Jump to content

அன்புத்தம்பி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    5555
  • Joined

  • Last visited

  • Days Won

    5

Everything posted by அன்புத்தம்பி

  1. சீர்கொண்ட கிரகணம் சந்திர ஜடா மகுடமும் T M S song
  2. படம்:- மனிதரில் இத்தனை நிறங்களா; ரிலீஸ்:- 1978; இசை:- ஷியாம்; பாடல்:- கண்ணதாசன்; ஸ்ரீதேவி & மனோரமா சாதம் ஊட்டும் கைகள் பாரடியோ தாலாட்டும் பச்சைத் தொட்டில் சிறு சிறு மணி வித வித நிற மணி சிறு சிறு மணி வித வித நிற மணி பொன்னே பூமியடி ஆசரி சரி சரி சரி ரெண்டும் தாய்மையடி ஆசரி சரி சரி சரி
  3. Starring: Sumithra Rajendra, Pandari Bai. Director: A. Jaganath Year: 1978 பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு பருவம் பதினெட்டு அவள் பழமுதிர்சோலையில் தாமரை போலே மலர்ந்தது ஒரு மொட்டு மலர்ந்தது ஒரு மொட்டு
  4. தாசிப்பெண், ஜோதிமலர் அல்லது தும்பை மகாத்மியம் என்ற மூன்று பெயர்களில் 1943 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்த தமிழ்த் திரைப்படத்தை எல்லிஸ் ஆர். டங்கன் இயக்கியிருந்தார். இதில் டி.ஆர்.மகாலிங்கம், எம்.ஜி.ராமச்சந்திரன், என்.எஸ்.கிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, புளிமூட்டை ராமசாமி, பாலசரஸ்வதி, எம்.ஆர்.சந்தானலட்சுமி, டி.ஏ.மதுரம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
  5. கிட்டிப்புள்ளும் சில்லுக்கட்டையும்
  6. கத்தும் அலைகடல் அன்று சிலுவையிலே நீ சிந்திய கண்ணீர் இன்று புவியெல்லாம் நீள்கடலாய் ஆனதம்மா ஒன்றுதான் தெய்வமென உலகிற்குக் காட்டிடவே இறைவனைக் குழந்தையாய் இடையில் சுமந்தவளே கத்தும் அலைகடல் ஓரத்திலே அன்புத்தாங்கியே வந்தவளே - 2 சித்தம் இரங்கியே வேளைநகர் வந்தே ஆரோக்கியம் தந்தவளே அம்மா -
  7. "எத்தன வயசானாலும் மார்கழி மாசம் காலைல வாயில இருந்த பொக உட்ற பழக்கம் மட்டும் போகவே இல்ல....!!!"
  8. சென்னை அருகே சோகம் : "பெட்ரோல் விலையேற்றத்தால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட இரு சக்கர வாகனம்...!!!"
  9. அந்தக் கிராமத்தில் ஒரு ஏழை விவசாயி இருந்தான். அவனுக்கு பக்கத்து வீட்டில் ஒரு வேட்டைக்காரன் இருந்தான். வேட்டைக்காரனிடம் அவன் வேட்டைக்கு பயன்படுத்தும் வேட்டை நாய்கள் சில இருந்தன. வேட்டைக்காரனின் நாய்கள் அடிக்கடி வேலி தாண்டி சென்று விவசாயியின் ஆட்டுக்குட்டிகளை துரத்துவதும் கடித்து குதறுவதும் இருந்தன. இதனால் கலக்கமுற்ற விவசாயி தன் அண்டைவீட்டுக்காரனான வேட்டைக்காரனை சந்தித்து “அப்பா… உன் நாய்களை கொஞ்சம் பார்த்துக்கொள். அவை அடிக்கடி என் பகுதிக்கு வந்து ஆடுகளை தாக்குகின்றன. காயப்படுத்துகின்றன” என்றான். வேட்டைக்காரன் அதை