Jump to content

nochchi

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    5737
  • Joined

  • Last visited

  • Days Won

    7

Everything posted by nochchi

  1. தேர்தல் நாள் நெருங்க நெருங்க ஒவ்வொரு கோரப்பற்களும் வெளித்தெரியும். பொதுவேட்பாளர் தேவையில்லை என்று எக்காளமிடும் சம் சும் களுக்கே எல்லாம் வெளிச்சம். நன்றி
  2. சவப்பெட்டிக்குள் வைத்து ஆணி அடித்துவிட்டுச் சிங்களம் அப்பப்போ அனைத்துலகைக் கடந்துபோக உச்சரிக்கும் 13ஐ அடைவோம் என்று சிங்களத் தேசியக்கொடியையும் ஆட்டிப்போட்டுப் போய்படுத்திருந்துவிட்டுக் கடை திறந்துவிட்டுக் காத்திருக்கும் கடைக்காரனைவிடக் கேவலமான மனநிலையில் 'நல்லசாமான் வாங்குங்கோ, வாங்குங்கோ' என்று ஒஸ்லோ அறிக்கையை, அதுகூட ஆராய்வர் என்ற விடயத்தை விற்று அரசியல் பிழப்பு நடாத்த முனையும் இந்தக் கூட்டத்தைத் துரத்தாவரை தமிழினம் சிறிதளவேணும் தலைநிமிர முடியாதென்பதை இந்தப் புல்லுருவிக் கூட்டம் தொடர்ந்து நிரூபித்து வருகிறது. தமிழினம் அனைத்துலக போக்கோடு இணைத்துச் சுயமாகச் சிந்திக்க வேண்டிய காலகட்டம். நன்றி
  3. ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு Published By: DIGITAL DESK 3 20 MAY, 2024 | 10:52 AM ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் ஈரான் நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகமான மெஹர் செய்திச் சேவை இன்று திங்கட்கிழமை (20) உறுதிப்படுத்தியுள்ளது. அசர்பைஜானில் அணை திறப்பு விழாவில் கலந்துகொண்ட இப்ராஹிம் ரைசி ஹெலிகொப்டர் மூலம் ஈரான் புறப்பட்டார். இந்நிலையில், கடுமையான பனிமூட்டத்தில் மலைப்பகுதியை கடக்கும்போது நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) ஹெலிகொப்டர் ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் விபத்துக்குள்ளானது. ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியுடன் ஹெலிகொப்டரில் பயணித்த வெளிவிவகார அமைச்சர் உசைன் அமீர், கிழக்கு அசர்பைஜான் மாகாண கவர்னர் மாலிக் ரஹ்மதி உள்பட 9 பேரும் விபத்தில் உயிரிழந்துள்ளனர். ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு | Virakesari.lk
  4. யாழ்க்கள உறவுகளுக்கு வணக்கம். இந்தக் காணொளியானது பல்வேறு அனுபவங்களின் வெளிப்பாடாக அமைந்துள்ளதால் இணைத்துள்ளேன். நன்றி நன்றி - யூரூப்
  5. இரண்டுமே உலகுக்கு உதவாத விடயங்களே. ஆதிக்கப்போட்டியில் அகப்பட்டுச் சீரழிவது அன்றாடம்காய்விகளும் அப்பாவிகளுமே.
  6. லுகசெங்கோவையும் றெசெப் தாயிப் எர்டோகனையும் தவிர சுற்றிவர உள்ள அனைவரையும் இல்லாமலாக்குதல் அல்லது தனது பக்கம் இழுத்தலையே புதின் விரும்புகிறார்போல் உள்ளது.
