Jump to content

nochchi

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    5737
  • Joined

  • Last visited

  • Days Won

    7

Everything posted by nochchi

  1. டக்கியோடும், மண்டையனோடும், சித்தார்த்தனோடும் இருந்தவர்களுக்கே வெளிசசம். எனக்குத் தெரியாது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  2. கவிதைக்குப் பொய்யழகு என்று சுட்டுகிறது இலக்கியம். இந்தப்பாடலில் அதியுச்சமாக பனைமட்டையிலுள்ள கருக்கை சீவிவிடும்போது நீர்வடிவதைப் பால்வடியும் என உவமைப்படுத்தியுள்ள பாங்கு கவிதைக்கே உரியது. படம்பார்த்த சுவியவர்களின் ஒப்பீடும் கவனத்திறகுரியது. கருக்குமட்டையை விட பச்சைமட்டை ஒருகாலத்தில் பல சேட்டைகளைக் குறைத்து வைத்திருந்தது ஏனோ நினைவுக்கு வருகிறது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  3. 13ஆவது திருத்தமெனப்படும் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் உள்ள தமது நலன்களை, தமது முதலாளிகளுக்கான முதலீடு மற்றும் முதலீடுகளுக்கான பாதுகாப்பு உத்தரவாதம் என்பவற்றைப் பேசிவிட்டு, வெளியில செய்திக்கு மாத்தி ஏதோ தமிழரது உரிமைபற்றிப் பேசியதாகக் காட்டுகிறார்கள். இவர்களிடம் பயிற்சி எடுத்த எங்கட அரசியல்வாதியளும் சிங்களத் தலைமையை சந்தித்து தமது சாராயக்கடை அனுமதி, மண் அள்ளுற அனுமதியளைப் பெற்றுக்கொண்டு 13 தீர்வல்ல. தீர்வுக்கான அடிப்படை என்று பேசியதாகக் கதைவிடுவினம். இது கடந்த 37ஆண்டுகளாக இப்பிடித்தானே போகுது. ஆனால் சிங்களம் தொடர்ந்து தமிழர் தாயகத்தை அழித்தே வருகிறது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  4. பாவம் புலவரையா பொல்லைக் கொடுத்தவிட்டார். சிறிலங்காத் தேசியர்களை கோபமூட்டப்போகிறது. யே.வி.பி வேறாம் என்.பி.பி வேறாம். அதனால் முடிச்சுபோடாதையுங்கோ. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  5. எந்தச் சிந்தாந்தமாயினும் கட்சியரசியல் என்பது சாக்கடை போன்றது. வளரும் நாடுகளில் மிகமிக மோசமானது. சிறிலங்கா சனாதிபதியின் அதிகாரமானது, கட்டற்ற அதிகாரத்துவம் மிக்கது. அதற்குக் கொலைகள் கைவந்தகலை. அதற்காகத் தனித் படைப்பிரிவுகளையும் தன்னகத்தே கொண்டது. பிரேமதாச காலத்தில் முழுவீச்சில் செயற்பட்டு பெருவாரியான சிங்கள இளையோரையும் பலயெடுத்த வரலாற்றைக் கொண்டது. இதில் ஊடக ஆய்வுகளை மேற்கொள்வோர் மற்றும் உண்மையை வெளிக்கொணர்வோருக்கு ஒன்றும் பட்டயம் வழங்கிப் பாராட்டும் நாடல்ல படுகொலை செய்து அழித்துவிடும் நாடு எமது நாடெனபது செய்திகளை உற்றுநோக்குவோர் அறிந்தது. சிங்களவராக இருந்தும் 51வயதிலே படகோலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமதுங்கவே சாட்சியாக இருக்கிறார். உண்மைகளைக் கூறுவோரை விட்டுவைக்காத அரசக் கலாசாரம் மிக்க நாட்டிலே தற்போது யாருமில்லை என்றே நினைக்கின்றேன். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  6. தமிழருக்கு எதிராகத் தமிழரே செயற்படும் வேளையில் பரவாயில்லையே தமிழரது உரிமை தொடர்பாக சிங்களப் பத்திரிகை ஆசிரிய தலையங்கம் எழுதியிருப்பதைப் பதிவிட்டமைக்கும், தங்கள் தேடலுக்கும் நன்றி. இந்தப் படத்தில் இருப்பவர்தானே தற்போதைய சானாதிபதி. