Everything posted by புலவர்
-
சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை!
இலங்கையில் இந்தியாவில் இரண்டு துதரங்கள். அதுவும் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் துணைத்தூரகம் அமைத்திருத்தும் தமிழ் மக்களின் உள்ளார்ந்த விருப்பு என்ன என்பதை அறியமுடியாத துணைத்தூரகம் தமிழர்தாயகத்தில் எதற்காக இருக்கிறது. இந்திய அரசின் நயவஞ்சகத்தால் வீரச்சாவடைந்த சாந்தனுக்கு தமிழர்தாயகம் பெருமளவில் திரண்டு வந்து உணர்வு பூர்வாக வீரவணக்கம் செய்து இந்தியாவின் முகத்தில் ஓங்கி அறைந்திருக்கிறது. ஆம் இந்திய அரசு முதுகில்குத்தினாலும் தமிழர்தாயகம்இந்திய அரசின் முகத்தில்தான் குத்தியிருக்கிறது.https://fb.watch/qAfJ49Box0/
-
சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை!
பிரேத பரிசோதனையில் ஏதாவது மெல்லக் கொல்லும் விஷம் கண்டு பிடிக்கப்பட்டால் சிறிலங்கா அதனைப் பகிரங்கப்படுத்துமா என்பதும் கேள்விக்குறியே?
-
தமிழரசுக் கட்சிக்கு எதிரான நீதிமன்ற தடை வழக்கு விசாரணை
தமிழரசுக்கட்சியின் யாப்பு மீறல் என்ற காரணத்தை வைத்து வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது என்றால் தமிழரசுக்கட்சி நீண்டகாலமாகவே யாப்பு மீறலைச் செய்திருக்கிறது. மாவை தொடச்சியாக பல வருடங்கள் தலைவராக இருந்தமை. சுமத்திரன்,சம்பந்தரது தன்னிச்சையான செயற்பாடுகள் என பல விடயங்கள் இருக்கின்றன.
-
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் காலமானார்!
- ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் காலமானார்!
ஆழ்ந்த இரங்கல். உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தும் இலங்கை அரசு அவர் நாடு திரும்புவதற்கு பச்சைக் கொடி காட்டியும் இந்திய அரசு விடுதலை செய்யவில்லை.விடுதலை செய்யப்பட்ட மற்றவர்கள் வீடுகளுக்க செல்ல அனுமதியளித்த தமிழக அரசு இவரை மட்டும் சிறப்பு முகாமில் அடைத்து வைத்திருந்தது. இவரின் வீடதலையைப் பின் போட்டதில் தமிழக அரசுக்கும் பங்கு உண்டு. தேர்தல் நேரத்தில் விடுதலை செய்து காங்கிரஸ் கூட்டணியை முறிக்க விரும்பவில்லை.அது மட்டுமல்லாமல் விடுதலை செய்தாலும் நீண்ட காலத்துக்கு உயிர் வாழமுடியாதபடி ஏதாவது மருந்துகளை; கொஞ்சம் கொஞ்சமாக எற்றினார்களோ யார்கண்டது.பிள்ளையைப் பார்க்க வேண்டும் என்ற தாயின் கனவு பலிக்காமல் போய்விட்டது பெ.ருஞ் சோகம்.- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
https://tamilwin.com/article/ilangai-tamil-arasuk-katchi-political-issues-1708427477?fbclid=IwAR11nw5rXppZqueW37iXPjerp5OBhP7bggCcpP7ns5H_kf5qV398LeXBhuc பிரதான விடயத்தை திசை திருப்ப சுமந்திரன் சதி! ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா எச்சரிக்கைhttps://www.youtube.com/watch?v=ntqnnMKOUmo&embeds_referring_euri=https%3A%2F%2Ftamilwin.com%2F&source_ve_path=Mjg2NjY&feature=emb_logo- இலங்கை அமெரிக்காவின் பிராந்தியமல்ல - அமெரிக்க தூதுவரின் கருத்துக்கு அரசாங்கம் பதில்
தமிழர்களின் இறையாண்மையைக் கருத்திலெடுக்காது சிறிலங்காவின் இறையாண்மையைக் காப்பாற்றிய அமெரிக்காவுக்கு சரியான செருப்படி. செருப்படிகள் மற்றைய நாடுகளுக்கும் காத்திருக்கின்றன.- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
*** சொல் நீக்கப்பட்டுள்ளது - யாழ் இணையம்த்தனம் பண்ணினாலும் நாசூக்காகாய்ப் பண்ணிறார்.- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
பிள்ளையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார்.- சுமந்திரனின் சுயபரிசோதனை
- உச்சம் தொட்ட மரக்கறி விலைகள்!