  7. றோகணவின் வாரிசுகளிடம் இருந்து வேறேதை எதிர்பார்க்கமுடியும். நன்றி
  8. எளிமையான எழுத்துநடை. நன்று. பயணக்கட்டுரை உறவுகளுக்குப் பயனுள்ளதாக இருப்பதோடு, அங்கு செல்லும்போது எந்த விடயங்களில் விழிப்பாக இருக்கவேண்டும் என்பதையும் காணமுடிகிறது. நன்றி
  9. பதின்மூன்றை வெட்டித்தள்ளும் ரணில் 1,000 விகாரைகள் இலக்குடன் சஜித் ”எலியட்ட தாண்ட”அணியில் அனுர Posted on March 31, 2024 by தென்னவள் 124 0 தமிழர் பிரச்சனைத் தீர்வுக்கென உருவான பதின்மூன்றாம் திருத்தத்தை வெட்டித் தள்ளும் வேலையில் ரணில் முனைப்பாக உள்ளார். வடக்கில் ஆயிரம் விகாரைகள் கட்டும் தமது எண்ணத்தை நிறைவேற்ற சஜித் ஆவலுடன் காத்திருக்கிறார். அனுர குமாரவின் மொழிக் கொள்கை என்ன என்பதற்கு கனடாக் கூட்டத்தில் கூறப்பட்ட ஷஎலியட்ட தாண்ட| பதில் போதும். இவைகளுக்குப் பதிலளிப்பதற்கான ஒரே தீர்வு தமிழர் தரப்பிலிருந்து பொதுவேட்பாளர் ஒருவர் போட்டியிடுவதுதான் என்றால் தவறிருக்காது! இந்த வருடத்தில் நடைபெற்றேயாக வேண்டிய ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுமா, இடம்பெறாதா, ஒரேயடியாக பின்தள்ளப்பட்டுப் போகுமா என்ற கேள்விகள் அரசியல் கட்சிகளிடையே தொடர்ந்து நிலவி வருகிறது. இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்பது போன்று, வருகின்ற அக்டோபர் மாத முதலாவது சனிக்கிழமை (5ம் திகதி) தேர்தல் நடைபெறுமென்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு எத்தனை அவுன்ஸ் நம்பகத்தன்மை கொண்டதென்ற அடுத்த கேள்வி இப்போது முனைப்புப் பெற்று நிற்கிறது. இதற்கான முதற்காரணம், ரணிலை ஜனாதிபதி அரியாசனத்திலேற்றி இன்றுவரை இறக்காமல் பாதுகாத்து வருகின்ற பொதுஜன பெரமுன நாடாளுமன்ற தேர்தலை முதலில் நடத்த வேண்டுமென அடாப்பிடியாக நிற்பதே. இந்தக் கோரிக்கையை ரணிலிடம் நேரடியாக முன்வைத்தவர் அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய பசில் ராஜபக்ச. எதற்குமே நேரடியாகப் பதிலளிக்காது அலைக்கழித்து வரும் ரணில், ஜனாதிபதித் தேர்தல் இந்த வருடம் கட்டாயம் நடத்தப்பட வேண்டியது என்று மட்டும் நாசூக்காக பதிலளித்துவிட்டு, தேர்தலுக்கான அக்டோபர் 5ம் திகதியை வெளியிட்டார். ரணிலிடம் தமது பருப்பு அவியாது என்பதைப் புரிந்து கொண்ட பசில், அண்மையில் இடம்பெற்ற பொதுஜன பெரமுன செயற்குழுக் கூட்டத்தில் – நான் பொதுத்தேர்தலை முதலில் நடத்துமாறு ரணிலிடம் கோரினேன். அதற்குச் சாதகமான பதில் கிடைக்கவில்லை. எனவே அவரது விருப்பம்போல் செயற்படுமாறு கூறினேன் என்று தமது இன்றைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். இதனாலோ என்னவோ பெரமுனவின் தேசிய அமைப்பாளராக ஷகுட்டி ராசா| நாமல் ராஜபக்சவை கட்சி நியமித்துள்ளது. நாமலை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்த வேண்டுமென விடாப்பிடியாக கேட்டு வரும் கட்சியின் ஓர் அணியினருக்கு இது வாய்ப்பாகப் போயிற்று. இவர்கள் தொடர்ந்து அந்த வாய்ப்பாட்டையே வாசித்து வருகின்றனர். எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க – சிறிமாவோ பண்டாரநாயக்க தம்பதியினரின் ஏகபுதல்வரான அனுர பண்டாரநாயக்கவும் இன்றைய நாமல் ராஜபக்ச போன்று உயர்மட்டத்தில் வைத்துப் பார்க்கப்பட்டவர். தமது பெற்றோர் அமர்ந்த ஆசனத்தில் (அப்போது பிரதமர் பதவி) தாமும் ஏற வேண்டுமென துடியாய்த் துடித்தவர் அனுர பண்டாரநாயக்க. ஒரு கட்டத்தில் தமது தந்தை உருவாக்கிய சிறீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து விலகி ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து சபாநாயகர் பதவியைப் பெற்றவர். பொறுமை காத்து அவர் அரசியல் செய்திருந்தால் அவரது சகோதரி சந்திரிகா