Everything posted by ரதி
-
ஊருலா
கொழும்பு கடற்கரையில் போய் இருந்தாலே பொழுது போவதே தெரியாது
-
2024 புதுவருட வாழ்த்துக்கள்
அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...வாழும் வரை நோய் ,நொடி இல்லாமல் இருக்க வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிழலி...இந்த வருடம் 50வது பிறந்த நாளா ?
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
யாழ் திறப்பதற்கு நேரம் எடுக்குது
-
துவாரகா உரையாற்றியதாக...
யூ ரியூப்பர்களுக்கு நல்ல வருமானம் ....நானும் ஒன்று தொடங்குவமா என்று யோசிக்கிறேன்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எங்கே திண்ணையை காணோம்?...நேற்றிரவு அப்படி என்ன நடந்தது
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பையா , நீங்கள் தலைவர் மேல் மிகுந்த அபிமானம் வைத்து உள்ளீர்கள் என்று தெரியும் அதற்காக தலைவரது பிறந்த நாளில் தான் நீங்கள் பிறந்தேன் என்று பொய் சொல்ல கூடாது ...இதே வாழ்த்து திரியில் திரியில் சில காலங்களுக்கு முன் நான் கேட்க நீங்கள் ஒத்துக் கொண்டதாய் நினைவு
-
சகோதரி யாயினியின் தந்தை காலமானார்
யாயினி, உங்கள் துயரில் நானும் பங்கு கொள்கிறேன்...மனத்தை திடப்படுத்தி தைரியமாய் வாழ பழகுங்கள் ...உங்கள் அப்பாவின் ஆத்மா சாந்தியடையட்டும்.
-
திண்ணை
எனக்கு ஏதாவது விடயம் தனிப்பட தெரிந்து கொள்ள வேண்டுமானால் நான் திண்ணையில் சக உறவுகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்...அதே நேரத்தில் உறுப்பினர்கள் அல்லாதவர்கள் அதை பார்ப்பதும் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது? உ+ம் ஹரோவில் உள்ள இந்த உணவகத்தை பற்றிக் கேள்வி பட்டேன் அது உண்மையா என்று டக்கென்று திண்ணையில் வந்து கேட்டுட்டு போகலாம்...இதையெல்லாம் திரி திறந்து நாற்சந்தியில் எழுத முடியுமா
-
பச்சைப் புள்ளிகளும் சிவப்பு புள்ளிகளும் கருத்துக்களமும்
புள்ளிகள் விடயத்தில் கிருபனது கருத்தே எனதும்...தேவையில்லாத விடயங்களில் இறங்குவது பிறகு குய்யோ ,மையோ என்று கத்துவதே வேலையாய் போயிட்டுது ... முற்றாக இந்த புள்ளி முறையினை நீக்குவது நல்லது அப்போது தான் எழுத பஞ்சி பட்டு கொண்டு இருப்பவர்களும் வந்து எழுதுவர். இல்லா விட்டால் ஒரு புள்ளியை போட்டுட்டு அமைதியாய் இருப்பர்.
-
திண்ணை
கழிவறை கதவை துறந்து வைத்து விட்டு போவது மாதிரி இருக்கு திண்ணை திறந்திருப்பது🙂 ...கள உறவுகள் ஏதாவது களத்தில் எழுத முடியாததை திண்ணையில் எழுதி கேட்பார்கள் ...இனி மேல் நாற்சந்தியில் போய் திரி திறந்து தான் ஏதாவது ரகசியம் கேட்க வேண்டும்
-
யாழ்.கள உறுப்பினர், திரு. வசம்பு அவர்கள் நினைவு தினம்.