இப்ப வெளிநாட்டுக்காசை எடுத்து செலவழிச்சு வாழுற புத்தி வந்திட்டுது. வெளிநாட்டு உதவிகள் கிடைக்காத சனங்கள்தான் உழைத்து சீவிக்குது. எத்தனை காணிகள் சும்மா கிடக்குது. தோட்ட வேலைக்கு ஆள் தேவை என்றால் ஒருத்தரும் வருகிறரா;கள் இல்லையாம். தோட்டக்காரர்கள் தாங்கள் மட்டும் கஸ்ரப்பட்டு உழைக்கறதால அளவாகச் செய்வதால் உற்பத்தி குறைகிறது. 30 -35 வருடங்களுக்கு முன்னால் வெங்காயம் வெட் வருபவர்கள் கோழிக்கால் வெங்காயத்தைக் கொண்டு போய் சமைப்பார்கள்.(விளையாத வெங்காயம்.). அத மட்டுமல்ல வெங்காய அறுவடை முடிந்த பின்னர் அங் கே சிதறிக்கிடக்கும் வெங்காயங்களைச் இலவலசமாக எடுத்துச் செல்வார்கள். பணியாளர்கள் வேலை செய்யும் இடத்தில் கிணறுகசை; சுற்சி மிளகாய் நடுவார்கள் அவற்றில் வரும் காய்கள் அவர்களின் குடும்பங்களுக்குச் சொந்தம். எமது முன்னோர்கள் படிக்கா விட்டாலும் எவ்வளவு மனிதாபிமானத்தோடு வாழ்ந்தார்கள். ஆனால் இப்பொழுது எல்லாம் தலைகீழ். ஒவ்வொருவரும் தங்கள் வீட்ஐடச் சுற்றி வீட்டுத் தோட்டம் லவத்தாலே அவர்களுக்கான உணவுப் பொருட்கள் கிடைக்கும். நெல் அறுவடை முடிந்த பின்னர் எலிப் பொந்தில் சேகரித்து வைக்கப்பட் நெல்மணிகளை எத்தனை பேர் சேகரித்திருக்கிறார்கள். இப்பொழுது உலகுக்கு உணவு தரும் விவசாயத்தைக் கேவலமான தொழிலாகப் பார்த்ததால் வந்த வினை. உழுதுண்டு வாழ்வானனே வாழ்வான்- மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்.- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
என்னுடைய மின்னஞ்சல் பயன்பாட்டில் இல்லை என்று வருகிறது. (This account has been deactivated due to inactivity, )அந்த மின்னஞ்சலை யாழுக்காக மட்டுமே உருவாக்கியிருந்தேன் தொடர்ந்து பயன்பாட்டில் இல்லாததால் அதை நிறுத்தி விட்டார்கள். பயன்பாட்டில் உள்ள வேறு மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் மாற்றலாமா. அப்படி மாற்றும் போது யூசர் நேம் மாற்றத் தேலையில்லையா?- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
படங்களை கொப்பி பேஸ்ட் முறையில் இணைக்க முடியாமல் இருக்கிறது. மேலும் கைத் தொலைபேசி மூலம் இணைய முடியாமல் உள்ளது. கணணிணியில் பயனாளர் பெயர் கடவுச்சொல் சேமிக்கப்பட்டிருப்பதால் இணைய முடிகிறது.- துவாரகா உரையாற்றியதாக...
ஒரு லோயருக்கு 3 இலட்சம் ஈயூரோக்கள் தேவை என்டுறது நம்பக் கூடியதாக இல்லை. அதுவும் ஓரேயடியாக செலுத்துவதென்பது முடியாத காரியம். 300 யூரே 400 யூரோ என்றால் நம்பலாம். இது சேர்க்கும் காசை ஒரேயடியாகச் சேர்க்க வேண்டும் என்று நினைத்துச் செயற்பட்டவர்களின் வேலையாக இருக்கலாம். ஆனால் இந்தத் தொகை ஒருவர் வாழ்நாள் பூராவும் உழைத்தாலும் சேர்க்க முடியாத தொகையாக இருக்கிறது. நிராஸ் டேவிட் அதிகமாக அறுப்பதை விட்டு விட்டு சம்பந்தப்பட்டவர்களைக் கதைக்க விடுவது நல்லது.- சூரியனை ஆய்வு செய்ய நாளை விண்ணில் பாய்கிறது ஆதித்யா எல்-1
முதல்ல மழைக்காலங்களில் வீதியில் எனு; தண்ணீர் தேங்குகிறது என்று சென்னை நிலத்ததை செய்யுங்கைய்யா!!!- துவாரகா உரையாற்றியதாக...
