராஜபக்ச ஆட்சியின் இறுதியில் வழங்கப்பட்ட மதுபான விற்பனை அனுமதிகளை (Bar licence) இரத்துச் செய்ய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தரவு.- முன்னாள் அமைசசர்களினால் பாவிக்கப்பட்ட பல சொகுசு வாகனங்கள் காலி முகத்திடலில் கைவிடப்பட்டுள்ளன.
எம்பிமார் பெர்மிற் பெற்று வாங்கிய வாகனங்கள் எல்லாம் அவை பாவிக்கினமோ என்று ஒருக்கால் செக் பண்ணுனால் நல்லது. - தவராசா தலைமையில் உதயமானது ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு; யாழில் களமிறங்குகிறது
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.