குமாரதுங்க பெற்ற பிரதமர் மற்றும் ஜனாதிபதிப் பதவிகள் அவருக்கே கிடைத்திருக்க வேண்டியவை. ஷவெள்ளை மாடு கொழுத்தாலும் வழுவழுப்பு நீங்காது| என்பது போல அனுர பண்டாரநாயக்க பெயரளவில் குடும்ப வாரிசாக உயர்ந்திருந்தாலும் அரசியல் செயற்பாட்டிலும் அந்த நிலைக்கு வளர்ந்திராததால் எல்லாமே பொரிமாத்தோண்டி கதையானது வரலாறு. இந்த அரிச்சுவட்டிலேயே நாமலும் இன்று நடைபயில்கிறார். ரணிலும் நாமலும் மலையும் மடுவும் போன்றவர்கள். இதனை நன்கு புரிந்து கொண்டதால்தான் நாமல் இப்போது ஜனாதிபதிப் போட்டியில் இறங்குவதை அவரது தந்தை மகிந்த விரும்பவில்லை. இன்னுமொரு ஐந்து ஆண்டுகள் ஷநம்மடை ஆள்| ரணில் ஜனாதிபதியாக இருப்பாரானால், அடுத்து வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் நாமல் வயதாலும் அனுபவத்தாலும் தகுதி பெற்றுவிடுவாரென்று மகிந்த கருதுகிறார். ஏறத்தாழ பசிலும் இப்போது அந்த நிலைப்பாட்டுக்கு வந்துவிட்டார். அதனாற்தான், நெருக்கடியான நேரத்தில் ஆட்சியை பொறுப்பேற்ற ரணில்; பொருளாதார ரீதியாக நாட்டைக் காப்பாற்றி (தங்களையும் காப்பாற்றினாரென பகிரங்கமாகக் குறிப்பிடாமல்) மக்களுக்கு பசி நீக்குகிறார் என்று சான்றிதழ் கொடுத்துள்ளார். பசில் இவ்வாறான முடிவெடுத்ததற்கு மூன்று காரணங்கள் உண்டு. 1. ரணிலுக்கெதிராக பெரமுன ஒருவரை களமிறக்கினால் ஏற்கனவே அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்களாக இருப்பவர்கள் ரணிலின் பக்கம் செல்வர். இதனால் பெரமுன பிளவடையும். 2. எக்காரணம் கொண்டும் ஜே.வி.பி. வேட்பாளர் அனுர குமார வெற்றி பெறுவதை அனுமதிக்கக்கூடாது. 3. சஜித் பிரேமதாசவின் எதிர்காலத்தை சூனியமாக்கி அரசிலிருந்து அப்புறப்படுத்த ஒரேவழி ரணிலை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே. ஆக, இன்றைய களநிலைவரப்படி ஆட்சித் தரப்பின் ஆதரவோடு ரணில் ஜனாதிபதி வேட்பாளராகிறார் என்பது நம்பக்கூடிய நிச்சயமாகிறது. எனினும், ரணில் தொடர்ந்து பெரமுன, சஜித் அணி ஆகியவற்றை பிய்த்தெறியும் கைங்கரியங்களிலேயே ஈடுபட்டு வருகிறார். அதேசமயம் நாடு முழுவதும் சென்று தேர்தல்; அட்வான்ஸ் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார். அதிகாரபூர்வமாக வெசாக் தினத்தின் பின்னரேயே தேர்தல் பிரசாரம் ஆரம்பமாகுமெனை அறிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 17க்கும் அக்டோபர் 17க்குமிடையில் நடைபெறுமென்று நம்ப வைக்கும் அறிவிப்புகளையும் விடுத்து வருகின்றார். கடந்த ஒருவாரத்தில் பருத்தித்துறை, றாகம மருத்துவமனைகளில் புதிய கட்டிடங்களை கையளித்தது, நாட்டின் மிகப்பெரிய மகப்பேற்று மருத்துவமiiயை காலியில் திறந்து வைத்தது, அரச ஊழியர்களுக்கு ஏப்ரலில் பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு, ஓய்வூதியகாரர்களுக்கு ஐயாயிரம் ரூபா சம்பள உயர்வு, பாடசாலை மாணவர்களுக்கு இலவச மதிய உணவு என பல நிகழ்ச்சிகளில் ரணில் நேரடியாக பங்கேற்று வருவதானது, ‘ஐயா லெக்~ன் கேட்கிறார்” என்ற பிரபல நாடகத்தை நினைவூட்டுகிறது. இப்படியான சாதக சமிக்ஞைகள் காணப்படும் அதேசமயம், தேர்தலுக்குப் பொறுப்பான தேர்தல் ஆணையாளர் இரண்டு விடயங்களை அறிவித்து அரசியலில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலையும், ஜனாதிபதித் தேர்தலையும் இவ்வருடத்தில் நடத்தக்கூடிய வலுவுடன் தேர்தல் திணைக்களம் இருப்பதாகவும், ஜனாதிபதித் தேர்தலை செப்டம்பர் 18ம் திகதி நடத்தினால் நல்லது எனவும் இவர் தெரிவித்ததாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. தேர்தல் திணைக்களம்தான் தேர்தல்களை நடத்தினாலும் ஆட்சித்தரப்பில் ஜனாதிபதி தமக்கான சகல நிறைவேற்று அதிகாரங்களையும் பயன்படுத்தி முடிவெடுப்பார் என்பதே