நினைவஞ்சலிகள்
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
மினக்கெட்டு பதிலெழுதியமைக்கு நன்றி ...நாங்கள் கடைசி வரைக்கும் மு.வாய்க்காலில் இருந்தேன் என்று சொல்ற பல பேரை பார்த்து விட்டேன் ...யாழிலேயே சில பேர் சுத்திட்டு இருக்கினம் தலைவருக்கு கீழ் புலிகள் அமைப்பில் இருந்த ஒருவர் இவ்வளவு இன துவேசம் பிடித்த ஆளாயிருந்தால் ,அது குறித்து புலிகளும் தலைவரும் தான் வெட்க பட வேண்டும். உங்கள் எழுத்துக்களை வைத்துப்பார்த்தால் 95ம் ஆண்டுகளுக்கு பிறகு தான் பிறந்து இருப்பீர்கள் என்பது எனது ஊகம் ...நீங்களவர்களின் அக்கிரமங்களை நேரில் பார்த்தீர்களா? இனி மேல் உங்களை தொந்தரவு செய்ய மாட்டேன்...நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
உண்மையை ஒத்துக் கொண்டதற்கு நன்றி ...நீங்களே அவர் பிழை விட்டு விட்டார் என ஒத்துக் கொள்கிறீர்கள் ...என்னால் உங்கள மாதிரி பிழையை பார்த்து கொண்டு இருக்க முடியாது...அது பிழை என்று சுட்டிக் காட்டினேன்.. செய்வது பிழை என்று தெரிந்தும்,ஏதோ ஒரு காரணத்திற்குக்காய் அவர்களை ஊக்கப்படுத்துவதால் அல்லது கண்டும் காணாமல் விடுவதால் தான் அவர்கள் இல்லாமற் போகிறார்கள் அல்லது மென் மேலும் பிழை விடுகிறார்கள்
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நீங்கள் அவருக்கு வக்காலத்து வாங்கி எடிட் பண்ணி எழுதினதை இப்ப தான் பார்த்தேன் .ஜயோ முடியலைடா சாமி ...நீங்கள் எழுதினது உங்களுக்கே ஓவராய் தெரியல்ல ...அவர் என்ன காரணத்திற்காய் தான் யூதர்களுக்கு ஆதரவு என்று எழுதி போட்டு ஒதுங்கி இருந்தார் என்றால் அவரை இந்தளவிற்கு போட்டு தாக்கி இருக்க மாட்டார்கள்..இந்த திரியில் சிலர் வெளிப்படையாகவே தாங்கள் யூதர்களுக்கு ஆதரவு என்று சொன்னார்கள் ஆனால் ஒருத்தர் கூட நன்னியளவிற்கு பலஸ்தீன மக்களது படுகொலையில் அல்லது இறப்பில் சந்தோசம் கொள்ளவில்லை ...அவரது கருத்துக்கள் ஓவராய் போனதால் தான் நான் முதலில் வந்து அவரை நிறுத்த சொன்னேன் . உங்களுக்கு எ.போ.தமிழன் , நி.க போன்றோரில் கடுப்பு அதற்காய் நன்னி விட்ட பிழைகள் உங்கள் கண்ணை மறைக்குது ...இதற்கு மேல் இந்த திரியில் இவரை பற்றி எழுத ஒன்றுமேயில்லை ...இவர் இந்த திரியில் வந்து எழுதி தன் மேல் உள்ள மரியாதையை தானே கெடுத்து கொண்டார் .தன் சுயரூபத்தையும் காட்டி விட்டார்
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நன்றாய் தோசையை திருப்பி ,திருப்பி சுடுங்கோ...அது உங்களுக்கு கை வந்த கலை அல்லவா ...நானும் நீங்கள் அவரது கருத்துக்கு ஆதரவு என்று எழுதவில்லை ...அவருக்கு ஆதரவு என்றே எழுதினேன். சிங்களவர்களோடு சேர்ந்து வாழலாம் ஆனால் முஸ்லீம்களோடு சேர்ந்து வாழ முடியாது என்று தெரிந்த மட்டுவில் இருந்து வந்தவள் ..அவர்கள் செய்த அட்டுழியங்களை கண்டு வளர்ந்தவள் ...அப்படியிருந்தும் கூட அப்பாவி மக்கள் இறக்க கூடாது என்று நினைக்கிறேன் ..ஆனால் அவர்?
