Madurai Veeran 1956
directed by D. Yoganand,
starring M. G. Ramachandran, Bhanumathi Ramakrishna and Padmini
ஊற்றுப் பெருக்காலே உலைக்கூட்டும் வைகையென்னும்
ஆற்று வெள்ளம் தடுக்கவே
வீட்டுக்கோர் ஆள் தந்து வேந்தனின் ஆணைதன்னை
வீட்டுக்கோர் ஆள் தந்து வேந்தனின் ஆணைதன்னை
ஏற்று வினை முடிக்கவே
பேற்றடையாத ஒரு வந்தியின் கூலியாளாய் பிள்ளைப்
பேற்றடையாத ஒரு வந்தியின் கூலியாளாய்
பிட்டுக்கு மண் சுமக்கவே வந்து
பித்தனைப் போலே கைப்பிரம்பாலே பட்ட அடி
பித்தனைப் போலே கைப்பிரம்பாலே பட்ட அடி
பேசிடும் சகல ஜீவராசிகள் முதுகிலும் பட்டு
வலுவூட்ட ஈசன் விளையாடல் காணீரோ ஓ..