இந்தியா மீட்பரே கிடையாது. தமிழுழு விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் அமெரிக்க சார்பு நிலை எடுத்த சிறிலங்காவை தட்டி லவக்க வேண்டிய தேவை இந்தியாவுக்கு இருந்தது. அதனால் பேராளிகளுக்குப் பயற்சிகளை வழஙக பிரதமர் இந்திராகாந்தி முன்வந்தார்.அப்போது பனிப்போர்காலம். அணிசேரா நாடு என்று இந்தியா சொல்லிக்கொண்டாலும் ரஸ்யாவுடனான நெருக்கம் அதிகமாக இருந்தது. வெளியுறவுச்செயலராக தமிழரான பாரத்த சாரதியை நியமித்தார். பார்த்தசாரதி கடும் அழுத்தம் காரணத்தால் 87 இல் இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட பொழுது பாரத்தசாரதியை நுpக்குமாறு ஜேஆர் விடப்பிடியாக நின்றார். அதனால் தமிழர்களின் விரோதியான மலையாளி தீக்சிற் உள்ளே கொண்டுவரப்பட்டார். அரசியலில் பழுத்த அரசியல்வாதியான ஜேஆர் ராஜீவ் காந்தியை எளிதாகக்கையாண்டார்.87 ஒப்பதத்தந்துடன் அனைத்து இயக்கங்களும் இந்தியாவின் கட்டளைக்கமைய ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு அரசியல் நீரோட்டத்தில் கலந்தனர்.ஆனால் இந்தியாவின் நயவஞ்சகத்தைப் புரிந்து கொண்ட தலைவர் இந்தியாவுடனேயே மோதும் நிலைப்பாட்டுக்கு வந்தார். 87 நிலமை இப்போது மீண்டும் இந்தியாவுக்கு வந்திருக்கிறது.அன்று அமெரிக்கா இருந்த இடத்தில் இன்று சீனா மிம மிக ஆழமாகக் கால்பதித்து விட்டது.அதற்கான செயற்பாடுகள்தான் போலித்துவாரகா வின் வெளிப்படுகையும் இந்தியாவின் துணையுடன் தமிழீழத்தை வென்றெடுப்போம் என்ற காசியானந்தனின் அறிக்கை.அன்று தலைவர் இந்தியாவை நம்பவில்லை அனால் தமிழ்மக்கள் நம்பினார்கள். ஆனால் இன்று ஒட்டுமொத்த தமிழ்மக்களும் இந்தியாவை நம்பத்தயாரில்லை. அத்துடன் இன்னுமொரு ஆயுதப் போராட்டத்திற்கும் மக்கள் இந்தியாவையோ உலகநாடுகளையோ நம்பத்தயராக வில்லை. துவாராக விடயம் பிசுபிசுத்துப் போனதால் இந்தியா நேரடியாக சிறிலங்கா அரசுடன் பேசவேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டு விட்டார்கள்.- துவாரகா உரையாற்றியதாக...
நிலாந்தனின் மீட்பர் இந்தியாதான்.- துவாரகா உரையாற்றியதாக...
இவரும் சரி>>நேசக்கரம் சாந்தியும் சரி இந்திய உளவுத்துநறக்கு இதில் சம்பந்தமில்லாதது மாதிரி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.இந்த உரை இந்தியத்தமிழர் அல்லது அங்கு நீண்ட காலம் வாழந்த ஒருவரால் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதை அந்த உரையில் வரும் சில சொற்பதங்கள் காட்டிக் கொடுக்கின்றது.இவரகள் ஏன் இந்த விடயத்தில் இந்திய உளவுத்துறையின் பங்களிப்பை வெளியில் சொல்வதைத் தவிர்க்கின்றன. சுவிசில் பொலிசுக்குத்தான் பவர். கூட்டாட்சி முறை என்பதால் அந்த அந்த மாநிலங்களின் பல முக்கிய முடிவுகளை அவர்கள் எடுக்கலாம். அதுவும் இந்த அரசியல் புகலிடக்கோரிக்கையாளர்கள் விடயத்தில் அவர்களின் பவர் மிக மிக அதிகம்.- துவாரகா உரையாற்றியதாக...
தமிழர்களை இந்தியாவையும் சீனாவையும் சமாந்தரமாக கையாள வேண்டும். தற்போதைய நிலையில் கொஞ்சம் சீனாப் பக்கம் சாய வேண்டும். அப்பதான் இந்தியா வழிக்கு வரும்.- துவாரகா உரையாற்றியதாக...