யதார்த்தம். கடந்த வருடம் உள்;ராட்சித் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை விடுத்த தேர்தல் திணைக்களம் அதற்கான திகதி அறிவித்து, அபேட்சகர் கட்டுப்பணம் செலுத்தி வாக்குச் சீட்டுகளையும் அச்சடித்துக் கொண்டிருந்த வேளையில் – தேர்தலுக்குப் பொறுப்பு தேர்தல் ஆணையாளர், வாக்குப் பெட்டி ஜனாதிபதியின் கைகளில் – என்ற தலைப்பில் இந்தப் பத்தியில் எழுதப்பட்டது ஞாபகம் இருக்கிறது. அச்சொட்டாக அவ்வாறே தேர்தல் ரத்தானது. இன்றுவரை தேர்தல் நடைபெறவில்லை. இதனை அரசியல் கட்சிகளும் மறந்தேவிட்டனர். வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க, அனுர குமார திசநாயக்க, சஜித் பிரேமதாச ஆகியோர் போட்டியிடுவது ஓரளவுக்கு உறுதியாகியுள்ளது. மேலும் ஐந்தோ பத்துப்பேர் போட்டியிடக்கூடும். தாம் அமைச்சராக இருந்தபோது ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசினால் ராஜிவ் அரசுடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தால் உருவான பதின்மூன்றாம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாதென ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாக தெரிவித்துள்ளார். மாகாண சபைகளுக்கு காணி அதிகாரம் இருக்குமென கூறிவரும் அவரது ஆட்சியிலேயே அந்த அதிகாரங்களை மத்திய அரசு பயன்படுத்தி தமிழர் பிரதேச காணிகளும் வழிபாட்டுக்குரிய நிலங்களும் அபகரிக்கப்படுகின்றன. வடக்கில் ஆயிரம் விகாரைகள் கட்டுவேனென்று தெரிவித்த சஜித் பிரேமதாசவிடம் தமிழர் பிரச்சனைக்கான தீர்வுத் திட்டம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஜே.வி.பி. வேட்பாளர் அனுர குமார திசநாயக்க புனித கங்கையில் நீராடி புனிதமான மனிதராக காட்சி கொடுக்க முனைகிறார். தமிழர் வாக்குகளை இலக்கு வைத்து அண்மையில் வடக்கே சென்ற இவர் கிழக்குக்கும் செல்லப் போகிறார். எல்லாவற்றுக்கும் மேலாக இம்மாத நடுப்பகுதியில் கனடாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பங்கேற்ற ரொறன்ரோ கூட்டத்தில் சுமார் இருநூறு வரையான தமிழர்களும் பங்குபற்றினர். இமாலய பிரகடனத்தினால் சிக்கலுக்குள்ளாகியிருக்கும் தமிழர் அமைப்பின் பிரதிநிதிகளும் இங்கே காணப்பட்டனர். அனுர குமார திசநாயக்க தமது தாய்மொழியான சிங்களத்தில் உரையாற்றினார். இதனை தமிழில் கேட்க அதற்கான செயலி வழங்கப்பட்டது. சில நிமிடங்களில் அது இயங்காமல் போயிற்று. ‘தமிழில் மொழிபெயர்ப்புத் தாருங்கள்” என தமிழர் ஒருவர் வேண்டினார். மேடையிலிருந்த பிரமுகர் ஒருவரிடமிருந்து ‘எலியட்ட தாண்ட” எனப் பதில் வந்தது. இதன் அர்த்தம் வெளியே போ என்பது. தமிழர் பிரச்சனைத் தீர்வுக்கென உருவான பதின்மூன்றாம் திருத்தத்தை வெட்டித் தள்ளும் வேலையில் ரணில் முனைப்பாக உள்ளார். வடக்கில் ஆயிரம் விகாரைகள் கட்டும் தமது எண்ணத்தை நிறைவேற்ற சஜித் ஆவலுடன் காத்திருக்கிறார். அனுர குமாரவின் மொழிக் கொள்கை என்ன என்பதற்கு கனடாக் கூட்டத்தில் அளிக்கப்பட்ட பதில் போதும். ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுமானால், இவைகளுக்குப் பதிலளிப்பதற்கான ஒரே தீர்வு தமிழர் தரப்பிலிருந்து பொதுவேட்பாளர் ஒருவர் போட்டியிடுவதுதான் என்றால் தவறிருக்காது! பனங்காட்டான் பதின்மூன்றை வெட்டித்தள்ளும் ரணில் 1,000 விகாரைகள் இலக்குடன் சஜித் ”எலியட்ட தாண்ட”அணியில் அனுர – குறியீடு (kuriyeedu.com)
  10. யே.ஆரின் விம்பமாக இருக்கும் நரி எந்த அனைத்துலக சலசலப்புக்கும் அஞ்சாது. அதற்குத் தமிழர் முசுலிம் சிங்களம் எனப் பலவேறு பாதுகாப்பு அரண்கள் உள்ளன.
  11. ரஞ்சித் அவர்களே, இனிய இன்னன்னாளில் இன்னும் பல்லாண்டு இனிதாக நலம் சூழ வளம் சூடிப் புகழேகி வாழிய வாழிய வாழியவே!