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அதையே தான் நானும் சொல்கிறேன் ...எந்த வித அடிப்படையில் அவர் அங்கு இருந்திருப்பார், அவர் அப்படிப்பட்ட ஆள் என்று அவரை தெரிந்த மாதிரி அவருக்கு வக்காலத்து வாங்கி எழுதினீர்கள் ...அப்படி எழுதின படியால் தான் அதை இந்த திரியிலேயே பல இடங்களில் காண கூடியதாய் இருந்த படியால் தான் நானும் உங்களை கேட்க வேண்டி வந்தது
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இதை எழுதும் போது நீங்கள் நன்னியை நினைத்து பாத்தீங்களா? ...நீங்கள் தான் அவர் இறுதி யுத்தத்தின் போது அங்கு இருந்தார் என்று எழுதி இருந்தீர்கள்...மக்கள் கொத்து கொத்தாய் இறப்பதை கண்ணால் கண்ட ஒருவரால் எப்படி மற்றவர்களின் இறப்பில் சந்தோசப்பட முடியுது?
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
தவறுக்கு வருந்துகிறேன்
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
உதை என்னை குவோட் பண்ணி இணைக்கிறீர்கள்?...நான் ஹமாசுக்கு ஆதரவு என்று எங்கேயாவது சொன்னேனா?
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஏன் புலிகள் விட்ட பிழையை எழுதினால் என்ன?...ஈஸ்டர் தாக்குதலுக்கு கோத்தா பதில் சொல்ல வேண்டும் ...மு.வாய்க்காலுக்கு இலங்கையரசு ,உலக நாடுகள் பதில் சொல்ல வேண்டும் ...ஆனால் புலிகள் விட்ட பிழையை மட்டும் கதைக்கப்படாது...இப்படிப்பட்ட நியாயங்களால் தான் எல்லோரும் சேர்ந்து எங்களை அழித்தவர்கள்
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
85ம் ஆண்டு இவர் பால்குடியாய் இருந்திருப்பார்😀...பிறகு கொழும்பு வந்து ,வெளிநாடு வந்த இவர் போன்றவர்கள் சொல்வதை வேத வாக்காய் எடுத்து கொள்ளட்டாம் என்று சொல்கிறார்
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இதைத் தான் நானும் ஆரம்பத்திலேயே எழுதினேன் ...அவர் ஆரை ஆதரித்தாலும் எனக்கு அது பற்றி அக்கறை இல்லை ...ஆனால் பாதிக்கப்படட இனத்தில் இருந்து கொண்டு எப்படி மற்றவர்களின் இறப்பை ரசிக்க முடிகிறது?...எதிரியே ஆனாலும் அதற்குரிய மரியாதை கொடுங்கள் என சொல்லியவர் தலைவர்...அவரை மாமா என சொல்லி கொண்டு அப்பாவி மக்களது இறப்பை ரசிக்க எப்படி இவர்களுக்கு மனம் வருகுது இவர் மேல் இருந்த மதிப்பு நன்றாக குறைந்து விட்டது ... ஓவராய் புலி பாட்டு பாடுபவர்கள் இப்படி தான் சறுக்குவார்கள் என்று எனக்கு முதலே தெரியும் ...அதுக்காக இவரை துரோகி என்று எல்லாம் சொல்ல மாட்டேன்...அது வால்களின் வேலை
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அந்த முல்லாக்களுக்கும் ,இஸ்ரேலுக்கும் உங்களுக்கும் ,உங்களை போன்றவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நீங்கள் எங்கட பெடியங்களை சொல்லி இருக்க மாட்டீர்கள் என நம்பிறன்