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  7. பனங்கருக்கும்.... என்பது பனைமட்டையிலே உள்ள ''கருக்கு'' என்று அழைக்கும் கூர்மையான பகுதியாகும். காயங்களை ஏற்படுத்த வல்லது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  8. தமிழ்த் தேசியத்தை நிராகரிப்போர், சிறிலங்கா தேசியர், சிறிலங்கா தேசிய விசுவாசிகள் மற்றும் புலியெதிர்ப்பாளர்கள் என்போருக்கு அனுரவின் தேசியம் பிடித்திருக்கிறது. 30 ஆண்டுகளில் சில காணாமற்போதல்கள், தமிழ்த் தேசியத்தை நேசித்தோரை கொலை செய்தல் என நகர்ந்த யாழ் குடாநாட்டு இளையோரது மனநிலை வேறாகவே இருக்கும். இவற்றுக்கூடாகச் சிங்களத் தேசியமானது அசுர பலம் பெறப்போகிறது. அதன்பின்னரே அநுர திஸ்ஸவின் நிஜ(உண்மை)முகம் தெரியவரும். அதுவரை சிறு தேன்நிலவோட்டமாக வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல்வரை அரசியல் ஓடப்போகிறது நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  9. உண்மை. ஆனால், ஊடகங்கள் தங்களது பிழைப்புக்காக எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எழுதுவார்கள். மதிப்பு மிக்க உறவுமுறைப் பெயரான 'அம்மான்' இப்படிப்போய்விட்டது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  10. இருவரையும் உங்கள் பிரச்சினையை நீங்களே பாருங்கள் என்று உலகு ஒதுங்கினாலும், அமெரிக்கா விடவேணுமே. இஸ்ரேல் தொழில் நுட்ப முன்றேன்றம் இனங்களை அழிப்பதனற்கானதாயின் அது ஒரு முன்னேற்றமா? தமிழினத்தையும் அழிக்கக் கொடுத்த ஆலோசனைகள் தற்போதுவரை அமுல்படுத்தப்படுகிறது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  11. மனித வாழ்வின் இயல்பே நிறைந்துள்ள நினைவுகளும் அதனை அசைபோடுவதும் மட்டுமே. தன்னந்தனியே அமைதியாக சாளரம் வழியே பார்க்கும்போது எம்மைத் தொடர்வதும் நினைவுகளே. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  12. படித்தோருக்கும் , விருப்புப் புள்ளியை வழங்கிய யாயினி அவர்களுக்கும் நன்றி. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  13. இந்தியாவினுடைய முகவர்கள் இந்தியாவை அனுசரிக்காது எப்படி இலங்கையில் அரசியல் செய்வது. சுகபோகமாக வாழ்வது.முள்ளிவாய்க்காலில் தமிழினத்தின் குருதி வழிந்தோடியவேளை இந்தியாவில் இருந்து மௌனம்காத்தவர்களை இன்னுமா நம்புகிறீங்கள். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி இவர்கள் எங்கே ஒன்றாக, ஒரே கட்சியாக நின்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகிப் பின்னர் காயந்த இலைகளாக உதிர்ந்து துகள்காளகப் போயுள்ளனவே. த.தே.கூட்டமைப்பின் பின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எனத் தொடங்கி தமிழ்த்தேசியப் பொதுக் கட்டமைப்பாகி நிற்கிறது. தனித் தனி மனிதர்களே கட்சிகளாக நிற்கின்ற நிலை . எல்லோரும் ஒன்றிணைந்து நிற்கவேண்டும் என்ற ஒரு மாற்றத்திற்கான வாய்ப்புகள் அருகியே வருகிறது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி திருத்தம்
