Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலவர்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by புலவர்

  1. இசை நிகழ்ச்சிகளில் குழப்பம் வருவது யாழ்ப்பாணத்தில் மட்டும் நடக்கிற விடயம் அல்ல. மேற்கத்தைய நாடுகளிலில் நடந்த இசை நிகழ்ச்சிகயிலும் குழப்பங்கள் நடந்திருக்கின்றன. அத்தி பீத்தாற் பொல் அரிதாக நடக்கும் நிகழ்வு ஆகையால் மக்கள் ஆர்வத்துடன் ஏராளமானவர்கள் வந்திருந்தார்கள். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சரியாகக் கையாளவில்லை.மக்கள் மகிழ்ச்சியான பொழுதைக் கழிக்கத்தான் வந்திருந்தார்கள். அவர்களில் முகங்களில் அது தெரிகிறது. இன்று தமன்னாலவப் பார்க்க வந்த கூட்டம் நாளை தமிழர் உரிமை விடயத்தை மறந்து விடும் என்று நம்புவது பேதமை. தமிழகத்தில் ஏஆர் ரஹ்மான் நிகழ்சியிலும் குழப்பம் ஏற்பட்டது . அதற்கு ர1;மான் கற்றம் சொல்லப்பட்டது. ஆனால் யாழ்ப்பாணத்தில் நடந்த குழப்பத்திற்கு யாழ்ப்பாண மக்களை காவாலிகள் என்று சொல்லி அந்த மக்கள் மீது குற்றம் சுமத்தப்படுகிறதுஇ அது சரி அண்மைக்காலமாக அடிக்கடி இந்தியக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் யாழ்ப்பாணத்தில் நடைபெறுவதற்கு என்ன காரணம். அந்த மக்களின் தமிழுணர்வை விடுதலை உணர்வை கொஞ்சமாக மழுங்கடிக்கும் முயற்சியா?
  2. அதே வேளைகடும் மழை காரணமாகதாழ்நில வயல்களில் விதைக்கப்பட்ட நெற்பயிர்கள் முற்றாக அழிந்து விட்டன. கெடுப்பதூங் கெட்டார்க்குச்-சார்வாய்க் கொடுப்பதூம் ஆங்கே மழை. மக்கள் முயற்சியைக் கைவிடக் கூடாது. தெற்கில் கஞ்சா பயர் செய்வது பற்றிய வாதங்கள் போய்க் கொண்டிருக்கையில் வடக்கில் தரிசு நிலங்களில் நெல் அறுவடை செய்திருப்பது நல்ல முன்னேற்றம்.
  3. விக்கினேஸ்வரன் முதல்வராக இருந்தபொழுது விக்கிக்கும் ரணிலுக்கும் ஒத்துவராது இ அதனால் அப்போதைய ரணிலின் நண்பர் சுமத்திரன் விக்கியைக் கவிழ்க்கச் சதி செய்தவர். இப்ப மாறி நடக்குது. அமெரிக்காவில் நடக்கும் மல்யுத்தக்காரர்கள் மாறி மாறி விளையாடுறமாதிரி நாடகம்தான் இது.
  4. அங்கை இருந்து ஸ்பொண்சர் பண்ணச் சொல்லி சொந்தக்காரர்கள் கேட்டு கடுப்பான 2 பேர் சேர்ந்து இப்படி ஒரு காணொளி விடுகினமோ யார் கண்டது.