  12. ரஞ்சித் அவர்களே வணக்கம், இந்த நேரமற்ற உலகினுள் நேரமெடுத்துத் தமிழ்தேசிய அரசியலை உயிர்ப்போடு வைத்திடமுனையும் உங்களது முயற்சிக்கு எனது நன்றியும் வாழ்த்தும். எம் கடன் பணி செய்து கிடப்பதேயென்று செயற்படும் உங்களுக்கு வார்த்தைகளால் நன்றிகூறுதல் பொருந்தாதபோதும் வேறுவழி தெரியவில்லை.

    1. ரஞ்சித்

      ரஞ்சித்

      மிக்க நன்றி நொச்சி,

      பலரின் புலியெதிர்ப்பு மனோநிலையே எதெற்கெடுத்தாலும் தமிழ்த்தேசிய சார்ந்து நடத்தப்படும் நிகழ்வுகளை எள்ளிநகையாடவும், கேவலமாக விமர்சிக்கவும், ஆரம்பத்திலேயே கிள்ளியெறிந்துவிடவும் தூண்டுகிறது.
      இவர்களைக் கடந்து செல்வோம். ஆனால், சில விடயங்களைச் சொல்லாமலும் விடலாகாது.

      உங்களின் ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்

  13. தமிழரசுக்கட்சியென்று ஒன்று தற்போதும் இருக்கிறதா? இவருக்கு இப்படிக்கோரும் அருகதை இருக்கிறதா?
  14. ரஞ்சித்தவர்கள் முன்வைத்த வினாவை சற்று விரிவாக நிலாந்தனவர்கள் அலசியுள்ளார். இதிலே போட்டியிடும் சிங்களத்தரப்புகளைவிடச் சில தமிழ்த்தரப்பகளின் பதட்டமே நோக்குதற்குரியது. நன்றி
  15. முதலில் இந்தக் கைக்கூலியான சிவசேனை மாட்டை ஒழிப்பவற்கே எனது வாக்கு.
  16. உண்மை, ஆனால் எமது இளையோரிடமோ அல்லது எம்போன்றோரிடமோ கொண்டு சென்று சேர்த்தல் இலகுவானதல்ல. தமிழகக் கதாநாயகக் கவர்ச்சிச் திரைப்பட நுகர்வுகளுள் அமிழ்ந்துவிட்ட சூழலில் இதுபோன்ற முயற்சிகளைத் தமிழ்ப்பரப்பிலே நிறுவனப்பட்ட அமைப்புகள் ஊடாக விழிப்புநிலையேற்படுத்துதல் தேவைப்படுகிறது. அதற்கு யாழிலும் புலத்திலுமாகப் பல அண்மைய எடுத்துக்காட்டுகள் உள்ளன. இணைப்புக்கு நன்றி!
  17. நாங்கள் வளர்த்த நாய்களும் இப்படிச் செய்வதை அவதானித்துள்ளேன். ஆனால். காரணம் தெரியாது. நன்றி
  18. உண்மையும் அதுதானே. ஈழத்தீவின் வரலாற்றில் எதிர்க்கட்சித்தலைவராகத் தமிழர் ஒருவர் இருப்பதையே விரும்பாத சிங்களப் பேரினவாதம், தமிழர் ஒருவரை சனாதிபதியாக ஏற்குமா(?)என்ற வினாவைக் கேட்கவே தேவையில்லை. ஆனால், பேராசிரியர் புல்ஜென்ஸ் கூற்றுப்படி''எதையுமே நினைவில் கொள்ளாத , ஞாபகத்தில் வைத்திராத மறதி தேசமிது'' என்று சிறிலங்காவைச் சுட்டுவதுபோல்(எரிமலை யூலை2006) தமிழினமும் ஆகிவிட்ட சூழலில், அனைத்துலகு தனது நலனுக்காகப் பலியிட்ட தமிழர்குறித்துப் பேசித் தானே குற்றவாளிக் கூண்டில் ஏறிநிற்குமா(?)என்றால் நடவாதுதானே. ஆனால், தமிழின அரசியல் இருப்பின் அவசியத்தை வலியுறுத்துவதற்கான வாய்ப்பை வழங்கக்கூடிய ஏதுநிலையை ஏற்படுத்தவல்லதாக சனாதிபதித் தேர்தலை மாற்றுவதற்கான சூழலைப் பயன்படுத்தலாம். ஒருவேளை ரணில் தோற்கடிக்கப்பட்டால,; மேற்குலகுக்கான செய்தியும் அதில் உள்ளடங்கும். தமிழினத்தினது ஆதரவின்றித் தமது இலக்குகளை அடையலாம் என்பதைக் கேள்விக்குட்படுத்துவதாகவும் அமையும். நன்றி ரஞ்சித் அவர்களே இதில் ஒரு திருத்தம், அதாவது தமிழ்மக்கள் ஊடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு(சம்,சும் கொம்பனி) சொல்லவைத்தது. எப்படி போற்குற்றத்தில் இருந்து வெளியே எடுத்ததோ, அதேபோன்று தமது நிலையைத் தமிழ் மக்கள் ஊடாக வெளிப்படுத்தியதாகவே கொள்ளலாம். நேரடியாகத் தமிழ் மக்களது முடிவாகக் கொள்ளமுடியாது. நன்றி
  19. இதுபோன்ற உற்சாகமூட்டல்கள் இவரதுகாலத்தைக்கொண்ட ஏனையோருக்கும் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும்.