  14. பா.அரியனேந்திரனவர்களையே வறுத்தெடுத்தவர்கள் இளையோரை விடுவார்களா? இந்து முதலைகளை அமுக்கி முன்னோக்கிப் பாயும் பலம் உள்ளதா? தமிழரசியல்வாதிகள் மக்களை அரசியல் மயப்படுத்தாதுவைத்திருப்பதே தமக்கெதிராக யாரும் எழுந்தவிடக் கூடாது என்ற நன்னோக்கிலேயானபின்னர் மக்களை அணிதிரட்டி .... அல்லது துணிவோடு தற்போது ஒரு இளையோர் அணி வட-கிழக்கெங்கும் களமிறங்கிப் போட்டியிட்டு அதைவைத்து அடுத்துவரும் ஐந்து ஆண்டுகள் மக்களுக்குத் தெளிவுபடுத்திச் சாதிக்க முயலவேண்டும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  15. கடந்த பதினைந்து ஆண்டுகளாக மக்களை அரசியல் மயப்படுத்தும் எந்தவொரு வேலைத்திட்டத்தையும் செய்யாது வெறும் வாக்கரசியல் செய்ததன் விளைவே இந்தநிலை. எந்தக்கட்சியிடமாவது தெளிந்த ஒரு அரசியற் திட்டம் உள்ளதா? ஒன்று தோற்றால் அடுத்து என்ன என்ற தெளிவு இருக்கிறதா? மக்களை வெறும் புள்ளடியிடும் ஒரு கருவியாகப் பார்த்தார்களேயன்றி வேறென்ன செய்தார்கள். தேர்தல்வரும்போது தொகுதிக்குப் போவது. மற்றும் வேளைகளில் வெளிநாட்டுப் பயணமும் நாடாளுமன்றத் தேனீர்க் கடையுமாய் இருந்தவர்களால் வந்தவினை. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  16. தற்போதைய சனாதிபதி தீக்கோழிபோல தேர்தல் வரை அனைத்தையும் கடந்து, தேர்தலில் வென்றபின் முழுமையான அதிகாரம் கைக்குவந்ததும் தமிழரது உரிமை விடயத்தில் நவயுக ரோகணவாக அவதாரம் எடுக்குமபோதுதான் தெரியும். அதுவரை அவர்களது ஆசையை இப்படியே புலம்பித்திரிய வேண்டியதே. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  17. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இலங்கையருடனான உரையாடலெனும் கோதாவில், தெற்கு யேர்மனியில் முன்னாள் சமாதானத் தூதுவரான எ.சொல்கைம் ஏற்பாடு செய்த நிகழ்வின் இலங்கையராக வாழ்வதே சிறப்பென்று போதித்தாராம். அவர்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டார்கள். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  18. அதுமட்டுமே இந்த யூருப் பிறதேர்ஸ் அனுர மாகாத்தையா விட்ட போனம். நினைக்கமுடியவில்லை. நிற்க முடியவில்லை..... என்று ஒரே அளப்பறையாமே. எனது நண்பர் பார்க்கச்சொன்னார். ஒரு இனத்தை கூட்டுச் சேர்ந்து அழக்கத் துணைபோனதோடு, படையினர்கான ஆளணி வலுவாக்கற் செய்பாடுகளுக்குப் பரப்புரை செய்த மாகாத்தையாவைத் தேர்தல் முடிய 113சீற் கிடைத்தபின் நன்றாகப் புரியவைப்பார். எதுக்கும் அடி வளவுக்கை இப்பவே பத்துப் பதினைஞ்சு மரவள்ளிக்கட்டையை ஊன்றிவிட்டால் உதவும். அதோடை பனங்கொட்டையளையும் ஒன்றையும் விரயமாக்காமல் பாத்தியைப்போட்டால் நல்லது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  19. ரஞ்சித் அவர்களே நன்றி, வேலை-உணவு- செமிபாட்டு நடை என்று புலத்திலே நாம் பாதுகாப்பாக இருந்துகொண்டு தட்டிக்கொண்டிருக்க, பொருத்தமான காலத்தில் நீங்கள் யே.வி.பியினதும், அதன் கூட்டுகளதும் இனவாத முகத்தை நினைவூட்டுகிறீர்கள். சிறிலங்காத் தேசியர்களுக்கு உவப்பாக இராதபோதும், தமிழருக்கு இருக்கும் மறதிக்குணத்தில், போன கிழமை ரணிலோடை சும் நிண்டதே மறந்துபோச்சு, அவற்றை ஒத்துமை அறிக்கையோடை.... அப்ப 20 ஆண்டகளுக்கு முற்பட்டது நினைவிருக்குமோ. யே.ஆரால் வளர்கபபட்ட ரணிலும், றோகனவின் பாசறையில் வளர்ந்த அனுரவும் வேறுபட்ட நிறங்களைக் காட்டினாலும் முகங்களின் வார்த்தை ஒன்றேதான். அவை சிங்கள பௌத்த தேசியவாத முகங்கள். நொச்சி