  5. சுமத்திரன் கடிதத்தில் குறிப்பிட்டது போன்று அவரைசச் செயலாராக்கச் சம்மதித்திருக்கிறார்.. கிழக்கு மாகாணத்துக்கு செயலாளர் பதவி என்ற நிலைப்பாட்டில் சுமத்திரன் ஆதரவாளர்களை செலாளராக்குவதற்கும் இணங்கியிருக்கிருக்கிறார். அதனை வாக்கெடுப்பு நடததவும் இணங்கியிருக்கிறார்.சிறிதரன் தலைவர் பதவிக்குத்தான் சுமத்திரைனுடன் போட்டி பேட்டாரே ஒழிய இப்போது அவருடன் போட்டி எதுவும் இல்லை. தமிழரசுக்கட்சியில் உள்ள உறுப்பினர்களைpல் சிறிதரனைப் பிடிக்காதவர்கள் கூட சுமத்தரனை வீழ்த்த வேண்டும் என்று சிறிதரனுக்கு வாக்களித்தனால் தான் சிறிதரன் வெற்றி பெற்றிருக்கறரர். அதே தமிழ்த்தேசிய ஆதரவாளர்கள்தான் சுமத்திரன் அணியைச் சேர்ந்தவர் செயலாளர் ஆவதை எதிர்க்கின்றனர்.அவர்கள் எதிர்த்த படியால் சிறிதரன் முதல் எடுத்த முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளார். ஆனால் சிறிதரன் தலைவர் பதவிபை; பெற்று விட்டார் இனி நம்பியவர்களுக்கு ஆப்படித்து விட்டு சுமத்திரனோடு சேர்ந்து அரசியலத் தொடருவார்.சுமத்திரன் கட்சிக்குள் இருந்த எதிப்புக்களை அடுத்து சிறிது பின்வாங்கியுள்ளாரே தவிரமுயற்சியைக் கைவிடவில்லை.தன்னுடைய ஆதரவாளரைப் பெயரளவில் செயலாராக்கி அவரே நிழல் செயலாளராகவும் நிழல்தலைவராகவும் செயற்படப் போகின்றார்.சிறிதரனுக்கும் சுமத்திரனுடன் இணங்கி சர்வதேச அரசியலை அவரிடம் விட்டு வி;ட்டு புட்டு அரசியலை மன்னெடுப்பதே தனக்குச் சரிவரும் என நினைக்கிறார்.இதுதான் நடக்கப் போகிறது.
  6. அடுத்த கருணாநிதி.இந்திய அரசு இலஙகைக்கு அனுப்பா விட்டால் இந்திய அரசுடனான உறவைத் துண்டிப்பாரா?
  7. சிங்களவர்களோடும் உலகத்தோடும் பேச்சுவார்த்தை நடத்தித் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் உள்ள பிரச்சினையைத் தீர்த்து வைப்பதாக சொல்லி தமிழர்களிடம் வாக்கு வாங்கி அரசியல் நடத்தும் தமிழரசுக் கட்சியின் தற்போதைய பிரச்சினையான சிறிதரன் அணி சுமத்திரன் அணிகளுக்கு இடையிலான பிரச்சினையே தீர்க்க முடியாமல் தள்ளாடுகிறது.இவர்களுக்கு இடையில் சமாதானத்தை ஏற்படுத்த நோர்வேயைக் கூப்பிடலாமா?ஒரு கட்சியின் உள்ளக விடயங்கள் பொதுவெளியில் விவாதிக்கப்படுவது ஆரோக்கியமானதா?தமிழரசுக் கட்சியைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.
  8. மாவைக்கு முதல் பல ஆண்டுகளாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சம்பந்தர் தலைவராக இருந்தார். அதன் பின் தமிழ்தேசியக் கூட்டமைப்புக்குத் தலைவராக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சம்பந்தர்தான் இருக்கிறார். அவர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரான பிறகு கடந்த 10 வருடங்களாக மாவை தலைவராக இருக்கிறார். மாவை தலைவராக இருந்தாலும் தமிழருக்கட்சிக்குள் முடிவெடுக்கும் நபராக சுமத்திரனே சம்பந்தரின் தயவில் தொடர்ந்து இருந்து வந்தார்.கடந்த தேர்தலின் போது கட்சித்தலைவர் மாவைக்குத் தெரியாமலேயே தெசியப்பட்டியல் உறுப்பினராக சம்பந்தரோடு பேசி சுமத்திரன் கலையரசனை தேர்வு செய்தார். அதற்கு சிறிதரனும் உடந்தையாக இருந்தார்.
  9. நான் வேறு ஓருவர் என்ற எனது விருப்பத்தைத் தெரிவு செய்திருந்தேன். ஆனால் சுமத்திரன் சிறிதரன் என்று வரும் போது எனது தெரிவு சிறிதரன் என்பதையும் குறிப்பிட்டிருந்தேன்.