  20. யேர்மனியிலே இன்று பெரும்பாலான தமிழரது வீடுகளில் '' என்ன தந்தையர்தினம் முந்திவிட்டதே'' என்ற விடயம் உரையாடலாக இருந்திருக்கும். நானும் யோசித்தேன். இங்கு இறைபற்றுடையோர் இன்று கிறிஸ்த்துவின் விண்ணேற்றநாள் என்றல்லவா சொல்கிறார்கள். தந்தையர்தினத்திற்கும் விண்ணேற்றநாளுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?
  21. புதுக்குடியிருப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் பெறுமதியான நூற்றுக்கு மேற்பட்ட முதிரை மரக்குற்றிகள் மீட்பு Published By: VISHNU 09 MAY, 2024 | 02:50 AM முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரணைப்பாலை பகுதியில் தனியார் காணி ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் பெறுமதியான நூறுக்கும் மேற்பட்ட முதிரை மரக்குற்றிகள் முல்லைத்தீவு பொலிஸாரால் புதன்கிழமை (08) கைப்பற்றப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு பகுதியில் சட்டவிரோத மரக்கடத்தல் இடம்பெற்று வருவதாக தொடர்ச்சியாக மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றார்கள். வனவள திணைக்களம், பொலிஸார் உள்ளிட்ட பல்வேறு திணைக்களங்களின் ஆதரவுடனே இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் இதனால் இவர்களது சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக யாரும் நடவடிக்கை எடுப்பதில்லை என தொடர்ச்சியாக மக்களால் குற்றஞ்சாட்டப்பட்டு வந்தது. இவ்வாறான நிலையில் இரணைப்பாலை பகுதியில் பாரியளவில் மரக்குற்றிகள் கொண்டுவந்து பதுக்கி வைத்திருப்பதாக நேற்றையதினம் (08.05.2024) மாலை புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட போதும் பொலிஸார் சட்டநடவடிக்கை எடுக்காது அலட்சிய போக்குடன் செயற்பட்டதனால் வடக்கு மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஸ்ர பிரதி பொலிஸ் மா அதிபர் தனபால அவர்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதனையடுத்து வடக்கு மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஸ்ர பிரதி பொலிஸ் மா அதிபர் அவர்களால் முல்லைத்தீவு பிரதான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு வழங்கப்பட்ட உத்தரவின் பெயரில் முல்லைத்தீவிலிருந்து வருகைதந்த விஷேட பொலிஸ் அணியினரின் நடத்திய சோதனையில் தனியார் காணி ஒன்றில் சுமார் 100 க்கு மேற்பட்ட அண்ணளவாக 50 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய முதிரை மரக்குற்றிகள் பொலிஸாரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த அரச அதிகாரிகள் உடனடியாக செயற்பட்டு வனவளங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து நிற்கின்றனர். புதுக்குடியிருப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் பெறுமதியான நூற்றுக்கு மேற்பட்ட முதிரை மரக்குற்றிகள் மீட்பு | Virakesari.lk
  22. இனவாத அரசாங்கத்துடன் அரச அதிகாரிகளும் இணைந்து மக்களை வெளியேற்ற முயற்சி ; தொடர் போராட்டத்தில் ஈடுபடபோவதாக முன்னால் மாகாண சபை உறுப்பினர் ரவீகரன் அறிவிப்பு 09 MAY, 2024 | 11:53 AM (எம்.நியூட்டன்) முல்லைத்தீவு மாவட்ட தமிழ் மக்களை மாவட்டத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு மாவட்டத்தின் அரசாங்க அதிகாரிகள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகிறார்களா என்ற சந்தேகம் எங்களிடம் மேலோங்கியுள்ளது. இதற்கு எதிராக மாவட்ட செயலகத்திற்கு முன்பாக சட்டி பானையுடன் போராட வேண்டிய நிலையில் இருப்பதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் து. ரவிகரன் தொரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பிலே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மகாவலி