  20. வணக்கம், என்றாலும் இவளவுக்குப்போய் ஆசைப்படுவது சாத்தியமாகுமா? சோஸலிசம் என்பது முகமூடி. அந்த முகமூடிக்குள் மறைந்திருப்பது இனவாதமுகம். நாடாளுமன்றத் தேர்தலில் 113ஆசனங்கள் கிடைத்தாலே, அவர்களது வேடம் தெரியவரும். ஒருவேளை மூன்றில் இரண்டு பெரும்பான்மைகிடைத்தால் இலங்கை - இந்திய ஒப்பந்தம் நீக்கப்பட்டு இந்தியாவோடு பகையேற்படாதவகையில் நேரடியான பொருளாதார ஒப்பந்தம் ஒன்றுக்குப் போவார்கள். அதன் பின்னரே சந்திரிக்காக் காய்ச்சலில் விடுபட்டதுபோல், யே.வி.பி காய்ச்சலில் இருந்து விடுபடுவார்கள். அதற்குள் கிழக்கு முழுமையாகப் பறிபோயிருக்கும். அப்போதும் சிறிலங்காத் தமிழ் தேசியர்கள் இதைத்தனே நாம் முன்பே சொன்னோமே என்று சப்புக்கொட்டிக்கொண்டு இருப்பார்கள். நட்பரர்ந்த நன்றியுடன் நொச்சி அந்த நம்பிக்கையில்தானே சும் அழைப்புவிடுத்திருக்கிறா. நட்பரர்ந்த நன்றியுடன் நொச்சி
  21. உண்மை. ஆனால் மக்களிடம் இருந்த தேசியத்தின் மீதான பற்று இனஅழிப்புக்குத் துணைபோன ஈனர்களையெல்லாம் தேசியத் தலைவர் சொன்னார் என்பதற்காக ஏற்றுக்கொண்டார்கள். ஆனால்,(2024) கடந்த தேர்தல் எல்லாத் தமிழ் அரசியல்வாதிகளையும், அவர்களது அரசியல் சடுகுடு ஆட்டங்கள் அம்மணமாக்கிவிட்டுள்ளது. தமிழ்த்தேசியத்தை நாடாளுமன்றத்திலிருந்து ஐ.நா வரை எப்படிப் குளிதோண்டிப் புதைப்பார்கள் என்பதை ஐயத்திற்கிடமின்றி நிரூபித்துவிட்டார்கள். இனி மக்கள் கiளையெடுப்பார்கள் என்பதேசூழலாக மாறிவருகிறது. நட்பரர்ந்த நன்றியுடன் நொச்சி
  22. உங்களுக்கு அந்தச் சிரமத்தை வைக்காட்டார் என்றே நம்புகின்றேன். நட்பரர்ந்த நன்றியுடன் நொச்சி
  23. தமிழினத்தின் தூய, படித்த, அறிவுள்ள, வெள்ளை வேட்டிகட்டின, வெளிர்நிற மனிசனைச் சீச்சீ இப்படிச் சந்தேகிக்கக்கூடாது. அவரு நல்லவராயிட்டாரு. அவர் நாடாளுமன்ற பதவியைத் துறந்து ஒரு சாதாரணக் கட்சி உறுப்பினரா இருந்து அறிக்கைவிட்டிருக்கிறார். ஆஆஆஆஆ.....னனனன....படியால் நாம் நம்பத்தான் வேண்டும். முயலுக்கு மூன்று கால். நட்பரர்ந்த நன்றியுடன் நொச்சி
  24. நிலாமதியவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. கிறுக்க முயற்சிக்கிறேன். நாம்தானே ஓடிவந்துவிட்டோம். எங்கோ ஒதுங்கி ஓடிய காலங்களைத் திரும்பிப்பார்க்கும் போது வெறுமையாய் தெரிகிறது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி சுவியவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. நீங்களே ஒரு சிறந்த படைப்புகளைப் தருபவர். உங்கள் வரிகள் உற்சாகம் தருவனவாக உள்ளன. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி ஈழப்பிரியனவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. உண்மைதான். ஆனால், சிங்களத்தின் சிந்தனையல்லவா எம்மை ஆக்கிரமித்துள்ளது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  25. சிங்களத் தேசியவாதத்தின் முகம் எப்போதும் ஒன்றுதான். கட்சிகள், காட்சிகள், புதிய சொல்லாடல்கள் மட்டுமே தமிழினத்துகானது. இனவாதமற்ற புதிய சிந்தனையுடைய தலைமையெனப் புளங்காகிதமடைந்து நிற்கும் தமிழருக்காகவாவது கிழக்கிற்கு ஏன் ஒரு தமிழரை ஆளுணராகத் தெரிவு செய்யமுடியவில்லை. சிங்களத்தின் இதுதான். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.