  10. https://pagetamil.com/2024/01/27/செயலாளர்-பதவிக்கு-களமிறங/ https://pagetamil.com/2024/01/28/தமிழ்-அரசு-கட்சி-பொதுக்க/?fbclid=IwAR0DHmRcW_BizevBUpOuD365qymZHsiRDoFWVFv4hV3QGC_eGIySfjeM_7I சுமத்தரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து கட்சியிலிருந்து தூக்கா விட்டால் கட்சிக்கு விமோசனம் இல்லை. சிறிதரன் கட்சியைக் கொண்டு நடத்துவது சிரமமாக இருக்கும் சமத்திரன் குழப்பிக் கொண்டே இருப்பார்.
  11. ரணில் என்ன நரிப்புத்தியோட இதைச் செய்தாலும் தமிழ்மக்கள் அதைச தங்களுக்குச் சாதகமாக மாற்றப் பார்க்கணும்.
  12. தமிழரசுக்கட்சியின் புதிய தலைவர் சிறிதரனுக்கு வாழ்த்துகள்.அவர் அனைத்துத் தமிழ்த்தேசிய கட்சிகளையும் அரவணைத்து செல்ல வேண்டும்.சுமத்திரன் ஏனைய கட்சிகளை அரவணைத்துச் வெல்லமாட்டார் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் சிறிதரனை வெற்றிபெற வைத்திருக்கிறார்கள் என்பதை சிறிதரன் புரிந்து கொண்டு அதற்கேற்ப தமிழரசுக்கட்சியை வழிநடத்த வேண்டும்.கடந்த காலத்தில் மாவை தலைவராக இருந்த போது மாவைக்குத் தெரியாமல் சுமத்திரன் ஏன்சிறிதரன் கூட அவருடன் சேர்ந்து கொண்டு ஆடிய ஆட்டங்களை; போல் இனி நடக்காது என நம்புவோம்.…
  13. அப்படியான கிரிமினல் யோசனைகள் எல்லாம் சிறிதரனுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் வராது. அது கிரிமினல்களோடு சம்பந்தப்பட்டவர்களுக்குத்தான் வரும். அதற்காகவே இப்படியொரு செய்தியை வஅவர்களே வெளியிட்டிருக்கலாம்.கடந்த பொதுத்தேர்தலிலும் இப்படியான நிகழ்வுகள் நடந்து. ஆனால் அப்போது சிறிதரன் சுமத்திரனோடு ஒட்டி உறவாடியபடியால் ஒன்றும் தெரியாத மாதிரி மிக்சர் சாப்பிட்டுக்கொண்டிருந்தார் என்பதும் உண்மை.
  14. பிரதான போட்டியாளர்களில் வெற்றி குறித்து சந்தேகம் டெைந்துள்ள வேட்பாளரின் ஆதரவாளரால் தோல்வியை வெற்றியாக மாற்றுவதற்கு எழுதப்பட்ட மறைமுகமான மடலாகவே கருதவேண்டியுள்ளது.தமிழர்களின் அரசியல் தலைவிதியை தமிழரசுக்கட்சிதான் வென்றெடுக்கும் என்பது போன்ற மாயை உருவாக்கப்பட்டு இந்த மடல் எழுதப்பட்டுள்ளது.தமிழரசுக்கட்டியின் செயலற்ற தன்மையால் அந்தக்கட்சி அரசியல் அரங்கிலிருந்து கிடப்பில் போடப்பட்டது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பொழுது கூடதமிழரசுக்கட்சியோ அதன் சின்னமோ உள்வாங்கப்படவில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆனந்தசங்கரி உதயசூரியன் சின்னத்தை முடக்கிய காரணத்தினாலேயே தமழரசுக்கட்சியையும் அதன் சின்னத்தையும் தூசுதட்டி 4கட்சிகளில் ஒன்றாக இணைக்கப்பட்டு பாவிக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் மகூட்டமைப்பின் தலைவராக தமிழசுக் கட்சியின் தலைவரே வயதிலும் அனுபவத்திலும் மூத்தவரான சம்பந்தர் நியமிக்கப்பட்டார்..2009 வரை அடக்கி வாசித்த தமிழசுக்கட்சி 2009 இன் பின்னர் பிற கட்சிகளை ஒதுக்க ஆரம்பித்தது.அதன் விளைவே தமித்தேசியக் கூட்டமைப்பின் உடைவும் தமிழரசுக்கட்சியின் சிதைவும் அதனாலேயே எற்பட்டடு. தமிழசுக்கட்சிதான் தமிழர்களுக்கு உரிமையைப் பெற்றுத்தரும் என்று மாயையை விட்டு அனைத்துத் தமிழ்கட்சிகளோடும் இணக்கப்பாட்டை ஏற்படுத்ததக் கூடிய தலமையே தமிழலசுக்கட்சிக்குத்தேவை.