சட்டை செய்யவேயில்லை. செவிடன் காதில் ஊதிய சங்காக அவை எந்த பயனும் இன்றி போனது. ஒரு முறை நாய்கள் இதே போல வேலி தாண்டி வந்து பட்டிக்குள் புகுந்து பல ஆட்டுக்குட்டிகளை கடித்துக் குதறின. இந்த முறை இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்று மீண்டும் வேட்டைக்காரனிடம் புகார் செய்ய சென்றான் விவசாயி. வேட்டைக்காரன் இந்த முறை சற்று கோபத்துடன், “இதோ பார்… ஆட்டை துரத்துறது கடிக்கிறது இதெல்லாம் நாயோட சுபாவம். அதுக்கெல்லாம் நான் ஒன்னும் செய்யமுடியாது. உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோ” என்றான். இதைத் தொடர்ந்து ஊர் பஞ்சாயத்து தலைவரை சென்று சந்தித்த விவசாயி, வேட்டைக்காரனின் நாய்களால் தான் படும் துன்பத்தை எடுத்துக்கூறி, அவன் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். முன்பொரு முறை பஞ்சாயத்து தலைவரின் மகளை ஒரு சிறிய விபத்திலிருந்து விவசாயி காப்பாற்றியிருப்பதால் பஞ்சாயத்து தலைவருக்கு விவசாயி மீது பெரும் மதிப்பு உண்டு. விவசாயிக்கும் வேட்டைக்காரனுக்கும் இடையே உள்ள பிணக்கை பற்றி விசாரித்து தெரிந்துகொண்ட பஞ்சாயத்து தலைவர், “என்னால் பஞ்சயாத்தை கூட்டச் செய்து அந்த வேட்டைக்காரனை தண்டித்து, அபராதம் விதித்து அவன் நாய்களை கட்டிப்போடச் செய்ய முடியும். ஆனால், நீ தேவையின்றி இதனால் ஒரு எதிரியை சம்பாதிக்க நேரிடும். உனக்கு அது சொந்த வீடு. அவனுக்கும் அது சொந்த வீடு. இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் தினசரி பார்க்கவேண்டும். அப்படியிருக்கையில் பக்கத்துவீட்டுக்காரன் நண்பனாக இருப்பதில் உனக்கு விருப்பமா அல்லது எதிரியாக இருப்பதில் விருப்பமா?” பஞ்சாயத்து தலைவர் சொல்வதில் உள்ள யதார்த்தத்தை புரிந்து கொண்ட விவசாயி, அண்டை வீட்டுக்காரனை ஒரு நண்பனாக பார்ப்பதில் தான் தனக்கு விருப்பம் என்றான். “சரி… உன் ஆட்டுக்குட்டிகளும் பத்திரமாக இருப்பது போலவும் அவனும் உன் நண்பனாக இருப்பது மாதிரியும் நான் ஒரு தீர்வை சொல்கிறேன்… கேட்பாயா?” “நீங்கள் எதைச் சொன்னாலும் கேட்கிறேன்” அடுத்து பஞ்சாயத்து தலைவர் சில விஷயங்களை அவரிடம் சொன்னார். வீட்டுக்கு வந்த விவசாயி பஞ்சாயத்து தலைவர் தன்னிடம் சொன்ன விஷயங்களை பரீட்சித்து பார்க்க முற்பட்டான். தனது பட்டியில் இருக்கும் ஆட்டு குட்டிகளிலேயே மிகவும் அழகான இரண்டு குட்டிகளை எடுத்துச் சென்று, வேட்டைக்காரனின் இரண்டு மகன்களுக்கும் தலா ஒரு குட்டி விளையாட பரிசளித்தான். குழந்தைகளுக்கு தாங்கள் விளையாட புதிய தோழர்கள் கிடைத்ததில் ஒரே குஷி. இருவரும் அந்த குட்டிகளுடன் விளையாடி மகிழ்ந்தார்கள். தன் குழந்தைகளின் புதிய தோழர்களை பாதுக்காக்க, தற்போது