உண்மையில் அன்ன நடை நடக்க வெளிக்கிட்டு தன்னடையும் கெட்ட கதையாக இது நடந்திருக்கிறது. சரி 14 வருடங்களின் பின் ஒரு மாவீரர் உரை என்றால் அது எப்படி இருந்திருக்கும். உப்புச்சப்பற்ற உரையாக இருக்கின்றது. உரையில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் எல்லோரும் அறிந்த விடயங்கள். புதிதாக தமிழ்மக்களுக்கும் உலகத்திற்கும் என்ன செய்தி சொல்லப்பட்டிருக்கின்றது?வாரிசு அரசியல் என்ற கோணத்தில் இதை வடிவமைத்ததில் இருந்து இந்திய உளவுத்துறையின் பங்கு இதில் இருப்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. தற்போதைய சீனாவின் ஆதிக்கத்தை தவிர்ப்பதற்கு இந்தியாவுக்கு புலிகள் தேவைப்படுகிறார்கள். அதற்காக தமிழ் உணர்வாளர்களைசாம பேத தான தண்டம் என்ற முறையில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.தலைவரின் பெயரைக் கெடுப்பதற்கு தங்களை அறியாமலே பல தமிழ் உணர்வாளர்கள் பலியாகி இருக்கின்றார்கள். நம்பிக்கெட்டுள்ளார்கள். இந்தியாவில் உள்ள உணர்வாளர்கள் ஒத்துக்கொள்ளாத சந்தர்பங்கில் ஆசைகாட்டி அதற்கும் ஒத்துவராதவர்களை மிரட்டி இந்த விடயங்களைுக்குப் பாவிக்கப்பட்டிருக்கிறார்க். இன்னும் சில உணர்வாளர்கள் அதீத நம்பிக்கையில் இது உண்மையாக இருக்கலாம் என்று நம்பிக் கெட்டிருக்கலாம். விசுகர் போன்ற தமிழ் உணர்வாளர்கள் அதீத நம்பிகiகயில் செயற்பட்டிருக்கலாம் . அதற்காக அப்படியான நிலையில் இருப்பவர்களை தாங்களாகத் தெளிவடையும்வரை அவர்களுக்கு நேரம் கொடுக்காது போட்டுத்தாக்குவது நல்லதல்ல. நெடுமாறன் ஐயா போன்றவர்கள் எல்லாம் தெரிந்துகொண்டு இப்படியான முயற்சிகளுக்குத்துணைபோயிருக்க மாட்டார்கள். நம்பிக்கெட்டிருக்கலாம் அல்லது மிரட்டபட்டிருக்கலாம்.- இன்று மாவீரர் தினம்!
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தலைவருக்கும்>பையனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
https://tamil.oneindia.com/news/2009/03/09/tn-jaya-observe-fast-for-sl-tamils.html வைகோ பழரசம் தர உண்ணாவிரதம் முடிந்தார் ஜெ! Read more at: https://tamil.oneindia.com/news/2009/03/09/tn-jaya-observe-fast-for-sl-tamils.html- சகோதரி யாயினியின் தந்தை காலமானார்
தந்தையின் பிரிவால் துயருற்றிருக்கும் யாயினிக்கும் குடும்பத்தினருக்கும் ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
https://www.facebook.com/kumaravelu.ganesan பாலஸ்தீனத்திற்கான கரிசனையின் அதே அளவு யூதர்களுக்கான ஒரு நாட்டிற்கும் இருக்கவேணும் என்ற நோக்கில் நான் எழுத ஆரம்பித்த தொடர் இது. கடந்த 2000 வருடங்கள் எவ்வளவு முயற்சி செய்து இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்டது என்ற வரலாற்றை தொடர்ந்து எழுதி வருகின்றேன். பிரித்தானியாவும் அமெரிக்காவும் பாலஸ்தீனியர்களிடம் இருந்து பிடுங்கி யூதர்களுக்கு இஸ்ரேல் என்னும் ஒரு நாட்டை கொடுத்து விட்டன என்றது ஒரு பொய் பிரசாரம் என்பதை இத்தொடரை வாசிப்பவர்கள் விளங்கிக்கொள்ளலாம். யூதர்கள் வரலாறு 1-20 Kumaravelu Ganesan ----------------------------- 1.https://www.facebook.com/1153120557/videos/10225739431129855/ 2.https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10225755370488329 3.https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10225823677155953 4.https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10225836514756885 5.https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10225844268350720 6.https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10225851799418992 7.https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10225870951337778 8.https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10225899725897124 9.https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10225929559802953 10. https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10225959619274421 10.1 https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10225972802884003 10.2 https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10226001402398973 11.https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10226001402398973 12.https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10226033148392603 13.https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10226058944717495 14.https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10226325207773905 15.https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10226336456095106 16. https://www.facebook.com/1153120557/posts/10226385173753017/?mibextid=WiMSqg 17. https://www.facebook.com/1153120557/posts/10230558689568304/?mibextid=WiMSqg 18. https://www.facebook.com/1153120557/posts/10230573832906878/?mibextid=WiMSqg 19. https://www.facebook.com/1153120557/posts/10230620051702319/?mibextid=WiMSqg 20. https://www.facebook.com/1153120557/posts/10230727412626275/?mibextid=WiMSqg - ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் காலமானார்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.