  15. வேறு ஒருவர் என்பதையே நான் தெரிவு செய்தேன். கடந்த பொதுத் தேர்தலில் சுமத்திரனும் சிறிதரனும் கூட்டுச் சேர்ந்து ஆடிய ஆட்டம் கொஞச நஞ்சமிலை;லை. சிதிதரனின் ஆதரவாளர்களின் வாக்கினாலேய சுமத்திரன் வென்றதும் மாவை தோற்றதும் நடந்தது. இரண்டு பேரும் சேர்ந்து கட்சித் தலைமைக்கு ஆப்படித்தார்கள். தேசியப்பட்டியல் விடயத்தில் கூட 2 பேரும் கட்சித்தலைவர் மாலவக்குத் தெரியாமல் சம்பந்தரைச் சந்தித்து ஒருதலைப்பட்சமாக தெரிவு செய்தார்கள். அம்பாறைக்கு பிரதிநிதித்துவம் தேவை என்பது நியாயமானதுதான். அதைக் கட்சியைக் கூட்டி ஏகமனதாக அறிவித்திருக்க வேண்டும். பின்னர் சுமத்திரன் சிறதரனைக் கழட்டி விட்டு சாணக்கியனோடு ஒட்டத் தொடங்கினார். இதுவே இவர்களுக்கான போட்டியை உருவாக்கியது.தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை சிதைத்தலில் சுமத்திரனுக்கு பெரும்பங்கு உண்டு..இப்பொழுது சுமத்திரன் சிறிதரன் என்ற நிலை மட்டுமே இருப்பதால் இந்தநிலையில் சிறிதரன் தலைவராக வருவதையே விரும்புகிறேன். சிறிதரன் தமிழத்தேசிய அரசியலை விட்டு நகர முடியாது. ஆனால் சுமத்திரனுக்கு தமித்தேசியம் கருவேப்பிலை மட்டுமே. அவருடைய சகா சாணக்கியன் முன்னாள் மகிநதவின் கட்சியில் தேர்தலில் நின்றவர். அவர்கள் இருவருக்கும் தமிழ்த்தேசியம் என்றால் என்னவென்றே தெரியாது.
  16. இப்ப வெளிநாட்டுக்காசை எடுத்து செலவழிச்சு வாழுற புத்தி வந்திட்டுது. வெளிநாட்டு உதவிகள் கிடைக்காத சனங்கள்தான் உழைத்து சீவிக்குது. எத்தனை காணிகள் சும்மா கிடக்குது. தோட்ட வேலைக்கு ஆள் தேவை என்றால் ஒருத்தரும் வருகிறரா;கள் இல்லையாம். தோட்டக்காரர்கள் தாங்கள் மட்டும் கஸ்ரப்பட்டு உழைக்கறதால அளவாகச் செய்வதால் உற்பத்தி குறைகிறது. 30 -35 வருடங்களுக்கு முன்னால் வெங்காயம் வெட் வருபவர்கள் கோழிக்கால் வெங்காயத்தைக் கொண்டு போய் சமைப்பார்கள்.(விளையாத வெங்காயம்.). அத மட்டுமல்ல வெங்காய அறுவடை முடிந்த பின்னர் அங் கே சிதறிக்கிடக்கும் வெங்காயங்களைச் இலவலசமாக எடுத்துச் செல்வார்கள். பணியாளர்கள் வேலை செய்யும் இடத்தில் கிணறுகசை; சுற்சி மிளகாய் நடுவார்கள் அவற்றில் வரும் காய்கள் அவர்களின் குடும்பங்களுக்குச் சொந்தம். எமது முன்னோர்கள் படிக்கா விட்டாலும் எவ்வளவு மனிதாபிமானத்தோடு வாழ்ந்தார்கள். ஆனால் இப்பொழுது எல்லாம் தலைகீழ். ஒவ்வொருவரும் தங்கள் வீட்ஐடச் சுற்றி வீட்டுத் தோட்டம் லவத்தாலே அவர்களுக்கான உணவுப் பொருட்கள் கிடைக்கும். நெல் அறுவடை முடிந்த பின்னர் எலிப் பொந்தில் சேகரித்து வைக்கப்பட் நெல்மணிகளை எத்தனை பேர் சேகரித்திருக்கிறார்கள். இப்பொழுது உலகுக்கு உணவு தரும் விவசாயத்தைக் கேவலமான தொழிலாகப் பார்த்ததால் வந்த வினை. உழுதுண்டு வாழ்வானனே வாழ்வான்- மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்.