என்றால் தமிழர்களுக்கு மரணபொறி காரணம் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2018 ஆண்டு மாவட்ட செயலக புள்ளிவிபரத்தின் படி 2,199 ஏக்கர் காணி 625 பயனாளிகளுக்கு என்று மகாவலியால் அபகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2024 ஆண்டு இது 4 ஆயிரம் ஏக்கராக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மகாவலியின் ஆக்கிரமிப்புக்குள் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய்,கொக்குத்தொடுவாய் கருவாட்டுகேணிநில் 6 கிராம அலுவலர் பிரிவுகள் அபகரிக்கப்பட்டுள்ளது. இந்த காணிகள் இலங்கை சுதந்திரமடைந்ததற்கு முன்பிருந்தே தமிழர்களுடைய பூர்விக காணி என்பதற்கு தெளிவான உறுதிகள் ஆவணங்கள் இருக்கின்றன. இது மட்டுமன்றி 1984 ஆண்டு உதியமலை படுகொலை இடம்பெறுவதற்கு சில காலபகுதியில் விடுதலைப் புலிகள் நூளைந்து விட்டார்கள் என கூறி இப்பகுதி மக்களை கவச வாகனங்களில் வந்த இராணுவத்தினர் துரத்தினார்கள் அன்று வெளியேறிய மக்கள் 29 வருடத்திற்கு பின்னரே மிள்குடியேறினார்கள் இந்த விரட்டியடுப்பால் விவசாய செய்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டது. அந்த காலத்தில் இந்த நிலமானது இந்த மாவட்டத்திற்கு மட்டுமல்ல இலங்கை முழுவதற்குமே நெல் உற்பத்தியால் அரிசியை வழங்கி தன்னிறைவு கண்ட மாவட்டமாகும். இவ்வாறான நிலப்பரப்புகளை மகாவிலி என்ற பெயரில் ஆக்கிரமித்து விட்டு தமிழர்களை விரட்ட நினைப்பது எத்தகைய நியாயம். ஆட்சிக்குவரும் இனவாத அரசாங்கங்கள்தான் இத்தகைய முயற்சியை மேற்கொள்கிறார்கள் என்றால் மாவட்டத்திற்கு பெறுப்பு கூறவேண்டிய மாவட்ட செயலர், பிரதேச செயலர் அவர்களும் இந்த இனவாத அரசாங்கத்துடன் இணைந்து தமிழ்மக்களை துரத்தும் செயல்பாட்டில் இருக்கிறார்களா? சொந்த மண்ணிலிருந்து அகற்ற நினைக்கும் செயற்பாட்டிற்கு நாம் ஒரு போதும் அஞ்சமாட்டோம். எதிர்வரும் நாட்களில் முல்லைத்தீவு மாவட்ட செயலக முன்றலில் சட்டி பானைகளுடன் தொடர் போராட்டத்தில் ஈடுபடவேண்டியவர்களாக உள்ளோம். எனவே மகாவலி திட்டத்தை கைவிட்டு தமிழ்மக்களின் காணிகளை தமிழ்மக்களிடம் கையளிக்கும் வேலைத்திட்டத்தை முன்னேடுக்க வேண்டும் என்றார். இனவாத அரசாங்கத்துடன் அரச அதிகாரிகளும் இணைந்து மக்களை வெளியேற்ற முயற்சி ; தொடர் போராட்டத்தில் ஈடுபடபோவதாக முன்னால் மாகாண சபை உறுப்பினர் ரவீகரன் அறிவிப்பு | Virakesari.lk
  23. அரசியல்வாதிகள் மண்ணுக்காக வாய்திறவுங்கள் – முல்லை சிங்கள பூமியாக மாறுகிறது Posted on May 9, 2024 by தென்னவள் 3 0 தமிழ் அரசியல்வாதிகள் எமது மண்ணை காப்பாற்றவாவது பாராளுமன்றத்தில் வாய் திறந்து பேச வேண்டும் என முல்லைத்தீவு மாதர் சங்க தலைவி சு.கங்கம்மா வேண்டுகோள் விடுத்தார். வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் புதன்கிழமை (8) இடம் பெற்ற போராட்டத்தின்போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டம் மகாவலி என்ற போர்வையில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் சிங்களவர்களுக்குத் தாரை வார்த்துக் கொடுக்கப்படுகிறது. கொக்குதொடுவாயில் 3 கிராமங்கள் ஆறு கிராம சேவையாளர் பிரிவுகளைக் கொண்ட நிலையில் குறித்த பிரதேசம் பரந்துபட்ட வயல் காணிகளைக் கொண்ட பிரதேசம் 1984 ஆம் ஆண்டு சிங்கள அரசாங்கம் திட்டம் திட்டமிட்ட முறையில் அங்கு வாழ்ந்த தமிழ் மக்களை விடுதலைப் புலிகளை அழித்துவிட்டு மூன்று நாட்களில் உங்களை மீண்டும் குறித்த பகுதியில் அனுமதிக்கிறோம் என்றனர். ஆனால் முப்பது வருடங்கள் குறித்த பகுதிக்குச் செல்வதற்காக நாம் காத்திருந்த நிலையில் விடுவிக்கப்பட்டு 14 வருடங்கள் கடந்த நிலையில் எமது காணிகள் எமக்கு ஒப்படைக்கப்படவில்லை. குறித்த பகுதி விவசாய காணிகளைக் கொண்டதாகக் காணப்படும் நிலையில் எமது