வேட்டைக்காரன், நாய்களை சங்கலியில் கட்டிப்போட வேண்டியிருந்தது. யாரும் சொல்லாமலே அவன் நாய்களை சங்கிலியால் பிணைத்தான். தனது மகன்களுக்கு விவசாயி ஆட்டுக்குட்டிகள் பரிசளித்ததை தொடர்ந்து பதிலுக்கு அவனுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்பி, தான் காட்டிலிருந்து கொண்டு வந்த சில அரிய பொருட்களை பரிசளித்தான் வேட்டைக்காரன். ஆக இருவருக்குள்ளும் நல்லுறவு வளர்ந்து நாளடைவில் நல்ல நண்பர்களாகிவிட்டனர்.
  10. உடல் நலம் பேணும் உன்னதமான நடனம் https://www.facebook.com/voiceofsubashkrishnasamy/videos/4071611582906490
  11. ஓர் ஆசிரியை பாடவேளையின் இறுதியில் மாணவிகளை ஊக்குவிக்க சிறிய தேர்வை நடத்தினார். அதில் வெற்றி பெறும் மாணவிக்கு புதியதொரு ஜோடி காலணி வழங்கப்படும் என்றும் கூறினார். அனைத்து மாணவிகளும் மிகுந்த மகிழ்ச்சியுடன் தேர்வு எழுதினர். இறுதியில் அவர்களது விடைகளைப் பரிசீலித்துப் பார்த்த பொழுது அவர்கள் அனைவரும் சரியான விடைகளை எழுதி இருந்தனர். ஆசிரியை யாருக்குப் பரிசினை வழங்குவது என்று சிந்தித்து விட்டு ஒரு பெட்டியில் அனைவரும் அவரவர் பெயர்களை ஒரு தாளில் எழுதி சுருட்டிப் போடுமாறு சொன்னார். அனைவரும் எழுதிப் போடவே ஆசிரியை அப்பெட்டியைக் குலுக்கி அதில் ஒரு தாளை எடுத்தார். அதில் "வபாஃ" என்ற மாணவியின் பெயர் காணப்படவே அம்மாணவிக்குப் பரிசு வழங்கப்பட்டது. அம்மாணவி தான் அவ்வகுப்பில் மிகவும் ஏழ்மையான மாணவி. பல காலமாகவே தேய்ந்து போயிருந்த காலணிகளை அணிந்து வந்த அம்மாணவிக்கோ எல்லையில்லா மகிழ்ச்சி. பின்னர் அவ்வாசிரியை மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு வந்து நடந்த நிகழ்வைப் பற்றி கணவரிடம் கண்ணீருடன் கூறினார். கணவனும் மகிழ்ச்சி அடைந்தார். எனினும் அவ்வாசிரியை வழக்கத்துக்கு மாறாக தொடர்ந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார். கணவர் மீண்டும் காரணம் கேட்க " நான் வீட்டுக்கு வந்து பெயர்கள் இடப்பட்ட அப்பெட்டியில் இருந்த தாள்களைப் பிரித்துப் பார்த்தேன். அதில் அனைத்து மாணவிகளும் தங்களது பெயர்களை எழுதாமல் வகுப்பில் ஏழை மாணவியாக இருந்த "வபாஃ" வின் பெயரையே எழுதியிருந்தனர்". என்று கண்ணீருடன் பதிலளித்தார்.
  12. A.R. ரமணி அம்மாள் அவர்கள் பாடிய "ஐயப்பா சரணம் என்றே"
  13. தோடம்பழ இனிப்பு பல்லிமுட்டை இனிப்பு
  14. பெயர்: திருநீலகண்டர் ஆங்கில பெயர்: Thiruneelakandar மொழி: Tamil நடிகர்கள்: எம்.கே.தியாகராஜ பாகவதர் , என்.எஸ்.கிருஷ்ணன் & more இயக்குனர்: ராஜா சாண்டோ தயாரிப்பு: Thiruchy Thiyagaraajaa Films வெளியீடு: 01-01-1939 (India)
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.