  17. சுமத்திரனா? சிறிதரனா ?என்றால் எனது தெரிவு சிறிதரன்.
  18. இந்தத் தேர்தலில் சுமத்திரன் வென்றால் அடுத்த 2 வருடங்களில் கட்சியை சுக்குநூறாக உடைத்து விடுவார். தோற்றால் தேசியக்கட்சிகளில் தனை;னை இணைத்துக்கொண்டு தன் வழக்கறிஞர் தொழிலைப் பார்ப்பார். அரசியல் பலமில்லாவிட்டால் அவருடைய வழக்கறிஞர் தொழில் எடுபடாது. சிறிதரன் தோற்றால் அரசியலில் இதெல்லாம் சகஜம் என்று சுமத்திரன் பாலா அண்ணை போல ஒரு விண்ணன். தமிழ்மக்களுக்கு சுமத்திரன் தேவை என்று சுமத்திரன் புராணம்பாடுவார். தொண்டர்கள் காறித்துப்புவாங்களே என்று சொன்னால் துப்பினால் துடைச்சுக்குவேன் என்று சொல்லுவார். பதவி இல்லாமல் அவரால் இருக்க முடியாது.
  19. என்னுடைய மின்னஞ்சல் பயன்பாட்டில் இல்லை என்று வருகிறது. (This account has been deactivated due to inactivity, )அந்த மின்னஞ்சலை யாழுக்காக மட்டுமே உருவாக்கியிருந்தேன் தொடர்ந்து பயன்பாட்டில் இல்லாததால் அதை நிறுத்தி விட்டார்கள். பயன்பாட்டில் உள்ள வேறு மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் மாற்றலாமா. அப்படி மாற்றும் போது யூசர் நேம் மாற்றத் தேலையில்லையா?
  20. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பிரிட்டன் பாஸ்போட் காரரையும் இன்ரனசனல் கியூவில வரச் சொன்னா அதுக்கு ஒரு நியாயம் இருக்கு. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லாத நோர்வே செய்வது பிரிட்டிஸ்காரருக்கு கடுப்பேத்தும் செயல்தான்.
  21. படங்களை கொப்பி பேஸ்ட் முறையில் இணைக்க முடியாமல் இருக்கிறது. மேலும் கைத் தொலைபேசி மூலம் இணைய முடியாமல் உள்ளது. கணணிணியில் பயனாளர் பெயர் கடவுச்சொல் சேமிக்கப்பட்டிருப்பதால் இணைய முடிகிறது.
  22. ரணில் 13 வது திருத்தத்தத்தின் அதிகாரங்களைப் பயன் படுத்தச் சொல்லுகிறார். எங்கட தமிழ் எம்பிமார் 13 வது திருத்தத்தை அமுல்படுத்தச் சொல்லி இந்தியாவுக்கு கடிதம் எழுதுகினம். எனக்கு ஒன்றுமே புரிவில்லை. ரணில் இனப்ரிரச்சினை என்ற ஒரு விடயம் இருப்பதையே கவனத்தில் எடுக்காமல் இருப்பது பொருளாதாரப் பிரச்சினைதான் அதை தீர்ப்பதற்காக வடக்கு கிழக்கை ம காற்றாலைளை அமைப்பதற்காக இந்தியாவிற்கு விற்பதற்கு பொருளாதார முன்னேற்றம் என்ற பெயரில் நாடகமாடுகிறார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.