மக்கள் அங்கு விவசாயத்தில் ஈடுபடுவதற்கு இதுவரை அனுமதிக்கப்படவில்லை. அங்கு வாழ்ந்த மக்களுக்கு மீன்பிடி என்றால் என்னவென தெரியாத நிலையிலும் வேறு வழியின்றி சிறு மீன்பிடியை நம்பியே தற்போது வாழ்வாதாரத்தைக் கொண்டு நடத்தும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாது ஆமையன் குளத்தில் மூன்று ஏக்கர் காணி தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட போதிலும் சம்பத் நுகர நன்றாகத் திட்டத்தின் மூலம் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகிறது. தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களான தண்ணி முறிப்பு மதுரமடு மேல் மானாவாரி காணிகளையும் சிங்கள மக்களுக்குப் பிடித்துக் கொடுத்துவிட்டனர். சிங்கள அரசாங்கம் மனசாட்சி இல்லாத ஒரு அரசாங்கம் சிங்கள மக்களுக்குத் தமிழ் மக்களின் காணிகளைப் பிடித்துக் கொடுக்க முடியும் என்றால் ஒரு பகுதியை ஏனும் தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற மனோநிலை வர வில்லை. ஆகவே தமிழ அரசியல்வாதிகள் இனியாவது உங்கள் வாய்களைப் பாராளுமன்றத்தில் திறவுங்கள். முல்லை சிங்கள பூமியாக மாற்றுவதை தடுத்து நிறுத்துங்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அரசியல்வாதிகள் மண்ணுக்காக வாய்திறவுங்கள் – முல்லை சிங்கள பூமியாக மாறுகிறது – குறியீடு (kuriyeedu.com)
  24. சாதனைப்பெண் அகிலத்திருநாயகிக்கு முல்லையின் வீரமங்கை பட்டம் Posted on May 9, 2024 by தென்னவள் 3 0 முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளையினை சேர்ந்த விளையாட்டில் சாதனை படைத்த ஸ்ரீ செயானந்தபவன் அகிலத்திருநாயகி அவர்களுக்கு முள்ளியவளை கிழக்கு மக்கள் முல்லையின் வீரமங்கை பட்டம் வழங்கி கௌரவித்துள்ளார்கள். குறித்த கௌரவிப்பு நிகழ்வுானது நேற்று(08.05.2024)முள்ளியவளை கிழக்கு பொதுநோக்கு மண்டபத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம் சிறப்புற தலைமையில் நடைபெற்றுள்ளது. இதன்போது கடந்த ஆண்டு தனது 72 ஆவது அகவையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற 22 ஆவது ஆசிய தடகள போட்டியில் இரண்டு தங்கப்பதங்கங்களையும் வெங்கல பதக்கத்தினையும் வென்று விளையாட்டில் சாதனை படைத்து நாட்டிற்கும் கிராமத்திற்கும் பெருமை சேர்த்த இலங்கையில் சாதனை மங்கையாக காணப்படும் இவருக்கு முள்ளியவளை மக்கள் சார்பாக முல்லையின் வீரமங்கை என்ற பட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து அகிலத்திருநாயகிக்கு வாழ்த்து கவிதைகள்,பேச்சுக்கள் என்பன இடம்பெற்று நினைவு பரிசில்களும் வாழ்த்து மடல்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர்(காணி) எஸ்.ஜெயகாந்தன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட வைத்தியசாலை வைத்தியர் ச.சஞ்சிவினி,சட்டத்தரணி கு.கம்சன், முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலய தலைவரும் சட்டத்தரணியுமான க.பரஞ்சோதி,கல்யாண வேலவர் ஆலய நிர்வாக தலைவரும் முன்னாள் அதிபருமான கமலகாந்தன், கிராமசேவையாளர்களான ரி.ஜெயபாபு,க.விக்னேஸ்வரன்,கு.சிந்துஜன்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம்,அகிலஇலங்கை சமாதான நீதவான்களான க.தியாராஜா,க.அருளானந்தம்,ஓய்வுபெற்ற ஆசிரியர் திருமதி ஜயம்பிள்ளை,சமூகசேவையாளரும் தொழிலதிபர் ஆனந்தரசா உள்ளிட்ட கமக்கார அமைப்பினர்,கிராம சக்த்தி அமைப்பினர்,கிராம அபிவிருத்தி சங்கத்தினர், சி.க.கூ கூட்டுறவு சங்கத்தினர்,மாதர்சங்கத்தினர் உள்ளிட்டவர்கள் கலந்து சிறப்பித்துள்ளார்கள். சாதனைப்பெண் அகிலத்திருநாயகிக்கு முல்லையின் வீரமங்கை பட்டம் – குறியீடு (kuriyeedu.com)
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.